💖 வஞ்சி மனம் 31
மித்ரன் ஐஸ்வர்யா ஸ்ரீயின் திருமணம் முடிந்து இருபது நாட்கள் ஆகி விட்டது. இந்த இருபது நாட்களில் குறிப்பிடும் படியாக அனைவரது வாழ்விலும் சில நிகழ்வுகள் நடந்திருந்தது. மித்ரன், நேத்ரன் இருவருக்கும் அவர்களது அனைத்து சொத்துக்களும் அவர்களது வக்கீல் மூலம் ஒப்படைக்கப் பட்டு கங்காதர் வீட்டிலும், அலுவலகத்திலும் அவரது பொறுப்பில் இருந்து மொத்தமாக தூக்கி எறியப்பட்டு இருந்தார். மித்ரன் குடும்பத்துடன் சென்று திருப்பூரில் செட்டில் ஆகி விட்டான். நேத்ரனை கையில் பிடிக்க முடியவில்லை. சொந்த வீட்டிற்கு சென்ற மகிழ்ச்சியில் குழந்தையென மாறி குதியாட்டம் போட்டான்.
"என்னடா நேத்து பையா? செம குஷி மூட்ல இருக்க போலிருக்கு?" என்று ஐஸ்வர்யா ஸ்ரீ கேட்க நேத்ரன் தன் அண்ணனிடம் தயங்கிய படி,
"சிவாண்ணா இஃப் யூ டோண்ட் மைண்ட், நான் ஐஷுமாவை ஒரு தடவை ஹக் பண்ணிக்கட்டுமா?" என்று கேட்ட தன் தம்பியை பார்த்து புன்னகைத்தவன்,
"உன் அண்ணியும், நீயும் இருக்கிற குஷிக்கு ஒரு ஆட்டம் போட்டுட்டு தான் அடங்குவீங்க! என்ஜாய் பண்ணுங்க!" என்று சொல்லிவிட்டு நகரப் போனவனை
"எங்க எஸ்கேப் ஆகுற.....? நானும், நேத்துவும் எவ்வளவு ஹாப்பியா இருக்கோம்.... நீயும் ஜாயிண்ட் பண்ணிக்கோ! மாமா, லோட்டஸ், ஆன்ட்டி, மிட்டு எல்லோரும்...." என்று சொல்லி விட்டு அனைவரையும் கட்டிப் பிடித்து ஒருமுறை சுற்றி விட்டுத் தான் அடங்கினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"ஐஷுமா! ரொம்ப ஹாப்பியா இருந்தாலும் கொஞ்சம் கில்டியா இருக்குடா, சென்னை, யூஎஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜ்வல்ஸ்ன்னு உன் நிறைய விஷயத்தை ஸாக்ரிஃபைஸ் பண்ண வேண்டியதாகிடுச்சுல்ல!" என்று சோகக்குரலில் கேட்ட நேத்ரன் முகத்தில் மெய்யான வருத்தம் தெரிந்தது.
"விடுறா..... இப்போ எல்லாரும் ஹாப்பியா இருக்கோம்ல, அது போதும். நீ நம்ம கம்பெனில சார்ஜ் எடுத்ததுக்கப்புறம் உன்னால முடிஞ்சா
அந்த அமௌண்ட்டை திருப்பிக் கொடு, நான் வாங்கிக்குறேன்!" என்றாள் ஐஸ்வர்யா.
மித்ரன் சந்திரதாராவிடம் வந்து, "ம்மா! சோட்டு யூஎஸ் கிளம்புறப்போ நானும் ஒ....ஒன் வீக் அங்க போயிட்டு வரட்டுமா?" என்று அந்த ஒரு கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் திணறி தடுமாறி விட்டான்.
ஐஸ்வர்யா தன் கணவனோடு வந்து அமர்ந்து கொண்டு, "எதுக்கு மித்து இவ்வளவு ஃப்ளஷ் பண்ற? நேத்துவுக்கு அங்க எல்லாம் கம்பர்டபிளா செட் பண்ணி குடுத்துட்டு, அவனோட யூனிவெர்சிட்டி, நம்ம வீடு எல்லாம் ஒரு க்ளாண்ஸ் பார்த்துட்டு வரப் போற! இதுக்கு எதுக்கு இவ்வளவு ஸீன் போடுற?" என்று அவன் கண்ணைப் பார்த்து கேட்க நேத்ரன் சிரிப்பை அடக்கப் பெரும் பாடு பட்டு ஒருவாறு சமாளித்து நின்றான்.
சந்திரதாரா தன் மருமகளை அருகில் அழைத்து அவள் தலையை வருடி விட்டு, "மித்ரா எங்கே போனாலும் இனிமேல் நீயும் அவனோட கிளம்பணும் ஐஷு, அவனை தனியா விட்டா நேத்ரா க்ளாஸ், அது இதுன்னு வெளியே சுத்தும் போது மித்ராக்கு போர் அடிக்கும்ல, நீங்க மூணு பேரும் கிளம்புங்க. மங்காவையும், ஸாரையும் நான் பார்த்துக்குறேன். அவங்க ரெண்டு பேரும் என்னைப் பார்த்துக்குவாங்க!" என்று சொல்லிவிட்டு அருள்மொழியிடம்
"நேத்ரா கிளம்பறதுக்குள்ள உங்க கல்யாணத்தையும், மித்ரா ரிஷப்ஸனையும் வச்சுக்கலாமா ஸார்.....? மித்ரா உன் ப்ரெண்ட்ஸ் யார் யார் ரிஷப்ஸனுக்கு வர்றாங்கன்னு கேட்டு அவங்களுக்கு டிக்கெட் போட்டு குடுத்துடுப்பா, ஏற்கனவே ஒரு தடவை உனக்காக இங்கே வந்துட்டு போயிருக்காங்க; திரும்பவும் செலவு செய்யணும்னா கஷ்டம் தானே?" என்று சொன்னவரிடம் சம்மத தலையசைப்புடன்,
"சரிம்மா! எல்லாருக்கும் தேவையான அரேன்ஜ்மெண்ட்ஸ செஞ்சு குடுத்துடலாம், ஆனா ராஜசேகர் ஸாரை கூப்பிட வேண்டாம்ன்னு நினைக்கிறேன், பங்ஷன் முடிஞ்சதுக்கப்புறமா நான் அவர் கிட்ட பேசிடுறேன். என்னை புரிஞ்சுப்பார், தேவையில்லாம அந்த சௌஜன்யா எல்லாம் என் லைஃப்ல வந்து வந்து ஏதாவது கருத்து சொல்லிட்டு போறதையெல்லாம் என்னால அலவ் பண்ணிட்டு இருக்க முடியாதும்மா!" என்றவன் அருள்மொழியின் புறம் திரும்பி
"ஸார் சோட்டு இங்கே திரும்பி வர்ற வரைக்கும் இங்க ஆஃபிஸ நீங்க தான் ஸார் ஒரு பார்முக்கு கொண்டு வரணும். உங்க மருமகளை எல்லாம் என்னால நம்ப முடியாது, நாலு நாள் ஆஃபிஸ்க்கு போறேன்னு பொறுப்பா கிளம்புவா, அஞ்சாவது நாள் மங்கை அம்மா கூட சேர்ந்துட்டு சமோஸா சாப்பிட்டுட்டு ஹாஸ்பிடலுக்கு ட்ரிப் அடிச்சுட்டு இருப்பா!" என்று சொல்லி விட்டு அவளை ஒரு முறைப்புடன் பார்த்து நின்று கொண்டு இருக்க ஐஸ்வர்யா ஸ்ரீ படக்கென நேத்ரனின் பக்கம் திரும்பினாள்.
நாக்கை கடித்துக் கொண்டு அவளைப் பார்த்து பழிப்பு காட்டியவனை பார்த்து தன் தொடையில் தானே குத்திக் கொண்டாள் அவள். நேற்று மாலை தான் அவளிடம் வந்து அவன் அமிர்த வர்ஷினியை விரும்புவதை பற்றி அவன் ஊரில் இருந்து திரும்பி வரும் வரையில் யாரிடமும் சொல்லக் கூடாது என சத்தியம் வாங்கியிருந்தான். ஆனால் அவளுடைய குட்டை அவளுடைய கணவனிடம் போட்டு உடைத்து விட்டான் போலும்!
அருள்மொழி, அலர்மேல் மங்கையின் திருமணம் எளிமையாக கோவிலில் நிகழ்ந்து பின் மித்ரன் ஐஸ்வர்யா, அருள்மொழி, மங்கை இரண்டு தம்பதியருக்கும் திருமண வரவேற்பு வீட்டிலேயே நிறைவான வகையில் நடந்தது.
நேத்ரனை தனியாக இழுத்துச் சென்ற ஐஸ்வர்யா ஸ்ரீ, "நேத்து மித்து நான் அழகா இருக்கேன்னு சொல்லவேயில்ல டா, நீயாவது சொல்லேன், அவனைப் பாரு எவ்வளவு ஸ்மார்ட் ஆ இருக்கான்....
உங்க சிவாண்ணா பக்கத்தில நிக்கறதுக்கு இந்த மேக்கப் ஓகேவா டா?" என்று கேட்டவளிடம் முகம் சுளித்து,
"நோ கமெண்ட்ஸ், சிம்ப்ளி வேஸ்ட்! இதுக்கு தான் அவ்வளவு நேரம் கண்ட கண்ட மைதா மாவை எல்லாம் முகத்தில அப்பியிருந்தியா ஐஷுமா! இதெல்லாம் செய்யாமலேயே சிவாண்ணா தான் கெத்து!" என்றவன் அவள் உச்சுக் கொட்டவும் மெதுவாக அங்கிருந்து நழுவி ஓடி விட்டான்.
மித்ரனின் யோகா மாணவர்கள் அவனை மிகவும் மிஸ் செய்யப் போவதாக சொல்லி வருத்தப்பட்டனர். மித்ரன் தான் அவன் இங்கே இல்லா விட்டாலும் வகுப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சொல்லி அனைத்து மாணவர்களுக்கும் புதிய மாஸ்டரை அறிமுகம் செய்து வைத்து அனைத்து மாணவர்களுக்கும் புதிய பயிற்சி வகுப்புகளுக்கான இடம், நேரம் அனைத்தையும் அவரிடம் கேட்கலாம், தன்னைப் போலவே அவரும் அவர்களுக்கு நல்ல நண்பராக இருப்பார் என்று பிள்ளைகளை தேற்றினான்.
விழாவிற்கு வந்த கங்காதர், மானஸ்வினியைப் பார்த்து விட்டு நேத்ரன் மித்ரனை முறைத்து கொண்டு நின்றான்.
மித்ரன் புன்னகையுடன் அவனை அருகில் அழைத்து, "இந்த தடவ நான் இல்ல சோட்டு, உங்கண்ணி! அவங்க நம்ம பேமிலியாம், ஏதாவது பங்ஷன் னா அவங்களும் இருக்கணுமாம்! கூப்பிடணும்ன்னு ஆசைப்பட்டா, சரி உனக்கு இஷ்டம்னா கூப்பிடுன்னு சொன்னேன். கூப்பிட்டுட்டா போலிருக்கு. நீ போய் அவங்கள ரிசீவ்.... சரி விடு முறைக்காத!" என்று தன் தம்பியின் பலமான மூச்சைப் பார்த்து விட்டு அமைதியாக நின்றான் மித்ரன்.
"ஏய் ஐஸ்வர்யா ஸ்ரீ!" என்று ஆத்திரத்துடன் கூப்பிட்ட நேத்ரனை சிரிப்புடன் திரும்பிப் பார்த்தாள் ஐஸ்வர்யா.
"ஏன்டீ இப்படி பண்ணின...... இவங்கள எதுக்குடீ மறுபடியும் இந்த வீட்டுக்குள்ள இன்வைட் பண்ணின.... இதுங்க எல்லாம் கால சுத்தின பாம்புங்கம்மா; எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும்னு காத்துட்டு இருப்பாங்க, அசந்த நேரம் குழிக்குள்ள தள்ளி மண்ணை போட்டு மூடிடுவாங்க......அவங்களை இங்கிருந்து கிளம்பிப் போக சொல்லிடட்டுமா?" என்று கேட்டு அவள் முகத்தை நோக்கியவனிடம் தன் கைக்குட்டையால் அவன் முகத்தில் இருந்த வியர்வையை துடைத்து விட்டு,
"எதுக்கு நேத்து பையா இவ்வளவு டென்ஷன்.... நீ தானே ஊருக்கு போறதுக்குள்ள மிஸ்டர் கங்காதருக்கு ஒரு ஆட்டம் காட்டணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்ட, இப்போ போய் முடிஞ்சா ஒரு மாலை போட்டு உன் சித்தப்பாவை உள்ள கூட்டிட்டு வா, அவர் ராஜ்ஜியம் நடத்திட்டு இருந்த வீடு...... கொஞ்சமாவது நல்லவரா இருந்தா அவருக்கு இந்த வீட்டுக்குள்ள நுழையறதே ரொம்ப கொடுமையான விஷயமா இருக்கும், இதுக்கு மேல நீ உபச்சாரம் வேற பண்ணினா?..... போ உன் சித்தப்பாவையும், சித்தியையும் உன் ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லா கேள்வியையும் கேளு!" என்று சொன்னவளை கன்னம் கிள்ளி முத்தமிட்டு விட்டு சென்றான் நேத்ரன்.
"வாங்க சித்தப்பா, வாங்க சித்தி; எங்க வீட்டுலயே ரிஷப்ஸனை வச்சுக்கலாம்ன்னு ப்ளான் பண்ணினோம். உங்க பிஸி டைம்லயும் எங்க சிவாண்ணாவுக்காக டைம் ஒதுக்கி இங்கே வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்; எங்க அஜய் உங்ககூட வரலயா?" என்று கேட்டபடி கண்களால் வெளிப்புறம் துழாவியவனிடம்,
"அது.... அஜய்க்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு இருந்தான். அங்க போயிருப்பான்னு நினைக்கிறேன் நேத்ரன், ரொம்ப ஸ்டஃபியா இருக்கு, உள்ள போய் பேசலாமா?" என்று மானஸ்வினி அவனிடம் கேட்க கங்காதர் அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தார்.
"போகலாம் சித்தி, உங்களுக்கு எது வசதியோ, அது தான் எனக்கும் வசதி, வாங்க ரூமுக்கே போய் பேசலாம்!" என்று சொல்லிவிட்டு நேத்ரன் இருவரையும் அழைத்து சென்றான்.
"உங்கண்ணி ரொம்ப திமிர் பிடிச்சவ போலிருக்கு நேத்ரன்; ரிஷப்ஸனுக்கு என் வீட்டுக்கு வந்துடுங்கன்னு இன்வைட் பண்ணிட்டு போறா, நம்ம வீட்டை எப்படி என் வீடுன்னு அவ சொல்லலாம்? நம்ம ஹவுஸ் மெயிட் அவ பேரென்ன..... வாட்எவர் இட் மே பி, அவளைப் போய் அந்த ஐஸ்வர்யாவோட மாமா கல்யாணம் பண்ணிட்டாராமே; ப்ளடி கல்ச்சர்லெஸ் பீப்பிள்! நீ என்ன பண்ற; உங்க அண்ணன் கூடவே இருந்துட்டு உனக்காக செப்பரேட் ஆ அப்பப்போ அமௌண்ட்டை ஒதுக்கி வச்சுட்டு இரு, கொஞ்ச நாளில் அந்த ஐஸ்வர்யா ஸ்ரீ கிட்ட இருந்து மொத்தமா ப்ராப்பர்ட்டீஸ உன் பேருக்கு மாத்திக்கலாம், மித்ரனுக்கு இதிலெல்லாம் பெரிசா இன்ட்ரெஸ்ட் இருக்கிற மாதிரி தெரியல. ஸோ ஈஸியா அவன் கிட்ட இருந்து மொத்தமா வாங்கிடலாம், என்ன அந்த ஐஸ்வர்யா ஸ்ரீ, அப்புறமா அவளோட மாமா, அந்த சர்வெண்ட் மூணு பேரையும் மட்டும் கொஞ்சம் கவனிச்சா போதும். மித்ரன் அவன் அம்மாவை கூட்டிட்டு எங்கேயோ கண்காணாம போயிடுவான், இட்ஸ் அவர் கிங்டம் அகெயின்!" என்று அவன் தோளில் கை வைத்த மானஸ்வினியிடம் புன்னகைத்தவன்,
"சித்தப்பா சித்தியோட ப்ளானுக்கு மாஸ்டர் ப்ரைன் நீங்க தானா? கவனிக்கிறதுன்னா உங்க பாஷையில கொலை பண்றது தானே? எவ்வளவு கீழ போனாலும் புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும் ஒரு வேளை சாப்பாடு கூட உழைச்சு சாப்பிடணும்ங்கிற எண்ணம் வராதா? அப்படி வரலைன்னா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க, எல்லாரும் சாப்பிட்டுட்டு மிச்சம் இருக்கிற சாப்பாட்டை நாலு முடியாத, இல்லாதவங்களுக்கு குடுப்பாங்க. அங்க போய் ரெண்டு பேரும் வாங்கி சாப்பிட்டுக்கோங்க!" என்றான் கையைக் கட்டி நின்றுகொண்டு.
கங்காதர் ஆத்திரத்துடன் அவன் சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டு, "வாட் த ஹெல்... ஆர் யூ ப்ளாபரிங்? எங்க லைஃப் இதுவரைக்கும் ஒழுங்கா போயிட்டு இருந்ததுடா, எச்சக்கலைங்க நீங்க ரெண்டு பேரும் எங்கிருந்துடா திடீர்னு முளைச்சு வந்தீங்க.... அதுவும் இவ்வளவு பணத்தோட; எங்களை நிம்மதியா வாழ விடாம நீங்க எல்லாரும் வாழ்ந்துர்றீங்கன்னு நான் பார்த்துக்குறேன்டா!" என்று உறுமியவரிடம் இருந்து தன் சட்டையை மீட்டுக் கொண்ட நேத்ரன்,
"குட் ஜோக் மிஸ்டர் கங்கு அண்ட் மிஸஸ் கங்கு; உங்க லைஃப் ஒழுங்கா போயிட்டு இருந்தது, அதை நாங்க கெடுத்துட்டோமாக்கும்.... எப்படிடா வெக்கமே இல்லாம நான் சொல்ல வேண்டிய டயலாக்கை எல்லாம் நீ சொல்லிக்கிட்டு இருக்க? எங்கண்ணிட்ட ஒரு லட்ச ரூபாய் பணமும், ஒரே ஒரு சாக்லேட்டும் காட்டி எதை எடுத்துக்குறன்னு கேட்டா அவங்க சாக்லேட்டை தான்டா எடுத்துப்பாங்க. அவங்க உன் பாஷையில பணத்திமிர் பிடிச்சவங்க, முதல்ல இருந்து எங்க பிரச்சினையில் கூட நின்ன மங்கா உங்களுக்கு பேர் தெரியாத சர்வெண்ட் மெயிட்; அவங்களும் அருள்மொழி ஸாரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுட்டு கல்யாணம் செஞ்சா அவங்க கல்ச்சர்லெஸ் பீப்பிள்! நீங்க என்ன இம்சை செஞ்சாலும் பொறுத்து போவோம்ன்னு நினைக்கிற எங்க சிவாண்ணா பொழைக்க தெரியாதவன், ஆபத்து வரப் போகுதுன்னு தெரிஞ்சவுடனே அவன் லவ்வரோட எங்கேயோ ஓடிப் போயிட்டானாமே அந்த அஜய் கங்காதர்..... அவனுக்கு என்ன பேர் வச்சுருக்கீங்க மிஸ்டர் கங்காதர்?" என்று ஏளனச் சிரிப்புடன் கேள்வி கேட்டான் நேத்ரன்.
"தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ்! இப்போ நீ கடைசியா என்ன தான் சொல்ல வர்ற நேத்ரன்? எங்க லைஃப்க்கு என்ன வழி?" என்று எரிச்சல் பட்ட கங்காதரிடம் சிரிப்புடன்,
"யாருக்கும் இடைஞ்சல் குடுக்காத, எல்லார் கிட்டயும் அன்போட ஒரே குடும்பமா வாழுற எங்க லைஃப்ல இருந்து முடிஞ்ச வரைக்கும் தள்ளி நில்லுடா நாயே, அதுக்கப்புறம் எங்கேயாவது போய் ரூம் போட்டு உன் லைஃப்க்கு வழியை கண்டுபிடி பரதேசின்னு நான் சொல்லிடுவேன், ஆனா என்ன இருந்தாலும் நீங்க என் சித்தப்பால்ல சித்தப்பா, ஸோ அப்படி எல்லாம் பேசக் கூடாது சித்தப்பா. இனிமே இந்த ஏரியாவுக்குள்ள நுழையாம திருப்பூர்ல எங்க வேணும்னாலும் சுத்துங்க. இப்போ போங்க. சித்தி நீங்களும் தான்!" என்று கைகூப்பியவனை கண்களால் எரித்து விட்டு கங்காதரும், மானஸ்வினியும் அங்கிருந்து சென்றனர்.
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro