Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 5

சிவமித்ரன் சௌஜன்யாவின் பேச்சால் எரிச்சலில் இருந்தான். ஐஸ்வர்யாவின் கழுத்தில் செஜன்யாவின் விரல்கள் அழுந்தியதால் ஏதாவது பிரச்சனையா என்று அவளருகில் நின்று அவள் கழுத்தை உன்னிப்பாக பார்த்து தடவி விட்டான். "வரு, தேவையில்லாம நீ அவ கிட்ட போய் பேசி உன்னை ஹர்ட் பண்ணிட்டு போய்ட்டா; அவ செஞ்சதுக்கு நான் உங்கிட்ட ஸாரி கேக்குறேன். மன்னிச்சிடு!" என்று அவளிடம் கைகூப்பினான் மித்ரன்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல, ஃப்ரீயா விடு மித்து! டென்ஷன் ஆகாதப்பா!" என்று ஐஸ்வர்யா சமாதானம் செய்து கொண்டிருக்க அவன் கோபத்தில் இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.

அருள்மொழி அவனிடம், "என்னடா மித்ரா அந்த பொண்ணு இவ்வளவு பேசிட்டு போயிட்டா! உன் சீஃப் பொண்ணுங்கிறதால நான் சும்மா இருந்தேன். நம்ம வீட்டுக்கு வந்து ஐசு கிட்ட இவ்வளவு பேசுறதுக்கு, இவ மேல கைய வைக்கிறதுக்கு அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும், நீ ஏன்டா ஐசு அவளை பேச விட்டுட்டு சும்மா இருந்த? அவ கன்னத்துல ஒரு அறை விட்ருக்கலாம்ல?" என்று கேட்ட அருள் மொழியிடம்,

"நீங்க சொன்ன காரணத்தை தான் மாமா நானும் யோசிச்சுட்டு அமைதியா இருந்துட்டேன். ஏன் மித்து அவங்க உன் கிட்ட இவ்வளவு பொஸஸிவா இருக்காங்களே, அவங்களை கல்யாணம் பண்ணிக்கறதை பத்தி நீ ஒரு தடவை யோசிச்சா என்ன? நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோமோன்னு வேற சந்தேகப்பட்டுட்டு போறாங்க!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ சிறு சிரிப்புடன்.

சிவ மித்ரன் அவளை ஒரு முறை மேலும் கீழும் பார்த்து விட்டு, "அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ ப்ரோக்ராம் பண்ற மாதிரி தான் நான் வாழணும் வரு. அவளுக்கு வர்ற லைஃப் பார்ட்னர் எப்படியெல்லாம் இருக்கணும்னு அவளுக்கு நிறைய ஆசைகள் இருக்கு. அவ மோல்டு பண்ணி விளையாட நான் ஒண்ணும் அவ கையில இருக்கிற பொம்மை இல்ல, என்னோட எந்த இயல்பும் அவளுக்கு ஒத்துப் போகாது. நான் யாருன்னு ஒரு வார்த்தையில சொல்லுன்னு உன் கிட்ட கேட்டா நீ என்ன சொல்லுவ வரு?" என்று அவளிடம் கேட்டான் மித்ரன்.

"என் பிரெண்ட் மித்து ரொம்ப டேலண்ட், பொறுமைசாலின்னு சொல்லுவேன்!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ பெருமையாக.

சிறு புன்னகையுடன், "அந்த சௌஜன்யாட்ட போய் என்னை பத்தி கேட்டுப் பாரு! பொழைக்க தெரியாத பொறம்போக்கு, சைக்கிள்ல சுத்திட்டு இருக்கிற வெத்துவேட்டுன்னு சொல்லுவா. நம்ம கிட்ட இருக்கிற பணத்தை வச்சு தான் நமக்கு அவ தர்ற மரியாதையும், அவமரியாதையும்; என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டான்னா என்னையும், ராஜசேகர் ஸாரையும் வச்சுட்டு சிட்டிக்குள்ள ஒரு ஹாஸ்பிடல் ஓப்பன் பண்ணி அங்க ரூல் பண்ணிட்டு இருக்கணும்ங்கிறது தான் அவளோட ப்ளான்; அதுக்கு தான் இந்த காதல், கல்யாணம் இந்த மாதிரி ட்ராமா எல்லாம்; அவளை நான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு
இப்போ கூட சொல்லுவியா வரு?" என்று கேட்டவனிடம் இல்லையென தலையை அசைத்து விட்டு, அருள்மொழியிடம் திரும்பி, "மாமா மித்து மாதிரி ஒரு நல்ல பையனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கு ஓகேவா?" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

அருள்மொழி சிரிப்புடன், "எப்படா நீ இந்த கேள்விய கேப்பன்னு மாமா இவ்வளவு நாளா வெயிட்டிங்டா ஐசு.... மித்ரன் நான் வளர்த்த பையன்டா! என் பிள்ளை, அவனை நீ கல்யாணம் பண்ணிக்கறதுக்கு நான் என்ன தடை சொல்ல போறேன்? அவனுக்கு சம்மதமான்னு கேளு. அடுத்த வேலையா முஹுர்த்தம் பார்த்துடலாம்!" என்றார் அருள்மொழி.

"ம்! மாமாவும் ஒண்ணும் அப்ஜெக்ஷன் சொல்லல! நீ சொல்லு மித்து, நான் உனக்கு வரப்போற வொய்ப் ஆ இருந்தா நம்ம கல்யாணத்துக்கு உனக்கு ஓகேவா?" என்று கேட்டவளிடம்

"இல்ல வரு! நான் வந்து..... உனக்கும் எனக்கும் நடுவில........விட்டுடு வரு; நாம இனிமேல் இந்த டாபிக்கை பத்தி பேச வேண்டாம்!" என்று சொல்லி விட்டு அவனுடைய வீட்டிற்கு கிளம்பி விட்டான் சிவ மித்ரன்.

"ஏன் மாமா மித்து இப்படி பேசிட்டு போறான்?" என்று கேட்ட தன் மருமகளிடம் அருள்மொழி

"நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா அவனுக்கு டபுள் ஓகேடா ஐசு! ஆனா ஏதோ ஒரு தயக்கத்தால குழப்பிட்டு இருக்கான்னு நினைக்கிறேன். நீ அவன் கிட்ட பேசிப் பாரு. ஆனா அவனுக்கு எந்த விதமான மனசங்கடத்தையும் உண்டாக்கிடாத!" என்று அவள் தலையை வருடி விட்டுச் சென்றார் அருள்மொழி.

"வந்த கொஞ்ச நாள்லயே உங்க அளவுக்கு அவன் மேலயும் ஒரு அன்பு வந்துடுச்சு மாமா, அவன் கஷ்டப்படுறதை தாங்கிக்க முடியாம தான் கல்யாணம் பண்ணிக்க கேட்டேன். அப்புறம் நானே எப்படி அவனை கஷ்டப்படுத்துவேன்? நான் அவன் கிட்ட பேசுறேன் மாமா!" என்று சொல்லி விட்டு அவனது வீட்டிற்கு சென்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

கட்டிலில் அமர்ந்து தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்து இருந்தவனிடம், "மே ஐ கம் இன் மாஸ்டர்?" என்று கேட்டபடி அவனருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

"வெளியே இருந்து உள்ளே வர்றதுக்கு முன்னாடி இந்த டயலாக்கை சொல்லுவோம். பக்கத்தில வந்து உட்கார்ந்துட்டு சொல்லக் கூடாது செல்லம்!" என்று அவன் புன்னகையுடன் சொல்ல ஐஸ்வர்யா ஸ்ரீ கோபத்துடன் அவனை முறைத்தாள்.

"என்னடா எப்போ பார்த்தாலும் உதட்டுல ஒரு ஸ்மைலை ஒட்டி வச்சுட்டு அலையுற, அம்மா எனக்கு அபிராமி அந்தாதி சொல்லி குடுத்தாங்க. அதில மனைவிக்கு ஒரு டெஃபனிஷன் சொல்லி இருப்பாங்க. உனக்கு தெரியுமா?" என்று கேட்டவளிடம்

"ஸாரிம்மா! எனக்கு யாரும் சொல்லிக் குடுக்கல. நீயே சொல்லி குடு. அதுக்கு முன்னாடி எதுக்கு இந்த கேள்வியை கேட்டன்னு கூட சொல்லிடு!" என்றான் சிவா.

"ம்! கண்டிப்பா; அதுக்கு தானே வந்திருக்கேன். சொல்லாம எங்க போகப் போறேன்? அன்பு அகலாத மனைவி வேணும்னு அந்த பாட்டுல வரும் மித்து! ஆனா நான் என்னோட சைஸ்ல ரொம்ப அகண்டு இருக்கேன் பார்த்தியா? அதுனால தான் உனக்கு என்னை பிடிக்கலையா மித்து?" என்று அவன் முகத்தை தன் முகத்திற்கு நேராக நோக்கி கேட்டவளை சிறிது நேரம் கண்ணிமை கூட அசைக்காமல் பார்த்து விட்டு, "உன்னை பிடிக்கலைன்னு நான் எப்போ சொன்னேன்டா வரு? உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!" என்றான் மித்ரன் தரையை பார்த்த படி.

"டேய் மித்து! தரையில என்னத்தை வேடிக்கை பார்த்துட்டு இருக்க? என் கண்ணை பார்த்து பேசு. ஓகே. என்னை பிடிச்சிருக்கு. அப்புறம் என்ன பிரச்சனை? ஒரு கமிட்மெண்ட்டும் இல்லாம சும்மா வெட்டியா சுத்திட்டு இருக்கேனே, அதனால யோசிக்கிறியா மித்து?" என்று கேட்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"இல்ல வரு! உன்னோட மைனஸ்ன்னு நீ சொல்ற விஷயத்தை எல்லாம் நான் யோசிக்கவேயில்ல. ஆனா.... சௌஜன்யாட்ட இருக்கிறத விட பணமும், அந்தஸ்தும் உன் கிட்டயும் இருக்கேடா?...... என்னோட மனைவியா வர்ற பொண்ணுக்கு புடவையில இருந்து ஸேஃப்டி பின் வரைக்கும் நான் தான் பார்த்து பார்த்து வாங்கித் தரணும். இது சத்தியமா நீ சொன்ன டாமினேஷன் கிடையாது. ஆனா என்னோட பணத்தை எனக்கு வரப்போறவளுக்காக செலவு செஞ்சா ரொம்ப சந்தோஷமா இருக்கும்! அந்த நிலைமை உன்னை கல்யாணம் செஞ்சா நிச்சயமாக வரப் போறதில்லை!" என்றான் தீர்மானமாக.

"வெரிகுட் மிஸ்டர். சிவ மித்ரன், நல்ல பாலிசி எல்லாம் வச்சிருக்கீங்க.... பட் பணம் இருக்கிற அப்பா, அம்மாவுக்கு மகளா பொறந்தது என்னோட தப்பில்ல. இதே வீட்ல நீ கொண்டு வர்ற சேலரியை வச்சு பேமிலியை ரன் பண்ணணும். அவ்வளவு தானே உன் வொய்ப் கிட்ட உன்னோட எக்ஸ்பெக்டேஷன்?" என்று கேட்டவளிடம்

"எனக்கு ஸாரை தவிர வேறு யாரும் இல்லை வரு. அதுவும் ஒரு பெரிய இஷ்யூ!" என்றான் வலி நிறைந்த குரலில்.

"ம்ஹூம்! தட்ஸ் நாட் அட் ஆல் அ இஷ்யூ! குழந்தையா இருக்கும் போது நீ ஏதோ ஒரு வகையில மாமா கிட்ட வந்து சேர்ந்ததுக்கு நீ எப்படி மித்து பொறுப்பாக முடியும்? அப்படி பார்த்தா நானும் யாரும் இல்லாத ஒரு பாவமான பொண்ணு தானே?" என்று சொன்னவளை நெருங்கி அருகில் வந்து அணைத்துக் கொண்டான் மித்ரன்.

"என்ன வார்த்தை சொல்லிட்ட வரு? நானும், ஸாரும் உயிரோட தானே இருக்கோம்? அப்புறம் ஏன் இப்படி வலிக்கிற மாதிரி வார்த்தை எல்லாம் பேசுற வாட்டர் பெட்?" என்று அவளை திட்டினான்.

"எனக்கு மனசுல தோணுற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு மித்து! எந்த உரிமையில என்னை நீ இப்போ கட்டிப் பிடிச்சுட்டு நிக்குற? எந்த உரிமையில மனம் கொண்ட மங்கை நீயோ ன்னு கவிதை எழுதின? உன் ரிலேஷனா இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுது வருன்னு ஏன் சொன்ன? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் மட்டும் சொல்லிடு! அதுக்கப்புறம் உன் கிட்ட வேற எதுவும் கேக்க மாட்டேன்!" என்றாள் ஐஸ்வர்யா.

"எனக்கு என்னாச்சு வரு? நீ என்னோட தகுதிக்கு எல்லாம் அப்பாற்பட்டவன்னு மூளை சொன்னாலும் மனசு உன்னை தான் தேடுது. நான் செய்றது சரியா தப்பான்னு கூட எனக்கு தெரியல, ஒரு முடிவுக்கு வர முடியாம குழப்பமா இருக்குடா!" என்றவனிடம்

"நான் திடீர்னு கேட்டதனால உனக்கு ஒரு மாதிரி தயக்கமா இருக்கலாம். டேக் யுவர் டைம் மித்து! என்னை பொறுத்தவரையில் நீ என் லைஃப் பார்ட்னர்ன்னா எனக்கு ஓகே. உன் விஷயம் நீ தான் யோசிச்சு சொல்லணும்!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து கொண்டவனிடம், "ஒன் வீக் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல மித்து! ஒரு டெஸிஷன் எடு. அது பாஸிட்டிவா இருந்தா சந்தோஷம்! இல்ல நம்ம ரெண்டு பேரும் இப்படி ஃப்ரெண்ட்ஸ் ஆகவே கண்டினியூ பண்ணலாம்ன்னு நீ சொன்னாலும் ஓகே தான்! என்னால ஃபோர்ஸ் பண்ணி யார் கிட்டயும் அன்பை தாங்கன்னு கேக்க முடியாது. உன் கிட்ட கூட அப்படித்தான் மித்து! ரொம்ப குழப்பிக்காம தூங்கு. மார்னிங் ப்ராக்டிஸ்ல மீட் பண்ணலாம்! பை மித்து! குட்நைட்!" என்று அவள் சொல்ல மித்ரன் மகிழ்வுடன் அவளை வழியனுப்பி வைத்தான்.

சௌஜன்யாவிடம் ராஜசேகர் வீட்டில் வாக்குவாதம் புரிந்து கொண்டு இருந்தார். "பேபி, மித்ரா உன்னை லவ் பண்ணினா அவனை உனக்கு கல்யாணம் செய்து வைக்கிறதுல எனக்கு மனப்பூர்வமான சம்மதம். ஆனா அவன் தான் உன்னை விரும்பலையே ம்மா! அதை தெளிவா சொல்லவும் செஞ்சுட்டானே? நானும் அம்மாவும் உனக்கு நீ விரும்பிய மாதிரி ஒரு வாழ்க்கையை வாழறதுக்கு சுதந்திரம் குடுத்துருக்கோம். ஆனா மித்ரனோட வாழ்க்கையில அத்துமீறி நுழைஞ்சு குழப்பம் பண்றதுல எந்த விதமான நியாயத்தையும் நீ சொல்ல முடியாது. கண்டிப்பா உன் மனசை புரிஞ்சுட்டு உன் கையை பிடிச்சு கூட நடக்கிற ஒருத்தனை நீ மீட் பண்ணுவ. மித்ரா இதுவரைக்கும் அவன் வாழ்க்கையில குறைந்த பட்ச அளவு மகிழ்ச்சியை கூட அனுபவிக்காதவன் பேபி, ஒரே பொண்ணுன்னு உனக்கு ரொம்ப செல்லம் குடுத்து வளர்த்து உன்னை கொஞ்சம் பிடிவாத குணத்தோட வளர விட்டுட்டோமோன்னு எனக்கு ரொம்ப கவலையா இருக்கு! எல்லார் கிட்டயும் கொஞ்சம் ஃப்ளெக்சிபிளா இரு பேபி, அப்போ பிரச்சனையே இல்ல!" என்று ராஜசேகர் அவளிடம் நிதானமாக அறிவுரை கூறிக் கொண்டிருக்க அவை அனைத்தும் பொன்னான நேரத்தை வீணடித்ததற்கு சமம் என்பது போல் சௌஜன்யா மொபைலை கைகளில் வைத்து கொண்டு வரிசையாக யாருக்கோ செய்திகளை அனுப்பி கொண்டு இருந்தாள்.

"சௌஜு, அப்பா உங்கிட்ட பேசிட்டு இருக்காங்க, நீ பாட்டுக்கு போன்ல பிஸியா இருந்தா என்ன அர்த்தம்?" என்று போனை பிடுங்கிய தன் தாயை முறைத்தவள், "மா! அந்த சிவு கிட்ட என் விருப்பத்தை அத்தனை தடவை சொல்லியும் அவன் என்னை கொஞ்சம் கூட மதிக்காம அந்த ஐஷுக்கு இம்பார்டென்ஸ் குடுக்குறான்ல! அவ கிட்ட இருக்கிற பணத்துக்காக தான் குண்டா ரோடு ரோலர் மாதிரி இருக்கிற அவளைப் போய் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றான்னு நினைக்கிறேன். ஆனா
இந்த முடிவு எடுத்ததுக்காக ரொம்ப ஃபீல் பண்ணுவான்!" என்று மனதிற்குள் இருந்த வஞ்சத்தை வார்த்தையாக கொட்டிக் கொண்டு இருந்தாள் சௌஜன்யா.

வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro