Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💟 ஜீவாமிர்தம் 73

அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்கு தன் மனைவியை கன்னம் சுரண்டி தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.

"ம்ப்ச், தூக்கம் வருது நந்து.....!" என்று சொல்லி விட்டு அவன் இடுப்பை வளைத்து பிடித்துக் கொண்டவளிடம்,

"அம்முலு இந்த மதர்ஸ் டே, பாதர்ஸ் டே, ப்ரெண்ட்ஷிப் டே எல்லாம் சொல்றாங்களே..... அத மாதிரி இன்னிக்கு உனக்கு மட்டும் ஸர்ப்ரைஸ் டே! ஸர்ப்ரைஸ் நம்பர் ஒன் என்ன தெரியுமா? அஜுவும், மீருவும், சரஸ் பாட்டியும் இனிமே மலையிலயே நம்ம கூடத் தான் இருக்கப் போறாங்க. ஆனா நம்ம வீட்ல இல்ல, ஜஸ்ட் ஒரு இருபது நிமிஷ ட்ரைவ்ல இருக்கிற ஒரு வீட்ல..... இனிமே எப்போ நினைச்சாலும் அத்தை கையால பப்பு புவா சாப்பிட கிளம்பிடலாம். ஹாப்பி தானே! பீ ரெடி டூ ஹாவ் யுவர் நெக்ஸ்ட் ஸர்ப்ரைஸ்..... மேக்ஸிமம் ட்வென்டி மினிட்ஸ் தான். அதுக்குள்ள கீழே இறங்கி வர்ற!" என்று சொல்லி விட்டு அவளுக்கு ஒரு அவசர முத்தத்தை தந்து விட்டு சென்று விட்டான் ஜீவானந்தன்.

அரை உறக்கத்தில் தலையை பிடித்துக் கொண்டு எழுந்த கவிப்ரியாவிற்கு ஜீவானந்தனின் பேச்சுக்கள் அவள் மூளையில் சென்று பதிந்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் தயாராகி கீழே இறங்கி வந்தாள். தானே வலிய சென்று சம்மதம் சொன்ன பிறகும் தன் காதலை காக்க எண்ணி கண்ணியம் காத்துக் கொண்டிருப்பவனிடம் முன்பெல்லாம் இல்லாத அளவில் காதல் மலர்ந்தது.

இப்பொழுதெல்லாம் மற்ற எவரது வார்த்தைகளும் சரியாக காதில் கூட விழவில்லை கவிப்ரியாவிற்கு. அம்முலு அம்முலு அம்முலு என்று அவனது குழையும் உச்சரிப்பு மட்டுமே அவள் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டு இருக்கிறது. இவ்வளவு வருடங்கள் சேர்த்து வைத்திருந்த அவள் மீதான அவனது அன்பையும் அவர்கள் ஆரம்பித்து வைத்த காதல் கடித விளையாட்டு கவிப்ரியாவிற்கு புரிய வைத்தது. கவிதை எழுதத் தெரியாத கவியின் கணவன் கவியின் செயல்களையே கவிதைகளாக்கி ரசித்து, அவளையும் அந்த வரிகளை ரசிக்க வைத்து கொண்டு இருந்தான்.

"இன்னும் நீ என்னென்னவெல்லாம் நீ செய்யப் போறன்னு பார்க்க எனக்கு ரொம்ப ஆவலா இருக்குடா ஹல்க்!" என்று மனதிற்குள் நினைத்த படி புன்னகையுடன் வந்தவள் முன்னால் ஒரு பெரிய மலர்ச்செண்டு நீட்டப்பட்டது ஆர்யமாலாவால்.

"மா.... மா, மாலா நீங்க எங்க இங்க? எதுக்கு பொக்கே.... இன்னிக்கு என்ன ஸ்பெஷல்..... வீட்ல யாருக்கும் பர்த்டே
கூட இல்லையே?" என்று கேட்டு பூச்செண்டை வாங்கிக் கொண்டு கீழே வைத்தவளிடம் வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

விவேக் அவள் முன் வந்து நின்று, "இன்னிக்கு ஒரு பர்த்டே தான் கவி.... யாருக்கு என்னன்னு இந்த ஸ்க்ரீன்ல பாரு!" என்று சொல்லி விட்டு ஒரு வீடியோவை அவளுக்காக போட்டு விட்டு சென்று ஓர் ஓரத்தில் நின்று கொண்டார்.

ஜஸ்ட் ஃபார் மை லேடி கட்டிடம் வாங்கியதில் இருந்து, அதில் செய்த இண்ட்டீரியர் வொர்க், சென்னையில் அவளிலிருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்த உடைகள், அந்த ஷாப்பை அலங்கரித்த வேலைகள், புதுப் பொலிவுடன் நேற்று மாலை அனைத்து வேலைகளையும் முடித்த பிறகு கடையின் தோற்றம் என அனைத்தும் வீடியோவில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கண்களை இறுக மூடித் திறந்து தன்னை சமனப்படுத்திக் கொண்டு இருந்தவளின் அருகில் வந்து, "ஆர்யமாலாவை உன்னோட வொர்க் பண்ண சென்னையில இருந்து இங்க கூட்டிட்டு வந்தது செகண்ட் ஸர்ப்ரைஸ்! என் பொண்டாட்டி இதத்தான் ஆசைப்படுறா, அத செஞ்சு குடுங்கன்னு எங்ககிட்ட கேட்டு உனக்கு பிடிச்சத உனக்கு தெரியாமலே உனக்காக குடுத்தது தேர்ட் ஸர்ப்ரைஸ்..... ஷாப்புக்கு போகலாமாடா ஏஞ்சல்?" என்று கேட்ட தன் மாமனிடம் பேச்சே வராமல் திகைத்துப் போய் தன் மாமனை இறுக்கமாக பற்றிக் கொண்டு தலையை மட்டும் அசைத்தாள் கவிப்ரியா.

"நிர்மலா ஏம்மா இந்த பங்ஷன்க்கு எல்லாரையும் கூப்பிடல......?" என்று கேட்ட அர்ஜுனிடம்,

"இல்லண்ணா இது கவிம்மாவுக்கு நம்ம நந்து பர்சனலா கிப்ட் பண்ண நினைக்கிற விஷயம், அவங்களுக்குள்ள இன்னிக்கு கொஞ்சம் எமோஷனலா நிறைய விஷயம் நடக்கலாம். அதனால தான் நம்ம மட்டும் போதும்ன்னு நினைச்சேன். ஆனா நீங்க சொன்ன ஸ்பெஷல் கெஸ்ட்டை மட்டும் மறக்காம கூப்பிட்டுட்டேன் அண்ணா!" என்று சொன்ன நிர்மலாவை அழைத்துக் கொண்டு அர்ஜூனும் மற்ற அனைவரும் நிர்மலாவின் வார்த்தைகளை ஆமோதித்து விட்டு கவிப்ரியாவின் கனவுப் பட்டறையின் திறப்பு விழாவிற்கு சென்றனர்.

"டேய் பாகி நம்ம சீஃப் கெஸ்ட் எங்கடா....?" என்று கேட்ட தன் மாமனிடம்,

"டக்குனு வந்துட்டா அவர் பேரு சீஃப் கெஸ்ட் கிடையாதாம்.... பத்து நிமிஷத்துல வர்றேன்னு மெசேஜ் பண்ணியிருக்காரு!" என்று சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே சென்றான் பார்கவ்.

கால் மணி நேரம் கழித்து அவனது ஆர் ஆரில் இருந்து கெத்தாக இறங்கியவன் தன் மனைவியின் பரிசான ஃப்ளேஸரில் ஆணழகனாக வந்து நின்றான்.

அவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்த கவிப்ரியாவின் சிரிப்பு சற்று விரிவடைந்ததும் அவளை மிகவும் நெருங்கி வந்து, "இந்த அவுட்பிட்ல என்னை பார்த்தது உனக்கு நாலாவது ஸர்ப்ரைஸ் போல; ரொம்ப கண்ணு வைக்காத மூக்கி, மச்சானுக்கு கொஞ்சம் கலர் கூடிடப் போகுது!" என்று சொல்லி விட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்று கதவின் குறுக்கே கட்டியிருந்த இரு முடிச்சுகளை கைகளால் அவிழ்த்து விட்டான் ஜீவானந்தன். பெரியவர்கள் அனைவரும் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பார்கவ், ராகவ், பவின், ஷைலு, இனியா, ராசு இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆளாளுக்கு ஒரு பர்த்டே பாப்பர்ஸை வெடிக்க அந்த இடமே வண்ணச் சிதறல்களுடன் அழகாக மாறியது. கவியின் கண்களில் அந்த துகள்கள் படாமல் இருக்க அவள் கண்களை அவன் கைகளால் மூடியவனை அவளறியமால் சற்று அருகில் வந்து அணைத்திருந்தாள் கவிப்ரியா.

அவள் அணைப்பில் இருந்து விலகாமல் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவன், "மீரு, கீது, இனியா, ஷைலு, பத்மா பாட்டி நீங்க எல்லாரும் போய் விளக்கை ஏத்தி வைங்க! சரஸ் பாட்டி, பிக் பாய், பவின் நீங்க மூணு பேரும் போய் உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது ட்ரெஸ் எடுத்துட்டு கேஸ் கவுண்ட்டருக்கு வாங்க. தாத்தா நீங்க கவுண்ட்டர்ல உட்கார்ந்து பர்ஸ்ட் சேல ஸ்டார்ட் பண்ணிக் குடுங்க. விவேக் சித்தப்பா நீங்க போய் நம்ம பர்ஸ்ட் அபிஷியல் கஸ்டமர் மிஸ் வசுந்தராவை உள்ள இன்வைட் பண்ணுங்க. டேய் ராகவ் நீயும் கூடப் போடா!" என்று சொல்லி விட்டு கவிக்கு ஒரு இருக்கையை நகர்த்தி கொடுத்து விட்டு அவன் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

"யோவ் மாமா என்னய்யா இந்த எருமை எல்லாருக்கும் ஒரு வேலையை குடுத்துட்டு நம்ம நாலு பேரையும் மட்டும் ஒரு ஓரமா நிப்பாட்டிடுச்சு...... எந்தங்கச்சியோட பொட்டீக்ல இவ்வளவு தான் என்னோட மரியாதையா? நிர்மலா அத்தை இதெல்லாம் நீ என்னன்னு கேக்க மாட்டியா?" என்று கேட்டுக் கொண்டிருந்தவனை ஜீவாவின் உரத்த குரல் அழைத்தது.

"நண்பேன்டா இந்தா கூப்பிட்டுச்சு என் தங்கம்; இதோ வந்துட்டேன்டா ஜீவா!" என்று சொல்லி விட்டு தன் நண்பனிடம் புன்னகையுடன் போய் நின்ற பார்கவிடம்,

"எல்லாரும் வாங்குனதுக்கு தாத்தாட்ட பணம் குடுறா!" என்று கேட்டான் ஜீவானந்தன்.

"ஏய் லூசுப்பையா..... அவங்க வாங்குனதுக்கு நான் எதுக்குடா பணம் குடுக்கணும்?" என்று கேட்ட தன் நண்பனை திரும்பி பார்த்தவன்,

"ஏதோ எந்தங்கச்சி பொட்டீக்னு இப்பத்தான் உன் சத்தம் வந்துச்சு, அதான் வீட்டு மாப்பிள்ளைங்கள பே பண்ண சொன்னா நல்லாயிருக்காது. அதனால நீயே குடுத்துடு!" என்று சொல்லி விட்டு அபிநயசரஸ்வதியிடம் போய் நின்றான் ஜீவானந்தன்.

"யார் யார் என்ன வொர்க் பண்ணனும்னு முன்னாடியே அசைன் பண்ணி குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் அபி! ஒரு தடவ ஷாப்ல எல்லாம் பார்த்துட்டு பெட்டர்மெண்ட் ஏதாவது இருந்தா உன் ஒப்பீனியன் சொல்லும்மா!" என்றான். அவள் சிறு சிரிப்புடன் அவனிடம் தலையசைத்து விட்டு சென்றாள்.

"ஹாய் அண்ணி!" என்ற அழைப்பில் திரும்பி பார்த்த கவிப்ரியா சிறு சிரிப்புடன், "இங்க பாரும்மா வசுந்தரா, இந்தப் பையன நீ கல்யாணம் பண்ணினதுக்கப்புறம் என்னை நீ அண்ணின்னு கூப்பிட்டா நல்லா இருக்கும். அது வரைக்கும் அக்கான்னு கூப்பிடும்மா! தலைவர் உங்கிட்ட ஸாரி கேட்டாரா?" என்று கேட்ட கவியிடம் இல்லையென்று தலை அசைத்து விட்டு,

"யார் நம்ம கிட்ட வந்து பேசினா என்ன? பேசாம இருந்தா நமக்கென்ன கவி அக்கா...... எனக்கு விதவிதமா காஸ்ட்யூம்ஸ் போடுறது ரொம்ப பிடிக்கும். உங்க பொட்டீக்ல நிறைய பர்சேஸ் பண்ணி உங்க பிரிமியர் கஸ்டமர் ஆனா எனக்கு நீங்க எவ்வளவு டிஸ்கவுண்ட் குடுப்பீங்க......?" என்று கேட்டவளை ஏற இறங்க பார்த்து விட்டு,

"கவி இவளோட பில்லை நான் செட்டில் பண்றேன். என்னால இவ அவங்க வீட்ல திட்டு வாங்குனதுக்கு, அப்புறம் அடி வாங்குனதுக்கு காம்பன்ஷேஸனா இருக்கட்டும். என்ன வேணுமோ வாங்கிக்க சொல்லு......!" என்று கேட்டவனை தீப்பார்வை பார்த்த வசுந்தரா,

"ஹு ஆர் யூ மேன்!" என்று கேட்டு விட்டு உள்ளே சென்று விட்டாள்.

"பாரு கவி வேணும்னே ரிவென்ஜ் எடுக்குறா......!" என்று தன் அக்காவிடம் புகார் படித்தவனிடம்,

"சரிடா..... நீ செஞ்சது மட்டும் கரெக்டா? பின்னாடியே போய் கால்ல விழுந்து சமாதானம் பண்ணு, போ!" என்று சொன்ன தன் அக்காவிடம்,

"நான் அவ கால்ல விழுறதா? நெவர்! என்ன விளையாடுறியா நீ....... அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல!" என்று சொல்லி விட்டு வசுந்தராவின் பக்கம் செல்லலாம் என்று அவன் நினைத்துக் கொண்டு இருந்த போது பலராம் அவனை ஒரு அறைக்குள் தள்ளி கதவை வெளிப்புறம் அடைத்து விட்டு போய் விட்டார்.

"டாட் கதவை திறந்து விடுங்க, ப்ளீஸ் டாட்..... டோண்ட் மேக் ஃபன் ஆஃப் மீ, ஐ பெக் யூ டாட்! ஓப்பன் த டோர்!" என்று சொல்லி கதவை தட்டிக் கொண்டிருந்தவனை, "டோண்ட் ஷௌட் மூமூ! இட்ஸ் அனாயிங்! இவ்வளவு பெரிய மீசை வச்சிருக்க, ஆனா உனக்கு டிம் லைட்ல மூடியிருக்குற கதவுக்குள்ள தனியா இருக்கறதுன்னா ரொம்ப பயமாமே...... எதனால இந்த ஃபோபியா உனக்கு வந்தது மூமூ?" என்று கேட்ட வசுந்தராவை முறைத்த ராகவ் மனதிற்குள் "நல்ல வேளை; இவளும் உள்ள இருக்கா! கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம்!" என்று நினைத்தவாறு ஒரு பெருமூச்சுடன் அவளிடம்,

"மிஸ் வசுந்தரா இட்ஸ் ஜஸ்ட் அ ஃபியர், நாட் அட் ஆல் அ ஃபோபியா! காட் இட்..... பை த வே, சின்ன வயசுல உங்க அக்கா பீரோவை தள்ளி விட்டு அவ உடம்புல அடிபட்டு பாதி உடம்பு வெளியேயும் பாதி உடம்பு உள்ளயும் மாட்டிக்கிட்டு அவ கத்துறத பார்த்து டென்ஷன் ஆகியிருக்கியா நீ..... இல்ல நடந்த தப்புக்கு நீ தான் காரணம்னு யாராவது உன்னை ப்ளேம் பண்ணி அடி வாங்கியிருக்கியா? இதெல்லாம் யோசிச்சுப் பாரு, என்னோட ஃபீலிங் புரியும். உன்னை தப்பா பேசிட்டேன். தேவையில்லாம உங்க வீட்ல இருக்கிறவங்க உன்னை தப்பா நினைக்குறதுக்கும் காரணம் ஆகிட்டேன். ஐ'ம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி! உனக்கு எங்க பெரியப்பா ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்காங்க. என்ன தான் பேமிலி பிஸினஸ் இருந்தாலும் படிப்பை முடிக்காம இருக்கிறது ரொம்ப தப்பு..... வொர்க் ஹார்டு டூ க்ளியர் யுவர் எக்ஸாம்ஸ்!
இன்னும் த்ரீ ஃபோர் இயர்ஸ்க்கு அப்புறம் நீ கமிட்டடா இல்லாம இருந்தா அப்போ எல்லாத்தையும் பேசலாம். நான் நாளைக்கு உங்க வீட்ல வந்து எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்ணி அவங்கட்ட ஸாரி கேட்டுடுறேன்! இஸ் இட் ஓகே ஃபார் யூ?" என்று கேட்டவனிடம் தலையை இடமும் வலமுமாக அசைத்து விட்டு,

"என்னமோ மாசத்துல ஒரு நாள் ஷெட்யூல் போட்டு என்னை லவ் பண்ணுவேன்னு அங்கிள்ட்ட சொன்னியாமே, அதெல்லாம் எங்கிட்ட நீ சொல்லவேயில்ல.... உன் பிஸிக்கையோ, பெர்சனாலிட்டியையோ பார்த்து எனக்கு உன் மேல லவ் வரல. ஆக்சுவலி நான் இம்ப்ரஸ் ஆனது உன் பேச்சுல மயங்கி தான், இந்த வயசுல கூட அவரோட வொய்பை எவ்வளவு லவ்வோட பார்த்துக்குறார் இந்த ஓல்டுமேன்..... இவரை ஒரு தடவ மீட் பண்ணி ஹக் பண்ணி ஒரு கிஸ் குடுக்கணும்னு நினைச்சேன். நீ உன் பாட்டி மேல காட்டுன லவ்வை நான் ரெஸ்பெக்ட் பண்ணினேன். ஆனா உனக்கு என்னோட நியாபகமும் இல்ல, என்னோட கன்பெஷனை நீ சீரியஸாவும் எடுத்துக்கல, உன்னை மாதிரி மூஞ்சுறு மூஞ்சிய போய் எனக்கு ஏன்டா பிடிச்சது..... இடியட்! ஐ ஹேட் யூ!" என்று சொல்லி விட்டு சென்று கதவைத் தட்டியவளின் வயிற்றை பற்றி பின்புறம் இருந்து அணைத்துக் கொண்டான் ராகவ்.

"விடு மூமூ அடிச்சிடுவேன்! உன் மேல எனக்கு கோபம் கோபம் தான், அதனால சண்டை சண்டை தான்!" என்று சொன்னவளிடம் புன்னகையுடன்,

"ராஜேஷ்க்கு குடுக்கணும்னு நினைச்சியே ஒரு ஹக் அண்ட் கிஸ்..... அதை மட்டும் குடுத்துட்டு போ, ஏன்னா அது எனக்கு கிடைக்க வேண்டிய ரிவார்டு! அது எனக்கு வேணும்!" என்று கேட்டவனை பார்த்து கண்களில் சினத்துடன் திரும்பி அவன் சட்டையை பற்றியவளிடமிருந்து சற்று விலகி நின்று அவன் சட்டையை மீட்டுக் கொண்டான் ராகவ்.

அவள் வலது கைகளை தன் கையால் பற்றி அதில் இதழ் பதித்தவன், "நான் ஜெனடிக்ஸ்ல ஏதாவது புதுசா அச்சீவ் பண்ணனும். மன்த்லி டூ டைம்ஸ் இல்ல வேண்டாம், வீக்லி ஒன்ஸ் ம்ஹூம் டூ டேஸ் ஒன்ஸ் வீடியோ கால், சாட் இதெல்லாம் பண்ணிக்கலாம். வீட்ல தான் கண்றாவியா ஒரு நிக் நேமை வச்சுருக்காங்கன்னு பார்த்தா நீ வச்சுருக்கிற நிக் நேம் அத விட கண்றாவியா இருக்கு. பட் மூமூ கொஞ்சம் நல்லா இருக்கு. அதையே மெயின்டைன் பண்ணிக்க. நான் உன்ன எப்படி கூப்பிடுறது? தாரான்னு கூப்பிடட்டுமா? உனக்கு அந்த நேம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டவனிடம் சரியென்று தலையசைத்து விட்டு,

"எனக்கு ஈவெண்ட் ஆர்கனைசர் ஆகணும்னு ஆசையா இருக்கு மூமூ.... நீ என்னை உன் கூட சிங்கப்பூருக்கு கூட்டிட்டு போறியா?" என்று கேட்டவளிடம் புன்னகையுடன்,

"கண்டிப்பா கூட்டிட்டு போறேன், ஆனா இப்போ இல்ல, ஒழுங்கா டிகிரி முடிச்சு, உன்னோட ரெஸ்டாரெண்ட் தான் இந்த ஏரியாவுல பெஸ்ட்ன்னு ப்ரூவ் பண்ணி காட்டு! அதுக்கப்புறம் உன் ஆசைய கன்ஸிடர் பண்றதை பத்தி யோசிப்போம்!" என்று சொல்லி விட்டு கதவைத் தட்டியவன் திரும்பி அவளிடம் அசடு வழிந்தவாறு, "கதவை எப்போ திறந்து விட்டாங்கன்னு தெரியல, ஆனா இப்போ திறந்து தான்மா இருக்கு!" என்றான்.

"சரி நீ வெளியே போ..... நான் என்னோட காஸ்ட்யூம்ஸ் எல்லாம் பிட் ஆகுதான்னு ட்ரையல் பார்க்கணும். கவி அக்காட்ட நைன் தவுசண்ட் ருப்பீஸ் குடுத்துடு......!" என்றவளிடம் புன்னகையுடன் "அக்கா இல்ல அண்ணின்னு கூப்பிடு! ஒரு நாளைக்கே 9000 பர்ச்சேஸ் ஓவரா தெரியுது, ப்யூச்சர்ல கொஞ்சம் கம்மி பண்ணிக்க!" என்று அவளிடம் சொல்லி விட்டு வெளியே சென்றான் ராகவ்.

காலை உணவை முடித்து விட்டு அனைவரும் நிதானமாக அவரவர் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கவிப்ரியா அனைவரின் முன்பும் சென்று நடுநாயகமாக நின்று "உங்க எல்லார்ட்டயும் நிறைய பேசணும்....!" என்று கேட்டபடி இருந்தாள்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro