💖 வஞ்சி மனம் 33
ஸ்டான்ஃபோர்டு டவுன், USA
மித்ரன், ஐஸ்வர்யா, நேத்ரன் மூவரும் அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு சற்று பக்கத்தில் இருக்கும் ஸ்டான்ஃபோர்டு வில்லா அப்பார்மெண்ட்டில் உள்ள ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்து பத்து மணி நேரம் ஆகியிருந்தது.
"ஐஷுமா, இந்த லொக்கேஷன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடீ, என்ன இந்த குளிரை தான் எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல, எலும்பு வரைக்கும் போட்டுத் தாக்குது!" என்று ஜெர்க்கினுக்குள் கைகளை நுழைத்துக் கொண்டான் நேத்ரன்.
"பழகுற வரைக்கும் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்டா! அப்புறம் சரியாகிடும்.
ஆமா நீ இங்க வர்றதுக்கு முன்னாடி ஏர்போர்ட்டில கால உதைச்சுட்டு எப்படி ஸீன் போட்ட! இங்க வந்தவுடனே அமிர பார்த்து பல்லைக் காட்டுற; அந்தப் பக்கியும் உனக்கு வெல்கம் சொல்லி பொக்கேவெல்லாம் நீட்டுது, வாங்கிட்டு வந்திருந்தா எல்லாருக்கும் வாங்கிட்டு வந்திருக்கணும், இல்லன்னா வாங்கிட்டே வந்துருக்க கூடாது; அதென்ன உனக்கு மட்டும் ஸ்பெஷல்?" என்று கேட்டுக் கொண்டிருந்தவளிடம் மித்ரன்,
"ஏய் என்னப்பா ஸ்பெஷல்.... நானும் உங்க கான்வர்சேஷன்ல ஜாய்ன் பண்ணிக்கலாமா?" என்று கேட்டவனிடம்
"வாங்க சிவாண்ணா.... இந்த வீடு ஐஷுவுக்காக அங்கிள் ஸ்பெஷலா வாங்கி குடுத்ததாம், அதைத் தான் சொல்லிக்கிட்டு இருந்தா! வர்ஷினி என்ன பண்ணிட்டு இருக்காங்க.... கிச்சன்லயா? நான் அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா...." என்று கேட்ட படி எழுந்தவனிடம்,
"போ தம்பி, உன்னைய தான் காணும்னு அவ தேடிட்டு இருக்காளாம், எப்படி எல்லாம் பிட்டை போடுறாய்ங்க!" என்று பெருமூச்சு விட்டவளை பார்த்து புன்னகைத்த மித்ரன்,
"வரு நாலு பேர் சாப்பிடணும்னா ரெண்டு பேர் சமைக்கணும்ல; வர்ஷினியும் சோட்டுவும் சேர்ந்து செய்யட்டுமே?" என்று கேட்க ஐஸ்வர்யா ஸ்ரீ வேகமாக தலையாட்டிய படி,
"செய்யட்டுமே...... நல்லா செய்யட்டுமே; அதத் தானே நானும் சொல்றேன், நேத்ரன் ஸார் கிளம்புங்க! நீங்க உட்காருங்க மாஸ்டர்; அப்புறம் உங்க மாமனார் வீடெல்லாம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டுக் கொண்டிருந்தவளிடம்,
"அழகா இருக்கு கண்மணி! இந்த சிட்டி, இந்த வீடு எல்லாமே அழகா இருக்கு, பட் இந்த வீட்லயும், உங்கிட்டயும் எதையோ மிஸ் பண்ற மாதிரி ஒரு ஃபீல்!" என்று பால்கனியின் திரைச்சீலையை போட்டு விட்டு வெளிப்புறம் இருந்து
கதவைச் சாற்றி விட்டான் மித்ரன்.
"அட லூசே... ஏன்டா இப்படி செஞ்ச? இந்தப் பக்கம் இருந்து நம்ம டோரை ஓப்பன் பண்ண முடியாது மித்து, உள்ளே இருந்து நேத்துவும், அமிரும் தான் திறந்து விடணும், அவங்கள கூப்பிடு மித்து!" என்று சொன்னவளை கன்னம் பற்றிக் கொண்டு,
"லவ்வர்ஸை டிஸ்டர்ப் பண்ணினா அப்புறம் அடுத்த ஜென்மத்தில
இப்படி ஒரு ராட்சசி எனக்கு லவ்வரா கிடைக்க மாட்டாளே.......அதனால நான் அவங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். அவங்களும் என்னைய தொந்தரவு செய்ய வேண்டாம். தேவைப்படுற நேரம் கூப்பிட்டுக்குவேன். மொபைல் இங்க தான் இருக்கு! ஏன்டீ உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா 20 சமோசாவை ஒரே நேரத்தில எனக்கு தெரியாம முழுங்கிட்டு அருள் ஸார் கிட்ட எனக்கு கெட்ட பேர் வாங்கி குடுப்ப....... ஐசு வாந்தி எடுக்கிறா, இதுக்கு தான் அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டியான்னு கேட்டார் தெரியுமா? என் டிக்னிட்டியை அவர் எப்படிடீ சந்தேகப்படலாம்?" என்று கேட்டு அவள் உதட்டை பற்றி இழுத்தவனிடம்,
"மி... மித்து இப்போ லவ்வர்ஸை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது ன்னா சொன்ன? அப்போ உனக்கு நேத்துப்பையன் மேட்டர்; ஷ்.....ஆ! என் லிப்ஸை விடுறா வலிக்குது!" என்று துள்ளி எழுந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
சுலபமாக ஒரு கையால் அவளை பற்றிக்கொண்டு, "எங்கடீ ஓடுற...... நீ எதுவும் சொல்லலைன்னா எனக்கென்ன கண்ணு தெரியாதா; சோட்டு விஷயம் தான் பார்த்தாலே தான் தெரியுதே! நான் உன் அரங்கேற்றம் அன்னிக்கே இவங்க விஷயத்தை கெஸ் பண்ணிட்டேன். அதை விடு, நீ உண்மையா தான் ஐஷுவை லவ் பண்றியான்னு அம்மா எங்கிட்ட கேள்வி கேக்குறாங்க....... நானே ஒரு முடிவு எடுத்துட்டு, அதைக் காப்பாத்தி ஆகணும்ன்னு உங்கிட்ட இருந்து எகிறி குதிச்சு ஓடிட்டு இருந்தா....... ஆனா இந்தப் பழி பாவம் எல்லாத்துக்கும் நீ தான் காரணம், ஏன்டா மித்து பாவாவை இவ்வளவு நாள் காய விட்டோம்னு நீ ரொம்ப வருத்தப்படப்போற பாரு!" என்று சொன்னவன் நெஞ்சில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டு,
"ஸாரி பாவா; நீ கல்யாணம் பண்ணின உடனே மாறிட்டன்னு தான் நானும் நினைச்சேன், பேசாம இந்த லூசை கல்யாணம் பண்ணிக்காம லைஃப் பூரா லவ் பண்ணிட்டு இருந்துருக்கலாமோன்னு கூட நினைச்சேன். ஆனா நீ ஏன் இப்படி தேவையில்லாம எதையாவது யோசிச்சுட்டு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற மித்து?" என்று கேட்டவள் கன்னத்தில் மை
முத்தமிட்டவன்,
"ரொம்ப தப்பு பண்ணிட்டேன்னு தோணிடுச்சு கண்மணி! நீ என் லைஃப்க்குள்ள வந்த பிறகு தான் என்னுடைய வாழ்க்கை ரொம்ப அழகா, முழுமையா இருக்கு, அப்போ உன்னை எனக்கு குடுத்த உங்கப்பாவை நான் எவ்வளவு நன்றியும் மரியாதையுமா நியாபகம் வச்சிருக்கணும்? ஆனா நான் மறந்துட்டேனே! அதுவும் நம்ம கல்யாணத்தன்னிக்கு ஒரு தடவை கூட அவரை நினைச்சு பார்க்கலையே..... இதுக்கு எல்லாம் காம்பன்சேட் பண்ற மாதிரி தான் இவ்வளவு நாள் விரதமும், இந்த ட்ரிப்பும்; மோர்ஓவர் உனக்கு கம்பர்டபிளா இருக்கிற ப்ளேஸுக்கு கூட்டிட்டு வந்தா நீ மெல்ட் ஆகி இன்னும் ரெண்டு பட்டர்ஃபிளை அதிகமா தருவேன்னு நினைச்சேன், அப்பா, அம்மாவை பார்க்க ஈவ்னிங் போயிட்டு வரலாமாடா பேபி?" என்று கேட்டவனிடம் விசும்பலுடன்,
"ஏன்டா இப்படி இருக்க? இன்னொரு பத்து நாள்ல நானும் செத்துப் போய்ட்டா என்ன செய்வ மித்து?" என்று கேட்டவளிடம் புன்னகையுடன்,
"நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நம்ம காதலையும், உன் நியாபகத்தையும் எனக்குள்ள பத்திரமா வச்சிருப்பேன், அதுக்காக பத்து நாள்ல எல்லாம் போயிடாத கண்மணி, உன் மித்து பாவா பாவம்ல, உன்னைய மாதிரியே இன்னொரு அரை லூசை தேடிக் கண்டுபிடிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்மா!" என்று சொல்லி விட்டு பம்மியவனிடம்,
"அப்போ என்னை மாதிரி பொண்ணு கிடைச்சுட்டா உனக்கு பிரச்சனையில்ல. கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்குவ. உன்னைய நான் விட்டா தானேடா கிளம்புவ?" என்று
கோபாவேசத்துடன் அவனை தாக்க முயன்ற ஐஸ்வர்யாவை வளைத்து அணைத்தவன்,
"பாவா ரொமான்ஸ் மூடுக்கு வந்துட்டா நீ பைட் சீன் எல்லாம் வச்சு டைம் வேஸ்ட் பண்ணக் கூடாது கண்மணி! இன்னிக்கு நம்ம பர்ஸ்ட் நைட், மூடை இப்போ இருந்து கொஞ்சம் செட் பண்ணிக்கோ, கிஸ் பண்ண கிட்ட வரும் போது நூறு சந்தேகம் கேட்ட; உன்னைய கடிச்சு வச்சுடுவேன் பார்த்துக்க!" என்று மிரட்டி விட்டு அவள் இடையை அணைத்துக் கொண்டு அவளை தன் மேல் சாய்த்து ஒரு கவுச்சில் சாய்ந்து கிடந்தான் மித்ரன்.
"ஏன் பாவா மாமாவுக்கும் லோட்டஸுக்கும் ரொம்ப சிம்பிளா கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்ல; அவர் ஃபீல் பண்ணியிருப்பாரோ? சிம்பிளா ஒரு ரிச்சுவல் பங்ஷனாவது ஆர்கனைஸ் பண்ணியிருக்கலாம்ல?" என்று கேட்ட தன் மனைவியின் தலையில் குட்டியவன்,
"ஏன்டீ உனக்கு எல்லாம் இரக்கமே கிடையாதா? உன் புருஷன் உன் பக்கத்துல உட்கார்ந்து புலம்பிட்டு இருக்கான், அவனை கவனிக்க வழியை காணும்...... என்னத்த போட்டு மண்டைக்குள்ள உருட்டிக்கிட்டு இருக்கான்னு பாரு, ஸார் தான் மா எதுவுமே வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க, அவங்களுக்கு எல்லாம் இயல்பா நடக்கணுமாம், பேபிக்கெல்லாம் ஐடியாவே இல்லையாம், வயசாகிட்டா நாங்க ரெண்டு பேருமே உனக்கு சுமையா இருப்போம்; இதுல இன்னொரு கமிட்மெண்ட் வேறயான்னு கேக்குறாங்க, ஸார் மங்கை அம்மாக்குள்ள ஒரு அழகான கம்பானியன்ஷிப் அண்ட் லவ் இருக்கு. அதை நம்ம டிஸ்டர்ப் பண்ணினா நல்லாயிருக்காது பேபி!" என்று சொல்லிக் கொண்டே அவள் பின் முதுகில் இதழ்களால் வருடிக் கொடுத்து கொண்டிருந்த மித்ரனிடம்,
"ப்ளீஸ் மித்து! எனக்கு அழுகையா வருது, அப்பா அம்மா செமட்.... அங்க நீ மட்டும் போயிட்டு வாயேன்!" என்று சொன்ன தன் மனைவியின் கண்களை ஊடுருவியவன்,
"உனக்கு கஷ்டமா இருக்குன்னு நினைச்சன்னா நீ வர வேண்டாம்டா கண்மணி; ஆனா நான் கண்டிப்பா போயிட்டு வரத் தான் போறேன்!" என்றான் உறுதியான குரலில்.
ஐஸ்வர்யா ஸ்ரீயின் அழுகை மறுபடியும் ஆரம்பமாக தயார் நிலையில் இருக்க மித்ரன் தன் இதழ் வருடலினால் அதை நிறுத்தி இருந்தான்.
நேத்ரனும், அமிர்தவர்ஷினியும் சேர்ந்து சாப்பிடும் வகையில் வெஜ் புலாவ், இரண்டு மூன்று வியஞ்சனங்கள் பால் பாயாசத்துடன் சமைத்து முடித்திருந்தனர்.
சமையல் மேடையில் அவளுக்கு முதுகைக் காட்டி கொண்டு பாத்திரத்தை சுத்தும் செய்து கொண்டு இருந்த நேத்ரனிடம்,
"என்ன மிஸ்டர் நேத்ரன்; இன்னிக்கு நீங்க மௌன விரதமா.... அது எப்படி ஸார் ஜி ஆர் ஈ, டோபிஃள் எல்லா ஸ்கோர்லயும் கலக்கியிருக்கீங்க. நீங்க கேட்ட மாதிரி ரெண்டு வருஷத்துல எம் எஸ் இன் மேனேஜ்மெண்ட் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், ஈஸியா ஸ்காலர்ஷிப்ல சீட் கிடைச்சிருக்கு, அதுவும் ஸ்டான்ஃபோர்டுல.... நான் வந்தவுடனே உங்கள யூஎஸ்க்கு வெல்கம் பண்ணினேன், அப்பவும் வாயைத் திறக்கல, இவ்வளவு நேரம் உங்களோட தேவைகளுக்காக நீங்க செய்யப் போற பார்ட் டைம் ஜாஃப், நாலு நாள் நம்ம ரெண்டு பேரும் டிஸ்னி லேண்ட், நயாகரா இப்படி டூர் அடிச்சுட்டு வந்தா ஐஷுவும் மித்ரன் ஸாரும் இங்க கொஞ்சம் ப்ரைவஸியோட இருப்பாங்கன்னு இத்தனை விஷயம் சொன்னேன், அதுக்கும் ஒண்ணுமே சொல்லல; என்னைப் பார்த்து பயமாயிருக்கா உங்களுக்கு? சரியான பயந்தாங்கொள்ளி!" என்று வாய்க்குள் முணங்கியபடி சிரிப்புடன் நின்றிருந்தவளை வேலையை முடித்து விட்டு கைகளை கட்டிக் கொண்டு பார்த்திருந்தவன்,
"நீங்க இவ்வளவு நாளா எனக்கு செஞ்ச ஹெல்ப்புக்கு எல்லாம் நான் ரெஸ்பான்ட் பண்ணல, அதனால உங்களைப் பார்த்தா எனக்கு பயமாயிருக்குன்னு நினைச்சுட்டிங்களா மிஸ்.வர்ஷினி?" என்று கேட்டவனிடம் குறுஞ்சிரிப்புடன்,
"ஆமா; உங்களுக்கு பயமே தான்! எங்க மனசுக்குள்ள வச்சிருக்கிறது எல்லாம் வெளியே வந்துடுமோன்னு........." என்று சொன்னவளிடம்,
"என் மனசுக்குள்ள வச்சிருக்கிறது எல்லாம் வெளியே வந்தா நீங்க தாங்குவீங்களான்னு தான் எனக்கு பயமாயிருக்குங்க!" என்றான் நேத்ரன் பாத்திரங்களை டைனிங் டேபிளில் ஒன்று ஒன்றாக எடுத்து வைத்தவாறு.
"சும்மா சும்மா மரியாதை குடுத்து பேசி என்னை டென்ஷன் பண்ணாதீங்க நேத்ரன்; அப்புறம் நானும் உங்களை வாடா போடான்னு கூப்பிட்டு கடுப்பேத்துவேன்!" என்றாள் அமிர்தவர்ஷினி எரிச்சல் குரலில்.
"மரியாதை வேண்டாம்ன்னு சொன்னீன்னா உன்னைய வாடி போடின்னு தான் பேசணும், ரெஸ்பான்ட் பண்ணலன்னு கம்ப்ளையிண்ட் பண்ணீன்னா ரெஸ்பான்ட் பண்ணணும், ஆனா நீ எதை தந்தாலும் உன் நண்பி கிட்ட காட்டிடுவியேம்மா...... அதை நினைச்சா தான் கொஞ்சம் டென்ஷன் ஆகுது!" என்றவனிடம்,
"பாத்தீங்களா நான் தான் சொன்னேன்ல, அதுக்கு பேர் டென்ஷன் இல்ல, பயம்! இப்போ என்ன உங்களுக்கு நம்ம ரெண்டு பேருக்குள்ள நடக்கிற விஷயத்தை ஐஷு கிட்ட சொல்லக் கூடாதா? சரி சொல்லல, இப்போவாவது என்ன செய்ய போறீங்கன்னு சொல்லுங்களேன்!" என்றாள் அமிர்தவர்ஷினி.
"அதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது மினி செல்லம்; ஃபீல் பண்ணி தெரிஞ்சுக்கணும்!" என்று அவள் இடையைப் பற்றி அவளை அருகே இழுத்தவன் அவள் சுதாரித்துக் கொள்ளும் முன் அவள் இதழ்களை அவள் அனுமதியில்லாமல் தன் இதழ்களால் வசமாக்கி விட்டான்.
சில நிமிடங்கள் கழித்து அவளை விடுவித்தவனை குற்றம் சாட்டும் பார்வையில் முறைத்தவள்,
"எதுக்கு இப்படி செஞ்சீங்க? இது தப்பில்லையா?" என்று கேட்டவளிடம் காஷுவலாக,
"ரெஸ்பான்ட் பண்ண சொன்ன; பண்ணிட்டேன், இன்னும் நீ என்னை கல்யாணம் பண்ணிக்குறதுக்கு, எனக்கு பேபீஸ் குடுக்கப் போறதுக்கு, ஒரு பீஸ்புல் லைஃப் குடுக்கறதுக்கு இப்படி ஒண்ணொன்னுக்கும் தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்க முடியாது, ஸோ எனக்கு தெரிஞ்ச மாதிரி என் மனசுக்குள்ள வச்சிருக்கிறது எல்லாம் பேசாம உனக்கு புரிய வச்சுட்டேன், நீயும் இதே ஸ்டைலை பாஃலோ பண்ணலாம், இல்ல இதை விட பெட்டரா எதையாவது யோசிக்கலாம். நாலு நாள் உன் கூட தானே இருக்கப் போறேன்....... அதுக்குள்ள நீயும் எனக்கு புரிய வச்சிடு; எனிவேஸ் உன் லிப் பாம் ப்ரூட் ஃப்ளேவர் ரொம்ப டேஸ்ட்டா இருந்தது! நிறைய ஃப்ளேவர் ட்ரை பண்ணு, இதுங்க ரெண்டும் ரொம்ப லவ் பண்ணி ஒரு சின்னத்தம்பிய இப்படி லிப் லாக் எல்லாம் குடுக்கிற அளவுக்கு டெவலப் பண்ணி விட்டுடுச்சுங்க, இதோ வந்துட்டேன் சிவாண்ணா!" என்று அலைபேசியில் கூப்பிட்ட தன் அண்ணனிடம் உரையாடிக் கொண்டே கிச்சனுக்குள் இருந்து வெளியே சென்று விட்டான் நேத்ரன்.
"எப்படியாவது உன்னைய வாயைத் திறக்க வைக்கணும்ன்னு நினைச்சா என் வாயை மூடிட்டியேடா திருடா.... மினி செல்லமாம்! இரு உன்னைய எப்படி ஆஃப் பண்ணலாம்ன்னு மூளையை பிசைஞ்சு யோசிக்கிறேன்!" என்று மனதிற்குள் நினைத்த படி புன்னகையுடன் வெளியே வந்தாள் அமிர்தவர்ஷினி.
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro