💖 வஞ்சி மனம் 3
சிவமித்ரன் ஐஸ்வர்யா செய்து வைத்த சேட்டையால் பேருந்தில் பயணம் செய்து தன் பணியிடத்துக்கு சென்று கொண்டிருந்தான். அவன் வாழ்வில் இதுநாள் வரை யாரும் அவனிடம் இவ்வளவு அத்துமீறல் செய்து சண்டையிட்டதும் இல்லை. அவனை தன்னுடைய நண்பனாக நினைத்து இவ்வளவு உரிமையுடன் அழிச்சாட்டியம் செய்ததும் இல்லை. அவளுடைய முக பாவத்தை நினைத்து இப்போதும் தன் இதழில் மெல்லிய புன்னகையுடன் தான் அமர்ந்திருந்தான் சிவா.
அவளது இழப்பை நினைத்து அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பிரச்சனைகளில் இருந்து வெளியே வா என்று எளிதாக அவளிடம் சொல்லி விட்டான். ஆனால் இதுவரையில் சந்தோஷத்தை தவிர வேறு எதையும் அனுபவித்திராத ஒரு சிறுபெண் தன் தந்தை, தாய் இழப்பை தாண்டி வேறு ஒரு சூழ்நிலையில் பொருந்தி தன்னுடைய எதிர்காலத்தை பற்றி திட்டமிடுவது மிகவும் கடினமாக விஷயமே தான்; இருந்தாலும் அவளை அப்படியே சும்மா இருக்கும் படி விடுவது மித்ரனுக்கு சரியான யோசனையாக தெரியவில்லை. அவன் அருள் மொழியிடம் பேசிய பிறகு அவர் அவளிடம் தொழில் பழகு என்றதற்கு, "எனக்கு இப்போதைக்கு பிஸினஸ்க்குள்ள வர்ற மாதிரி ஐடியா இல்ல மாமா. உங்க கிட்ட நிறைய பணம் இருந்தா அதை உதவி தேவைப்படுற யாருக்காவது தானமா குடுங்க. உங்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும். அதை விட்டுட்டு என் கிட்ட ஆபிஸை குடுத்து எனக்கு பிஸினஸ் கத்துக் குடுக்கணும்ன்னு ப்ளான் பண்ணுனீங்கன்னா ஏதாவது ஏடாகூடமா ஆகிடக் போகுது!" என்று சொல்லி விட்டாள்.
தன்னவளை கண்டிப்பாக அவளுக்கு விருப்பமான ஏதாவது ஒரு வேலையில் செலுத்தியே ஆக வேண்டும். அவள் மறுப்பதற்கு இடமே கொடுக்காமல் அதை ஒத்துக் கொள்ளும் படி செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தான்.
மருத்துவமனையை அடைந்து தன்னுடைய ப்ளாக்கை வேக நடையுடன் கடந்து தன் இருக்கையில் சிவா வந்து அமர்ந்த போது அவனது ட்யூட்டி டைம் ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது. எப்போதும் வேலைக்கு கிளம்பும் போது இறுதி நிமிட பரபரப்புடன் ஓடுவது சிவாவிற்கு சரிப்பட்டு வராத விஷயங்களில் ஒன்று. அதனால் அரை மணி நேரம் முன்பாகவே மருத்துவமனையை அடைந்து இருக்கையில் அமர்ந்து விடுவான். இன்று ஐஸ்வர்யா ஸ்ரீ செய்த கலாட்டாவில் அந்த அரை மணி நேரம் செலவழிந்து சரியான நேரத்தில் தான் வர முடிந்தது.
தன்னுடைய சகாக்கள் அனைவருக்கும் ஒரு காலை வணக்கத்துடன் புன்னகையை கொடுத்து விட்டு தன்னுடைய டிபார்ட்மெண்ட் சீஃப் டாக்டர் ராஜசேகரை சந்திக்க சென்றான்.
"குட் மார்னிங் ஸார்!" என்ற அவனது வாழ்த்துக்களை தலையசைத்து ஏற்றுக் கொண்டவர், அவனை அமருமாறு இருக்கையை கை காட்டினார்.
அவன் அமரவும் சிறிது நேரம் அவன் முகத்தை ஆர்வமாக நோக்கியவர், "என்ன சிவா, இன்னிக்கு உன் லைஃப்ல ஏதோ இன்ட்ரஸ்டிங் ஆன ட்விஸ்ட் நடந்துருக்கு போல? ஏதாவது பொண்ணு கிட்ட ப்ரப்போஸ் பண்ணிட்டியா?" என்று கேட்டவரிடம்
"ம்! ஆமா, பண்ணிட்டேன். நாளைக்கு கல்யாணம். நாளைக்கு மறுநாள் ஹனிமூன்! பத்து மாசத்துல குழந்தை பிறந்திடும். ஏன் ஸார் என்னைக்காவது ஒரு நாள் உங்க கேபினுக்குள்ள வந்தவுடனே இன்னிக்கு என்ன வொர்க் பண்ணப் போறேன்னு கேட்டுருக்கீங்களா? இல்ல என்னோட பெர்ஃபாமென்ஸ் கரெக்ட்டா இருக்கா, தெரபி எல்லாம் சரியா தர்றேனான்னு ஏதாவது கேள்வி கேக்குறீங்களா? காலையில எனக்கு அக்குபஞ்சர் செஷன்ஸ் இருக்கு. தைராய்டு ப்ராப்ளம்ன்னு நம்ம கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வந்தார்ல மிஸ்டர் மாணிக்கவாசகம் அவருக்கு இப்போ ஸ்டேட்டஸ் எப்படி இருக்கு? இன்னும் எத்தனை நாளைக்கு ட்ரீட்மெண்ட் கன்டினியூ பண்ணணும்னு அனலைஸ் பண்ணனும். இதெல்லாம் விட்டுட்டு எப்போ பார்த்தாலும் ப்ரப்போஸ் பண்ணியா, பொண்ணை பார்த்தியா, காதல் வந்துச்சா, கருமம் வந்துச்சான்னு இம்சை பண்றீங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு! ரவுண்ட்ஸ்க்கு போகணும். ஓபி பார்க்கணும். இப்போ கிளம்பட்டுமா?" என்று கேட்டவனிடம்
"உனக்கு நான் சீஃப் ஆ? இல்லை எனக்கு நீ சீஃப் ஆ; இன்னிக்கு உன் ஃபேஸ் வழக்கத்தை விட கொஞ்சம் ப்ரைட்டா தெரியுது. ஐ வான்ட் டூ நோ தி ரீசன்!" என்று கேட்டவரிடம்
"ஓ! அதுவா, அருள் ஸார் வீட்டுக்கு அவர் தங்கச்சியோட பொண்ணு வந்திருக்கா. இனிமேல் இங்கயே தான் இருக்க போறா. இனிமேல் அவளால என்னோட மார்னிங் டைமிங் கொஞ்சம் கலர்புல்லா இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா அந்த அளவுக்கு அட்ராஸிட்டீஸ் பண்ணிட்டு இருக்கா. வந்தவுடனேயே என்னை ப்ரெண்ட்ன்னு வேற சொல்லிட்டாளா; அவ செய்யுற சேட்டையால சிரிப்பு தான் வருது!" என்றவனிடம்
"உன்னை திட்டினாலும் சிரிக்கிற, உன் கிட்ட கோபப்பட்டாலும் சிரிக்கிற; உன்னை வெறுப்பேத்தினாலும் சிரிக்கிற; அது எப்படி சிவா எல்லார் கிட்டயும் உன்னால சிரிப்போடயே பேச முடியுது? உனக்கு கோபமே வராதாடா?" என்று கேட்டவரிடம் புன்முறுவல் பூத்தவன்
"உங்களால பத்து நிமிஷம்
லேட் ஆகிடுச்சு! கிளம்பட்டுமா? லன்ச் ப்ரேக்ல மீட் பண்ணலாம்! உங்க கிட்ட ஒபிசிட்டி பத்தி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணணும்!" என்று எழுந்து அவரிடம் கையாட்டி விட்டு சென்றான் சிவா.
வேலைக்கு சேர்ந்த புதிதில் யாரிடமும் அதிகம் பேசாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று மனித இயந்திரம் போல் சுற்றிக் கொண்டு இருந்தவனை ராஜசேகர் தன் நண்பனாக்கி கொண்டார். இப்போதும் கூட சிவாவின் பேட்சில் வேலை செய்யும் சக மருத்துவர்கள் அனைவரின் வாழ்க்கை முறையும், அவர்களது பழக்க வழக்கங்களும் சிவாவிற்கு சற்றும் பொருந்தாத வகையில் இருக்கவும் அவன் அவர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டான். ராஜசேகர் இந்த மருத்துவமனையில் வைத்தியம் தேவைப்படும் நபர்களுக்கு ஒதுக்கும் நேரத்தை விட மித்ரனை ஒரு இயல்பான வாழ்க்கை முறைக்கு இழுத்து வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் செலவிடும் நேரத்தை தான் மிகவும் தேடி தேடி கண்டுபிடிப்பார்.
வீட்டில் அருள்மொழியும், பணியிடத்தில் ராஜசேகரும் இருப்பதால் தான் சிவமித்ரனின் வாழ்வு ஓரளவிற்கு இயல்பாக சென்று கொண்டு இருந்தது. இல்லையென்றால் அவன் நத்தை போல் தனக்குள்ளே ஒடுங்கிப் போய் இருப்பான். மனதில் உள்ள அழுத்தத்தை வாய் விட்டு சொன்னால் கேட்க இரு காதுகளும், பற்றிக் கொள்ள இரண்டு கரங்களும் அனைவருக்கும் தேவை தானே? இதில் சிவமித்ரன் மட்டும் விதிவிலக்கா என்ன?
மாலையில் ட்யூட்டி டைம் முடிந்து சிவா கிளம்பிய போது வெளியே ஐஸ்வர்யா ஸ்ரீ காத்திருந்தாள். அவனைப் பார்த்து, "ஹாய் மித்து! வொய் ஆர் யூ ஸோ லேட் மேன்?" என்று கையசைத்தவளிடம்
"ஹேய், வரு! நீ எப்போ வந்த?" என்றான் மித்ரன் சற்று அதிப்படியான ஆனந்தத்துடன்.
"ம்! இந்த உலகத்துக்கு வந்து 23 வருஷம் ஆகிடுச்சு, இண்டியாவுக்கு வந்து கொஞ்ச நாள் ஆச்சு. உங்க ஹாஸ்பிடலுக்கு வந்து கொஞ்ச நேரம் ஆச்சு. உன் கொலீக்ஸ் எல்லாம் இண்ட்ரோ குடுக்க மாட்டேங்கிற, உன் வொர்க் ஸ்பாட் எங்க இருக்கு? என்னை கூட்டிட்டு போயேன்!" என்று கேட்டவளிடம்
"ஏய் வாட்டர் பெட், இது என்ன எக்ஸிபிஷனா, கூட்டிட்டு போய் சுத்தி காட்ட? ஹாஸ்பிடல்மா! என்னோட கொலீக்ஸ் யார் கிட்டயும் எனக்கு அவ்வளவா பழக்கம் இல்ல வரு! ஜஸ்ட் ஒரு ஹாய் பை சொல்லிட்டு மூவ் பண்ணிடுவேன். அவ்வளவு தான்! ஸோ நம்ம வீட்டுக்கு கிளம்பலாமா?" என்று கேட்டவனிடம் இல்லையென தலையை ஆட்டினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"உன் சைக்கிள்ல தண்ணி ஊத்திட்டேன்னு மாமா என்னை திட்டிட்டாங்க தெரியுமா? எங்கேயாவது அவுட்டிங் போய்ட்டு வரேன்னு சொன்னா பொண்ணுங்க தனியா வெளியே போக கூடாதுன்னு சொன்னாங்க! நான் உன்னை பிக்கப் பண்ணிட்டு உன் கூட சேர்ந்து ரௌண்ட்ஸ் போயிட்டு வர்றேன்னு சொன்னேன்! அதுக்கு ஓகே சொல்லிட்டாங்க. உன் கிட்ட ஸாரி கேக்கலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா நீ என்னை வாட்டர் பெட்ன்னு கூப்பிட்டதால உனக்கு நான் சொல்ல நினைச்ச ஸாரி கூட கிடையாது பித்து!" என்றவளிடம் புன்னகையுடன்
"நான் உன் கிட்ட அன்னிக்கே சொன்னேன்ல வரு! பித்துன்னு கூப்பிட்டா என்ன அர்த்தம்?" என்று கேட்டவனிடம்
"எல்லாம் தெரிஞ்சு தான்டா கூப்பிட்டேன். நீ மட்டும் என்னை டீஸ் பண்ற, அப்போ நானும் உன் பேரை தப்பா தான் கூப்பிடுவேன்! எங்கயாவது ஒரு ட்ரைவ் போயிட்டு வரலாமா மித்து?" என்று கேட்டவளிடம்
"நாளைக்கு ஈவ்னிங் 6 மணிக்கு என் கூட பேஸ்கெட் பால் விளையாட வருவியா? நீ நாளைக்கு கேமுக்கு வர்றதா இருந்தா இப்போ ரௌண்ட்ஸ் போயிட்டு வரலாம்!" என்றான் மித்ரன்.
"ஒருத்தரை ஒரு விஷயம் செய்ய சொல்றதுக்கு முன்னால அவங்களுக்கும் அந்த விஷயத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு யோசிக்கணும் மித்து! நான் பாஸ்கெட் பால் விளையாடினா எப்படி இருக்கும்னு ஒரு தடவை இமாஜினேஷனுக்கு போயிட்டு வந்துட்டு அதுக்கப்புறம் என்னை கூப்பிடு. நான் வர்றேன்!" என்றாள் ஐஸ்வர்யா சிரிப்புடன்.
"எனக்கு நீ விளையாடுறது முக்கியம் இல்லை வரு. உன் பாடி muscles க்கு முவ்மெண்ட் கிடைக்கணும். உன் எனர்ஜி லெவல் எந்த அளவில் இருக்குன்னு செக் பண்ணணும். அவ்வளவு தான்! ஏய் வரு கார்லயா வந்த?" என்று ஆச்சரியத்துடன் கேட்டவனிடம்
"ஆமா! உன் சைக்கிள்ல இவ்வளவு தூரம் வர்றதெல்லாம்......
இம்பாசிபிள்; ஐ கான்ட் டூ இட் மித்து!" என்றாள் ஐஸ்வர்யா.
"நல்லா ஓட்டுவியா வரு? லைசென்ஸ் வச்சிருக்கியா?" என்று சந்தேகமாக கேட்டவனிடம்
"ஐ ஹாவ் மை இண்டர்நேஷனல் ட்ரைவிங் லைசென்ஸ்! ஜஸ்ட் கீப் யுவர் மவுத் ஷட் அண்ட் கெட் இன் மித்து!" என்று காரில் ஏறி இடது புறம் சற்று சாய்ந்து கதவைத் திறந்து விட்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
நிதானமான வேகத்தில் சீராக காரை செலுத்திக் கொண்டு இருந்த ஐஸ்வர்யாவை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தான் சிவ மித்ரன்.
"ஹவ் வாஸ் யுவர் டே மித்து? காலையிலேயே மூட் அவுட் ஆக்கி விட்டுட்டேன். டே நல்லா போச்சா? இல்ல வொர்க் சரியா செய்யாம யார் கிட்டயும் திட்டு வாங்குனியா?" என்று அவள் கேட்டதும் மித்ரன் மனதிற்குள் தன் அன்றைய நாளை காலையில் இருந்து சற்று முன் வரை ஒரு ரீவைண்ட் பட்டன் மூலம் ஓட்டிப் பார்த்து விட்டு வந்தான். தன் அனைத்து வேலைகளின் இடையிலும் தோன்றும் ஒரு சலிப்பும், தனிமை உணர்வும், விரக்தியும் இன்று தனக்கு தோன்றவேயில்லையே என்று ஆச்சரியப்பட்டு,
"என்னோட இன்னிக்கு நாள் ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு வரு. ஜஸ்ட் பெர்பெக்ட்லி ஃபைன்! டெய்லி இந்த மாதிரி இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்!" என்றான் சிவா.
"டோண்ட் வொர்ரி மித்து! டெய்லி நீ ஹாஸ்பிடல் கிளம்புறப்போ நான் உனக்கு பை சொல்லி குட்டே சொல்லி அனுப்பி விடுறேன்! அதுக்கு பதிலா நீ எனக்கு டெய்லி ஈவ்னிங் ஒரு சாக்லேட் வாங்கி தரணும். நீ சாக்லேட் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்ட, அதனால மாமா எங்கிட்ட ஸ்டாக் வச்சிருந்த சாக்லெட்ஸ் எல்லாத்தையும் குட்டி பசங்களுக்கு குடுக்க சொல்லிட்டாங்க மித்து!" என்று புகார் கூறியவள் தலை முடியை லேசாக கோதி விட்டு, "எங்கே சுத்தினாலும் உன் வேலையில கரெக்ட்டா இரு வாலு. சாக்லெட்ஸ்னா அவ்வளவு பிடிக்குமா வரு?" என்று கேட்டவனிடம்
"ம்! எனக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்க கிட்ட தான் நான் உரிமையா கேட்டு வாங்கிக்க முடியும்; என்னமோ தெரியல மித்து! அப்பா, அம்மா, மாமா போல உன்னையும் ஒரு ரிலேஷன் மாதிரி தான் நினைக்க தோணுது!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
சற்று நேரம் அவன் எதுவுமே பேசாமல் அமைதியாக வந்து கொண்டு இருந்தான். திடீரென்று ஒரு இடத்தில், "வண்டியை நிறுத்து வரு!" என்றான். அவள் என்னவென்று புரியாமல் குழப்பத்துடன் ஓர் ஓரமாக வண்டியை நிறுத்தினாள். அவளிடம் எதுவும் சொல்லாமல் திடீரென காரில் இருந்து இறங்கிப் போய் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து, "இனிமேல் நீ என் கிட்ட எப்ப கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் சாக்லெட்ஸ் வாங்கித் தருவேன் வரு! கண்டிப்பா நோ சொல்ல மாட்டேன்!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவனின் குரல் சற்று கரகரப்பாக ஒலித்தது.
"ஒரு சாக்லெட் சாப்பிடணும்னா நான் ஏதோ வேலை செய்யணும்னு சொன்னீங்களே டயட்டீசியன் ஸார், இப்போ ஒரு பாக்ஸ் புல்லா சாக்லேட் வாங்கி குடுத்துருக்கீங்க. என்னாச்சுப்பா மித்து? ஏன் இவ்வளவு எமோஷனலாகுற?" என்று கேட்டவள் கையில் தன் கையை கோர்த்து கொண்டு, "தெரியல வரு. நான் உனக்கு ஏதாவது ரிலேஷனா மாறினா ரொம்ப நல்லாயிருக்கும்னு தோணுது. கொஞ்ச நேரம் என் கையை பிடிச்சுட்டு இருக்கியா வரு....ப்ளீஸ்!" என்று கேட்டவன் கண்களில் வழிந்த நீரை தன் கைக்குட்டையால் துடைத்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro