அத்தியாயம் - 30 😌
கடவுளின் படைப்பில் மனிதனுக்கு தான் எவ்வளவு அறிவு.... அம்மானிடப்பதர்.. நினைத்தால்.. உலகை சொர்க்கமாக.. அதே சொர்க்கத்தை நரகமாகவும் மாற்றும் வல்லமை கொண்ட ஒரே.. ஜீவன்.. சந்தேகத்திற்கு இடமின்றி.. மனிதப்பிறவியே..
ஆனால்.. அதே மானிடப்பதர்.. ஐந்தறிவு ஜீவராசியை போல.. உண்ணவும்.. உறங்கவும் மட்டுமே செய்கின்றன.. சிலரை தவிர்த்து..
மனிதன் வாழ்வது.. சிறு நாட்களே.. அச்சிறு காலத்தில்.. இலக்கு என்ற ஒன்றை மனதில் பதித்து.. அதை அடைய முடியாவிடினும்.. பாதியளவாவது.. கடந்து முயற்சித்தோம்.. என்ற திருப்தியே நமக்கு போதுமானது..
ஏன்.. இந்த இலக்கு.. ?? எதற்காக.. இந்த.. லட்சியம்.. ?? என வினா எழுப்பும் அன்பர்களுக்கு நான் கூறும்.. பதிலாவது..
எந்த உயிரினமும் அர்த்தமற்று ஜனிப்பதில்லையே.. புழுக்கள் , பறவைகள்.. என்றனைத்தும்.. மண்ணுக்கும் வையத்திற்கும் தன் கடமையாற்றவே பிறக்கின்றன..
ஓரறிவு.. ஈரறிவு.. ஜீவன்களே.. அவ்வாறேனில்.. ஆறறிவு படைத்த மனிதனின்.. வாழ்வு.. அளப்பறியது..
'அரிதினும் அரிது.. மானுடனாய் பிறத்தல் அரிது..' என்ற நம் முன்னோரின் வாக்கு தான் பொய்யாகுமா.. ??
அப்படிப்பட்ட அம்மானுடனின் வாழ்வானது.. அர்த்தமற்று தான் போக வேண்டுமா.. ??
மகாபாரத தொலைக்காட்சி தொடரில்.. கதைப்பதை போல்.. சிந்தித்து செயலாற்றுங்கள்.. ??
ஷ்ரித்திக்கிற்கு.. இது நாள் வரை மனதில் இருந்த.. சஞ்சலங்கள் விலகிவிட்டதாக... இல்லை.. விலக்கிவிட்டதாக.. எண்ணி நிம்மதியடைந்தான்..
தன்னவளை காயப்படுத்தும்.. என்றறிந்தும்.. அவளை தன்னவளாக்கி.. சஞ்சலங்களை இழுத்து போட்டுக் கொண்டான்.. ஷ்ரித்திக்..
எதற்காக.. ?? எல்லாம் அவளுடன் சேர்ந்து பாரின் லாவண்யத்தை ரசிக்கவே.. தனக்கான உற்ற துணை அவளே.. என்றவன் மனம் கூறும் போது.. இவனும் என்ன தான் செய்வான்.. ??
ஆம்.. சுயநலம் தான்.. தனக்கான தேவையை அடையும்.. அடிப்படை சுயநலம் தான்.. நிச்சயம் தவறே..
அக்கணம்.. அவ்வினாடி.. ஷிவாக்ஷி வேண்டும் என்று நினைத்தானே.. ஒழிய.. அவளின் நிலையை.. யோசிக்கவில்லை.. தான் புரியும்.. இச்செயலால் பெரும் பாதிப்பு அவளடைவாள்.. என்பதை அவ்வினாடி மறந்தான்..
ஆனால்.. அதை இப்பொழுது.. முழுதாக இல்லை எனினும்.. முடிந்த மட்டும் சரி செய்திருப்பதாக.. நினைத்திருந்தான்..
இங்கு ஷிவாக்ஷியோ.. தாத்தாவை பற்றி எண்ணி.. வேதனையில் இருந்தாலும்..
மற்றவர் முன்.. தன் மனக்கவலைகளை வெளிப்படுத்தாது.. இருந்தாள்.. அவள் நினைத்திருந்தாள்... திருமணம் முடிந்து.. மகிழ்வின் அணைப்பில் இருந்திருக்க வேண்டிய ஷ்ரித்திக்..
தன்னால் தான்.. இந்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.. என்று..
ஆனால்.. தள்ளப்படவில்லை.. தன்னையும் உடன் இழுத்திருக்கிறார்.. என ஷ்ரித்திக்கின் வாயிலாகவே தெரிந்து விட்டது..
அவளுக்கு.. எள்ளளவும் ஆத்திரமில்லை.. அதற்காக.. களிப்பும் இல்லை.. அவளுக்கு இக்கணம் வரை.. ஒரு பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறோம்.. என்ற எண்ணம்..
இது நிரந்திரமில்லை.. என்றவள் நன்கு அறிவாள்..
ஷ்ரித்திக்கின் எண்ணப்போக்கும் சரியில்லை என்பதையும் உணர்ந்திருந்தாள்..
இன்று.. உணவுண்ணும் வேளையில்.. ஷ்ரித்திக்கின் பாட்டி தேவசேனா உரைத்த.. குழந்தை என்ற பேச்சை.. கேட்டு.. அதிர்வில்.. உண்ட உணவு.. தடம் மாறியதால்.. பொறை ஏறியது.. அது கூட ஷ்ரித்திக்கால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
பழகியே.. இரு வாரம் தான் முழுமையாய் முடிந்திருந்த.. இந்நிலையிலே.. இவர் இவ்வளவு தீவிரமாக இருப்பதை கண்டு.. சற்று அச்சம் துளிர்விட்டுள்ளது.. என்று மொழிந்தால்.. அது மறுக்க முடியாத உண்மை..
இப்பொழுது கூட அதற்கான தீர்வை நோக்கி.. தான்.. ஷ்ரித்திக்கின் அலைப்பேசியை நோண்டினாள்..
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் மனதை வாட்டிய.. சங்கடத்தில் இருந்து.. விடுவித்து விட்டோம்.. என்ற மகிழ்வில்.. அவள்.. மனதின் எண்ணங்களை.. அறியாமல்.. அவளை ரசித்து விழுங்கிக் கொண்டிருந்தான்.. 😍😍
ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் அலைபேசியில்.. நோண்டிக் கொண்டிருந்தாள்.. அதை கண்டு இன்னும் பிரமிப்பு.. அவனுடைய பொருள்களை.. ஷிவாக்ஷி தொடவே மாட்டாள்.. நீ மூன்றாம் நபர்.. என்றுரைக்கும் செயல்.. அது.. அப்படியே எடுத்தாலும்.. அவன் அனுமதி பெற்றே..
அந்த மகிழ்வு... சில வினாடிகள் வரை தான்.. ஷ்ரித்திக்கிற்கு அவள் ஏதோ.. முட்டாள் தனமான ஒன்றை செய்திருப்பதை.. அவள் முகம் பிரதிபலித்தது..
இன்று நிகழ்ந்தவைகளை அசைப்போட்டு.. மனதை.. குழப்பிக் கொண்டிருப்பாள்.. என ஷ்ரித்திக்கின் மனம் நினைத்ததை பொய்யாக்கியது.. அவள் இதழ்களில் தவழ்ந்த.. விஷம நகை..
ஷ்ரித்திக்கிற்கு புரிந்தது.. ஏதோ.. தனக்கெதிராக செய்திருக்கும் செயலை மொழியப் போகிறாள்..
ஷிவாக்ஷி.. "வாங்கோ.. சித்த இங்க உட்காருங்கோ.. உங்களாண்ட.. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.." என்று ஷ்ரித்திக்கை அமரச் செய்து தானும் அமர்ந்தாள்.. 😊😊
ஷிவாக்ஷியே தொடர்ந்தாள்.. "சாரி.. என் போன்ல.. டேட்டா பேலான்ஸ்.. வாண்டுங்க காலி பண்ணிட்டா.. அதான்.. உங்களோடத.. அவசரத்துக்கு எடுத்துண்டேன்.." என விளக்கம் மொழிய.. 😊😊
ஷ்ரித்திக்.. அவள் மனதை படிக்க முயன்றாள்.. ஆனால் என்ன நினைக்கிறாள்.. என்றறிய இயலவில்லை.. அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு "அதுக்கெதுக்கு.. சாரி.. தேவையில்லை.. என்ன முக்கியமான விஷயம்.. ??? அதை சொல்லு.. ??" என வினவினான்.. 🤨 புருவம் உயர்த்தி..
ஷ்ரித்திக்.. அப்படி நேரடியாக கேட்டதும்.. ஷிவாக்ஷியின் இதயத்துடிப்பு அதிகமானது.. தன்னை சமன் செய்து.. வெளிக்காட்டிக் கொள்ளாமல்.. சொல்ல முயன்றாள்.. ஆனால்.. ஷ்ரித்திக்கின் உயிரைத் தொடும் பார்வையை.. கண்டு.. "அது.. அது வந்து.." என.. தடுமாறினாள்.. 🙄🙄
ஷ்ரித்திக்.. "ம்ம்ம்.. சொல்லு.. ???" என ஊந்தினான்.. 😎😎.. மாறா பார்வையோடு..
ஷிவாக்ஷி.. தைரியத்தை வரவழைத்து கொண்டு.. "இங்க.. பாருங்கோ.. இதப்பாருங்கோ.. எவ்ளோ.. அழகழகான பொண்ணுங்க.. இதுல யார.. நோக்கு பிடிச்சிருக்குன்னு.. சொல்லுங்கோ.. மீதியை நான் பாத்துக்கறேன்.. எல்லா.. உங்க தகுதிக்கு ஏத்தவா.. நோக்கு.. மேட்ரிமொனியில.. பாக்க இஷ்டமில்லைனா.. நான்.. நேக்கு தெரிஞ்ச தரகராண்ட.. பேசிருக்கேன்.. நாளைக்கு வந்துடுவா.. ஹ்ம்ம்ம்ம்.." என படபடவென.. மொழிந்து தள்ளினாள்.. ☺️☺️..
ஷ்ரித்திக்கின் திறன்பேசியில்... திருமண வலைத்தளத்தில் சென்று.. ஷ்ரித்திக்கின் சுயவிவரம் பதிவு செய்து.. பணத்தையும் கட்டி.. அவனுக்கு ஏற்ப.. பெண்னை பார்த்துக் கொண்டிருந்தாள்.. அதை அப்படியே அவனிடமும் காட்டி.. அவனின் சம்மதத்தை பெற முயற்சித்தாள்..
அவளுக்கு தெரியும்.. ஷ்ரித்திக் தன்னை நினைத்து.. இதற்கு நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டான்.. ஆனால்.. இது தனக்கான இடமன்று என்பதையும் உணர்ந்து.. அவள் செய்யும் செயல்..
ஷ்ரித்திக்.. அவளின் மொழிகளை.. கேட்டவனுக்கு.. பொங்கி வரும் ஆத்திரத்தை கட்டுபடுத்தும் வழியறியாமல்.. தலையை அழுந்த தேய்த்து கொண்டிருந்தான்..
ஷிவாக்ஷி மீண்டும்.. மீண்டும்.. அதையே மொழிந்தாள்.. "சொல்லுங்கோ.. இல்ல.. நீங்களே.. இத பாருங்கோ.. ?? அதுவும் இல்லனா.. தரகராண்ட.." என மொழிந்து கொண்டிருக்கும் போதே.. ஷ்ரித்திக்.. அவள் கரத்திலிருந்த திறன்பேசியை... பிடுங்கி எறிந்தான்.. ரௌத்திரம் தாண்டவமாடியது அவன் விழிகளில்.. 😠😠
திறன் பேசி டிஸ்ப்ளே கண்ணாடி.. துகள் துகளாக.. சிதறிக் கிடந்தது..
ஷிவாக்ஷி.. அதிர்வில்.. நேந்திரம் விரிய பார்த்தாள்.. ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் தோளைப் பற்றி அழுத்தினான்.. "என்ன நினைச்சிட்டு இப்படியெல்லாம்.. பண்ற டி.. ?? நான் சொல்றது.. உனக்கு புரியலாயா டி.. ?? நான் உன்னை லவ் பண்றேன்.. உன்னை தவிர என் லைஃப்ல எந்த பொண்ணுக்கும இடம் கிடையாது.. இந்த மாதிரி முட்டாள்தனமா இனி ஏதாவது பண்ண.. நடக்கிறதே வேற.." ஷ்ரித்திக்.. 😡😡 ஆத்திரம்.. கொப்பளிக்க நேராக ஷிவாக்ஷியின் விழிகளை பார்த்து மொழிந்தான்..
ஷிவாக்ஷி சற்று பயந்து போனாள்.. ஷ்ரித்திக் இதுவரை.. தன்னை 'டி' என்று கூறி அழைத்ததேயில்லை.. இதுவே முதல் முறை.. அதில் ஒரு அதிர்வு.. ஷ்ரித்திக்கின் ஆத்திரம்.. இந்த ஆத்திரத்தை திருமணத்தின் மறு நாள்.. அவள் கண்டது.. அதன் பிறகு இப்போது தான் பார்க்கிறாள்.. ஷ்ரித்திக் தோள்களை பற்றி அழுத்தியதில்.. கை எலும்பு முறிந்து விடும் அளவுக்கு.. வலி ஒரு பக்கம் வேறு படுத்தியது..🥴🥴
ஷிவாக்ஷியின் வலியை.. அப்படியே அவள் முகமும் பிரதிலித்தது.. வலியால்.. அவள் முகம் சிவந்து.. விழிகளில் நீர் துளிர்த்தது.. 🥺🥺 அதை கண்டதும்.. அவன் ஆத்திரத்தின் அளவு குறைந்தது..
ஷ்ரித்திக்.. பற்றி அழுத்திய தோள்களை அப்படியே விடுவிக்க.. ஷிவாக்ஷியால்.. இரண்டு அடி தள்ளி போய்.. தான் சரியாய் நிற்க முடிந்தது..
தோள்பட்டை தடவி தான்.. வலியை சமன் செய்ய முடிந்தது.. ஷிவாக்ஷியால்..
ஷ்ரித்திக்.. கோபம் மட்டுப்பட.. நெற்றியை அழுந்த தேய்த்து கொண்டான்.. 🤨🤨
ஷிவாக்ஷியே.. ஆரம்பித்தாள்.. "நான் சொல்றது.. நோக்கு புரியலையா.. ?? நான் உங்களுக்கு ஏத்தவா.. இல்ல.. நீங்க எங்க.. ?? நா எங்க.. ?? கொஞ்சம் கூட பொருந்தாது.. புரிஞ்சுகுங்கோ.. ப்ளீஸ்.." என கோபம் போல தொடங்கி.. கெஞ்சுவதை போல முடித்தாள்.. 😟😟
ஷ்ரித்திக்.. அவளுக்கு பொறுமையாக எடுத்துக் கூற நினைத்தான்.. "ஷிவு.. உன்கிட்ட கோபம் படக்கூடாதுன்னு நினைக்கிறேன்.. ஆனா என்னை கோபப்பட வைச்சிட்ட.. ஓகே.. லுக் மீ.. நீ எடுத்திருக்க இந்த முடிவு.. அதோட பின்விளைவுகள் என்னன்னு தெரியுமா.. ??" என ஷ்ரித்திக் முடிக்கவில்லை.. 🤨🤨 இடையில் கத்தரித்தாள்.. ஷிவாக்ஷி.. "அதெல்லாம் தெரியும்.. தெரியும்.." என அசட்டையாக கதைத்தாள்.. 😑😑
அவளின்.. அலட்சிய மொழி.. மட்டுப்பட்ட கோபத்தை எகிறச் செய்தது.. "என்ன தெரியும்.. ?? இல்ல.. என்ன தெரியும்னு கேக்கறேன்.. சும்மா வந்துட்டா.." என கர்ஜித்தவன்.. முனகும் மொழிகளாக முடித்தான்.. 😡😡
மீண்டும் தொடர்ந்தான்.. "எனக்கு தெரியும் டி.. நீ என்ன நினைக்கிறேன்னு.. நீ எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டு.. இப்படியே தனியே இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்னு.. என்ன டி.. இது முட்டாள்தனமான முடிவு.. உன் மண்டைக்கு மட்டும் எப்படி றீ.. இப்படி லூசுத்தனமா தோனுது.. ஹான்.." என ஷ்ரித்திக்... ஷிவாக்ஷியை கடுகடுவென பொரிந்து தள்ளினான்.. 😡😡
ஷிவாக்ஷியால்.. அந்த வசவு சொற்களை கேட்டு.. அமைதியாக இருக்க முடியாது.. "என்ன.. ?? இப்ப என்னென்னு சொல்றேள்.. ?? நா முட்டாளா.. ?? நா அஷடா.. ?? அமைதியா இருந்தா.. என்னவென பேசுவேளா.. ?? உங்க லிமிட்ல இருங்கோ.." என ஷிவாக்ஷியும் எகிற தொடங்கினாள்.. 😠😠
ஷ்ரித்திக்கிற்கு.. கோபம் உருவானது தான்.. ஆனாலும்.. மகிழ்வும் உடன் சேர்ந்தது.. ஷிவாக்ஷி முதன்முறையாக தன்னிடம் கோபம் கொண்டது.. அவனுக்கு ஆனந்தமாக இருந்தது.. தெரிவிக்காமல்.. கோபம் குறையாது.. "ஹோ.. அப்படி.. வரீயா.. ?? சரி.. அப்ப நீயும்.. உன் லிமிட்ல இரு.. எனக்கு கல்யாணம்.. மண்ணாங்கட்டினு ஏதும் பேசாத.." என திண்ணமாக கூறினான்.. ஷ்ரித்திக்.. 😡😡
"அதெப்படி.. என்னால.. சொல்லாம இருக்க முடியும்.. ?? நோக்கு கலியாணம் ஆனா தான்.. என்னால.. இந்த ஆத்த விட்டுண்டு.. போக முடியும்.. நேக்கு என்ன தலையெழுத்தா.. நோக்கு எல்லாம் பொண்ணு பாக்கணும்னு.. ரொம்ப ஓவரா போறேள்.. ??" என ஷிவாக்ஷி.. அவ்வளவு தைரியமாக.. வாதிட்டாள்.. அவளுக்கு தெரியவில்லை.. எப்படி இவ்வளவு துணிவு வந்ததென்று.. 😡😡
ஷ்ரித்திக்.. "ஓவரா போறது.. நீயா.. நானா.. ?? நான் உன்னை லவ் பண்றேன்னு.. சொல்றேன்.. நீ லூசுத்தனமா.. வெளியே போய் பொண்ணு பாக்கற.. ??" என அவனும் அவளுடன்.. எதிர் வாதம் புரிந்தான்.. 😡😀
"இங்க பாருங்கோ.. சும்மா.. சும்மா.. அஷடுன்னு.. சொல்லிண்டே இருந்தா.. நேக்கு கெட்ட கோபம் வரும்.. நேக்கு என் முடிவு சரின்னு தான் தோன்றது.. அப்படி என்ன அஷட்டு தனமா முடிவு எடுத்தேன்.. சொல்லுங்கோ.. ??" என்று ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் முன் நேர் பார்வையாக கேட்டு வைத்தாள்.. 🤨🤨 புருவம் உயர்த்தி..
"ம்ம்ம்ம்ம்ம்.. என்னன்னா கேக்கற.. ?? நான்.. உன்னை லவ் பண்றேன்.. நீ.. எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சிடுவ.. மேடம்.. தனியா போயிடுவீங்க.. இங்க நான் சந்தோஷமா.. இருப்பேன்னு நீ நினைக்கறீயா.. ?? சரி.. என்னை விடு.. வந்து வாழப்போற பொண்ணு சந்தோஷமா இருப்பாளா.. ?? அந்த பொண்ண பத்தி நினைச்சு பாத்தீயா.. ?? மண்ணாங்கட்டி.. தகுதிய பாத்து.. பேர் தெரியாத பொண்ணோட மனசையும் வாழ்க்கையும் அழிச்சிடாத.." என ஷ்ரித்திக் கூறியவன்.. 🤨
மேலே.. தொடர்ந்தான்.. "அது.. மட்டுமா.. ஏற்கனவே உன் தாத்தா.. என்மேல கோபமா இருக்காரு.. நீ அதுல.. மேல எண்ணெய் ஊத்தற மாதிரி.. உன் தாத்தா கோபம்.. வெறுப்பா மாறும்.. நீ தனியா இருக்கறத பாத்துட்டு.. உன் தாத்தா.. இதுக்கா.. உன்னை வளத்தேன்னு.. மனசுக்குள்ள.. புளுகியே செத்துடுவாரு.. இப்படி மத்தவங்க சந்தோஷத்தை.. நிம்மதிய கெடுத்துட்டு.. உன்னால.. நிம்மதியா இருக்க முடியுமா.. ?? நான் கேக்கற கேள்விக்கு பதில் உன்கிட்ட இருக்கா.. ??" என ஷ்ரித்திக் தன்னவளுக்கு புரியும் படி விளக்கமாக கூறி முடித்து.. அவளை பார்க்க.. 🤨🤨
ஷிவாக்ஷியின்.. முகம் துடைத்து வைத்ததை போல.. உணர்ச்சியற்று.. நிர்சலனமாய்.. நின்றிருந்தாள்.. 😐😐
ஷ்ரித்திக்.. கூற கூற.. ஷிவாக்ஷியின் மண்டையில் சம்மட்டியால் அடித்தாற் போல.. இருந்தது.. (my mind voice: அத.. பின்னாடி யாரோ.. அடிக்கற மாதிரியும்.. இவ விழுகுற மாதிரியெல்லாம்.. கற்பனை பண்ணி.. பாத்திருக்கு பயபுள்ள..) 🥴🥴
ஷிவாக்ஷி.. இப்படியொரு கோணத்தில் யோசிக்கவே இல்லை.. ஷ்ரித்திக் மொழிந்தது போல்.. ஒரு பெண்ணின் மனதை சாகடித்த பாவம்.. தன்மேல் அல்லவா.. விழுகும்.. தாத்தாவை பற்றியுமே சிந்திக்கவில்லையே.. மதில் மேல் பூனை என்ற நிலையானதே.. என் நிலை..
ஷ்ரித்திக்கை விட்டு விலகவும் முடியாமல்.. இவ்வாழ்வில் ஒன்றவும் முடியாமல்.. அவஸ்தையில்.. சிக்கிக் கொண்டார் போலொரு உணர்வு.. ஷிவாக்ஷிக்கு.. 😟😟
ஷ்ரித்திக்கால்.. இப்போது என்ன.. அவளின் மனம் நினைக்கிறது.. என கணிக்க முடியவில்லை.. அவள்.. முகம் எவ்வித சலனமும் இன்றி இருக்கிறதே..
ஷ்ரித்திக்.. "ஷிவு.. லுக்.. ஐ நோ.. நீ இந்த ஊரு உலகத்துக்கு பயப்படற.. ?? இவ நல்ல பணக்கார இடத்தை வலச்சு போட்டுட்டா.. அம்மாவையும் மகனையும்.. நல்லா மயக்கி கல்யாணம் பண்ணிட்டா.. அப்படின்னு மத்தவங்க பேசிடுவாங்களோன்னு.. தான நினைக்கிற.. ??" என கேள்வியோடு.. நிறுத்தி.. ஷிவாக்ஷியை பார்த்தான்.. 🤨🤨🤨
ஷ்ரித்திக்கின் அழைப்பில்.. அவனை விழித்தவள்.. அவனின் கேள்விக்கு தலை தானாய் அசைந்தது.. அது தான் உண்மையும் கூட.. 🙁🙁
"இந்த.. உலகம் எத்தனை நாளைக்கு பேசும்.. ?? ஒரு மூணு நாள்.. மிஞ்சி மிஞ்சி போனா... ஒரு வாரம்.. அப்பறம்.. அவங்க அவங்க வேலைய பாக்க போயிடுவாங்க.. அப்படியே பேசுனா தான் என்ன.. ?? நீ தைரியமா சொல்லு.. ஆமா.. நான் என்னோட புருஷனையும்.. மாமியாரையும் தான் மயக்கினேன்.. அதுல உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு கேளு.. அப்பறம்.. பாரு.. உன்னை கேள்வி கேட்டவங்க.. வாயை பொளந்துட்டு.. போவாங்க.. எண்ணங்கள் தான் வாழ்க்கை.. ஷிவு.. நான் சொன்னது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.." என ஷ்ரித்திக்.. அவளின் மனதை அரித்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததை போல.. மொழிந்தான்.. 😎
ஷிவாக்ஷிக்கும்.. ஷ்ரித்திக்கின் சொற்கள் அனைத்தும்.. ஏற்றுக் கொள்ளும் வகையில் தான்.. இருந்தது.. ஆனால்.. இடையில் ஏதோ.. தடுக்கிறது..
சிறிது அவகாசம் அளிக்க நினைத்து.. அவ்விடம் விட்டு.. விலகி சில அடி தூரம் சென்றிருப்பான்.. என்ன நினைத்தானோ.. திரும்பி.. அவளிடம்.. ஊடுருவும் பார்வையை வீசினான்.. ஆனால்.. ஷிவாக்ஷியின் முகம் தீவிரமாக இருப்பதை கண்டு.. எரிச்சல் உருவானது.. 🤨🤨
அவனுக்கு புரியவில்லை.. அவன் மொழிகளை தான்.. அசைப்போட்டு.. சிந்திக்கிறாள்.. அதன் காரணமாய்.. அவள் முகம் தீவிரமாய்..
எரிச்சலில்.. ஷ்ரித்திக்.. "இங்க பாரு.. இந்த பேச்சு இனி என் காது கேக்கக் கூடாது.. இது தான்.. கடைசி.. என் வாழ்க்கையில நீ மட்டும் தான்.. வேற எந்த பொண்ணுக்குமே.. இடம் இல்ல.. அகெயின்.. சில்லியா.. இல்ல.. நீ நினைச்சது தான் நடக்கனும்னு.. அடமென்ட்டா.. இருந்தா.. அப்பறம்.. நா குடும்ப கட்டுப்பாடு செஞ்சுக்குவேன்.. ஜாக்கிரதை.." என்றதும்.. ஷிவாக்ஷி.. வெடுக்கென நிமிர்ந்து.. புரியாத பாவனையை வீசினாள்.. 🙄🙄
"புரியல.. தன்னை கட்டிக்க போற பையனுக்கு.. ஆண்மை இல்லனு.. தெரிஞ்சா.. எந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்க ஒத்துப்பா.. ?? நீ வேணா என் லைஃப் விட்டு போய்கோ.. ஆனா நீ இருந்த இடத்தில யாரும் இருக்க மாட்டாங்க.. அதுக்கு நான் விடமாட்டேன்.." என்று ஷ்ரித்திக் கர்ஜித்து விட்டு அகன்றான்.. 😠😠😎😎
ஷிவாக்ஷிக்கு அப்பொழுதும் புரியவில்லை.. ஷ்ரித்திக்கின் மிரட்டும் சொற்களில்.. ஆண்மை பெரிய விஷயம் என்று புரிகிறது.. அது இல்லையெனில் எந்த பெண்ணும் திருமணம் செய்ய மாட்டாள்.. என்றும் புரிகிறது.. ஆனால்.. ஆண்மை என்றால் என்ன.. ?? என்று தான்.. அவளுக்கு தெரியவில்லை.. 🙄🙄
ஷிவாக்ஷி.. யாருக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றாலும்.. நேரம் காலம் பார்ப்பாள்..
இரவு மணி.. பதினொன்றை கடந்தது.. என்று கூட உணராமல்.. தன் தோழிக்கு அழைப்பு விடுத்தாள்.. அவளின் திறன்பேசி மூலம்..
போர்வைக்குள்.. இதழை திறந்து.. எச்சிலை ஒழுகிய படி.. உறங்கிய இஷானியின்... 😪😪 செவியில்.. விழுந்தது.. திறன்பேசியின் அலறல்..
உறக்கத்தின் பிடியில்.. கரங்கள் தானாய்.. அவளின் திறன் பேசி தேடியது.. ஒரு வழியாக.. எடுத்து.. செவியின் மேல் வைத்து விட்டு.. கரகரக்கும் குரலில்.. "ஹலோ..." என்றாள்.. உறக்கத்தின் அணைப்பில்.. 😴😴
"ஹேய்.. இஷா.. ஒரு டௌப்ட்.. ??" என ஷிவாக்ஷி.. அந்த நேரத்தில் கேட்டு வைத்தாள்.. 🙄🙄🙄
"ஏன்டி... மணி பதினொன்றைரை.. டி.. தூங்குற பச்சப் பிள்ளைய எழுப்பி.. டௌப்ட்னு வேற கேக்கற.. இது உனக்கே நியாயமா படுதா.. ??" என சயன நிலையில் செவியில் திறன்பேசியை வைத்து விட்டு.. ஈனஸ்வரத்தில் கரகரத்து பேசினாள்.. இஷானி.. 😴😴
"நான் கேக்கறதுக்கு மட்டும் பதில்.. சொல்லு.. ?? இந்த குடும்ப கட்டுப்பாடு அப்படின்னா.. ?? என்ன.. ??" என ஷிவாக்ஷி மெதுவாக.. மொழிய.. 🙄🙄
இஷானிக்கு தான்.. வெடிகுண்டு வீசி வெடித்த சத்தமாய்.. ஒலித்து.. உறக்கத்தை பறித்து வைத்தாற் போலானது.. "என்ன்ன்....னன..துது.. குடும்ப கட்டுப்பாடா.. ?? இந்த வார்த்தைலாம்.. உனக்கு தெரியவே தெரியாது.. ?? யார் டி.. உனக்கு சொல்லி குடுத்தது.. ?? சொல்லு.. ??" என அதிர்வு நிறைந்த குரலில் மொழிந்தவளின்.. உறக்கம்.. அவளை விட்டு வெகு தூரம் சென்றது.. 😳😳
"ம்ப்ச்.. நான் தான் முதல்ல கேட்டேன்.. சோ.. நேக்கு பதில் சொல்லு.. ??" என்றவளோ.. தன் கேள்வியிலேயே நின்றாள்.. ஷிவாக்ஷி.. 🤨🤨
"சரி.. சரி.. சொல்றேன்.. குடும்ப கட்டுப்பாடு கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டவங்க.. அதாவது.. ஒன்னோ.. இல்ல.. ரெண்டு குழந்தை பெத்துகிட்டவங்க.. போதும்.. இனி குழந்தை வேண்டாம்.. அப்படின்னு நினைக்கிறவங்க.. குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்குவாங்க.. சார்ட்டா.. சொல்லனும்னா.. குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டா.. குழந்தை பெத்துக்க முடியாது.." என இஷானி சொல்லி முடிக்கவும்.. 🤨
அடுத்த வினாடி.. திறன்பேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது..
இஷானி.. "அதான.. லூசு.. இவ சந்தேகத்தை தீத்துக்கிட்டா... என் தூக்கத்தை கெடுத்துட்டாளே.. ?? இவளுக்கு எப்படி தெரிஞ்சிருக்கும்.. ?? இவ தான்.. 90'ஸ் கிட்ஸ் ஆச்சே.. இவ தாத்தா.. இவள அப்படி வளத்திவிட்டிருக்காரு.. கல்யாணம்.. காதல் இதெல்லாம் தப்புன்னு சொன்னதால.. இவளும்.. அந்த பக்கம் போனதே இல்லை.. அவரோட கண்டிப்பு அப்படி.. ஹ்ம்ம்ம்ம்.. யாரோ.. சொல்லிருக்கனும்.. அதான்.. என்கிட்ட கேட்க போன் பண்ணிருக்கா.. ராட்சசி.." என இஷானி.. தன் தோழியை கருவினாள்.. உறக்கத்தை பறித்த கடுப்பில்.. 😠
இங்கே.. ஷிவாக்ஷி.. இஷானி கூறிய மொழியில் ஆடிப் போய் விட்டாள்..
குழந்தை பாக்கியமின்றி.. எத்தனை தம்பதிகள் , பெண்கள்.. பார்த்தசாரதி கோவிலுக்கு வந்து வாசுதேவனிடம் வேண்டுதலை வைக்கின்றனர்..
பார்த்த சாரதி கோவிலில்.. அங்கேயே வளர்ந்த ஷிவாக்ஷிக்கு தெரியாதா.. ??
அவள் வசித்திருந்த பக்கத்து இல்லத்தில்.. ஒரு பெண்ணுக்கு.. திருமணமாகி இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில்.. விசேஷம் இல்லையா.. ?? என உறவினர்கள்.. ஒருபக்கம்.. புகுந்த வீட்டில் அந்த பெண்னை வாய் கூசாமல் மலடி என வசவ.. அப்பெண்ணின் நிலை பரிதாபமாகிபோனது..
பெண்ணுக்கே இந்த நிலையெனில்.. ஒரு ஆணுக்கு இந்த நிலை உருவானால்.. அது பெரும் அவமானமாகுமே.. ?? அந்த ஆண்மகனை செல்லும் இடமெல்லாம் கருவவும்.. கேலிக்கைக்கும் உள்ளாக்குவார்களே.. ?? ஒற்றை வார்த்தையில்.. மொழிந்தால்.. அவனை ஆணே இல்லை.. என்ற பழிசொல் விழுமே.. ??
ஷிவாக்ஷியால்.. அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. ஷ்ரித்திக் மொழிந்த வேளையில்.. அவன் நேத்திரத்தில் தெரிந்த வீரியம்.. தீவிரம்.. அதை நிச்சயம் செய்வேன்.. என கதைக்க தேவையின்றி சொன்னது..
ஷ்ரித்திக்.. எப்படி.. இவ்வாறு கூறலாம்.. ?? ஒரு ஆண் தன்னுடைய கௌரவத்தை.. தன்னுடைய அடையாளத்தையே எப்படி விட்டு தரலாம்.. ?? அதுவும் ஒரு பெண்ணுக்காக.. தவறு.. பெருந்தவறு..
ஷ்ரித்திக்.. உரைத்த சொற்களை.. இப்போது நினைத்தாலும்.. உள்ளுக்குள் சில்லிட்டு.. ரோமக் கால்கள் எல்லாம்.. நட்டு வைத்தாற் போலானது.. ஷிவாக்ஷிக்கு..
அணையிட்டும் தடுக்க முடியாத ஆத்திரத்தை.. ஷ்ரித்திக்கின் பக்கமே திருப்பினாள்.. 😡😡 அவனிடமே.. தீர்த்துக்கொள்ள கிளம்பினாள்..
ஷிவாக்ஷி.. தங்களின் அறைக்கே வேக எட்டுகளோடு அடைந்தாள்.. 😡😡
ஷ்ரித்திக்.. அங்கு கோபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக.. 😡😡 வேலையில் கவனம் செலுத்தியதில்.. பாதி அளவு வெற்றியடைந்தான்..😐 முழுதாய்.. அடைவதற்குள்.. ஷிவாக்ஷி நுழைந்து விட்டாள்.. 😡😡
நுழைந்து அரை வினாடி கடக்கவில்லை.. "ஏன்.. ?? அப்படியொரு வார்த்தை விட்டேள்... ?? குடும்ப கட்டுப்பாடுன்னு.. பெரிய பெரிய வார்த்தை வர்றது.. அதெல்லாம் பண்ற வயஷா நோக்கு.. ?? என்ன பண்ணிட்டேள்னு அப்படியெல்லாம் பேசறேள்.. ??" என தன் மனதுள் உருவான மொழிகளை.. அப்படியே கொட்டினாள்.. ஆத்திரத்தில் கொதித்த குருதி.. அவள் முகத்தில் சங்கமித்து.. சிவந்த முகத்தோடு.. 😡😡
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியின் சிவந்திருந்த முகத்தை கண்டு.. சற்று இளகினாலும்.. அவளின் சூடான வார்த்தைகள்.. கோபத்தை உருவாக்கியது.. "ஓஓஓ.. நான் சொன்னது தான் உனக்கு தெரியுதா.. ?? நீ பண்றது.. உன் கண்ணுக்கு தெரியலையா.. ?? இந்த பொண்ணுங்களே இப்படி தான்.." என ஷ்ரித்திக்.. அவன் பக்கம் வாதத்தை இறக்கினான்.. 😡😡
"நான் சொன்ன வார்த்தை என்ன.. ?? நீங்க சொன்ன வார்த்தையோட வீரியம் என்ன.. ?? இரண்டையும்.. மூடிச்சு போடறேள்.. ?? அண்ட் ஒன் மோர் திங்.. என்னை பத்தி மட்டும் பேசுங்கோ.. மொத்த பொம்மனாட்டி பத்தி பேசாதேள்.." என விரல் நீட்டி எச்சரித்து.. ஷ்ரித்திக்கின் விழிகளை நோக்கி கோபம் குறையாது கொட்ட... 😡😡
ஷ்ரித்திக்.. "அப்ப.. இப்ப கூட... நான் சொன்னத புரிஞ்சுக்கல.. ?? நீ நினைக்கிறது தான் நடக்கனுமா.. ?? எனக்கு கோபம் வருது.. ஷிவு.." என ஷ்ரித்திக்.. பதிலுக்கு ஷிவாக்ஷியிடம் கத்த.. 😡😡
"ஹோ.. நோக்கு மட்டுந்தான் கோபம் வருமோ.. ?? நேக்கு வராதா.. ?? என்ன நினைச்சிண்டு இப்படியெல்லாம் என்னாண்ட வந்து பேசினேள்.. ?? அதுவும் சர்வசாதாரணமா சொல்றேள்.. ??" என ஷிவாக்ஷி இம்முறை ஆத்திரத்தோடு வினவினாள்... 😡😡
"ஆமா.. என்னோட வாழ்க்கைல உன்னை தவிர வேற எந்த பொண்ணுக்கும்.. இடம் இல்லை.. இது உனக்கான இடம்.. நான் என்ன.. நினைக்கிறேன்னு.. உனக்கு தெரியாதா.. ?? உன்னை தாண்டி நினைக்கிறேன்.. நினைப்பேன்.. நினைச்சுட்டே இருப்பேன்.." என்று ஷ்ரித்திக்.. அவளிடம் கத்தாத குறையாக.. குரலை உயர்த்தினான்.. விழிகளில் காதலும் கோபமும் ஒருங்கே சங்கமித்து.. 😡😍..
இதற்கெல்லாம் நான் அசைவேனா.. ?? என்றிருந்தது.. அவளின் பார்வை.. பார்வையோடு.. நிறுத்தினால் தானே.. "இந்த டயலாக்கு எல்லாம் நா மயங்க மாட்டேன்.. இதுக்கு எல்லாம்.. மயங்குறவா.. பல பேர் இருக்கா.. அதுக்கு நான் ஆளில்லை... தாத்தா சொல்லுவா.. ஆரம்பத்தில
காதல் வேகத்துல.. வயசு முறுக்குல.. இந்த வசனம் கேக்கறச்ச.. நன்னா இருக்கும்.. ஆனா பின்னாடி கசக்கும்.. அது சரியா தான் இருக்கறது.." என தேவையே இன்றி.. ஷ்ரித்திக்கின் காதலை கிளறி நொண்டினாள்.. 😡😡
"ஷிவு.. என்ன வேணா சொல்லு.. கேட்டுக்கறேன்.. ஆனா.. என் காதலை பத்தி ஏதாவது சொன்ன.. ?? அவ்ளோதான்.. என்ன தெரியும் உனக்கு.. நான் டயலாக்... விடறேனா.. ?? என்னோட காதல் உனக்கு அப்படி தெரியுதா.. ?? அப்பறம் என்ன சொன்ன.. ?? காதல் வேகத்தில.. வயசு முறுக்குல.. ஹ்ம்ம்ம்ம்.. நான் ஒன்னும்
பதினெழு வயசு பையன் இல்லை.. என்னோடது.. மெச்சுரிட்டியான லவ்.. புரியுதா.. ??" என்று ஷ்ரித்திக்.. அவளிடம் கத்தினான்.. 😡😡
"எதுக்கு.. என்னாண்ட வாதம் பண்றேள்... ?? இங்க பாருங்கோ.. நேக்கு இந்த காதல்.. கல்யாணம் இதெல்லாம் வெத்து.. சிங்கிள் தான் கெத்து.. அதுவும் நான்.. முரட்டு சிங்கிள்.. நான் எவ்ளோ சந்தோஷமா இருந்தேன்னு நோக்கு தெரியுமா.. ?? என் ஸ்ருஷ்டி எவ்ளோ பெருசுன்னு தெரியுமா.. ?? நான் எப்படி எல்லாம் இருந்தேன்னு தெரியுமா.. ?? கலியாணத்துக்கு அப்புறம்.. நான் இவ்ளோ அழுமூஞ்சின்னு நேக்கு இப்ப தான் தெரியும்.. இதுக்கு முன்னாடியும் நான் அழுதிருக்கேன்.. ஆனா அது சித்த நாழி தான்.. நீங்க நான் இங்க அமைதியா.. அழுதுண்டு இருக்கறத.. பாத்துண்டு.. ரொம்ப ரொம்ப நல்லவான்னு நினைக்கிறேள்.. நீங்க இன்னும் என்னை பத்தி முழுசா தெரிஞ்சுக்கவே இல்லை.. அதுக்குள்ள எப்படி லவ்.. ??" என ஷிவாக்ஷி தன் மனதுள் உருவான கேள்வியையும்.. தன்னை பற்றியும் ஒருங்கே கேள்வியாய் எழுப்பினாள்.. 😠🤔
"இப்ப தான்.. ரொம்ப சரி பேசிருக்க.. கேட்டிருக்க.. உண்மை தான்.. எனக்கு உன்னை பத்தி எதுவுமே தெரியாது.. இன்ஃபேக்ட்.. நான் எப்பவுமே.. வெளியாள் ஒருத்தர் இந்த குடும்பத்துல நுழைஞ்சா.. அவங்கள பத்தி ஃபுல் டீடெயில்ஸ் அடுத்த செகண்ட்.. என் கையில இருக்கும்.. ஏன்னு தெரியல.. உன் விஷயத்தில என் அறிவு.. வேலை செய்யல.. உன்னை பத்தி.. இந்த செகண்ட் வரைக்கும்.. நான் எதுவுமே விசாரிக்கல.. உன்மேல அவ்ளோ நம்பிக்கை.. அப்படி நான் நம்பாம இருந்திருந்தா.. இதோ.. ரெண்டு நாள் முன்னாடி.. அந்த வித்யுத் சொன்னத கேட்டிருப்பேன்.. நீ இந்த வீட்டில இருந்திருக்க மாட்ட.. நான் கண்டிப்பா சாரி சொல்லமாட்டேன்.. பிகாஸ்.. நான் தெரிஞ்சு தான் உன்னை கல்யாணம் பண்ணேன்.. மோர் ஓவர்.. உன் மனசுல நான் இருக்கேன்.. உன் கண்ணுல நான் பாத்திருக்கேன்.." என ஷ்ரித்திக் பேசிக் கொண்டு இருக்கும் போதே இடையில் தடுக்க வந்தவளை கையமர்த்தி.. "இல்லன்னு சொல்லாத.. நிறைய முறை பாத்திருக்கேன்.. முத முதல்ல.. நீ என்னை அந்த வெள்ளத்தில பாத்த.. அப்ப உன் கண்ணுல.. அந்த காதல் எனக்கு தெரிஞ்சுது.. உனக்கு என்னை பிடிக்கலன்னா.. நீ ஏன் மணமேடைக்கு வந்த.. ?? இதே என் இடத்துலே வேற யார் இருந்தாலும்.. இப்படி தான் போயிருப்பியா.. ?? சரி அது போகட்டும்.. அந்த வித்யுத் உன்னை பத்தி தப்ப சொன்னான்.. நானும்.. முதல்ல நம்பற மாதிரி உன்னை திட்டுனேன்.. அப்ப உன் கண்ணுல தெரிஞ்ச அந்த வலி.. அதுக்கு என்ன அர்த்தம்.. ?? உனக்கு நேத்து.. முத்தம் கொடுத்தேன்.. உனக்கு ஏன் என்மேல கோபம் வரல.. ?? எல்லாத்துக்கும் மேல.. உன்னை நான் ஏமாத்தி தான் கல்யாணம் செஞ்சிட்டேன்னு.. நானே சொன்னேன்.. அப்பவுமே.. உனக்கு கோபம் வரல.. ?? இதுக்கெல்லாம் என்ன காரணம்னு... உனக்கு புரியலையா.. ??" என ஷ்ரித்திக்.. வரிசையாக அடுக்கிக் கொண்டே போனான்.. அவளுக்கு புரிய வைத்து விடவேண்டும் என்கிற எண்ணத்தில்.. 😑😑😑 அவனின் முகத்தில் ஆதங்கமும்.. ஆற்றாமையும் நிறைந்து இருந்தது..
இதுவரை ஷிவாக்ஷி கூட இந்த வகையில் யோசிக்கவே இல்லை.. அவன் சொல்வதை கேட்டு.. மனமும் இதயமும்.. பயத்தை கொண்டு.. தடதடத்து கொண்டிருந்தது.. அவளால்.. எதுவுமே மொழிய இயலவில்லை.. 😐😐
அவளின் மௌனத்தை.. கண்டு.. ஷ்ரித்திக் மொழிந்தார்.. "லவ் தான் ஷிவு.. உனக்கு என்மேல காதல் இருக்கு அதை நீ இன்னும் உணரல.. நான் உணர்ந்திட்டேன்.. அதான்.. உன்கிட்ட.. இப்படி கால்ல விழுகாத குறையா கெஞ்சறேன்.. நீ என்கூட சேர்ந்து வாழுன்னு.. உன்னை ஒருநாளும் கேக்கல.. நாம இப்படியே இதே ரூம்ல.. இதே மாதிரி வாழ்ந்த கூட எனக்கு போதும்.. உன் முகத்தை பார்த்து வாழ்றேன்ங்கிற நிம்மதி போதும்.. ஆனா இந்த கல்யாணம் அப்படி இப்படின்னு மட்டும் பேச்ச எடுக்காத.." என ஷ்ரித்திக்.. உணர்வு பொங்க.. கதைக்க.. 🙁🙁
அதில் இருந்த.. உண்மை.. அவன் சொற்களில் இருந்த தீவிரம்.. விழிகளில் வழிந்த.. அளவு கடந்த காதலை.. முதன் முதலாக உணர்ந்தாள்.. 🙁🙁 அவளுக்குள் ஏதோ பிசைவது போலிருந்தது.. அதுவும் சில நிமிடங்கள் தான்.. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போலானது.. அவள் நிலை..
"ஹான்.. ஹான்.. கேக்க நன்னாதான்.. இருக்கும்.. ஆனா.. நான் இதுக்கு.. ஆளில்லை... ஆயிரம் சொல்லுங்கோ.. நீங்க சொன்னது.. தப்பு தான்.. என்னாண்ட அப்படியொரு வார்த்தை சொல்லி இருக்கப்படாது.." என்றே அவள் தான் பிடித்த பிடியிலே நின்றாள்.. ஷிவாக்ஷி.. 😠😠
"நான் பண்ணது தப்புன்னா நீ பண்ணதும் தப்பு தான்.. அதை ஒத்துக்கோ.." என்று அவனும் சரிக்கு சரியாய் நின்றான்.. 😠😠
"நான் பண்ணது தப்பில்ல.. நான் சரியா.. நியாயமா.. தான் பேசினேன்.. ஆனா.. நீங்க சொல்ற ஆங்கில்ல.. நான் யோசிக்கல.. அது ஒரு வகையில தப்பு தான்.. ஒரு வகையில தான்.. ஓகே.." என 🙁 உரைத்தவளை.. கண்டு.. ஷ்ரித்திக்.. வசவ ஆரம்பித்தவனை கையமர்த்தி.. "இருங்கோ.. எதுவும் சொல்லாதேள்.. ?? நான் யோசிக்கறேன்.. ஹ்ம்ம்ம்ம்.." என்று தாடை தட்டி யோசித்தவள்.. 🤔 திடீரென யோசனை வந்தவளாக... "ஹான்.. பேசாம நாம தனியா.. பிரிஞ்சுடலாம்.. சரியா போயிடும்.. ஹ்ம்ம்.. சிம்பிள்.." என 😊 இயல்பாக கூறுபவளை கண்டு விழிகள் பொறி கக்கியது.. 😡😡
"வேதாளம் முருங்கை மரம் ஏறுனத.. நான் கதையில கேள்வி பட்டிருக்கேன்.. ஆனா இப்ப தான்.. அந்த வேதாளத்தை நேர்ல பாக்கறேன்.." என ஷ்ரித்திக்.. நேரடியாக அவளை கருவினான்.. 😡😡
"என்ன.. வேதாளமா.. ?? அப்ப என்ன வேதாளம் அப்படின்னு.. இன்டெரக்டா.. சொல்றேளா.. ??" என்று ஷ்ரித்திக்கின் முன் வந்து நின்று.. கண்னை சுருக்கி.. கேட்டு வைத்தாள்.. 😑 துளியும் கோபமின்றி..
"ஹோ.. இதுவே உனக்கு.. இன்டெரக்டா.. ?? லூசாடி நீ.. பைத்தியம்.. நான் உன்ன லவ் பண்றேன்னு சொல்றேன்.. நீ கேனை மாதிரி பேசற.. ??" என்று ஷ்ரித்திக்.. அவளின் பதிலில் உயர்ந்த கோபத்தில் கத்தினான்.. 😡😡
"நான்.. பைத்தியமா.. ?? உங்கள.. ??" என ஆத்திரத்தில்.. அருகில் எதையோ தேடியவளின் விழியில் விழுந்தது.. சோஃபாவில் இருந்த தலையணை தான்.. அதை அவன் மீது விட்டேறிந்தாள்.. 😡😡
அதை லாவகமாக.. ஷ்ரித்திக்.. பிடித்ததும்.. இன்னும் கோபம் தலைக்கு ஏற.. அதே சோஃபாவில் மற்றொரு தலையணையை எடுத்து.. அவனை சரமாரியாக அடிக்கத் தொடங்கினாள்.. 😡😡
ஷ்ரித்திக்கும்.. கையில் வைத்திருந்த தலையணையால்.. திருப்பி அடித்து... தலையணை பஞ்செல்லாம் அறை முழுதும்.. பறந்து கொண்டிருந்தது.. தலையணை வேண்டாம் என்று.. ஷிவாக்ஷி கையாலே.. அடிக்க.. ஷ்ரித்திக்கும்.. மேஜையில் இருந்த தண்ணீரை அவளின் மேல் கொட்ட.. பதிலுக்கு.. ஷிவாக்ஷி.. அங்கு குடிக்க வைத்திருந்த ஆறிய நிலையில் இருந்த பாலை அவன் மேல் அபிஷேகம் செய்தாள்.. இருவரும் அதகளம் செய்து கொண்டிருந்தனர்..
ஒரு கட்டத்தில்.. சண்டை முற்றி.. தரையில் உருண்டு பிரண்டு கொண்டிருந்தனர்.. இருவரும் வெகுவாக சோர்ந்து விட்டனர்.. ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் மேல் அமர்ந்திருந்தாள்.. கூந்தலெல்லாம்.. கலைந்து.. ஈரமான நிலையில்.. ஷ்ரித்திக்கின் உடலிலும்.. பாலால் நனைந்து.. அதன் வாசத்தோடு.. வேர்வையின் வாசமும் கலந்து வீச.. அவன் உடலெங்கும் பிசுபிசுப்பாக.. இருந்தது..
இருவரும்.. வேக வேகமாக மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டிருந்தனர்..
"நான் லூசு இல்லன்னு.. சொல்லுங்கோ.. உங்களை.. விட்டுடறேன்.." என ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கிற்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக.. பேசக் கூட முடியாமல்.. மூச்சு வாங்கியபடியே கேட்க.. 😤😤
"இப்பவும்.. சொல்றேன்.. நீ லூசு தான்.. டி.." என்று ஷ்ரித்திக்கும்.. இடை இடையே மூச்சு வாங்கியபடியே.. பேச முடியாமல்.. மொழிந்ததும்.. 😤😤
"நான் லூசா.. ?? அடிங்.." என ஷிவாக்ஷி கூற.. 😠 மீண்டும்.. இருவரும்.. உருண்டு பிரள ஆரம்பித்தனர்..
இருவரும்.. எப்பொழுது தங்கள் சண்டையை முடித்தார்கள்.. ?? உறங்கினார்கள்.. ?? என்றே தெரியவில்லை..
அத்தனை சோர்விலும்.. அத்தனை களைப்பிலும்.. உறக்கத்தை நாடி விட்டனர்.. தரையிலேயே..
சூடும் பகலவன்.. மக்கள் இன்புறவே.. வலம்பெறவே.. புதிய நாளில் புதிய பரிசை தரவே.. உதயமாகிறான்.. அப்பரிசு.. ஒரு சிலருக்கு மகிழ்வு.. சிலருக்கு சோகம்.. சிலருக்கு ஏமாற்றம்.. என பலவகை.. அதில் ஒருவகையாவது.. அந்நாள் தந்துவிடுகிறது..
அந்த உதயனிடம்.. ஒரு நல்லவை.. பலருக்கு பிடித்தவை.. யார் எப்படி வேண்டுமானாலும்.. இருந்து கொள்ளுங்கள்.. நான் என் கடமையை செய்கிறேன்.. என்று எவ்வித பலனை எதிர்பாராது.. கடமையை செய்யும்.. அந்த.. பரிதியின்.. குணம்.. பலருக்கு இருந்து விட்டால்.. நன்றாக இருக்கும் அல்லவா.. ??
பரிதியவனின் பிரகாசக் கீற்று.. வெற்றுக் தரையில் படுத்திருந்த.. ஷ்ரித்திக்கின் முகத்தில்.. படர்ந்த போது தான்.. விடியலை உணர்ந்து எழுந்தான்..
எழுந்தவுடன்.. கடிகார முட்களில் நிலைத்தது.. அவனின் கூர்விழி..
அதுவோ.. எவ்வித சலனமின்றி.. எட்டை கடந்து காட்டியது..
ஷ்ரித்திக்.. இவ்வளவு நேரம் சயனத்தில் ஆழ்ந்திருந்து விட்டோமே.. என்ற எண்ணத்தில்.. எழுந்தவன்.. இரண்டு அடி.. அருகில்.. உறங்கும் அழகியாய்.. நிர்மலமாய் இருந்தவளை வழக்கம் போல.. அவன் விழிகள்.. அவளை ரசித்து.. தீண்டிச் சென்றது.. 😍😍
தன்னறையை சுற்றி பார்க்க.. தலையணை பஞ்சுகளெல்லாம்.. பரப்பி இருந்தன.. ஷிவாக்ஷி எழுந்தால்.. அவள் தான் சுத்தம் செய்வாள்.. அவள் விழிப்பதற்குள்.. தாமே சுத்தம் செய்யலாம்.. என்றெண்ணி.. அவ்வேளையில் இறங்கினான்..
ஷ்ரித்திக்.. திருமணத்திற்கு முன்னும் சரி பின்னும் சரி.. அவன் அறையை அவனே.. சுத்தமாக வைத்துக் கொள்வான்.. தூசி என்ற வார்த்தைக்கும் கூட அங்கு இடமில்லை..
பத்து நிமிடத்தில்.. விரைவாக சுத்தம் செய்து முடித்தவன்.. தானும் குளித்து விட்டு வெளியே லான்ஞ் வியரை அணிந்து
வந்தான்..
ஷ்ரித்திக்கிற்கு.. ஆச்சரியம் தான்.. ஷிவாக்ஷி இன்னும் உறக்கத்தின் பிடியில் இருப்பதை கண்டு.. 🙄
ஷ்ரித்திக்.. தரையில் படுத்திருக்கிறாளே.. அவளை மெத்தைக்கு நகர்த்தலாம்.. என்றெண்ணி.. அவளை அள்ளிக் கொள்ள முயன்றவனின்.. கைகள்.. அதிர்வில் அப்படியே நடுங்கியது..
கரங்களில்.. ஷிவாக்ஷியின் குருதி.. ஒழுகிக் கொண்டு இருந்ததை கண்டு.. அவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. சில நிமிடங்கள்.. தேவைப்பட்டது.. அவனுக்கு.. அவ்வதிர்வில் இருந்து விடுபட..
அவளின் முகச்சிவப்பையே.. தாங்கமுடியாது.. இவனால்.. சிவந்த குருதி.. ஷ்ரித்திக்கின் கரத்தில் இருப்பதை கண்டு.. சில நிமிடங்கள்.. உறைந்து போனான்..
அவளின் இடையை தாண்டி.. அவள் சயனித்திருந்த இடத்தில்..
செங்குருதி.. ஷிவாக்ஷியின் ஆடையை தாண்டி நனைத்திருந்தது..
ஷ்ரித்திக்.. மெய் உலகில் வந்ததும்.. என்ன செய்வது.. ?? என்று யோசிக்கவே முடியவில்லை.. அவளுக்கு இந்நிலை என்றதும்.. கை கால்கள்.. மதி என்றனைத்தும் வேலை செய்ய மறுத்தது..
ஷ்ரித்திக்கிற்கு.. இப்போது தான் அவள் இன்னும் சயனத்தில் இருக்கிறாள்.. எழுப்ப வேண்டும் என்று தோன்ற..
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை எழுப்ப முயற்சித்தான்.. "ஹே.. ஹேய்.. ஷிவு.. ஷிவும்மா.. ?? ஒய்.. ?? எந்திரி.." என்று கண்ணத்தை தட்டி எழுப்ப முயற்சித்தான்.. பலனில்லை.. 😳😳
ஷிவாக்ஷியின் முகத்தில்.. தண்ணீரை தெளித்து எழுப்ப.. அதற்கும் பலனில்லை..
மயங்கி விட்டாள்.. என தெரிகிறது.. ஆனால்.. எப்போது.. ?? எக்கணத்தில்.. ??
தீவாவை அறைக்கு இக்கணமே அழைத்திருப்பான்.. ஆனால்.. இந்நிலையில்.. ஷிவாக்ஷியை மற்றவர் முன் நிறுத்த.. அவன் மனம் ஒப்பவில்லை..
ஷ்ரித்திக்.. ஷிவாக்ஷியை அள்ளிக் கொண்டு.. குளியலறைக்கு சென்றான்.. அவளை சுத்தம் செய்ய..
ஷ்ரித்திக்.. தன் கண்களை மூடிக் கொண்டான்.. அவளின் ஆடைகளை அகற்றி.. அவளை சுடுநீரை டப்பில் நிறைத்து.. ஷிவாக்ஷி அதில் இறக்கி.. அவளை சுத்தம் செய்தான்..
ஷிவாக்ஷியின்.. உடலை துணியால் மூடி.. அவளை மெத்தையில் கிடத்தி.. போர்வையால்.. உடலை மூடி.. இளஞ்சிவப்பு நிறத்தில் மேலாடையும்.. கருநிறத்தில்.. ஸ்கர்ட்டும் அணிவித்தான்..
மகேந்திரனின் மனைவியும்.. ஷ்ரித்திக்கின் தோழியுமான.. தீவாவை தன்னறைக்கு அழைத்தான்..
தீவாவிற்கு அதிர்வுடன் கலந்த ஆச்சரியம்.. தான்.. இதுவரை.. ஷ்ரித்திக்.. அவனுடைய அறைக்குள் யாரையும் அனுமதித்ததில்லை..
தீவா.. அறைக்குள் நுழைந்ததும்.. ஷ்ரித்திக்.. அவளை பிடித்துக் கொண்டான்..
நிகழ்ந்ததை அப்படியே ஒப்புவித்தான்.. "வா.. தீவா.. ஷிவுவ பாரு.. ஷீ'ஸ் பீளிடிங்.. அண்ட் அன்காண்சியஸ்.." ஷ்ரித்திக் பதற்றமாக மொழிந்ததும்.. 😟
தரையில் இருந்த ரத்தக்கறை கூறியது.. ஷ்ரித்திக்கின் மொழியில் இருந்த நிஜம்..
தீவாவிற்கும்.. பதற்றம் தொற்றிக் கொண்டது.. "வாட்.. ?? பட் ஹௌவ்.. ??" என கதைத்த படியே.. ஷிவாக்ஷியின் நாடி பிடித்துப் பார்த்தாள்.. 😟
ஷ்ரித்திக்கை.. தீவா வெளியே இருக்கும் படி மொழிந்து விட்டு.. தீவா.. மயங்கிக் கிடந்தவளை சோதித்தாள்..
ஷ்ரித்திக்.. வெளியே பயம் கலந்த பதற்றத்தோடு.. நின்றிருந்தான்.. 😟😟
சிறிது நேரத்திற்கு பிறகு.. வெளியே வந்த தீவா.. சில மருந்துகளை எழுதி கொடுத்து.. வாங்கி வரச் சொல்ல.. ஷ்ரித்திக்.. வேலையாட்களை அனுப்பி.. வாங்கி வரச் செய்தான்..
தீவா... குளுக்கோஸ் ட்ரீப்ஸை ஷிவாக்ஷிக்கு ஏற்றினாள்..
தீவா வெளியே வந்தவுடனே பிடித்துக் கொண்டான்.. ஷ்ரித்திக்..
தீவாவே மொழிய தொடங்கும் போது.. ஷ்ரித்திக்கே கேட்டான்.. "தீவா.. என்னாச்சு.. ?? வாட் ஹேப்பண்ட்.. டூ ஹர்.. ?? ஏன் இப்படி இருக்கா.. ??" என படபடவென கேள்விகளை தொடுத்தான்.. 😟😟
"வைய்ட்.. வைய்ட்.. இரு ஷ்ரித்திக்.. நானே சொல்ல தான் வந்தேன்.. அது.. ஷ்ரித்திக்.. பீளிடிங் ஒன்னுமில்ல.. அவ பிரியட்ஸ்ல இருக்கா.. அது பிரச்சினை இல்லை.. மயக்கத்தில இருந்ததால.. அவளுக்கு அது தெரியல.. சோ.. நத்திங் டூ வொர்ரி.." என மொழிந்துதும்.. தான்.. ஷ்ரித்திக்.. சற்று இயல்பு நிலைக்கு திரும்பினான்.. நிம்மதி பெருமூச்சு விட்டான்.. 🌬️😌
தீவா.. சற்று நிம்மதியானாள்.. நல்ல வேளை.. ஷ்ரித்திக்.. தன்னவளின் மயக்க நிலை பற்றி வினாவாததில்..
தீவா.. மொழிந்த பின்.. ஷ்ரித்திக்கின் ஆத்திரத்தின் அளவு எகிறுமே..
அவளின் நிம்மதியை கெடுக்கவே.. அவனே தொடுத்தான்.. அக்கேள்வியை.. "ஓகே.. பட்.. வொய்.. ?? ஏன் மயக்கமானா.. ??" என தொடுத்தான்.. தீவா.. அச்சம் துளிர்த்த பார்வையை கண்டு.. 🤨🤨
தீவா.. "ஷ்ரித்திக்.. அது... சரி.. உண்மைய சொல்லிடறேன்.. ஷிவாக்ஷி சாப்பிட்டு மூணு நாளாச்சு.." என தீவா.. உரைத்த உடனே.. 😟
ஷ்ரித்திக்.. முற்றிலும் அதிர்ந்த குரலில்.. "வாட்.. ?? 😳 மூணு நாளா சாப்படலையா.. ?? எப்படி.. ?? எல்லாரும் சாப்பிட உக்காரும் போது.. வந்தாளே.. ?? அப்ப சாப்படலையா.. ?? பட் ஹௌவ்.. ?? அப்ப இங்க யாருமே.. நான் இல்லாத சமயத்தில ஷிவுவ.. கண்டுக்கறதில்லயா.. ??" என ஆத்திரம் வெளிப்படுத்தவில்லை எனினும்.. குரலில்.. கோபம் நிறைந்தே வந்தது.. அவ்வார்த்தைகள்.. 😠
தீவாவிடம்.. பதிலில்லை.. ஏனெனில்.. அவளும் அப்படி தான் நினைத்திருந்தாள்..
நெற்றியை அழுந்த தேய்த்து கொண்டே.. "சரி.. சொல்ல வந்தத முழுசா சொல்லு.. ??" என கடுகடுப்புடன்.. வினவினான்.. 🤨🤨
"சாரி.. ஷ்ரித்திக்.. நீ நினைச்ச மாதிரி தான்.. நானும் நினைச்சேன்.. அதான்.. ஷிவாக்ஷி வேற.. மூணு நாளா சாப்பிடல.. அது மட்டுமில்லாம.. ஸ்டெரஸ்.. ரொம்ப ஸ்டெரஸ்ல இருக்கா.. ?? மனசுல ஏதோ ஒன்னா போட்டு குழப்பிட்டு இருக்கா.. இதெல்லாம்.. சேந்து.. தான்.. அவ இப்படி இருக்கா.. ?? அண்ட் இப்ப ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு.. லிக்விட்டா.. சாப்பிட கொடு.. இன்னும் கொஞ்ச நேரத்தில கண் முழிச்சுக்குவா.. சோ.. நத்திங் டூ வொர்ரி.." என்று கூறி முடித்தாள்.. தீவா.. 😔
"சரி.. தீவா.. நீ.. கீழ போய்.. ஷிவுக்கு.. ஜூஸ் கொண்டு வர சொல்லு.. போதும்.." என்றுரைத்து.. நகர பார்க்கும்.. போது..
தீவா.. "ஷ்ரித்திக்.. ரொம்ப நேரம் ஆயிடுச்சு.. மணி பாரு.. பதினொன்னாக போது.. நீ இன்னும் சாப்பிடல.. நான் உனக்கும் கொண்டு வர சொல்றேன்.." என்று தடுத்தாள்.. 🙂
ஷ்ரித்திக்.. கை உயர்த்தி.. "வேணாம்.. சொன்னத செய்.. போதும்.. தீவா.. செம்ம கடுப்புல இருக்கேன்.. இப்ப சாப்பிடுற மூடுல இல்ல.." என்று பொறிந்து விட்டுச் அகன்றான்... அவன் அறைக்கு.. 😠😠
தீவா.. நினைத்துக் கொண்டாள்.. 'அவன் கோபமா இருக்கான்னு தெரிஞ்சும்.. பேசுனேல.. இதுவும் வேணும்.. இன்னமும் வேணும் எனக்கு..' என்று விட்டு சென்றாள்.. 😑
ஷ்ரித்திக்.. ட்ரிப்ஸ் அவளது கையில் ஏறிக்கொண்டு இருக்க.. அமைதியாய்.. விழிகளை மூடி இருந்த.. ஷிவாக்ஷியின் தலைபக்கம்.. ஒரு முயல் குட்டியும்.. வயிற்றின் மேல் ஒரு முயல் குட்டியுமாய்.. உலாவிக் கொண்டிருந்த வாடிய கொடியாய்.. படுத்திருந்தவளை.. கண்டவனுக்குள் உயிரை பிசைவதை போலே.. வலித்தது..
மூன்று நாட்களாக.. உணவின்றி இருந்திருக்கிறாள்.. தானும் கவனிக்கவே இல்லை என்று வருத்தமாகவும்.. ஆற்றாமையாகவும் இருந்தது.. 🥺🥺
அவனுக்கு புரியவில்லை.. ஷிவாக்ஷியும்.. உணவு உண்ணும் வேளையில்.. மேஜையில் அமர்ந்தாளே.. ?? போக்கு காண்பித்திருக்கிறாள்... என்று பின்னர் தான் புரிந்திருக்கிறது.. ஷ்ரித்திக்கிற்கு..
ஷ்ரித்திக்.. வாஞ்சையாக அவளின் தலையை தடவினான்..
என்ன நினைத்தானோ.. என்று தெரியவில்லை.. ஷ்ரித்திக்.. அவளை விட்டு நகர்ந்து சென்றான்..
ஷிவாக்ஷிக்கு.. லேசாக விழிப்பு வந்தது.. கண்மணிகளின் உருட்டல்.. இமைகளின் வழியே தெரிந்திருந்தது.. விழிகளை திறந்த போது.. அனைத்தும் மங்கலாகவே தெரிந்தது.. நேத்திரத்தை கசக்கிய பின்.. தான் தெளிவாகவே தெரிந்தது..
தரையில் படுத்திருந்த நான்.. எப்படி மெத்தைக்கு வந்தேன்.. ?? கையில்.. ட்ரிப்ஸ் இருப்பதை கண்டு.. தனக்கு.. என்ன ஆனது.. ?? என்ற அவளின் வினாக்களுக்கு விடை தெரியவில்லை.. ஆனால்.. தான் தூரமாகி இருக்கிறோம்.. என்றவளால் உணர முடிந்தது..
எழுந்தமரலாம்.. என்றெண்ணி.. ஷிவாக்ஷி அமரும் போது.. அவளின் விழிகள்.. ஷ்ரித்திக் செய்யும் வேலையில் நிலைக்குத்தியது.. விழிகளில் நீர் தழும்பியது.. 😭😭
ஷிவாக்ஷி சயனித்திருந்த இடத்தில் படிந்திருந்த ரத்தக் கறை சுத்தம் செய்து கொண்டிருந்ததை கண்டு.. ஷிவாக்ஷியால்.. தாங்கவில்லை..
"என்ன பண்றேள்.. ?? அச்சோ.. நீங்க அத பண்ணாதேள்.. ??" என ஷிவாக்ஷி.. கிட்டத்தட்ட கதறியே விட்டாள்.. 😭😭
ஷிவாக்ஷி.. கைகளில் ட்ரிப்ஸ் இருப்பதை மறந்து.. மெத்தையை விட்டு இறங்கிச் சென்றாள்.. அவளால் எழவே முடியவில்லை.. இருப்பினும் அவனருகே சென்றாள்.. ட்ரிப்ஸ் அவளை அவனிடம் நெருங்க விடாமல் தடுக்க.. அதை உதறி தள்ளிச் சென்றாள்..
ஷிவாக்ஷியின் கதறலில் தான்.. அவள் விழித்துக் கொண்டாள்.. என புரிந்தது.. அவளின் கண்ணீர்.. கதறல்.. ஏன்.. ?? என புரியவில்லை.. ஷ்ரித்திக்.. அவளை சமாதானம் செய்ய ஷிவாக்ஷியின் அருகே சென்றான்..
ஷிவாக்ஷிக்கு.. தன்னுடைய கறையை.. அதுவும் இம்மாதிரியான நேரத்தில் ஏற்பட்ட கறையை.. ஒரு ஆண்பிள்ளை..
அதுவும் அந்த ஆண்பிள்ளை.. ராஜானவன்.. பெரும் ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி அவன்.. அவன் போய்.. தனக்காக இவ்வேளையில் இறங்குவதை.. அவளால் தாங்க முடியவில்லை.. அக்கணத்தில்.. உயிரில் பெரும் ஆயுதத்தை இறக்குவதை போல பெரும் வலி எடுத்தது..
"நீங்க போய்.. இதெல்லாம்.. பண்ணின்டு இருக்கேளே.. ?? நேக்கு மேல மேல.. ஏன் கஷ்டத்த கொடுக்கறேள்.. ?? என்னை மன்னிச்சிடுங்கோ.. மன்னிச்சிடுங்கோ.." என ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கின் காலில் விழுந்து விட்டாள்.. 😭😭😭
ஷ்ரித்திக்.. திடுக்கிட்டு போனான்.. ஷிவாக்ஷியின் இச்செயலை அவன் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.. 😳😳
ஷ்ரித்திக்.. தன் காலில் விழுந்திருந்த.. தன்னவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.. "ஹேய்.. ஷிவு.. இங்க பாரு.. பாரும்மா.. அழாதே.. இப்ப என்னாச்சுன்னு.. இப்படி அழுகுற.. ?? கண்ணை துடை.. பாரு அழுதழுது.. முகம் சிவந்து போகுது.. உனக்கு ஏற்கனவே உடம்பு சரியில்லை.." என அவளின் முகத்தை கையில் ஏந்தி.. கட்டை விரலால்.. அவள் கண்ணீரை துடைத்து விட்டான்... 😍😍
ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக் தன் கண்ணத்தை தாங்கி இருப்பதை மறந்து போனாள்.. "நீங்க போய்.. இதெல்லாம் பண்ணின்டு.. என்னை மன்னிச்சிடுங்க.. என்னால தான் மேல மேல நோக்கு சிரமம்.. ??" என விம்மியவளை கண்டு... மனதில் இருந்த கோபங்கள் பறந்து போனது.. அவளை விழியெடுக்காமல்.. பார்த்துக் கொண்டிருந்தான்.. 😍😍
"இங்க.. பாரு.. தேவையில்லாம அழாத.. எனக்கு கஷ்டமா இருக்கு.. என் பொண்டாட்டிக்கு தான பண்றேன்.. நான் பண்ணாம வேற யாரு பண்ணுவா.. ?? ஜஸ்ட் லிவ் இட்.." என ஷ்ரித்திக் கூறிய பின்னும்.. அவளின் மனம் ஒப்பவில்லை.. 🥺🥺
"இல்ல.. என்னால அப்படி விட முடியலையே.. நேக்கு கஷ்டமா இருக்கு.. இனி.. இது பண்ணக் கூடாது.." என்று தேம்பிய நிலையில் கேட்க.. 🥺🥺
ஷ்ரித்திக்.. குறுநகையோடு.. "சரி.. டி.. பொண்டாட்டி.." என மொழிந்த படியே.. அவள் நெற்றியில் முட்டினான்..
அக்கணத்தில்.. ஷிவாக்ஷியின் மனதில் நிரந்தரமாக சிம்மாசனம் போட்டு மகராஜனாக அமர்ந்து விட்டான்.. ஷ்ரித்திக்..
அந்த அழைப்பு.. அவளுள்.. தேனாய் இனித்தது.. 😍😍
"அது போகட்டும்.. கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு.. ?? கடைசியா எப்ப சாப்பிட்ட.. ??" என்றவன் இப்போது.. கண்களில் சீற்றம் வெளிப்பட்டதோ.. 😠😠
மேலே பார்த்து தாடையை தட்டி.. யோசித்தவளுக்கு
"அது.. அது... அது.. சரியா தெரியல.." என்று ஷிவாக்ஷி மொழிந்ததும்.. 🤔🤔
"எனக்கு வர கோபத்துக்கு. அப்படியே.. நங்கு நங்கு நங்குன்னு கொட்டலாம்னே தோணுது.. ஏன் டி சாப்படல.. ?? இங்க என்ன சோத்துக்கா பஞ்சம்.. ?? சம்பாதிச்சு.. கோடி கணக்கில கொட்றேன்ல.. ?? அப்பறம் என்ன டி.. ?? அதனால பாரு.. முழிக்க கூட தெம்பில்லாம மயங்கிருக்க.. ?? ஹ்ம்ம்ம்ம்.." என்று.. சிடுசிடுத்தான்.. ஷ்ரித்திக்.. 😡😡
நீண்ட தோரு.. வசவு மொழிகளை மொழிந்த பின்னே தான்.. ஷ்ரித்திக் அமைதியானான்..
ஷிவாக்ஷிக்கு செவியில்.. 'கொய்ய்ய்...' என்று ஒலித்து கொண்டிருந்தது.. அவனின் கடுகடுத்த மொழியில்..
"சாரி.. நான் தான் ரொம்ப சிரமம் கொடுக்கிறேன்.. அது பழக்கமாயிடுத்து.. எனக்கா எப்ப தோன்றதோ.. அப்ப சாப்பிட்டு தான் பழக்கம்.. அதான் இப்படி.." ஷிவாக்ஷி உரைத்தாள்.. தன் உணவு உண்ணாத காரணத்தை.. 😔😔
"என்னது.. தோணும் போது தான் சாப்பிடுவியா.. ?? நம்ப முடியலையே.. ??" என்று ஷ்ரித்திக்.. கேள்வியோடு.. நிறுத்தினான்.. 🤨🤨
"நிஜம் தான்.. காலேஜ் இருக்கறச்ச.. இஷானி கட்டாய படுத்தி.. சாப்பிட வைப்பா.. அவ ஆத்துல இருந்து எனக்காக எடுத்துண்டு வருவா.. அதுக்கப்புறம்.. யாரும் என்ன சாப்பிட்டியான்னு கேட்டதில்லை.. ?? ஆத்துலையும்.. கடன் பிரச்சனை.. சாப்பாடு.. பிரச்சினை.. தாத்தா வயஷானவா.. அவாளுக்கு தான் முக்கியமா வேணும்.. அதனால.. நேக்கு ஒருவேளையா குறைஞ்சிடுத்து.. சிலவேளை சாப்பிட இருக்காது.. அது அப்படியே பழகிடுத்து.. தோன்றச்ச சாப்பிடுவேன்.. நேத்து ராத்திரி சாப்பிட உக்காந்தேன்.. அப்ப பாட்டி சொன்னாலோன்லியோ.. குழந்தை அப்படின்னு பேச்சு ஆரம்பிச்சா.. அதானால சாப்பாடு தொண்டைல இறங்கல.." என்று ஷ்ரித்திக்கிடம்.. விளக்கத்தை அளித்தாள்.. ஷிவாக்ஷி.. 😔😔
அவள் மொழிகளில்.. அவள் சாதாரணமாக கூறியிருந்தாலும்.. ஷிவாக்ஷி அனுபவித்த பசி என்னும் வேதனை..
அகிலத்தில் அனைத்து ஜீவராசியும்.. ஒவ்வொரு வினாடியும்.. அனுதினமும்.. அனுபவிக்கும் ஒரு கொடிய நோய்.. பசி தவிர வேறு என்னவாக இருக்கும்..
அந்த பசி என்னும் நோயிற்கு மருந்து.. மூவேளை உணவு தான்.. ஆனால்.. ஒரு வேளை உணவு கூட இன்றி.. பலரும் அடையும் அவமானத்தை , துக்கத்தை .. சொல்லி மாளாது..
ஆனால்.. ஏன் மக்கள் பசியில் தவிக்கிறார்கள்.. இந்த அகண்ட அண்டத்தில்.. உணவுக்கா பஞ்சம்.. ?? இல்லை.. நிச்சயம்.. இல்லை..
மொத்த அகிலத்தில்.. ஒரு நாளில் மிச்சமாகும்.. உணவு ஒன்பது டன் ஆகும்.. இவ்வுணவு அனைவருக்கும் சென்றடைந்தால்.. பசியால் இறந்தவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகிவிடும்.. அல்லவா.. ??
ஷிவாக்ஷியின்.. அவ்வார்த்தைகளில்.. தேங்கிய வலிகள் சொன்னது.. எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாள்.. என்று..
ஷ்ரித்திக்கின் விழிகளில் தெரிந்தது.. இரக்கமா.. ?? பரிவா.. ?? என்றவளுக்கு புரியவில்லை..
"ஷிவு.. ஐ ஹேட்அ ட்ரீம்.. அந்த ட்ரீம்.. எப்ப வந்துச்சுன்னா.. சம்டைம்ஸ் ஹேப்பி கப்பில்ஸ பாக்கும் போது தோணும்.. பிஃபோர் தட்.. நான் லவ் பண்ணுவேன்லாம் நினைக்கில.. பட் பண்ணுனா.. எப்படியெல்லாம் எனக்கு வரப்போற பொண்டாட்டிய பாத்துக்கணும்னு ஒரு ட்ரீம் இருந்துச்சு.. இருக்கு.." என்று ஷ்ரித்திக் கண்களில்.. கனவு மின்ன பொழிந்ததை கண்டு.. ஷிவாக்ஷிக்கு இளநகை உருவானது.. அவளுக்கும் ஆர்வம் அதிகமானது.. 😃😃
"அப்படியா.. ??!!! ஆனா நேக்கு.. பைக்ல ஜோடியா சுத்தறத.. பாக்கறச்ச.. வயிறு எரியறதே.. ??" என ஷிவாக்ஷி சிரிக்காமல் மொழிந்ததை கண்டு.. 😑
ஷ்ரித்திக் வெடித்து சிரித்தான்.. அவனின் புன்னகை அவளுக்கும் தொற்றிக் கொண்டது.. "ஹாஹாஹா.. லூசு.." என
ஷிவாக்ஷியின் நெற்றியை தள்ளினான்..
😂😂
"ஜோக்ஸ் அப்பார்ட்.. நான் சம்பாதிக்கிறது எல்லாம்.. அவளுக்கு தான்.. யூ நோ.. இந்த வீடு.. இது என்னோட.. ரெண்டாவது பெரிய கோள்.. உனக்கே தெரியும்.. இந்த வீட்ட கட்ட கொஞ்சம் கஷ்டப்பட்டேன்.. இதுக்கு முன்னாடியும் பெரிய பங்களால தான்.. எல்லாரும் இருந்தோம்.. அது.. பரம்பரை சொத்து.. சோ.. நான் ஏன் இதெல்லாம் சொல்றேன்னு தோணுதா.. ?? கண்டிப்பா தோணும்.. இந்த வீடு.. என் சொத்து எல்லாமே என் பொண்டாட்டி உனக்கு தான்.. இன்னும் சொல்லனும்னா.. என் ராஜ்ஜியத்தோட ராணியே நீ தான்.. எனக்கு தெரியும்.. நீ சங்கடப்படறேன்னு.." என ஷ்ரித்திக் பேசிக் கொண்டு இருக்கும் போதே இடையில் நுழைய முற்பட்டவளை கண்டு..
ஷ்ரித்திக்.. அவளிடம் அதை பலமுறை உணர்ந்திருக்கிறான்.. இதற்கு முன்பு.. அவளிடம் நம்பிக்கை வார்த்தைகளை தந்ததில்லை.. ஆனால்.. தரவேண்டும் என்பதை உணர நேரம் தேவைப்பட்டது..
"இல்லன்னு சொல்லாத.. ஐ நோ.. அது தேவையில்லாதது.. ஓகே.. ஃபீல் ஃப்ரீ.." என்று ஷ்ரித்திக் விழிகளில் காதல் நிரம்ப மொழிந்தான்.. 😎😎😍
ஷிவாக்ஷிக்கு.. ஷ்ரித்திக்கின் சொத்து , பணம் என்ற மொழியில் சற்று எரிச்சல் மேலோங்கியது.. ஆனால்.. அவள் எதுவும் காண்பித்து கொள்ளவில்லை..
ஷிவாக்ஷி.. "நான் கீழப் படுத்திருந்தேன்.. எப்ப மேல வந்தேன்.. ?? என்ன ஆயிடுத்து... ??" என்று வினவல் மொழிகளை பொழிந்தாள்.. 🤔🤔
"மேடம்.. இப்பவாவது கேட்டிங்களே.. ?? மூணு நாளா சாப்படலையா.. மயங்கிட்டம்மா.. அதான்.. உன்னை சுத்தம் செய்து.." என்று உரைத்த மறுகணம்.. 😎😎
அதிர்வடைந்த ஷிவாக்ஷி.. "என்னது.. ?? நீங்களா.. ??" என கண்களை விரித்தாள்.. 😳😳😳
"ஆஆஆ.. அய்யடா.. கவலப்படாத.. உன்னை சுத்தமா.. பாக்கல.. என் கண்னை மூடிட்டு தான் பண்ணேன்.. மெத்தையில தூக்கிட்டு போய் படுக்க வைச்சேன்.." என்று நக்கலாக ஆரம்பித்த.. ஷ்ரித்திக்கின் மொழியில் தான்.. நிம்மதி பெருமூச்சு விட்டாள்.. 🌬️
"என்ன.. ?? என்னை தூக்கினேளே.. ?? எப்படி தூக்கினேள்... ??" என ஷிவாக்ஷி.. 🙂 கண்களை விரித்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஷ்ரித்திக் எழுந்து நின்றான்.. 😎
ஷ்ரித்திக்.. "இப்படி தான்.." என்ற படி.. திடுமென ஷிவாக்ஷியை அள்ளிக் கொண்டான்.. 😎
ஷிவாக்ஷி தான் அதிர்ந்து விட்டாள்.. "ஹான்.. அச்சோ.. ஆஆ.. பயமா இருக்கறது.. இறக்கி விடுங்கோ.." என்றவள் கைக்கால்களை உதறி கீச்சிட்டு.. பதற்றமானாள்..😨😨😨 அவளை கண்டு.. வெடித்து சிரித்தான்.. 😂 ஷ்ரித்திக்..
ஷ்ரித்திக்கின் நகையை கண்டு.. அதிர்விலிருந்த விழிகள் கேள்வியாக மாறியது.. "நான் பாராமா இல்லயா.. ?? வைட்டா இல்லயா.. ??" என்று வினவினாள்.. ஷிவாக்ஷி.. 😟
அவள் கேட்கும் சமயம். ஷ்ரித்திக்.. அவளை மெத்தையில் "ஹான்.. சுமை தான்.. ஆனா.. சுகமான சுமை.. என்ன பெரிய வைட்.. ஒரு ஃபிஃப்டி இருப்பியா.. ??" என படுக்க வைத்த படியே கதைத்தான்.. 😎
"ஹைய்யோ... கரெக்டா சொல்றேள்.." என நேந்திரம் விரிய ஷிவாக்ஷி ஆச்சரியமாயினாள்.. 😳
அதே நேரத்தில்.. அறை கதவை தட்டும் சத்தம் கேட்டதால்.. ஷ்ரித்திக்.. கதவை திறந்து.. வேலையாள் கொண்டு வந்திருந்த பழச்சாறை.. ஷிவாக்ஷிக்கு கொடுத்து குடிக்க வைத்தான்..
"ஷிவு.. ரெஸ்ட் எடு.. நான் இங்கயே என்னோட வொர்க் பாக்கறேன்.. ஏதாவதுன்னா கூப்பிடு.." என்று விட்டு ஷ்ரித்திக் நகரப் போனான்.. 😎😎
தடுத்தது.. ஷிவாக்ஷியின் கரம்.. ஷ்ரித்திக்கிற்கு இருப்பு கொள்ளவில்லை.. முதல் முறையாக அவளாய் அவனை தீண்டியது.. அவனுக்கு பெரும் உவகையை தந்தது.. திரும்பி அவளை வருடும் பார்வையை வீசினான்.. 😃
ஷிவாக்ஷியின் விழிகளில்.. அப்பட்டமாக.. தெரிந்தது.. காதல் மொழி.. காதல் கலந்த கனிவான பார்வை.. 😍😍.. ஆகாசத்தில் பறக்கிறேனோ.. ?? என்ற ஐயம் அவனுள்..
"நீங்க.. சாப்பிட்டேளா.. ?? மணிப் பாருங்கோ.. பன்னென்டு ஆறது.. நீங்க நிச்சயம் சாப்பிட்டிருக்க மாட்டேள்.. போய் சாப்பிட்டு வாங்கோ.. அப்பறம் மத்த வேலை பாப்பேலாம்.. நாழியாறதோன்னோ.. ?? போங்கோ.." என்ற ஷிவாக்ஷியின் மொழியில்.. அவ்வளவு அக்கறை.. அனைத்தும் காதலை தொட்டுச் சொன்னது.. அவள் மொழிகள்... 🥰🥰
தானாய்.. இசைந்தது.. அவன் தலை.. முதன் முதலாக.. தன் நலனை அக்கறை செலுத்துகிறாள்.. என்ற எண்ணம்.. "சரி.. நான் மேலே கொண்டு வர வைச்சிருக்கேன்.. கண்டிப்பா சாப்பிடறேன்.. இப்ப நீ லிக்விட்ஆ தான் சாப்பிடனும்.. உனக்கும் கொஞ்ச நேரம் கழிச்சு கொண்டு வர சொல்றேன்.." என்று விட்டு நகர்ந்து சென்றான்.. 😎😎
ஷிவாக்ஷிக்கு.. இம்மாதிரியான நேரம் என்பதால்.. இடை பகுதியிலிருந்து கழட்டி வைத்தார் போல வலி.. பற்றாக்குறைக்கு கால்களெல்லாம் குடைந்து எடுப்பதை போலே வலிக்கவும்.. சற்று உறங்கி எழுந்தால்.. தேவலாம்.. என தோன்றவே.. ஒய்வெடுத்தாள்..
ஷ்ரித்திக்கிற்கு ஆத்திரமும் வருத்தமும் ஒருங்கே உருவானது.. தடதடவென கீழே வரவேற்பறைக்கு நடுவே நின்று.. "அம்மா.. ம்மா.. ?? எங்கம்மா இருக்க.. ??" என கத்தாத குறை தான்.. 😠
அன்னை இந்திரகவி.. வேகமாக அவனருகே வந்தார்.. "என்னப்பா.. ?? என்னாச்சு.. ?? ஏன் இப்படி கத்தற.. ??" என கேள்வியை தொடுத்து கொண்டே வந்தார்.. 🤨.. உடன் சித்தி தேவிகாவும்.. வந்தார்..
ஷ்ரித்திக்.. நேரடியாகவே.. "அம்மா.. ஷிவு.. எப்பம்மா.. சாப்பிட்டா.. ??" என விழியில்.. அனல் பறக்க கேட்டுக் கொண்டே இருக்கும் போதே.. 😠😠 தீவாவும் நேஹாவும் வந்து சேர்ந்தனர்..
தீவாவின் முகம் கலவரமானது..
😨
ஷ்ரித்திக்கின் முகத்தில் தெரிந்த.. கோபம்.. ஏதோ சரியில்லை என்று மணியடித்தது.. இந்திரகவி.. ஷ்ரித்திக்கின் அன்னை..
"ஹ்ம்ம்.. தெரியும் பா.. நேத்து நைட்டு டைனிங் டேபிளுக்கு வந்திருந்தாளே.. ?? ஏன் கண்ணா.. ?? என்னாச்சு.. ??" என அவரும் அவனின் வினாவிற்கு விடையளித்தார்.. 🙂
"நல்லா தெரியுமா.. ??" என ஷ்ரித்திக்கின் நக்கல் தொனியில் விழுந்த கேள்விக்கு.. 🤨
சிறு தயக்கத்துடன் இசைந்தது.. அவரின் தலை.. 🙂
"நல்லாவே.. கவனிச்சிக்கறீங்கம்மா.. ?? யூ நோ.. ம்மா.. ?? ஷிவாக்ஷி சாப்பிட்டு மூணு நாளாச்சு.. இன்னிக்கு மயக்கம் போட்டிருக்கா.. ??" என ஷ்ரித்திக் கண்கள் சிவக்க மொழிந்தான்.. அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்.. 😠😠
"என்னப்பா.. சொல்ற.. ?? எப்படி.. அவ சாப்பிட டேபிளுக்கு வந்தாளே.. ?? சரி இப்ப எப்படி இருக்கா.. ??" என அதிர்வில்.. முகம் வெளிறியது.. அவரின் முகத்தில் இறுதியில்.. அக்கறை மட்டுமே இருந்தது.. 😨😨
"உன்னை நல்லா பாத்துக்கறேன்.. அப்படி இப்படின்னு சொல்லி தான.. மணமேடைக்கு அழைச்சிட்டு வந்தீங்க.. என்னம்மா.. கவனிக்கறீங்க.. சரி நான் கவனிக்கவில்லை.. என்மேல தப்பு தான்.. இல்லன்னு சொல்லல.. ஆனா நான் வெளிய போனதுக்கு
அப்பறமும்.. அவள கண்டுக்க மாட்டிங்களா.. ??" என ஷ்ரித்திக்.. கேள்வியாக..
நோக்கினான்.. 🤨🤨
"இல்ல.. ஷ்ரித்திக்.. நாங்க எல்லாருமே.. அவ சாப்பிட்டுட்டான்னு தான் நினைச்சிட்டு இருந்தோம். ஆனா.. இவ சாப்பிடாம விடுவான்னு இப்ப தான் தெரியுது.. ?? இனி இந்த மாதிரி நடக்காதுப்பா.. நான் பாத்துக்கறேன்.." என்று வாக்குறுதியை போல தான்.. உதிர்ந்தது.. அவர் சொற்கள்.. 😔😔
தன் அன்னையின் அவ்வார்த்தையில்.. மனம் சமாதானமானது.. ஷ்ரித்திக்கிற்கு..
ஞாயிற்று கிழமை.. விடுமுறை தினம் ஆதலால்.. ஷ்ரித்திக்.. கணினியில் வேலையாக இருந்தான்.. அதிலேயே மூழ்கி போனான்..
ஷிவாக்ஷி.. உணவு வந்ததும் உண்டு முடித்து.. உறங்கிப் போனாள்.. 🥱😴
ஷிவாக்ஷி.. கண்விழித்து எழுந்து விட்டாள்.. ஆனால்.. கொஞ்சம் கூட அசைய முடியவில்லை.. எங்கே அசைந்தால்.. வயிற்றில் சுருக்கென்று வலி எடுக்குமோ என்று அசையாது இருந்தாள்.. இருப்பினும் கால்களில் ஏற்படும் குடைச்சலை தாங்க முடியவில்லை..
இந்த மாதத்தின் மூன்று நாட்கள் வந்தாலும்.. பிரச்சினை... வரவில்லை என்றாலும் பிரச்சினை.. அனைத்து பெண்களும் அனுபவிக்கும் வேதனை தான்.. ஆனால் அக்கணத்தில் பெரும் சுமை தம்முன் நிற்பதாக தோன்றும்..
ஷிவாக்ஷி.. வலியை பொறுத்துக் கொள்ள இயலாது.. மெதுவாக முனகினாள்.. யாருக்கும் கேட்கக் கூடாத வண்ணம்..
😖😖😣😣
வெகுநேரமாக.. வலி எண்ணும் வேதனையில் முனகிக் கொண்டிருந்தாள்.. அது ஷ்ரித்திக்கின் செவிகளை எட்டியதோ.. ??
ஷ்ரித்திக்.. "ஷிவு.. ஒய்.." என்று விளித்ததும்.. 😎😎
ஷிவாக்ஷி.. வலி வேதனையால் சுருங்கிய சிவந்த முகத்தை அவன் பக்கம் திருப்பினாள்.. அவ்விழிகளில்.. மெல்லிய ஆச்சரியம் எட்டிப் பார்த்ததோ.. ?? 🙄
ஷ்ரித்திக்.. அவள் முன் கரத்தில் ஏந்திய மோருடன் வந்து நின்றிருந்தான்..
ஷிவாக்ஷி.. என்னவென புரியாத பாவனையை காட்ட.. 🙄
ஷ்ரித்திக்.. பதில் கூறும் விதமாக.. "இது வெந்தயம் சேர்த்த மோர்.. குடிச்சா.. இந்த மாதிரி நேரத்தில வர்ற வலி போயிடுமாம்.. அம்மா சொன்னாங்க.. ஹ்ம்ம்ம்ம்.. குடி.." என்று அவள் முன் நீட்ட.. 😎😎
தன்னவளின்.. வேதனையை தாளாது.. வேதனையால் சிவக்கும் முகத்தை தாங்க முடியாமல்.. நேரே தன் அன்னை இந்திரகவியிடம் தஞ்சம் புகுந்தான்.. ஷ்ரித்திக்.. அவர் மொழிந்தவை செயல் படுத்தினான்..
அவன் விழிகளில்... தெரிந்தது.. காதல்.. காதல்.. காதல் மட்டுமே.. 😍😍
ஷிவாக்ஷிக்கு விழிகளில்.. நீர் தழும்பியது.. திருமணத்திற்கு முன்.. தன் பெரும் காயத்தை கூட தன்னை எடுத்து வளர்த்த தாத்தா கண்டு கொண்டதில்லை.. அதை நினைத்து.. ஒப்பிட்டு பார்த்தாள்.. ஷிவாக்ஷி..
ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக் கொடுத்த மோரை வாங்கி பருகினாள்..
ஷிவாக்ஷிக்கு இன்னும் வலி குறைந்த பாடில்லை.. குடித்தவுடன் சரியாவதற்கு.. இதென்ன மந்திர நீரா.. ?? பாட்டி வைத்தியம்.. அவ்வளவுதான்.. சிறிது கால நேரம் தேவைபடுமே..
ஷ்ரித்திக்.. அவளின் வேதனை கண்டு தாள முடியவில்லை.. அவளருகே அமர்ந்து கொண்டே.. "ஹ்ம்ம்ம்ம்.. புஜ்ஜூ.. எப்பயுமே.. இப்படி தான் வலிக்குமா.. ?? இப்படி தான் கஷ்டப்படுவியா.. ??" என கேட்ட.. ஷ்ரித்திக்கின் முகத்திலும் வேதனையின் சாயல்.. 😟
"நேக்கு முதல் நாள் தான்.. இப்படி வலிக்கும்.. காலெல்லாம் வலிக்கறது.. சித்த அசைச்சிரப் படாது.. அப்பறம்.. வலி ஆரம்பிச்சிடும்.." என வேதனையோடும் விழியில் ஷிவாக்ஷி மொழிந்தாள்.. 😣😣
ஷ்ரித்திக்கிற்கு.. என்ன தோன்றியதோ.. ?? திடீரென அவளின் கால்களை பற்றி.. இதமாக அழுத்தினான்.. ஷிவாக்ஷி இதை எதிர் பார்க்கவில்லை.. 😧
ஷிவாக்ஷிக்கு வார்த்தை வரவில்லை.. தடுமாறியது.. அவள் சொற்கள்..
"எ.. என்.. என்ன.. ?? என்ன பண்றேள்.. ?? விடுங்கோ.. ?? நீங்க போய் இதெல்லாம் பண்றேளே.. ?? காலை விடுங்கோ.. ?? " என ஷிவாக்ஷி அவன் மடியிலிருந்த தன் காலை எடுக்க முயற்சித்தாள்.. அதற்குள்.. அவள் வயிற்றில் சுர்ரென்று.. ஷிவாக்ஷியால்.. நகர்த்தவே முடியவில்லை.. வலியின் வேதனை அதிகரித்துச் சென்றது.. கரங்களால் முகத்தை மூடி.. வலியை பொறுத்துக் கொண்டாள்.. 😖😖
"எதுக்கு.. ?? இப்ப காலை அசைச்ச.. பாரு.. ?? சோ.. நான் தான.. பிடிச்சு விடறேன்.. என் பொண்டாட்டிக்கு தான பண்றேன்.. அமைதியா இரு.. காலை பிடிச்சு விட்டா.. உனக்கு கொஞ்சம் இதமா இருக்கும்.." என்று விட்டு அவளின் தாமரை பாதங்களை பிடித்து விட்டான்.. ☺️
ஷிவாக்ஷிக்கு.. அது இதமாக தான்.. இருந்தது.. அதே வேளையில் சங்கடமாகவும் இருந்தது.. ஷ்ரித்திக்.. அவன் இடத்தில் இருந்து இறங்கி தனக்காக வருவது.. அவளுக்கு அது சங்கடத்தையே தருகிறது..
ஆனால்.. ஷ்ரித்திக்கின்.. பார்வையே வேறு.. ஒரு பக்தன் தன் கடவுளுக்கு செய்யும் சேவையாகவே எண்ணி.. கர்வம் கொண்டிருக்கிறான்.. 😍😍
காதலும் ஒரு வகையில் பக்தி தானே.. 😍😍😍
ஆனால்.. ஒன்று.. ஷ்ரித்திக்கின் மீதான.. பார்வை இப்பொழுது மாறி விட்டது.. அதில் காதல் மட்டுமே தெரிந்தது.. இவன் என்னவன்.. எனக்கானவன்.. என்னும் எண்ணம் உருவாகிவிட்டது..
உதயன்.. விரித்த அக்னி சிறகின் மூலம் பிரகாசத்தை பிரபஞ்சத்திற்கு தந்துக் கொண்டு இருந்தவன்.. ஓய்வெடுக்க மெல்ல மெல்ல.. தன் சிறகினை மடக்கிக் கொண்டிருந்த.. இனிய மாலை வேளை..
ஷிவாக்ஷிக்கு இப்பொழுது வலி சற்று குறைந்தார் போலிருந்தது..
தன் முயல் குட்டிகளை வைத்து கொண்டு மெத்தையில் அமர்ந்திருந்தாள்.. நாள் பொழுதே.. அறையிலே கழிந்து விட்டதே.. அதுவுமின்றி.. வெகுவாக சலிப்பு தட்டியது.. வெளியே செல்லலாமே.. என்றெண்ணினாள்..
ஷ்ரித்திக்.. அவளருகே அமர்ந்து.. வேலையில் கவனம் செலுத்தியதில் குறியாய் இருந்தான்.. 😎
இரு முயல் குட்டிகளை தூக்கி கொண்டவள்.. எழ முயற்சிக்க.. மீண்டும் சுர்ரென்று வலி உயர ஆரம்பித்தது..
அது அவளின் முகச்சுருக்கத்தில் உணர்ந்திருந்தான்.. ஷ்ரித்திக்..
ஷ்ரித்திக்.. கட்டிலுக்கு மறுபுறம் வந்து..
"ஏன்.. டி.. உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை.. ??" என்றபடியே அவளை அள்ளிக் கொண்டான்.. 🥰🥰
"ஹான்.. என்ன.. ? என்னை பொசுக்கு பொசுக்குன்னு தூக்கிடறேளே.. ?? விடுங்கோ நான் நடந்து வரேன்.." என்று ஷிவாக்ஷி.. ஷ்ரித்திக்கிடம் சிணுங்கினாள்.. 😉
ஷ்ரித்திக்.. அதையெல்லாம் செவியில் போட்டுக் கொள்ளவில்லை.. அப்படியே அவளை தூக்கிக்கொண்டு நடந்தான்.. 😎😎
ஷிவாக்ஷிக்கு தெரிந்து விட்டது.. ஷ்ரித்திக் தன் பேச்சை கேட்கப் போவதில்லை என.. ஆனால்.. ஷ்ரித்திக்.. தன்னை சுமந்து செல்லுவதை.. உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தாள்.. வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை.. 🥰🥰
ஷ்ரித்திக்.. வரவேற்பறையை தாண்டி செல்லும் வேளையில்.. மொத்த குடும்பமும்.. இவ்விருவரையுமே விழியகல விரித்து.. நோக்கியது..
ஷ்ரித்திக்கின் விழிகளை நோக்கி இருந்தது.. அவள் விழிகள்.. 😍😍
தன்னவளும் தன்னை நோக்குகிறாள்.. என உணர்ந்தே இருந்தான்.. ஏனோ.. அவனும் காண்பித்து கொள்ளவில்லை..🥰🥰🥰
ஷிவாக்ஷி அவனை அளவெடுப்பதை போல ரசித்து கொண்டிருந்தாள்..
அவனின் வலிய கரங்களில் தான்.. விழிகள் நிலைத்துக் கொண்டிருந்தாள்.. தன்னை சுமக்கும் புஜத்தில் நிலைத்தது.. தன்னை சுமந்து செல்லும்.. அந்த புஜத்தின் வலிமையில் நின்றது.. இக்கரங்களுக்கு தான் எத்தனை வலிமை.. என்றெண்ணி இருந்தாள்..
"புஜ்ஜு.. ஆர்ம்ஸ பாக்கறியா.. ?? தினமும் ஜிம் போறேன்ல அதான்.." என்றிடவும்.. 😎
ஷிவாக்ஷி 'கண்டு கொண்டானே.. ??!!' என தன் தலையை திருப்பிக் கொள்ளவும் சரியாய் இருந்தது.. 😜
ஷ்ரித்திக் தன் மனதில்.. 'இன்னும் எத்தனை நாட்கள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.. ?' என நினைத்து இளமுறுவல் பூத்தான்.. ☺️
ஷிவாக்ஷியை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று.. அங்கிருக்கும் இரும்பு இருக்கையில் அமர வைத்தான்.. தன்மேல் வைத்திருந்த முயல் குட்டிகளை இறக்கி விட்டு.. அதனுடன் விளையாட தொடங்கினாள்..
ஷ்ரித்திக்.. அவளருகே.. அமர நினைக்கும் வேளையில்.. வேலை தொடர்பான அழைப்பு வரவே.. திறன்பேசியை எடுத்தான்..
ஷிவாக்ஷி.. "இந்த போன்.. ??" என ஆரம்பித்து தன் வாயை மூடி கொண்டாள்.. 🙄
"ஏன்.. நிறுத்திவிட்டாய்.. ?? உன் உளறல்.. தொடங்கட்டும்.." என ஷிவாக்ஷியை ஏற இறங்க பார்த்து விட்டு.. 🤨🤨.. நக்கலாக ஆரம்பித்தவன்.. "என்கிட்ட நாலு ஐபோன் இருக்கு.. நேத்து உடைஞ்சதில்லாம.. ஓகே.. இம்பார்டன்ட் கால்.. வந்தரேன்.."
ஷ்ரித்திக் அப்புறம்.. திறன்பேசியிலே.. கவனமாய் இருந்திட..
ஷிவாக்ஷியை பின்னிருந்த இரு கரம்.. அவளின் கழுத்தை நெருங்கியது..
அக்கரம்.. திடுமென.. ஷிவாக்ஷியை அடிக்கத் தொடங்கியது.. அதில் திடுக்கிட்ட.. ஷிவாக்ஷி.. திரும்பி விழிக்க.. அது தன் தோழி.. இஷானி என்று தெரிந்ததும்.. ஆனந்தத்தில். விழி விரிந்தது..
"ஹேய்.. இஷா.. ??!!!" என அவளை கண்ட சந்தோஷத்தில்.. கத்த.. 😃
"என்ன.. ஏ..ஏ.. இஷா.. ?? குரங்கு.. மாடு.. பண்ணி.." என வாயை கோனிக் கொண்டு ஆரம்பித்து.. வரிசையாக கரித்துக் கொண்டே.. அவளை சரமாரியாக அடித்தாள்.. 😠😠
"அம்மா.. ப்பா... ?? அச்சோ.. ஹே.. எதுக்கு அடிக்கிறன்னு சொல்லிட்டு அடி.. இல்ல மெதுவா அடி.. நேக்கு வயிறு வலிக்கறது.." என்று தன் முதுகில் பட் பட் என அடிக்கும் அடிகளை வாங்கிக் கொண்டு மொழிந்தாள்.. 😌
"வலிக்கனும்னு தான் அடிக்கிறதே.." என்ற இஷானி அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை.. 😠
இஷானியின் வரவை கண்டதும்.. ஷ்ரித்திக்.. அவளருகே சென்றான்..
"ஹாய் இஷா.. என் பேரை சொல்லி இன்னும் நாலு அடி சேத்தி போடு.." என ஷ்ரித்திக் இஷானியுடன் இணைவதை கண்ட.. 😠
"ஹாய்.. தல.. ஏன் என்னாச்சு.. ?? எதுக்கு இப்படி சொல்றீங்க.. ?? இவ ஏதாவது பண்ணாலா.. ?? பண்ணிருப்பா.. சொல்லுங்க.. ?? என்ன பண்ணா.. இவ.. ??" என கேள்விகளோடே.. வினாவினாள்.. இஷானி.. ஆனால் அடிப்பதை அவள் நிறுத்தவேயில்லை.. 😠
ஷிவாக்ஷி அவனிடம் கண்களால் வேண்டாம் சொல்லாதே என ஜாடை காட்ட.. 😭
ஷ்ரித்திக்.. அதை எதுவுமே கண்டு கொள்ளவில்லை.. 😎
"மேடம்.. மூணு நாளா சாப்பிடாம மயங்கிட்டா.. என்னன்னு கேளு.. ??" என்றதும்.. இஷானியின்.. விழிகள் செந்தனலானது.. 😡😡
இஷானியை பார்க்காமலே.. ஷிவாக்ஷியால் உணர முடிந்தது.. 😕
ஷிவாக்ஷி "யோவ்.. கெட்டப்பா இருக்கன்னு பாத்தா.. நீ கட்டப்பா.. வேலை எல்லாம் பண்ற.. நீயெல்லாம்.. ஒரு நல்ல ஆத்துக்காரரா.. ??" என ஷ்ரித்திக்கை பொய்யாக ஏசினாள்.. 😠😜
"மரியாதை தேயுது.. இட்ஸ் ஓகே.. நீதானே.." என ஷ்ரித்திக்.. கதைத்ததை கேட்டதும்.. தான்.. தான் அவனை மரியாதையை குறைத்து பேசியதை உணர்ந்தாள்.. 😝
"சரி.. சாரி.. வந்து காப்பாத்துங்கோ.. இல்லனா இவ அடிச்சே கொன்னுடுவா.. ப்ளீஸ்.. ??" என ஷிவாக்ஷி கெஞ்சுவதை போல கேட்டதும்.. ஷ்ரித்திக் யோசிக்கும் பாவனையை வெளிபடுத்த..
"வெர்ரி சாரி.. உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் வர மாட்டேன்.. யாருக்கு தெரியும்.. ரெண்டு பேரும் சேர்ந்து என்னை மொத்தி எடுத்துருவீங்க.." என்றுவிட்டு நகர்ந்து கொண்டான்.. ஷ்ரித்திக்.. 😎😎
இருவரும்.. தலையை ஒரே நேரத்தில் சாய்த்து.. "தப்பிச்சிட்டாரே.. ??!!" என கோரஸாக மொழிந்தனர்.. 😜😜
இஷானி.. "எருமை.. எருமை.. வேளா வேளைக்கு சாப்பிடனும்.. உனக்கு எத்தனை தடவ சொல்றது.. ?? காலேஜில தான் அப்படின்னா.. ?? இங்கேயும் இப்படியா.. ?? அப்போ.. காலேஜூக்கு அப்பறம் கூட நீ நேரத்துக்கு சாப்பிடறதில்ல.. ஏன் டி இப்படி இருக்க.. ?? குரங்கு.. அதான் பணக்கார வீட்டில தான வாக்கப்பட்டிருக்க.. அப்பறம் என்ன.. ?? சங்கடப்படறீயா.. ??" என கோபமாக ஆரம்பித்து.. அக்கறையுடன் முடித்தாள்.. இஷானி.. 😠😟
"கிட்டத்தட்ட.. இஷா.. இந்த ஆத்துல சமையல் வேலை செஞ்சிருக்கேன்.. இப்ப அதுக்கூட பண்ண வேணாம்னு சொல்லிட்டா.. உழைக்காம சாப்பிட கஷ்டமா இருக்கு.. அதுவுமில்லாம.. முன்னாடி இருந்த பழக்கம்.. இதெல்லாம்.. ம்ப்ச்.." என்று ஷிவாக்ஷி.. சலிப்புடன் கத்தரித்தாள்.. 😣😣
"ஹலோ.. இப்ப நீங்க.. வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கீங்க.. இன்னும் ஒன் மாசத்துல சம்பளம் வந்துரும்.. அப்பறமென்ன.. ?? புது இடம்.. அதனால இப்படி யோசிக்கிற.. அப்பறம்.. அதுவே பழகிடும்..." என எற்ற இறக்கத்துடன் இஷானி கதைத்தாள்.. 😀👍
மீண்டும்.. ஏதோ நினைத்தவளாக.. அவளை அடிக்கத் துவங்கினாள்..
"எருமை.. ராத்திரி எதுக்கு டி போன் பண்ணி என் தூக்கத்தை கெடுத்த.. ஆமா.. உனக்கு எப்படி அந்த வார்த்தை எல்லாம் தெரிஞ்சுது.. யாரு சொன்னா.. ??" என அடித்துக் கொண்டே.. ஷிவாக்ஷி அருகே வந்தமர்ந்தாள்.. 😠😠
ஷிவாக்ஷி.. "உன்னாண்ட சொல்லலாமா.. ?? இல்ல வேணாமா.. ??" என தாடையை தட்டி யோசிப்பதாக காட்டிக் கொண்டாள்.. 🤔🤔
"சொல்லனும்னு தோனுச்சுனா.. சொல்லு.. இல்லனா.. வேணாம்.. நம்பிக்கை இருந்தா.." என தீவிரமாக நல்ல பெண்ணாக மொழிந்தாள்.. இஷானி.. 😌
ஷிவாக்ஷியும்.. தீவிரமாக அவளை பார்த்தவள்.. திடுமென.. வெடித்து சிரித்தாள்.. "நீ பையா பட கார்த்திக்.. ?? அது எப்படி எப்படி.. ?? நம்பிக்கை இருந்தா சொல்லா.. ??" என அவளின் தலையை தட்டினாள்.. 😜😜
"ஈஈஈஈஈஈ.. தெரியுதுல.. தெரியுதுல.. சொல்லும்.. சொல்லி தொலையும்.." என்றாள்.. இஷானி.. பொய் கோபமாக.. புன்னகையுடன்.. 😠☺️
ஷிவாக்ஷி நேற்று ஷ்ரித்திக்கிற்கும் தனக்கும் நடந்த வாக்குவாதம்.. இன்று காலையிலிருந்து.. தற்சமயம் வரை நடந்தவை.. என்றனைத்தும் மொழிந்து விட்டாள்..
கையில் முயல் குட்டிகளை வைத்து அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த.. இஷானிக்கு.. தலை சுற்றியது.. கோபத்தில்.. 😠😠"அடிப்பாவி.. நேத்து அவ்ளோ தூரம் சொல்லியும்.. நீ கேக்கல.. வாய மூடிட்டு இருக்க மாட்டியா.. ??" என்றதும்.. ஷிவாக்ஷியிடம்.. மொழியில்லை.. 😔
"அவரு உன்ன லவ் பண்றாருன்னு தெரியும் இந்தளவுக்குன்னு தெரியாது.. செம கேரிங்.. யாரு பண்ணுவா.. இந்த வேலையெல்லாம்.. ??" என உணர்வு பொங்க மொழிந்தாள்.. இஷானி.. 😌😌
அதில் இருக்கும் உண்மையை எப்போதோ உணர்ந்து விட்டாள்.. ஷிவாக்ஷி..
"என்.. ஆளும் இருக்கானே.. ?? ஹ்ம்ம்ம்ம்.." என நீண்ட பெருமூச்சு விட்டாள்.. இஷானி.. 🌬️
"ஒய்.. என்ன.. ?? விக்ரம் அண்ணா.. ஒன்னும் அந்த அளவுக்கு மோசம் இல்லை.. ஹீ இஸ் அ ஜெம்.. அவா எவ்ளோ நல்லவாளா இருந்தா.. ?? லட்சியத்தை முடிச்சிட்டு கல்யாணம்.. அதுவரைக்கும் உன்னை டச் பண்ண மாட்டேன்னு சொல்லுவா.. ??" என்றவள்.. வக்காலத்து வாங்கினாள்.. 😌😌
"உண்மை தான்.." என இஷானி.. விக்ரமை நினைத்து காதலால் நெஞ்சம் நிறைந்து மொழிந்தாள்.. 😍😍
------------------
To be continued.. 😉
Word count : 6683
(Sorry... Sorry.. sorry.. oru periya gap aprmaa story post pandrean.. ennoda personal prblm nala ennala post Panna mudila.. idhuku aprm story ud sikrama kuduthuruvean... Neriaya per.. enkita story aa post Panna solli.. msg pannanga.. avangalukku.. periya sorry and thanks.. indha story marakama ketadhuku.. tq for reading.. luv u lot.. 😍😇😇)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro