💖 வஞ்சி மனம் 25
நேத்ரன் தன் அண்ணன் தன்னிடம் கேட்டபடி கெட்ட செய்தியை முதலில் சொல்வதற்கு சற்று தயங்கியபடி நின்று கொண்டு இருக்க ஐஸ்வர்யா ஸ்ரீ அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல், "டேய் எதுக்கு இப்படி வாயை சைலண்ட் மோடுல போட்டிருக்க.... என்ன விஷயம்னு சொல்லித் தொலையேன்!" என்றாள் எரிச்சலுடன்.
மித்ரன் புன்னகையுடன் அவளிடம், "வரு காம் டவுன்..... சோட்டு சொல்றதுக்கு கஷ்டமா இருக்குன்னா விட்டுடுமா..... அப்புறம் பேசிக்கலாம். போய் தூங்குவோம். வா!" என்று சொன்னவனை முறைத்த ஐஸ்வர்யா ஸ்ரீ,
"எங்கடா கிளம்புவீங்க ரெண்டு பேரும்..... ஒழுங்கா விஷயம் என்னன்னு அவனை சொல்ல சொல்லு. இல்லன்னா சஸ்பென்ஸோட ராத்திரி பூராவும் யோசிச்சுட்டு இருக்கணும்!" என்று சொன்னவளின் அருகே வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் நேத்ரன்.
"நேத்து என்னடா..... கொஞ்சம் பயமாயிருக்கு. எதுவும் சீரியஸ் மேட்டரா?" என்று கேட்டவளிடம் புன்னகையுடன்,
"கொஞ்சம் அப்படித்தான் ஐஷுமா! புவனேஸ்வர் கன்சர்ன்ஸ்ன்னு ஒரு தொழில் சாம்ராஜ்யமும், புவனேஸ்வர் டவர்ஸ்ங்கிற கட்டிடமும் இனிமே இருக்கப் போறதில்ல. இன்னிக்கி காலையில தான் மிஸ்டர் கங்காதர் லாயர்ஸ்ட்ட ஐபி நோட்டீஸ் சப்மிட் பண்றதுக்கு ப்ரொசீஜர்ஸ் கேட்டிருக்காராம். லாயர் போன் பண்ணி விஷயத்தை சொன்னாரு. என்னல்லாம் ஆட்டம் போட்டாங்க. இப்போ நினைச்சா சிரிப்பு தான் வருது!" என்று சொன்னவன் முகத்தில் இயலாமை உணர்வு தான் அதிகமாக தெரிந்தது.
மித்ரனும் சற்று உடைந்து போய் விட்டான். தங்கள் தந்தையின் உழைப்பு இவ்வளவு நாளாக சுரண்டப்பட்டதும் இல்லாமல் இப்போது அனைத்தையும் இழந்து விடும் நிலை உள்ளது
என்பது ஆற்ற முடியாத வலி அல்லவா?
"இப்போ என்ன பண்றது சோட்டு..... ஏதோ குட் நியூஸ்ன்னு சொன்னியே.... அது என்ன?" என்று கேட்ட தன் அண்ணனிடம்,
"இப்போ என்ன பண்றது....
நல்ல கேள்வி தான் சிவாண்ணா.... ஆனா பதில் தான் தெரியல. "குந்தி தின்றால் குன்றும் மாளும்" ன்னு ஒரு பழமொழி கேள்விப்பட்டுருக்கீங்களா... அத மாதிரி பணம் இருக்கிற வரைக்கும் மூணு பேரும் நல்லா உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இப்போ ஓடப் போறாங்க. நம்ம சொத்துக்களையும், தொழிலையும் காப்பாத்திக்க நமக்கு இப்போ ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. நாம தான் சொத்துக்கு உரிமையுள்ளவங்கன்னு நிருபிச்சுட்டு நம்ம பிஸினஸ் எம்பயர மீட்டுக்கலாம். பட் தொகை ரொம்ப ரொம்ப பெரிசு. அது தான் என்ன செய்றதுன்னு தெரியல!" என்று சொன்ன நேத்ரனிடம் ஒரு அழுத்தமான குரலுடன்,
"இது தான் நீ சொன்ன குட் நியூஸா? எந்த சோர்ஸை வச்சுட்டு அவ்வளவு பெரிய ப்ராப்பர்டீஸை காப்பாத்த சொல்ற.....ஐஸ்வர்யா ஸ்ரீ மேடம் உனக்கு அவ்வளவு சாலரி குடுக்குறாங்களா என்ன?" என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"நேத்து..... எனக்கு ப்ராப்பர்ட்டில மித்துவோட ஷேர் கிடைக்கணும்!" என்று சொன்னவளிடம் நேத்ரன் சிரிப்புடன்,
"ஐஷுமா! இன்னும் தூண்டிலே போடல. அதுக்குள்ள நடுத்துண்டு எனக்குத் தான்னு உட்கார கூடாதுடா செல்லம்! நீ வெளியே போய் விளையாடு போ!" என்று சொன்னவனை எரிப்பது போல் முறைத்தவள்,
"உங்க பிராபர்ட்டீஸோட டோட்டல் வேல்யூ என்னடா? இப்போ உன் லாயரை கன்சல்ட் பண்ணிட்டு என்கிட்ட சொல்ற!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ கட்டளையாக.
"ம்ப்ச்! வரு பேபி ப்ளீஸ்...... ஏதாவது தேவையில்லாத வேலை பார்த்து வைக்காத. எனக்கு கோபம் வரும்!" என்றான் மித்ரன் அவளிடம் எச்சரிக்கை விடுவது போல்.
"ம்க்கும்! உனக்கு அது எங்கிட்ட மட்டும் தானேடா நல்லா வரும்..... எங்க திருப்பூருக்கு கிளம்பி போய் உன் சித்தப்பாட்ட கோபப்படு. பார்ப்போம்! உங்கப்பாவோட சொத்துல உன்னோட ஷேர் எனக்கு வேணும். இந்த நேத்து பையன் யூஎஸ் போயிட்டு திரும்பி வர்ற வரைக்கும் நீ தான் பிஸினஸை கவனிச்சுக்கணும். ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் ஏதாவது ஹாஸ்பிடலுக்கு போ! இல்லன்னா உனக்குன்னு ஒரு க்ளினிக் வச்சுக்க. அதெல்லாம் உன் இஷ்டம். ஆனா கூடிய சீக்கிரம் நம்ம எல்லாரும் திருப்பூர்ல போய் செட்டில் ஆகப் போறோம். டேய் நேத்து வர்ஷினிட்ட பேசும் போது உன் வீட்டுக்கு பேயிங் கெஸ்டா வரட்டுமா ன்னு இப்பவே ஒரு பிட்டை போட்டு வை. ஏன்னா அங்கிருக்குற ப்ராபர்ட்டியையும் நம்ம யூஸ் பண்ண வேண்டிய அவசியம் வரலாம்! ஆன்ட்டி கிட்ட இதெல்லாம் பேசி அவங்களை டென்ஷன் பண்ணாதீங்க காய்ஸ். இனிமேலாவது ஒரு ப்ளசண்டான லைஃப் எல்லாருக்கும் கிடைக்கட்டும். ஒரு சின்ன ஆப்ளிகேஷன் நேத்து..... மாமாவும் நம்ம கூட அங்க இருக்க பெர்மிஷன் தருவியா? மித்து ஓகே ன்னு தான் சொல்வான். ஆனா உன் ஒப்பீனியனும் எனக்கு முக்கியம்!" என்று சொன்ன ஐஸ்வர்யாவின் கைகளை தன் கண்களில் வைத்துக் கொண்டு சற்று குனிந்தபடி நின்று அழுதே விட்டான் நேத்ரன்.
"அடேய் எதுக்கு அழுவுறன்னு சொல்லிட்டு அழுடா! வர்ஷினையை கரெக்ட் பண்ணிட்டாலும் கல்யாணம் பண்ணிக்க இன்னும் ரெண்டு வருஷம் ஆகும். அதுக்கு தான் அழுவுறயா?" என்று கேட்டவள் தலையில் பலமாக குட்டினான் நேத்ரன்.
"ஐயயோ.... மித்து
அழுதுட்டு இருக்கும் போதே என்னைய நேத்து அடிச்சுட்டான்டா; நீயும் ஒண்ணும் கேக்க மாட்டேங்குற.....!" என்று வராத கண்ணீரை பத்து முறை துடைத்தவளிடம்,
"ஆக்ட் பண்ணாத ஐஸ்வர்யா ஸ்ரீ...... ரெண்டு பேரும் வெளியே போங்க! என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க!" என்று அடிக்குரலில் உறுமினான் மித்ரன்.
"வாடா நேத்து போகலாம்! நீ உன் ரூம்ல படுத்துக்கோ. நான் ஆன்ட்டி கூட படுத்துக்கறேன்!" என்று சொல்லி விட்டு நேத்ரனுடன் சேர்ந்து வெளியே வந்தாள் ஐஸ்வர்யா.
"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஐஷுமா! நீ செய்யப் போறது சாதாரண விஷயம் இல்ல. அம்மாவுக்கும், எனக்கும் லைஃப திருப்பி தரப் போற. நாங்க சந்தோஷமா வாழ்ந்த வாழ்க்கையோட நினைவுகள் எல்லாம் அங்கே தான் இருக்கு. சிவாண்ணாக்கு கூட ரொம்ப ஃபீல் ஆகுதான்னு தெரியல. பட் நியூஸை கேட்டதுல இருந்து எவ்வளவு முயற்சி பண்ணியும் எனக்கு தூக்கமே வரல. ஆனா எதுக்குடீ அருள் ஸாரை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்கு எங்கிட்ட பெர்மிஷன் கேட்ட..... இனிமேல் வீடு, ஆஃபிஸ் எல்லாம் உன்னோடதுமா! நீ நினைச்சா தான் நானே அங்க இருக்க முடியும். பட் உங்கிட்ட வாங்கி நம்மளோடதை காப்பாத்திக்க போறோம்ன்னு நினைச்சா கொஞ்சம் கஷ்டமா இருக்கு ஐஷுமா! சிவாண்ணா என்ன நினைச்சுட்டு இருப்பாங்க? வர்ஷினையை பத்தி நம்ம பேசினது எதையும் சீரியஸா எடுத்துக்க மாட்டாங்கல்ல.....!" என்று கேட்டவனை ஏற இறங்கப் பார்த்தவள்,
"உனக்கு உன் பிரச்சனை..... செய்ங்கடா! ஆளாளுக்கு செய்ங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் என் பேர்ல இருக்கிற ப்ராபர்ட்டீஸ் ஒரு பினான்சியல் சப்போர்ட்டுக்காக தான்டா நேத்து. ஸோ அதை வேல்யூ பண்ணிட்டு நம்ம ப்ராபர்ட்டியை வாங்குறதுல எனக்கு ஒரு வருத்தமும் இல்ல. உங்கண்ணனை கல்யாணம் பண்ணிக்க ஆன்ட்டிக்கும், உனக்கும் நான் குடுக்குற கிப்ட்ன்னு நினைச்சுக்கோயேன். இவ்வளவு நல்லா என்னைப் பார்த்துக்கிற என் பேமிலி மெம்பர்ஸ் ஒரு பிரச்சனைல தவிக்குறாங்கன்னா அவங்களுக்கு ஹெல்ப் பண்ணாம பணத்தை எல்லாம் அடுக்கி வச்சு கட்டிப் பிடிச்சுட்டு நின்னுட்டு இருக்க முடியுமா? நிம்மதியா போய் தூங்கு போ! எல்லாத்தையும் நம்ம ப்ராப்பரா கைடென்ஸ் வாங்கிட்டு பண்ணிக்கலாம்! நம்ம மிட்டு பேபியையும் மறந்துடாதடா நேத்து!" என்று கண்களை சுருக்கி கெஞ்சியவளை பார்த்து சிரித்தவன்,
"மிட்டுவை, ஸ்குரிள் பாக்ஸை.....உன் ரூமுக்குள்ள இருக்கிற செடிகளை எல்லாத்தையும் பத்திரமா எடுத்துட்டு போய் நம்ம வீட்ல செட் பண்ணிடலாம். நானே என்னோட சூப்பர்விஷன்ல அதெல்லாம் செஞ்சுடுடறேன். ஹாப்பி தானே?" என்று கேட்டவனிடம் ஹைபைவ் கொடுத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
காலையில் எழுந்தவுடன் வீட்டிற்கு கிளம்பியவர்கள் அங்கு சென்று அருள்மொழியிடம் விஷயத்தை தெரிவித்தனர்.
"அந்த எமக்குஞ்சுக்கெல்லாம் இது காணாது. இன்னும் பட்டு ரோட்ல நிக்கணும். தண்ட கருமாந்திரம்!" என்று முகத்தை நொடித்தவரை, "மங்கை, மங்கா!" என்று இரு வேறு குரல்கள் அதட்டின.
அருள்மொழி சற்று தயங்கியபடி ஐஸ்வர்யாவிடம், "ஐசு ப்ளீஸ்டா......... அங்க வீட்டை மட்டும் குடுக்க வேண்டாம்டா..... மத்தது எல்லாம் குடுத்துடலாம். நீயும், மித்ரனும் சேர்ந்து போய் சைன் பண்ணினா பேங்க்ல நிறைய டெபாசிட் இருக்கு. ஜ்வல்ஸ் இருக்கு. அதைக் கூட நம்ம யூஸ் பண்ணிக்கலாம்!" என்று சொன்ன அருள் மொழியிடம் சந்தோஷமாக தலையசைத்து,
"ஏன் மாமா இத முதல்லயே சொல்லல....ஜ்வல்ஸ் தேவையான அளவுக்கு இருக்குமா? மித்து இன்னிக்கு ஒன் ஹவர் பெர்மிஷன் போடு. நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வந்துடலாம்!" என்று சொன்னவளிடம்
"நான் வரல ஐஸ்வர்யா ஸ்ரீ மேடம். நீங்க சொல்றதை எல்லாம் கேக்கணும்னா உங்க கூட கல்யாணம் வேணுமா வேண்டாமான்னு நான் ரீகன்சிடர் பண்ண வேண்டியதா இருக்கும். ஐ'ம் ஸாரி!" என்று சொல்லி விட்டு மித்ரன் செல்ல சந்திரதாரா புன்னகைத்தார்.
"இப்படி தான் ஏதாவது நடக்கும்னு நினைச்சேன் ஐஷு, அவனோடதை காப்பாத்தணும்னு நீ பேசிட்டு இருக்க. உன்னோடத காப்பாத்தணும்ன்னு அவன் கோபப்பட்டுட்டு போறான். யார் ஜெயிக்கிறீங்கன்னு பார்ப்போம்! கஷ்டமா இருக்கும்னா விட்டுடு கண்ணா, உங்க மாமா எனக்குள்ள நிறைஞ்சு இருக்காங்க. வீடு, சொத்தை எல்லாம் காப்பாத்தினா தான் நாம சந்தோஷமா இருக்க முடியுமா என்ன?" என்று கேட்ட தன் வருங்கால மாமியாரிடம்,
"ச்சூ..... ஆன்ட்டி உங்க மூணு பேரையும் சமாளிக்குறதுக்குள்ள எனக்கு மூளை டையர்டாகிடுது. உங்க பையன் பின்னால ஓடி ஓடி உடம்பு டையர்டாகிடுது. என்ன ஓட்டம் ஓடுறான்..... ஆனா சபதம் எடுத்துட்டா அது சரஸ்வதி சபதம் கிடையாது...... ஐஸ்வர்யா ஸ்ரீ சபதம் தான். சிவமித்ரன் புவனேஸ்வர் ஐ'ம் கமிங்....லோட்டஸ் பொண்ணு ஒரு பெரிய குண்டான்ல ஜுஸ் கலக்கி வைடா செல்லம்..... எவ்வளவு எனர்ஜியை பேசி பேசி செலவழிக்கணுமோ தெரியல..... கடவுளே என்னடா இது ஐஸ்வர்யா ஸ்ரீக்கு வந்த சோதனை?" என்று நொந்தபடி மித்ரனை தேடிப் போனாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro