பதில்கள்
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
உங்களிடம் கேள்வி கேட்க சொன்னால் இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.பலர் கேள்விகளை என்னை நோக்கியே கேட்டிருந்தார்கள்.ஆனால் சிலர் கதாபாத்திரங்களை நோக்கி ஆனால் என்னிடம் கேட்டிருந்தார்கள் .இப்பொழுது பதிலனது கதாபாத்திரங்களே நேரடியாக பேசும்.
Hi bro, ennoda ques vanthu
1. Nithisss amma pathi.. Oruthanga husband ilama children ah valanthanga na avanga bold and brave ah iruka chance iruku.. Epdi avanga Entha oru visayathaium take it easy ah eduthuka mudium.. Becoz nithisss sliruka intha char ku avanga amma than avaluku inspiration nu..
2. Entha oru amma vum thanoda ponnu oru paiyan some disorder la irukana avana ponnuku mrge pani vaika matanga. Apdi iruka how is it possible avanga en Arun ah mrge pana accept pananga.. Nithisss avanga amma VA madakunalum avanga avangaloda point of view ah share panirukanum la.. Neega eduthurukura subject ae current la nama world la irukura issue ah based pani eduka poranu snenga apdi irukum pothu epdi oru middle class family la ula amma thannoda ponnuku Arun mathiri ula paiyana accept panuvanga.. Avanga nithisss ah thana convince panirukanum
3. Arun oru ponnuta apdi pesiruka kudathu. It will hurt a lot.. Teriyatha vanga namala ethathu pesunalae hurt aavom apdi iruka avaloda crush avala apdi pesum pothu avaluku evlo feel agum.. Even ava take it easy char nalum luv enaikum marathathu avaru pesuna varthai ava manasula iruka than seium.. Apdi irukum pothu just oru aaruthal agavathu en Arun sorry slirukalamla
ஹாய் chinkulaks
நாந்தான் அமிர்தவள்ளி பேசுறேன்மா.
என் பொண்ணுங்களுக்கு நாந்தான் ரோல் மாடல்.என்ன பார்த்தே அவங்க எல்லாத்தையும் கத்துகிட்டாங்க.அதுலயும் குறிப்பா நித்யா.அவங்க அப்ப எங்கள விட்டு போகும் போது அவளுக்கு 8 வயசு.கொஞ்சம் புரியிர வயசு.ஆனால் கடைக்குட்டிக்கு 4 வயசுதான்.
நித்யாவுக்கு சின்ன வயசுல இருந்தே நான்னா உயிரு.எங்கிட்ட எதையுமே மறைக்க மாட்டா.அது போலவே அவ எது கேட்டலும் நான் மறுக்காம செஞ்சி கொடுத்துடுவேன்.அப்புறம் நாங்க மிடில் கிளாஸ்லாம் இல்ல.அது போல கோடீஸ்வரங்களும் இல்ல.மேல்தட்டு நடுத்தர வர்க்கம் ( upper middle class).ஏன்னா அவரு எங்கள விட்டு போனப்போ கொஞ்சம் சொத்துக்கள் எங்களுக்கு கிடைச்சது.அப்புறம் என்னோட படிப்புக்கு நல்ல ஜாப் கிடைக்க நல்ல ஒரு சம்பாத்யத்த தந்தது.
என் பொண்ணுக்கு நானே ரோல் மாடலா இருந்துட்டு ,அதுவும் அவ வந்து மேனகாவ பத்தி சொல்லிட்டு ,அதுக்கு நான் அந்த பொண்ணுக்கு நல்ல வேல பண்ணிருக்கா என்று சொன்ன பிறகு நான் என் பொண்ணுனு வரும் போதும் மாத்தி பேசினா என் பொண்ணு என்ன பத்தி என்ன நினைப்பா.அம்மா ஒரு சுய நலக்காரி என்று நினைக்க மாட்டா.அப்புறம் நான் கடைசி எபிசோட்லதான் நிம்மதியா தூங்கினேன்னு சொல்லியிருந்தேன்.ஏன்னா இந்த கல்யாணம் தடைபட்டதால.அத நீங்க கவனிக்கல்ல என்று நினைக்கிறேன்மா.என்னோட பதில் திருப்தியா இருக்கா.இல்லைன்னா அடுத்த கேள்வி நேரத்துல கேளுடா.
barathbobby96
Arun annaiku pesunathuku yen sorry kekala
அருண்---
ஹாய் barathbobby96 chinkulaks ...நான் ஏன் நித்யா கிட்ட சாரி கேட்கலன்னு கேட்டீங்க.நான் அவகிட்ட சாரி கேட்கனும்னு இருந்தேன்,ஆனா அவளே அதை பெருசா எடுத்துக்காதப்போ நான் மறுபடி சாரி கேட்டு அவள சங்கடப்படுத்த வேணாம்னுதான் கேட்கல.ஆனா நான் ஏன் அப்படி பேசினேன்னு அதிதி கிட்ட நான் ஏற்கனவே சொல்லிருக்கேன்மா.அவ என்ன அடியோட வெறுக்கனும் இல்லன்னா மறக்கனும்னுதான் அப்படி எல்லாம் பேசினேன்.ஆனா அன்னைக்கு அவகிட்ட சாரி கேட்கலாம்னு இருந்தப்போ வசுந்ரா பத்தின பேச்சி வந்ததால என்னால வேற ஏதுமே பேச முடியல்ல.சில இடங்கள்ள நித்யாவே அதிகமா பேசிக்கிட்டு இருந்தாப்பா.அதுதான்.ஆனா நான் அப்படி பேசினது தப்புன்னு எனக்கு தெரியும் ,என்ன செய்ய நான் அவதார புருசன் கிடையாதே.நானும் சாதரான மறதிக்கும் தவறுக்கும் மத்தியில் படைக்கப்பட்டவனின் பாத்திரம்.
Aashika98
Nithya kita kekanum:arun unna evlo kevlama thitiyum asingapaduthiyum ni innum En avanmela anba irke? Sled respect eh vitu kudthutu ponumnu enna irku? Nyayama patha avanum vena avan family um venanu poirkanum la ni? Self respect eh ni vitu kudthuta edhuku?
ஹாய் Aashika98 ,நாந்தான் நித்யா..
நீங்க சொல்ரது சாதாரண ஒரு பொண்ணுன்னா கண்டிப்பா பண்ணிருப்பா.ஆனா நான் அமிர்தவள்ளி அதாங்க எங்கம்மாவோட வளர்ப்பு.நான் அப்படி பண்ணா எனக்கும் மத்தவங்களுக்கும் என்ன வித்தியாசம்.எங்கம்மாவோட வளர்ப்பு தப்பாகிடாது.அதுக்காக எனக்கு மாற்றமா இருக்குறவங்க தப்பான வளர்ப்புனு சொல்லல.அவங்க அவங்க அம்மா அப்பாவோட ஆலோசனைகள் மற்றும் படிப்பினைகள் அவங்க அவங்களுக்கு பெருசு.அது போலவே எங்கம்மாவோட வளர்ப்பு முறை எனக்கு பெருசு.நான் அதுக்கு மாற்றமா நடந்தா அது அவங்களுக்குத்தான் கெட்ட பேரு.
அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் என்னோட இன்பாக்சுவேசன் காதலுக்கு முன்னாடி அருண் ,வசுந்ராவோட ஆழமான காதல் எவ்வளவோ உசத்திமா.
shaju821
Adiyey priya. ne en d . ivolo.. munthri kottai mathri Ellathukum Avarsara pattu. jyosikama pannnra
Nallathu pannran nu ellarkum kastam mattum kudukkkra?
ஹாய் சாஜு,என் மேல அதிகமா கோவத்துல இருந்தவங்கள்ள நீங்களும் ஒருத்தர்னு தெரியும்டா.உங்க கோவம் ரொம்ப நியாயமானதுடா.ஏன்னா நான் ஒரு முந்திரிகொட்டதான்.என் வாழ்க்கையிலேயே நான் சரியா யோசிச்சி செஞ்ச ஒரே ஒரு வேலன்னா என் கம்பனிய ஆரம்பத்துல ஒழுங்கா வழி நடத்தினது.ஆனா அதுவும் சங்கீதா,ரேனுவோட உதவியோட.உண்மைலயே எங்க குடும்பத்துல ரொம்ப நிதானமா யோசிக்கிறது ரம்யாதான்.அவ அக்காவாவும் நான் தங்கச்சியாவும் பிறந்திருக்கனும்.ஆனா நம்ம கைல என்ன இருக்கு.
நான் மத்தவங்களுக்கு நல்லதுன்னு நினைச்சி பண்றது கடைசில கெட்டதா மாறிடுது இல்லன்னா எனக்கே அது திரும்ப அடியே விழுது.என் விதி அப்படிம்மா.
நீங்க எதிர்பார்க்குற பேர்பக்ட் காரக்டர் நான் இல்லம்மா.கோவம்,அவசரம் ,நிதானமில்லாம முடிவெடுக்குறது இதுதான் ப்ரியா..இதுதான்மா நான்.
chinkulaks
4. Apro first stry la Neega en renu va aravind kuda Sera vaikala.. Aravind priya va luv panan apdinu lam reason slathenga.. Becoz Neega writer so epdi vaenalum stry ah mathikalam.. So en ungaluku renu va um aravind ah um sethu vaikanumnu nu thonala..
இது என்னை நோக்கி வைத்த கேள்வி....அர்விந்த் கூட ஏன் ரேனுவ சேர்த்து வைக்கலன்னா ஒரே ஒரு காரணம்தான்.அர்விந்த் சொல்லிட்டான் தான் முதலும் கடைசியா காதலிச்ச பொண்ணு ப்ரியான்னு.அவ என்னதான அவன் மனச காயப்படுத்தினாலும் அவனோட மனசுல ப்ரியா சிம்மாசனம் போட்டு இருந்திட்டா.அதை யாராலயும் மாத்தமுடியாது என்பதை ரேனு உணர்ந்துட்டா.அதனாலதான அவ அதுக்கு அப்புறமா அவன்கிட்ட தன்னோட காதல பத்தி பேசல.
இன்னும் நிறைய கேள்விகள் என்னை நோக்கி கேட்கப்படதற்கு கொமண்டிலேயே பதில் கூறியிருந்தேன்.அதிலும் குறிப்பா நான் வாசகர்களின் மன ஓட்டத்தை பார்த்து கதை மற்றும் பாத்திரங்களின் தன்மையை மாற்றுவதாக.இதில் 50% உண்மைதான்.
நான் பொதுவாகவே 4 அல்லது 5 எபிசோட் கைவசம் எழுதி வைத்துக்கொள்வேன்.அடிக்கடி வாசித்து பார்த்து பாத்திரங்களின் தன்மை மற்றும் கதையில் அவர்களின் முக்கியத்துவத்தை தேவைக்கேற்ப செதுக்கி கொள்வேன்.
முதல் கதையை விட இந்த கதையில் நான் ரொம்பவும் தடுமாறுவது உண்மை.ஏனென்றால் 15 எபிசோட் எழுதிய பின் அதுவும்13 எபிசோட் போஸ்ட் பண்ணிய பிறகு கதையுடைய முழு கருவையும் மாற்றி எழுதுவது என்பது என்னை போன்ற கத்துக்குட்டிகளுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம்பா.
மேலும் இந்த கதை 2 track கதையாக வரவேண்டியது.அதனால்தான் இன்னமும் வருண் கதையில் பெரிதாக வரவேயில்லை.
இதுவே zeeraf dharshinichimba deepababu போன்றவர்கள் என்றால் ஈசியா 2 track ல கொண்டு போய் இருப்பாங்க.என்னால அது முடியவில்லை.என்னுடைய வீக் பாயிண்ட் இதுதான்.அதனால்தான் கதையை 3 பகுதியாக பிரித்தேன்.
1.அருண்,நித்யா
2.அருண்,வசுந்ரா
3.நித்யா ,மிஸ்டர் எக்ஸ்..
3 வது பகுதி வரும் போது அருண் வசுந்ராலாம் அதிகமா வர மாட்டாங்க.நான் ஏன் கஷ்டப்பட்டாலும் கொஞ்சம் மொக்கயா இருந்தாலும் இதை இன்னமும் இந்த கதையை இதே பாணியில் எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்றால் காரணம் என்னுடைய அடுத்த கதை ஒரே நேரத்தில் 2 கதைகளாக செல்லும் .அதற்கு ஒரு எக்ஸ்பரிமண்டாக இந்த கதையை பயன்படுத்தலாம் என நினைக்கின்றேன்.ஏனென்றால் ஏற்கனவே கருவை மாற்றியதால் கொஞ்சம் மொக்கயாகிருப்பதால் இந்த கதையை நான் experiment நோக்கத்திற்காக பயன்படுத்தலாம் என்று உள்ளேன்.
எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியவில்லை..முடியுமானவரை பதில் கூறியுள்ளேன்..
இன்னும் 6-7 எபிசோட்களுக்கு அடுத்த கேள்வி நேரத்தில் பார்க்கலாம்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro