47 (முடிவுற்றது)
மழை காலத்து
மேகமாய்...
பௌர்ணமி
நிலவாய்...
நீலக்கடலின்
நீராய்...
சில்லென்ற
தென்றலாய்...
அழகிய
சிம்மாசனமிட்டு...
என்றும்
அழியாத காதலுடன்
அமர்ந்து விட்டாய்...
என்
மனசெல்லாம்...
(Srinidhisweety வரிகள்)
அந்த மண்டபத்தில் ஒவ்வொருவரும் அவர் அவர் வேலைகளில் ஈடுபட்டிருக்க..
"எங்கே, நம்ம ஆள காணோம்?? எங்கே போய்ட்டா?? இந்த கூட்டத்தில இவள கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கே?? என புலம்பியபடி தேடிக்கொண்டிருந்தான் அர்ஷா..
"தம்பி.. இந்த நகைய அபி கிட்ட குடுத்துருங்க" என்றபடி குடுத்து சென்ற சீதாவிடம்.. மனதிர்க்குள் நன்றி அத்தை என சொல்லிவிட்டு.. "அத்தை.. ஒரு நிமிஷம்.. அபி எங்கே இருக்கிறா??" என கேட்டு அவள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அபியிடம் சென்றான் அர்ஷா..
"அபி" என்றபடி அறை கதவை தட்ட.. "இதோ வந்துட்டாங்க பா.. உங்க ஹீரோ.. இங்கே யாரு கல்யாண பொண்ணுனே தெரிய மாட்டிக்குது?? இந்த ஒரு வாரமா சார் உன்னையே சுத்தி வராங்க.. நீ தப்பிச்சி தப்பிச்சி ஓடி வர்ரா.. நைட் கூட பல கதைய கட்டிவிட்டு இங்கே படுத்துக்குறியாம்.. உன் ஹீரோ பாவம் டி" என ஜரா கூற.. "ஹிஹிஹி.. அர்ஷா கெட்டு போய்ட்டான்.. அவன் பார்வையே சரி இல்லை.. தப்பான பையனா போய்ட்டான் டி" என கூறி நாக்கை கடித்த அபியை.. ஒரு மாதிரி பார்த்து சிரித்தவர்கள்.. "சரி டி.. அர்ஷா கூப்பிடுறான் பாரு" என பாஸி கூற.. "ஹ்ம்ம்" என எழுந்து சென்றாள்..
"ஏன் டா.. இந்த நகைய அங்க வைச்சே குடுக்க வேண்டி தானே.. ஏன் டா.. இவ்வளவு தூரம் இழுத்துட்டு வந்தே" என கேட்டவளை பார்த்து சிரித்தவன்.. "இதை குடுக்குறதுக்காக ஒன்னும் வரலை.. என் பொண்டாட்டியை லவ் பன்ன வந்தேன்" என கூறி நெருங்கிய அர்ஷாவை தள்ளியவள்..
"ஃபர்ஸ்ட் நான் கேட்டதுக்கு பதில் சொல்லு.. அப்புறம் தான் மத்தது" என கூறியவளை.. "அடி அது பின்னாடி சொல்லுறேன்" என மறுபடியும் நெருங்கியவனை தடுத்து நிறுத்தியவள்.. "முதல்ல சொல்லு டா.. ஒரு வாரமா கேட்டுட்டு இருக்குறேன்.. நீ சொல்லாம சுத்திட்டு இருக்கிறா??" என முறைத்து கொண்டு திரும்பி நின்றாள்..
அபியை பின்னாலிருந்து அனைத்தவன்.. "கோவமா பேபி?" என கேட்டு கழுத்தில் முகம் புதைத்தவனை.. "அர்ஷா.. கல்யாண வேலை இருக்கு.. உன் ரொமேன்ஸ அப்புறமா வைச்சிக்கோ" என சொல்லிவிட்டு அவன் சுதாரிக்கும் முன்னே ஓடி விட்டாள்..
"அக்ஸர் வர கொஞ்சம் லேட் ஆகிருந்தா என் ஸ்வேதா என்னை விட்டு போய்றுப்பா.. அவ இல்லாம நான் எப்படி இருப்பேனு கொஞ்சமாவது நினைச்சாலா?? சரி.. கடைசில வசந்த் என் கிட்ட எல்லோத்தையும் சொன்னதால ஏதோ ட்ராமா பன்னி அம்மாவ மடக்கியாச்சி.. ஆனா, அம்மா நல்லவங்களா மாறி நடந்துக்குட்டதா சொன்னாலும் சத்தியமா நம்ப முடியலை.. கல்யாணத்துக்கு அப்புறமும் அம்மா ஏதாவது சொன்னாங்கனா இவ நம்மள பிரிஞ்சிறுவா போலயே??" என புலம்பியபடி இருந்தவளை பின்னால் இருந்து அணைத்தாள்..
"ஹேய்.. நீ எப்படி இங்கே வந்தே??" என கோபமாக கேட்ட விஷ்வாவை.. "டேய்.. இன்னும் ரெண்டு மணி நேரத்தில கல்யாணத்தை வச்சிக்கிட்டு திருட்டு தனமா வந்திக்கிறேன் டா.. ரொம்ப கஷ்டப்பட்டு வந்திக்கிறேன் டா.. கோபப்படாதே.. நீ புலம்பிட்டு இருந்ததை நான் கேட்டேன்.. நான் பன்னது தப்பு தான்.. என்னை மன்னிச்சிரு டா.. நான் இனி உன்னை விட்டு போக மாட்டேன் " என கூறியவளிடம்.. "உன்னை எப்படி நம்புறது" என தோளை குலுக்கி திரும்பினான்..
"நீ நம்புறதுக்காக நான் என்ன செய்யனும் விஷ்வா" என கேட்ட ஸ்வேதாவிடம்... "என் மேலே சத்தியம் பன்னு.. இனி எக்காரணத்தை கொண்டும் நீ என்னை விட்டுட்டு போக மாட்டேனு சத்தியம் பன்னு" என கூற சற்றும் யோசிக்காமல் சத்தியம் செய்தவளை கட்டி அணைத்தவனின் கண்கள் கலங்கியது..
வேலைகள் பரப்பரப்பாக போய் கொண்டிருக்க.. பெண்கள் அனைவரும் பட்டு புடவை உடுத்தி தன்னவன்களை முந்தானையில் முடிக்கும் திறமையை செய்து கொண்டிருந்தனர்..
உங்களுக்கு நாங்க மடங்குவோமா என அவர்களுக்கு காட்டுவதர்க்காக வெள்ளை வேஷ்டி சட்டையில் ஆண்களுக்கே உரிய வசீகர புன்னகையுடன் மண்டபத்தில் இருக்கும் பெண்களை ரசித்து கொண்டிருந்தவாரு நடித்து.. தன்னவள்களின் முறைப்பை ரசித்து கொண்டிருந்தனர்..
"புடவைய விடு அர்ஷு" என கெஞ்சி கொண்டிருந்தவளை.. "உனக்கு விஷ்வா, ஸ்வேதா கல்யாணத்தை பார்க்கனுமா??" என கேட்டவனை புரியாமல் பார்த்தவன்.. "எனக்கு இப்ப இடம் குடுக்கலேனா அங்கே அவுங்க கல்யாணம் நடக்கும்.. இங்கே நம்மளுக்கு சாந்தி முகூர்த்தம் நடக்கும்" என கூறி கண்ணடிக்கவும்.. அவளின் அடி வயிற்றில் புளியைக் கரைக்க.. வார்த்தைகள் வராமல் மலக்க மலக்க விழித்தாள்..
அப்படி விழித்தது ஒரு நிமிடமே.. தன்னை சுதாரித்த அபி.. "பயம் போச்சிலேடா உனக்கு.. எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி நடந்துப்பா?? இங்கே பாரு.. நீ நான் கேட்டதுக்கு பதில் சொன்னா இன்னைக்கு நைட்டு உனக்கு சாப்பாடு.. இல்லாட்டி பட்டினி தான்" என இடுப்பில் கை வைத்து முறைத்தவளை.. "ஹேய்.. அப்படிலாம் சொல்ல கூடாது.. மீ பாவம்" என முகத்தை பாவமாக வைத்திருந்தவனை பார்த்து கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் திரும்பினாள்..
"ஹேய்.. சரி டி.. சொல்லுறேன்.. உனக்கு என்ன தெரியனும்??" என கேட்டவனிடம்.. "அன்னைக்கு அவன் என்னை பார்த்து தானே வந்தான்.. அப்புறம் உன்னை கூட்டிட்டு போய் பேசுனான்.. அப்புறம் என் கிட்ட வந்து சாரி சொன்னான்..அப்படி என்ன நடந்துச்சி??" என கேட்டவளை பார்த்தவன்.. "அவன்
அவன்னு சொல்லுறியே.. அவன் எவன்??" என அர்ஷா கேட்கவும் அவனை முறைத்தவள்.. "அக்ஸர்" என்றாள்..
"ஹ்ம்ம்" என ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன்.. "அன்னைக்கு என்னை கூட்டிட்டு போனதும் .." என கூறியவன் நடந்ததை கூறினான்..
"சொல்லுங்க என்ன விஷ்யம்??" என கேட்ட அர்ஷாவிடம்.. "ஃபர்ஸ்ட் என்னை மன்னிச்சிருங்க அர்ஷா.. நான் என் இல்லை உங்க அபிய ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்" என கூறியவன் அர்ஷாவை பார்த்துவிட்டு.. "நான் ஏன் அவ்வளவு நல்ல பொண்ண இப்படி கஷ்ட படுத்துனேனு தெரியலே.. ஆனா, அவளை நான் கஷ்டபடுத்துனதை வார்த்தையால சொல்ல முடியாது அர்ஷா.. என்னால அவ்வளவு அழுதிக்கிறா.. நான் மறுபடி மறுபடி அவளை நம்ப வைச்சி ஏமாத்திட்டேனு.. அதுக்கு முக்கிய காரணம் நான் வளர்ந்த விதம்னு சொல்லலாம்.. நான் சின்ன வயசுல இருந்து பெங்களூர் தான் இருந்தேன்.. நம்ம ஊருக்கு அவ்வளவா வந்தது இல்லை.. எனக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட அங்க தான் இருக்காங்கனு சொல்லலாம்.. அங்க இருக்குற ஃப்ரெண்ட்ஸ்ல கேரள்ஸும் சரி.. பாய்ஸும் சரி.. என்னை சுத்தி இருக்குறவங்களை சொல்லுறேன்.. லவ்னு ஒன்னு இல்லவே இல்லை.. லவ் பன்னுவாங்க.. அப்புறம் பிரேக் அப்.. அப்புறம் இன்னொருத்தனு போய்க்கிட்டே இருப்பாங்க.. அதனால தான் நான் அபியோட லவ்வ புரிஞ்சிக்கல போலே..
அவளை நான் ஒரு க்ரெடிட்டா மட்டும் தான் பார்த்தேன்.. பணம்,நகை,வீடு,கடைனு எல்லாமே அவ மூலமா கிடைக்கும்.. அப்படியே லைஃப்ல செட்டில் ஆகலாம்னு நினைச்சேன்.. அதே மாதிரி அவ ஒருத்தனுக்கு ஒருத்தி பாலிஸினு நினைக்கிறவ.. சோ, எவ்வளவு டார்ச்சர் பன்னாலும் என்னை தான் கட்டிப்பானு முழுசா நம்புனேன்.. அவுங்க வீட்டுக்கும் அவ ஒரே பொண்ணுனு ரொம்ப செல்லம்..
சோ, அவ ஆசைய நிறைவேத்தி வைப்பாங்கனு முழுசா நம்புனேன்.. எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்ட எனக்கு அவ பேரன்ட்ஸ் மேலே அவ உயிரையே வச்சிக்கிறதே மறந்துட்டேன்.. அவ லவ்வ புரிஞ்சிக்கல..
ஆனா, அவ போய் அவளை எனக்கு புரிய வச்சிட்டா" என கூறியவனை அர்ஷா புரியாமல் பார்க்க.. "அபி என் மேலே உயிரா தான் இருந்தா.. அதை நான் புரிஞ்சிக்கலே.. அவளே வேணாம்னு சொன்னா.. அப்பையும் நான் எதையும் கண்டுக்கலே.. எனக்கு கல்யாணம் ஆச்சி.. ஆனா, என் மேரேஜ் னால என் நிம்மதி போச்சி.. அதுல அபிய தான் அதிகமா நினைச்சி பார்ப்பேன்.. என் நிம்மதிய கெடுத்துட்டு இருந்தவ ஒரு நாள் என்னைய விட்டுட்டும் போய்ட்டா" என கூற..
"என்ன சொல்றா அர்ஷா" என அபி பதற்றமாக கேட்க.. "அவ அவளோட லவ்வர் கூட ஓடி போய்ட்டா" என கூறியவன்.. "அவன் செய்ஞ்ச தப்ப நினைச்சி வருந்துரான்.." என கூறி முடிக்கவும்.. அபியின் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் கொட்டியது..
"என்ன ஆச்சி அபி??" என கேட்க.. "நான் ஜெய்ச்சிட்டேன் அர்ஷா.. நான் ஜெய்ச்சிட்டேன்.. இது என் சந்தோஷ கண்ணீர் அர்ஷு.. நான் ஜெய்ச்சிட்டேன்.. என்னோட ஃபர்ஸ்ட் லவ் நீ தான் டா.. எனக்கு மாப்பிள்ளைனா எப்படி இருக்கனும்னு ஆசைப்பட்டேனோ அப்படியே நீ வந்துட்டா டா.. அக்ஸர் விஷ்யத்துல நான் விலகுனாலும் நான் கிடைக்கலேனு அவன் வருத்தம் படனும்னு சத்தியமா நினைச்சேன் டா.. என்னால அவன நல்லா இரினு படத்துல வர்ர மாதிரி ஆசிர்வாதம்லாம் பன்ன முடியாது அர்ஷா.. நானும் சாதரண பொண்ணு தானே.. நான் நினைச்ச மாதிரி அவன் ஃபீல் பன்றத என் கண் முன்னாடி பார்த்துட்டேன் டா.. இனி அதை பத்தி யோசிக்க தேவையில்லை.. அவன் யாரோ.. நாம்ம யாரு.. சரி.. டைம் ஆச்சி.. வா போகலாம்" என அர்ஷாவை இழுத்து கொண்டு சென்ற நேரம்.. விஷ்வா ஸ்வேதாவின் கழுத்தில் அனைவர் ஆசிர்வாதத்துடனும் தாலியை கட்டினான்..
அனைத்து சடங்குகளும் முடிந்து இரவும் வந்தது.. பதைபதைக்கும் மனதுடன் முதலிரவு அறைக்குள் ஸ்வேதா நுழைய.. அவளை கண்டும் காணாமல் திரும்பியவனை பார்த்து முறைத்தவள்.. "ஏன் டா.. நான் எவ்வளவு எதிர்ப்பார்போட வந்தேன்.. உள்ளே நுழைஞ்சதும் கதவு பின்னாடி நின்னு டோர் லாக் பன்னிட்டு என்னை தூக்கி சுத்துவா.. அப்படி இப்படி கனவு கண்டுட்டு வந்தா.. நீ இப்படி யாருக்கோ வந்த விருந்து மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கிறே" என்றவளிடம்.. "போடி.. டையர்டா இருக்கு.. வா.. தூங்கலாம்" என படுத்தவனை.. "இவனைலாம்" என மனதில் புலம்பிவிட்டு அருகல் படுத்தவள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்..
"ச்சே.. என்ன இது.. சுத்தமா தூக்கம் வரலையே" என எழுந்து அமர்ந்தவள் அமைதியாய் சாய்ந்து இருக்க.. அவளை வேகமாக இழுத்தவன்.. போர்வையை மேலே போட.. "டேய் விடு.. தூக்கம் வருதுனு............" என ஸ்வேதா கூற வருவதை முழுதாக கூற விடாமல் அவளின் இதழை சிறை செய்து அவளை முழுதாக தன்னவளாக ஆக்கி கொண்டான் விஷ்வா..
"டேய்.. என்ன இது.. ரூம் மாறி வந்துட்டோமா" என கேட்ட அபியிடம் .. "இல்லையே.. இது நம்ம ரூம் தான்" என்க..
"இது நம்ம ரூம் இல்லை டா.. ஃபர்ஸ்ட் நைட்க்கு அரேஞ்ச் பன்ன மாதிரி இருக்கு.. அவுங்க ரூம்" என திரும்பி போக அடி எடுத்து வைத்தவளை இழுத்து வேகமாக கதவை மூடியவன்.. "நமக்கு தான் ஃபர்ஸ்ட் நைட்" என கூறி கண்ணடித்தான்..
அது வரை நல்லா பேசிக்கொண்டிருந்தவள்.. அவன் கூறிய கடைசி வார்த்தையில் வியர்த்து படப்படத்து நின்றவளை கட்டிலில் அமர வைத்தவன்.. அவள் அருகில் அமர்ந்தான்..
"அர்ஷூ.. அது.. இது.. இப்ப" என தடுமாறியவளை.. "ப்ளீஸ் அபி.. நான் தவமாய் தவமிருந்து உன்னை அசைஞ்சிக்கிறேன் டி.. பெரிய போராட்டத்துக்கு அப்புறம் எனக்கு நீ கிடைச்சிக்கிறா டி.. ஐ வான்ட் யூ.. எனக்கு நீ வேணும் அபி.. ப்ளீஸ்" என்று சொல்லி கழுத்தில் மெதுவாக இதழ் பதித்தவனை பார்த்தவள்.. கண்கள் மூட.. "ஏன் அர்ஷு.. உன்னை எல்லோரும் கிண்டல் பன்றாங்க.. அபி,அபினு கிடக்கிறானு.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. உனக்கு அப்படி இல்லையா??" என வாய்க்குளே முனுமுனுத்தவளிடம்.. "என்ன மாதிரி இருக்கு?? என் பொண்டாட்டி நான் அப்படி இருக்கேன்.." என நெற்றியில் முத்தமிட்டவன்.. " என் பொண்டாட்டி நான் காதலிக்கிறேன்" என இரு கண்ணத்திலும் இதழ் பதித்தவன்.. "என் பொண்டாட்டி நான் என்ன வேணாலும் செய்வேன்" என இதழில் முத்தமிட வந்தவன் அவள் சம்மதத்தை எதிர்ப்பார்த்து அவளை நோக்க.. அவள் சொல்லாமல் சொன்னாள்.. தன் சம்மதத்தை கண்கள் மூடி..
சிறகு விரித்து பறந்தேன் மணவாழ்க்கை தொடங்க நாட்கள் போல் வயதும் வந்து விட்டது என உயிர் ஜனனம் கொடுத்து உயிருக்குள் வளர்த்தவர்கள் என்னை கண்ணுக்குள்ள வைத்து காக்க துணை தேடி வரனாக என் வாழ்வில் நுழைந்தவனோ மணம் முடிக்கும் முன் பேச விருப்பமில்லை என கூற அன்புமொழிகள் பேசி அவனிடம் சிலவார்த்தை பேச அவனோ அடிக்கல் நட நினைத்திருக்கிறான் என் வாழ்வை திசை திருப்ப.. மணமுடிக்க போகிறோம் என எண்ணி மனம் திறந்து பேசவில்லை எனினும் எனக்கு அவன் தான் என எண்ணி காதல் இன்றி கட்டாயத்தால் அவனுக்கு கட்டுப்பட்டு இருந்தேன்.. உண்மை முகம் தெரிகையில் உணர்வின்றி தவித்தேன் ஏதோ மாயம் விதி செய்த சதியில் அவனிடம் வாழ்க்கை தொலைக்காமல்... திருமணம் முறிந்து பேசினாலே தவறு என தவித்து வாழமுடியாமல் தவித்த போது இறைவன் அருளால் இமை திறந்து என் வாழ்வை வண்ணமயமாக்க வந்தவன் அவன் காதலோடு நெருங்குகையில் எனக்குள் வேலி அமைத்து விலகினேன் இன்று அவனே என்கையில் கோபத்திலும் மென்மையை கையாளுபவன்... எந்நிலையிலும் என்னை வெறுக்காதவன் அன்போடு அரவணைத்தவன் என்னை எனக்கே புரியவைத்து வாழ்க்கையின் அர்த்தம் சொன்னவன்.... என்னை தேவதையாய் பாவித்து எனக்குள் அவன் உயிர் கொடி நிலைநிறுத்தியவன் இன்று என் உயிருக்குள் உயிராய் என் மனசெல்லாம் நிறைந்தவன் அவனே என்னவன் காதலால் எனை முழுதும் சிறைபிடித்த என் கணவன்.....
(arunlovely வரிகள்)
அவர்களின் வாழ்க்கையில் என்றும் இன்பமழை பொழியும் என நம்பி நாமும் விடைபெறுவோம்..
வாழ்க வளமுடன்
(Srinidhisweety lines..
Edited ashikmo kaka)
இந்த கதையை ஒரு வழியாக முடித்து விட்டேன்.. இந்த கதையில் பலருக்கு கஷ்டத்தை குடுத்திருக்கேன் என எனக்கு தெரியும்.. அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்..
அதனையும் மீறி அபியின் வாழ்க்கையில் ஒளி வீசும் என நம்பி என்னுடன் பயணித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றியை வார்த்தையால் சொல்ல முடியாது..
இந்த கதையில் முக்கிய திருப்பமாக அர்ஷாவின் வருகையை கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தது என் இரு சகோதரர்கள் tharakannan ashikmo ... உங்க இருவருக்கும் இக்கதையை சமர்ப்பிக்கிறேன்..
அர்ஷாவின் வருகைக்கு பிறகு முக்கியமான இடத்தில் வழி தெரியாமல் நான் முழித்த போது என் தோழி எனக்கு விளையாட்டாக சொல்லிய ஒரு கதையின் பேஸ்மென்ட் தான் எனக்கு கை குடுத்தது.. லவ் யூ டியர் binthbuhari
உங்க கமேன்ட்.. அதன் மூலமா என்னை அடுத்த கதை யோசிக்க வைத்து.. நல்ல கான்செப்ட் கிடைச்சிது.. நீங்க எனக்கு ஒரு நல்ல சப்போர்டர் ஜி.. கீப் சப்போர்டிங் Jaymeeru நன்றி ஜி..
இந்த கதையில் பதிவிடும் இறுதி ஆட்னு நினைக்கிறேன்..
Littleprincesarju வின்
"என் உயிரணுவின் வரம் நீயே" ஒரு தந்தை மகளிர்க்கு நடுவில் உள்ள பாசம்.. படித்து விட்டு சப்போர்ட் செய்யுங்கள் நட்புகளே..
என் டார்ச்சர் கண்டிப்பாக தொடரும் நட்பூஸ்.. டாடா👋👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro