Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 26

திருப்பூர் நகரின் ஒரு பிரபல திருமண மண்டபம் திருமண விழாவிற்காக தயாராகி கொண்டிருந்தது. சிவமித்ரன் வெட்ஸ் ஐஸ்வர்யா ஸ்ரீ என்று மணமக்களின் பெயரைத் தாங்கி நின்றன பதாகைகள். ஆம்
இதோ இன்னும் சிறிது நேரத்தில் நம் கதையின்  நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. அருள்மொழியும், நேத்ரனும் அனைவரையும் வரவேற்றுக் கொண்டு இருந்தனர். அலர்மேல் மங்கை மற்றும் அமிர்தவர்ஷினி இருவரும் திருமணத்துக்கு வந்த  அனைவரையும் உபசரித்து, சந்திரதாரா, ஐஸ்வர்யா ஸ்ரீ இருவரிடமும் அவ்வப்போது கண் வைத்து அவர்களுக்கும் தேவையானதை செய்து கொடுத்து கொண்டு இருந்தனர்.

இப்போது தான் அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு  அமிர்தவர்ஷினியின் பெற்றோர் வந்து சென்றதால் அவர்கள் இன்று திருமணத்துக்கு வரவில்லை. அமிர்தவர்ஷினி தன் பெற்றோரிடம் அடம் பிடித்து தனியாக கிளம்பி நேற்று மதியம் தான் வந்தாள். அவளுக்கு தன் தோழியிடம் நேத்ரனைப் பற்றி சற்று பேச வேண்டும்; ஆனால் உண்மையில் அவள் அடித்து பிடித்து வந்ததற்கு காரணம் அதுவல்ல. தோழியின் திருமணத்திற்கு வரும் சாக்கில் தன்னுடைய ஆளையும் சற்று பார்க்கலாம், பேசலாம், பழகலாம்! ஐஸ்வர்யாவின் திருமணத்துக்கு இன்று வரவில்லை என்றால் பின்னர் அவளது காதலை தன் தோழியிடம் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது? திருமணத்திற்கு பின் அவள் நேத்ரனின் அண்ணியாகி விடுவாளே...... இந்த காரணங்கள் எல்லாம் சேர்ந்து அவளை திருப்பூருக்கு அழைத்து வந்து இருந்தது.

சரியாக இருபத்து ஒன்பது நாட்களுக்கு முன் மித்ரன் தனது வீடாக பயன்படுத்தி வந்த குட்டி அவுட்ஹவுஸின் வாசலில் கை கட்டிக் கொண்டு நின்றான். இரும்பை உருக்கி செய்து வைத்த சிலை போன்ற தோற்றத்துடன் நின்றவனை பின்னால் இருந்து பார்க்கும் போதே ஐஸ்வர்யாவிற்கு படபடப்பாக இருந்தது. மித்ரனின் இவ்வளவு நாள் கோபத்திற்கும், இன்றைய கோபத்திற்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது அவளுக்கு. அவன் முகத்தில் புன்னகையை மருந்துக்கு கூட பார்க்க முடியவில்லை. இப்போ இவன தெறிக்க விடுற மாதிரி ஏதாவது பண்ணணுமே...... என்ன பண்ணலாம்?" என்று ஒரு கையை பின்னால் கட்டிக் கொண்டு தாடையை சொறிந்து கொண்டு இருந்தவள், மூளையில் ஒரு ஐடியா மணி அடிக்க சிரிப்புடன் அவன் முன்னால் வந்து நின்றாள்.

"என்ன சிரிப்பு?" என்று சற்று கடுமையாக கேட்டவனிடம் புன்முறுவலுடன்,

"சிரிப்பு வருது. சிரிக்கிறேன். நான் அப்படித்தான் சிரிப்பேன். உங்களுக்கு என்ன மிஸ்டர் மித்ரன்? ஆனா அழகான ஸ்மைலிங் ப்யூட்டியா இருந்த நீ என்னைய பார்த்தா மட்டும் இப்போ எல்லாம் பயங்கர டென்ஷன் ஆகுற. மிட்டு பேபிக்கு கொஞ்ச நேரம் டால் ட்ரீல ஏறி விளையாடணுமாம். நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணிட்டு வர்றேன். போவோமாடா மிட்டு பேபி?" என்று அவள் தோள்களில் அமர்ந்து பருப்பை கொறித்து கொண்டிருந்த மிட்டுவை மிருதுவாக வருடி விட்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"ஐஷு......ப்ளீஸ்! டென்ஷன் ஆக்காத; இப்ப எல்லாம் வேதாளம் மாதிரி எங்கயும் தொங்கிட்டு இருக்கக் கூடாது. உள்ள போ.... அப்புறம் பேசிக்கலாம்!" என்று சொன்னவன் சட்டையை பற்றிக் கொண்டு,

"என்னடா அப்புறம் பேசுறது.... நானும் பார்க்குறேன்! ஓவரா போயிட்டு இருக்க. ஐஷுவாம்ல.....ஐஷூ; இப்படி கடனேன்னு பேசுறதுக்கு நீ என் கிட்ட பேசாமலேயே இருக்கலாம். போடா! ஏதோ கோபப்படுற உன்னை கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணலாம்ன்னு நினைச்சா எகிறி குதிச்சுக்கிட்டு இருக்க.....முதல்ல போய் பத்மாசனத்தில உட்கார்ந்து உன் ஸ்டெரஸை விரட்டி விடு. அப்புறம் பேசுவோம்!" என்று சொன்னவள் காதைப் பிடித்து இழுத்தவன் அவள் தலையில் குட்டினான்.

"எனக்கு நீ க்ளாஸ் எடுக்குறியா..... எங்க கதை ஆரம்பிச்சதோ அங்க கொண்டு போய் மறுபடி நிப்பாட்டிட்டு க்ளாஸ் எடுக்குறியா...... உன்னை எனக்கு அவ்வளவு பிடிச்சிருந்தும் உன்னை அக்செப்ட் பண்ணிக்க நான்  தயங்கினது உன் ஸ்டேட்டஸை பார்த்து மிரண்டு போய் தான்டீ; இப்போ கிட்ட தட்ட எல்லாம் முழுகப் போகுதுன்னு சொல்றாங்க. உன்னைக் குடுத்து என்னைக் காப்பாத்துறியாக்கும்..... வேண்டாம்டா கண்மணி, ப்ளீஸ் என்னை மேல மேல நன்றிக் கடன் பட வைக்காத. அது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்ல. நம்மளோட அழகான காதலை பணம்ங்கிற ஒரு ஆஸ்பெக்ட் உள்ள புகுந்து காம்பிளிகேட் பண்ண வேண்டாம் பேபி!" என்று சொல்லி அவளை அணைக்க வந்தவனை, "அங்கயே நில்லு; கிட்ட வராத!" என்று தடுத்தவள், அவன் கடுப்பில் உச்சுக் கொட்டவும்

"மிஸ்டர் மித்ரன் இப்போ என்ன சொன்னீங்க? என்னைக் குடுத்து உங்களை காப்பாத்துறேனா......
ம்ஹூம்; யூ ஆர் அப்சளியூட்லி ராங்! நம்ம கிட்ட இருக்கிறதை ஷேர் பண்ணி நம்ம எல்லார் ப்ராப்ளமையும் சால்வ் பண்றேன். இப்படி வேணும்னா சொல்லலாம்! இங்க பாரு மித்து..... உனக்கு வேணும்னா இந்த ப்ராப்பர்ட்டி எல்லாம் ஜஸ்ட் ஒரு பில்டிங்கா  இருக்கலாம். ஆனா ஆன்ட்டி, நேத்துவுக்கெல்லாம் அப்படி இல்லப்பா. அர்த்தராத்திரியில கையை பிசைஞ்சுட்டு மேட்டர் கேட்டதுல இருந்து என்னால தூங்க முடியலன்னு சொல்றான்னா அப்போ கூடவா அவனோட பாண்டிங் உனக்கு புரியலன்னு சொல்ற..... அவனுக்கு, ஆன்ட்டிக்கு, எனக்கு, மாமா, லோட்டஸ் எல்லாருக்கும் கண்டிப்பா நம்ம ப்ராபர்ட்டி வேணும் மித்து! நீ கொஞ்சம் இறங்கி வந்தா எல்லாரும் ஹாப்பியா இருக்கலாம். ப்ளீஸ் கன்ஸிடர் பாவ்வ்வ்வா!" என்று சொல்லி அவன் கழுத்தை கட்டிக் கொண்டவளை கன்னத்தில் முத்தமிட்டவன்,

"எனக்கு மூணு கண்டிஷன்ஸ் இருக்கு. அதுக்கு ஓகேன்னா உங்க ப்ளானுக்கு நான் ஓகே சொல்றேன்!" என்றான் மித்ரன் தீர்மானமாக.

"இங்க பாருடா.....இப்ப கூட நம்ம ப்ளான்னு ஒத்துக்க மாட்ட...  உன் கண்டிஷன்கள் பட்டியலை கொஞ்சம் சொல்றியா, கேப்போம்! பேபி எங்கம்மா போற.....கேர்புல் மிட்டு" என்று அவள் மேல் ஏறி இறங்கி விளையாடி போரடித்து இப்போது வீட்டிற்குள் செல்லும் மிட்டுவை பார்த்து சொன்னவளிடம்,

"பிள்ளை கரெக்டா உன் ரூமுக்கு போயிடுவான். நீ பேச்சை டைவர்ட் பண்ணாத. பர்ஸ்ட் ஒன் என்னை புவனேஸ்வர் கன்சர்ன்ஸ் எதிலயும் எந்த போஸ்டிங்கும் குடுத்து உட்கார வைக்க கூடாது. எனக்கு பிஸினஸ்னா என்னன்னே தெரியாது. இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை..... நீயும், அருள்மொழி ஸாரும் சார்ஜ் எடுத்துக்குறதா இருந்தா மேல பேசுவோம்!" என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவனை பார்த்து சிரிப்பு வந்தது ஐஸ்வர்யாவுக்கு.

"எங்கடீ ஓடுற...... ஆனா நீ ரொம்ப விவரம், முத ஆளா எஸ்கேப் ஆகி உன் யோகா க்ளாஸ், அதுக்கப்புறம் ஏதாவது ஒரு ஹாஸ்பிட்டல்ன்னு செட்டில் ஆகிட்டு சைக்கிள்லயே ரவுண்ட் அடிச்சுட்டு இருக்கணும்ன்னு நினைக்கிற பார்த்தியா...... சரி ஓகே அக்செப்ட்டட்! இரண்டாவது கண்டிஷன் என்ன?" என்று கேட்டவளிடம்,

"இன்னும் 30 நாளுக்குள்ள நீ மிஸஸ் சிவமித்ரன் ஆகியிருக்கணும்!" என்று அவன் சொன்னவுடன் ஐஸ்வர்யா ஸ்ரீ சந்தோஷத்தில் குதித்தாள்.

"கீழே விழுந்துடாத வாட்டர்பெட்; தரை உடைஞ்சிடப் போகுது!" என்று சொன்னவனிடம்,

"பேட் ஜோக்! பெட்டரா ஏதாவது ட்ரை பண்ணு! ஆமா நீ எப்ப மேல் சாவனிஸ்ட் ஆன? அதென்ன நான் மிஸஸ் மித்ரன் ஆகுறது.....நீ மிஸ்டர் ஐஸ்வர்யா ஸ்ரீ ஆக மாட்டியா... ஆனாலும் இந்த கண்டிஷன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பாவா!" என்றவளை அணைத்துக் கொண்டு,

"பெமினிஸம் பேசுற நேரமா இது...... நான் உன் பொண்டாட்டியா வேணும்னாலும் ஆகிக்குறேன். என்னை கல்யாணம் பண்ணிக்க வரு பேபி! எப்படியும் ப்ராப்பர்டீஸை செட் ரைட் பண்றதுக்கு முன்னாடி நம்ம கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கணும்!" என்று சொன்னவனை லேசாக சொறிந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"என்னம்மா சொல்லணும்? இந்த கண்டிஷனுக்கு ஏதாவது சப் டிவிஷன்  போடப் போறியா?" என்று புருவம் தூக்கியவனிடம்,

"கல்யாணம் திருப்பூர்ல....." என்று கேட்ட படி தயங்கி நின்றவளை பார்த்து புன்னகைத்தவன்,

"நீ திருப்பூர்ல நடத்துவியோ..... ஸ்பெஷலா ஒரு ராக்கெட் செஞ்சு என்னை ஸ்பேஸ்க்கு கூட்டிட்டு போவியோ..... இல்ல கடலுக்கு அடியில வருவியோ அது உன் இஷ்டம். ஆனா எனக்கு 30 டேஸ் டைமுக்குள்ள மேரேஜ் வேணும். தட்ஸ் ஆல்!" என்றவனை பார்த்து இரண்டாவது நிபந்தனைக்கும் சம்மதம் தெரிவித்தாள் வரு பேபி.

"மூணாவது கண்டிஷனை சொல்லுங்க மாஸ்டர்ஜி!" என்று கேட்டவளிடம்,

"யூஎஸ்ல இருக்கிற உன் வீட்டைத் தவிர வேற எந்த ப்ராப்பர்ட்டியை வேணும்னாலும் தூக்கி குடுத்துக்கோ. எனக்கு திருப்பூரோடவோ, திருப்பூர்ல வீட்டோடவோ ஒரு பாண்டிங்கும் இல்ல. ஆனா சோட்டு மாதிரி தானே நீயும்........ என் தம்பிக்காக அம்மாவுக்காக யோசிக்கும் போது லிஸ்ட்ல என் பொண்டாட்டியையும் விட்டுடக் கூடாதுல்ல...... ஸோ உங்க வீடு எங்க மாமனார், மாமியார் நினைவா அங்க பத்திரமா இருக்கட்டும். நம்ம ஹனிமூனுக்கு யூஎஸ் தான்  போகப் போறோம். அப்போ உங்க வீட்டுக்கு போய் ஸ்டே பண்ணப் போறோம். ஓகே தானே? ஏ..ஏய்......கீழே விழுந்துடுவோம் டீ..... அடி பட்டுடாம!" என்று அவன் மேலே மொத்தமாக தாவியவளை பத்திரமாக பிடித்துக் கொண்டு தானும்  விழாமல் தப்பித்து கால்களை நன்றாக அழுத்தி ஊன்றி நின்றான் மித்ரன்.

"மாமாவுக்கும், லோட்டஸுக்கும் நம்ம கூடவே கல்யாணம் நடக்கணும்ன்னு அவங்களை மிரட்டிப் பார்க்கலாமா பாவா?" என்று கேட்டவளை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு,

"நான் இன்னிக்கு காலையில தான் அருள்மொழி ஸார் கிட்ட இதே மிரட்டலை கொஞ்சம் மாத்தி பேசிப் பார்த்தேன். பட் நோ யூஸ் செல்லம். அவர் லைஃப அவர் பார்த்துக்குவாராம். மங்கை அம்மாவுக்கு தேவைப்படுற ஸ்பேஸை கொடுப்பாராம். அவ ஓகே சொல்ற வரைக்கும் எவ்வளவு நாள் வேணும்னா வெயிட் பண்ணுவேன்டா மித்ரா, 52 வயசு முடிஞ்சுடுச்சு.... இன்னும் 8 வருஷம் கழிச்சு மேரேஜ் பண்ணிக்கிட்டாலும் ஸ்ட்ரைட்டா 60 ஆவது கல்யாணம் தான்ங்கிறாரு. வாட் அ மேன் ஹி இஸ்! அவரளவுக்கு எல்லாம் நமக்கு பொறுமை கிடையாதுப்பா! அதிலயும் என் பனீர் ஜாமுன் இப்படி பக்கத்தில வந்து உரசிட்டு நிக்கும் போது.....ம்ஹூம்! பேபி இன்னிக்கும் அவுட்ஹவுஸ்ல தூங்கப் போகலாமா...... கண்மணி பாட்டோட?" என்று கேட்ட படி தன் அணைப்பை இறுக்கியவனிடம்,

"ஆளை விட்டுடு சாமி; நீ கடிச்சு கடிச்சு விளையாடுறதுக்கு நான் ஆள் கிடையாது. மித்து வாயேன். அப்படியே ஒரு வாக் போயிட்டு வரலாம்!" என்று அழைத்தவளிடம் குறுஞ்சிரிப்புடன்,

"இரும்மா! உள்ள போய் பர்ஸை வச்சுட்டு வந்துடுறேன்! அதுக்கப்புறம் எவ்வளவு நேரம் வேணும்னாலும் வாக்கிங் போகலாம்!" என்று சொன்னவனை கேவலமான ஒரு முறைப்புடன் வெறித்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"என்ன பேபி..... ஆணியே புடுங்க வேண்டாம். உள்ள போய் படுப்போம். அது தானே இப்போ உன் டயலாக்?" என்று கேட்ட படி சிரித்தவனிடம்,

"நீங்க உள்ள போய் படுங்க மிஸ்டர் மித்ரன். நான் அப்படியே வெளியே காத்து வாங்கிட்டு.....வந்த புதுசுல இருந்த மாதிரி கிடையாது. இப்போ ஏரியாவுல பாதி கடைக்கார அண்ணா நம்ம ப்ரெண்ட்ஸ் தான். அதனால உன் பர்ஸ் எல்லாம் எனக்கு தேவைப்படாது!" என்று சொன்னவளை அணைத்துக் கொண்டு,

"வா பேபி மித்து ரொம்ப ஹாப்பியா இருக்கேன். இன்னிக்கி நானும் உன் கூட சேர்ந்து பானிபூரி ஷேர் பண்ணிக்கிறேன், பட் உயிருக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே......?" என்று கேட்டவனிடம் புன்னகையுடன்

"நீ எல்லாம் மலைமுழுங்கிடா; சுனாமியே வந்தாலும் உன்னையெல்லாம் சுருட்டிட்டு போக முடியாது. ஆப்டர்ஆல் ஒரு பானிபூரி....அது என்ன செய்ய போகுது! ஆனா வர வர உனக்கு சேட்டை அதிகமாயிட்டே வருதுப்பா!" என்று புகார் படித்தவளிடம்,

"வானரத்தோட சேர்ந்தா வால் முளைக்கத் தானே செய்யும்....!" என்று சொல்லி விட்டு சிரிப்புடன் முன்னால் ஓடிக் கொண்டு இருந்தான் மித்ரன். அவனைத் துரத்திக் கொண்டு அவன் பின்னால் சிரமப்பட்டு ஓடிக் கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

மித்ரனும், ஐஸ்வர்யாவும் சிறிய அளவிலான ரோஜா மாலைகளோடு மணமேடையில் அமர்ந்திருந்தனர். அருள்மொழி திருமணத்திற்கு  வந்திருந்தவர்களை வரவேற்று பேசினார். பின்னர் மணமக்களை உறுதி மொழி எடுத்துக் கொள்ள சொன்னார். தன் தாய், தம்பி, மங்கை அம்மா, தன் மனைவியின் தோழி,
தனக்கு நல்வாழ்வு அளித்த அருள்மொழி, தன்னுடைய குரு ராஜசேகர் அனைவரின் முன்பாக சிவமித்ரன் ஐஸ்வர்யா ஸ்ரீயை மனைவியாக ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தான். ஐஸ்வர்யாவும் அவ்வாறு உறுதிமொழி கூறி அவன் தாரமாக சம்மதம் சொல்ல உற்றார், உறவினர்கள், தேவர்கள், மூவர்கள் வாழ்த்துகள் மற்றும் ஆசிகளுடன் தன் மனதிற்கினியவளுக்கு மங்கல நாண் சூட்டி அந்த வஞ்சியின் மனதில் தஞ்சம் கொண்டான் சிவ மித்ரன்.

"கங்கிராட்ஸ்டா புருஷா! ஐ'ம் ஸோ ஹாப்பி" என்று கை குலுக்கியவளை, "மீ டூ டா பொண்டாட்டி!" என்று சொல்லி அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான் மித்ரன். சந்திரதாரா, நேத்ரன், அலர்மேல் மங்கை, அருள்மொழி, நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் வாழ்த்துகள் கூறிய படி இருக்க அவர்களது திருமணம் எளிமையாக, இனிமையான முறையில் நிறைவுற்றிருந்தது. 

வஞ்சி மனம் தஞ்சம் கொண்டான்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro