105
மறந்துவிடாதே
அதே
போல்
உன்னால்
மறுக்கவும்
முடியாது
யுத்தங்களால்
பயனடையப்போவது
யாருமே இல்லை
நானும் இல்லை
நீயும் இல்லை
மூன்றே மூன்று
துறைகளைத்தவிர
யுத்தகளத்தில்
உயிர்கள்பிரிய
ஊடகங்களும்
அரசியல்வாதிகளும்
தங்கள் துறையில்
மாவீரர்களாக
மிளிருகின்றனர்
இராணுவ வீரர்களின்
எண்ணிக்கைக்கு அமைய
யுத்த பொருட்கள் விநியோகிக்கும் விநியோகத்தர்கள்
தங்கள்
வங்கிக்கணக்குகளை
கோடிக்கணக்கில்
நிரப்பிக்கொள்கின்றனர்
எந்த
எதிர்பார்ப்பும்
இல்லாமலே
என்னிலும் உன்னிலும்
கூட சிறிது மாற்றங்கள்
ஆம்
நானும் நீயும்
வாய்ப்பேச்சளவு
போராளிகள்
உன்
நாட்டுக்காக
நீயும்
என்
சமூகத்துக்காக
நானும்
ஆனாலும்
வீரவசனம்
பேசும்
எம் இருவரின்
உறைகளிலும்
வாள் இல்லை
என்பது
எனக்கும்
உனக்கும்
மட்டும்
தெரிந்த
இரகசியம்!!!
SayNoToWar
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro