கண்கவர்ந்தவன் - 5
"பார்ரா நேத்து தானே உண்ண நடந்து பழக சொன்னேன் அதுக்குள்ள ரன்னிங் ரேசா" என அவன் கிண்டல் செய்யும் விதமாக கேட்க அவளுக்கோ உண்மையாகவே ஏதாவது சுவற்றில் முட்டி கொண்டால் என்ன என்ற முகத்தோடு அவனை பார்த்து ஒரு சங்கடம் கலந்த சிரிப்புடன் அவனிடம் பல்லை காட்டியவாறு,
“இல்ல...அ...அது... E...emergency” என அவளோ திணற அவனோ இதழின் ஒரு ஓரத்தில் நமட்டு சிரிப்புடன்…
“என்ன... எது.. எது.. emergency.. ஹா..? உன் brother மண்டைய யாராவது ஒடச்சிடங்களா?” என அவன் சொன்னவுடன் அவள் அதிர்ச்சியில் உறைந்திருக்க அவனோ பின்னால் திரும்பி அவன் நண்பரகளிடம்,
“guys.. இது யாருன்னு தெரியுதா? நம்ம கேப்ரியளோட சிஸ்டர்” அவன் கூறியவுடன் அவன் பின்னால கூட்டத்திற்குள் முணுமுணுக்க ஆரம்பிக்க அவளுக்கோ அதிர்ச்சி அடைவதா? இல்லை கோபப் படுவதா? என்று தெரியவில்லை,
‘அட பாவி நேத்து தானே ரொம்ப நல்லவன் மாதிரி பேசிட்டு போனான்?’ என்று அவள் மனதிற்கும் பேசிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் பின்னால் இருந்த கும்பலின் ஒருவன்,
“டேய் அப்ப வேணாண்டா விட்டுட்ரா, அவன் சும்மாவே நல்லா செய்வான் அப்பறம் வெச்சி செஞ்சிருவான்”
இன்னொருவனோ “இல்ல மச்சான் அவன் உண்ண செஞ்சான்ல அதுக்கு நம்ம ஏதாவது பண்ணனும்”
மற்றொருகுரல் “ டேய் இந்த விளையாட்டுக்கு நாவரள நா திரும்பவும் ஹாஸ்ப்பிட்டல் போக தயாரா இல்ல” என கூட்டத்திற்கு மாறி மாறி பேச அவளுக்கோ அதிர்ச்சியுடன் பயமும் உருவாக ஆரம்பித்தது.
அவள் அங்கிருந்து நகர முயன்ற தருணத்தில் தான் இன்னும் மைகேளின் கை அவன் இடையை சுற்றி இருப்பது தெரிந்தது அவனோ அவள் போகிறாள் என்று தெரிந்தவுடன் கையை இருக்கியவாறு,
“ டேய் கொழந்தைய பயம் புருதாதீங்கடா பாவம் அழுதுட போறா, அவ நம்மள பத்தியெல்லாம் அவன் கிட்ட சொல்ல மட்டா இல்ல குட்டி?” என அவளிடம் அவன் கேட்க அவளோ இவனின் மறு பக்கத்தை பார்த்து மிரண்டு உறைந்து அசையாமல் நிற்க அவனோ…
“ஏதாவது சொல்லுடா குட்டி… இதபத்தி உன் brother க்கு எதுவும் தெரியாது ரைட் பேபி” என அவளுக்கு மூன்று மடங்கு உருவத்தில் இருக்கும் அவன் மாடு போல் வளர்திருக்கும் அவன் நண்பர்களுடன் நின்று கொண்டு பல்லை கடித்தவாறு இனிப்பு வழியும் குரலில் கேட்கவும் அவள் பயத்தில் வழக்கம் போல் உலற ஆரம்பித்தாள்,
“ம்..ம்..அது…”
சிங்கத்திடம் சிக்கிய மான் போல் நடுங்கியவாறு
“ம்…”
“i can’t give you whole day to talk baby, just don't make me angry ok” என்று சொல்லிவிட்டு அவள் தோலை இடித்து விட்டு செல்ல அவள் திரும்பவும் கீழே விழுந்தாள் அவனோ தலையை லேசாய் திருப்பி அவளை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு அவன் கும்பலுடன் சென்றுவிட்டான்,
‘ஏன் என் life ல வர்ற male characters எல்லாம் வில்லனாவே இருக்காங்க கடவுளே’
என்று எழுந்து நின்று அவன் புறம் திரும்பியவாறு
“ போங்கடா _______ “
என்று ஒரு பீப் வார்த்தையை கத்த அவள் முன்னால் ஈற்புக்குரியவனோ அவளை துரத்த ஆரம்பிக்க தலை தெறிக்க ஓட ஆரம்பித்தால் அவள்…
‘ அபி இப்ப மட்டும் நீ என் கைல சிக்குனே நீ மர்கயா தான்…
என்னடா பண்ணி தொலைச்சே
‘இந்த வேரட்டு வேராட்டுராணுங்க’
என்று மனதில் தன் எதிரியை திட்டிக்கொண்டே ஓடி போய் அங்கு இருந்த கார்களுக்கு இடையில் ஒழிய அங்கு தன் புது கணக்கு ஆசிரியர் காரில் ஏறுவதை கண்டால்….
‘oh my god BMW… அய்யோ இது 730Ld DPE மாடல் omg what a look what a class...Wait a minute இந்த கார் எப்படியும் ஒன் சி க்குமேல போகும் இதை வாங்குற அளவுக்கு காசு இருக்குற ஆள் எதுக்கு இந்த இடத்துல வந்து கஷ்ட படனும்….ஒரே குழப்பமா இருக்கே…’ எப்போதும் போல தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தவளுக்கு தன்னை இன்னும் கவரும் அந்த குரல் கேட்டு உடன் தான் சுயநினைவு வந்தால்.
“ ஏய் எங்க இருக்க ஒழுங்கா வெளிய வந்துடு நா மட்டும் உண்ண பாத்தேன் அவ்ளோவ் தான் நீயி…” என அவன் ஆரம்பிக்க காரில் இருந்த ஆசிரியருக்கு விளங்கி...
“ hey அத்தான் காலேஜ் விட்டச்சில்ல இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க? நீ என்ன dep இங்க வா?” என ரியாஸ் அவனை அழைக்க…
‘அதானே நல்லா கேளுங்க சார், நீங்களும் மூஞ்ச பாத்து ஏமாந்துடாதிங்க பக்கா கேடி அவன்’
என அவன் தலைக்குள் நுண்ணுணர்வுடன் செய்தி அனுப்புவது போல பேசிக்கொண்டிருந்தாள்,
ஒரு வழியாக அவன் அங்கிருந்து போய் விட்டான் என அப்போது தான் பெருமூச்சு விட்டாள்…
“நைலா கார் பின்னால ஒளிஞ்சது போதும் எழுந்திரு” என ஆசிரியரின் குரல் மீண்டும் தன் எதிரிக்கு பழக்கப்பட்ட பெயருடன் ஒலிக்க அவள் பாதி ஆச்சர்யம் பாதி பயத்துடன் வெளியே வந்தாள்,
“உங்களுக்கு எப்படி சார் அந்த பேரு…” அவள் அந்த வாக்கியத்தை முடிப்பதற்குள்,
“நீ கேபிரியல் best friend தானே?” என்று கூற அவள் சோகத்தை வெளிக்காட்டாமல்,
குரலை சரி செய்து விட்டு “...ம்...ஆமா” என்று ஒரு தயக்கத்துடன் சொல்ல, அதை முன்னிருப்பவர் கண்டுகொள்ளாமல்…
“அப்ப எனக்கு உங்களை ரொம்ப நல்லாவே தெரியும்”
“எப்படி” என அவள் கேட்க,
“few years back 3 மணி நேரம் toilet ல இருந்து சாதன பண்ணி இருக்கீங்க உங்களை எப்படி மறக்க முடியும்” என்று ஒரு கிண்டலுடன் அவர் கூற அவள் தலையில் கை வைத்துக்கொண்டு தரையுடன் கரைந்துவிட்டால் இதை விட மேலாக இருக்கும் என்ற ஒரு முகத்துடன்…
‘ அய்யோ அழகா இருகவங்க கிட்ட எல்லாம் எப்டி நான் என்னோட most embarrassing movement ல மாட்டுறேன் கடவுளே உனக்கு கருணையே இல்லையா’ என்ற புலம்பிய போது அந்த நாள் அவள் நினைவுகளில் திரும்பவும் ஓடியது,
அவள் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்த சமயம் அது,
ஜானாவை தவிர அவளுக்கு வேறு தோழிகள் இல்லை அப்போது… வகுப்பில் உள்ளவர்கள் ஜனாவை கிண்டலடித்து பேசியதால் அவள் கோபத்தில் அந்த கூட்டத் தலைவி ஆலியவை கோபத்தில் நாற்காலியில் இருந்து கீழே தள்ளி விட்டதால் அவளை பழிவாங்க அவர்கள் எல்லாம் சேர்ந்து அவள் கழிப்பறைக்குள் செல்லும் நேரம் பார்த்து கதவின் வெளி தாழ்ப்பாலை போட்டு விட்டு பள்ளி முடிந்து வீட்டிர்க்கும் சென்று விட்டனர்,
பன்னிரெண்டு வயது சிறுமிக்கு அது ஒரு பயங்கர அச்சுறுத்தல் நம்புங்கள்,
அவள் கதவை தட்டி அழுது புலம்பி எதுவும் நடக்கவில்லை, அப்போது தான் தன் எதிரி பேருக்கு ஏற்றவாறு தேவதூதன் போல் வந்து நின்றான்…
இப்போது அதை திருப்பி பார்க்கும்போது அப்போது அவள் அவன் மீது பாய்ந்து அழுவதில் மும்மரமாக இருந்ததால் அவன் பின்னால் நின்று கொண்டு இருந்த அங்கு கடைசி வருடம் படித்து கொண்டிருந்த தன் கணக்கு ஆசிரியரையும் அவள் பார்த்து இருக்கலாம்…
இப்போது அவள் யோசனை செய்யும்போது தன் எதிரி அவனுக்கு ஒரு சீனியர் உதவி செய்ததாகத்தான் அடிக்கடி கூருவான் ஆனால் அவர் பெயர்…
“ஆனா அந்த சீனியர் பெரு fazilனு சொன்னனே?” என அவள் கேள்வி எழுப்ப, அவனோ சிரித்துக்கொண்டே,
“nice to meet you nyla it’s fazil riyaz” என அவன் கை கொடுக்க,
அவள் சிரித்துக்கொண்டே “ much delayed thank you sir” என்று கூற,
அவர் மீண்டும் காருக்குள் ஏரிய வாறு “கேபிய்ய கால் பண்ணிக்க சொல்லு அவன் கூட பேசி ரொம்ப நாள் ஆச்சு” என்று சொல்லிக்கொண்டே வாகனத்தை ஓட்ட ஆரம்பித்தார்,
‘இல்லன்னாலும் அந்த BMW 730Ld DPE பத்தி கண்டிப்பா அவன் கிட்ட சொல்லுவேன் சார்’ என்று நினைத்துக்கொண்டே கையாட்டினால் அவனிடம்,
‘சார் வெளியே எல்லாம் நல்லா தான் பேசுராறு பாவம் அந்த farah பொண்ண தா திட்டி தீர்க்குறாரு’ என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டே அவள் மிதிவண்டியை உருட்ட ஆரம்பித்தாள்,
மனசுக்குள் ஒரே கேள்விகள் ‘இந்த மைக்கேல் ஏன் இப்படி இருக்குறான்? பாக்குறதுக்கு நல்ல தானே இருந்தான்,
அண்ணக்கி நான் சைகெல்ல இருந்து கீழ விழும்போது லாம் ஹெல்ப் பண்ணுனான்?
ஓகே அது 9th படிக்கும்பிதுன்னு வாசிக்கலாம் இருந்தாலும்….பட் பேசும்போது படு கண்றாவியா இருக்கான்?
இதற்குமேல் இவன பத்தி யோசிக்க கூடாது’ என தானக்கு தானே அரிவுரை கூறினால்,
ஆனால் மனதில் ஏதோ ஒரு மூலையில் இருந்து ‘பாக்காம இருந்து கிழிப்ப’ என்று பதில் வர இன்றைக்கு தன்னுடன் பேசியதும் போதும் என முடிவு செய்து யோசிப்பதை நிறுத்திவிட்டு வீட்டிற்க்குச் செல்ல தொடங்கினாள்...
A/N: PLEASE VOTE AND COMMENT YOUR REVIEWS :-)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro