Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

48

" உங்க பிரச்சினைதான் என்ன அத்தை. ஒரு குட்டி பொண்ண இப்படி நீங்க கொடுமை பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா எங்கம்மா கூடவே நான் போய் இருப்பேன். உங்களுக்கு எங்கம்மா எவ்வளவோ பரவாயில்ல" என்று தன்னை விடிகாலையில் எழுப்பும் ரூபினியை பார்த்து ரம்யா சலித்துக்கொண்டால். சிவாவுக்கு லாப்டாப் அவசரமாக தேவை என்பதை கூற மீண்டும் காண்டாகியவள்,

" இன்னைக்கு அவன் என்கையால சாக போறான். இங்க ஒரு கொலை நடக்கப்போகுது" என்று தன் பக்கத்தில் படுத்திருந்த பார்வதிக்கு ஒரு உதை விட்டால். " நான் இங்க காதுகிளிய கத்துறேன். நீ ரொம்ப சுகமா தூங்குறியா. முதல் மர்டர் அவன், அடுத்த மர்டர் நீதாண்டி. ஒரு கொலை செஞ்சாலும் பத்து கொலை செஞ்சாலும் ஒரே தண்டனைதான்" என்றவள் சிவாவின் அறைக்குள் செல்ல அவன் சாந்தமாக ரூபினி போட்டு கொடுத்த காபியை குடித்துக்கொண்டிருந்தவன், ரம்யாவை கண்டதும் உடனே எழுந்து அவள் கைபிடித்து தனது கட்டிலில் அமரவைத்தான்.

" பார்வதி சித்தப்பாவோட சொந்த பொண்ணு இல்லையாம். ரூபினி சித்தியோட ஃப்ரெண்ட் பொண்ணாம்" என்று கூற அவளுக்கு புரிந்தது இவன் ஏன் காலையிலேயே லாப்டாப் கேட்டான்னு.

" சோ உனக்கு லாப்டாப் தேவையில்ல. இந்த தகவல எனக்கு சொல்லனும் அதானே. ஏண்டா என் உயிர வாங்குற. இதுக்கு நீ பேசாம கனடாவுலேயே இருந்திருக்கலாமே" என்று சலித்துக்கொண்டால்.

" இங்க பாரு ரம்யா, எனக்கு பார்வதிய பிடிச்சிருக்கு. ஆனா எனக்கு இப்போதான் இருபது வயசு. இப்போ போய் காதல் கல்யாணம்னு என் வீட்டுல பேச முடியாது. நீதான் அவ மனசுல யாரும் இருக்காங்களான்னு கேட்டு சொல்லனும்" என்று கூற அவள் அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தால்.

" என்ன கண்டதும் காதலா. லூசாடா நீ. எப்படி பார்த்தாலும் அவ உனக்கு தங்கச்சி முறை வேணும்" என்று கூற அவளை அமைதியாகும் படி சிவா கூறினான். " ஜஸ்ட் சட் அப் சே. அவ ஒன்னும் எனக்கு தங்கச்சி இல்லை. சித்தப்பா கார்டியனா இருக்குற பொண்ணுங்களுக்கெல்லாம் என்னால அண்ணன் ஆக முடியாது. ரம்யா அம் சீரியஸ்" என்றான்.

" இங்க பாரு சிவா, முதல்ல ஒரு விசயத்த நல்ல புரிஞ்சிக்க. நீ இங்க வந்து இன்னும் முழுசா ஒரு நாள் கூட ஆகல்ல. அதுக்குள்ள வீட்டுல இருக்குற பொண்ணஇப்படி பார்க்குறது தப்பு. அவள பத்தி உனக்கென்ன தெரியும். ஜஸ்ட் பார்த்ததும் வர்றதுக்கு பேரு காதல் இல்லை. இட்ஸ் லஸ்ட். அத புரிஞ்சிக்க. லவ்வுக்கும் லஸ்ட்டுக்கும் வித்தியாசம் தெரியாம நடந்துக்காத. அவ உன் கூட ஒரு நாலு வார்த்தை பேசி இருப்பாலா. அதென்ன பார்த்ததும் காதல். அவ பார்க்க அழகா இருக்கா. அதுக்குன்னு உடனே லவ்னு சொல்லிடுவியா" என்று கேட்க சிவா அமைதியாக இருந்தான்.

" சிவா இந்த குடும்பம் ஒரு குட்டி குருவிக்கூடு மாதிரி அழகா இருக்கு. தயவு செஞ்சி அதை கலைச்சி விட்றாத. உன்ன கையெடுத்து கும்புட்டு கேட்குறேன்" என்று கூற அவளின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்தவன் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

" நீ இன்னைக்கே எங்க வீட்டுக்கு வர்ற. இல்லைன்னா இந்த விசயத்த எங்கம்மாகிட்ட சொல்ல வேண்டி வரும்" என்று கூற சிவா இப்போது கொஞ்சம் பயப்பட்டான். இந்த குடும்பத்திலேயே அவன் பயப்படும் ஒரே ஒரு நபர் ராதா மட்டும்தான். ராதாவிடம் மட்டுமே அன்புக்கு அன்பும் கண்டிப்புக்கு கண்டிப்பும் இருக்கும். அதனாலேயே அவனுக்கு ராதா என்றால் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை.

பத்து நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக நகர, சிவா ராதாவின் வீட்டுக்கு செல்லவில்லை. அவன் இனி இந்த வீட்டில் பார்வதிக்கு எந்த ஒரு தொல்லையும் கொடுக்க மாட்டேன் என்று ரம்யாவிடம் சத்தியம் செய்ய அவளும் எதுவும் கூறாமல் விட்டுவிட்டால். ஆனால் இந்த பத்து நாட்களில் சிவா, க்ரிஷ் குடும்பத்தில் ஒருவனாகிப்போனான். ஏன் பார்வதி கூட அவனிடம் இப்போது இயல்பாக பேசுகின்றால்.

ஒரு நாள் பார்வதியும் சிவாவும் கடைக்கு சில மலிகை பொருட்கள் வாங்க செல்ல வழியில் இரு ஜூஸ் ஸ்டாலை கண்டனர்.

" பார்வதி, எனக்கு ரொம்ப நாளா துரியன் பழ ஜூஸ் குடிக்கனும்னு ஆசை. ஆனா கனடாவுல நாங்க இருக்குற இடத்துல அது கிடைக்காது. இங்க குடிக்கலாம் வர்றியா" என்று கேட்க அவளும் சரி என்று ஆமோதித்தால். இருவரும் ஆளுக்கொரு ஜூஸ் ஆடர் செய்து காத்திருக்க சிவா பேச்சை ஆரம்பித்தான்.

" பார்வதி, நான் வந்த அன்னைக்கு என்மேல நீ ரொம்ப கோபத்துல இருந்த. அது ஏன்னு போக போக புரிஞ்சது. எங்கப்பா பண்ண வேலையால உனக்கு எங்க குடும்பத்து மேல கோபம். அந்த கோபத்த நீ என் மேலயும் காட்டிட்ட. ஆனா இப்போ சில நாளா என்கிட்ட இயல்பா பழகுற. ஆனா என்னால அப்படி உன்கூட பழக முடியல்ல" என்று கூற அவர்கள் ஆடர் செய்த ஜூஸ் வந்தது. அதை பருகிக்கொண்டே அவள் அவனை பார்க்க அவன் மேலும் பேச்சை தொடர்ந்தான்.

" எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. நீ யாரு என்ற உண்மையும் எனக்கு தெரியும். நோ உனக்கு இப்போதான் பதினெட்டு வயசுன்னு. கல்யாணம் பண்ணிக்கிற வயசில்லதான். ஆனா நீ பார்க்க ரொம்ப அழகா இருக்க. நீ காலேஜ் போனதும் எப்படியும் உனக்கு நிறைய ப்ரபோசல் வரும். அதுல நல்ல பையன் யாரையும் உனக்கு பிடிச்சி போகவும் வாய்ப்பிருக்கு. ஆனா என்னால உன்ன மிஸ் பண்ண முடியாது. இதை விட்டா என்னால என் மனசுல இருக்குறத உன்கிட்ட சொல்ல டைம் கிடைக்காது. ஏன்னா நாளைக்கு எங்கம்மாவும் அப்பாவும் வர்றாங்க. ஒரு வாரம் இங்க தங்குவாங்க. அதுக்கு அப்புறமா மறுபடி கனடா போயிடுவோம்" என்றான்.

பார்வதிக்கு இவன் இப்படி கேட்பான் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை. மனதுக்குள் வைத்திருக்காமல் இப்படி அவன் நேரடியாக கேட்டது பார்வதிக்கு பிடித்தே இருந்தது. ஆனால் அவளால் அவன் கூறிய விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் தோன்றியது. ஆனால் விடை ஒன்றுதான். அதுதான் " முடியாது".

" நீங்க என்ன சொல்லி கன்வின்ஸ் பண்ணாலும் சே நோ டு திஸ். எனக்கு உங்க அப்பாவ பிடிக்கவே பிடிக்காது. நீங்க அன்னைக்கு எங்க வீட்டுக்கு வந்தப்போ அட்லீஸ்ட் வாங்க என்றாச்சும் சொன்னேன். ஆனா உங்கப்பா வந்தா கண்டிப்பா நான் வரவேற்க கூட மாட்டேன். ஹேட் யுவர் டாட். என்னோட பதில் என்னவா இருக்கும்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அடுத்து இன்னொரு விசயத்த உங்களுக்கு தெளிவா சொல்றேன். என்னதான் பெரிய ப்ரின்ஸ் சார்மிங்க் வந்து என்ன ப்ரபோஸ் பண்ணாலும் நான் எங்க அப்பா, மீன் உங்க சித்தப்பா காட்டுற பையனத்தான் கட்டிக்குவேன்" என்றவள் மிகவும் கூலாக மீதமிருந்த ஜூஸை குடித்து முடித்தவள் " போகலாமா?" என்று கேட்டால்.

தன் தாய்க்கு கால் செய்து இங்கு நடந்தவற்றை கூற மீனாக்‌ஷிக்கு ஒரு கணம் தலையில் இடி விழுந்தது போல ஆகியது. இந்த காதலினால் அவர்களின் தலைமுறையினர் பட்ட கஷ்டங்கள் அவளுக்கு ஞாபகம் வந்தது. அதே கஷ்டம் தன் மகனும் பட போகின்றானே என்ற கவலை அவளுக்கு. பார்வதி பற்றி சிவா கூறியதில் இருந்து அவள் எப்படியும் தன் மகனை ஏற்றுக்கொள்ள போவதில்ல என்பது புரிந்தது. சிவாவுடன் பேசியதை ஷக்தியிடம் கூற அவன் உடனே சிவாவுக்கு கால் செய்து பேசினான்.

" சொல்லுங்கப்பா எப்ப வர்றீங்க" என்று கேட்க ஷக்தி மறுமுனையில் அமைதியாக இருந்தான்.

" இங்க பாரு சிவா, உனக்கு அந்த பொண்ண பிடிச்சிருந்தா டோண்ட் மிஸ் ஹர். என்ன பண்ணியாச்சும் அந்த பொண்ண சம்மதிக்க வெச்சிடலாம். காதல்ல மட்டும் எப்பவுமே நம்ம தோத்துட கூடாதுடா" என்று கூற மறுமுனையில் சிவா மிகவும் தெளிவாக ஒரு பதில் கூறினான்.

" அப்பா வாழ்க்கையில வேணும்னா வெற்றி தோல்வி இருக்கும். ஆனால் காதல்ல மட்டும் அது இல்லப்பா. காதல்னாலே அது வெற்றிதான். காதல் என்பது மனசுக்கு சந்தோசத்த மட்டும்தான் கொடுக்கும். எனக்கு வந்தது காதலா ஈர்ப்பான்னு கூட தெரியல. ஆனா என்னோட ஆசைக்காக ஒரு பொண்ணோட விருப்பத்த நான் குழி தோண்டி புதைக்க விரும்பல்லப்பா. என்ன பொறுத்த வரைக்கும் காதல் தானா வரனும். சந்தர்ப்பத்த வெச்சி, கானர் பண்ணி எல்லாம் காதல வரவைக்க கூடாதுப்பா" என்றவன் க்ரிஷ்ஷின் வீட்டுக்கு அவர்கள் வந்தால் பார்வதியின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதையும் கூறாமல் இல்லை.

இரண்டு நாட்களின் பின்......

" பாரும்மா, யாரோ காலிங்க் பெல் அடிக்கிறாங்க யாருன்னு போய் பாரு" என்று ரூபினி கூற அவள் மனதுக்குள் ' அம்மா ஆல்வேஸ் ரைமிங்க் தான்' என நினைத்தவள் கதவை திறந்தாள். தன் முன் ஷக்தியும் மீனாக்‌ஷியும் நிற்க மீனாக்‌ஷியை பார்த்து " உள்ள வாங்க ஆண்டி" என்றவள் ஷக்தியை கூப்பிடாமல் உள்ளே செல்ல ஷக்தி வாசல் படியிலேயே நிற்பதை பார்த்தால்.

ஷக்தியை பார்த்து " உள்ள வாங்க அங்கிள்" என்றவள் அவர்கள் கையில் இருந்த டிராவலிங்க் பேக்குகளில் ஒன்றை அவள் எடுத்துக்கொண்டால்.

—-முற்றும்—-

முடிவுரை

கதையின் முடிவு புரிந்தவர்கள் இதை படிக்க வேண்டாம்.

தன் வீட்டுக்கு ஷக்தி வந்தால் அவனை உள்ளே வரும்படி கூட அழைக்க மாட்டேன் என்றவள் அவன் வந்து நின்றதும் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. ஒரு நாள் அவள் சிவாவை கூட ஏற்கலாம். ஏன் ஏற்காமல் கூட போகலாம். அது அவளின் மன ஓட்டத்தை பொறுத்தது.

ஷக்திக்கு க்ரிஷ் முன் தலை குனிவு வந்துவிட கூடாது என்று கனடாவுக்கு சென்ற மீனாக்‌ஷி, தன் மகனின் ஆசைக்காக இந்தியாவுக்கு வரவேண்டிய சூழ்நிலை. ஒரு தவறுக்கான தண்டனை அல்லது குற்ற உணர்ச்சியில் இருந்து நாம் விலகி போனாலும் அந்த தவறு நம் சந்ததி வழியிலாவது நம்மை பாதிக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனாலாயே என்னதான் பதினெட்டு வருடங்கள் இவர்கள் கனடாவில இருந்தாலும் சிவாவின் முதல் இந்திய பயணமே ஷக்தியை மீண்டும் ஒரு சங்கடத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

ரூபினி... என்னதான் குடும்ப வாழ்க்கைக்குள் வந்தாலும் அவளால் ஒரு சில பயங்களில் இருந்து அவளால் வெளிவர முடியவில்லை. நாம் செய்யும் காரியங்களின் தாக்கம் அப்படி. வெறும் விலைமகளாகவே மட்டும் இருந்திருந்தால் பழைய கெத்தான் ரூபினியாக இருந்திருப்பாள். ஆனால் மனைவி, குடும்பம் என்று வந்த பின் அவளால் அப்படி இருக்க முடியவில்லை.

சுரேஷ்... செய்த தவறுக்கு அவனுக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை மன்னிப்பு. யாருக்கும் அவன் செய்த தவறை சொல்லிக்காட்டாததே மிகப்பெரிய தண்டனை அவனுக்கு. இன்று வரை அவன் க்ரிஷ் முன் தோற்றுப்போன ஒருவனாகவே இருக்கின்றான். தான் செய்த தவறுக்கு பரிகாரமாக அவன் பார்வதி மீது அதிக அன்பு காட்டுகின்றான்.

க்ரிஷ்... ஒரு பெண்ணிடம் எப்படி பழக வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம். காதலியாக இருந்தால் கூட அவளிடம் விளையாட்டுக்கு கூட தவறாக நடந்துகொள்ள கூடாது என்பதற்கான உதாரணம் இவன்.

மீனாக்‌ஷி... ஒரு அழகான காதல் மனைவி. காதலிக்கப்பட வேண்டிய தேவதை. மீனாக்‌ஷி போன்ற ஒரு பெண்ணுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த கதையே அவளுக்காகத்தான். அவள்தான் இந்த கதையின் நாயகி. நம் எல்லோரின் "சிந்தையிலும் தாவிய பூங்கிளி"

------------------------------------------------------------------------


ஹாய் வட்டீஸ்,

இந்த கதைதான் எனக்கு மிகவும் ஆட்டம் காட்டிய கதை. கடைசி மூன்று கதைகளுக்கும் முடிவு எப்படி கொடுப்பது என்பதில் நான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன் என்றால் மிகையில்லை. அதுவும் இந்த கதையில் அது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. காரணம் ரூபினி.

ஆனால் மற்ற கதைகளில் போல இந்த கதையில் லாஜிக் மிஸ்டேக்ஸ், எழுத்து பிழைகள், பெயர் பிழைகள் எல்லாம் நான் பார்ப்பதே இல்லை. லீவு கிடைக்கும் நேரம் எல்லாம் என் இஷ்டத்துக்கும் எழுதுவேன். ஆனால் என் கதையில் எடிட்டர் Maayaadhi அவர்கள்தான். கதை ஆரம்பத்தில் இருந்து கடைசி வரி வரை அவரின் பங்களிப்பு இருந்தது. நாலாவது அத்தியாயத்துக்கும் நாற்பத்தி நாலாவது அத்தியாயத்துக்கும் இடையில் இருக்கும் குட்டி குட்டி லாஜிக் மிஸ்டேக் எல்லாம் எப்படித்தான் ஞாபகம் வைத்திருந்தாரோ தெரியவில்லை. அப்டேட் எழுதியதும் முதலில் அவரிடம் அனுப்பிவிடுவேன். அவர் பிடித்து திருப்தியாக இருப்பதாக கூறினால் மட்டுமே அப்டேட் பதிவிடும் அளவுக்கு இந்த கதையில் அவரின் உதவி இருந்தது.

அடுத்து எனக்கு சைக்கோலோஜி ரீதியாக ரூபினி என்ன நினைப்பால் என்பது பற்றி அறிய உதவிய டாக்டர் sengodi அவர்களுக்கும் நன்றி. அவரின் வேலைகளுக்கு மத்தியிலும் எனக்கும் நேரம் ஒதுக்கி, என் கதையில் கதாபாத்திரத்தை அழகாக மாற்ற உதவினார்.

அடுத்து vaanika-nawin அக்கா. கடைசி சில அத்தியாயங்கள் நான் எழுத உதவிய நல்லுள்ளம் கொண்ட ஒரு ஜீவன். அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

இந்த கதையில் எனக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு உரிமை மாயாதி அவர்களுக்கும் உண்டு என்று கூறிக்கொண்டு....

கடவுள் உதவியுடன் உயிருடன் இருந்தால்,அடுத்த கதைக்கு இன்னும் நான்கு மாதங்கள் ஆகும் என்பதையும் தெரிவித்து விடைபெறுகின்றேன்.

எல்லா கதைகளின் போதும் யாரும் அடிமைகள் எனக்கு சிக்குவிடுவார்கள். இதில் மாட்டியது மாயாதி. ஐஸ்ட் ஜோக் மக்களே. ஆனா இதுல காமெடி என்னன்னா வாலண்டியரா ரெண்டு பேரு அடுத்த கதைக்கு மாட்டியிருக்காங்க. பாவம் அந்த இரண்டு நல்ல உள்ளங்களும்.

குட் பாய் .. for some time. Lets see after some Break.

இப்படிக்கு....

-- மர்யம், ஹிக்மாவின் தந்தை--( முதல் கதை எழுத ஆரம்பித்த போது மர்யம் மட்டுமே. அப்போது அவருக்கு நாலு மாதம். இப்போது 4 வயது.. பிரமிப்பாக உள்ளது)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro