💖 வஞ்சி மனம் 32
நேத்ரன், ஐஸ்வர்யா ஸ்ரீ இருவரும் ஏர்போர்ட்டில் நின்று கொண்டு இருந்தனர். மித்ரன் அவனுக்கு ஏதோ பணி இருந்ததால் நேராக ஏர்போர்ட்டில் வந்து இணைந்து கொள்கிறேன் என ஏற்கனவே சொல்லி இருந்தான். சந்திரதாரா, அருள்மொழி, மங்கை மூவரும் இளையவர்களை வழியனுப்பி வைக்க வந்திருந்தனர்.
"நேத்ரா நீ என்ன சின்னப்பையனா? உன்னை வழியனுப்புறதுக்கு ஏர்போட்டுக்கு நான் வந்து டாட்டா காட்டணுமா? நல்ல படியா போயிட்டு வா கண்ணா! நீ வந்து தான் அருள் ஸார், உங்கண்ணி ரெண்டு பேரோட பர்டனை கம்மி பண்ணணும். ஆல் த பெஸ்ட்!" என்று வீட்டிலேயே வாழ்த்து சொன்ன தன் அன்னையிடம்,
"ம்மா! எப்படியும் ஸாரும், மங்காவும் அங்க வரப்போறாங்கல்ல, அப்போ நீங்களும் வாங்க!" என்றவன் அதற்கு மேல் பேச இடம் கொடுக்காமல் அனைவரையும் கிளப்பி கூட்டி வந்து விட்டான்.
இரண்டு வருடங்கள் அனைவரையும் விட்டு விட்டு எப்படி இருக்கப் போகிறோம் என்ற கவலை ஒருபுறமும், இரண்டு வருடங்கள் வர்ஷினியின் பக்கத்தில் இருக்கப் போகிறோம் என்ற குதூகலமும் மாறி மாறி அவனைத் தாக்கியது.
"சின்னத்தம்பி பாத்து சூதாரணமா போயிட்டு வரணும், மொழி தெரியாத ஊரு, கோபத்தை கொஞ்சம் குறைச்சுக்கிட்டு நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்!" என்று மங்கை சொல்ல நேத்ரன் புன்னகையுடன் "சரி மங்கா, நீ சொன்ன மாதிரி நடந்துக்க முயற்சி பண்றேன். அம்மாவையும், ஸாரையும் நல்லா கவனிச்சுக்க!" என்றவன் சந்திரதாரா, அருள்மொழி இருவரின் கால்களில் பணிந்து எழுந்தான்.
"எந்த டென்ஷனையும் தலையில ஏத்திக்காதடா நேத்ரா. நிறைய இடங்களுக்கு போ, நாலு மனுஷங்களோட இண்டராக்ட் பண்ணு,
ஹாவ் சம் ஃபன்! எப்படியும் பிஸினஸ்க்குள்ள வந்த பிறகு மண்டை காயத் தான் போகுது, அது வரைக்கும் ஜாலியா இருக்கலாம் தப்பில்ல, பட் டெய்லி ஒரு தடவை என்னோட கோர்ஸ் முடிஞ்சதுக்கப்புறம் நான் என் ஊருக்குப் போய்டுவேன்னு மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே இரு! பான் வாயேஜ்!" என்று சொன்ன அருள்மொழியிடம்,
"பன் எல்லாம் வரக் வரக்குன்னு இருக்கும்ல, டப்பாவுல புளிசாதம் இருக்கு! சின்னத்தம்பி ஒரு வாய் சாப்பிட்டுட்டு போறீங்களா?" என்று மங்கை கேட்க அனைவரும் புன்னகை பூத்தனர். ஐஸ்வர்யா ஸ்ரீ அலர்மேல் மங்கையை கட்டிப் பிடித்து கொண்டு,
"லோட்டஸ் பொண்ணு, மாமா நேத்ரா கிட்ட அவனோட இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்ன்னு இங்கிலீஷ்ல சொல்றாங்க, ஆனா கிளம்பற நேரத்துல ஏன் நீ புளிசாதத்தை நியாபகப்படுத்தின.....? எனக்கு வயிறு பசிக்கிற மாதிரி இருக்கு!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"அப்படியா கண்ணு! பன்னுன்னு உங்க மாமா ஏதோ சொல்லவும் சாப்பிடத்தான் கேக்குறாகன்னு நினைச்சேன், உனக்குப் பசிக்குதுன்னா சாப்பிடு ராசாத்தி, கார்ல போய் எடுத்தாரவா?" என்று கேட்டார் மங்கை.
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மங்கா. ஏய் நீ இப்போ தானடீ வீட்ல இருந்து கிளம்பறப்ப சாப்பிட்டுட்டு வந்த, அதுக்குள்ள உனக்கு மறுபடியும் எதுக்கு பசிக்குது..... கம்முன்னு இரு!" என்று ஐஸ்வர்யாவை அதட்டிய நேத்ரனை,
"நீ இன்னும் என் கால்ல விழல, ரொம்ப பேசுன சத்தியத்தை கேன்சல் பண்ணிடுவேன்!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவளிடம் அருள்மொழி
"ஐசு மங்கையை இன்னும் எதுக்கு பேர் சொல்லி கூப்பிட்டுட்டு.... அத்தைன்னு கூப்பிட்டா அவளும் சந்தோஷப்படுவா. நானும் சந்தோஷப்படுவேன்ல்ல டா?" என்று ஒரு எதிர்பார்ப்புடன் கேட்டார்.
"புள்ளைங்களுக்கு எப்படி வருதோ அப்படிக் கூப்பிடட்டும் விடுங்க, நம்ம சின்னத்தம்பி எல்லாம் பொறந்ததுல இருந்து என்னைய பேர் சொல்லித் தான் கூப்பிடுது. திடீர்னு மாத்திக்க சொன்னா எப்புடி முடியும்?" என்று கேட்ட மங்கையிடம், "சரிம்மா உன் இஷ்டம்!" என்று சொல்லிவிட்டு முடித்து விட்டார் அருள்மொழி.
சந்திரதாரா மித்ரனை இன்னும் காணவில்லை, அவனுக்கு அழைத்து பாருங்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்க மித்ரன் சரியாக அந்த நேரத்தில் இவர்களை பார்த்து கையசைத்து விட்டு அருகில் வந்து விட்டான்.
"என்னடா மித்ரா இவ்வளவு நேரம் ஆக்கிட்ட?" என்று கேட்ட அருள்மொழியிடம்,
"ஸாரி ஸார். லாஸ்ட் மினிட்ல கொஞ்சம் வொர்க்ஸ் வந்துடுச்சு! கிளம்பலாமா சோட்டு.......... ஏய் என்னாச்சுடா சோட்டு கிளம்பற நேரம் ஃபீல் பண்ணக் கூடாது கண்ணா!" என்று மித்ரன் சொல்ல சொல்ல நேத்ரன் மித்ரனுடன் இறுக்கமான அணைப்பில் நின்று கொண்டான்.
"வந்தவுடனே ஆரம்பிச்சுட்டாய்ங்களா, ரொம்ப தான் பண்ணுதுங்க ரெண்டும்...... இந்த மித்து பாவா நமக்கு டெய்லி காலையில எழுந்திரிச்ச உடனே ஒரு கிஸ் குடுக்கிறதோட சரி, அதுக்கு அப்புறமெல்லாம் நீ யாரோ நான் யாரோன்னு ஓடி ஒளிஞ்சுட்டு இருக்கான். இங்க வந்து அண்ணனும் தம்பியும் கட்டிப் பிடிச்சுக்கிட்டு ஓவரா பாசத்தை கொட்டுதுங்க பாரு! ரொம்ப கொட்டாதீங்கடா, வழுக்கிடப் போகுது; ஹ்க்கும்!" என்று மனதிற்குள் இருவரையும் திட்டிக் கொண்டு இருந்தவளின் முகத்தை பார்த்து விட்டு நேத்ரன் கண்களை துடைத்து கொண்டு அவளருகில் வந்தான்.
"ஏய் எங்க சிவாண்ணாவை நான் கட்டிப் பிடிச்சா உனக்கெதுக்குடீ இப்படி முகம் எட்டு கோணல் கோணுது....
இவ்வளவு நேரமா நீ என்னைய தானடீ மனசுக்குள்ள திட்டிக்கிட்டு இருந்த;
உங்க எல்லாரையும் விட்டுட்டு போகணும்ன்னு நினைக்கும் போது எனக்கு அழுகை அழுகையா வருது, நான் போகல, எனக்கு யூஎஸ் வேண்டாம், ஸ்டடீஸ் வேண்டாம்! நான் எங்கேயும் போக மாட்டேன்! வாங்க வீட்டுக்கு போகலாம்!" என்று சொல்லிவிட்டு ஓரமாக இருந்த இருக்கைகளில் முகத்தை பொத்திக் கொண்டு அமர்ந்து விட்டான் நேத்ரன்.
"நல்ல வேளை...... வீட்ல இருந்து ஏர்போர்ட் தூரம்ன்னு ரெண்டு மணி நேரம் முன்னாடியே வந்துட்டோம், இந்தப் பையன் பண்ற காமெடிக்கு எல்லாம்; ஹலோ மாஸ்டர் பாவா எங்க போறீங்க?" என்று அவன் கையைப் பிடித்து தடுத்தவளை முறைத்த மித்ரன்,
"அங்க சோட்டு அழுதுட்டு உட்கார்ந்து இருக்கான், கண்ணு தெரியலையா உனக்கு? அவனை காம்ப்ரமைஸ் பண்றதுக்கு தான் போறேன்!" என்று சொன்னவனிடம்,
"எப்படி காம்ப்ரமைஸ் பண்ணுவீங்க? நல்லா அழு தம்பிப் பையா; அழுறதால உன் ஸ்ட்ரெஸ், டென்ஷன் எல்லாம் ரிலீவ் ஆகிடும். உடம்புல இருக்கிற டாக்ஸின்ஸ் ரிலீஸ் ஆகிடும். கண்ணுல இருக்கிற டஸ்ட் எல்லாம் வெளியே போயிட்டு நல்லா கண்ணு தெரியும்...... எக்ஸட்ரா எக்ஸட்ரான்னு பேசி க்ளாஸ் எடுக்கப் போறீங்க, அதானே; என் ப்ரெண்டை கூல் டவுன் பண்ற வொர்க்கை நான் பார்த்துக்குறேன். முடிஞ்சா ஒரு டீயும், ஒரு காஃபியும் வாங்கி வைங்க, ப்ரெஷ் ஆன பிறகு நம்ம தலைவர் மூடு எப்படி இருக்கோ.... என்னத்த குடிக்க கேக்குறான்னு தெரியல. செக் இன்க்கு இன்னும் எவ்வளவு நேரம் டைம் இருக்கு?" என்று அவனிடம் கேட்டு விட்டு வாட்சை பார்த்தவள்,
"கரெக்டா டென் மினிட்ஸ் கழிச்சு என் கையில ஹாட் ட்ரிங்க் கையில இருக்கணும், முறைக்காதீங்க மாஸ்டர்.... ஹாட்டா குடிக்கிற எந்த ட்ரிங்க்கும் ஹாட் ட்ரிங்க் தான், நான் காஃபியை தான் சொன்னேன்!" என்று கண்சிமிட்டி விட்டுப் போனவளை பார்த்து, "ராட்சசி!" என்று முணுமுணுப்புடன் திட்டி விட்டு புன்னகையுடன் தன் அன்னையிடம் சென்றான் மித்ரன்.
"என்னங்க மாமா, திடீர்னு சின்னத்தம்பி இப்புடி சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்குது......? இப்போ என்ன செய்றது? நாங்க ஊருக்கு போகல, எங்க காச குடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வீட்டுக்கு போயிடலாமா?" என்று கேட்ட மங்கையிடம் நமுட்டுச் சிரிப்புடன்,
"மங்கை யுவர் சார்மிங் இன்னொசென்ஸ் இஸ் கில்லிங் மீ!" என்றார் அருள்மொழி.
"இந்தாருய்யா இந்த தஸ் புஸ்ன்னு பேசறத எல்லாம் பாப்பா, இல்ல தம்பிங்க கிட்ட நிப்பாட்டிக்கணும். உன்னைய எங்கய்யா நான் கிள்ளுனேன்..... நான் பாட்டுக்கு செவனேன்னு ஒரு ஓரமா நின்னுட்டு இருக்கேன்!" என்று புலம்பினார் மங்கை.
"என் அழகு பொண்டாட்டி ஏன்டீ ஓரமா போய் நிக்குற....? பக்கத்துல வந்து என் கையைக் கோர்த்துக்கிட்டு நில்லு, இல்ல ரெண்டு கிள்ளு வேணும்னாலும் கிள்ளிக்கோ. நானா வேண்டாங்கிறேன்?" என்று மங்கையை வெறுப்பேற்றினார் அருள்மொழி.
"ச்ச்சீ இந்த மனுஷனுக்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்ல! எப்படி பேசுறாரு பாரு!" என்று முணங்கிக் கொண்டாலும் மங்கை புன்னகையுடன் அவர் அருகில் வந்து அவர் கைகளைப் பற்றிக் கொண்டு நின்றுகொண்டு இருந்தார்.
சந்திரதாரா மித்ரனை கவலையுடன் பார்க்க அவன், "ஒண்ணும் டென்ஷன் ஆக வேண்டாம்மா! வரு அவனை சரி பண்ணிடுவா, பத்து நாளும் டேப்லெட்ஸ் எல்லாம் கரெக்டா எடுக்கணும்மா! ப்ராப்பரா ரெஸ்ட் எடுக்கணும், நல்லா சாப்பிடணும்.
பிசியோதெரபிக்கு ஸார் கிட்ட பேசி டெம்பரரியா ஒருத்தரை அரேன்ஜ் பண்ண சொல்லிட்டேன், வந்துடுவாங்க. உங்களுக்கு என்ன தேவைப்பட்டாலும் உடனே எனக்கு கூப்பிடணும், கேக்கணும்! சரியாம்மா?" என்று சொன்னவனிடம்,
"என்ன தேவைப்பட்டாலும் கேக்க சொல்லி நீயே சொல்லிட்ட, இதுக்கு அப்புறமும் யோசிச்சுட்டு இருக்க தேவையில்லை, மித்ரா நீ நிஜமாவே ஐஷுவை லவ் பண்றியாப்பா? அவளுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு அவ என்ன பண்ணுவா பாவம்.... ஏன் அவ மேல இவ்வளவு கோபம்? எதுக்காக இந்த ஒதுக்கம் எல்லாம்; எனக்கு சத்தியமா புரியல, உங்க ரெண்டு பேரையும் பார்த்தா புதுசா கல்யாணம் ஆன கப்பிள்ஸ் மாதிரி தெரியல, ஆளுக்கு ஒரு மூலையில உட்கார்ந்துட்டு, ஒருத்தரை ஒருத்தர் அவாய்ட் பண்ணிட்டு ஏன் இந்த பாடு?" என்று கேட்ட தன் தாயிடம்,
"பொதுவா நாங்க தான் எல்லாரையும் அப்சர்வ் பண்ணுவோம், ஆனா உங்க அப்சர்வேஷன் செமம்மா! எங்க கல்யாணத்தன்னிக்கு நான் வரு அப்பாவை கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கவேயில்லம்மா, அவ உடம்பு சரியில்லாம கஷ்டப்பட்டப்போ
ஒரு வேளை நம்ம அவரை மனசுல நினைச்சு உங்க பொண்ணை இனிமேல் என் மனைவி ஆக்கிக்குறேன் ஸார்ன்னு பெர்மிஷன் கேக்கல, அதுனால தான் இவ்வளவு கஷ்டப்படுறாளோன்னு எனக்கு கில்ட்டி ஃபீல் வந்துடுச்சு, ஸோ அப்பவே டிஸைட் பண்ணிட்டேன், யூஎஸ் போய் அவர் கிட்ட மானசீகமா நன்றியும், மன்னிப்பும் சொல்லிட்டு தான் எங்க லைஃப் ஸ்டார்ட் பண்றதுன்னு! ஆனா உங்க மருமக கிட்ட இருந்து தள்ளி இருக்கணுமே..... அவளைப் பார்த்து கொஞ்சம் சிரிச்சோம், வேற வினையே வேண்டாம்; பின்னால இருந்து கண்ணைக் கட்டி எங்கேயாவது தள்ளிட்டு போயிடுவா, அப்புறம் சத்தியமாவது...... உறுதியாவதுன்னு நானும் அவ பின்னால போயிடுவேன்; அதனால தான்மா இந்த ஓட்டமும் ஒளிஞ்சு விளையாடுற விளையாட்டும்.... ஆனா என் கிட்ட வருவை நிஜமாவே லவ் பண்றியான்னு ஒரு கேள்வி கேட்டீங்க பார்த்திங்களா.... அது தான்மா கொஞ்சம் கஷ்டமா இருக்கு!" என்று தலைகுனிந்து கொண்ட மித்ரனிடம் மன்னிப்பு கேட்ட சந்திரதாரா,
"இனிமே உங்க புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள நான் தலையிட மாட்டேன் மித்ரா! நீ ஐஷுவை எப்படி சமாதானப் படுத்துவியோ உன் பாடு!" என்று சொல்லி நிம்மதிப் பெருமூச்சு விட்டார் சந்திரதாரா.
"ஏய் எருமை மாடு! செக்இன்க்கு டைம் ஆச்சு. வந்து தொலையேன்!" என்று அவன் தோளைக் குலுக்கி அனத்திக் கொண்டு இருந்தவளிடம்,
"ஏய் சும்மா உயிரை வாங்கிட்டு இருக்காம எந்திரிச்சு போடி! நீயும் சிவாண்ணாவும் ஜாலியா ஹனிமூன் போயிட்டு என்ஜாய் பண்ணிட்டு வாங்க, நான் வரவே மாட்டேன்!" என்று ஷு காலால் ஓங்கி தளத்தை மிதித்தவனிடம்,
"ஆர் யூ ஜோக்கிங்டா பையா? உங்கண்ணன் சமோசா பிரச்சனையால கடுப்பாகி என் கூட கா விட்டுருக்கான்....... எத்தனை நாளைக்கு விரதமோ அவனுக்கு மட்டும் தான் தெரியும், இதுல நல்லா போக வேண்டியது தான் ஹனிமூன்.... அதை விடு நேத்துக் குட்டி, இப்படி அடம் பிடிக்கக்கூடாது தங்கம்! உங்கள யுனிவர்சிட்டியில கூப்பிடுவாங்க. அமிர் கூப்பிடுவாங்க. நீங்க போகலைன்னா எல்லாரும் சோகக்கடல்ல மூழ்கிடுவாங்கல்ல? வாங்க செல்லம் எழுந்திரிச்சு அண்ணி கையை பிடிச்சுக்கிட்டு வாங்க பார்ப்போம்!" என்று சொன்னவளை கனல் பார்வையில் சுட்டெரித்த நேத்ரன்,
"மரியாதையா போயிடுடீ; இல்ல காதை கடிச்சுடுவேன் பார்த்துக்க!" என்று சொல்ல ஐஸ்வர்யா ஸ்ரீ தன் காதுகளை பொத்திக் கொண்டாள்.
"அடேய் நீ என்ன வாம்பயரா? காதை கடிப்பானாம்ல, இவ்வளவு அரகென்ஸ் எல்லாம் வேண்டாம்ப்பா! நான் கிளம்புறேன், என்ன.... ஒரு கோல் செட் பண்ணிட்டு அதை ரீச் பண்றப்ப நிறைய தடைகள் வரும், உன் கேஸ்ல முதல்லயே பாசம்ங்கிற பேர்ல வந்துடுச்சு, இட்ஸ் ஓகே.... நாளைக்கு எத்தனையோ விஷயங்களை சான்ஸ் கிடைச்சும் மிஸ் பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ணுவல்ல, அதுல இதுவும் ஒண்ணா இருக்கும்!" என்று சொல்லிவிட்டு மித்ரனை அழைத்தவள் அவன் கையில் இருந்த பானத்தை நேத்ரனின் கையில் திணித்து,
"இந்த ட்ரிங்க குடிச்சு முடிக்கிற வரைக்கும் தான் உனக்கு டைம், உள்ள போகணுமா வெளியே போகணுமான்னு யோசிச்சுட்டு சொல்லு!" என்று சொல்லிவிட்டு அவள் பாட்டில் கால் ஆட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் நேத்ரன் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வது என முடிவுசெய்து அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான்.
"உன்னால தான் சோட்டு கிளம்புறப்போ தடுமாறாம கிளம்புறான், தேங்க்ஸ்டா வரு பேபி!" என்று சொன்ன மித்ரனிடம்,
"எதுக்கு சண்டை போட்டன்னு சொல்லாம இவ்வளவு நாள் சரியா பேசாம இருந்துட்டு இப்போ மட்டும் வரு பேபி தேங்க்ஸ் ஆ.... இரு உன்னைய அங்க போனதும் வச்சுக்கறேன்!" என்று மிரட்டியவளிடம்,
"ஓகேடா செல்லம் வித் ப்ளஷர், தூக்கி இடுப்புல கூட வச்சுக்கோங்க, உங்க பாவா ரொம்ப சமர்த்துப் பையனாக்கும்!" என்று சொன்னவனை ஒரு உதட்டுச் சுழிப்புடன் தள்ளி விட்டு சென்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
ஒவ்வொருவருக்கும் மனநிலை ஒவ்வொரு மாதிரியாக இருக்க மூவரும் கலவையான மனஉணர்வுகளுடன் விமானத்தில் பயணம் செய்தனர்.
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro