Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 36

மித்ரனின் வீட்டில் அனைவரும் குதூகலத்துடன் இருந்தனர். இன்று அமுதினிக்கு பெயர் சூட்டும் விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டு இருந்தனர். அலர்மேல் மங்கை குழந்தையை தொடுவதற்கே அவ்வளவு யோசித்து தயங்கிய போது ஐஸ்வர்யா தான் அவர்களிடம்,

"லோட்டஸ் பொண்ணு எதுக்கு இவ்வளவு யோசிச்சுட்டு தயங்கிட்டு இருக்கீங்க.... உங்க கல்யாணத்துக்கு நான் கிப்ட் எதுவும் குடுக்கலைல்ல......
மாமா வேற மித்து கிட்ட குழந்தை பத்தி ஐடியாவே இல்லைன்னு சொன்னாங்களாம், ஸோ நம்ம பர்ஸ்ட் பேபியை ஸாருக்கும் மங்கை அம்மாவுக்கும் குடுக்கிறதுல உனக்கு ஒண்ணும் அப்ஜெக்ஷன் இல்லையேன்னு கேட்டான். அப்போ தான் எனக்கு மித்து மேல நிறைய லவ் வந்தது தெரியுமா... சந்திரா ஆன்ட்டியும் எங்க முடிவை சொன்னவுடனே ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. பாப்பாவுக்கு இனிமே ரெண்டு அம்மா, ரெண்டு அப்பா..... எங்களையும் பாப்பா அப்பா, அம்மான்னு கூப்பிடலாம்ல லோட்டஸ் பொண்ணு....?" என்று கேட்டவள் கையைப் பற்றிக் கொண்டு மங்கை அழுதே விட்டார்.

அவரைத் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து அருள்மொழி ஒரு விஷயத்திற்காக தான் மிகவும் ஏங்கியதை பார்த்து இருக்கிறார். "என்னைய அப்பான்னு கூப்பிட யாருமே இல்ல மங்கை! மித்ரா, நேத்ரா ரெண்டு பேரும் நம்ம கிட்ட உயிரா இருக்காங்க. ஆனா அவங்க கூட என்னை அப்பான்னு கூப்பிடலையேம்மா.....?" என்று கேட்ட படி அவர் மடியில் படுத்துக் கொள்வார் அருள்மொழி.

அவர் தலையை வருடிய படி, "உன்னைய எப்படிய்யா புள்ளைங்க அப்பான்னு கூப்பிடும்? அது எங்க புவனேஸ்வர் ஐயாவை அவர் மரியாதையில இருந்து கீழ இறக்குற மாதிரி ஆகாது.... உனக்கு குழந்தை வேணும்னா நான் பெத்து தர்றேன்யா; இல்ல நம்ம ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாம்!" என்று மங்கையின் சமாதானங்களுக்கு அருள்மொழியின் மௌனம் தான் எப்போதும் விடையாகக் கிடைக்கும். அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்த பெரிய தம்பிக்கும், பாப்பாவுக்கும் மனதிற்குள்  கோடி நன்றிகள் சொல்லி கொண்டார் அலர்மேல் மங்கை. 

"ஹாய்டா செல்லம்...... பேபியை என் கிட்ட குடு, பேபி உன்னை மாதிரியே இல்லடீ; பேபிக்கு ரெண்டு அம்மா, ரெண்டு அப்பான்னு சொன்னியே.... பிசாசு என்னைய நியாபகம் வச்சிருந்தியா? பாப்பாவுக்கு என்னையும் வர்ஷினையையும் நேத்து அப்பா, வர்ஷினி அம்மான்னு தான் இண்ட்ரடியூஸ் பண்ணணும், பேபி இங்க பாருங்க, நேத்துஅப்பா பாருங்க" என்று குழந்தையின் அருகில் படுத்து அதைக் கொஞ்சிக் கொண்டு இருந்தவனிடம் சிரிப்புடன் சந்திரதாரா,

"நீ குழந்தைக்கு சித்தப்பாடா நேத்ரா! உங்கண்ணி உன் கூட சண்டை எதுவும் போட்டாளா? உங்கிட்ட பேச மாட்டேங்குறா!" என்று கேட்ட தன் அன்னையிடம்,

"ம்ஹும்! நானும் பாப்பாக்கு அப்பா தான்ம்மா; சித்தப்பால்லாம் கிடையாது. இவ என் கூட சண்டை தான் போட்டுருக்காம்மா! வீட்டுக்கு வந்து லக்கேஜ் அன்பேக் பண்ற வரைக்கும் அண்ணியார் ரொம்ப அன்பா இருந்தாங்க. அவங்க கேட்டிருந்த ஐயிட்டம் ஒண்ணுமே சூட்கேஸ்ல இல்லையா.... செம கடுப்பாகிட்டாங்க. இவங்க ஒரு சாக்லெட் கடை வைக்கிற அளவுக்கு சாக்லெட்ஸ் கேட்டாங்களா.... நம்ம டாக்டர் ஸார் இவங்க கூப்பிடுறதுக்கு நாலு நாள் முன்னாடியே போன் பண்ணி ட்ரெஸ், புக்ஸ், கிப்ட்ஸை தவிர வேற ஒண்ணுமே வாங்கிட்டு வரக் கூடாதுன்னு ஆர்டர் போட்டாரு. அண்ணியா, அண்ணனான்னு சீட்டு குலுக்கி போட்டு பார்த்தேன், அண்ணன் பேச்சு கேளாமை தம்பிக்கு அழகில்லைன்னு தான் ரிசல்ட் வந்தது. ஸோ ஒண்ணும் வாங்கிட்டு வரல. அதான் எம்டி மேடம் கடுகடுன்னு உட்கார்ந்துட்டு இருக்காங்க.... இல்ல கோழி!" என்று கேட்டு சிரித்தவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, "சாக்லேட்ஸை மட்டுமாவது எனக்கு கிப்டா வாங்கிட்டு வந்திருக்கலாம்!" என்று சொல்லிவிட்டு அவனிடம் வேறெதுவும் பேசாமல் கிளம்பி விட்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"ஏய் நில்லுடா ஐஷுமா! நம்ம காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம்; நல்ல கோழில்ல நீ......" என்று சொல்லிக் கொண்டே நேத்ரன் தன் அண்ணியின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான். 

மித்ரன் அன்று பல்லடத்திற்கு தன் சித்தப்பாவை பார்க்க வந்திருந்தான். மனைவியிடம் காசோலையை வாங்கி ஒரு மாதம் ஆகி விட்டது. ஆனால் இந்த வேலையை மட்டும் முடிக்க முடியாமல் ஹாஸ்பிட்டலில், யோகா கோச்சிங் என கமிட்மெண்ட்கள் வரிசை கட்டி நின்றன அவனுக்கு; இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நினைக்கும் அளவுக்கு அமுதினி அவனை தன் வசப்படுத்தி இருந்தாள். குழந்தையை கையில் அள்ளிக் கொண்டு சும்மாயிருந்தாலே அது ஒரு தியானம் போல் தான் தோன்றியது அவனுக்கு. பகலெல்லாம் குழந்தை யாரிடம் இருந்தாலும் இரவில் பத்து மணியிலிருந்து காலை ஆறு மணி வரையில் அவன் தான் தன் அருகிலேயே கட்டிலில் கிடத்தி கொண்டு அவள் மெலிதாக சிணுங்கும் முன்னரே அவனது கைகளில் அவளை ஏந்தியிருப்பான். மொத்தத்தில் மகளின் அருகாமையில் தன் வரு பேபியை கூட மித்ரன் இரண்டாவது இடத்துக்கு தள்ளி விட்டான். இன்று விடுமுறை எடுத்திருந்ததால் கங்காதரின் பொறுப்பை நிறைவேற்றி விடுவோம் என்று இங்கே வந்திருந்தான்.

"வா மித்ரா; நல்லா இருக்கியாப்பா.....?" என்று கேட்ட மானஸ்வினியின் குரல் மிகவும் மெலிந்து ஒலித்தது. புவனேஸ்வரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் இருவரும் சுருட்டிய பணத்தை இவர்களின் மகன் அஜய் மொத்தமாக சுருட்டிக்கொண்டு இவர்கள் இருவரையும் கை கழுவி விட்டு தன் காதலியுடன் கண்காணாமல் சென்றிருந்தான். கங்காதர் இவனை எதிர்கொள்ளும் போதெல்லாம் ஒரு வித சங்கடத்தில் நெளிந்தார். மித்ரன் எதையும் கண்டு கொள்ள மாட்டான். அவனது கடமையை நிறைவேற்றி விட்டு கிளம்பி சென்று கொண்டே இருப்பான்.

ஒரு ஸ்வீட் பாக்ஸை மானஸ்வினியிடம் கொடுத்து விட்டு, "எல்லாரும் நல்லா இருக்கோம் சித்தி, எங்களுக்கு பெண் குழந்தை பொறந்திருக்கு. அதான் சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன். இந்தாங்க கொஞ்சம் பழமும், ஸ்நாக்ஸும் வாங்கிட்டு வந்தேன்!" என்று சொன்னவன் காசோலையையும் அத்துடன் நீட்டினான்.

"நல்லா இருக்கணும். கேக்கறதுக்கு கொஞ்சம் கூச்சமா தான் இருக்குப்பா, ஆனா கேட்டுத் தான் ஆகணும். முடிஞ்சா எங்களை மன்னிச்சிட சொல்லி அக்கா, நேத்ரா கிட்ட சொல்லிடு; அவங்க மன்னிக்கலன்னாலும் பரவாயில்லை, கேட்டுட்டோம்ங்கிற ஒரு மனநிம்மதியாவது எங்களுக்கு இருக்கும்!" என்று சொல்லி விட்டு சாப்பாடு எடுத்து வைத்த தன் சித்தி, சித்தப்பாவின் வீட்டில் சாப்பிட்டு விட்டு கிளம்பினான் மித்ரன்.

கங்காதர் அவனை அழைக்கவும் சற்று படபடப்புடன் அவர் முன் சென்று நின்றான்.

"அடிக்கடி வந்துட்டு போ! முடிஞ்சா பொண்டாட்டியையும் குழந்தையும் ஒரு நாள் கூட்டிட்டு வா!" என்றார் கங்காதர்.

"சரி சித்தப்பா! போயிட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு கிளம்பியவன் நெஞ்சில் ஒரு வித நிம்மதி உணர்வு குடிகொண்டது.

குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அருள்மொழி குழந்தையின் காதில் "அமுதினி" என்று மூன்று முறை சொல்ல வந்திருந்த அனைவரும் குழந்தையை வாழ்த்தி பரிசுகள் வழங்கி விருந்து உண்டு விட்டு சென்றனர்.

இரவில் அலர்மேல் மங்கையும், அருள்மொழியும் குழந்தையை தூக்கி கொஞ்சிக் கொண்டு இருக்க மித்ரன் சிறு தயக்கத்துடன் அவரது அறைக்கதவை தட்டினான்.

"ஸார் பாப்பாவ நான்.....!" என்று தயங்கியவனிடம்,

"டேய்....போடா! போய் உன் பொண்டாட்டியை பாரு போ! பாப்பா நைட் அழுதான்னா உங்க ரூமுக்கு தூக்கிட்டு வர்றேன்!" என்று கட்டளையிட்டவரிடம்,

"இல்ல ஸார் அது வந்து....." என்று பேச்சை வளர்த்தவனிடம்,

"டையர்டா இருக்கு. கிளம்புறியா?" என்று கேட்டு விட்டு கதவைச் சாற்றி கொண்டார் அருள்மொழி.

"ஏன் மாமா புள்ளைய விரட்டுறீங்க?" என்று கேட்ட மங்கையிடம்,

"அவன் பொண்ணை மட்டும் கொஞ்சிக்கிட்டு இருந்தா போதுமாடீ.....? ஐசு முகத்துல ஒரு தெளிவே இல்ல. அவளையும் பார்த்துக்க வேண்டாம்...... ரொம்ப நல்ல பசங்களுக்கு எல்லாம் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க கூடாது போல.... என் பொண்டாட்டி பாவம்; பாவம்ன்னு தடவி தடவிக் குடுத்தே சாவடிக்குறானுங்க, நம்ம அமுதினிக்கு மித்ரனை மாதிரி இல்லாம கொஞ்சம் போக்கிரியா பார்த்து தான் கல்யாணம் பண்ணி வைக்கணும், ஏய் லோட்டஸ்  மறந்துட்டேனே..... இன்னும் நாலு நாள் ல இன்வெஸ்டர்ஸ் மீட் இருக்கு. நீ தான் வெல்கம் ஸ்பீச் குடுக்கணும்!" என்றவரிடம்,

"வாயை மூடிட்டு படுத்துடுய்யா! இனிமே எல்லாம் என்னால ஆஃபிஸ்க்கு வந்து பேசிட்டு இருக்க முடியாது. இங்கிலீசு கத்துக்குற வரைக்கும் தான வந்து பேசச் சொன்ன. நான் நல்லா தான் பேசுறேனாம், நம்ம பாப்பாவே சொல்லிடுச்சு. சின்னது கூட நிறைய விளையாடணும், அதான் சின்னத்தம்பி ஊர்ல இருந்து வந்துடுச்சுல்ல; அது கிட்ட பொறுப்பையெல்லாம் தூக்கி குடுத்துட்டு நீயும் வீட்ல இரு!" என்று சொன்ன தன் மனைவியிடம்,

"சூப்பர் ஐடியா குடுத்த மங்கை; நாளைக்கே ஐசுட்ட பேசுறேன்!" என்று சொல்லி விட்டு அமுதினியின் அருகே படுத்துக் கொண்டார் அருள்மொழி.

"கண்மணி நீ இன்னும் தூங்கலையா டா......" என்று கேட்ட படி தன் படுக்கையறைக்குள் நுழைந்த மித்ரனுக்கு ஒரு முறைப்பு தான் பதிலாக கிடைத்தது.

"என் பனீர் ஜாமுனுக்காக பாவா ரசகுல்லா வாங்கிட்டு வந்திருக்கேன், அவங்களுக்கு வேணும்னா என் கிட்ட வாங்கிக்கலாம், இல்லன்னா குப்புறப் படுத்து தூங்கலாம்!" என்று சொல்லி விட்டு சிரிப்புடன் படுக்கையில் தன் புறம் வந்து படுக்கையில் படுத்துக் கொண்டான் மித்ரன்.

"உன் வாட்தடங்கண் என்னை
வாட்டுதடீ; உன் வளைவுகளோ
என்னை வளைக்குதடீ
என் வாழ்க்கையின் தேவை
தீர்ப்பாய் வா கண்மணி!" என்று மித்ரன் பாடி முடித்ததும்,

"மிஸ்டர் சிவமித்ரன்.....நீங்க எவ்வளவு பிட்டை போட்டாலும் இங்க ஒண்ணும்  வொர்க் அவுட் ஆகாது. உங்க ஒரு மாச விரதம் முடிஞ்சிடுச்சுல்ல; போங்க, போய் உங்க பொண்ணை கட்டிப் பிடிச்சுக்கிட்டு படுங்க, இன்னும் ரெண்டு மாசத்துக்கு நான் விரதம்; நீங்க என் பக்கத்துலயே வரக் கூடாது!" என்று ஐஸ்வர்யா ஸ்ரீ சொன்னதும் மித்ரன் குறுஞ்சிரிப்புடன்

"ஓகேடா பேபி! நானா பார்டர் தாண்டி வர மாட்டேன். பட் நீயா என்னைய தொட்ட....... கசமுசா தான் பார்த்துக்கோ; குட் நைட்! ஸ்வீட் ட்ரீம்ஸ்!" என்று சொல்லி விட்டு அவளுக்கு முதுகு காட்டிக் கொண்டு படுத்துக் கொண்டான்.

"ம்ப்ச்! டேய் எருமைமாடு..... இதென்ன புதுப் பழக்கம்; உன்னைய தொடத்தான் கூடாது, பார்க்க கூடவா கூடாது.... திரும்பி படு பாவா!" என்று அவன் தோள்பட்டையை அழுத்திக் கொண்டிருந்தவளை அவள் புறம் திரும்பி இறுக அணைத்துக் கொண்டான் மித்ரன்.

"நீயா தான் என்னை தொட்டுட்ட.... ஸோ உன் விரதத்துக்கு எல்லாம் குட்பை தான். நிஜமாவே உடம்புல பெய்ன் எதுவும் இல்லையே.... ஆர் யூ பெர்பெக்ட்லி ஆல்ரைட் பேபி?" என்று கேட்டவனிடம்,

"யெஸ் ஐ'ம் ஃபைன் மித்து! எத்தன தடவைடா இதே கேள்விய கேப்ப?" என்று சலித்து கொண்டவளிடம், பல்லடத்தில் நடந்தவைகளை சொல்லி விட்டு இரண்டு ரசகுல்லாக்களை ஊட்டி விட்டான் மித்ரன்.

"மித்து இன்னும் ரெண்டு...." என்று கேட்டவளிடம்,

"உன்னை சமாதானம் பண்றதுக்கு வாங்கிட்டு வந்தது தான், உன்னைய தவிர யாரும் சாப்பிட மாட்டாங்க. நாளைக்கு காலையில எடுத்து சாப்பிடு,  இப்போ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா!" என்று சொன்னவனை "சரியான பித்து!" என்று திட்டி விட்டு சென்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

குளியலறையில் இருந்து வெளியே வந்தவளை பொறுமையாக ரசித்து விட்டு அணைத்துக் கொண்ட மித்ரனிடம் ஐஸ்வர்யா அதற்கு மேல் பேச்சுவார்த்தைகளில் நேரத்தை வீணடிக்கவில்லை.

அடுத்த பத்தாவது நாள் நேத்ரன் அமிர்தவர்ஷினி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு முந்தைய நாள் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்வோம், ஒவ்வொரு விழாவிற்காகவும் வந்து செல்ல முடியாது என்று வர்ஷினியின் பெற்றோர் சொல்லி விட்டனர், இன்னும் ஆறு மாதங்களில் திருச்சியிலேயே வந்து நிரந்தரமாக இருந்து விடுவது என்று முடிவு செய்து இருந்தனர். நேத்ரன் அருள்மொழி, சந்திரதாராவின் ஆலோசனையின் படி அலுவலகத்தில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தான்.

"நேத்துப் பையா; நீயும் ரொம்ப ஹேண்ட்சம் மேனாகிட்டடா; எக்ஸிக்யூட்டிவ் லுக்ல செமையா இருக்க தெரியுமா?" என்று அவன் கையைப் பிடித்து குலுக்கிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ஸ்ரீ தன்னுடன் சமாதானம் ஆக வேண்டும் என்று யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் அவளுடன் பானிபூரி கடைக்கு சென்று வந்திருந்தான் நேத்ரன்.

அண்ணியோ, இன்னொரு அன்னையோ, தோழியோ மூவரும் கலந்து ஒரே ரூபமாக நிற்கும் அவனது ஐஷுமாவிடம் கோபித்துக் கொண்டு சண்டை போடுவது எல்லாம் அவனுக்கு முடிகிற காரியமாக தெரியவில்லை.

"நீ சொன்னா போதுமா..... உன் ப்ரெண்டு கிட்ட கேட்டு சொல்லு, இப்போ தான் புதுசா பார்க்குற மாதிரி சைடு லுக் விட்டுட்டு பாப்பாவை தூக்கிட்டு ரூமுக்குள்ள போய்ட்டா..... என்னையும் உள்ள கூட்டிட்டு போன்னு மெசேஜ் பண்ணினா ரெஸ்பான்ட் பண்ண மாட்டேங்கிறா; இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கால்லடீ?" என்று கேட்ட நேத்ரனிடம்,

"டேய் நான் உன் அண்ணிடா.... அந்த போஸ்டிங்காகவாவது கொஞ்சம் மரியாதை குடேன்....எப்போ பார்த்தாலும் எதையாவது லூசுத்தனமா பேசிட்டு வாடீ போடீன்னு வேற கூப்பிட்டு கடுப்பேத்துற!" என்று எரிச்சல் பட்டாள் ஐஸ்வர்யா.

"மரியாதையா.... அதெல்லாம் பிறகு பார்க்கலாம், எனக்கு பயங்கரமா ஸ்வெட் ஆகுது, ஏதாவது பண்ணு!" என்று சொன்னவனை சேரில் அமர்த்தி ஒரு துணியில் சில ஐஸ்கட்டிகளை முடிச்சிட்டு அவனிடம் கொடுத்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"பத்து நிமிஷம் இதை நல்லா முகத்துல ரப் பண்ணிட்டு அதுக்கப்புறம் உன் மேக்கப்பை போடு, ரொம்ப ஸ்வெட் ஆகாது, பாப்பா முழிச்சிருப்பா, பார்த்துட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு சென்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடைபெற்று விடியற்காலை முகூர்த்தத்தில் நேத்ரனின் வேண்டுகோளுக்கு இணங்க அருள்மொழியும், மங்கையும் நேத்ரனின் அன்னை தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி தந்தனர்.

சந்திரதாராவை சற்று தயக்கத்துடன் ஏறிட்ட அருள்மொழியிடம் புன்னகையுடன், "மித்ராவை மாதிரி நேத்ராவும் உங்க கிட்ட கடன் படாம இருக்கணும்னு நினைக்கிறான் போலிருக்கு ஸார். போய் நில்லுங்க, டென்ஷன் ஆகப் போறான்!" என்று சொல்லி விட்டு அமர்ந்து கொண்டார் சந்திரதாரா.

"மினி செல்லம் மாமன் அழகா இருக்கேனாடீ....?" என்று கேட்ட நேத்ரனிடம்,

"அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது!" என்று சொல்லி விட்டு புன்னகையுடன் தலையை கவிழ்ந்து கொண்டாள் அமிர்தவர்ஷினி.

"ம்க்கும்....இந்த கவுண்ட்டருக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல! இரு உன்னையெல்லாம் வெரைட்டியா லவ் பண்ணி டார்ச்சர் பண்றேன்!" என்று சொல்லி விட்டு அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் நேத்ரன்.

மந்திரங்கள் முழங்க, நாதம் ஒலிக்க, வந்திருந்தோர் ஆசி கூற, தேவர்கள் வாழ்த்து கூற அனைத்து முகங்களில் இருந்த மகிழ்ச்சியுடன் தன்னுடைய காதல் நாயகியின் கழுத்தில் மூன்று முடியிட்டு அவளை தன் மனைவியாக்கி கொண்டான் நேத்ரன்.

இரவின் தனிமையில் தன் மனைவியின் அருகே ஓர் பரபரப்புடன் அமர்ந்து இருந்தான் நேத்ரன். வர்ஷினியின் மொபைல் சிணுங்கவும் நேத்ரன் எரிச்சலுடன், "வர்ஷ் மொபைல ரூமுக்குள்ள ஏன்டா எடுத்துட்டு வந்த? அதை ஒரு ஓரமா போட்டு வை!" என்று சொன்னவனிடம் மறுப்பாக தலையசைத்து,

"ஐஷு கால் பண்றா நேத்ரா.... அவ கிட்ட பேசிட்டு......." என்று சொன்ன வர்ஷினையை அலறலுடன் தடுத்தவன்,

"அந்த பிசாசு என்னைய பழி வாங்குறதுக்காக இந்த நேரத்தில கால் பண்றா செல்லம்.... இன்னிக்கு ஒரு நாள் உன் ஆருயிர் தோழியை கொஞ்சம் கண்டுக்காம என் பேச்சைக் கேளும்மா!" என்று சொல்லி விட்டு அவள் போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தன் மனைவியுடன் முக்கியமான குடும்ப கலந்தாலோசனைக்கு
சென்று விட்டான் நேத்ரன்.

"சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டியா? இரு அப்போ உன் மொபைலுக்கு கால் பண்றேன்!" என்று வில்லி போல் சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தவளை பின்புறம் இருந்து மித்ரனின் வலிமையான அணைப்பு செயலிழக்கச் செய்து விட்டது.

"வரு பேபி.... மித்து பாவாக்குக்காக  கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்றீங்களா? வர்றீங்களா அவுட் ஹவுஸ் போகலாம். நம்ம ரூம் கம்பர்டபிளாவே இல்ல. அமுதினிய மங்கை அம்மா பார்த்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. ஸோ நம்ம பாட்டு பாட ஆரம்பிக்கலாம்! சரிங்களா மேடம்?" என்று கேட்ட படி அவன் மனைவியை கைகளில் ஏந்தியவனிடம்,

"மித்து பாவா வருக்குட்டி ரொம்ப பாவம் டா செல்லம்.....நல்ல புள்ளையா,  சமர்த்தா......" என்று ஐஸ்வர்யா ஸ்ரீ சொல்லிக் கொண்டு இருந்த போதே  மித்ரன்  அவள் இதழ்களை அடைத்து, தன் காதலை வரு பேபியிடம் செயல்களாய் காட்ட தொடங்கி விட்டான்.

நேத்ரனின் குடும்ப வாழ்வும், அலுவலக வாழ்வும் வளர்பிறை நிலவைப் போல் வளரவும், இந்த குடும்பத்தினரின் மகிழ்ச்சி இவ்வாறே நீடிக்கவும் நாமும்  வாழ்த்தி விடை பெறுவோம்!!

தஞ்சம் கொண்ட வஞ்சி மனம்
நீக்கமற நிறைந்து விட்டான்!!

வஞ்சி மனம் நிறைவுற்றது!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro