Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 9

சிவமித்ரனும், அருள்மொழியும் சௌஜன்யாவின் வரவால் எரிச்சல் பட்டுக் கொண்டு பேசாமல் இருக்க, ஐஸ்வர்யா ஸ்ரீ சமையல் அறைக்குள் சென்று அவளுக்கு தெரிந்த அளவில் காஃபி தயாரித்து எடுத்து வந்தாள்.

"ஹாவ் யுவர் காஃபி சௌஜன்யா!" என்று ட்ரேயை அவளிடம் ஐஸ்வர்யா நீட்ட, சௌஜன்யா சாவதானமாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு, "ஐ டோண்ட் நீட் யுவர் காஃபி மிஸ். ஐஸ்வர்யா, எனக்கு சிவு டியர் கிட்ட கொஞ்சம் பேசணும்! அதனால தான் இங்க வந்தேன். ஸோ தேவையில்லாம நீ சீன் க்ரியேட் பண்ணாத. உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்காக நான் இங்க வரல!" என்றாள் அவளை கோபப் பார்வை பார்த்து!

ஐஸ்வர்யா ஸ்ரீ சிறு சிரிப்புடன், "வீட்டுக்கு வந்த கெஸ்ட்டை வெல்கம் பண்றது நம்ம ட்ரெடிஷன்
சௌஜன்யா, அதத் தான் நான் செஞ்சேன். இந்த காஃபியை குடிக்கிறதும், குடிக்காமல் போறதும் உங்க இஷ்டம். மித்து இங்கே தான் உட்கார்ந்து இருக்கான். நல்லா பேசுங்க. மாமா, வாங்க நம்ம போகலாம்!" என்று சொன்னவளிடம்

"ஏய் வாட்டர் பெட் நில்லுடீ!" என்ற அழைப்புடன் நிறுத்தினான் சிவ மித்ரன். அருள் மொழியின் புறம் திரும்பி, "ஸார், நீங்க கொஞ்ச நேரம் உள்ளே போய் இருங்க. மிஸ். சௌஜன்யா கிட்ட நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா பேசணும்!" என்று சொன்னவன் தோள்களில் கை வைத்து, "ராஜ சேகர் ஸார் பொண்ணுடா மித்ரா! என்ன இருந்தாலும்..... அவளும் ஒரு பொண்ணு, பார்த்து பொறுமையா பேசி அனுப்பு!" என்று சொல்லி விட்டு தன் மருமகளிடம் அருள்மொழி தலையசைத்து விட்டு சென்றார். சௌஜன்யாவிற்காக ஐஸ்வர்யா ஸ்ரீ தயாரித்து வைத்திருந்த காஃபியையும் தானே கையில் எடுத்துக் கொண்டு ருசித்து குடித்து முடித்தான்.

ஐஸ்வர்யாவை மித்ரன் அழைத்த விதத்தை கேட்டதும் சௌஜன்யா லேசான ஏளனத்துடன் சிரித்தாள். "அவ தான் அவ்வளவு கண்றாவியா நிக் நேம் வக்கிற அளவுக்கு இருக்கான்னு உனக்கு தெரியுதுல்ல சிவு..... தென் வொய் ஆர் யூ வேஸ்டட் யுவர் டைம் வித் ஹெர்? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தா தான் பெர்பெக்ட் கப்புள்ன்னு எல்லாரும் சொல்வாங்க. எப்போ வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி. இல்லன்னா கல்யாணம் கூட அவசியமில்லை. லெட்ஸ் ஸ்டார்ட் அவர் லைஃப்!" என்று புன்னகையுடன் சொன்ன சௌஜன்யாவை அருவருப்புடன் பார்த்து கொண்டு இருந்தான் சிவ மித்ரன்.

"இங்க பாருங்க மிஸ்.சௌஜன்யா; நமக்கு உரிமை உள்ளவங்க கிட்ட தான் கோபப்பட முடியும். அவங்களை தான் கொஞ்சவும் முடியும். உங்கள நான் பார்க்குறது இது தான் கடைசி நாள்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்! அப்பாடா நம்ம லைஃப்ல இருந்து அப்பப்போ படுத்திட்டு இருந்தவங்க கிளம்பிட்டாங்கன்னு நிம்மதியா இருக்கும்.

அதே நேரத்தில இவளை பார்க்குறது இன்னிக்கு தான் கடைசி நாள்னா நாளைக்கு விடியவே வேண்டாம், இப்பவே இன்னிக்கே என் உலகம் முடிஞ்சிடட்டும்னு எனக்கு தோணும். இதை விட தெளிவா என்னால உங்களுக்கு புரிய வைக்க முடியும்ன்னு தோணல. தயவுசெஞ்சு பிரச்சனை பண்ணாம கிளம்புங்க. உங்களுக்கு ஏத்த நல்ல பையனா கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்களும் சந்தோஷமா இருங்க. என்னையும் சந்தோஷமா இருக்க விடுங்க!" என்று கை கூப்பியவனிடம் ஐஸ்வர்யா ஸ்ரீ முன்னால் வந்து, "நான் சௌஜன்யாட்ட கொஞ்சம் பேசணும் மித்து!" என்றாள்.

அவன் கோபத்துடன், "நீ எதுவும் பேச வேண்டாம்! உள்ளே போ!" என்றான் அறையின் புறம் கையை நீட்டி.

"இல்ல மித்து! நான் கண்டிப்பா அவங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!" என்று ஐஸ்வர்யா சொல்ல மித்ரன் அவளை, "வாயை மூடிட்டு இரு அதிகப்பிரசங்கி, சொன்னா கேக்க மாட்ட?" என்று கோபத்துடன் கேட்டான். அவன் முகத்தை பார்த்து சௌஜன்யா லேசாக மிரண்டு விட்டாள். பின்னே நவீன யுக புத்தன் என்று மக்களிடம் பெயரெடுத்த நம் மித்ரன் கோபத்துடன் நின்று கொண்டு இருப்பதை பார்த்தால் உலக அதிசயம் என்று தானே நினைக்க முடியும்?

"ஏன் சிவு உனக்கு கோபம் எல்லாம் வருமா?" என்று சௌஜன்யா ஆச்சரியமாக அவனிடம் கேட்க ஐஸ்வர்யா ஸ்ரீ, "நல்லா கேட்டீங்களே சௌஜன்யா; என் கன்னத்துல ஒரு அறை விட்டான் பாருங்க, கொஞ்ச நேரம் எனக்கு காது கேக்கல! சரியான பித்து!" என்று சிரிப்புடன் சொன்னவளிடம் முறைத்த படி,

"ஏன் வரு அறைஞ்சதை மட்டும் சொல்லிட்டு நிறுத்திட்ட! அதுக்கு நான் குடுத்த ட்ரீட்மெண்டையும் சேர்த்து சொல்ல வேண்டியது தானே?" என்று அவன் சிரிப்புடன் கேட்கவும் ஐஸ்வர்யாவின் கன்னத்தில் சிவப்பு கூடியது.

"வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்? சிவு உன்னை அடிச்சான்னு சொல்ற; பட் அதுக்கும் ப்ளஷ் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்க? உனக்கு கோபம் வரலையா ஐஸ்வர்யா?" என்று கேட்டவளிடம் சிரிப்புடன், "ஆமால்ல......
இவன் மேல இப்போ நா கோபப்படணும்ல! தேங்க்ஸ் ஃபார் ரிமைண்டிங் சௌஜன்யா!" என்று சொல்லி விட்டு, "டேய் பாவா, உனக்கு நான் தர்றேன்னு சொன்ன பட்டர்ஃபிளை கிடையாதுடா! ஏன்னா நான் ரொம்ப கோபமா இருக்கேன்!" என்று கழுத்தை நொடித்து திருப்பிக் கொண்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"போடீ....குண்டம்மா, எப்போ கேட்டா எப்போ சொல்ற; உன்னைய.....உள்ள வா! கவனிச்சுக்குறேன்!" என்று சொல்லி விட்டு சௌஜன்யாவிடம் ஒரு மரியாதைக்கு வரவழைத்த ஒரு புன்சிரிப்புடன் தலையை அசைத்து விட்டு நளமகாராஜாவாக சமையல் அறைக்குள் நுழைந்து விட்டான் மித்ரன்.

தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்த சௌஜன்யாவை பார்க்க ஐஸ்வர்யாவுக்கு கஷ்டமாக இருந்தது. யாராவது அவளிடம் இருக்கும் ஒரு பொருளை சிறிது ஏக்கத்துடன் பார்த்தாலும், இல்லை அவளை விட அவர்களுக்கு அந்த பொருளின் தேவை அதிகம் என உணர்ந்தாலோ சிறு வயதிலிருந்தே தன் தாயிடம் சம்மதம் பெற்று அந்த பொருளை மனநிறைவுடன் அடுத்தவர் கையில் கொடுத்து விடுவாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

ஆனால் அப்படி தூக்கி கொடுக்க முடியாத அவள் மித்துவை அல்லவா இவள் கேட்டு தொங்கிக் கொண்டு இருக்கிறாள் என்று சௌஜன்யாவின் மீது சற்று பரிதாபம் ஏற்பட்டது.

"இங்க பாருங்க சௌஜன்யா! மித்ரனை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு எதுக்குமே ஆசைப்பட  முடியாது. உங்களுக்கு ஒரு ரிச்சான லைஃப் வாழணும்னா என் ப்ரெண்ட்ஸ் சில பேர் நம்பர்ஸ் தர்றேன்! எல்லாரும் யூஎஸ்ல செட்டில்டு; அழகான இண்டியன் கேர்ள தான் கல்யாணம் பண்ணிக்குவோம்ன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருக்காங்க. மித்ரன் உங்க அழகுக்கு செட் ஆகல சௌஜன்யா, நீங்க ரெண்டு பேரும் பொருத்தமே இல்லாத ஜோடி தெரியுமா? ஸோ உங்களுக்கு ஏத்த மாதிரி ராயல் பேமிலியில, ஹாண்ட்ஸமா ஒரு பையனை தேடி கண்டுபிடிக்கிறீங்க...கல்யாணத்துக்கு இன்விடேஷன் ப்ரிண்ட் பண்ணி கொண்டு வந்து உங்களை இன்சல்ட் பண்ணின இந்த மித்ரன் முகத்தில வீசிட்டு போறீங்க!" என்று புன்னகையுடன் ஐஸ்வர்யா சொல்ல, சௌஜன்யா ஒரு பெருமூச்சுடன் அவளிடம் ஆமோதித்தாள்.

"நான் ஹாஸ்பிட்டல்ல பார்க்குற சிவு இன்னிக்கு ரொம்ப வித்தியாசமா தெரியுறான் ஐஷு. உன் கிட்ட கோபப்படுறான், திட்டுறான், அடிக்க வேற செய்வான்னு நீயே சொல்ற; இந்த மாதிரி க்வாலிட்டீஸ் இருக்கிற ஒருத்தனை எல்லாம் என்னால அடாப்ட் பண்ணிக்க முடியாது! நான் சொல்றதை கேக்க முடிஞ்சா தான் அவனை என் லைஃப் பார்ட்னரா செலக்ட் பண்ணி என் ப்ளானை பத்தி அவன் கிட்ட சொல்லி யோசிக்க வைக்கணும்! அதனால சிவு டியரை நீயே வச்சுக்க! உன் பிரண்ட்ஸ் சர்க்கிள்ல என்னை இண்ட்ரோ பண்ணி விடு. பார்த்துக்கலாம். சீக்கிரம் கமிட்மெண்ட்டுக்கு ரெடி ஆகணும். நான் சிவுவை ரிஜெக்ட் பண்ணினதால அவனை அக்செப்ட் பண்ணிக்க உனக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்லையே?" என்று கேட்டவளிடம்

"சேச்சே, அப்படி எதுவும் இல்லை சௌஜன்யா!" என்று புன்னகையுடன் அவள் கைகுலுக்கிய ஐஸ்வர்யாவிடம் ஒரு அளவுப் புன்னகையை உதிர்த்து விட்டு, "மறந்துடாதே; உன் ஹெல்ப் இருந்தா தான் நான் சிவு கிட்ட கெத்தா நின்னு என் மேரேஜ் பத்தி அனௌன்ஸ் பண்ண முடியும்!" என்று சொன்னவளிடம் புன்னகையுடன் தலையாட்டினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

சௌஜன்யாவின் கார் கிளம்பியதும் அதுவரை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த சிரிப்பை அவள் உதிர்க்க, பின்புறம் இருந்து அவளது வாயை மூடி அவனது வீட்டிற்கு அவளை தள்ளிக் கொண்டு சென்றான் சிவ மித்ரன்.

வீட்டிற்கு வந்ததும் அவளை உள்ளே நுழைத்து கதவை சாற்றி கதவிலேயே சாய்ந்து கொண்டு நின்று கொண்டு இருந்தவனிடம், "என்ன மித்து? எதுக்கு இப்போ என் வாயை மூடி இங்க கூட்டிட்டு வந்த?" என்று கேட்டவளிடம்

"உன் கிட்ட கொஞ்சம் பேசணும்! பேசிட்டு இருக்கும் போது நடுவில ஸார் வந்துட்டாங்கன்னா கஷ்டம்; அது தான் இங்க கூட்டிட்டு வந்தேன். எப்படி....எப்படி; என்னை கல்யாணம் பண்ணிக்குற பொண்ணு எதுக்குமே ஆசைப்பட முடியாதா; நானும் அவளும் பொருத்தமான ஜோடி இல்லையா? நீ அவளை பயங்கரமா மெஸ்மரைஸ் பண்ணி நீ நினைக்கிறதெல்லாம் அவளை பேச வச்சுட்டு இருக்க; அது கூட தெரியாத அந்த பேக்கு நான் ரிஜெக்ட் பண்ணினவனை நீ அக்செப்ட் பண்ணிக்க ப்ராப்ளம் இல்லயேன்னு கேட்டு போறா? ஆனாலும் அவளுக்கு ப்ரோக்கர் வேலை பார்த்து எந்த அப்பாவியையாவது அவ தலையில கட்டி விடணும்ன்னு உனக்கு என்னடீ தலையெழுத்து?" என்று கேட்டவனிடம்

"நான் சொன்ன எல்லாமே உண்மை தான் மித்து! உன்னை மாதிரி ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா மொத்த ஆசையையும் உன் மேல தான் வைக்க முடியும். அதுக்கு மேல வேற எதையும் ஆசைப்பட தேவையே இல்லையே.... நீயும், அவளும் பொருத்தமான ஜோடி இல்ல தான்! ஏன்னா என் மித்து பாவா எனக்குல்ல பொருத்தமான ஜோடி....! ராமாயணத்தில சூர்ப்பனகை முதல்ல ராமனை பார்த்து ஆசைப்பட்டாளாம். ராமர் அவளுக்கு ஓகே சொல்லலையாம். அதுக்கப்புறம் லஷ்மணனை பார்த்து ஆசைப்பட்டாளாம். அதே கேரக்டரோட அப்படியே மார்டன் சூர்ப்பனகையா இருக்காடா நம்ம சௌஜன்யா!" என்று சிரிப்புடன் சொல்லிக் கொண்டு இருந்தவளிடம்

"வரு பேபி அந்த சௌஜன்யா பேசுற பேச்சுக்கெல்லாம் இனிமேல் இந்த ஏரியா பக்கமே அவளை வர விடாத.... பொண்ணாடீ  அவ? கொஞ்சம் கூட கூசாமல் என்னென்ன பேசுறா? ச்சீ! எப்பவும் அவ கிட்ட கொஞ்சம் கவனமா இரு. சரி அவ டாபிக்கை விடு, நம்ம டாபிக்குக்கு வருவோம். இன்னிக்கு உன் கையால போட்ட காஃபியை குடிச்சிருக்கேன். எனக்காக நிறைய ஊமை குத்தெல்லாம் அந்த சௌஜன்யாவுக்கு குடுத்து இருக்க. அப்புறம் உன் பா......வ்வா! அப்ப்ப்பா, சச் அ மேஜிக்கல் வேர்ட்.......... இதெல்லாம் குடுத்த உனக்கு பெரிசா ஏதாவது குடுக்கணுமே.....!" என்று புன்னகையுடன் மித்ரன் அவளருகே வர ஐஸ்வர்யா எச்சில் விழுங்கினாள்.

"என்ன மித்து பண்ண போற!" என்று கேட்டவளிடம்

"ம்ஹூம்! சொன்னா நீ செய்ய விட மாட்ட வருக்குட்டி!" என்று சொல்லி அவள் காதருகில் தன் மூச்சையும், அவள் முகத்தில் தன் விரல்களையும் கொண்டு வருடல்களை தொடர்ந்தவனிடம் மெல்லிய குரலில், "இப்போ நீ தான் என்னை மெஸ்மரைஸ் செஞ்சுட்டு இருக்க மித்து! நீ ரொம்ப கெட்ட பையன், இரு உன்னை மாமாட்ட சொல்லி குடுக்குறேன்!" என்று சொன்னாள் ஐஸ்வர்யா ஸ்ரீ. அவனை அவள் அகலவும் பிரியப் படவில்லை. அணுகவும் முயற்சிக்கவில்லை. இருக்கும் நிலையிலேயே எவ்வளவு கணம் வேண்டுமானாலும் நிற்பேன் என்ற படி ஒரு மோன நிலையில் கண்கள் சொருகி இருந்தாள்.

"வரு மேடம், கிஸ் கேட்குற நீங்க ஒழுங்கு புள்ளை, உங்க பக்கத்தில சும்மா நின்னுட்டு இருக்கிற நாங்க கெட்ட பையனாக்கும்..... நல்லா இருக்குடீ உங்க லாஜிக்!" என்று சொன்னவன் சட்டையை பற்றிக் கொண்டு, "செய்ற சேட்டை எல்லாம் செஞ்சிட்டு நீ சும்மா நின்னுட்டு இருக்கியாடா? இப்போ நீ கிஸ் குடுப்பியா? குடுக்க மாட்டியாடா?" என்று கேட்டவளிடம் புன்முறுவலுடன்,

"வரு பேபி, இப்போதைக்கு கிஸ் வேண்டாம். அதை விட ஸ்பெஷலா உனக்கு ஒண்ணு குடுக்கட்டுமா?" என்றான் கண்சிமிட்டி.

"ம்ஹூம்...மித்து! எனக்கு பயமாயிருக்கு. நீ எனக்கு
என்ன குடுக்கப் போறன்னு சொல்லு..... அப்புறம் தான் ஓகே சொல்லுவேன்!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ. 

"ஏய் வாட்டர் பெட், உனக்கு என்ன நான் பேபியா குடுக்கப் போறேன்? எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? குடுக்கறதை பத்திரமா பார்த்துப்பியாடீ?" என்று கேட்டவனிடம்

"மூணு மணி நேரமா இதை குடுக்குறேன், அதை குடுக்குறேன்னு வெட்டியா பில்டப் தான் குடுத்துட்டு இருக்க, அப்படி என்னத்த தான்டா பாவா எனக்கு குடுக்கப் போற?" என்று கேட்டவளிடம் ஒரு சிறு அட்டைப் பெட்டியை "டொண்டடொங்க்ய்" என்ற பின்னணி இசையுடன் கையில் கொடுத்தான் சிவ மித்ரன்.

ஊரை வெல்லும் தோகை நானே; உன்னால் இன்று
தோற்றுப் போனேன்!
கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே!

நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்; நித்தம் வாங்கும்
மூச்சுக் காற்றாய்!
உன்னை சூழ்கிறேன், நான் உன்னை சூழ்கிறேன்!

காற்றில் வைத்த சூடம் போல காதல் தீர்ந்து போகாது!
உன்னை நீங்கி உஷ்ணம்
தாங்கி என்னால் வாழலாகாது - அன்பே வா!

வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro