💖 வஞ்சி மனம் 28
தன் திருமணத்தில் ஐஸ்வர்யா ஸ்ரீ மிகவும் ரசித்ததென்றால் அது அவளுக்கு அளிக்கப்பட்ட விருந்து தான்! மற்றபடி சந்திரதாராவும், அருள்மொழியும் மித்ரனின் பாடலில் இளகி ஒருவருக்கு ஒருவர் மித்ரனை தங்களிடம் ஒப்படைத்ததற்கு நன்றி கூறியதெல்லாம் நம் நாயகியின் காதில் ஏறவேயில்லை.
"அழகா பாடுற மித்து..... கங்கிராட்ஸ்!" என்று சொன்னவள் அவன் கைகளை விலக்கும் முன்பாகவே தானாகவே விலகிச் சென்று உணவிற்காக பந்தியில் அமர்ந்து விட்டாள். இதெல்லாம் போதாதென்று அலர்மேல் மங்கை கொடுத்த கீமா சமோசாக்கள் சில பல எண்ணிக்கைகளை உள்ளே தள்ளி இருந்தாள்.
மித்ரனுக்கு திருமணப் பரிசாக ஒரு டீஷர்ட் ட்ராக் ஷுட்டை வாங்கியிருந்த மங்கை இரண்டு நாட்களுக்கு முன், "கண்ணு கல்யாண பரிசா உனக்கு என்னடா வேணும்?" என்று கேட்க அவரிடம் சமோசாக்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஆர்டர் செய்து விட்டாள் ஐஸ்வர்யா.
அவரும் ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க திருமண சமையல் காரரிடம் அனுமதி பெற்று சமோசாக்களை செய்து கொடுத்து ஐஸ்வர்யாவின் பாராட்டுகளை பெற்றுக் கொண்டார். இது எதுவும் மித்ரனுக்கு தெரியாதவாறும் பார்த்து கொண்டார்.
நேத்ரன் தன் அண்ணன் மற்றும் அண்ணிக்கு ஒரு ட்ரஷர் ஹண்ட் விளையாட்டை வைக்க மித்ரன் ஆர்வமாகி தன் மனைவிக்கான புதையலை தேட கிளம்பி விட்டான்.
"நேத்து; மித்துவோட கிப்டை நான் எதுக்குடா தேடி எடுக்கணும்? ஃபுல் கட்டு கட்டியிருக்கு. அரை மயக்கத்துல உட்கார்ந்து இருக்கிற நேரத்துல போய் டாஸ்க் பண்ணு, கேம் விளையாடு ன்னு உயிரை வாங்காதீங்க டா! ஏன்டா இப்படி ஸ்ட்ராபெர்ரி கோனோட முடிச்சுக்கிட்ட......பெரிய ஐஸ்க்ரீம் லிஸ்ட் ஒண்ணு உன் கிட்ட குடுத்தேன்ல..... நீ ஏன் அதை கன்ஸிடர் பண்ணல!" என்று கேட்ட படி ஐஸ்க்ரீம் கோனை சுவைத்து கொண்டிருந்தவளை பார்வையால் வறுத்தெடுத்த நேத்ரன்,
"ஏய் போந்தாங்கோழி, காலையில இருந்து வாய்க்கு மட்டும் தான் ஓவர்டைம் வொர்க் குடுத்துட்டு இருக்க. மரியாதையா எழுந்துரிச்சு போய் சிவாண்ணாவுக்கு நீ குடுக்க வேண்டிய கிப்டை தேடிக் கண்டுபிடி. இனிமே எல்லாத்துலயும் நீ பாதி, நான் பாதின்னு ஸ்டேஜ்ல சிவாண்ணா கையை புடிச்சிகிட்டு ஏதோ டயலாக் எல்லாம் விட்ட! அதனால உன் கையில இருக்கிற ஐஸ்க்ரீமை சிவாண்ணாவுக்கு கொடுத்துட்டு கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி போய் ட்ரஷரை தேடி எடுத்துட்டு வா பார்ப்போம்!" என்று சொன்ன நேத்ரனை பார்த்து கெத்துடன் சிரித்த ஐஸ்வர்யா ஸ்ரீ,
"மிஸ்டர் நேத்து..... நான் இன்னிக்கு காலையில இருந்து உங்கண்ணி; இனிமே என்னைய திட்டுறதோ, இரிடேட் பண்ற மாதிரி பேசற வேலையோ வச்சுக்க கூடாது. ஏன்னா யாருக்குமே தெரியாத உங்களோட ரகசியம் ஒண்ணு எனக்கு தெரியும். அதை இன்னும் ரெண்டு வருஷத்துக்கு ரகசியமா வச்சுக்கறதும், உடனே லீக் அவுட் பண்றதும் எனக்கு நீங்க தர்ற மரியாதையில தான் இருக்கு!" என்று ஐஸ்வர்யா ஸ்ரீ தோளைக் குலுக்கிக் கொள்ள அமிர்தவர்ஷினி அவர்கள் இருவரையும் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தாள்.
"சிரிச்சா அழகாத் தான் இருக்க. வாயை மூடிக்க!" என்று அமிர்தவர்ஷினியிடம் பாய்ந்த நேத்ரன் ஐஸ்வர்யா ஸ்ரீயின் கைகளை அழுத்திக் கொண்டு அவளருகில் அமர்ந்து,
"அண்ணிங்க.....என்னங்க சின்ன விஷயத்துக்கெல்லாம் போய் இப்படி ப்ளாக் மெயில் பண்ணினா என்ன பண்றது? இப்போ உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டவனிடம்
"கிப்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ அழுத்தத்துடன்.
"அமிர்தவர்ஷினி..... ப்ளீஸ் இந்த பிசாசுக்கு......" என்றவனை இடைநிறுத்தி
"ஏய் மரியாதை.... மரியாதை!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ சிரிப்புடன்.
"கிப்டை எடுத்துட்டு வந்து எங்கண்ணி கையில குடுத்துடுமா வர்ஷினி!" என்று நேத்ரன் பரிதாபமாக சொல்ல அமிர்தவர்ஷினி ஒரு புன்சிரிப்புடன் அவனிடம் தலையாட்டி விட்டு எங்கோ சென்று வந்து தன் தோழியிடம் ஒரு பரிசுப் பெட்டியை நீட்டினாள்.
"ம்ம்ம்......ரெண்டு பேருக்கும் என்கிட்ட இவ்வளவு பயம் எப்பவுமே இருக்கணும். புரிஞ்சதா?" என்று கேட்டவளை பார்த்து விட்டு நேத்ரனும், அமிர்தவர்ஷினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அருள்மொழியும், அலர்மேல் மங்கையும் திருமணத்திற்கு வந்து சிறப்பித்தவர்களுக்கு நன்றி கூறி தாம்பூலம் தந்து கொண்டிருக்க சந்திரதாரா மண்டபத்திலேயே ஓர் அறையில் அவசியம் ஓய்வு எடுக்க வேண்டும் மித்ரன் கட்டளையிட்டிருந்தான்.
மண்டபத்தில் இருந்து வந்த உறவினர்கள் பாதிக்கு மேல் கிளம்பி விட்டதால் திருமண மண்டபம் அப்போது தான் பிரசவித்த பெண் போல் களைப்பில் கலைந்து இருந்தது.
அவனுக்கான பரிசை ஐஸ்வர்யா ஸ்ரீ குறுக்கு வழியில் பெற்றுக் கொண்ட பிறகு பதினைந்து நிமிடங்கள் கழித்து தான் மித்ரன் அவளுக்கான பரிசுடன் வந்தான்.
"ஸாரி பேபி, உனக்கு கிப்ட் கொண்டு வர லேட்டாகிடுச்சு! நாலஞ்சு இடத்தில தேட விட்டு...... இட் வாஸ் எக்ஸைட்டிங்..... இல்ல வரு?" என்று கேட்டவனிடம் "ஆமா மித்து ரொம்ப ரொம்ப என்ஜாயபிளா இருந்தது!" என்று சொல்லி தலையை பெரிதாக ஆட்டி விட்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"கிப்டை எக்ஸேன்ஜ் பண்ணி ஓப்பன் பண்ணிடலாமா?" என்று கேட்ட தன் கணவனிடம், "ஷ்யூர் மித்து! அதுக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சது?" என்று சொல்லி விட்டு பரிசை மாற்றிக் கொண்டவர்கள் ஒரே சமயத்தில் பரிசை திறந்து "வாவ்" என்றனர்.
மித்ரன், ஐஸ்வர்யா இரண்டு பேரின் கைகளிலும் மூன்று வயதுக் குழந்தைப் பருவத்தில் எடுக்கப்பட்ட மித்ரன், ஐஸ்வர்யாவின் புகைப்படம் இருந்தது.
"கிப்ட் பிடிச்சிருக்கா சிவாண்ணா? எப்படியும் உங்களுக்கு நீங்க சின்ன வயசுல எப்படி இருந்தீங்கன்னு மறந்து போயிருக்கும். அதான் அம்மாவோட ஐடியா படி இப்படி ஒரு கிப்ட் குடுத்தோம். ஐஷுமா போட்டோ ஸார் கிட்ட வாங்கிக்கிட்டேன்!" என்றான் நேத்ரன்.
தன் தம்பியை அணைத்துக் கொண்டு, "தேங்க்ஸ் சோட்டு! ரொம்ப ஸ்பெஷல் ஆன கிப்ட் குடுத்திருக்க. வருவையும் குட்டிப் பாப்பாவா பார்க்க ரொம்ப க்யூட்டா இருக்கு! அமிர்தவர்ஷினி நீங்க அழகா ட்ரஷர் ஹண்ட் அரேன்ஜ் பண்ணியிருந்தீங்க. உங்களுக்கும் தேங்க்ஸ்!" என்றான் மித்ரன்.
"பரவாயில்லை மித்ரன் ஸார்..... நேத்ரன் ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டாங்க. அதான் செஞ்சு குடுத்தேன், நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. இன்னும் டூ ஹவர்ஸ்ல ரிஸப்ஷன் இருக்குல்ல..... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.
அப்புறம் ரொம்ப டையர்டா ஆகிட போகுது!" என்று சொல்லி இருவரையும் சேர்த்து மாடியில் ஒரு அறைக்குள் தள்ளி விட்டு கீழே சென்றாள் வர்ஷினி.
கதவைச் சாற்றி விட்டு புன்னகையுடன் கைகளை விரித்த மித்ரனின் நெஞ்சில் பதிந்து கொண்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"எனக்காக தானே அவசரம் அவசரமா கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு சொன்ன...... ஆனா ஏன் மித்து எல்லாரும் சேர்ந்து இப்படி பேசுறாங்க? உன்னை விலை குடுத்து நான் வாங்கிட்டேனாம்.... நீ உன் கம்பெனி ஐபி நோட்டீஸ் குடுத்ததுக்காக புளியங்கொம்புன்னு நினைச்சு என்னை பிடிச்சுக்கிட்டியாம். அப்ப்ப்ப்பா........ மேரேஜ் க்கு ஃப்ளஸ் பண்ண வந்தவங்களை விட அவங்க பேசின இந்த மாதிரி காஸிப்ஸ் தான் என் காதுல அதிகமா கேட்டது. நல்ல வேளை..... நம்ம கல்யாணம் ஆகிடுச்சு. இதே வார்த்தையை எல்லாம் ஸ்டெப்லைஸ் ஆன பிறகு யாராவது சொல்லியிருந்தாங்கன்னா உன்னைய நான் கல்யாணம் பண்றதுக்கே யோசிச்சு இருக்கணும் போலிருக்கு பாவ்வா!" என்று சொல்லிக் கொண்டிருந்தவளின் இதழ்களை வருடிக் கொண்டிருந்தவன் சட்டென கோபம் கொண்டு அவள் இதழ்களை மென்று தின்று கொண்டிருந்தான். ஆழிப்பேரலை போல் தொடங்கிய முத்த யுத்தம் ஐஸ்வர்யாவும் அவனுடன் ஒன்றியதால் சாரல் மழை போல் மென்மையான வடிவம் பூண்டு இருவரின் உயிர் வரை இனித்தது.
"நீயும், நானும் எப்படின்னு யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசட்டும். உன்னைப் பத்தி எனக்கு தெரியும். என்னைப் பத்தி உனக்கு தெரியும். நான் நம்ம கல்யாணத்துக்கு அவசரப்பட்டது சரியாத்தான் இருந்திருக்கு பார்த்தியா........ யாரு என்ன சொன்னாலும் எப்படிடீ என்னை விட்டுட்டு போயிருப்பேன்னு நீ சொல்லலாம். நீ செஞ்சது தப்பு தானே? ஒழுங்கா என்கிட்ட பாவா ஸாரிடா, தெரியாம பேசிட்டேன். இனிமே இப்படியெல்லாம் பேச மாட்டேன்னு அப்பாலஜி கேளுடீ!" என்றவனை கோபப்பார்வை பார்த்தவள்,
"டேய் பித்து..... நான் என்ன நீ ப்ரோக்ராம் பண்ணி வச்சுருக்கற மெஷினா..... உன் இஷ்டத்துக்கு என்னை மோல்ட் பண்ணிட்டு இருக்க! ஐ கான்ட் டேக் திஸ் ஃபார் க்ராண்டட்....." என்று சொன்னவளின் அருகே வந்த மித்ரன்,
"இதுக்கெல்லாம் பின்னால ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க மிஸஸ் மித்ரன்!" என்று அவளை இறுக்கிக் கொண்டு முத்தமிட்டு கொண்டிருந்த போது அருள்மொழி வெளியே மித்ரனை அழைத்த சத்தம் கேட்டது.
"யப்பா... நல்ல நேரத்துல வந்த மாமு; இந்த மித்து பையன் கையில நசுங்கி ஜீஸ் ஆகுறதுக்குள்ள என்னை காப்பாத்துறதுக்கு...... உனக்கு ரொம்ப தேங்க்ஸ்! மாஸ்டர் டோர் க்ளோஸ் பண்ணிட்டு போங்க! கொஞ்ச நேரம் தூங்கி ஃப்ரெஷ் ஆகிக்குறேன்!" என்று சொன்ன ஐஸ்வர்யாவை விட்டு விலகி நிற்க விருப்பமே இல்லாமல் அரை மனதுடன் எழுந்து சென்றான் சிவமித்ரன்.
"என்னடா மித்ரா ஏதோ என் கிட்ட பேசணும். அப்புறம் வாங்கன்னு சொன்ன.....அது தான் வந்தேன்! ஸாரி உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போலிருக்கு!" என்று குன்றியவரிடம்,
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. உட்காருங்க!" என்று சொல்லி ஸோஃபாவில் அமர வைத்தவன் அவரை மேலும் கீழுமாக பார்த்து கொண்டு இருந்தான்.
"டேய் மித்ரா எதுக்குடா இவ்வளவு கோபமா லுக் விடுற.....நான் ஏதாவது தப்பு பண்ணிட்டனா?" என்று கேட்டவரிடம் அசராத பார்வையுடன்,
"எப்புடி.....எப்புடி; தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவியா...... பாட்டுலயே சிக்னல்.......ம்ம்ம்; நீங்க ஏக்கமா பார்க்குறதும், அவங்க மௌனமா தவிக்கறதும் எதுக்கு ஸார்
இப்படி படாத பாடு படுறீங்க?" என்று கேட்டவனிடம் ஒரு பெருமூச்சுடன்,
"விடுறா மித்ரா கல்யாணம்ங்கிற அழகான கமிட்மெண்ட் எனக்கெல்லாம் இல்லை போலிருக்கு! தேவையில்லாம எதுக்கு இப்படி நீ என்னை பத்தி யோசிச்சுட்டு இருக்க.....உங்க லைஃப நல்ல படியா நீங்க வாழுங்க. அது போதும்!" என்றவரிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு,
"என்னை அப்படி சுயநலமா நீங்க வளர்க்கலையே ஸார்.... என்னை சுத்தி இருக்கிற எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்கன்னா தான் நான் சந்தோஷமா இருக்க முடியும். ஸோ நீங்க என்ன பண்றீங்கன்னா ஒரு ஆறு மாசம் ஆல் இண்டியா டூர் போறீங்க......! இந்த விஷயத்தை உடனே லோட்டஸ் கிட்ட சொல்லிடுறீங்க. என்ஜின் கிளம்பினா கூடவே கம்பார்ட்மெண்ட்டும் சேர்ந்து கிளம்பியாகணும்!" என்று சிரிப்புடன் சொன்னவனிடம் குறுஞ்சிரிப்புடன்,
"டேய் உண்மைய சொல்லு. நீ எனக்காக ப்ளான் போடுறியா? இல்ல உனக்காகவா?" என்று கேட்டார் அருள்மொழி.
இருவரும் இணைந்து சிரிப்புடன் நின்று கொண்டு இருந்த போது ஐஸ்வர்யா ஸ்ரீயின் உமட்டல் ஒலி கேட்டதும் மித்ரன் குழப்பத்துடன் பதட்டம் அடைந்தான்.
"அட்ரா சக்க; கையை குடுடா! இதுக்கு தான் இவ்வளவு அவசரமா கல்யாணமா..... கங்கிராட்ஸ் மித்ரா!" என்று சொல்லி தன் கைகளைப் பற்றிக் கொண்டவரை விலக்கிக் கொண்டு அறைக்குள் ஓடிய மித்ரன் அந்த இக்கட்டான நேரத்தில் கூட அருள்மொழியை நாலு
திட்டுகள் திட்டி விட்டு தான் உள்ளே ஓடினான்.
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro