paguthi 11
அவினாக்ஷயும் மித்ராவையும் வெளியில் அழைத்து வந்த கார்த்திக் ஜீப்பை ஓட்ட துவங்கினான் .பின் மித்ராவிடம்"மித்து அப்பறோம் இன்னைக்கு என்ன ரெசீர்ச்சுக்குற பேருல எத்தனை செவித்த ஒடச்ச??"என்று அவள் சண்டையிடுவாள் என்ற எதிர்பார்ப்புடன் கேட்க
அவளோ"இல்ல mr .கார்த்திக் நா எந்த செவுத்தையும் ஓடைக்கல அதுமட்டுமில்லாமல் அங்க இருந்த சுவர்களையும் அந்த கட்டிடத்தின் அமைப்புகளையும் பார்க்கையில் அந்த கோவில் பழம் திராவிடர்களால் கட்டப் பட்டது என்றும் அங்கு உள்ள சுவர்களின் சிற்பங்களை பார்க்கையில் அங்கு இருந்த மக்கள் பல விதமான பல மாநிலங்களிலும் கொண்டாடும் விழாக்களை கொண்டாடுவார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.அதற்கான கோப்புகளை நான் தங்களுடைய அலுவலகத்தில் நாளை சேர்ப்பித்து விடுகிறேன்.பின் என்னுடைய பெயர் மித்ரா மித்து அல்ல என்னை மிஸ்.மித்ரா என்று அழைப்பதே நல்லது."என்று கூறிவிட்டு தனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அவினாஷிடம் பேச துவங்கி விட்டால்
.கார்த்திக்கும் தான் கூறிய வார்த்தைகள் எவ்வளவு கடுமையாக அவளது மனதை பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து வருந்தினான்.(உனக்கு இன்னும் இருக்குடி மாப்ள )
பின் அர்ஜுனும் ப்ரியாவும் மாயாபுரியில் தங்களது அலுவலகத்தில் வந்து அந்த அந்த ஆள் உயர சித்திரத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.
அர்ஜுன்"பிரியா இந்த ஓவியத்துல இருக்குறது யாரா இருக்கும் பாக்க ஏதோ ராஜா மாறி இருக்காரே ?"என்க
ப்ரியாவோ அந்த ஓவியத்தை தொட்டு பார்த்தும் அதன் வாசனையை முகர்ந்து பார்த்துக் கொண்டும் இருந்தால் பின்"அர்ஜுன் இந்த ஓவியம் கிட்ட தட்ட 100 வருடங்களிலிருந்து 150 வருடங்களுக்குள் வரைய பட்டிருக்க வேண்டும்.இதில் உள்ள வர்ணம் கிட்ட தட்ட 300 வருடங்களுக்கு முன் நமது தமிழக சிற்பிகளால் உபயோகிக்க பட்டது .இது காட்டில் விளையும் ஒரு சில வகையான பூக்களிலிருந்து எடுக்க படும் வர்ணங்களாகும்.இவை 500 வருடங்களுக்கு மங்காது" என்று கூறினால்.
பின் அர்ஜுனோ "பிரியா இங்கு உள்ள ஊர்களையும் இடங்களையும் பார்க்கையில் கலைகள் தழைத்தோங்கிய ஒரு ராஜ்யமாக இருந்திருக்க கூடும் என்றும் அது குறுகிய காலத்திற்கு முன்பே அழிந்திருக்க கூடும் என்றும் தெரிகின்றது ஆனால் அப்படி ஒரு ராஜ்யத்தை பற்றி யாருக்கும் எந்த தகவலும் தெரியாமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமா இருக்கு.இந்த இடத்தின் கடந்தகாலத்தை அறிந்தால் அது நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவத்தை கண்டு கொள்ள உதவும் ."என்று கூறிக்கொண்டிருக்கையில்
கார்த்திக் மித்ரா மற்றும் அவினாஷுடன் வந்து நின்றான் .அவனையும் மித்ராவையும் ஒரு சிறுவனுடன் கண்ட அர்ஜுன் அவனை அருகில் அழைத்து அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் "ஏன்டா என்னவோ புடிக்காது புடிக்காதுன்னு சொல்லுவ இப்போ என்னனா ஒரு பையனோட வந்து நிக்குறீங்க ?என்று கேலியுடன் வினவ
கார்த்திக் அவனை முறைத்துவிட்டு "அவன் அவன் பேச மாட்டேங்குறாளேன்னு கவலைல இருந்தா இவன் வேற இப்டி ஓட்டுறான் கடவுளே சோதனையோ சோதனை சோதனைக்கெல்லாம் சோதனையா இருக்கே ."என்று தனது மனதில் நினைத்துக் கொண்டான்.
பின் மித்ராவிடம் பிரியா"ஹே யாரடி இந்த பையன் ?"என கேட்க அவள் நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.
பின் இறுக்கத்துடன் இருந்த அவனை சகஜ மாக்கும் பொருட்டு பிரியா அவினாஷிடம் "ஹே சோட்டா பாய் இங்க இவ்வளோ பெரிய பொண்ணு நின்னுட்டு இருக்கேன் ஒரு மரியாதை இல்லாம இப்டி நின்னுகிட்டு இருக்க ?"என்று புன்னகையுடன் கேட்க
அவினாஷ் அதற்கு "யாரு சோட்டா பாய் எனக்கு 10 வயசு ஆச்சு நீங்க தான் குட்டையா சோட்டா கேர்ள் மாறி இருக்கீங்க "என்று சற்று அவர்களுடன் சகஜமாக பேச ஆரம்பித்தான் .
பின் அனைவரும் தங்கள் தங்குமிடத்திற்கு செல்ல அங்கு அர்ஜுன் நோக்கியது கன்னத்தில் கையை ஊன்றி படுக்கையில் அமர்ந்திருக்கும் கார்திக்கை தான் .அர்ஜுன் "அப்பறோம் மச்சான் என்ன ஏதோ ஆழ்ந்த சிந்தனைல இருக்க்கீங்க போல "என்று கேட்க
கார்திக்கோ "அவட்ட ரொம்ப பேசிட்டோமோ" என்று பிதற்றிக்கொண்டிருந்தான் .
பின் அர்ஜுன் அவனது கையை தட்டி விட்ட பின்பு திடுக்கிட்டவன் "எரும எரும ஏன்டா இப்டி ஒரு மனுஷனா நிம்மதியா யோசிக்க கூட விட மாட்டேங்குற" என்க
அர்ஜுன்"அப்டி என்னத்த யோசிக்குறன்னு சொன்னா நானும் யோசிப்பேன்ல" என்க
அதற்க்கு கார்த்திக் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க அர்ஜுனோ விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தான்.
அர்ஜுன்"ஹயோ எப்பா முடியலடா சாமி ஏன்டா என் செல்லம் சொன்ன மாறி உங்களுக்கு lkg பசங்க தேவல டா .இப்படியா சண்டை போடுவ அண்ட் அவளை ஏன் நீ இப்டி hurt பண்ணுற மாறியே பேசுற" என்க
அதற்கு கார்திக்கோ "தெரியலடா சின்ன வயசுல இருந்து நெறய பெரு கிட்ட பேசுவேன் ஆனா அவ கிட்ட மட்டும் தான் ரொம்ப உரிமை எடுத்துக்குவேன் அதே நேரம் அவளை வேற யாரவது hurt பண்ண நா அவுங்கள சும்மா விட மாட்டேன் .ஏன்னு எனக்கு தெரியல டா இப்போ அவளை எப்படி சமாதானம் பண்றதுன்னு சொல்லடா"என்றான்(அவுனுக்கு ப்ரியாவோட ரொமான்ஸ் பண்ணவே ஐடியா கிடைக்கல இதுல உனக்கு ஐடியா சொல்ல போறானா??நீங்க இந்த ஜென்மத்துல சமாதானம் ஆனாப்புல தான் )
(சரி கொஞ்சம் மித்ராவையும் பாப்போம் )
பிரியா அவினாஷுடன் விளையாடிக்கொண்டிருக்க மித்ராவோ ஏனோ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தனது நாட்குறிப்பில் எழுதிக் கொண்டிருந்தாள் (மித்ராவிற்கு தனது வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை நாட்குறிப்பில் எழுதுவது வழக்கம் .அவள் வெளியில் கூற இயலாத உணர்ச்சிகளை அதில் எழுதி இருப்பாள் அதை இதுவரை அவளை தவிர்த்து யாரும் படித்ததில்லை)
இதைக் கண்ட பிரியா அவினாஷிடம் என்ன என்பது போல் சைகை காட்ட அவனோ எனக்கு தெரியாது என்பது போல் சைகை காட்டினான் (இந்த 4 மணி நேரத்தில் மித்ரா,அவினாஷ் மற்றும் பிரியா மிகவும் நெருங்கி இருந்தார்கள் )
மித்ராவிடம் பிரியா "மித்து பேபி என்ன அப்டி ஆழ்ந்து யோசிக்கிற ??"என்க ப்ரியாவின் மித்து என்கிற அழைப்பு கார்திக்கை நினைவு படுத்த அவள் மேலும் மௌனமானால்
பின் பிரியா அவளது தோள் தொட்டு "என்ன ஆச்சுடா ஏன் இப்டி சோகமா இருக்க ??"என்று கேட்க
அதற்கு அவினாஷ்"மித்ரா அக்கா இவ்ளோ நேரம் நல்லா தான இருந்த ஏன் இப்போ இப்டி சோகமாயிட்ட?? "
என்க அதற்கு மித்ரா "நா எல்லாருக்கும் இது வரைக்கும் கெட்டது தான் பண்ணிருக்கேன் இல்ல என்று விசும்பலுடன் இன்று நடந்த அனைத்தையும் கூறினால்.
பிரியாவிற்கு ஆச்சர்யமே மிஞ்சியது ஏனெனில் அவள் காணும் இந்த மித்ரா புதுமையானவள்.யார் என்ன கூறினாலும் அதை உதாசீனப்படுத்தி அவர்களுக்கு பாடம் கற்பித்து மனவலிமையுடன் வலம் வரும் மித்ரா இன்று கார்த்திக் கூறிய ஒரு சிறு வார்த்தைக்காக இவ்வாறு அழுவது அவளுக்கு விசித்திரமாகவே பட்டது .
பின் அவளை சமாதானம் செய்தவள் அவளை உறங்க வைத்து வெளியில் வர அவ்வூரின் தலைவரின் உதவியாளர் அவளிடம் வந்து தலைவரின் கடிதத்தை தர அதை படித்தவள் அர்ஜுனிடம் சென்று இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்து அவினாஷை அவர்களது அறையில் படுக்க வைத்து விட்டு சென்றால் .
(சரி இப்போ அர்ஜுன் அப்டி என்ன ஐடியா குடுத்துருப்பான்னு பாப்போம்)
அதற்கு அர்ஜுனோ "ஹ்ம்ம் அது வந்து ..."என்று ஏதோ சொல்ல வாயெடுக்க அங்கு வந்த பிரியா "அர்ஜுன் கார்த்திக் freaah இருக்கீங்களா ??"என்று கேட்டால்.
அதற்க்கு கார்த்திக் ஏதோ சொல்ல வாயெடுக்க அர்ஜுனோஹ் "நாங்க வெட்டியா தான் பிரியா இருக்கோம் என்க
அதற்க்கு பிரியா "ஓகே அப்போ கேளுங்க ரெண்டு பேரும் .நாளைல இருந்து இந்த ஊருல திருவிழா ஆரம்பமாகுது அத பத்தி பேச ஊர்த் தலைவர் உங்கள நாளைக்கு வந்து பாத்து பேசுறதா சொன்னாரு.நாம பாத்த வரைக்கும் இந்த ஊரு திருவிழா அப்போ தான் திருட்டு சம்பவங்களும் ஆள் கடத்தல் சம்பவங்களும் அதிகமா நடந்துருக்கு அதுனால இந்த திருவிழா பத்தி நீங்க அவரோட பேசுனா அதுல இருந்து பாதுகாப்பு பத்தி யோசிக்கலாம்னு தோணுது "என்க
அதற்கு அர்ஜுனோ "சரி பிரியா நாளைக்கு நாங்க அவர் கிட்ட பேசுறோம் "என்றான் பின் ப்ரியாவும் அவனும் கண்களால் பேசிக்கொள்ள அங்கு மௌனமே ஆட்சி மொழியானது.
பின் திடீரென மின்சாரம் தடை பட எங்கும் இருள் சூழ்ந்தது.பின் கார்த்திக் "பிரியா இங்கயே இரு நா என்னனு பாத்துட்டு வந்துருறேன்" என்று கூறி சென்றான்.பின் அங்கு அர்ஜுனும் ப்ரியாவும் தனித்து விட பட்டனர் அந்த சூழல் ப்ரியாவின் இதயத்துடிப்பை அதிகப் படுத்த அவள் அங்கிருந்து நகர முற்பட்டால் அப்பொழுது அர்ஜுன் அவளது கையை பிடித்து தடுத்தான்.
"பிரியா இன்னைக்கு அந்த மண்டபத்துல உன்னையும் கொன்னுட்டு என்னையும் கொன்னுராதன்னு சொன்னியே அதுக்கு என்ன அர்த்தம்??"என்று வினவ ப்ரியாவோ அவனது தொடுகையிலும் அவனது தாழ்ந்த குரலிலும் பேசும் சக்தியை இழந்திருந்தால் .
பின் அர்ஜுன் "சொல்லு பிரியா அதற்கு என்ன அர்த்தம்" என்று மேலும் நெருங்கி கேட்க அதற்கு பிரியா பதில் கூறும்முன் மின்சாரமும் "மச்சான் பியூஸ் பொய் இருதுச்சுடா" என கார்த்திக்கும் வர அவள் அர்ஜுனின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு வெட்கத்தால் சிவந்த தன் தலையை நிமிராமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டால்.
அவள் செல்வதையே பார்த்திருந்த அர்ஜுனிடம் கார்த்திக் வந்து ஆர்வமுடன் "ஆன் சொல்லு மச்சான் ஏதாவது ஐடியா சொல்லுடா என்க
அர்ஜுனோ
"என்னென்னவோ தோன்றுது உன்னை பார்க்கையிலே
ஏதேதோ ஆகுது உந்தன் அருகினிலே
உன்னை கவர நினைத்த என்னை
தினமும் கொள்ளை கொள்வதும்
ஏனோ வெண்ணிலவே"
என்று கூறி விட்டு சென்று உறங்கி விட்டான் .கார்திக்கோ "அவனா வந்தான் என்னடா ப்ரச்சனைனு கேட்டான் ஐடியா சொல்ற நேரத்துல அவ வந் தா சரின்னு அப்பறோம் ஐடியா கேட்டா இவன் என்னவோ ஒளறிட்டு போறான்.என்ன பாத்தா எப்பிடிடா தெரியுது உங்களுக்கு??சரி இனிமே இந்த பிரெச்சனைய நானே deal பண்ணிக்கிறேன்.என்று தனக்குள்ளே தீர்மானித்த கார்த்திக்கும் நிம்மதியாக உறங்க சென்றான் அவனது நிம்மதி பல நாட்கள் நீடிக்காதென்று தெரியாமல்.
ஊர்த்திருவிழா எப்படிப் பட்டதாக அமையும்??
மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப் படுமா??
மித்ராவிற்கும் கார்த்திக்கிற்கு அடுத்து நிகழப் போவது என்ன??
hi friends ennada iva ella updatelayum thona thonannu pesuraalennu paakkadheenga idhu naa unga ellarukkum thanks soldradhukku dhaan ezhudhuren.naalaam kadha ezhudhuvennu nenaikkave illa kadhaindra perla edho onnu ezhudha aarambichchen adhukku neenga thara support enakku romba sandhaoshama irukku.ini naa frequentaah updates pottu epdiyum 2 monthsla indha storyah mudichchuruven.enna ezhudha vachcha ellarukkum indha chapterah dedicate pannuren.en kadhaila ulla kuraigala sonna shaju akkaku thanks
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro