மாயம் - 4
ஐந்து வயது சிறுமியை பதவி ஆசைக்காய் நரபலியிட்ட கொடூரம்
என ஓடிய பரபரப்பான செய்தியை செவி சாய்த்த சித்ரனின் கரங்கள் இரண்டும் சினத்தில் இருக... அவனது ஒவ்வொரு நரம்பும் அதி பயங்கரமான கோவத்தால் மூளைக்கு வேகமாய் பாய.... கண்களின் கருமுளி அங்குமிங்கும் அதிவேகமாய் அசைய... கை முஷ்டியை முருக்கி எதிலோ குத்த போக... அதே நேரம் கதவு திறக்கும் சத்தமும் கேட்க.... அவன் கை செவுரை பதம் பார்க்கும் முன் சரியாய் பிடித்திருந்தான் அவன்...
ஆறடி உயரத்தில் அழகான சிவந்த நிறத்தில் கட்டுமஸ்த்தான உடலில் காக்கி உடை சூழ்ந்திருக்க... அவசரத்தில் ஓடி வந்திருக்கிறான் என்பதற்கு அடையாளமாய் முகத்தில் வேர்வை முத்துக்கள் அரும்ப நின்றான் சித்ரனின் தோழன் ருமேஷ்யவன்
ருமேஷின் வருகையை அறிந்தும் சித்ரனின் கோவம் மட்டுப்பட மறுக்க.. அவன் பிடியையும் மீறி தன் கரத்தை சுழற்றி விடுவித்த சித்ரன் வெற்றிகரமாய் செவுற்றில் இடிக்க... அவன் வேகத்திற்கும் கோவத்திறும் செவுரின் செதில் உடைந்து ருமேஷின் முகத்தை பதம் பார்க்க எகிர... ருமேஷ் தன் கரத்தை பாதுகாப்பிற்காய் அவன் முகத்திற்கு குறுக்கே கொண்டு வர... அவனின் கரத்தை அச்செதில் கிழிக்கும் முன் கண நேரத்தில் அதை பிடித்த சித்ரன் கதவின் புறம் தூக்கி எறிந்தான்...
அதே நேரம் கதவு மீண்டும் திறக்க பட.. " டேய் மச்சான் " என்றவாறே உள்ளே வந்த ருமேஷின் ஜாடையை ஒத்த இன்னோறுவன் திடுக்கிட்டு நின்றான்... அவன் தலையை உராசி விட்டு சென்ற அந்த செதிலை கண்டு...
சித்ரன் இன்னும் தன் சினத்தை அடக்க இயலாது கரத்தை பதம் பார்க்க முயல...
ருமேஷ் : ஸ்டாப் இட் சித்ரன்... என அவன் கத்திய கத்தில்... அவன் புறம் திரும்பிய சித்ரனின் கருப்பு கன்னாடிகளின் பின் இருந்த கண்கள் கடுங்கோவத்தில் செக்கசெவேளென சிவந்து கொண்டிருப்பது கன்னாடியையும் தாண்டி ஒளிர... அதை கண் கூட கண்ட ருமேஷின் முகத்தில் சில நொடிகள் அதிர்ச்சி அப்பட்டமாக... அவன் இருகிய வதனம் இன்னும் இருகுவதில் தன் நிலை அடைந்தவன்... கதவருகில் நின்றவனை ஏறிட்டான்...
ஆறடி உயரத்தில் ருமேஷின் உருவத்தை உரித்து வைத்ததை போல் நின்றான் அந்த கட்டுடல் அழகன்... அவன் ருமேஷின் இரெட்டை சகோதரன் விதுஷ்யவன்
ருமேஷ் : டேய்... என அவனை அழைக்க... விதுஷ் இன்னும் அதிர்ச்சியிலே இருக்க...
ருமேஷ் : டேய் மங்கி... இங்க வந்து தொல டா... என அருகிலிருந்த ஏதோ ஒன்றை அவன் மீது தூக்கி எறிய... அதில் தன் நிலை பெற்ற விதுஷ் பயத்தில் கத்த போய் சகோதரனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை கண்டு அலரலை விழுங்கி விட்டு கதவை மூடி அவனருகில் சென்றான்...
சித்ரனின் கரங்கள் இரண்டும் ருமேஷிடம் விடு பட இயலாமல் அமைதி காக்க... அதற்கு நேர் மாறாய் அவன் கண்கள் விடாமல் அங்குமிங்கும் சுழன்று கொண்டிருந்தது...
ருமேஷினது பிடி சித்ரனின் பலம் முன் அவ்வளவு ஒன்றும் வலுவானதல்ல... அவன் அமைதி காத்திருக்கிறான் எனில் கோவத்தை சீர் படுத்த முயல்கிறான் என சகோதரன்கள் இருவருக்கும் தனிச்சையாகவே புரிந்தது...
சித்ரன் : என்ன நடந்தச்சு... என அமைதியாய் கேட்க...
ருமேஷ் : அந்த கொழந்து பேரு மாதவி.. அவ அப்பா கட்சில பதவி மாற்றம் கிடைக்கிரதுக்காக ஏதோ ஒரு சூனியக்கார கிழவி சொல்லி இந்த வேலைய பாத்துர்க்காரு... குழந்தைய காணும்னு குடும்பமே தேடீர்க்காங்க... அப்ரம் அந்த குழந்தையோட அண்ணன் தான் அவங்க அப்பா மேல சந்தேகமா இருக்குரதா கவனிச்சு சொல்லீர்க்காரு... அதுல தா இந்த விஷயம் தெரிய வந்துச்சு... என கூற கூற சித்ரனின் சுவாச காற்று அனலாக.. ருமேஷின் கரங்கள் சித்ரனின் பிடியில் இருக தொடங்கியது...
சித்ரன் : அவனுக்கு தண்டனை கிடைச்சிதா இல்லையா...
ருமேஷ் : மூணு வர்ஷ ஜெயில் தண்டனை குடுத்துர்க்காங்க... இன்னைக்கு தான் ஜெயில்க்கு கஸ்டடில இருந்து கூட்டீட்டு போறாங்க...
சித்ரன் : யாரு கஸ்டடில இருக்கான் அவன் என கேட்டதற்கு ஒரு நொடி இருவரும் தினறினர்..
விதுஷ் : அதெல்லாம் எதுக்கு டா உனக்கு...
சித்ரன் : டெல் மீ தி அன்ஸர் ஃபார் வாட் ஐ ஆஸ்க்ட்... என குரலில் கோவம் கொப்பளித்தது... சற்றே சுதாரித்த ருமேஷ்...
ருமேஷ் : டிடெக்டிவ் கமிஷ்னர் பிரகாஷ்... அன் போலீஸ் கமிஷ்னர் அர்ஜுனன்... என கூற...
சித்ரன் : எந்த ஊர்ல நடந்துச்சு... என்றவனின் கேள்விக்கு இருவருக்கும் பதிலளிக்க துளியும் தைரியமில்லை...
ருயேஷ் : அ..அது...
சித்ரன் : எந்த ஊருன்னு கேட்டேன்... என மீண்டும் அழுத்தமாய் கேட்க...
ருமேஷ் : வே.. வேத... என இவன் தினற...
சித்ரன் : தெளிவா சொல்லு ருமி...
விதுஷ் : வேதாரன்யம் மச்சான்... என மெல்ல நகர்ந்து டீவியின் வல்யூமை குறைத்து கொண்டே கூறினான்...
சித்ரன் : வேதாரன்யமா... என சந்தேகமாய் இழுக்க...
ருமேஷ் : ஆமா.. டா ஆமா...
விதுஷ் : சரி நீ எதுக்கு எங்க கிட்ட இன்ஃபார்ம் பன்னாம ராஜ் கிட்ட க்ரெடிட் அனுப்புன... என அவனுக்கு யோசிக்க அவகாசமளிக்காமல் உடனே பேச்சை மாற்றினான்....
சித்ரன் : ஏன் அனுப்புனா என்ன... எப்பவும் அப்டி தான அனுப்புவன்... என்றவனின் குரல் நிதானமடைந்திருக்க... இருவரும் பெருமூச்சு விட்டு கொண்டனர் அவன் திசை மாறியதில்...
விதுஷ் : இல்ல டா... எப்பவுமே புதுசா யாராவது வந்தா எங்களுக்கு இன்ஃபார்ம் பன்னுவியேன்னு கேட்டேன்...
சித்ரன் : ம்ம் ... நாளைக்கு என்ன திரும்ப ஊருக்கு போறீங்களா டா...
விதுஷ் : ம்ம் ஆமா டா.. அந்த இரெண்டு குரங்க சமாளிக்கனும்ல... அதுக்கு போய் தான் ஆகனும்... என வாய் தவறி உளற.... ருமேஷ் அவனுக்கு கில்லர் லுக் விட்டான்...
சித்ரன் : எந்த குரங்கு... என இவன் சரியாய் அதில் வந்து நிற்க...
ருமேஷ் : எங்க ஹெட் ஆபீசர் இரெண்டு பேர சொல்றான் டா அவன்... என விதுஷின் பின் முதுகில் நங்கு நங்கென சத்தம் வராமல் அடித்தவாறு இவனுக்கு பதிலளித்தான்...
சித்ரன் : தென் ஓக்கே... என்றவாறு நான்கடி நகர்ந்து சோபாவை இழுத்து போட்டு அமர்ந்தான்...
ருமேஷிற்கும் விதுஷிற்கும் இதயம் படபடவென துடிக்க... அதை இன்னும் எகிர வைக்கும் நோக்குடன்...
சித்ரன் : டேய் டீவிய ஆன் பன்னுங்க டா... எதாவது கேக்கலாம்... என சாய்ந்தமர... அந்த நேரம் சரியாக டீவியில் " நரபலியிட்ட சிறுமியின் தந்தையை டிடெக்டிவ் கமிஷ்னர் சரண் பிரகாஷ் மற்றும் போலீஸ் கமிஷ்னர் முகிலர்ஜுனனின் பாதுகாப்பில் வேதபுரத்திலிருந்து சிறைசாலையிற்கு செல்ல நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது " என ஒளிபரப்பாக... அதே நேரம் மணி இரவு எட்டை கடந்ததாய் மணி அடிக்கப்பட்டது...
விதுஷ் : மச்சான் டீவிலாம் அப்ரம் பாக்கலாம் டா... மணி எட்டரையாச்சு... நீ.. நீ தூங்கு... வா ... நாங்களும் கெளளம்புரோம்... என அவனை வம்படியாய் இழுத்து சென்று கட்டிலறையில் விட்டான்...
சித்ரன் : ம்ம் சரி டா பத்திரமா போய்ட்டு வாங்க... குட் நைட்... என கன்னாடியை கலட்டி வைத்து விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தான்...
அவன் உறங்கியதும் ஆழ பெருமூச்சை இழுத்து விட்ட சகோதரன்கள் இருவரும் உடனடியே அங்கிருந்து வெளியேறினர்...
கெனடா
மாலை வெயிலின் தாக்கத்தில் முகத்தை சுழித்து கொண்டு ஒருவரையொருவர் முறைத்து கொண்டு திரும்பி அமர்ந்திருந்தனர் நம் இரண்டாம் அணி நாயகிகள்...
ப்ரியா : ம்ச் இப்போ எதுக்கு டி நீங்க செவுத்த வெறிச்சிட்டு உக்காந்து கெடக்கீங்க...
மாயா : நாங்க மொறச்சா உனக்கென்ன... என இவள் கடவாயை இடித்து முகத்தை திருப்ப...
திவ்யா : அடடா... என் செல்லத்துக்கு அம்மி மேல என்ன தா கோவம்...
சந்தியா : தெரியாத பாரியே கேக்காத அத்தி.. என இவளும் முகத்தை சுழிக்க...
ப்ரியா : அப்டி நாங்க என்ன டி பன்னீட்டோம்...
மதி : நீங்க என்ன பன்னல அத்தி... என மீண்டும் தொடங்க
அனு : ஏ நிறுத்துங்க டி... இப்போ என்ன பிரச்சனை... தெளிவா சொல்லுங்க...
நித்ரா : எங்கள விட்டுட்டு நீங்க மூணு பேரு மட்டும் இப்போ இந்தியா போரீங்க... நாங்களும் வருவோம்...
திவ்யா : ஹ்ம் இதான் கோவமா...
எட்டு பேரும் : ஹ்ம் என ஒரே போல் முகத்தை திருப்பி கொண்டனர்...
அனு : செல்லம்ல... புரிஞ்சிக்கோங்க டா பட்டுமாஸ்...
வைஷ்ணவி : நாங்க புரிஞ்சிக்ரோம் அத்தி... ஆனா எங்களையும் கூட கூட்டீட்டு போங்கன்னு தா சொல்றோம்...
திவ்யா : அதுக்கு இது சரியான நேரம் இல்ல வைஷூமா... என அவள் தலையை வருடி விட்டாள்...
இக்ஷி : அப்போ நாங்க எப்போ தா இந்தியா போரது... எங்களுக்கும் அப்பாஸ் மாமாஸ் அம்மாஸ் அத்தீஸ பாக்கனும்னு தோனுது அம்மி...
அனு : இரெண்டு மாசத்துக்கு ஒரு முறை தான் வராங்களே டி...
நவ்யா : அ..அப்டி இருந்தாலும் ஊர பாக்க ஆசையா இருக்கும்ல.. நாங்க பாத்து எவ்ளோ வர்ஷமாச்சு....
ப்ரியா : தோ பாரு நவி குட்டி... நீங்க அங்க போறதுக்கு இன்னும் நிறையவே காலம் இருக்கு... சமத்தா நீங்க இங்கையே இருப்பீங்கலாம்... நாங்க ஒன் மன்த்ல வந்துருவோமாம்...
நந்தினி : நாங்க பாவம் இல்லையா அம்மி... என பாவமாய் கேட்க...
ப்ரியா : இல்ல தங்கமே... என அவளும் அதே போல் சிரித்து கொண்டே கூற...
வைஷ்ணவி : போ அத்தி... எங்க கிட்ட பேசாத...
திவ்யா : அச்சோ கோச்சிக்காத செல்லம்... உங்க மூணு மாமாக்களுக்கும் அடுத்த மாசம் நினைவு நாள் வருதுல்ல... அதுக்கு நாங்க ஊருக்கு போகனும் மா... புரிஞ்சிக்கோங்களேன்... என முகத்தை சுருக்கி கேட்க...
இதற்காக தான் தன் அத்திகள் / அம்மிகள் இந்தியா செல்கிறார்கள் என்பதனை அறியாது அடம்பிடித்த தங்கள் மடத்தனத்தை எண்ணி கடிந்து கொண்ட சிறியவள்கள் பெரிவள்கள் மூவரும் ஊருக்கு செல்ல அனுமதித்து விமான நிலையத்திற்கே சென்று நல்லபடியாக வழி அனுப்பி வைத்தனர்...
இரண்டு மணி நேரங்கள் கண் இமைக்கும் நேரத்தினில் கரைய... சாலையில் விடாமல் ஒலியூட்டி அலுத்து கொண்டிருந்த வாகனங்களின் இரைச்சலிற்கு மத்தியில் உறங்க இயலாமல் மனம் பதைபதைக்க படுக்கையில் படுத்திருந்தான் ருத்ராக்ஷ்...
ருத்ராக்ஷின் மனம் எதனாலோ குழம்பி தவிக்க... இதற்கு மேலும் வெட்டியாய் படுத்திருக்க இயலாமல் எழுந்து தொலைகாட்சியை உயிர்பித்தான்...
அவனது கரங்களும் ஓயாது டீவி ரிமோட்டை அழுத்தி கொண்டிருக்க... சனல்களும் விடாது நொடிக்கு நொடி மாறி கொண்டிருக்க... சட்டென ஒரு ஆங்கில செய்தி ஒளிபரப்பாவதை கண்டு அவன் வேகம் குறைய.... அதில் ஓடிய செய்தியை கண்டவனின் கண்களில் அப்பட்டமாய் கோவம் தெரிய... அவன் கரத்தை மூடி மூடி கோவத்தை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தான்...
பதவி ஆசைக்காய் சிறுமியை நரபலியிட்ட கொடூரம்... அவன் கண்கள் அச்செய்தியை விட்டு அகல மறுத்தது... கோவத்தை மட்டு படுத்தியவனின் மூளை வேகமாய் செயல்பட... உடனே தன் செல்பேசியை தேடி எடுத்து யார் எண்ணிற்கோ டயல் செய்ய போனவனின் கவனம் சரியாய் வீட்டின் அழைப்பு மணியை கேட்டு கலைந்தது...
ஃபோனுடனே கதவை நோக்கி சென்றவன் கண்கள் உறுத்தவும் அங்கிருந்த விளக்கை அணைத்து விட்டு கதவை திறந்தான்...
அங்கு நின்றிருந்தது மாலை சித்ரனை ஊட்டியில் சந்தித்த ராஜே தான்...
ராஜ் : ஹாய் ஸர்...
ருத்ராக்ஷ் : மிஸ்டர் ராஜ் ?? என கேள்வாயாய் கேட்க...
ராஜ் : எஸ் ஸர்... நைஸ் டு மீட் யு..
ருத்ராக்ஷ் : நைஸ் டு மீட் யு டூ.. ஜஸ்ட் கால் மி ருத்ராக்ஷ்...
ராஜ் : ஷ்யுர் ருத்ராக்ஷ்...
ருத்ராக்ஷ் : ப்லீஸ் கம்... என கதவை நன்கு திறந்து வரவேற்றவன்... இருள் கவ்வி கிடந்த வீட்டை விளக்கை உயிர் பித்து ஒளிமையாக்கியவன் கண்களுக்கு மறைவாக கருப்பு கன்னாடி ஒன்றை அனிந்து கொண்டான்...
உள்ளே வந்தமர்ந்த ராஜ் அவன் கன்னாடி டம்ளரை நீட்டவும்... அதை வாங்கி நீரை அருந்தினான்...
ராஜ் : என்ன ருத்ராக்ஷ் நைட் டைம்ல... சன்க்லஸெஸ்...?? என குழப்பமாய் வினவ...
ருத்ராக்ஷ் : நத்திங் சீரியஸ் ராஜ்... ஃபுல் டே நேத்து தூங்கல... சோ கண்ணு வெளிச்சத்துல எரிச்சலா இருக்கு... அதான்... என சாதாரணமாய் கூறியவன்... ஒரு கவரை எடுத்து முன் வைத்தான்...
ராஜ் : தன்க்ஸ் ருத்ராக்ஷ்.. ஹியர் ஈஸ் யுவர் கார்ட்... என அவனும் ஒரு கவரை தூக்கி முன் வைத்தான்...
ருத்ராக்ஷ் : மை ப்லஷர்...
ராஜ் : தென் ஓக்கே மிஸ்டர் ருத்ராக்ஷ்... வில் மீட் அகெய்ன் சூன்... என்றவாறு விடை பெற்றான்...
அவன் சென்றதும் கதவை மூடி விட்டு வந்த ருத்ராக்ஷ் அனைத்து விளக்குகளையும் அணைத்து விட்டு கன்னாடியை கலட்டி விட்டு தலையை தாங்கியவாறு உறக்கம் வரவும் கண்கள் சொருக கட்டிலில் விழுந்தான்...
பெட்டியில் ஒவ்வொன்றாய் துணி மணிகளை மடித்து வைத்து கொண்டிருந்த விதுஷின் மேல் கட்டிலில் கிடந்த மடித்த துணிகளை அவன் மீது ஒவ்வொன்றாய் தூக்கி எறிந்து கொண்டிருந்தான் ருமேஷ்...
அவனும் கடுகடுத்து கொண்டும் அவனை முறைத்து கொண்டும் பெருக்கி பெருக்கி பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தான்... இம்முறையும் அதே போல் ருமேஷ் டீவியை பார்த்தவாறு ஒன்றை தூக்கி எறிய... அதை அவன் மீதே கெட்ச் பிடித்து தூக்கி எறிந்த விதுஷ் அவன் மீது ஏறி...
விதுஷ் : கிருக்கு பயளே... அர மணி நேரமா ஃப்லைட்டுக்கு டைமாய்டுமோன்னு பயந்துட்டு மடிச்சு வச்சிட்டு இருக்கேன்... நீ தூக்கி தூக்கி போட்டுற்றுக்க... என்ன மாதிரி எதாவது வேலை பாக்குரியா நீ... பக்கி... பக்கி என அவனை மாற்றி மாற்றி அறைந்து கொண்டிருந்தான்...
ருமேஷ் : அடேய் அடேய் ... வலிக்கிது டா... எந்திரிச்சு தொல டா... இப்டி ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் இமேஜ டமேஜ் பன்றியே... சகோதரன் பாவம் டா...
விதுஷ் : அது ஒன்னு தா கொரச்சல்... எவன் உன்ன அப்பாய்ன்ட் பன்னானோ... கூறுகெட்டவன்... எதாவது பொருப்பிருக்கா டா உனக்கு... என மீண்டும் அடிக்க... இவ்விருவரும் இப்படி மாற்றி மாற்றி அடித்து கொண்ட நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்க... சட்டென இருவரும் கதவின் புறம் திரும்பினர்...
தோள் பட்டையில் ஒரு ட்ரவலிங் பகுடன் ஒரு ட்ராலியை இழுத்தவாறு முகம் கொள்ளா புன்னகையுடன் ஹாய் மச்சான்ஸ் என்றவாறு நின்றது ஆதியன்த்...
அவனை கண்ட இருவரும் " சப்பா நல்லா வேளை டீசன்ட்டா வெளிய உள்ளவங்களாம் பாத்துட்டு இப்டி கேவலமா சண்ட போடுரத யாராவது பாத்துர்ந்தா மொத்த இமேஜும் போய்ர்க்கும்... " என பெருமூச்சு விட்ட அடுத்த நொடி விழிகள் இரண்டும் நாழு கிலோமீட்டருக்கு அகல விரிய.... ஒரே நேரத்தில் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர்...
ஒருத்தன் படுத்து கொண்டும்... இன்னோறுத்தன் அவன் மேல் அமர்ந்து கொண்டும் தன்னை கண்டு முளிப்பதை கண்ட ஆதியன்த்
ஆதியன்த் : டேய் மச்சான்ஸ் வெல்கம் மீ டா...
ருமேஷ் : இப்போ ரொம்ப முக்கியம்... யாரு கேட்டு டா நீ இங்க வந்த... என விதுஷை தள்ளி விட்டு எழுந்தவன் இரு நொடிகளில் ஆதியன்த்திடம் வந்தாருந்தான்...
விதுஷ் : யம்மடியோ... என கத்தி கொண்டே கீழே விழுந்தவன் அவசர குடுக்க பொருமையா போய் தொல டா... என புலம்பியவாறே எழுந்தமர்ந்தான்...
ஆதியன்த் : அட என்ன மச்சான்... எத்தன வர்ஷம் களிச்சு ஊட்டி வந்துருக்கேன்... நைட் செம்ம சில்லா இருக்கு... இங்க வர விடுரீங்களா டா நீங்க.. அதான் நானே வந்துட்டேன்... என தோள் பையை தூக்கி போட்டு விட்டு சோர்வாய் சோபாவில் பொத்தென விழுந்தான்...
ருமேஷ் : டேய் விளையாடுரியா... யார கேட்டு நீ இப்போ ஊருக்கு வந்த...
ஆதியன்த் : டேய் என்ன யார டா கேக்க சொல்ற... போரடிக்கிது தனியா சுத்த... நா இனி இங்க தா இருப்பேன்.... வெளியல்லாம் போறதா இல்ல ப... என முகம் சுழித்து கொண்டான்...
விதுஷ் : உன்ன பாக்க தான டா நாங்க கிளம்புனோம்... இப்போ நீ இங்க வந்துருக்க...
ஆதியன்த் : சரி சரி காலைல பேசலாம்... நா பக்கத்து ரூம்ல தூங்கிக்கிறேன்... என அவன்கள் கத்த கத்த கேட்காது கண்களிரண்டையும் கசக்கியவாறு அறையை விட்டு வெளியேறினான்....
இவன் இம்சை தாங்க இயலாமல் பெருமூச்சு விட்ட இருவரும் சோர்வுடன் பெட்டில் சாய்ந்தனர்...
விதுஷ் : இப்போ என்னடா பன்றது...
ருமேஷ் : தெரியலையே டா...
விதுஷ் : அவனும் இப்டி அவசரகுடுக்கையாட்டும் கெளம்பி வந்துட மாட்டானே...
ருமேஷ் : வாய்ப்பில்ல டா... அவன் ரொம்ப அமைதி...
விதுஷ் : ஒரு ஃபோன் போட்டு பாப்போமா...
ருமேஷ் : மே பி அவன் இப்போ தூங்கியிருப்பான்...
விதுஷ் : ராஜ் வந்தானான்னு மட்டும் மெஸேஜ் பன்னு... அவன் ரிப்லை பன்னும் போது பாத்துக்கலாம்...
ருமேஷ் : ஓக்கே டண்... என எழுந்தன் அவன் தொலைபேசியில் ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு சில குறுஞ்செய்திகளை தட்டி விட்டான்... அந்த எண்ணிற்கு உரிமையாளன் ருத்ராக்ஷ்
சித்ரன் ருத்ராக்ஷ் ஆதியன்த் இம்மூவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லையெனினும் இவர்களுடனே வலம் வரும் இரெட்டை நிழல்களுக்கு இம்மூவருடனும் ஆணித்தரமான ஏதோ ஒரு சம்மந்தம் நிலைத்திருக்கிறது உண்மை...
அவர்களை இருவது வருடங்களுக்கு மேலாக பார்த்து கொள்வது இந்த இருவர் மட்டும் தான்.... இந்த மூவரணியினர் இதுவரை பார்த்து கொண்டதில்லை... பேசி கொண்டதில்லை... ஆனால் ருமேஷ் விதுஷ் இருவரும் மூவருக்குமே உயிர் தோழன்கள்...
மற்றயவைகளை பின் பார்க்கலாம்....
இரவின் ஆளுமை உலகெங்கிலும் படர்ந்திருந்த அந்த இரம்மியமான வேளையில்... ஓரிடத்தில் மாத்திரம் விளக்கின் மஞ்சள் ஒளி மெல்ல கசிந்து கொண்டிருக்க... அந்த அடர்ந்த பகுதியில்... வெள்ளையும் கருப்பும் கலந்த தரையை கூட்டும் ஆடையில்... முகத்தை திறையால் மறைத்து வென் கரங்கள் சிறு விளக்கை ஏந்தியிருக்க... மான் விழிகள் இரண்டும் அங்கு நிறைந்திருந்த ஏதோ ஒரு ஓசையில் மிரள... காலடி ஓசை வெளியேறிவிடாது பொருமையாய் நடந்து வந்தாள் அந்த ஐந்தடி அழகி...
கரங்கள் ஓரிடத்தின் எல்லையை தாண்டும் முன் தனிச்சையாகவே நடுங்க... இவ்வளவு நேரம் தான் வந்த பாதையை திரும்பி பார்த்தவளின் செவி அறையை பளாரென்று அறையும் சத்தம் கதிகலங்க வைக்க... கண்களை மூடி அதை மறைத்தவாறு திரும்பியவளின் முன் வெகு அருகில் வௌவாளின் இறெக்கை கொண்டு முதிய தோற்றத்தில் நீண்ட மூக்குடன் சுருங்கிய தோலுடன் பறந்த ஒரு சிறிய ஜந்துவை கண்டு அதிர... அவள் நா அவளையும் மீறி " துஷ்ரிகள் " என முனுமுனுத்தது...
அந்த மெல்லிய ஓசையில் அடுத்த நொடியே இவளை நோக்கி திரும்பியது அங்கு பறந்து கொண்டிருந்த அந்த இருவதிற்கும் மேற்பட்ட வௌவால் இறெக்கைகளை கொண்ட முதிய தோற்றத்துடனும் இருந்த ஜந்துவான துஷ்ரிகள்....
தன்னை அதுகள் கண்டு கொண்டதை உணர்ந்தவளின் கண்மணிகள் விரைவாய் தப்பிக்க வழி தேடி அங்குமிங்கும் சுழல... அவளுக்கு சற்றும் அவகாசமளிக்காத அந்த துஷ்ரிகள் நேரத்தை தாழ்த்தாது அந்த சுத்து வட்டாரமே அதிர வீலென சத்தமிட்டது...
அதன் அலரலில் திடுக்கிட்டவளின் கரங்களில் இருந்த விளக்கு தானாய் கீழ் விழுந்து உடைய.... சில நொடிகளிலே அவ்விடத்தை சுற்றியும் விளக்குகள் உயிர்பிக்க பட்டு ஒளிமையமாகிட... கொலுசு சினுங்கும் ஓசையை கேட்டு உறைந்து நின்றாள் அவள்...
அவள் நின்றிருந்த அந்த நீண்ட பாதையில்... பச்சை நிற பெரும் ஆடை தரையை கூட்ட... தலையில் உயர்ந்து நின்ற கருப்பு கிரீடத்துடன் முகம் கொள்ளா எகத்தாளமான புன்னகையுடன்... அழகே இரத்த வாந்தி எடுத்து தூக்கு மாட்டி சாவும் அழகுடன்... பச்சை நிற கண்கள் பளபளத்திட கம்பீரமாய் நடந்து வந்தாள் அவள் அருளவர்தினி...
இரு நொடிகளில் அவளை நெருங்கி வந்திருந்த அருளவர்தினி அவளின் கூந்தலை இருக்கி பிடித்து " இத்தோடு முன்னூத்தி இரண்டாவது விளக்கு " என அலட்சியமாய் கூறினாள்...
அவளின் முகத்திறையை கிழித்தவள் அவள் திமிறவும் கன்னம் பழுக்க ஒரு அறை விட... உதடு கிழிந்து இரத்தம் கோடாய் வழிய கீழே விழுந்தாள் நித்யரோஹினி...
அருளவர்தினி : ஹ்ம் எத்துனையையாயிரம் முறை உமக்கும் உம் இளவல்களுக்கும் இவ்விருண்ட கோட்டையினை விட்டு வெளியேற துனிந்திட கூடாதென்று எச்சரிப்பது... உம் வியூகங்களை இவ்விடத்தினில் உபயோகிக்க முயலாதே... பின் உம் இளவல்களையும் உம்முடன் இணைத்து தூக்கிலிட வேண்டியிருக்கும்... என திமிறாய் எச்சரிக்க...
ஹாஹா என ஏளனமாய் சிரித்த நித்யா அவள் உதட்டோரம் வழிந்த உதிரத்தை புறங்கையால் துடைத்தாள்... அவளின் நகைப்பை இரண்டு வருடம் பின் முதல் முறை கண்ட அருளவர்தினியின் முகம் அதிர்ச்சியில் வெளிரியது...
நித்யா : உம் பொருளற்ற மிரட்டல்களுக்கு ஐயமெய்தி நடுங்கிட யான் வளரா சிசுவல்ல அருளவர்தினி...
அவள் தன் நாமத்தை முழுதாய் உச்சரித்தத்தில் இன்னும் அதிர்ச்சி மேலோங்க.... கோவத்தில்...
அருளவர்தினி : ஏய்... என சத்தம் போட...
நித்யா : நிறுத்த டி உம் அலரல்களை... இந்நாள் வரை நீர் எம்மையும் எம் இளவல்களையும் வதம் செய்திடாது விட்டு வைத்திருப்பதன் விசனத்தை அறியாதிருப்பேன் என எண்ணுகிறாயா... உம் கனவு கோட்டை எத்துனை உயரம் உயர்ந்தாலும் எமது உயிர் பிரியும் முன் எங்கள் மணாளன்கள் எங்களை காத்திட இவ்விடம் தேடி நிச்சயம் வருவரடி... என அவள் அந்த இடமே அதிர சூளுரைத்தாள்...
இத்துனை வருடங்களில் உயர்ந்திடாதவளின் குரல் ஒரே இரவில் இத்துனை வலுவேறியதில் வெகுவாய் அதிர்ந்தாள் அருளவர்தினி....
அருளவர்தினி : கனவு காணாதே பேதையே... உம் மனாளன் என்றும் உம்மை தேட போவதில்லை...
நித்யா : எமது உயிர் காதலை நினைவு பெற்றால் நிச்சயம் என் ஆரித் எம்மை தேடி வருவார்... என்கும் போதே அவள் கண்கள் கண்ணீரில் நிறைந்தது...
தன்னை எதிர்க்கும் இவளது தைரியத்தை உருத்தெரியாமல் அழிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அவள் கூந்தலை பிடித்து எங்கோ இழுத்து சென்றாள் அருளவர்தினி... இறுதியில் ஏதோ சிறைசாலையை திறந்து அதில் நித்யாவை தள்ளி விட... நித்யா கீழே விழும் முன் அங்கிருந்த யாரோ ஒருவர் அவளை தாங்க..
அருளவர்தினி : அவனது உயிர் இவ்வையகத்தில் ஜனிக்கவில்லை பேதையே... உம் மூவரையும் இன்னும் சில திங்களில் பயிற்று வித்திடுவோம்... பின் இந்த அகில ஆகால பிரம்மாண்ட ஞாலம் எங்கள் கரத்தில்... என இடி போல் சிரிக்க... வெகுண்டெழுந்த நித்யா அவளுக்கு நெருக்கு நேர் நின்று கொண்டு கத்தினாள்....
நித்யா : அது நிச்சயம் நிகழாது ... உம் ஆசை என்றும் ஈடேராது... எம் இறுதி மூச்சு இவ்வுடலில் உள்ள வரை யான் ஆணித்தரமாய் நம்புவேன் எம் ஆரித் என்னை நாடி வருவார்... அதை நீரும் காணத்தான் போகிறாய்...
அருளவர்தினி : மூளையறிவற்றவளே... உம் ஆரித் பிறப்பெடுக்கவே இல்லையடி... ஏன் செவி மடுக்க மறுக்கிறாய்... நீ காணுவது நிராசையாகிடும் கனவு...
" இது அர்த்தமற்ற வாக்கு... இம்மூவரின் நினைவுகளை தற்போது இவர்கள் இழந்திருக்கலாம்... இருப்பின்... இவ்வையகம் அவர்களை மறக்கவில்லை.. உங்கள் அழிவு முடிவு பெற போவது நிச்சயம் அவர்களின் முன்னிலையினில் தான் என்பதை மறவீரா... எந்நினைவுகளும் இல்லாமல் அவர்களை நம்பும் இம்மூன்றின உயிர்களுக்காய் நிச்சயம் அம்மூன்று மணாளன்கள் இவ்விடம் நோக்கி படையெடுப்பர்... அது சாத்தியமற்றதென நீர் எண்ணலாம்... அவர்கள் பிறப்பெடுக்கவில்லை என நீர் அறிந்திருக்கலாம்... ஆனால்.... இன்னமும் அது உறுதியளிக்க படவில்லை ... " என்ற குரலை கேட்டு அருளவர்தினி எச்சிறையில் நித்யாவை தள்ளினோமென சுற்றி பார்க்க... அவள் அதிர்ச்சியை பொய்யாக்காது தடியுடன் முகம் சுருங்க கூனிய உடலுடன் நடந்து வந்தது சாட்சாத் நம் வளரி பாட்டியே தான்...
அவரை கண்ட நித்யாவின் புருவங்கள் இரண்டும் யோசனையாய் சுருங்க... பதற்றமடைந்த அருளவர்தினி நித்யாவை அச்சிறையிலிருந்து வெளியே இழுத்து சென்று வேறொரு சிறையில் தள்ளி பூட்டினாள்...
தன் சிறையை கடக்க போனவளின் காதுகளை நன்கு அடையுமளவு உயர்ந்த குரலில் கத்தினார் வளரி பாட்டி...
வளரி பாட்டி : நினைவினில் கொள் அருளா... இது முடிவல்ல... ஆரம்பம்... நீர் மடிந்ததாய் எண்ணுபவர்கள் எழ போகும் விகார தருணம்... இதுவே .... இது உலகத்தின் அதிசய மூவரினது விஸ்வரூப பௌர்ணமி தினம்... என கத்த....
அருளவர்தினி : உளறாதே கூறுகெட்ட கிழவியே... இப்பௌர்ணமி நிகழ்வதற்கு நூரில் ஒரு சகிதமும் வாய்ப்பல்ல... அப்பௌர்ணமி தினம் இவ்வுலகின் அபார சக்தி படைத்த முக்கோவன்களோ... அல்ல மூன்றிரட்ச்சகன்களோ உயிருடன் இருந்தாலே அவர்கள் வாழ்வில் சில முறை நிகழும்... இவ்விரண்டு மூன்றின அபார சக்திகளும் இல்லாதபோது எப்படி அப்பௌர்ணமி நிகழும்... என ஆக்ரோஷமாய் கத்த...
அந்த நேரம் நித்யாவை தள்ளிய சிறையின் கதவு படபடவென ஆட... அதன் கிரீச்சிடும் சத்தத்தில் அருளவர்தினி கோவமாய் அப்புறம் திரும்ப... கதவின் பின் நிறிருந்தவள் அதை ஒரு முறை தள்ள.. கதவு உடைந்து கீழே விழுந்தது...
வெள்ளையும் நீலமும் கலந்த உடையில் மென்மையான கண்களில் கோபம் ஒளிர கம்பீரமாய் வெளி வந்தாள் ஆருன்யகவி...
அவள் பின் வெள்ளையும் சாம்பலும் கலந்த உடையில் நித்யாவை கை தாங்களாய் அழைத்து கொண்டு நிமிர்த்தலான நடையுடன் வந்தாள் அதித்திக்கா...
மூவரினது வதனங்களும் என்றுமில்லாமல் வெற்றி ஈட்ட போகும் மகிழ்ச்சியில் உள்ளதாய் மிளிர...
ஆருன்யா : சற்று எங்கள் மதியினால் மிளிரும் உலகினை பார்வையிடு சூனியக்காரியே... என கம்பீரமாய் கூற... தனிச்சையாகவே அங்கிருந்த சிறு ஜன்னல் புறம் திரும்பிய அருளவர்தினியின் முகம் அதிர்ச்சியில் வெளிர.... இறுவது வருடங்கள் பின் முதல் முறையாக உடல் பயத்தில் நடுங்க... இதழ் வெடவெடக்க...நடுநடுங்கி நின்றாள் அவள்....
அதே நேரம் இருளினிடையில் மூன்று கண்கள் ஒரே நேரத்தில் திறக்க பட... வீட்டின் பால்கெனியில் விண்ணிற்கு நேராக சிகப்பு நிற பளபளப்பான கண்களுடன் சித்ரனும்... தன் வீட்டின் பால்கெனியில் விண்ணை வெறித்து கொண்டு நீல நிற பளபளப்பான கண்களுடன் ருத்ராக்ஷும்... அந்த விடுதியில் அவனது அறை பால்கெனியில் வெள்ளை நிறமும் சாம்பல் நிறமும் கலந்த பளபளப்பான கண்களுடன் ஆதியன்த்தும் ஒரே நேரத்தில் நிலவை வெறித்து கொண்டு நின்றனர்...
அவர்களினது கண்கள் வழி ஒளிர்ந்த நிறங்களில் கருப்பு மேகங்களினிடையே மறைந்திருந்த உலகின் நிலவு வெளி வந்தது....
மொட்டை மாடியில் இன்றாவது அந்த அதிசயம் நடக்குமா என நடக்காதென தெரிந்தும் விண்ணையே வெறித்து கொண்டிருந்த முதல் அணி நாயகன்களை கண்டு பொய் புன்னகையுடன் அவர்களருகில் வந்தமர்ந்தனர் நம் முதலணி நாயகிகள்...
மது : என்ன பாத்துக்குட்டு இருக்கீங்க...
சரண் : இன்னைக்கு விஸ்வரூப பௌர்ணமி தினம் மதுமா... இதே நாள்ள தா இறுவத்தியெட்டு வருஷம் முன்னாடி பௌர்ணமி நிலா வந்துச்சு... கண்களில் அந்த நினைவுடன் கூற...
கயல் : எந்த மாரி இருக்கும் சித்தா அந்த நிலா.. என இவள் பவியின் மடியில் தலை வைத்து படுத்தவாறு கேட்க...
இவள் இருப்பதையும் இவள் அனைத்தையும் மறந்ததையும் பின்னே நினைவு கூர்ந்த நாயகன்களுக்கு தாங்கள் நிலை தடுமாறியதை உணர்ந்தனர்...
வர்ஷி : எப்பவும் போல தான் டா மா இருக்கும்... அதுக்கு ஒன்னும் அவ்ளோ ஸ்பெஷல் இல்ல... என ஏதோ சமாளிக்க...
கயல் : ஹோ சரி சித்தி...
முகில் : நீ தூங்கலையா தங்கம்...
கயல் : தூக்கம் வரலையே மாம்ஸ்...
ரனீஷ் : அப்போ நாங்க வேணா பாட்டு பாடட்டுமா...
வீனா : ஹையோ ஈண ஸ்வரங்களும் தற்கொலை பன்னிக்கும் என காதை மூடியவாறு கூற...
ரவி : உனக்கு எங்க குரல் வளத்த பாத்து போறாமை டி...
நிரு : ம்க்கும் வந்துட்டாளும்... என செல்லமாய் இவளும் நொடித்து கொள்ள...
கயல் : அய்யைய்ய... எப்போ பாரு சின்ன புள்ள மாரி வம்பளத்துட்டே இருக்க வேண்டியது... என புலம்பி கொண்டே எதற்சையாய் வாணத்தை பார்த்தவளின் அழகான கயல்விழிகள் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் விரிந்தது...
வீர் : என்னாச்சு கயல் குட்டி... ஏன் கண்ணு ஏழு மலைக்கு தாவுது... என கேலியாய் கேட்க...
கயல் : மேல பாத்துட்டு பேசு சிச்சா... என சத்தம் போட... இவர்களும் மேல என்ன இருக்கு என்ற கேள்வியுடன் விண்ணை அளந்து நிலவை கண்டதும் திடுக்கிட்டு உறைந்தனர்....
ஃப்லைட்டில் வந்து கொண்டிருந்த அனு திவ்யா ப்ரியா இன்றைய நாளை நினைத்து கவலையாய் விண்ணை வெறித்து கொண்டிருந்தனர்...
ஜன்னலருகில் அமர்ந்திருந்த ப்ரியா எதற்சையாய் எதையோ கண்டு... கண்களில் கசிந்த இரு துளி கண்ணீருடன் ... விழிகள் அதிர்ச்சியில் அகல விரிந்திட... அருகிலிருந்த சகோதரிகளை தட்டி தன் புறம் திருப்பினாள்...
விண்ணை நோக்கிய சகோதரிகள் மூவரின் கண்களும் பல வருடம் களித்து சந்தோஷத்தில் சிரித்தாலும் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது....
கணவன்களான கோவன்கள் உயிருன் இல்லாத போது உலகிலே அபார சக்தி படைத்த மூவரின் சக்திகளினால் அந்த நிலவு ஒளிருவதை காண இயலாதென்ற கவலையுடன் வந்தவர்களின் கவலையை போக்கும் விதமாய்... இத்துனை வருடங்களில்லது முதல் முறையாய் அதீத செம்மை நீலம் வென்மை கலந்த நிறத்தில் அழகே போறாமை கொள்ளும் பேரழகில் சிவப்பு நீலம் மற்றும் வெள்ளை நிறம் கலந்து அவ்வுலகே அதிசயத்தில் வியந்திட ஒளிர்ந்தது முழு நிலவு....
மரணம் தொடரும்...
ஹாய் இதயங்களே.... இந்த கதைக்கு ஓட்டிங் அதிகமா இருந்ததால தான் இதையே எழுதீட்டேன்...இன்னைக்கு நைட் காலம் கதைக்கு யூடி குடுத்துர்ரேன் டோன்ட் வர்ரி... அதுலையும் அக்ஷன் கொண்டு வரலாம்னு இருக்கேன்... போரிங்கா போற மாரி இருக்கு... இது இப்போ தான ஆரம்ச்சிருக்கு... போக போக பாத்துக்கலாம்...அப்ரம் லேட்டு லேட்டா இதுக்கு யூடி குடுக்குறதால தான் பெரிய யூடி குடுக்குறேன்... ரெகுலர் யூடி குடுக்கும் போது இவ்ளோ பெருசாலாம் எழுத மாட்டேன்... இப்பவே சொல்லீருடுரேன்.... நைட்டே நல்லா தூங்கீட்டீங்கன்னா மதியம் இன்னும் நல்லா தூங்குங்க...இப்போ எந்நிரிச்சிடுங்க.. குட் மார்னிங் டாட்டா...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro