12
பாலகுமார் பார்வையில் (தொடர்ச்சி)
என்னால் வனிதாவுடன் சகஜமாக பேச முடியவில்லை. அவள் ஏன் இப்படி செய்தாள் என்பதை கேட்கும் தைரியமும் இல்லை. நான் இயற்கையிலேயே அமைதியான குணம் உள்ளவன். யார் வம்படிக்கும் போகமாட்டேன்.
வனிதாவை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் இரவு நேரங்களில் தாமதமாக வீடு வர ஆரம்பித்தேன். வனிதா அதை தவறாக புரிந்து கொண்டு, என் மீது கோபம் காட்டத்தொடங்கினாள். நாள்பட்ட காயத்தில் சீழ் வடிவது போல எங்களின் உறவும் மொத்தமாக கசக்க தொடங்கியது. இந்த கர்ப்பக்காலத்தில் வனிதாவை விட்டு பிரிவது சரி இல்லை என நினைத்ததால் குழந்தைகள் பிறந்தபின், இது பற்றி பேசலாம் என நினைத்தேன். வனிதாவை விட்டு பிரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். யாரோ ஒருவனின் பிள்ளைக்கு நான் அப்பா ஆக முடியாது.
குழந்தைகள் பிறந்தது. டாக்டர் என் கைகளில் குழந்தைகளை கொடுத்து வாழ்த்துக்கள் கூறிச் சென்றார். இரட்டையர்கள் என்பதால் வழமையை விட இருவரும் எடையில் கொஞ்சம் குறைவாக இருந்தனர். என்னதான் மாற்றானின் பிள்ளைகளாக இருந்தாலும் பிறந்து சில கணங்களே ஆன குழந்தைகளை கையில் ஏந்துவது இதுதான் எனக்கு முதல் முறை.
இருவரையும் தொட்டிலில் போட்டு வனிதாவை பார்க்க திரும்பினேன். கயல் அவளின் குட்டி விரல்களால் என் விரல்களை பிடித்துக் கொண்டிருந்தாள். முப்பது வினாடிகள் இருக்கும், அவள் என் விரல்களை விடவேயில்லை. என் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. வனிதாவை விட்டு பிரியும் முடிவை அந்த நொடி முதல் மாற்றிக்கொண்டேன். அவளாகவே என்னை விட்டு பிரியும் வரை நான் எந்த முடிவும் எடுப்பதில்லை என்று எனக்குள் சபதம் பூண்டேன்.
இந்த உலகில் மனிதனை மாற்றக்கூடிய மிகப்பெரிய ஆயுதம் காதல் என்று எல்லோரும் சொல்வார்கள். சிலருடைய விடயத்தில் அது உண்மையாகவும் இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை ஒரு ஆணை முழுமையாக மாற்றக்கூடிய சக்தி தந்தை என்ற பதவிக்கு உண்டு.
குழந்தைகள் பிறந்த பின், நான் வனிதாவுடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன். ஆனால் அவள் என்னை ஒதுக்க ஆரம்பித்தாள். ஏன் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு வனிதா மீது கோபம் எல்லாம் வரவில்லை. மனதில் இருப்பதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பதால் அவள் மேல் எனக்கு பரிதாபமே வந்தது. இருந்தாலும் அவளிடம் சென்று இந்த குழந்தைகளின் தந்தை யார் என்று கேட்கும் தைரியம் எனக்கில்லை. ஒரு வேலை நான் கேட்க சென்று, அது பெரிய பிரச்சினையாகி, வனிதா என்னை விட்டு சென்றால் குழந்தைகளின் அருகாமையை நான் இழக்க நேரிடும். எனக்கு கயல், நிலாவின் இருவரின் அருகாமையும் வேண்டும். என்னால் இவர்களை பிரிய முடியாது.
நாட்கள் செல்ல செல்ல வீட்டுக்குள் வனிதா மிருகமாகவே மாறிப் போனாள். எங்கே அவளுக்கு பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற அளவுக்கு இருந்தது அவளது செயல்கள். அவளை நான் சில காலம் நோட்டம் விட்டேன். வீட்டில் மட்டும்தான் அவளது செயல்கள் மிருகத்தனமாக இருந்தது. மற்றபடி வெளியில் அவள் சாதாரணமாகத்தான் இருந்தாள். அதில் இருந்து எனக்கு புரிந்த விடயம் "வனிதா எங்களிடம் இருந்து அவளை பிரித்துக்கொள்ள இப்பொழுதே தன்னை தயார் படுத்திக் கொள்கின்றாள்" என்று.
வனிதா பீகார் சென்றதெல்லாம் எனக்கு தெரியும் என்பது அவளுக்கு தெரியாது. ஆனால், அதன் பின் சுவாரசியமாக எதுவுமே நடக்கவில்லை. வீட்டில் வனிதா தன்னை முழுமையாக தனிமைப்படுத்திக் கொண்டாள். மகள்களுக்கு நானே எல்லாமும் ஆகிப் போனேன்.
வனிதா வீட்டை விட்டு சென்ற இரண்டு நாட்களின் பின்..
நான் என் மனதில் இருக்கும் எல்லாவற்றையும் கயல் மற்றும் நிலாவிடம் கூற வேண்டும். என் மகள்களிடம் அவர்களை பற்றிய உண்மைகளையும் கூற வேண்டும். எனக்கு தெரிந்த வனிதாவின் காதலையும் கூற வேண்டும். அவள் தன் மேல் வேண்டும் என்றே இறைத்துக்கொண்ட சேற்றையும் கழுவ வேண்டும். என் மீது இருக்கும் பொறுப்புக்கள் எனக்கு பாரமாகத் தோன்றியது.
" ரெண்டு பேரும் வந்து இங்க உட்காருங்க" என்று நான் சோபாவை காட்டினேன். இருவரும் நான் ஏதோ ஒரு பெரிய விடயத்தை பேசப் போகின்றேன் என்பதை புரிந்து கொண்டு அமைதியாக வந்து அமர்ந்தனர்.
"முதல்ல நான் சொல்ல போறத எதிர்த்து பேசாம ரெண்டு பேரும் அமைதியா கேட்கனும். நீங்க ஏதும் பேசுறதா இருந்தா கூட நான் பேசி முடிச்சதுக்கு அப்புறமாத்தான் பேசனும். இடையில ஏதும் பேசினீங்க, அப்புறமா நான் இதைப் பத்தி பேசவே மாட்டேன். கயல் உன்னைத்தான் சொல்றேன். இடையில ஏதும் சத்தம் போட்ட அதோட இந்த டாபிக் முடிஞ்சிடும்" என்றேன். இருவரும் அமைதியாகவே இருந்தனர்.
நான் ஒரு பெண்ணை காதலித்தது முதல் வனிதாவை பெண் பார்த்து, திருமணம் நடந்தது வரை கூறி சற்று நிதானித்தேன். அதன் பின் கயலும் நிலாவும் எனக்கு பிறக்கவில்லை என்ற ரகசியத்தையும் கூறினேன். கூறும் போதே என் நா தழுதழுத்தது. இதை இவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் உண்மையை கூறியே ஆக வேண்டும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வனிதா இந்த உண்மைகளை இவர்களிடம் கூறினால் அதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. அதனால் நானே இதை கூறிவிடுவது உசிதம் என நினைத்தேன்.
கயல்தான் பெரிதாக கலங்குவாள் என நினைத்தேன். ஆனால் கலங்கியதோ நிலா. அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்தோடியது.
"நீ எதுக்கு நிலா அழுகுற. காம் டவுன்" என்று கூற அவள் என்னை தாவி வந்து அணைத்துக்கொண்டாள். எனக்கு தெரியும் அவளின் கவலை எங்கே நானும் அவர்களை விட்டுச் சென்றுவிடுவேனோ என்பதுதான்.
"நாங்க உங்க பிள்ளைங்க இல்லைன்னு தெரிஞ்சும் எப்படிப்பா உங்களால எங்க மேல இவ்வளவு பாசத்த கொட்ட முடிஞ்சது" என்று நிலா கேட்டாள்.
"நான் வாழ்றதே உங்களுக்காகத்தான். உங்க அம்மாவ விட்டு பிரியனும்னுதான் நினைச்சேன். ஆனா உங்க ரெண்டு பேரையும் கையில ஏந்தின பிறகு உங்கள விட்டு என்னால பிரிய முடியும்னு தோனல. என் வாழ்க்கையில் ஒளியூட்ட வந்த தேவதைங்க நீங்க இரண்டு பேரும். இப்படி இருக்கும் போது நான் உங்க மேல பாசம் காட்டாம வேற யாரு மேல காட்ட" என்றேன். நிலமை ஓரளவு சுமூகமாக மாறியது. ஆனால் வனிதா பற்றி எனக்கு தெரிந்த விடயங்களை கூறியும் அவள் மீது இவர்களுக்கு இருக்கும் வெறுப்பு குறைந்ததாக தோன்றவில்லை.
அடுத்து கயல் கேட்ட கேள்வி என்னை சிரிக்க வைத்தது.
"அப்பா உங்க லவ் ஸ்டோரிய கொஞ்சம் டீடைல்லா சொல்லுங்களேன் கேட்போம். அவதான் வீட்ட விட்டு ஓடிப்போயிட்டா. இதுக்கு அப்புறமும் எதுக்கு அவள பத்தின பேச்சி" என்றாள். நான் அவளை முறைத்தேன்.
"இங்க பாரு கயல், என்ன இருந்தாலும் வனிதா உன்னோட அம்மா. அந்த மரியாதை என்னைக்குமே உன் மனசுல இருக்கனும். நான் உங்கம்மா வாழ்க்கையில நடந்த, எனக்குத் தெரிந்த கஷ்டங்கள சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா காமடி பண்றேன்னு என்ன என்னமோ பேசுற" என்று கொஞ்சம் காட்டமாகவே கூறினேன்.
-------------
ஹாய் வட்டீஸ்,
ஒரு குட்டி ஸ்டோர் சொல்லப் போறேன். நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது எங்க வீட்ல ஒரு மலைக்குரங்க என் தங்கச்சின்னு சொல்லி ஹாஸ்பிடல்ல இருந்து கூட்டி வந்தாங்க. அந்த குரங்குக்கு நான் பண்ணாத கொடுமை இல்லை. அது ஒரு பக்கம் இருக்கடும்.
அந்த குரங்கு என் ஸ்டோரீஸ் எல்லாமே படிக்கும், ஆனா வோட் போடாது. சூப்பரா இருக்குன்னு அந்த குரங்கு நினைக்குற அப்டேட்ஸ்கு மட்டும்தான் அது வோட் போடும். எனக்கு நேத்தைக்குதான் தெரியும் அந்த குரங்கு " பல் முளைத்த பட்டாம்பூச்சி" படிக்குதுன்னு. ஏன்டி வோட் போடலன்னு கேட்டா... இந்த ஸ்டோரி இப்படித்தான் போகும்னு முன்னாடியே தெர்யும். வாவ்னு சொல்ல புதுசா எதுவுமே இல்லைன்னு பொசுக்குனு சொல்லிட்டா. நமக்கு அப்படியே அவமானமா போச்சி.
20 அப்டேட்ஸ் எழுதிட்டேன். இன்னைக்கு 12வது அப்டேட் போடுறேன். இதுக்கு அப்புறமா வர போற எல்லா அப்டேட்டையும் மறுபடி முதல்ல இருந்து சரி பார்க்க ஆரம்பிக்கனும். ஏன்னா அந்த மங்கி கையாள வோட் வாங்கனும். இதை அந்த மங்கி படிக்கும்னு தெரியும். நான் என்னைக்குமே அவகிட்ட நேர்ல சொல்லாத ஒன்ன இங்க சொல்லலாம்னு இருக்கேன்.
ஐ லவ் யு சோ மச் மங்கி. sometimes ur my mentor. u always support me in my hard times. even if i do wrong doing.
அடுத்து.. கதையோட கவர் பேஜ் vaanika-nawin வானிகா அக்கா பண்ணிக்கொடுத்தாங்க. ரொம்ப நன்றிக்கா. அட்டைப்படம் கூட சூப்பரா இருக்குன்னு பலர் சொல்லிட்டாங்க என்கிட்ட.
பைனலி.. எப்போமே என்னோட அப்டேட்ஸ்லாம் Maayaadhi மாயாதி அவங்கதான் கரக்ட்சன் பார்ப்பாங்க. இப்போ அவங்களுக்கு காலேஜ் எக்சாம் பிசி என்பதால நானே எல்லாம் பார்க்கனும். சோ இனி அப்டேட் வர கொஞ்சம் தாமதமாகும். டெய்லியும் அட்பேட் எழுத முடியாது. இரண்டு நாட்களுக்கு ஒன்று என வந்த அப்டேட் வாரத்துக்கு ஒன்று என ஆகலாம். ஆனால் கதையை நிறுத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.
இந்த கதை கொஞ்சம் நிதானமாக எழுத வேண்டும். அவரவர் பார்வையில் எல்லோரும் நல்லவர்கள். யாருடைய செயல்களும் தப்பாக காண்பித்துவிடக்கூடாது என்பதில் மிகவும் பிரயத்தனமாக இருக்கின்றேன்.
அவ்வளவுதான் வட்டீஸ்.. Bye.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro