மித்ரனின் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. திருமணத்தன்று ஐஸ்வர்யா சாப்பிட்ட சாப்பாடுகளால் அவளுக்கு புட் பாய்ஸன் ஏற்பட்டு நான்கு நாட்கள் திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அவளை டிஸ்சார்ஜ் செய்து பின் சென்னைக்கு திரும்பி இருந்தனர். அருள்மொழியும், சந்திரதாராவும், அலர்மேல் மங்கையும் ஐஸ்வர்யாவின் நிலை கண்டு பதறி விட்டனர். என்ன சாப்பிட்டாலும் ஒத்துக் கொள்ளாமல் நான்கு நாட்களும் திரவ உணவுகளும், குளுக்கோஸும் தான் கொடுக்கப்பட்டது அவளுக்கு. மாத்திரை, மருந்துகள், பசியின்மை, அவ்வப்போது வாந்தி என நான்கு நாட்களும் உடம்பு படுத்தியதில் ஒருவழியாகி விட்டாள்.
"நேத்து....எனக்கு சாப்பிட ஏதாவது வேணும்!" என்று பலவீனமான குரலில் கேட்டவளிடம், "ஐஷுமா.....ப்ளீஸ்! கொஞ்சம் அமைதியா இருந்து தொலையேன்!" என்று அடக்கிய நேத்ரன் மித்ரனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு தன் மொபைலையும் பார்த்து கொண்டு இருந்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சென்னை சென்று அமிர்தவர்ஷினியை ஊருக்கு கிளம்புவதற்காக ஏர்போர்ட்டிற்கு சென்று செண்ட் ஆஃப் கொடுத்து விட்டு வந்திருந்தான். வர்ஷினி செல்வதற்கு மனமே இல்லாமல் வருத்தத்துடன் தான் கிளம்பினாள்.
"நேத்ரன்.....மித்ரன் ஸார் ரொம்ப ஸ்டெடியா தான் இருக்காங்க. இருந்தாலும் நீங்களும் கொஞ்சம் ஸ்பெஷல் கேர் எடுத்து ஐஷுவை பார்த்துக்கோங்க. எல்லாம் சரியானதும் நம்ம பொறுமையா பேசலாம்!" என்று சொன்னவளிடம் தலையாட்டலுடன் கைகுலுக்கி, "ரீச் ஆகிட்டு டெக்ஸ்ட் பண்ணு! பான் வாயேஜ்!" என்று சொல்லி விட்டு அவளிடம் விடைபெற்றான். ஊருக்கு சென்றதும் அவள் அவனது வார்த்தைகளுக்கிணங்கி
பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேன் என்று குறுந்தகவல் மட்டும் அனுப்பி இருந்தாள். ஆனாலும் அவளிடமிருந்து அழைப்பு வராதா என்று நேத்ரனின் மனம் பரபரத்தது.
மருத்துவமனையில் ஐஸ்வர்யாவின் தேவைகள் அனைத்தையும் மித்ரன் முகம் சுளிக்காமல், தூக்கம் பாராமல் கவனித்துக் கொண்டான். அருள்மொழி, சந்திரதாரா, அலர்மேல் மங்கை மூவரும் மருத்துவமனைக்கு அருகே இருந்த ஒரு தரமான ஹோட்டலில் தங்கிக் கொண்டு காலையும், மாலையும் வந்து அவளைப் பார்த்து விட்டு சென்றனர். திருமணத்தன்று நிற்க முடியாமல் வாந்தி எடுத்து நிலை தடுமாறியவளை வேகமாக சென்று பின்னிருந்து அணைத்துக் கொண்டவன், "சோட்டு எல்லா அரேன்ஜ்மெண்ட்ஸையும் ஸ்டாப் பண்ணச் சொல்லு! ரிஸப்ஷன், ரூம் டெகரேஷன் எல்லாம்.......புரிஞ்சதா? ரூம்ஸ் கூட இங்க தேவையில்ல. நம்ம வெகேட் பண்ணிக்கலாம். முதல்ல அண்ணியை நல்ல ஒரு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணணும். மங்கை அம்மா கிட்ட சொல்லி ஒரு பாட்டில்ல உப்பும், சர்க்கரையும் கலந்து தண்ணி கொண்டு வா! இவ இவ்வளவு வாந்தி எடுத்தா, டீ ஹைட்ரேஷன் ப்ராப்ளம் வந்துடக்கூடாது!" என்று மித்ரன் சொல்ல நேத்ரன் சற்று வருத்தத்துடன் தலையசைத்து விட்டு அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டான்.
மித்ரன் அவனது ஹாஸ்பிட்டல் நண்பர்கள் பட்டாளம், மற்றும் யோகா க்ளாஸ் குட்டி நண்பர்களுக்காக தான் இந்த ரிஸப்ஷனை நடத்த திட்டமிட்டிருந்தான். நண்பர்களுக்கு என்பதால் ரிஸப்ஷன் இன்று இல்லை, இன்னொரு நாள் நடக்கும் என்று தகவல் தெரிவிப்பதிலும் நேத்ரனுக்கு அவ்வளவு சிரமம் ஏற்படவில்லை. ஏற்கனவே திருப்பூர் வரை வந்து விட்ட சில நண்பர்களும் சூழ்நிலையை புரிந்து கொண்டு மித்ரனுக்கு அலைபேசியில் அழைத்து பேசி விட்டு ஊருக்கு கிளம்பினர். ஆனால் நேத்ரனுக்கு தன் அண்ணனது முதலிரவுக்கு அவன் செய்ய நினைத்திருந்த அலங்காரங்களை எல்லாம் ரத்து செய்கையில் தான் அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
தன் அண்ணனது திருமணம் என்று எவ்வளவு ஆவலும், எதிர்பார்ப்புமாக ஒவ்வொரு விஷயத்தையும் தொடங்கியிருந்தான்.....
அதில் முழு திருப்தி கிடைக்கவில்லையே என்ற வருத்தம் நிறையவே இருந்தது. தனக்கே இவ்வளவு ஏமாற்றம் இருந்தால் தன் அண்ணன் எவ்வளவு எரிச்சலுடன் இருப்பார் என்று நினைத்தான். ஆனால் மித்ரனின் முகத்தில் ஏமாற்றம், கோபம் போன்ற உணர்வுகள் தெரியவேயில்லை. சூழ்நிலை சரியில்லை என்று கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல் எப்போதும் ஓர் புன்னகையுடன் தான் இருந்தான்.
"குட்மார்னிங் வரு..... கஞ்சி சாப்பிடலாமா?" என்று கேட்டு அவளை கட்டிலில் இருந்து எழுந்து அமர உதவி செய்ய வந்தவனை தடுத்தவள்,
"ஐ'ம் ஆல்ரைட் மிஸ்டர் மித்ரன்..... பை த வே, கஞ்சிக்கு என்ன சைடு டிஷ்?" என்று கேட்டவளிடம் புன்னகையுடன்,
"கஞ்சிக்கு என்னம்மா சைடு டிஷ் தர முடியும்? கொஞ்சம் உடம்பு பழைய மாதிரி ஆகட்டும். அதுக்கப்புறம் சைடு டிஷ், மெயின் கோர்ஸ்ன்னு எட்டு வேளைக்கு சாப்பிடு. பட் இப்போதைக்கு படுத்தாம கஞ்சியை குடிச்சிடு கண்மணி!" என்றான் பணிவுடன்.
"காட்......டேம்!" என்று தனக்குள் முணங்கிக் கொண்டவள், "இங்க பாருங்க டயட்டீஷியன் ஸார்! ஐ'ம் கெட்டிங் பேக் டூ நார்மல். ஸோ உங்க கஞ்சியை எல்லாம் சிக்கா இருக்கிற யாருக்காவது கொண்டு போய் குடுத்துட்டு, எனக்கு ஒரு செட் ரெயின்போ தோசையும், அதுக்கப்புறம் ஒரு மசால் தோசையும் சட்னி, வெங்காய சாம்பாரோட எடுத்துட்டு வாங்க! ஒன் வீக்கா சரியாவே சாப்பிடாம ஐ'ம் ஃபீலிங் ஸோ டையர்டு!" என்று ஐஸ்வர்யா கட்டிலில் அமர்ந்து கால் ஆட்டிக் கொண்டு பேசவும் நேத்ரன் தன் பொறுமையைத் துறந்தான்.
"ஏய் அண்ணின்னு கூட பார்க்க மாட்டேன். ஒரே மிதி தான்....... என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல..... நாலு நாள் ஹாஸ்பிட்டல்ல ஓ ஓ ன்னு நல்லா ஓ போட்டுட்டு இருந்தியே..... மறந்து போயிடுச்சா; இப்போ ஹோட்டல்ல மெனு சொல்ற மாதிரி ஐயிட்டம் ஐயிட்டமா சொல்லிக்கிட்டு இருக்க...... அட்லீஸ்ட் உடம்பு பெர்பெக்ட் ஆகுற வரைக்குமாவது சிவாண்ணா சொல்ற டயட்டை ஃபாலோ பண்ணு ஐஷுமா! நான், அம்மா, ஸார், மங்கா எல்லாரும் எவ்வளவு பயந்து போயிட்டோம் தெரியுமா...... சிவாண்ணா நாலு நாளா டே அண்ட் நைட் தூங்கவேயில்ல. உங்க ரிஸப்ஷன் கேன்சல் ஆகி, எல்லாரும் ரொம்ப கலவரப்பட்டு, திருப்பூர்ல நாலு நாள் தங்கியிருந்து..... இத்தனை ஆர்ப்பாட்டமும் ஒத்த ஆளா பண்ணிட்டு இப்போ ஒண்ணுமே நடக்காதது மாதிரி ஐ'ம் ஆல்ரைட்ன்னு தோளை குலுக்கி கால் ஆட்டிட்டு இருக்க பார்த்தியா....... உன்னை நல்லபடியா பார்த்துக்கறதுக்குள்ள எங்களுக்கு மூச்சு வாங்குதும்மா!" என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்ட நேத்ரனிடம்,
"அப்போ நீ ஒண்ணும் என்னை பார்த்துக்க வேண்டாம். கிளம்பி வேற வேலை இருந்தா போய் பாரு! இன்னையிலிருந்து நீ என் பிரெண்ட் கிடையாது. போடா!" என்று சொல்லி நேத்ரனிடம் கோபம் காட்டினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"ஓ! கோபமா இருக்கீங்களா ஐஸ்வர்யா அண்ணி, கரெக்டா சொன்னீங்க, உங்க மேரேஜ் நடந்ததுல இருந்து நீங்க எனக்கு பிரெண்ட் கிடையாது. அண்ணியாகிட்டீங்க. அதாவது பாதி அம்மா, பாதி சிவாண்ணா, பாதி அருள் ஸார்...... இப்படி எல்லாம் மெர்ஜ் பண்ணின ஒரு ரோல்; ஆனா உங்கள போய் அண்ணின்னு கூப்பிடுறது தான் ரொம்ப சிரிப்பு சிரிப்பா வருது!" என்று நேத்ரன் சிரிப்புடன் முடிக்க அவன் சிரிப்பில் மித்ரனும் இணைந்து கொள்ள ஐஸ்வர்யாவிற்கு பற்றிக் கொண்டு வந்தது.
தன் கணவனை அருகில் அழைத்தவள், "உன் தம்பி கூட ரொம்ப சேராத மித்து, உனக்கு உடம்பு சரியில்லைன்னாலும் உன்னைய நீ தான் பார்த்துக்கணும்! எனக்கு உடம்பு சரியில்லாம போனாலும் என்னைய நீ தான் கவனிச்சுக்கணும். அதுவும் இப்படி ஸ்மைலிங் பேஃஸோட...... ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டியா? ஏன் டல்லா தெரியுற....... உன்னைய ரொம்ப படுத்திட்டேனா மித்து?" என்று கேட்ட படி மித்ரனின் கன்னங்களை பற்றிக் கொள்ள வந்தவளிடம் இருந்து சிரிப்புடன் தள்ளி அமர்ந்தான் மித்ரன்.
"டேய் நேத்து...... எழுந்துரிச்சு போடா! நீ இருக்கிறதால மித்து நெளியுறான் பாரு..... மிட்டு பேபியையும் நீ ஊருக்குப் போற வரைக்கும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ! மித்து பாவா பாவம்..... எத்தனை வேலைய தான் அவனும் பார்ப்பான்..... அமிர் ஸேஃபா போயிட்டாளாடா? நீ எப்ப கிளம்புற?" என்று கேட்ட படி இரண்டு மூன்று வாய் சாப்பிட்டவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
"உவ்வேக்...... கஞ்சி நல்லாவேயில்லப்பா!" என்று மூக்கால் அழுதவளிடம்,
"ஒரு வாரமா சாலிடா இன்டேக் எதுவும் எடுக்கல வரு. அம்மாவும், மங்கை அம்மாவும், கோவிலுக்கு போயிருக்காங்க. மங்கை அம்மா வந்தவுடனே ஆப்டர்நூன் ரசசாதம் தரச் சொல்றேன்! கொஞ்ச கொஞ்சமா சாப்பாடு எடுக்க ஆரம்பிக்கலாம்!" என்று மித்ரன் சொல்ல ஐஸ்வர்யா ஸ்ரீ மறுத்து பேச முடியாமல் கஞ்சியை கிண்டிக் கொண்டே தலையாட்டினாள்.
"நீயும், சோட்டுவும் பேசிட்டு இருங்க. நான் உனக்கு ஊட்டி விட்டுடுறேன்!" என்று அவளிடம் இருந்து கிண்ணத்தை கையில் வாங்கி கொண்டான் மித்ரன்.
அவனது மனைவியை பற்றி இவ்வளவு நாட்களில் ஓரளவிற்கு நன்றாகவே புரிந்து வைத்திருந்தான். ஒரு உணவு அவளுக்கு பிடித்தமானது என்றால் எந்த வேகத்தில் உள்ளே போகிறதோ, அது போல் பிடிக்காத உணவு வகைகளை அவள் வாய்க்குள் திணிக்க முயற்சிப்பதும் மிகவும் துணிகரமான செயல். கீரை வகைகள், அவியல்,
பாகற்காய், பப்பாளி, பேரீச்சை என்று ஐஸ்வர்யாவின் வெறுப்பை சம்பாதித்த உணவு வகைகள் பட்டியல் சில உண்டு. இவை தான் உன் உணவு, வேறு எதுவும் சாப்பிட இல்லை என்று முயற்சித்தால் வயிறு ஒட்ட பட்டினி வேண்டுமானாலும் கிடப்பாளே தவிர பிடிக்காத உணவு வகைகளை தொட்டுக் கூட பார்க்க மாட்டாள். அந்த பட்டியலில் இன்றைக்கு கஞ்சியையும் சேர்த்து விடுவாள் என்று எண்ணிய படி அவளுக்கு உணவு ஊட்டிக் கொண்டு இருந்தான் சிவமித்ரன்.
"வ..... அமிர்தவர்ஷினி இதுவரைக்கும் கால் பண்ணல ஐஷு மா. பட் நிறைய மெசேஜஸ் அனுப்பியிருந்தாங்க. உன்னை பத்தி நிறைய விசாரிச்சுருந்தாங்க. அவங்களுக்கு உன்னை விட்டுட்டு கிளம்பவே மனசில்லை. ஆனா அவங்க அப்பா, அம்மா கிட்ட ப்ராமிஸ் பண்ணின டேட்ல கிளம்பணும்ன்னு டிக்கெட்ஸ் அரேன்ஜ் பண்ணியாச்சு. மிட்டு நீ இல்லாம ஓவரா ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கான். திருப்பூர்ல போய் செட் ஆகிடுவானான்னு தெரியல. பட் ஊருக்கு கிளம்புற வரைக்கும் நான் அவனை கவனிச்சுக்குறேன். இன்னும் மூணு வாரத்துல கிளம்பணும்! அதுக்குள்ள உன்னைய சரியாக்கணும். கொஞ்சம் ஷாப்பிங் பண்ணணும். திருப்பூர்ல போய் நம்ம வீடு, ஆஃபிஸ் எல்லாம் ரெனியூ பண்ணணும். கடைசியா மிஸ்டர் கங்காதருக்கு மறக்க முடியாத மாதிரி ஒரு ஆப்பு வச்சுட்டு தான் ஊருக்கு கிளம்பணும். கல்யாணத்தன்னிக்கு நல்லா வசமா வந்து கையில கிடைச்சாரு. ஆனா விருந்தோம்பல், நம்மள தேடி வந்தவரை அவமானப்படுத்திடக் கூடாதுன்னு என்னன்னமோ காரணம் சொல்லிட்டாங்க. பட் நான் பேச நினைச்சதை எல்லாம் அவர் கிட்ட பேசாம இண்டியாவை விட்டு கிளம்ப மாட்டேன். ஏன்னா இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு வரும் போது அவரை மீட் பண்ண சான்ஸ் கிடைக்குதோ, இல்லையோ...." என்று ஓர் அலட்சிய புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தவனிடம் மித்ரன் அருள்மொழிக்கு சற்று அலுவலகம் மற்றும் சொத்துக்களை மீட்கும் பணியில் முடிந்தால் உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டான்.
அவனுக்கும் அவனது யோகா வகுப்பு மாணவர்களை தன்னிடம் பயின்ற திறமையான மாணவர்கள் சிலரிடம் விண்ணப்பம் செய்து இடைவிடாமல் வகுப்புகளை நடத்த சொல்வது, மருத்துவமனையில் பணியில் இருந்து ரிலீவ் ஆவது, திருப்பூரில் புதிய வேலைக்காக முயற்சிப்பது, இங்குள்ள தேவையான சாமான்களை திருப்பூருக்கு ஷிப்ட் செய்வது என்று வேலைகள் கழுத்தை நெரித்துக் கொண்டு வரிசை கட்டி நின்றது. இதனிடையே அவனது தம்பிக்கும் அயல் நாட்டு பயணத்துக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்து தர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
எப்படியோ நேத்ரன் பேசிக் கொண்டிருந்த போது கிட்டத்தட்ட முக்கால் பாகம் கஞ்சியை தன் மனைவியின் வயிற்றுக்குள் நிரப்பி விட்டு வெளியே செல்ல முயன்றவனை சட்டையை பிடித்து இழுத்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
நேத்ரன் ஒரு புன்சிரிப்புடன் அறைக்கதவை சாற்றி விட்டு செல்ல ஐஸ்வர்யா மித்ரனை படுக்கையில் அமர வைத்து அணைத்துக் கொண்டாள்.
அவளது முதுகை வருடி விட்டு கொண்டிருந்தவனிடம்,
"என் மேல செம கோபம் இல்லையா மித்து?" என்று கேட்ட படி அவன் முகத்தை பார்க்க முயற்சி செய்து, ஐஸ்வர்யா அவன் அணைப்பில் இருந்து சற்று விடுபட நினைத்த போது,
"ம்ப்ச்! உன் மேல எதுக்குடீ கோபம் வரப்போகுது....... உனக்கு புட் பாய்ஸன்னு டாக்டர்ஸ் சொன்னாங்க! கல்யாணத்துல சாப்பிட்ட சாப்பாடு ஒத்துக்கலையோ, ஐஸ்க்ரீம் சேரலையோ, இல்ல தண்ணியால பிரச்சனை வந்ததோ தெரியல. மொத்தத்தில உடம்பு சரியில்லாம போயிடுச்சு. வருக்குட்டி கொஞ்ச நேரம் இப்படியே இருக்கலாமா? மழை பெய்யுறப்போ ஜில்லுனு காத்து வந்தா உடம்பு சிலிர்க்கும் பார்த்தியா...... அந்த மாதிரி ஒரு ஃபீல். நீ லவ்வரா இருந்தப்ப கட்டி பிடிச்ச மாதிரி இல்ல, இப்போ வரு பேபி என் பொண்டாட்டின்னு ஒரு சந்தோஷம். கண்டிப்பா
எனக்கு இப்போ இந்த ஹக் தேவையாவும் இருக்கு!" என்று மித்ரன் சொல்ல ஐஸ்வர்யாவின் மனக் கண்ணில் அந்த நேரம் சம்பந்தமே
இல்லாமல் சமோசாக்கள் வந்து போனது.
"ரொம்ப ரொம்ப ஸாரி மித்து, நம்ம மேரேஜ் முடிஞ்சு ஒன் வீக் ஆகிடுச்சு. பட் உன்னை வெயிட் பண்ண வச்சுட்டேன் ல்ல.....!" என்று வருத்தப்பட்டவளிடம்,
"இட்ஸ் ஓகே கண்மணி! நமக்காக ஒரு நீளமான லைஃப் காத்துட்டு இருக்கு. ஸோ எதைப் பத்தியும் வொர்ரி பண்ணிக்காம உடம்பை நார்மலாக்கலாம். அதுக்கப்புறம் எல்லாத்தையும் வச்சுக்கலாம்!" என்று சொன்னவன் அவளை நெற்றியில் மென்மையாக ஓர் முத்தமிட்டு, "வெளியே போகணும் வரு பேபி. இந்த வீக் முழுசும் வொர்க் கொஞ்சம் ஹெவியா தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்! போயிட்டு வரட்டுமாடா செல்லம்?" என்று கேட்டவனிடம் புன்னகையுடன் தலையாட்டி விடைகொடுத்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro