6
ஹேய் எழுந்திரிங்கப்பா, College போற Idea இருக்கா இல்லையா?
Please சஞ்சு, இன்னும் பத்து நிமிஷம் தூங்க விடேன்.
பத்து நிமிஷம்னு சொல்லி சொல்லியே One hour ஆ தூங்கிட்டு இருக்கீங்க, எழுந்திரிங்கடீ ரெண்டு பேரும்.
தீப்தியும், ரம்யாவையும் எழுப்ப முயன்று களைத்துப் போனவள், அதற்கு மேல் முடியாமல் தனியே College கிளம்பினாள். Canteen இல் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க Good morning சொல்லிக் கொண்டு எதிரே வந்து அமர்ந்தான் அஜய்.
என்ன தனியே இருக்க அந்த லூசுங்க ரெண்டும் வரலயா?
ம்ஹும், எவ்ளவோ எழுப்பிப் பாத்துட்டேன். எழுந்திரிக்கவே இல்ல.
கவி எப்போ வராலாம்?
நாளைக்கி வர்ரேன்னு சொன்னா. எப்பவும் அவ கூடவே இருந்து பழகிட்டேனா, கவி இல்லாம என்னமோ மாரி இருக்கு . ரவி வரல?
அவனா ! Travel பண்ண Tired னு சொல்லி இன்னும் நாலு நாளக்கி தூங்குவான்.
ம்ம் அப்போ அஜய் Sir மட்டும் தான் பொறுப்பா College வந்திருக்காரு.
"ஹெஹே அதெல்லாம் இல்ல . எப்டியும் நீ வருவேன்னு தெரியும். ஒனக்கு Company குடுக்கலாமேன்னு தான் வந்தேன். " அவனுக்கே உரிய வசீகரப் புன்னகையுடன் கண் சிமிட்டி சொன்னான் அஜய்.
"உண்மைலயே எனக்காகத் தான் வந்தியா? " அவள் நம்பிக்கை இல்லாமல் கேட்க,
ஆமா, ஏன்?
இல்ல ரம்யாவும், தீப்தியும் தானே ஒனக்கு Close friends, நான் ...
என்ன நான் ... அப்போ நீ எனக்கு Friend இல்லன்னு சொல்றியா?
ஐயோ அப்டி இல்ல, நா அவ்ளவா பேச மாட்டேனே, என் கூட இருக்குறது Boring ஆ இல்லையா?
அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை ஆழமான ஒரு பார்வை பார்த்தான் அஜய்.
"எனக்கு ஒன்ன ரொம்ப புடிக்கும் டி, ஒனக்காக தான் இன்னைக்கி College ஏ வந்தேன்." அவள் கண்களை ஊடுருவிய பார்வையுடன் அவன் அழுத்தமான குரலில் சொன்னான்.
அவன் பார்வையை தாங்க முடியாமல் அவள் உறைந்து போய் நிற்க, சட்டென்று சுதாகரித்த அஜய் பேச்சை மாற்றினான். ஆனால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் நின்ற சஞ்சு அதற்கு மேல் பேசத் தோன்றாமல் தன் வகுப்புக்கு கிளம்பினாள்.
வார இறுதியில் வீட்டுக்கு கிளம்பினாள் சஞ்சு. வீட்டு வாசலிலே எதிர்ப்பட்ட அக்காவின் மூன்று வயது குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே நுழைய அங்கே அம்மாவின் விம்மல் சத்தம் கேட்டது.
அக்கா சோபாவில் அமர்ந்திருக்க அவள் எதிரே நின்றபடி விம்மிக் கொண்டிருந்தாள் அம்மா. இது புதிது இல்லை . கடந்த ஆறு மாதமாய் வீட்டில் ஓடிக் கொண்டிருந்த பிரச்சினை தான். அக்கா வந்தனாவின் பிடிவாதத்தில் வீட்டில் எல்லோருமே வருத்தமாய் தான் இருந்தார்கள். அப்பா எவ்வளவு சொல்லியுமே கேட்காதவள் அம்மாவின் பேச்சையா கேட்கப் போகிறாள். எதுவும் கேட்கத் தோன்றாமல் குழந்தையை தூக்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றாள் சஞ்சு.
"Divorce notice வந்திருக்கு. "
இரவு Dining table இல் அமர்ந்திருந்த போது சொன்னாள் அம்மா.
அக்கா என்ன சொல்றா?
"மாப்பிள்ள கிட்ட ஒரு தடவ பேசுடீ னு எவ்ளவோ கெஞ்சி பாத்துட்டேன். கேட்டா தானே. எல்லாத்துலயும் பிடிவாதம். குழந்தைய பத்தி கூட யோசிக்காம " பேசும் போதே விம்மினாள் அம்மா .
அவளுக்கும் வேதனையாய் தான் இருந்தது. ஆனால் இதில் அவளால் செய்யக் கூடியது எதுவும் இல்லை. வந்தனாவின் பிடிவாதத்தின் முன் வீட்டில் யார் பேச்சும் எடுபடாமல் போனது. வீட்டில் நிம்மதியே இல்லாமல் இருக்க ஞாயிறு காலையே ஹாஸ்டல் கிளம்பினாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro