மனதினில் கனக்கும் பாரங்கள்
வெற்றுப்பரப்பாகக்கரைகின்ற காலங்கள் விட்டுச் செல்கின்ற எண்ணில்லா ஞானங்கள்.
வாழ்வின் விளிம்புவரை வேரோடி விழுதெறிந்து, மனதின் ஆழத்துள்
தொடர்கின்ற பாரங்கள்.
சொல்லத்துணிவிருந்தும் சொல்லுதற்கு ஆற்றாமல், உள்ளே குடைந்தபடி
எனைக்கொல்லும் ஆசைகள்.
நேசம் மிகு உறவை நித்தமும் தேடியிங்கே காணாமல் நொந்தொடிந்து
கனக்கும் குழந்தை மனம்.
இரவும் பகலும் இப்படியே நகர்ந்துவிட உள்ளத்தின் பாரங்கள்
உதிராத ஆரங்கள்.
ஆர்ப்பரிக்கும் கடலடியில் மீன் அழுது பார்த்ததுண்டா?
அதுபோலே எனதுள்ளம் நித்தம் ஏனோ அழுகிறது.
எனக்குள் உந்தியெழும் உள்ளத்து உணர்வுகளை சொல்லிக் கவி வடிக்க
சொல்தேடி தோற்றுவிட்டேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro