💖 வஞ்சி மனம் 4
"ஏய் அழுமூஞ்சி, எங்கேயாவது வெளியே போகலாம்ன்னு நினைச்சு ஆசையா கிளம்பி வந்தேன். நான் அப்படி என்ன பேசுனேன்னுட்டு நீ இவ்வளவு எமோஷனலாகி கண்கலங்கிட்டன்னு எனக்கு தெரியலயே..... ஆனாலும் ரொம்ப ஸாரி மித்து!" என்றாள் ஐஸ்வர்யா அவன் தோள்களை வருடியபடி.
"என்னையும் உங்கப்பா, அம்மா, மாமா மாதிரி ஒரு ரிலேஷனா தான் நினைச்சேன்னு சொன்னியே.....இது வரைக்கும் என் வாழ்க்கையில யார் கிட்டயும் இந்த விஷயத்தை நான் எதிர்பார்த்தது இல்ல வரு! ஆனா என்னோட மனசு ரொம்ப ஏங்கியிருக்கு போலிருக்கு! அதனால தான் புதுசா கண்ணீர் எல்லாம் வருது. எனக்கும் கூட ஃபீல் பண்ணி அழத் தெரியும்ங்கிற விஷயமே இன்னிக்கு தான் தெரியுது வரு. தேங்க்ஸ்டா! ரொம்ப தேங்க்ஸ்! உடனே வீட்டுக்கு போக வேண்டாம் வரு; வேற எங்கேயாவது போயிட்டு அப்புறமா வீட்டுக்கு போகலாமா?" என்றவனிடம்
"எங்க போகலாம் மித்து? மால், தியேட்டர், ரெஸ்ட்டாரென்ட் இல்லன்னா டிஸ்கோதே....!" என்றவளை முறைத்த மித்ரன்
"மனசு ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கு வரு. அநாவசியமா நிறைய பணம் குடுத்து தேவையில்லாத விஷயங்களை மனசுக்குள்ள திணிக்க வேண்டாம். பீச்சுக்கு போலாமே வரு? அலையை பார்த்துட்டு சும்மா உட்கார்ந்து இருந்தாலே ரொம்ப ப்ளசண்டா இருக்கும்!" என்றான் புன்னகையுடன்.
"ஓ! அப்படியா? நான் இதுவரைக்கும் ட்ரை பண்ணதில்லையே மித்து! நீ கூட இருக்க....ஸோ மாமா என் ஸேஃப்டி பத்தி வொர்ரி பண்ண மாட்டாங்க. நாம பீச்சுக்கே போகலாம் மித்து!" என்று சொன்னவள் காரை ஜிபிஎஸ்ஸின் உதவியுடன் கடற்கரைக்கான வழித்தடத்தில் திருப்பினாள்.
ஆனால் கடற்கரைக்கு செல்வதற்குள் மழை பிடித்துக் கொள்ள ஐஸ்வர்யா குதூகலத்துடன் அவனைப் பார்த்து, "மித்து! ப்ளீஸ் மழையில நனைஞ்சுட்டு வரட்டுமா?" என்றாள் கெஞ்சலுடன்.
"உடம்புக்கு எதுவும் செய்யாதா வரு?" என்று கவலையாக கேட்டவனிடம்
"அதெல்லாம் ஒண்ணும் செய்யாது மித்ரன் ஸார்! ஏதாவது செஞ்சா இரண்டு நாளைக்கு டேப்லெட்ஸ் போட்டுக்கிட்டா போச்சு! போகட்டுமா?" என்று பவ்யமாக கேட்டு அவன் அனுமதிக்காக காத்துக் கொண்டு இருந்தவளிடம் அதற்கு மேல் மறுப்பு சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. பெரிதாக தலையை ஆட்டி விட்டான். காரை ஓரமாக நிறுத்தி விட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த ஐஸ்வர்யாவை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்த மித்ரன் திடீரென தனது ரைட்டிங் பேடை எடுத்து அதில் சில வரிகளை எழுதத் துவங்கினான்.
சுமார் இருபது நிமிடங்கள் மழையில் நனைந்து விட்டு வண்டிக்குள் வந்த ஐஸ்வர்யாவின் கையில் ஒரு பேப்பரை கிழித்து தந்தான் சிவமித்ரன்.
"என்ன மித்து இது?" என்று கேட்டவளிடம்
"உன்னை பார்த்துட்டு இருந்தப்போ ஒரு கவிதை தோணுச்சு! அதை எழுதி வச்சேன். உன் பெர்மிஷன் இல்லாம உன்னை வர்ணிச்சு கவிதை எழுதுறது தப்புல்ல.... அதான் உங்கிட்ட காட்டிடலாம்ன்னு நினைச்சேன்!" என்றான் சிறு சங்கோஜத்துடன்.
"வாவ்! சூப்பர்டா! உனக்கு கவிதை எல்லாம் எழுத வருமா? பட் ரொம்ப ஸாரி மித்து! அம்மா அவங்களோட சொந்த முயற்சியில தான் எனக்கு தமிழ் சொல்லி குடுத்தாங்க. ஸோ எனக்கு தமிழ் பேசத் தெரியும். ஆனா எழுதவும், வாசிக்கவும் தெரியாது. அதனால நீயே படிச்சு காமியேன்!" என்று சொன்னவளிடம் புன்னகையுடன் தாளை வாங்கி அந்த கவிதையை வாசித்தான் மித்ரன்.
உயிர் கொண்ட சிலை
நீயோ!
மணம் கொண்ட மலர்
நீயோ!
இதழ் கொண்ட சுவை
நீயோ!
என் மனம் கொண்ட மங்கை நீயோ!
நின்றாய் உன் புன்னகையால் எனை வென்று!
தந்தேன் உன் கைகளில்
இனிப்பொன்று!
ஏற்றேன் உன்னை ஓர் உறவாக இன்று!
கண்டேன் உன் விழிகளில்
கரிசனம் அது நன்று!
என்று அவன் முடிக்கவும், "சூப்பர்ப்பா! உனக்குள்ள நிறைய டேலண்ட்ஸை வச்சிருக்க போலிருக்கு; இன்னொரு நாள் உன் கவிதைக்காக உனக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட் தர்றேன்! ஓகேவா மித்து!" என்று கேட்டவளிடம் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு, "லேட்டாகிடுச்சு வரு! வீட்டில ஸார் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. போகலாம்!" என்றான் மித்ரன்.
"சரிப்பா கிளம்பலாம்!" என்று சொல்லி விட்டு அவள் கிளம்பிய போது அவளுக்கு அலைபேசியில் ஓர் அழைப்பு வந்தது.
"ஹாய் அமிர்! ஹவ் ஆர் யூ?" என்று ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் சென்ற அவள் உரையாடலில் அவன் இவளுடைய நெருங்கிய நண்பன் என்று தெரிந்து கொண்டான் சிவா.
போன் உரையாடலை முடித்தவளிடம், "யாரு வரு அமிர்? என்னை மாதிரி அவனும் உனக்கு ப்ரெண்டா" என்று கேட்டவனிடம்
"உன்னை மாதிரியே அவளும் ரொம்ப க்ளோஸ் மித்து! என்ன அவ கூட ப்ரெண்ட்ஷிப் வச்சுக்க ரொம்ப நாள் ஆச்சு. உன்னைய பார்த்த நாள்லயே ப்ரெண்ட் ஆகிட்டேன்!" என்றாள் ஐஸ்வர்யா சிரிப்புடன்.
"அமிர்ன்னு கூப்பிட்ட.... ஆனா அவள்ன்னு சொல்ற! எப்படி வரு?" என்று சற்று குழம்பியவனிடம்
"அவ பேரு அமிர்தவர்ஷினி; ஸோ ஷார்ட்டா அமிர், எனக்கு ஒரு பாய் பிரண்ட் இருக்கான்னு நினைச்சு டென்ஷன் ஆகிட்டியா மித்து?" என்று கேட்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"என்ன வரு அழகான தமிழ் பேரை இப்படியா கொலை பண்ணுவ...... உனக்கு பாய் பிரண்ட்ஸ் இருந்தா கூட அதில என்ன தப்பிருக்கு வரு? பசங்க கூட பொண்ணுங்க ப்ரெண்ட்லியா இருக்கிறது தப்புன்னு நினைக்கிற அளவுக்கு நான் குறுகிய மனப்பான்மை உள்ளவன் இல்லம்மா; எதுவுமே லிமிட் க்ராஸ் பண்ணாம இருக்கிற வரைக்கும் தப்பில்ல. எனக்கும் கூட நிறைய பேர் கிட்ட ப்ரெண்ட்லியா இருக்கணும்ன்னு தான் ஆசை. ஆனா எங்க ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்ற என்னோட கொலீக்ஸ் எல்லாம் ஒரு விசித்திரமான பிறவியை பார்க்கிறது மாதிரி என் கிட்ட லுக் குடுக்குறாங்க, ஸோ அவங்க கிட்ட வொர்க்ஸ் தவிர வேறு எதையும் ஷேர் பண்ணிக்குறது இல்ல. நம்ம ப்ரெண்ட்ஸ் கேஃங் எல்லாரும் குட்டி பசங்க தான். அவங்க எல்லாருமே ஹெல்த்தியா, ஃபிட்டா இருக்கணும். அது தான் இப்போதைக்கு எனக்கு இருக்கிற ஒரு ரெஸ்பான்ஸிபிளிட்டி. நீயும் அந்த லிஸ்ட்ல தான் இருக்க வரு. ஸோ என்னோட சேர்ந்து டெய்லி கரெக்ட்டா க்ளாஸ் அட்டெண்ட் பண்ணனும். ஓபி அடிக்கக் கூடாது! சரியா?" என்றான் சிவா புன்னகையுடன்.
"மத்த நேரம் எல்லாம் எவ்வளவு ஸாப்ட் லுக் குடுக்குற! காலையில யோகா ப்ராக்டிஸ் பண்றப்போ மட்டும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சரா மாறிடுற; போ மித்து!" என்று சலித்துக் கொண்டவளை சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான் சிவ மித்ரன்.
"என் கஷ்டத்தை சொன்னா உனக்கு சிரிப்பு வருதா? ஐ கான்ட் டூ திஸ் டஃப் வொர்க் அவுட்ஸ்! கொஞ்சம் ப்ளெக்சிபிளா ஏதாவது கத்து குடுங்க மாஸ்டர்!" என்றவளிடம்
"இன்னும் கொஞ்ச நாள்ல வார்ம் அப் வொர்க் அவுட்ஸ் எல்லாம் உனக்கு ஈஸியாகிடும். ஏன்னா அதை விட டஃப் ஆசனாஸ் எல்லாம் நீ செய்யப் போற செல்லம்!" என்று மித்ரன் சொல்ல ஐஸ்வர்யா தலையை பிடித்துக் கொண்டாள்.
"யாரோ வீட்டுக்கு வந்திருக்காங்க போலிருக்கு மித்து!" என்று பார்க்கிங் பகுதிக்கு சற்று தள்ளி காரை நிறுத்தியவளிடம், "என்னோட ஹாஸ்பிடல் சீஃப் டாக்டர் ராஜசேகர் ஸார் கார் தான் வரு; ஆனா இவர் எங்க இந்த நேரத்துல வந்து நம்ம ஸாரை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கார், நான் இல்லைன்னா கிளம்பி போயிருக்க வேண்டியது தானே?" என்றான் சற்று பதட்டத்துடன்.
"டேய் அவர் நம்ம வீட்டுக்கு வந்தா நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற? வொர்க் பண்ற இடத்தில ஏதாவது தப்பு பண்ணிட்டியா என்ன?" என்று கேட்டவளை அடிக்க கையை ஓங்கினான் மித்ரன்.
"ஐயோ மாமா, இந்த மித்து என்னை அடிக்க வர்றான். காப்பாத்துங்க!" என்று ஹாலுக்குள் ஐஸ்வர்யா ஸ்ரீ செல்ல அவள் பின்னால் மித்ரன் வந்தான்.
ராஜசேகரும் அவருடைய மனைவி கமலா மற்றும் அவரது பெண் சௌஜன்யாவும் அருள்மொழியுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
ஐஸ்வர்யா இயல்பாக சென்று அவர்களை வரவேற்றாள். அருள்மொழி அவளிடம், "மழையில நனைஞ்சுட்டு ஆட்டம் போட்டியா? மித்ரன் உன்னை விட மாட்டான்னு நினைச்சேன். அவனையும் ஐஸ் வச்சு தலையை ஆட்ட வச்சுட்டியா? உள்ளே போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு இவங்களுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வா!" என்று அவர் சொல்ல வந்தவர்களிடம் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு உள்ளே சென்றாள் ஐஸ்வர்யா.
"என்னப்பா ஹீரோ? எங்க பொண்ணு உன்னை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு அடம் பிடிக்கிறா; என்ன பண்ணலாம்? அருள் மொழி ஸார் உனக்கு ஓகேன்னா பண்ணிடலாம்ன்னு சொல்றாரு!" என்று கேட்ட ராஜசேகரிடம் விஷயத்தை பேசாமல்
"நான் போய் காஃபி எடுத்துட்டு வர்றேன் ஸார்!" என்று சொல்லி விட்டு சிவா சமையல் அறைக்குள் நுழைந்து கொள்ள சௌஜன்யாவும் அவன் பின்னாலேயே வந்து சமையல் அறைக்குள் அமர்ந்து கொண்டாள்.
"ஹாய் சிவு டியர், எப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாம்?" என்று கேட்ட சௌஜன்யாவிடம்
"இங்க பாருங்க சௌஜன்யா! கல்யாணம் பத்தி நீங்க எத்தனை தடவை கேட்டாலும் என்னோட பதில் ஒண்ணு தான். இப்போதைக்கு எனக்கு மேரேஜ் பத்தி ஐடியாவே இல்ல. உங்க க்வாலிபிகேஷன், ஸ்டேட்டஸ், பேமிலி பேக்ரௌண்ட்க்கு நான் சரியானவன் இல்லங்க. உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னால நிம்மதியா லைஃப் லீட் பண்ண முடியாது. மோர் ஓவர் உங்கப்பா எனக்கு என்னோட குரு ஸ்தானத்தில இருக்கிறவர்! அவர் பொண்ணு நீங்க எனக்கு கூடப் பிறந்த சிஸ்டர் மாதிரி. ஸோ ப்ளீஸ் என்னை புரிஞ்சுப்பீங்கன்னு நம்புறேன். இந்தாங்க காஃபி, குடிச்சிட்டு கிளம்பிட்டீங்கன்னா நல்லா இருக்கும்!" என்றான் சிவா வாசலைப் பார்த்தபடி.
"பேச வேண்டியதெல்லாம் பேசி முடிச்சிட்டியா சிவு? எனக்கு உன்னை ஏன் இவ்வளவு பிடிச்சிருக்குன்னு தெரியுமா? நீ என்னோட பொஸிஷன், ஸ்டேட்டஸ், பேங்க் பேலன்ஸ், அதையெல்லாம் ஒரு பொருட்டாவே மதிக்கல. உன் கிட்ட எத்தனை தடவை என் லவ்வை சொன்னாலும் நேரா என் கண்ணைப் பார்த்து பிடிக்கலன்னு தான் ஒவ்வொரு முறையும் வேற வேற விதமா சொல்லிட்டு இருக்க! நம்ம லைஃப் பார்ட்னரை தேர்ந்தெடுக்கும் போது இவங்க கூட கடைசி வரைக்கும் அட்ஜெஸ்ட் பண்ணிக்க முடியுமா? சந்தோஷமா வாழ முடியுமான்னு யோசிப்போம்ல; அப்படி நான் யோசிச்சப்போ என்னோட பர்ஸ்ட் சாய்ஸ் நீ தான் சிவு! எனக்கு மட்டும் தான் நீ சொந்தமாகணும்.
உன் கூட இருந்தா தான் நான் சந்தோஷமா இருப்பேன்னு சொல்றேன்! என் கூட இருந்தா நீ சந்தோஷமா இருக்க முடியாதுன்னு சொல்ற! இதுக்கு என்ன தான் சொல்யூஷன்?" என்று கேட்டவளிடம்
"தயவு செய்து கிளம்பிடுங்க. இதுக்கு மேல என்னை லவ் பண்றேன்; கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தொந்தரவு செய்யாதீங்க, இது தான் இந்த பிரச்சனைக்கு சொல்யூஷன், அண்ட் பைனல் டெஸிஷன்!" என்று சொல்லி விட்டு ஹாலுக்குள் காஃபி ட்ரேயுடன் சென்று அனைவருக்கும் கொடுத்தான் சிவா.
"ஹாய் சிஸ்டர் நீங்க மித்துவை லவ் பண்றீங்களா? அவன் எங்கிட்ட உங்களை பத்தி சொல்லவே இல்லையே? நீங்க என்ன பண்றீங்க?" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம்
"மிஸ் ஐஸ்வர்யா சிவு டியர் என்னோட லவ்வர்; மைண்ட் யுவர் லாங்குவேஜ், அவனை என்னை தவிர வேற யாரும் மரியாதை இல்லாம பேசுறதை என்னால அலவ் பண்ண முடியாது. மே பி அவன் உங்களோட ப்ரெண்ட்லியா இருக்கலாம். ஆனா நீங்க அவன் கிட்ட கொஞ்சம் டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் பண்ணினா நம்ம மூணு பேரோட லைஃப்க்கும் நல்லது. நான் அவன் வொர்க் பண்ற ஹாஸ்பிட்டல்ல தான் அட்மின்ல வொர்க் பண்றேன். அதுவும் அவனுக்காக தான். இனிமேல் அவன் கூட அவுட்டிங் போறதெல்லாம் வச்சுக்காதீங்க!" என்று எச்சரிக்கை குரலில் கூறிய சௌஜன்யாவிடம்,
"சிஸ்டர் எனக்கு ஒரு டெளட்! நீங்க உண்மையில மித்துவை லவ் பண்றீங்க ன்னா அவருக்கு சந்தோஷம் தர்ற எல்லாத்தையும் நீங்க அக்செப்ட் பண்ணிக்கணும் தானே? ஆனா நீங்க அவர் மட்டும் போதும்! அவரோட சந்தோஷம், விருப்பம், எதைப் பத்தியும் எனக்கு கவலையில்லைங்கிற ஆட்டிடியூட்ல இருக்கிறது மாதிரி எனக்கு தோணுது. இதுக்கு பேரு லவ் இல்ல இத டாமினேஷன்னு சொல்வாங்க!" என்று சொன்ன ஐஸ்வர்யாவை கழுத்தை பற்றி நெறித்து கொண்டிருந்தாள் சௌஜன்யா.
"என்னோட உரிமையான பொருள் எதுவா இருந்தாலும், அதை நான் யாருக்கும் விட்டுக் குடுக்க மாட்டேன் ஐஸ்வர்யா, தேவையில்லாம என் லைஃப்ல நீ ஒப்பீனியன் சொல்லாத. உனக்கு என் சிவு டியர் கிட்ட எந்த உரிமையும் இல்லை. புரியுதா?" என்று கேட்ட சௌஜன்யாவின் முழங்கையை உடைத்து விடும் அழுத்தத்துடன் பற்றியிருந்தான் சிவ மித்ரன்.
"முதல்ல வரு கழுத்தில இருந்து கையை எடு சௌஜன்யா!" என்று கர்ஜித்தவன்,
"என் சீஃப் பொண்ணுங்கிறதால உனக்கு லாஸ்ட் வார்னிங் தர்றேன். இனிமேல் என்னையும், வருவையும் ஏதாவது டிஸ்டர்ப் பண்ணின; கையை கட்டிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டேன். உன்னை கல்யாணம் பண்ணிக்குற மாதிரி எண்ணம் எனக்கு எப்பவுமே இல்லை. இனிமேல் அது வர்றதுக்கு வாய்ப்பே இல்ல! எல்லாம் உங்க பேரண்ட்ஸ் கிட்ட தெளிவா பேசிட்டேன். கிளம்பிடு!" என்றான் கோபம் தணியாத குரலில்.
"என்னடா உன்னை சொன்னா இவளுக்கு கோபம் வருது, இவளை ஏதாவது செஞ்சா புள்ளை பூச்சி மாதிரி இருக்கிற உனக்கு அதிசயமா இவ்வளவு கோபம் வருது! நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா?" என்று கோபத்தில் கொந்தளிந்துக் கொண்டிருந்த சௌஜன்யாவிடம்
"அதை நாங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணிக்குறோம். அது உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம். நீ கிளம்பலாம்!" என்று வாயிற்படியின் கை காட்டி விட்டு ஐஸ்வர்யாவின் கழுத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான் சிவமித்ரன்.
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro