💖 வஞ்சி மனம் 27
திருமணம் நிறைவடைந்தவுடன் மித்ரனும், ஐஸ்வர்யாவும் சந்திரதாராவின் கால்களில் விழுந்து வணங்கினர். கண்ணீருடன் இருவரின் கைகளைப் பிடித்துக் கொண்ட அவரிடம்,
"ஆன்ட்டி இப்போ நீங்க ஹாப்பி தானே? இன்னும் ரெண்டு மூணு வாரம் மட்டும் வெயிட் பண்ணுங்க. பழைய படி நம்ம எல்லாரும் இங்கயே பர்மெனன்டா வந்து செட்டில் ஆகிடலாம்!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். ஆனா அத்தை சொல்லிட்டாளேன்னு சண்டை எல்லாம் போடாம இருக்காதீங்க செல்லம். லைஃப் போரடிக்கும். எப்படியும் சிவாம்மா உன் கிட்ட சண்டை போட மாட்டான். ரொம்ப கொயட்; ஆனா நீ அடிக்கடி சிவாட்ட சண்டை போட்டுக்கலாம்டா ஐஷு! நான் உனக்கு ஸப்போர்ட் பண்றேன்!" என்று சொன்ன தன் மாமியாரிடம் ஒரு ஷாக் ரியாக்ஷனை கொடுத்தவள்,
"ஐயோ ஆன்ட்டி... நல்லா சொன்னீங்க போங்க! மித்து என் கிட்ட சண்டை போட மாட்டானா.....அதெல்லாம் பாய்ஞ்சு பாய்ஞ்சு போடுவான். உங்க பையனை நீங்க ரொம்ப ஸாப்ட்ன்னு நினைச்சுட்டு இருக்கீங்க ஆன்ட்டி, ஆனா ஸார் எங்கிட்ட மட்டும் அப்படியெல்லாம் இல்லை!" என்று உதடு பிதுக்கியவளிடம்,
"இனிமே அப்படி இருப்பான்டா ஐஷு, போங்க எல்லார் கிட்டயும் ப்ளசிங்ஸ் வாங்கிக்கங்க!" என்றார்.
அருள்மொழி ஒருவாறு உணர்ச்சிப்பூர்வமான மனநிலையில் இருந்தார். அவர் கைகளில் ஏந்திய முதலும் கடைசியுமான குழந்தை தன் மருமகள் ஐஸ்வர்யா ஸ்ரீ மட்டும் தான். அவளையும் கூட பிறந்த சில தினங்களில் பார்த்தது தான். அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அவர் தங்கை இந்தியாவிற்கு வரும் போது பார்த்துக் கொள்வது தான். ஆனால் இப்போது தான் சிறு குழந்தையாக பார்த்த ஐசுக்குட்டி மித்ரனுடன் மணக்கோலத்தில் நின்று கொண்டு இருப்பதை பார்த்து காலத்தின் காலில் கட்டியிருக்கிற சக்கரத்தின் வேகத்தை பற்றி யோசித்து கொண்டிருந்தார் அருள்மொழி.
"இந்தாய்யா என்ன ஆடு திருடுன கள்ளன் மாதிரி முழிச்சுட்டு நிக்குற.....புள்ளைகள ஆசிர்வாதம் பண்ணு!" என்று அலர்மேல் மங்கை அவரிடம் இடித்துரைக்கவும் அவர் சிரிப்புடன் மங்கையிடம்,
"நீயும் என் பக்கத்துல வந்து சேர்ந்து நில்லேன்மா! ரெண்டு பேரும் சேர்ந்து ஆசிர்வாதம் பண்ணலாம்!" என்றார் ஒரு எதிர்பார்ப்புடன்.
"ஆசிர்வாதம் பண்ற அளவுக்கு நான் இன்னும் பெரிய மனுஷி ஆகல. நீயே பண்ணு. நா பந்தியை போய் கவனிக்குறேன்...." என்று சொல்லி அவ்விடத்தில் இருந்து நழுவி விட்டார் மங்கை.
"ஸார் எங்கள ப்ளெஸ் பண்ணுங்க!" என்று சொல்லி அருள்மொழியின் கால்களில் தன் மனைவியுடன் பணிந்தவனை அணைத்துக் கொண்டார் அருள்மொழி.
"என் லைஃப்ல நம்ம கூட கொஞ்சம் அச்சீவ் பண்ணியிருக்கோம்னு நா நினைச்சு சந்தோஷப்படுற ஒரே ஒரு நல்ல காரியம் உன்னை ஒரு நல்ல பையனா வளர்த்தது மட்டும் தான்டா மித்ரா, என் தங்கச்சி கிட்ட கூட என் பையனுக்கு உன் பொண்ணை கல்யாணம் பண்ணி தர்றியான்னு தான் கேட்டேன். ஐசுக்குட்டி இந்தாடா இவ்வளவு நாள் என்னோட தனிப்பட்ட வருமானத்தை பெருக்கி வச்சிருந்த முழுத்தொகையையும், மித்ராவையும் உன் கையில ஒப்படைக்கிறேன். சின்ன வயசுல இருந்து அவனுக்கு தேவையானதை கூட நம்ம கிட்ட கேட்டு வாங்கிக்க அவ்வளவு ரோஷப்படுவான். அவனுக்கு என்ன வேணும்ன்னு நம்ம தான் பார்த்து பார்த்து செய்யணும். இப்போ நீ அவனுக்காகவும், நேத்ராக்காகவும் பொறுப்பை எடுத்துக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மித்ரா வீட்டை மட்டும் விக்க வேண்டாம்ன்னு சொன்னான்! எல்லா பணத்தையும் கால்குலேட் பண்ணினாலும் வீடு இல்லன்னா உன் ஜ்வல்ஸையும் கொஞ்சம் குடுக்கற மாதிரி தான் இருக்கும். பார்த்து எவ்வளவு சீக்கிரமா ப்ராஸஸ் பண்ண முடியுமோ பண்ணிடறேன்டா. ஹாப்பி தானே?" என்று கேட்ட தன் மாமனை அணைத்துக் கொண்டாள் ஐஸ்வர்யா, எவ்வளவு தான் கட்டுப்படுத்த முயன்றாலும் அவளையும் மீறி விம்மலுடன் கண்ணீர் வந்து விட்டது.
"ஐசு கண்கலங்கக்கூடாதுடா....." என்று அருள்மொழி அவளை தேற்றிக் கொண்டு இருக்கையில் நேத்ரன் அவர் அருகில் சென்று,
"ஐஷுமா! ஸார் கையை விடு! ஸார் நீங்க என் கூட வந்து மண்டபத்துக்குள்ள வந்துட்டு இருக்கிற ஒரு ஆள வெளியே போகச் சொல்லணும். நான் சொன்னா நல்லா இருக்காது. வாங்க!" என்று அவரை கைப்பிடித்து அழைத்து சென்றான்.
மித்ரன் அவர்களிருவரையும் நிறுத்தி, "சோட்டு வந்திருக்கிறது யாரு....கங்காதர் சித்தப்பாவா, அம்மா சொல்லி நான் தான் அவரை பங்ஷனுக்கு இன்வைட் பண்ணிட்டு வந்தேன். அவரை சிரிச்ச முகமா நின்னு ரிசீவ் பண்ணு!" என்றான் மித்ரன் கட்டளைக் குரலில்.
"ம்ப்ச் நீ லூசா சிவாண்ணா....... ஐ கான்ட் டூ திஸ்!" என்று மறுப்பாக தலையசைத்தவனிடம் புன்னகையுடன்,
"சோட்டு இப்போ நீ போகலன்னா மாலையை கழட்டி வச்சுட்டு நான் போய் சித்தப்பாவை கூட்டிட்டு வரணும். நான் போகட்டுமா? நீ போறியா?" என்று புன்னகை மாறாமல் குரலை உயர்த்தாமல் உத்தரவிட்டவனிடம் கடுப்புடன்,
"நானே போய்த் தொலையுறேன். இந்த ஜென்மங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட சூடு, சொரணையே இருக்காதா.....வெக்கமே இல்லாம நீ கூப்பிட்டன்னு அந்த ஆளும்.....!" என்று சொல்லிக் கொண்டு போனவனை, "சோட்டு!" என்ற தமையனின் அழுத்தமான குரல் சற்று தயங்க வைத்தது.
ஐஸ்வர்யா அதற்குள் கண்களால் வர்ஷினையை தன்னருகே அழைத்து நேத்ரனுடன் செல்ல சொன்னாள்.
"மிஸ்டர் நேத்ரன் நாம இப்போ எங்க போறோம்?" என்று அவனின் வேக நடைக்கு ஈடாக சற்று வேகமாக எட்டுகளை வைத்துக் கொண்டு இருந்தவனிடம்,
"எங்க தாத்தனுக்கு பிறந்த பையனுக்கு தம்பியை மரியாதை பண்ணி வரவேற்பு செஞ்சு கூட்டிட்டு வரப் போறேன்! கொஞ்சம் வேகமா நடக்குறீங்களா மேடம்?....." என்று அவள் புறம் திரும்பி கேட்டவனை உறுத்து விழித்தவள்,
"ஹலோ மிஸ்டர் நா ஆல்ரெடி ஜாகிங் தான் பண்ணிட்டு இருக்கேன். ஆமா உங்க சித்தப்பாவுக்கு இப்படி பில்டப் இண்ட்ரோ குடுக்கறீங்களே.....
உங்களுக்கு அவரை பிடிக்காதா?" என்று கேட்டவளை ஒரு கனல் பார்வை பார்த்துவிட்டு உயிரை வெறுத்து முகத்தில் புன்னகையை இழுத்து பிடித்து கொண்டு கங்காதர், மானஸ்வினி, அஜய் மூவரையும் உள்ளே அழைத்து வந்தான் நேத்ரன்.
அருள்மொழியும், மித்ரனும், சந்திரதாராவும் அவர்களை அன்புடன் வரவேற்று உபசரிக்க கங்காதரின் பார்வை அனைத்தையும் அளவிடுவது போல் தான் இருந்தது.
மித்ரன் கங்காதரிடம் ஆசி பெற வந்ததும் கங்காதரும், மானஸ்வினியும் ஐஸ்வர்யாவை பிடித்து கொண்டனர்.
எவ்வளவு பெரிய விலை கொடுத்து மித்ரனை அவள் வாங்கியிருக்கிறாள் என்று அவர்கள் கணக்கிட்ட போது அவளுக்கு இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா என்று சந்தேகம் எழுந்தது. சற்று நேரம் முன்பு தான் ராஜசேகருடன் திருமண வாழ்த்து தெரிவிக்க வந்த சௌஜன்யாவும் இதே கேள்வியை சற்று மாற்றி மித்ரனிடம் கேட்டு விட்டு போனாள்.
இவர்கள் இயல்பு இப்படித்தான் என்று நன்றாக தெரிந்தும் இந்த மாதிரியான தரக்குறைவான பேச்சுகளால் ஐஸ்வர்யா ஸ்ரீயின் மனம் நொந்தது.
அவள் முகபாவத்தை நோக்கி விட்டு அவள் புறம் வந்த நேத்ரன்,
"ஐஷுமா! ரொம்ப டையர்டா இருக்க போலிருக்கு. ஒரு சாக்லேட் ட்ரஃபிள் கேக் வெட்டி இந்த மொமண்டை ரொம்ப என்ஜாயபிளா ஆக்கலாமா?" என்று கேட்ட படி அவள் தோளில் தட்டிக் கொடுத்தவனிடம் பளீர் புன்னகையுடன்,
"நேத்து; கேக்கெல்லாமா ஆர்டர் பண்ணின.....தேங்க்ஸ்டா! நீ தான்டா என் ரியல் வெல்விஷ்ஷர். இன்னிக்காவது அண்ணனும் தம்பியும் எனக்கு முழுசா ஒரு பீஸ் கேக் குடுங்கடா!" என்றாள் கண்களில் ஆவலுடன்.
அதற்குள் அருள்மொழி கங்காதரை அமர வைத்து விட்டு வர நேத்ரன் ஐஸ்வர்யா ஸ்ரீயை கடிந்து கொண்டான்.
"என் கிட்ட சிவாண்ணா கிட்டல்லாம் மல்லுக்கு நிக்குறல்ல..... இன்னிக்கி உனக்கு என்னாச்சு? புடவை கட்டி, மேக்கப் எல்லாம் போட்டதுனால வெக்கம் வெக்கமா வந்துடுச்சா...... அந்த ஆளு பாட்டுக்கு சிவாண்ணாவ நீ காசுக்கு வாங்கியிருக்கன்னு சொல்றான். அன்னிக்கு ஆஃபிஸ்ல பேசின மாதிரி பஞ்ச் டயலாக் பேசுவன்னு பார்த்தா தலைய குனிஞ்சுட்டு நிக்குற....." என்று அடிக்குரலில் சீறியவனிடம் பாவமான முகத்துடன்,
"நான் அன்னிக்கு பேசினப்போ அவங்களுக்கும் எனக்கும் நடுவுல எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்ல. இன்னிக்கி அப்படி இல்லலடா நேத்து..... அது தான் சைலண்டா இருந்துட்டேன். ப்ராப்பர்ட்டியை வாங்கின பிறகு இன்னும் எத்தனை பேரு எத்தனை விதமா க்ரிட்டிசைஸ் பண்ணப் போறாங்களோ தெரியல. ஆனா அதுக்குள்ள நம்ம மேரேஜ் நடந்து முடிஞ்சிருக்கணும்ன்னு சொன்னான் பாரு ஒரு நல்லவன்....... நான் வருத்தப்பட்டுட கூடாதுன்னு யோசிச்சு தான் இந்த மேரேஜை நடத்தி முடிச்சுருக்கான்டா...... என்ர ஹப்பி மித்து பாவா ரொம்ப நல்லவர், என்னடா நேத்து?" என்று கண்சிமிட்டி புன்னகைத்தவளை பின்புறம் இருந்து தோளை அணைத்துக் கொண்டது ஒரு கரம்.
"பரவாயில்லையே....... வரு பேபிக்கு நான் எக்ஸ்ப்ளனேஷன் குடுக்காமலேயே நிறைய விஷயம் புரிஞ்சுடுச்சு போலிருக்கு! சூப்பர்......
இதுக்காகவே நம்ம கேக் சாப்பிடறோம் சோட்டு; கேக்கை எடுத்துட்டு வா!" என்று தன் தம்பியிடம் கேட்டான் மித்ரன்.
"ஜஸ்ட் மேரிட்!" என்று வாசகம் எழுதப்பட்டிருந்த கேக்கினை சிவமித்ரனும் ஐஸ்வர்யா ஸ்ரீ யும் இணைந்து வெட்டி முடித்து
அனைவருக்கும் விநியோகம் செய்து மித்ரனும், ஐஸ்வர்யாவும் ஒருவருக்கு ஒருவர் கேக்கை ஊட்டி விட்டு அவள் திருப்திகரமாக சாப்பிட்டு முடிக்கையில்
மண்டபத்தின் மேல் மாடியில் இருந்து நேத்ரனும், அமிர்தவர்ஷினியும் பெரிய பெரிய பைகளில் இருந்த மல்லிகை மலர்களை தம்பதியர் மேல் தூவினர். மித்ரனும், ஐஸ்வர்யாவும் சிறிய குன்று அளவிலான பூக்கள் தங்கள் மீது விழுந்த வேகத்தில் தடுமாறி ஒருவரை ஒருவர் சற்று அணைத்துக் கொள்ள அதற்குள் அவர்களின் முட்டியளவு பூக்கள் அவர்கள் இருவரையும் ஆக்ரமித்து கொண்டது.
"வரு பூவை வச்சு நம்ம சோட்டு நம்மளை லாக் பண்ணி வச்சுருக்கான்ல்ல; இதே செட்டப்பை இன்னிக்கு நம்ம பெட்ரூம்ல செஞ்சு வச்சுருக்கலாம். ஒரு லிப்லாக் ஜஸ்ட் மிஸ்! ச்சே.....கண்மணி இப்போ ஒரு கவிதை மனசுக்குள்ள ரெடியாகிட்டு இருக்கு. சொல்லட்டுமா?" என்று கேட்டவனை பாவப்பட்ட பார்வை பார்த்தவள்,
"மித்து கண்ணா அங்க லன்ஞ்ச் ரெடியாகிட்டு இருக்கு. எனக்கு அப்பவே செம பசி எடுத்துடுச்சு. சாம்பார், பருப்பு, தயிர்வடை பாயாசம், பாஸந்தி, 12 வகை பொரியல், உனக்கு பிடிச்ச பனீர் ஜாமுன், ப்ரைடு ரைஸ், எனக்கு
பிடிச்ச கட்லட், இப்படி விதவிதமா எத்தனை ஐயிட்டம்...... எல்லாத்தையும் ரசிச்சு சாப்பிடணும். சாப்பிட போகலாமா......அ.....ம்மா; ஏன்டா தலையில அடிக்கிற வலிக்குது....." என்று சிணுங்கியவளிடம்,
"எவ்வளவு ரொமான்டிக்கா பூவுக்குள்ள நின்னுட்டு இருக்கோம்! கவிதை சொல்லட்டுமான்னு கேட்டா நீ சாப்பிட போகலாமான்னு கேட்டு என்னை வெறுப்பேத்துறியாடீ வாட்டர்பெட்..... இப்போ தான கேக்கை முடிச்ச. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட போகலாம்! ஒண்ணும் ஆகாது" என்றவன் அவள் செவியோரம் சாய்ந்து கொண்டு கவி படிக்க ஆரம்பித்து விட்டான்.
உன் வாள் விழித் தாக்குதலில் நான் சிக்குண்டு
சிதைவது போதாதென்று;
உன் செந்நிற இதழ்கள்
என் கருநிற கன்னங்களை
ஒற்றியெடுத்து
காயம் செய்யும் இம்சை
போதாதென்று;
என்னை படுகுழியில் தள்ள
எத்தனிக்கும்
உன் கன்னங்களில் விழும் குழிகளின் அழைப்பு
போதாதென்று;
இன்னமும் உன் பக்கத் துணைக்கு பூக்களின்
அணிவகுப்பு வேறா??
கண நேரமும் உனை
விலக விரும்பாத
நெஞ்சம் கொண்டேன்!
வஞ்சி உந்தன் மனமதில்
தஞ்சம் கொண்டேன்!!
"கவிதை நல்லா இருக்கா வருக்குட்டி......" என்று கேட்டவனிடம்
புன்னகையுடன்,
"ரொம்ப நல்லாயிருக்கு! கைதட்டிட்டேன். வா சாப்பிட போகலாம்!" என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு பூக்களின் உள்ளிருந்து காலை உருவிக் கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"ஏன்டா நேத்து இப்படி ரெண்டு கூடை பூவை வேஸ்ட் பண்ணின......இதல்லாம் எடுத்து மறுபடியும் கூடையில் போட்டு வை. எதுக்கு இவ்வளவு வாங்கின?" என்று கீழிறங்கி வந்த நேத்ரனிடம் கேட்டவளை பார்த்து சிரித்தவன்,
"காதுல வச்சுட்டு சுத்தறதுக்கு தான் ஐஷுமா! சிவாண்ணா இந்த குழந்தையை கொஞ்சம் டெவலப் பண்ணி விடுங்க; பாவம் அப்பப்போ கொஞ்சம் நட்டை டைட் பண்ணி விட வேண்டியதா இருக்கு!" என்று சலித்துக் கொண்டான் நேத்ரன்.
"என்ன அண்ணாவும் தம்பியும் சேர்ந்து என் பிரெண்டை கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க..... திஸ் இஸ் டூ மச்!" என்று சொன்ன அமிர்தவர்ஷினியை
"ரிலாக்ஸ் அமிர் ஈஸி ஈஸி!" என்று சொல்லி அமைதிப்படுத்தினான் மித்ரன்.
"டேய் நேத்து நீ நேத்து வரைக்கும் என் ப்ரெண்டு. இப்போ உங்க அண்ணன் கூட ஜாயின் பண்ணிட்டு என்னை இன்சல்ட் பண்றியா.... இரு உன்னை கவனிச்சுக்கிறேன்!" என்று அவனை மிரட்டிய ஐஸ்வர்யாவை,
"என்னையெல்லாம் கவனிச்சுக்க ஆள் இருக்கு. நீ இப்போதைக்கு சிவாண்ணாவ கவனி!" என்று சொல்லி அவளை மித்ரனின் புறம் தள்ளி விட்டு விட்டு சென்று விட்டான் நேத்ரன்.
வழக்கம் போல தானும் தடுமாறாமல் அவளையும் தாங்கி பிடித்த மித்ரன் அவளை டீஜேவின் அருகில் அழைத்து சென்றான்.
அருள்மொழி மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கேட்டு நேத்ரன் அவருக்காகவே டீஜே இசையை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான்.
"தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி" என்ற பாடலை ரசித்து அனுபவித்து அவ்வப்போது
மங்கையை பார்த்தவாறு பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழியின் அருகே சென்று மித்ரன் அமர்ந்து கொண்டான்.
பாடல் முடிந்ததும் மைக்கை கைகளில் ஏந்திக் கொண்டவன், "எல்லாருக்கும் வணக்கம்.
அருள்மொழி ஸார், மங்கை அம்மா, எங்கம்மாவை சேர்த்து எனக்கு மூணு அம்மா! என்னடா கல்யாணம் ஆன அன்னிக்கு எதுக்கு இப்படி அம்மாவை பத்தி பேசிட்டு இருக்கேன்னு நீங்க எல்லாரும் நினைக்கலாம். பட் ஒரு மகனா நான் எங்க அம்மாவுக்கு இதுவரை ஒண்ணுமே செஞ்சதில்ல. ஸோ என்னோட கல்யாண நாள்ல எங்க அம்மாவுக்கும், மங்கை அம்மா, அருள்மொழி ஸாருக்கும் ஒரு ஸாங் டெடிகேட் பண்றேன்!" என்று சொல்லி விட்டு
"நானாகிய நதிமூலமே
தாயாகிய ஆதாரமே
எனைத் தாங்கிய கருக்குடம்
இணையே இல்லா
திருத்தலம்
அனுதினம் உனை நினைந்திருக்கிறேன்!" என்ற பாடலை கண்மூடி பாடிக் கொண்டு இருந்தான் சிவமித்ரன். சந்திரதாரா, ஐஸ்வர்யா, அருள்மொழி, அலர்மேல் மங்கை, நேத்ரன், அமிர்தவர்ஷினி முதற்கொண்டு அனைவரும் அவன் பாடலில் ஒவ்வொரு விதமான வார்த்தையால் வடிக்க முடியாத
உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர்.
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro