வந்தாயே மழையென நீயும் - முன்னோட்டம்
"உன்னை மாதிரி ரிப்போர்ட்டர்ஸ்லாம் சென்சேசனல் நியூசுக்காக எதையும் செய்யுறவங்க தானே! இன் ஃபேக்ட் அடுத்தவங்க வாழ்க்கைல நடக்குற சீரியசான விசயத்தைக் கூட நியூசா மாத்தி லாபம் தேடுறது தானே நீங்க ஜெர்னலிசம்ல படிச்ச பாலபாடம்... உன்னை மாதிரி ஆளுங்க கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்ல... அண்ட் தி கிரேட் ஸ்டார் சித்தார்த்தோட ஒவ்வொரு செகண்டும் பிரீசியஸ் ஆனது... அதை உன்னை மாதிரி தேர்ட் ரேட்டட் ரிப்போர்ட்டர் கூட பேசி நான் வேஸ்ட் பண்ண விரும்பல"
ஏளனமும் எகத்தாளமும் அள்ளித் தெளிக்கப்பட்ட அவனுக்கே உரித்தான ஆணவம் தெறிக்கும் குரலில் சொல்லிவிட்டுத் தனது கூலர்சை கண்ணில் மாட்டிக் கொண்டான் சித்தார்த்.
அவன் பேசுவதை கண்களில் அலட்சியம் பொங்க மார்பின் குறுக்கே கைகளை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் யசோதரா. உள்ளுக்குள் கோபம் கொப்பளித்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் செவ்விதழ் விரித்துப் புன்னகை பூத்தாள். அவளின் சிரிப்பை அவன் புருவம் சுருங்க கேள்வியாக நோக்கும் போதே அவளிடமிருந்து துப்பாக்கி குண்டுகளை போல பதில்கள் வந்து விழ ஆரம்பித்தன.
"தி கிரேட் ஸ்டார் சித்தார்த் அவர்களே! உங்களோட கதாகாலட்சேபம் முடிஞ்சதா? இப்போ நான் பேசலாமா?" என்று அவனுக்குச் சற்றும் குறையாத நக்கல் தொனியில் வினவியவள் அவன் எரிச்சலுற ஆரம்பிப்பதை பார்த்தபடியே தொடர்ந்தாள்.
"நாங்க சாதாரண விசயத்தைக் கூட சென்சேசனல் நியூஸ் ஆக்கி சம்பாதிக்கிறோம்னு சொல்லுறிங்களே! உங்கள மாதிரி சினிமாக்காரங்க மட்டும் சமூகச்சேவையா பண்ணுறிங்க? டிரிங்க்ஸ் பண்ணுறது, ஸ்மோக் பண்ணுறது, பிடிக்கலனு சொல்லுற பொண்ணை துரத்தி துரத்தி ஸ்டாக்கிங் பண்ணி அவளை காதலிக்க வைக்குறது இதை தானே இத்தனை வருசமா ஹீரோயிசம்னு சொல்லி காட்டுறிங்க...
உங்க சினிமாவ பாக்குற எத்தனை டீனேஜ் பசங்க காதலுக்கு, ஹீரோயிசத்துக்குத் தப்பான அர்த்தத்தை எடுத்துக்குறாங்க... அதோட உங்கள மாதிரி ஹீரோஸ் உங்க ரசிகர்களை உங்களோட சுயலாபத்துக்குப் பயன்படுத்திக்கிறிங்க... இதைலாம் செஞ்சுட்டு நீங்க புத்தர் மாதிரி பேசுவிங்க... அதை கேட்டுட்டு நான் அமைதியா போகணுமா? உங்க கண்ணுல இருக்குற உத்திரத்தை தூக்கி தூரப் போட்டுட்டு அடுத்தவங்க கிட்ட இருக்குற துரும்பை பத்தி பேசுங்க... எனி ஹவ் உங்க சமூகசேவைய நீங்க கன்டினியூ பண்ணுங்க அன்னை தெரசாவோட மேள் வெர்சனே!"
அவனுக்குப் பதிலடி கொடுத்துவிட்டு அவள் இடத்தைக் காலி செய்ய பல்லைக் கடித்த படி "டேமிட்" என்ற வார்த்தையை கடித்துத் துப்பிவிட்டு விறுவிறுவென வெளியேறினான் வளர்ந்து வரும் இளம் நடிகனான சித்தார்த்.
***********
"நான் இன்வெஸ்டிகேடிவ் ஜெர்னலிசம் படிச்சது சினிமா கிசுகிசு எழுதுறதுக்கு இல்ல சீஃப்... எந்த புரொபசன்ல தான் ரிஸ்க் இல்ல? என்னோட பேரண்ட்ஸ் சொன்னதை பிடிச்சுக்கிட்டு நீங்களும் பேசாதிங்க" என்றாள் யசோதரா மூக்கின் நுனி சிவக்க.
அவளை ஆதுரத்துடன் பார்த்தபடியே யோசித்தான் ஜஸ்டிஸ் டுடேவின் நிறுவனரும் பத்திரிக்கையாளருமான விஷ்ணு பிரகாஷ்.
"வெல்! உன் ஆசைப்படியே நீ மறுபடியும் சேனல்ல ஜாயின் பண்ணிக்கலாம்... ஆனா ஒரு கண்டிசன்" என்று அவன் நிறுத்தவும் என்னவென ஏறிட்டாள் யசோதரா.
அவளின் கேள்வியைப் புரிந்து கொண்டவனாக அவனே தொடர்ந்தான்.
"இனிமே இன்வெஸ்டிகேடிவ் ஜெர்னலிசம் சம்பந்தமா உனக்கு எந்த புராஜெக்டும் நம்ம சேனல் தரப்புல இருந்து குடுக்க மாட்டோம்... பிகாஸ் வீ டோண்ட் வாண்ட் டூ லூஸ் அ டேலண்ட்டட் ரிப்போர்ட்டர் லைக் யூ.. புரிஞ்சுதா யசோதரா வாசுதேவன்?" என்று ஆணித்தரமான குரலில் சொல்லவும் அயர்ந்து போனாள் யசோதரா.
**************
"எல்லாரும் கௌதம புத்தரை கொண்டாடுறாங்க... ஆனா யாரும் அவருக்குக் கிடைச்ச திடீர் ஞானோதயத்தால அவர் அம்போனு விட்டுப் போன அவரோட பொண்டாட்டி யசோதராவ பத்தி பேச மாட்றாங்க... அவர் போனதுக்கு அப்புறம் அவ குழந்தைங்கள வச்சுக்கிட்டு எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பானு யாருக்கும் கவலை இல்ல... ஏன்னா மக்களுக்குப் புத்தரை கொண்டாடவே நேரம் சரியா இருந்துச்சே" என வேதனையுடன் பேசிவிட்டு நிமிர்ந்தாள் யசோதரா.
அவளுக்கு ஒரு தம்ளரில் தண்ணீரை நிரப்பி நீட்டினாள் மயூரி.
"உலகம் என்னைக்குமே பிரபலத்துவத்துக்குப் பின்னாடி தான் ஓடும் யசோ... புத்தர் அளவுக்கு யசோதராவும் ஃபேமஸ் ஆயிருந்தாங்கனா அவங்கள பத்தியும் இன்னைக்கு மக்கள் பேசிருப்பாங்க... இங்க நம்மள பத்தி ஒருத்தர் நல்ல விதமா பேசணும்னா ஒன்னு நம்ம பிரபலமா இருக்கணும்... இல்லனா நமக்கு பெரிய பின்புலம் இருக்கணும்... இது ரெண்டுமே யசோதராவுக்கு இருந்திருக்காது போல" என்றாள் மயூரி தனது பேராசிரியை வேலைக்கே உரித்தான பொறுமையுடன்.
அதுவும் சரி தான் என்று உணர்ந்தவள் தண்ணீரைக் குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
**************
தன் முன்னே அடுக்கி வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மைக்குகளையும் தனது பதிலுக்காக காத்திருக்கும் நிருபர்களையும் ஒரு நொடி அலட்சியம் வழியும் கண்களால் பார்த்த சித்தார்த் "நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்" என்று கேட்கவும் ஒரு நிருபர் மற்றவர்கள் கேட்க தயங்கிய கேள்வியைக் கேட்டார்.
"சார் ஆக்டர் ருத்ரேஷ் வர்மா இப்போ சினி ஃபீல்ட்ல நம்பர் ஒன் ப்ளேஸ்ல அவர் தான் இருக்கிறார்னு இண்டர்வியூ குடுத்திருக்கார்... அதுல நம்பர் ஒன் ப்ளேசுக்குப் போறதுக்கான ரேஸ்ல உங்களைத் தோற்கடிச்சிட்டதா பகிரங்கமா சொல்லிருக்கார்... இதை பத்தி உங்க ஒபீனியன் என்ன?"
அந்த பெரிய ஹாலில் குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவுக்கு ஆழ்ந்த அமைதி. ஆனால் யாரை நோக்கி அந்தக் கேள்வி வைக்கப்பட்டதோ அவனிடம் இருந்து ஒரு ஏளனமான முறுவல் வெளிப்பட்டது.
நிமிர்ந்து அமர்ந்து கொண்ட சித்தார்த் தொண்டையைச் செறுமிக் கொண்டான்.
"வெல்! நான் ஒரு குட்டிக்கதை சொல்லவா?" என அவர்களிடம் கேட்டவன் அவர்களின் பதிலை எதிர்பாராதவனாய் சொல்ல ஆரம்பித்தான்.
"காட்டுக்குள்ள இருக்குற அனிமல்சுக்கு நடுவுல ஒரு ரேஸ் நடந்துச்சாம்... அதுல ஓடுறதுக்கு குதிரைங்க தயாரா நின்னுச்சாம்... அப்போ சிறுத்தை மட்டும் தனியா போய் உக்காந்திருந்துச்சாம்... எல்லா அனிமல்சும் நீயும் வேகமா தானே ஓடுற... நீ ரேஸ்ல கலந்துக்கலயானு சிறுத்தை கிட்ட கேட்டுச்சாம்... அதுக்கு சிறுத்தை என்ன சொல்லிச்சு தெரியுமா? ரேஸ்ல ஓடுறது குதிரைங்களோட வேலை... சிறுத்தைக்கு அதுங்களோட ஓடி தன்னோட வேகத்தை நிருபீக்க வேண்டிய அவசியம் இல்ல... அதுவுமில்லாம குதிரைங்களோட ரேஸ்ல நான் கலந்துகிட்டா அது என் சிறுத்தை இனத்துக்கே அவமானம்.. சோ இது எனக்கான ரேஸ் இல்லனு சொல்லிச்சாம்" என்று சொல்லி நிறுத்திவிட்டு ஒரு கணம் தனது கூரிய விழியால் கேள்வி கேட்ட நிருபரை ஏறிட்டான் சித்தார்த்.
"நம்பர் ஒன் பிளேசுக்கான ரேஸ் எனக்கானது இல்ல... அதுல ஓடி மிஸ்டர் ஆர்.விய என்னோட போட்டியாளர்னு சொல்லி என்னோட நிலையில இருந்து கீழ இறங்க எனக்கு விருப்பமும் இல்ல... உங்க கேள்விக்குப் பதில் கிடைச்சிருக்கும்னு நினைக்கேன்" என்று சொல்லிவிட்டு அவனது அக்மார்க் கம்பீரமும் கர்வமும் கலந்த முறுவலை உதட்டில் பூசிக்கொண்டான் சித்தார்த்.
நடப்பவற்றை ஹால் சோபாவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இந்திரஜித் "அப்பிடி சொல்லுங்கண்ணா... தெறி ரிப்ளை" என்று சொல்லிவிட்டு தனது தமையனுக்கு பறக்கும் முத்தங்களைப் பரிசாக அளித்தபடி தன்னருகில் அமர்ந்திருந்த மாதவனுக்கு ஹைஃபை கொடுத்தான்.
**************
"நீங்க தான் இந்திரஜித்தோட கார்டியனா?" என கேட்டபடி ஏறிட்ட மயூரியிடம் மத்திமமாக தலையாட்டி வைத்தான் மாதவன். ஆம் என்கிறானா இல்லை என மறுக்கிறானா என புரியாது அவள் குழம்பித் தவிக்கும் போதே இந்திரஜித்தும் அவனும் பார்வைகளைப் பரிமாறிக்கொள்ள மயூரி அவளது இயல்பிலிருந்து தவறி கொதிநிலைக்குச் சென்றுவிட்டாள்.
"என்ன சார் ரெண்டு பேருமா சேர்ந்து என்னை முட்டாள் ஆக்க டிரை பண்ணுறிங்களா? லிசன்! ஹீ இஸ் மை ஸ்டூடண்ட்... அவனோட எதிர்காலம் மேல எனக்கு அக்கறை இருக்குங்கிற ஒரே காரணத்துக்காக தான் உங்கள வரவழைச்சு பேசிட்டிருக்கேன்... இல்லனா நேரே ஹெச்.ஓ.டியவோ பிரின்சிபலையோ போய் பாருனு சொல்லிருப்பேன்" என வாணலியிட்ட கடுகாக பொரிந்தவளைப் பார்த்து வாயடைத்துப் போனான் அவன்.
"இல்ல மேம்... அண்ணாவுக்கு இன்னைக்கு அவுட்டோர் ஷூட்... அதான் மேடி அண்ணா வந்திருக்கார்" என்று இந்திரஜித் மென்று விழுங்கி பேச ஆரம்பிக்க
"அஹான்! உன்னோட அண்ணா நடிக்குற மூவிய டைரக்ட் பண்ணுற டைரக்டர் இவர் தானு கேள்விப்பட்டேனே... ஒரு வேளை சினி இண்டர்ஸ்ட்ரில ஸ்டூடியோ ஷூட்டுக்கு ஒரு டைரக்டரும், அவுட்டோர் ஷூட்டுக்கு வேற டைரக்டரும் வச்சிக்கிற வழக்கம் இருக்கா?" என்று கையைக் கட்டிக் கொண்டு அவள் கேட்கவும் மாதவன் பொறுமையிழந்தான்.
"ஹலோ இப்போ என்ன? கிளாஸ் டைம்ல இவன் தூங்கிட்டான்.. அதுக்கு ஏன் மேம் இவ்ளோ சீன் போடுறிங்க? சின்னப்பையன் அசதில தூங்கிட்டான்... இனிமே இப்பிடி நடக்காது" என்றவனை கடுப்புடன் ஏதோ சொல்ல வந்த மயூரி தனது மாணவனின் முன்னே சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள விரும்பாததால் அமைதியைக் கடைபிடித்தாள்.
பின்னர் இனிமேல் வாதிடுவது வீணென புரிந்து கொண்டவள் இந்திரஜித்தைக் கண்டித்துவிட்டு நிமிர மாதவனின் கண்கள் அவள் கண்களை எதிர்கொண்டது.
"என்னோட அப்கமிங் மூவில ஹீரோக்கு ஒரு ஸ்ட்ரிக்டான மாமியார் இருக்காங்க... அதுக்கு நீங்க கரெக்டா இருப்பிங்கனு நினைக்கிறேன்... உங்களுக்கு ஆக்டிங்ல இண்ட்ரெஸ்ட் இருக்குதா?" என கேட்டு அவளது பொறுமையின் மீது ஹைட்ரஜன் குண்டை வீசினான் அவன்.
அதன் பலனாக வெடித்துச் சிதறியவள் முகம் சிவக்க "மைக்கேல்" என்று உச்சஸ்தாயியில் கத்தவும் ஆபிஸ் பாய் மைக்கேல் அலறியடித்துக் கொண்டு டிப்பார்ட்மெண்டில் அவளது அறைக்குள் வந்து நின்றார்.
"ஹலோ ஹலோ நாங்களே போய்ப்போம்மா... அதுக்கு ஏன் ஹை டெசிபல்ல கத்தி தூங்கிட்டிருக்க மனுசனை பதற வைக்கிறிங்க?" என்று கேலியாகச் சொன்னபடி இந்திரஜித்தை அழைத்துக் கொண்டு வெளியேறினான் மாதவன். அவன் சென்றதும் கடுப்புடன் மேஜையில் அடித்துக் கொண்ட மயூரி தனது இருக்கையில் தொப்பென அமர்ந்தாள்.
******************
"எல்லாரும் உன்னை மாதிரி லூசரா இருப்பாங்களா? நான் புத்திசாலி... அதான் ஜித்து கூட பார்ட்டிக்குப் போனேன்" என்று சொல்லிவிட்டு நெற்றியில் சரிந்த கூந்தலை ஒற்றைவிரலால் சரி செய்தபடி சினத்துடன் தனது தமக்கையை உறுத்து விழித்தாள் சாருலதா.
தங்கையின் 'லூசர்' என்ற வார்த்தை அவளுக்குள் வலியை உண்டாக்கினாலும் தன்னை விட ஆறு வயது சிறியவள், அதிலும் பள்ளி செல்லும் சிறுமி என்பதால் அவளிடம் கோபம் கொள்ள இயலாது வேதனையுடன் முறுவலித்தாள் ஹேமலதா.
"அடுத்தவங்களுக்கு உதவி பண்ணுறவங்கள இந்த உலகம் லூசர்னு தானே சொல்லும் சாரு... நீ சொன்னதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல" என்றாள் மென்மையான குரலில்.
"வாட்? ஒருத்தி உன் உதவியால வளந்துட்டு இப்போ நீ யாருனே தெரியாத மாதிரி நடிக்குறா... சினி ஃபீல்ட்ல அவளுக்கு யாரையும் தெரியாம இருந்தப்போ உன் உதவி தேவைப்பட்டுச்சு... இப்போ மேடம் பெரிய ஹீரோயின் ஆயிட்டாங்க... அதனால ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்டை அவங்களோட ஃப்ரெண்ட்னு சொல்லிக்க அவங்களுக்கு அவமானமா தானே இருக்கும்... உனக்கு வந்த ஆடிசனுக்கு நீ அவளை அனுப்பி வச்சி, அந்த டைரக்டர் கிட்ட நீ தானே ரெகமண்ட் பண்ணுன... ஆனா அவ சுயம்புவா வளந்தேன், செல்ப் மேட்னு இண்டர்வியூ குடுக்கிறா... எனக்கு அப்பிடியே பத்திக்கிட்டு வருது... அதான் ஜித்துவோட அண்ணா ஆரம்பிக்கப் போற புரொடக்சன் ஹவுஸ்ல நியூ மூவி ஸ்டார்ட் பண்ண போற நியூஸ் கிடச்சதும் அவன் கூட பேசி உனக்கு அதுல ஹீரோயின் ரோல் வாங்கித் தரலாம்னு நினைச்சேன்" என்ற சாருலதாவின் குரலில் தனது தமக்கையின் திறமைக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் கொட்டிக் கிடந்தது.
***************
"இதுக்கு நீ ரொம்ப வருத்தப்படுவ யசோதரா... இப்போ நீ ஜெயிச்சிருக்கலாம்... ஆனா ஒரு நாள் இது எல்லாத்துக்கும் நீ பதில் சொல்லித் தான் ஆகணும்" என கண்களில் தீப்பொறி பறக்க சித்தார்த் கிட்டத்தட்ட உறுமித் தீர்த்தான்.
அவனைப் பொறுமையாக இருக்கும் படி சொன்ன மாதவன் "இது உங்க வெற்றிய கொண்டாடுற நேரமில்ல ரிப்போர்ட்டர் மேடம்... ப்ளீஸ் இங்க இருந்து போயிடுங்க" என்றான் இறுகியக் குரலில்.
அவனை அலட்சியத்துடன் நோக்கினர் யசோதராவும் மயூரியும். யசோதரா ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக சித்தார்த்தை பார்த்தவள்
"இது ஷூட்டிங் ஸ்பாட் இல்ல ஹீரோ சார்.... இது போலீஸ் ஸ்டேசன்... இங்க உங்கள விசாரணைக்குக் கூட்டிட்டு வந்திருக்காங்க... இங்க அவங்க கேக்குற கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லணுமே தவிர உங்க இஷ்டத்துக்கு பஞ்ச் டயலாக் பேசி கிளாப்ஸ் வாங்கலாம்னு நினைக்காதிங்க.. எனி ஹவ் தி கிரேட் சித்தார்த்தோட பிரீசியஸ் டைமை நானும் வேஸ்ட் பண்ண விரும்பல... பை... சீ யூ... ஐ மீன் இந்தக் கேஸ்ல இருந்து வெளியே வந்தா மீட் பண்ணலாம்... டாட்டா" என்று கையசைத்துவிட்டு மயூரியுடன் சேர்ந்து அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் கிளம்பிச் செல்லவும் தன் முன்னே கிடந்த மேஜையின் மீது வெகுண்டெழுந்து தனது கரங்களால் குத்திக்கொண்டான் சித்தார்த்.
****************
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
இது நான் ரீசண்டா எழுதிட்டிருக்கிற கதை... இதுல ஒரு சின்ன டிவிஸ்ட் மறைஞ்சிருக்கு... டீசர்லயும் தான்... கதை இப்போ நந்தவனம் சைட்டிலயும் பிரதிலிபிலயும் போயிட்டிருக்கு...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro