💖 வஞ்சி மனம் 35
சிவமித்ரன் அன்று மாலை மிகவும் உற்சாகமாக இருந்தான். அவனது உதட்டில் எப்போதும் குடியிருக்கும் சின்ன முறுவல் இன்று சற்று விரிந்திருந்தது.
அருள்மொழி, சந்திரதாராவிடம் நேத்ரனின் காதல் விஷயத்தை சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சியுடன் அமிர்தவர்ஷினியின் பெற்றோரிடம் பேசி இரண்டு வருடங்கள் கழித்து அவர்களது திருமணத்தை நடத்தி விடலாம் என்று சம்மதம் தெரிவித்து விட்டார்கள். மித்ரனுக்கு கூட இரு தரப்பினரும் சுமூகமாக திருமணத்தை ஏற்றுக் கொள்வார்களா என்று சிறு பயம் மனதிற்குள் அரித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஐஸ்வர்யா ஸ்ரீ எதற்கும் அலட்டிக் கொள்ளவேயில்லை.
"நேத்துவும், அமிரும் பெஸ்ட் பையனும், பொண்ணும்டா பாவா! ரெண்டு வீட்லயும் ஓகே சொல்லிடுவாங்க, நீ டென்ஷன் ஆகாம இரு!" என்று விஷயத்தை மிகவும் எளிதான ஒன்றாக்கி விட்டு சுற்றி கொண்டு இருந்தாள். ஒரு விஷயத்தில் பச்சை விளக்கு எரியும் போதே அடுத்த மகிழ்ச்சியும் சேர்ந்து வந்தது.
யோகா பெடரேஷன் ஆஃப் இந்தியா அப்க்ரடேஷன் எக்ஸாமில் தேர்ச்சி பெற்ற மித்ரனுக்கு க்ரேட் C நேஷனல் யோகா ரெஃப்ரி அங்கீகாரம் கிடைத்திருந்தது. மனைவியை முத்தமிட்டு அவன் விஷயத்தை சொன்னதும்,
"சூப்பர்.... கங்க்ராட்ஸ்டா பாவா! பட் ஒரு டவுட்டு கேட்டுக்கட்டுமா..... ஸீரியஸாவே நீ சொன்ன மாதிரி கம்பெனி பக்கம் வர மாட்டியாடா? இந்த நேத்துப்பையன் வர்ற வரைக்குமாவது நீயும் கூட வந்து ஆஃபிஸை பார்த்துக்குவன்னு நினைச்சேன்!" என்று கேட்டவளிடம் சிரிப்புடன்,
"ஆஃபிஸை பார்த்துக்கிறதுக்கு தான் செக்யூரிட்டி வச்சிருக்கியே பேபி....... உனக்கு, அருள் ஸாருக்கு எல்லாம் பிஸினஸ் புரியும், எனக்கு புரியலையே; யார் எந்த வேலையை செஞ்சா கரெக்டா இருக்குமோ அந்த வேலையை தான் அவங்கவங்க செய்யணும், இப்போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, அதை நான் செய்யட்டுமா?" என்று அவள் இதழ் நோக்கி குனிந்தவனிடம்,
"பாவ்வ்வ்வா......ரெண்டு குட் நியூஸ் சொல்லியிருக்க; ட்ரீட் ஒண்ணும் கிடையாதா? நீ நல்லபுள்ளையாம் அப்படியே வருக்குட்டிய ஒரு ட்ரைவ் கூட்டிட்டு போறியா ......." என்று கேட்ட படி அவன் கழுத்தை கட்டிக் கொண்டவளை தன்னிடமிருந்து முடிந்த அளவு தள்ளி நிறுத்திய மித்ரன்,
"ட்ரைவ்க்கு போகலாம். ட்ரீட்டுக்கு போகலாம். இன்னும் எங்க வேணும்னாலும் போகலாம், பட் இப்போ இல்ல; நாளைக்கு காலையில.... இதுக்கு மேலயும் உன் பாவாவை காய விட்டன்னா உனக்கு நல்லதில்ல, மரியாதையா என் கூட பெட்ரூமுக்குள்ள வந்துடு!" என்று அழைத்தவனிடம் கோபத்துடன்,
"டேய் என்ன விளையாடுறியா.... நான் இன்னும் டின்னரை முடிக்கவேயில்ல....
என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? நீ தான சொன்ன.... நிறைய ஸ்டெமினா வேணும், நல்லா சாப்பிட்டுக்கோ பேபின்னு; நான் ரெண்டு செட் ரெயின்போ தோசை தானே சாப்பிட்டேன்? ஐ வாண்ட் சம்திங் மோர்!" என்று உதடு பிதுக்கியவளிடம்,
"நீ வாடா கண்மணி, பாவா உனக்கு மோருக்கு அக்காவே தர்றேன்!" என்று புன்னகையுடன் அவள் கைகளைப் பற்றி எழுப்பினான் மித்ரன்.
"மாஸ்டர் பாவா! எனக்கு இன்னும் டவுட்ஸ் இருக்கு. முதலாவதும், முக்கியமானதுமா நம்ம பேபிக்கு உன் ப்ளட் குரூப் இருக்குமா......இல்ல என்னோடதா?" என்று கேட்டவளின் வாயில் தன் விரலை வைத்து,
"கேள்விக்கு பொறந்தவளே.... கொஞ்ச நேரம் கண்ணை மூடு! நான் சொல்ற வரைக்கும் வாயைத் திறக்க கூடாது! மூளையை ஆஃப் பண்ணி வை!" என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி தன் ஆள்காட்டி விரலால் அவளது கண்கள், மூக்கு, நெற்றி, உதடுகளில் விரல்களால் வருடிக் கொண்டு இருந்தான்.
மித்ரனின் விரல் கழுத்தை தாண்டிய போது ஐஸ்வர்யா ஸ்ரீ விழித்து, "டேய் பாவா இந்த ஃபீல் நல்லா இருந்தது. பட் போதும்!" என்று சொன்னவளிடம்,
"அதெப்படி போதும்டா பேபி...... இன்னும் எதையும் ஸ்டார்ட் பண்ணவேயில்ல.... இப்போ என் கிட்ட ஃபீல் நல்லா இருந்ததுன்னு சொன்னல்ல.... அதுதான் விஷயம்! நான் குடுக்கிற லவ்வை ஃபீல் பண்ண ட்ரை பண்ணு. அத விட்டுட்டு பிறக்காத பிள்ளைக்கு ப்ளட் குரூப், ஹைட், வெயிட், பிஎம்ஐ எல்லாம் செக் பண்ணாத. நம்ம குழந்தையை ஹெல்த்தி பேபியா வளர்க்க வேண்டியது என்னோட ரெஸ்பான்ஸிபிளிட்டி. அதை நான் கரெக்டா நியாபகம் வச்சுக்கறேன். இப்போ பெட்ரூமுக்கு போகலாமா கண்மணி......?" என்று கேட்ட தன் கணவனிடம்
"பாவ்வ்வ்வா...... சாக்லெட் ஒண்ணு கூட சாப்பிடலையே; இன்னிக்கு டே எனக்கு மறந்து போயிடக் கூடாதுல்ல? ஒண்ணே ஒண்ணு; ப்ளீஸ் மித்து.....!" என்று கெஞ்சியவள் அருகில் வந்து அவள் இடையைப் பற்றி அவளை தூக்கி தன் தோளில் போட்டவன்,
"ஐம் ஸாரி மிஸஸ் மித்ரன்! ஷ்யூரா இன்னிக்கு டே உனக்கு மறந்து போகாது. இதுக்கு மேல ஹால்ல நின்னு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க எனக்கு பொறுமையில்ல!" என்று சொல்லி விட்டு ஐஸ்வர்யாவின் அறைக்குள் வந்தவன் அவளைக் கட்டிலில் கிடத்தி விட்டு அறையின் விளக்கை போட்டான்.
"வாவ் வரு பேபி! கேண்டில்ஸ் அழகா இருக்கு. பட்டர்ஃபிளைஸ் கூட செமையா இருக்குடா கண்மணி. மித்துவும்; ஐஷுவுமா; பட் வருன்னு எழுதியிருக்கலாம்ல; இதெல்லாம் எப்போடீ செஞ்ச? இன்னிக்கு செஞ்ச மாதிரி தெரியலயே......" என்று கேட்டவனிடம் குறுஞ்சிரிப்புடன்,
"இது நம்ம மேரேஜ்க்கு முன்னாடியே செஞ்சது மித்து; அது ஒரு ஸ்கிராப் புக்
உங்கிட்ட காட்டுறக்குறதுக்கு கரெக்டான அக்கேஷனை தேடிக்கிட்டு இருந்தேன். இப்போ தான் அந்த டைம் கிடைச்சது. பட்டர்ஃபிளைக்கு அவுட்லைன்ல எல்லாமே சாக்லேட், அதுவும் என் பேவரைட்; பார்த்துக்கிட்டே இருக்கிறதுக்கு கஷ்டமா இருக்கு!" என்று பெருமூச்சு விட்டவளிடம் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு,
"எனஃப் பேபி! நோ மோர் சாக்லெட்ஸ்!" என்றான் மித்ரன் பொய்யான கோபத்தை முகத்தில் காட்டி.
"மோருக்கு அண்ணன் சாக்லெட்ஸ் கூட இங்க இருக்கு மித்து...... அத சாப்பிடட்டுமா?" என்று கேட்டு ஒரு மில்க் சாக்லெட்டை கையில் எடுத்துக் கொண்டு பாவமாக நின்று கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"என் பிட்டை எனக்கே போடுறியா.... ஈவ்னிங் தான் உங்கப்பா கிட்ட ஐஸ்வர்யா ஸ்ரீயை சமாளிக்கறதுக்கு ஸ்பெஷல் பவரை குடுங்க அங்கிள்ன்னு கேட்டுட்டு வந்தேன்!
நீ சாக்லெட்ஸை முழுங்குற வேகம் தெரியாம ஆர்வக் கோளாறுல நீ எப்போ சாக்லெட்ஸ் கேட்டாலும் வாங்கி தருவேன்னு வேற சொல்லி தொலைச்சிட்டேன். என்ஜாய் யுவர் சாக்லெட்ஸ்! நான் அது வரைக்கும் உங்களோட ஸ்க்ராப் புக்கை பார்க்குறேன்!" என்று சொல்லிவிட்டு அவளது பட்டர்ஃபிளை ஸ்க்ராப் புக்கை கையில் எடுத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
அந்த புத்தகத்தில் அட்டையில் சுமார் 100 பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்கள் இருந்தன. வலது ஓரத்தில் MIT யும், இடது ஓரத்தில் AIS ம் நடுவில் பொதுவாக HU வும் இருந்தது. அதற்குள் ஒவ்வொரு போட்டோவின் அடியிலும் ஒவ்வொரு வாக்கியத்தை எழுதியிருந்தாள். அவன் தனது மருத்துவமனை சீருடையுடன் நிற்கும் புகைப்படத்தில் "ஐம் அப்ஸெஸ்டு வித் யூ!" என்றிருந்தது. யோகா மாணவர்களுடன் இருந்த புகைப்படத்தில் "யூ ஆர் அ ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர்!" என்ற வாசகம் எழுதியிருந்தாள். காசில்லாமல் கடையில் சாப்பிட போனதை எழுதி, "ஹவ் ப்ரொடக்டடிவ் யூ ஆர்!" என்று எழுதியிருந்தது. மிட்டுவின் படத்தை ஒட்டி வைத்து, "தி மோஸ்ட் வொன்டர்புல் கிஃப்ட்!" என்ற வாசகம் இருந்தது. அரங்கேற்றம் அன்றைய இரவு தினத்தை நினைவு கூர்ந்து, "அவர் ப்ளே டேர்ண்டு லவ் ஃபைட்ஸ் அண்ட் ரெஸ்ட்ளிங்!" என்று எழுதியிருந்தாள். பீச் ரிசாட் புகைப்படத்தில், "ஃபீலிங் லோன்லி! மித்து இஸ் அன் இடியட்!" என்று சொல்லி இருந்தாள். திருமண தின புகைப்படத்தை ஒட்டி "செட்டில்டு அஸ் அ சூப்பர் வுமன்!" என்று முடித்திருந்தாள். மித்ரனுக்கு தன் வாழ்க்கையில் ஒரு ப்ளாஷ்பேக் போய் விட்டு வந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது.
"கண்மணி இவ்வளவு அழகான கிப்ட்டை இன்னிக்கு காட்டினதுக்காக உனக்கு என்ன குடுக்கலாம்......
பாட்டு பாடலாமா?" என்று கேட்ட மித்ரனிடம்,
"என்ன வேணும்னாலும் செய்! ஆனா கடிக்கிறேன், அடிக்கிறேன்னு என்னைய டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. ஓகேவா?" என்று கேட்டவளை சேர்த்து அணைத்துக் கொண்டு,
"சேலை மூடும் இளஞ்சோலை;
மாலை சூடும் மலர் மாலை!
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளி விடும்!
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர் விடும்!
கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து
கண்கள் மூடும்!
நநநநநநா நநநநநநா நநநா நநநா!"
என்று மித்ரன் பாடி முடிக்கையில் ஐஸ்வர்யா ஸ்ரீ அவனை முறைத்தவாறு,
"ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங் ஆ இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம்,
"பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம்,
"சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை
"சரி ஓகேவா உன்னையெல்லாம்....
படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு
அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
"மி....மித்து பால் குடிக்கலையே; அதெல்லாம் கண்டிப்பா செய்யணும் ன்னு லோட்டஸ்........!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவளின் இதழ்கள் மறுபடியும் சேதாரப்பட்டது.
உன் மெய்த் தீண்டல்கள்
கிட்டாதவரை நான் உத்தமன் தான்!
நம் காதல் கரை கடக்கும்
நேரம் என் உத்தமத்திற்கு
பங்கம் நேர்ந்து விடுகிறது.
உன்மத்தம் சூழ்கையில்
உத்தமம் சற்று கெட்டால்
தான் என்ன - போகட்டும் போ!
என்று அவள் காதில் கவிதை என்னும் பெயரில் எதையோ பிதற்றிக் கொண்டு
அவளை தன் கைகளாலும் இதழ்களாலும் அணுஅணுவாக அறிந்து கொண்டிருந்தவனிடம் அவளும் தன்னுடைய தேடல்களை துவங்கி விட மித்ரனின் வேகம் இரட்டிப்பாகி விட்டது. வெகு நேரம் அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்த ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில்,
"மித்து.....நீ சர்க்கஸ் எல்லாம் காட்டுறவன்டா, பட் நான் அப்படியில்ல. கொஞ்சம் பொறுமையா....." என்று முணங்கினாள். அவன் மறுப்பாக தலையசைத்து,
"விட்டா குரளி வித்தை காட்டுறவன்னு சொல்லுவ போல பேபி, பட் நானும் அப்போலேர்ந்து ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்மா; முடியல, நான் இந்த விஷயத்துல ரொம்ப கெட்ட பையன் போலிருக்கு. இந்த விஷயம் இப்போ தான் எனக்கே தெரியுது!" என்று சொல்லி விட்டு மறுபடியும் அவன் செயலில் மும்முராகி
விட்டான். சிவமித்ரன் ஐஸ்வர்யா ஸ்ரீயின் இல்லற வாழ்வு நல்வாழ்வாக அமைய அறையில் இருந்த மெழுகுவர்த்திகளும், வானத்தில் இருந்து நட்சத்திரங்களும் வாழ்த்துக்கள் கூறின.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்
சிவமித்ரன் அன்று காலையில் தன் யோகா பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாமல் அருள்மொழியிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
"ஏன்டா க்ளாஸ்க்கு போகல.... நான் ஓபி அடிச்சாலே திட்டுவ. இன்னிக்கு நீ உட்கார்ந்து ஸோஃபாவை தேய்ச்சுட்டு இருக்க....." என்று கேட்டவரிடம்
"ம்ப்ச்! கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உங்களுக்கு.... என் கெஸ்ஸிங் கரெக்ட்னா இன்னிக்கு வருவுக்கு டெலிவரி பெயின் ஸ்டார்ட் ஆகிடும். நல்லா கவனிங்க இன்னும் ஒரு வாரத்துல சோட்டு வந்துடுவான். ஆனா இன்னும் த்ரீ மன்த்ஸ்க்கு அப்புறம் உங்க ஐச கம்பெனிக்கு கண்டிப்பா வரணும்ன்னு சொல்லி கூப்பிட்டுக்குறீங்க, ஒரு வேலையை கையில குடுத்தா தான் வேலையையும் செய்றா! உடம்பும் கரெக்டா இருக்கு, வீட்ல இருன்னு சொன்னோம்...... நாம மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டியதிருக்கும்" என்று சொன்னவனிடம்
"சூப்பர் டா சந்தோஷப் படற மாதிரி ஒரு விஷயம் சொல்லியிருக்க.... நாளைக்கு இந்நேரம் நம்ம கையில அமுது இருக்கும். மங்கை எங்கம்மா இருக்க!" என்று கேட்டு தன் மனைவியை தேடி ஓடினார் அருள்மொழி.
"அமுதா.....ம்! ஸ்ட்ரேஞ்ச், அமுது இனி; அமுதினி; வரு பேபி நேமை செலக்ட் பண்ணிட்டேன், நல்லா இருக்கான்னு கேளேன்!" என்று ஆர்ப்பரித்த படி தன் அறைக்குள் நுழைந்தவன் தன் மனைவி அணில் பிள்ளையுடன் விளையாடிக் கொண்டிருப்பதை கண்டு முகம் சுளித்தான்.
"எவன்டீ இவன்; மிட்டுவா, மிங்க்குவா, மின்னுவா.... இன்னும் என்னன்னமோ பேர் வச்சிருப்பியே.....எந்நேரமும் இவனுங்களுக்கு நம்ம ரூம்ல என்னடீ வேலை.....? அவனவனுங்களுக்கு தான் தனித்தனியா அத்தனை பாக்ஸஸ் இருக்குல்ல; ஆனா கிட்ஸ் எல்லாம் நம்ம வீட்டை ஸ்குரிள் ஹவுஸ் ன்னு சொல்றாங்க தெரியுமா வரு; பாப்பா பேரு அமுதினி.... உனக்கு பிடிச்சிருக்கா?" என்று கேட்டவனிடம்,
"அழகா இருக்கு மித்து...... பயமாயிருக்குப்பா; ரொம்ப வலிக்குமா மித்து?" என்று கேட்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்டவளிடம்,
"நான் உன் கூடவே தான் இருப்பேன்.... நீ ரிலாக்ஸ்டா இருந்தா போதும். ஒரு பயமும் இல்ல! சோட்டு கூட பேசினியா.... அவன் கூட பேசினா கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவ, வீடியோ கால் பண்ணட்டுமா?" என்று கேட்ட தன் கணவனிடம் அவசரமாக மறுத்தவள்,
"அந்த லூசு ஒரு வாரமா அழுதழுது என் உயிரை வாங்கி தான் எனக்கும் இப்போ லைட்டா பயமாயிருக்கு மித்து; பேபி பிறந்ததுக்கப்புறம் அதுங்க ரெண்டுக்கும் சொல்லிக்கலாம், நாலஞ்சு டாப் மோஸ்ட் கம்பெனீஸோட கால் ரிஜெக்ட் பண்ணிட்டேன்னு சொன்னான் மித்து; கஷ்டமா இருந்தாலும் உன்னை மாதிரியே இருக்கான்னு நினைச்சு கொஞ்சம் பெருமையாவும் இருந்தது!" என்று சொன்ன தன் மனைவியிடம் தனது ட்ரேடு மார்க் புன்னகையை சிந்தி விட்டு,
"வரு பேபி நாளைக்கு ஒரு 20000 வேணும்டா! பாப்பா பிறந்த பிறகு விஷயத்தை சொல்றதுக்கு பல்லடம் போகணும்!" என்று சொல்லி விட்டு தலை கவிழ்ந்து நின்றவன் முகத்தை நிமிர்த்தி அவன் நெற்றியில் முத்தம் பதித்தவளை அணைத்துக் கொண்டு நின்றான் மித்ரன்.
"ஸார் புவனேஸ்வர் கன்சர்ன்ஸ் உங்க கம்பெனி தான்; அது உங்களுக்கு நியாபகம் இருக்குங்களா.....எங்கிட்ட ஏதோ கடன் வாங்கறவன் மாதிரி எதுக்கு இப்படி தலைகுனிஞ்சு நிக்குற.... கங்காதர் மாமாவும், மானஸ்வினி அத்தையும் இங்க வர்றேன்னு சொன்னாங்கன்னா வழக்கம் போல கொஞ்ச நாள் கழிச்சு பார்க்கலாம்ன்னு சொல்லிடு. அவங்களை இங்க வர விட்ட.....நேத்துப் பையன் கத்தியை தூக்கிருவான்!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"சரிம்மா....நான் பார்த்துக்குறேன்!" என்று சொன்ன தன் கணவனிடம் செக் எழுதி நீட்டினாள் ஐஸ்வர்யா.
வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் இப்போது நான்கு எட்டுகள் நடக்க ஆரம்பித்திருந்தார் சந்திரதாரா.
"அம்மா! டெய்லி 15 மினிட்ஸ் தான் நடக்கணும். ரொம்ப ஸ்ட்ரையின் பண்ணிக்க கூடாது!" என்று சொன்ன மித்ரனிடம், "டோண்ட் வொர்ரி பெரிய தம்பி. ஐ வில் டேக் கேர் ஆஃப் சந்திராம்மா! மாமா ஷால் ஆ மேக் அ மூவ் டூ டெம்பிள்?" என்று சிரிப்புடன் கேட்ட மங்கையிடம் மூவரும்,
"ரொம்ப டெலவப் ஆகிட்டீங்க மங்கை மேடம்.....!" என்று கிண்டல் செய்தனர். மங்கை இப்போது தான் போகும் பயணங்களை எல்லாம் பயணக் கட்டுரைகளாக நாளிதழில் பிரசுரித்து கொண்டு இருக்கிறார். ஒரு மனநிறைவுக்காக இந்தப் பணியை அவளுக்கு வாங்கி தந்தது அருள்மொழியே தான்!
அடுத்த நாள் அதிகாலை வேளையில் ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி வர மித்ரன் மருத்துவமனயில் கொண்டு போய் சேர்த்தான். அவனும் அவள் வலியுடன் சோர்கையில் துடித்து, அவள் உடலால் பட்ட துன்பத்தை அவன் மனதால் பட்டு முற்பகலில் மகளை கையில் ஏந்திக் கொண்டு வந்து வாழ்த்து தெரிவித்த அருள்மொழியின் கையில் தந்தான்.
"இவ உங்க பொண்ணு தான் ஸார்; பர்த் சர்ட்டிபிகேட்ல உங்க பெயரை தான் அப்பான்னு சொல்லி இருக்கேன். நீங்க போயிட்டாலும் நான் இவளை விட்டுட மாட்டேன். மங்கைம்மா இப்போ ஹாப்பி தானே?" என்று கேட்டவனிடம் விசும்பலுடன் மங்கை கை உயர்த்தி அவனை கும்பிட்டார்.
அருள்மொழிக்கு குழந்தையை தன் கைகளில் ஏந்திய போது ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.
"மித்ரா.... என்னை பெரிய கடனாளிக்காதடா!" என்று சொன்னவரிடம் புன்னகையுடன், "என்னை விடவா ஸார் நீங்க கடனாளி ஆகிடப் போறீங்க!" என்று கேட்டு விட்டு வேறு எதுவும் பேசாமல் சந்திரதாரா, ஐஸ்வர்யாவிடம் குழந்தையை காட்ட சென்று விட்டான் மித்ரன்.
அடுத்த பத்தாவது நாள் நேத்ரன் தன் படிப்பை நல்ல படியாக முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினான். கோயம்புத்தூர் ஏர்போர்ட்டிற்கு சென்று அவனை அழைத்து வரச் சென்ற மித்ரன், அருள்மொழியை கண்டுகொள்ளாமல்
"சிவாண்ணா ஐஷுமா எப்படியிருக்கா.... உடம்புக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே; டெலிவரி அப்போ ரொம்ப அழுதுட்டாளா.... நான் அவ ட்யூ டேட்ஸ்க்கு ரெண்டு நாள் முன்னாடியே ட்ராவல் ப்ளான் பண்ணி இருந்தேன்ண்ணா; பட் லாஸ்ட் மினிட் ல ப்ளான் சேஞ்ச் ஆகி சொதப்பி.... ச்சே! குட்டி ஐஷு யார் மாதிரிண்ணா?" என்று கேள்விகளாக அடுக்கியவனிடம் மித்ரன்,
"சோட்டு காம் டவுன்... வீட்ல போய் எல்லாம் பேசிக்கலாம், வர்றியா போகலாம்!" என்று தன் தம்பியை அமைதிப்படுத்தினான். நேத்ரன் தன் லக்கேஜ்ஜை கலெக்ட் செய்து வந்தவுடன் அவனைக் கூட்டிக் கொண்டு மூவரும் திருப்பூருக்கு கிளம்பினார்கள்.
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro