Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 24

கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கையில் நிற்பதற்கே சிரமப்பட்டாலும், நீர்த் திவலைகளை கையில் அள்ளி விளையாடிக் கொண்டு இருந்த தன் தம்பியையும், காதலியையும் சிறு சிரிப்புடன் தன் அன்னையின் வீல் சேர் அருகே ஒரு சேரில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தான் மித்ரன்.

சந்திரதாராவும், மித்ரனும் ரெஸ்டாரென்ட்டில் அமர்ந்திருந்தனர். தன் தாயின் இரவு உணவு மற்றும் மாத்திரைகளை அவருக்கு கொடுத்த மித்ரன் முகத்தில் புன்னகையுடன் சந்திராவை ஏறிட்டான்.

"என்ன சிவாம்மா! அம்மாவை புதுசா பார்க்கிற மாதிரி பார்க்குற......" என்று கேட்ட தன் தாயிடம்,

"ம்மா..... நான் ரொம்ப மாறிட்டேனாம். முதல்ல எல்லாம் ஒரு கேள்வி கேட்டா ஒரு பதில் தான் சொல்வீங்க. இப்போ ரொம்ப ஆக்டிவா, துறுதுறுன்னு ஒரு ஃப்ரெஷ் எனர்ஜியோட இருக்கீங்கன்னு என் கொலீக்ஸ், பேஷண்ட்ஸ், ஏன் ராஜசேகர் ஸார் கூட சொன்னாங்கமா..... நீங்களும், சோட்டுவும் என் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் தான் ஒரு நிறைவு கிடைச்சிருக்கு. அதோ பீச்ல விளையாடிட்டு இருக்குது பாருங்க ஒரு லூசு.... அவ தான் என் அம்மாவாகவும் இருக்கப் போறான்னு நினைச்சேன். ஆனா இப்போ எல்லாம் ரொம்ப சரியா இருக்கும்மா. சந்தோஷமா இருக்கு!" என்று சொன்ன தன் மகனிடம்,

"ஐஷு ரொம்ப நல்ல பொண்ணுடா சிவா; அவளோட குழந்தைத்தனத்தை இன்னும் தொலைச்சிடாம இருக்கா. அது தான் அவளோட ஸ்பெஷாலிட்டியே. நீ கூட அப்படி இருக்க மாட்டேங்குற. அவளை மாதிரி இருந்தா இன்னும் சந்தோஷமா இருப்ப!" என்று சொன்ன தன் அன்னையிடம்,

"மணி பத்தாகப் போகுது! இந்த நேரத்தில பீச்சுக்கு போய் தண்ணிக்குள்ள வேற ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கா. இவளை மாதிரி நான் ஆகணுமா..... சத்தியமா முடியாது. உங்க மருமக கடவுள் ரொம்ப மண்டை சூடாகி குழம்பி போய் உட்கார்ந்துட்டு இருந்தப்ப மேனுபாக்சர் பண்ண ஒரு ப்ராடெக்ட்..... ஆனா இப்படி ஆட்டம் போடுறவ தான் பிரச்சனை ஏதாவது வந்தா அசால்டா ஊதி தள்ளிட்டு போயிடுறா. அதுவும் ரொம்ப ஆச்சரியமா இருக்கு!" என்று சொன்னவனிடம் புன்னகையுடன்,

"உன் பியான்சியை பத்தி ஆராய்ச்சி பண்ற வேலைய என்னை ரூம்ல விட்டுட்டு வந்து செஞ்சுக்குறியா..... இந்த கடல் காத்துக்கு சுகமா தூக்கம் தான் வருது. போய் படுக்கட்டுமா ராஜா?" என்று கேட்ட சந்திரதாராவிடம்,

"வாங்கம்மா போகலாம்! ஆனா ஷ்யூரா தனியா படுத்துப்பீங்களாம்மா..... மொபைலை பக்கத்தில வச்சுட்டு போறேன்! இண்டர்காமும் இருக்கு. ஏதாவது தேவைன்னா உடனே என்னை கூப்பிடணும். சரியாம்மா?" என்று கேட்ட மித்ரனின் கையைப் பற்றிக் கொண்டு,

"அங்க திருப்பூர்ல இருக்கும் போது நேத்ரா இப்படித்தான் பதறுவான். இங்க வந்தவுடனே நீ ஆரம்பிச்சுட்ட...... ரெண்டு பேரும் ஏன்டா இப்படி அம்மா கோண்டா இருக்கீங்க. அப்பாவும் இந்நேரம் நம்ம கூட இருந்திருந்தா நல்லா இருக்கும்ன்னு அடிக்கடி தோணுதுப்பா!" என்று சொல்லி கண் கலங்கியவரிடம் தோள் பற்றி,

"ம்மா.....ப்ளீஸ்; வேண்டாம்! அப்பாவை நினைக்கும் போதெல்லாம் எனக்கு சித்தப்பா மேலயும், அவங்க பேமிலி மேலயும் ரொம்ப கோபம் வருது. தப்புன்னு தெரிஞ்சும் அதை செய்றவங்க கூட ரொம்ப நல்லா தானே இருக்காங்க. இதெல்லாம் நினைக்கும் போது ஒரு இயலாமை உணர்வு தான் வருது. ஆனா நானும், சோட்டுவும் சித்தப்பாவை தண்டிச்சுட்டு எங்க வாழ்க்கைய பாழாக்கிக்க விரும்பல. சோட்டு சொல்ற மாதிரி சித்தப்பாவை கொல்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகிடும்மா.....? முயற்சி செஞ்சா முடியாம எல்லாம் இல்ல. ஆனா அவரோட உயிர் எனக்கு தேவையில்ல. அப்பாவை, உங்களை, நம்ம சோட்டுவை வலிக்க வச்சதுக்கு பதில் வலியை அவர் உணரணும். அதுவும் நடந்ததுன்னா தர்மம் இருக்குன்னு நம்பிட்டு இருக்கிற என்னோட நம்பிக்கை பலிக்கும்!" என்று சொன்ன மித்ரனை தன் அருகே அழைத்து அமர்த்தி கொண்டார் சந்திரதாரா.

அவன் சிகையை கோதி விட்டவாறு, "வேண்டாம் கண்ணா...... நம்ம எண்ணங்களுக்கு மிகப் பெரிய சக்தி இருக்கு. இந்த எண்ணத்தோட நீ இருந்தன்னா அது அவங்களை ஏதாவது ஒரு விதத்துல பாதிக்கும். நம்ம ப்ராபர்ட்டியையும், பிஸினஸையும் எடுத்துக்கிட்டாங்க. கேட்டு வாங்கினாலும், கேக்காம வாங்கினாலும் நம்ம பொருளை அவங்க வாங்கியிருக்காங்க. நம்ம குடுத்திருக்கோம். எப்பவும் குடுக்கறதுக்கு தான் நல்ல தாராள மனசு வேணும் சிவாம்மா! நீ அந்த மாதிரி நினைச்சுக்கோயேன்.....!" என்று சொன்ன தன் அம்மாவை ஒரு பார்வை பார்த்தவன்,

"சரிம்மா......நான் தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேசல. நீங்க படுத்துக்கோங்க. காலையில 6 மணிக்கு நான் வந்துடுறேன்! ரெப்ஃரெஷ் ஆகிட்டு தெரபி பண்ணலாம்!" என்று சொன்ன மகனிடம் இரவு வாழ்த்து தெரிவித்து விட்டு படுத்துக் கொண்டார் சந்திரதாரா.

தன் அன்னைக்கு போர்த்தி விட்டு, விளக்குகளை அணைத்து மீண்டும் ஒரு முறை தேவை ஏற்பட்டால் அழைக்கும் படி தன் அன்னையிடம் கூறி விட்டு வெளியே வந்தான் சிவ மித்ரன்.

அரைமணி நேரம் கழித்து தன் தம்பியின் அறைக்கதவை தட்டியவன், அவனிடம் இருந்து எந்த சத்தமும் வராமல் போக கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். அவன் தம்பி டீவியில் கிரிக்கெட்டில் மும்முரமாக அமிழ்ந்திருந்தான்.

தன் சகோதரனை அறைக்குள் காணவும் ஆச்சரியத்துடன்,

"சிவாண்ணா.....இங்க எதுக்கு வந்தீங்க? ஐஷுமா ரூமுக்கு போங்க. அந்த லூசு டையர்டா இருக்குன்னு சொன்னா. அப்படியே படுத்து உறங்கிடப் போறா! போய் டிரஸ் எல்லாம் மாத்தி விட்டு.......!" என்று சொன்னவனை முறைத்து, "என்கிட்ட உதை வாங்கப் போற சோட்டு!" என்று பத்திரம் காட்டினான் மித்ரன்.

"ஸாரிண்ணா! ப்ளோவில வந்துடுச்சு. டிரஸ் மாத்திட்டாளான்னு செக் பண்ணிட்டு அங்கயே படுத்துக்கோங்க. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. ஒரு காதல்.....ச்சை; ஒரு கால் பண்ணணும்!" என்று சொன்ன தன் தம்பியிடம்,

"உன் வார்த்தையெல்லாம் இன்னிக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கே சோட்டு...... ஒரு மாதிரி நெர்வெஸா இருக்க போலிருக்கு. ஏன்டா?" என்று கேட்டான் மித்ரன்.

"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல சிவாண்ணா! ப்ளீஸ் கெஞ்சி கேக்குறேன். கிளம்புங்க!" என்று கைகூப்பியவனை பார்த்து சிரித்து விட்டு, "குட்நைட் சோட்டு.....ஸ்வீட் ட்ரீம்ஸ்!" என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான் தமையன்.

தன் அண்ணன் வெளியே கிளம்பியதும் கதவை உட்புறம் தாளிட்டு வந்த நேத்ரன் தன் தோழியிடம் கெஞ்சிக் கூத்தாடி எண் வாங்கிய அவள் தோழி அமிர்தவர்ஷினிக்கு அழைப்பு விடுத்தான்.

"ஹலோ ஹு இஸ் திஸ்?" என்று சற்று அலட்சியத்துடன் வந்த அவள் குரலுக்கு, "ஹாய் அமிர்தவர்ஷினி, ஐ'ம் நேத்ரன். ஐஷு'ஸ் ப்ரதர் இன் லா....கேன் யூ ரிமெம்பர் மீ?" என்று கேட்டவனிடம்,

"ஹாங்.....நியாபகம் இருக்கு பொய்க்கோழி.......நீ சொல்றதை எல்லாம் நான் எதுக்கு கேக்கணும்ன்னு அன்னிக்கு கேட்டீங்க..... இப்போ எதுக்கு திடீர்னு கால் பண்ணி இருக்கீங்க? ஐஷு எப்படி இருக்கா...... இன்னும் நாலு நாள்ல நான் கிளம்பறேன். ஒரு நாள் மீட் பண்ணலாமான்னு அவ கிட்ட கேக்கணும்!" என்றவளிடம்,

"மிஸ்.வர்ஷினி, அதைத் தான் நானும் உங்க கிட்ட கேக்கலாம்ன்னு நினைச்சேன். நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ணலாமா திருச்சியில..... அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி கேக்கணும்.... நீங்க ஐஷுமா க்ளாஸ் மேட்டா? ஒரே ஏஜ் க்ரூப்பா என்ன?" என்று விசாரித்தவனிடம்,

"என் ஏஜ் எல்லாம் உங்களுக்கு எதுக்கு ஸார்.... நம்ம ரெண்டு பேரும் எதுக்கு மீட் பண்ணணும்....? இதென்ன அன்அஃபீஷியல் ப்ளைண்ட் டேட்டிங்கா? ஐ'ம் நாட் தட் கைண்ட் ஆஃப் கேர்ள். சேஸ் சம் அதர் கேர்ள்ஸ் மிஸ்டர் நேத்ரன்!" என்று சற்று கோபப்பட்டவளிடம்,

"மிஸ் வர்ஷினி யூ ஹாவ் மிஸ் அண்டர்ஸ்டுட்...... நான் அந்த மாதிரி பார்க்குற பொண்ணுங்க கிட்ட எல்லாம் ப்ளர்ட் பண்ற டைப் கிடையாது. என்னோட மாஸ்டர்ஸ் நான் யூஎஸ்ல ப்ளான் பண்ணி இருக்கேன். அதுதான் அதைப் பத்தி உங்க கிட்ட கொஞ்சம் பேசலாம்ன்னு.....நினைச்சேன்!" என்று தயங்கிய குரலில் பேசியவனிடம்,

"எங்கிட்ட என்ன ஸார் பேசப் போறீங்க...... ஐஷுவை விட நான் ஒன் இயர் ஜுனியர்; அவ ஏற்கனவே உங்க விஷ்ஷை பத்தி எங்கிட்ட பேசிட்டா! அவளோட வீட்ல தான் நீங்க இருக்கப் போறீங்க...... நீங்க உங்க ப்ராசெஸ் எல்லாம் ஆரம்பிச்சப்புறம் நான் உங்க கூட ஜாயின் பண்ணிக்கறேன். டோண்ட் வொர்ரி மிஸ்டர் நேத்ரன்..... நீங்க யூஎஸ்ல இருக்கும் போது உங்களுக்கு எந்த ஹெல்ப் தேவைப்பட்டாலும் யூ கேன் கம் அண்ட் ஆஸ்க் மி! ஓகே!" என்றாள் அமிர்தவர்ஷினி.

பெரிதாக மூச்சு ஒன்றை வெளியிட்ட நேத்ரனிடம், "என்ன மிஸ்டர் நேத்ரன்...... இவ்வளவு பெரிய மூச்சுப்புயல் அடிக்குது.....என்னாச்சு?" என்று குழம்பிய படி கேட்டாள் அமிர்தவர்ஷினி.

"கொஞ்ச நாளா நீ என்னை விட மூத்தவளா இல்ல என் செட் ஏஜ் க்ரூப்பா இருப்பியோன்னு பயந்துட்டு இருந்தேன். இப்போ தான் ஃரிலீபா இருக்கு. நீ என்னை விட ஒரு வயசு சின்னப் பொண்ணு. நான் அங்க வர்றப்ப நீ எனக்கு எல்லா ஹெல்ப்பும் செஞ்சு தரப் போற. இது போதுமே.....
இப்போதைக்கு; இனிமேல் அப்பப்போ நிறைய பேச வேண்டியது வரலாம். என் நம்பரை சேவ் பண்ணிக்கோ வர்ஷினி. பை!" என்றான் நேத்ரன்.

"திருச்சி வருவீங்களா? வர மாட்டீங்களான்னு சொல்லிட்டு வைங்க!" என்று ஆவலுடன் கேட்ட குரலிடம் குறுஞ்சிரிப்புடன்,

"அமிர் ஐஷுவை தானே எதிர்பார்ப்பாங்க...... ஸோ உங்க கேள்வியை உங்க ப்ரெண்டு கிட்ட கேட்டுக்கங்க. பை வர்ஷினி!" என்று சொல்லி விட்டு வைத்து விட்டான் நேத்ரன்.

"நீ கேக்குற கேள்விக்கு எல்லாம் நான் பதில் சொல்லணும். நான் கேள்வி கேட்டா நீ பதில் சொல்ல மாட்டியாடா..... சரியான சிடுமூஞ்சி..... ஐஷுக்கு சோப் போட்டு நம்பர் வாங்கி போன் பண்ண தெரியுது. பட் ரொமான்டிக்கா பேசத் தெரிய மாட்டேங்குது. நான் சொல்ல மாட்டேன்! நீ தான் சொல்லணும். எப்போ சொல்றன்னு பார்க்குறேன்!" என்று தனியே புலம்பிக் கொண்டு குப்புற விழுந்து விட்டாள் அமிர்தவர்ஷினி.

ஐஸ்வர்யா ஸ்ரீயின் அறைக் கதவை மெதுவாக தட்டிய மித்ரனிடம், "உள்ள வாயேன்.... திறந்து தானே இருக்கு!" என்று எரிச்சல் பட்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"அப்ப்ப்ப்பா என் பனீர் ஜாமுனுக்கு என்ன இவ்வளவு கோபம்.....!" என்று கேட்ட படி வந்தமர்ந்து தன் மடிமேல் அவளை இருத்திக் கொண்டவன், எரிச்சலுடன் அவள் உடையை கவனித்து விட்டு,

"இன்னும் சேன்ஜ் பண்ணிக்கலையா நீ? கழுதை மாதிரி ஆட்டம் போட தெரியுதுல்ல.....ஈரமானா சேன்ஜ் பண்ணிட்டு உட்கார தெரியாதா? என்னடீ கண்ணை கசக்குற.....?" என்று கேட்டு முழித்தவனிடம்,

"நா உன் மேல கோபமா இருக்கேன்டா! எந்த கழுதை தண்ணியில ஆட்டம் போடுறதை நீ பார்த்த..... எப்ப பார்த்தாலும் ஒண்ணு திட்டிட்டு இரு.... இல்ல அட்வைஸ் பண்ணி சாவடி; இங்கயும் ஒருத்தன் நானும், நேத்துவும் லவ் பண்றோமான்னு கேட்டான் டா........  நீ என் கூட இருந்தா அவன் அப்படி கேட்டுருப்பானா? நேத்து தான் என் கிட்ட ப்ரெண்ட்லியா இருக்கான். ப்ளெக்சிபிளா இருக்கான். எனக்கு என்ன பிடிக்கும்ன்னு தெரிஞ்சுகிட்டு என்னை கரெக்டா கைட் பண்றான். ஆனா நீ என்னடான்னா என் லவ்வர்ன்னு தான் பேரு..... இதை செய்யாத, அதை செய்யாத, இப்படி இருக்காத, அப்படி இருக்காதன்னு ஒரு பெரிய ரூல் புக்கே வச்சிருக்க..... எனக்கு தண்ணியில விளையாட ரொம்ப புடிக்கும். ஜாலியா இருந்தது. விளையாடினேன்..... வாட் இஸ் தி பிக் டீல் இன் இட்?" என்று கேட்டவள் முகத்தை புன்னகையுடன் பார்த்தவன்,

"அங்கிள், ஆன்ட்டியை மிஸ் பண்ற...... இப்போ அது தானே உன் ப்ராப்ளம்!" என்று கேட்டவுடன் அவன் கழுத்தை கட்டிக் கொண்டு மௌனமாக கண்ணீர் வடித்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"என்னடா நீ......ம்ப்ச் அழாத பேபி; எனக்கு கஷ்டமா இருக்கு. வேண்டாம்மா!" என்று அவள் முதுகை வருடி ஆறுதல் படுத்தியவன்,

"கண்மணி உன் மூடை மாத்துற ஒரு சூப்பர் ஐயிட்டம் ஒண்ணு என் கிட்ட இருக்கு. உன் பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு நான் ஒண்ணுமே குடுக்கல. அந்த கிப்டா வச்சுக்கலாமே....... ஆனா நீ அழாம சமர்த்துப் பொண்ணா போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்தா தான் தருவேன்!" என்றான் மித்ரன் அவளிடம்.

விசும்பிக் கொண்டிருந்தவள் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு, "என்னது மித்து.....மிட்டு மாதிரி வேற ஏதாவது பெட்டா!" என்று கேட்டாள்.

"போதும்டா செல்லம்; வரிசையா பெட்ஸா வாங்கி குடுத்தா நீ என்னை வெளியே அனுப்பிட்டு அதுங்க கூட விளையாடுவ போலிருக்கு! இது ஒரு நல்ல கிப்ட். ஐ ஹோப் யூ வில் லைக் இட்......இரு வர்றேன்!" என்றவன் சென்று தன் பையில் இருந்த ட்ராக் ஷுட்டை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.

"ஃபுல்லா நனைஞ்சுடுச்சு மித்து, ஒரு பாதி குடுத்துட்டு சேன்ஜ் பண்ணுன்னு சொன்னா எப்படி....?" என்று கேட்டவளிடம் யோசியாமல் தன் டீ ஷர்ட்டை கழட்டி தந்தான் மித்ரன்.

வெற்றுடம்புடன் நின்று கொண்டு இருந்தவனிடம் சட்டையை பெற்றுக் கொண்டவள் மூச்சை ஆழ்ந்து இழுத்து விட்டு, "நைஸ் ஃப்ரேக்ரென்ஸ்; பட் உனக்கு மித்து......!" என்று கேட்ட போது,

"ரெண்டு செட் கொண்டு வந்தேன். நான் போட்டுக்குறேன் பேபி, நீ போய் சேன்ஜ் பண்ணிட்டு வா. முடிஞ்சா ஹாட் வாட்டர்ல ஒரு பாத் எடுத்துடு!" என்று சொன்னவனிடம் தலையாட்டி விட்டு சென்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

சிறிது நேரத்தில் அவனது உடையுடன் தலையில் ஈரம் சொட்ட இடை வரை நனைந்த கூந்தலுடன்
வெளியே வந்தவளிடம், "குளிச்சுட்டு வான்னு சொன்னா இப்படி தான் வந்து நிப்பியா நீ? நான் ஏதாவது சொன்னா
கோபப்படுறேன்னு முகத்தை தூக்கி வச்சுக்குற....... முடியை நல்லா காய வைக்கணும்ன்னு கூடவா உனக்கு சொல்லி குடுக்கணும்? இப்படி ஈரத்தோட இருந்தா உடம்புக்கு ஏதாவது செய்யப் போகுது கண்மணி; அப்புறம் என்னோட ஷர்ட் உனக்கு செட் ஆகல!" என்று அவளைப் பற்றி இருக்கையில் அமர்த்தி அவள் தலையை நன்றாக துவட்டி விட்டு அவளுக்கு சூடாக குடிக்க ஒரு பாதாம் பாலும் ஆர்டர் செய்திருந்தான் மித்ரன்.

"உன் டிரஸ் தானே எனக்கு செட் ஆகல; அதுதான் நீ செட் ஆகிட்டல்ல..... அது போதும் விடு. ஸாரி மித்து..... ஏதோ டென்ஷன்ல தெரியாம கத்திட்டேன். கோபப்படாத.... ப்ளீஸ்ஸ்ஸ்!"என்று சொல்லிக் கொண்டு அவன் பக்கத்தில் வந்தவளை அணைத்துக் கொண்டான் மித்ரன்.

"உன் கிட்ட எனக்கு என்னடீ கோபம்......நீ தான் என் சந்தோஷத்தோட ஸ்கேல் தெரியுமா.....செம ஹாப்பி மூட்ல இருந்தேன். நீ ஷட்டவுன் பண்ணவும் எனக்கும் டல்லாகிடுச்சு. அப்பா, அம்மாவை மிஸ் பண்ணினா என்னை வந்து கட்டிப் பிடிச்சுக்கோடா. அழணும் னாலும் அழுதுடு. உன் இழப்பு எனக்கு புரியுது. ஆனா அதை என்னால சரி செய்ய முடியாதுல்ல கண்மணி.......!" என்று கேட்டவனிடம் புன்னகையுடன்,

"என்னன்னு தெரியல மித்து, பர்ஸ்ட் டைம் பேமிலியா அவுட்டிங் வந்தவுடனே திடீர்ன்னு ஃபீல் ஆகிடுச்சு. பட் நம்ம பையன் அருள்மொழி மாமாவையும், லோட்டஸையும் ஜாயிண்ட் அடிக்க வைக்க தான் இப்படி தலைகீழா நிக்குறான்னு தெரிஞ்சதும் ஜாலியாகிடுச்சு! " என்று பேசிக் கொண்டிருந்தவள் உதட்டை தன் கைகளால் அவன் புறம் இழுத்தான்.

"ஷ்ஷ்ஷ்....ஐயோ; டிஸைன் டிஸைனா டார்ச்சர் பண்ணாதடா. வலிக்குது!" என்று தன் உதடுகளை நீவிக் கொண்டவளிடம் கோபத்துடன்,

"யார் டீ உனக்கு நம்ம பையன்...... நமக்கு பிறக்க போற பையன் தான்டீ நம்ம பையன்.... நானெல்லாம் உனக்கு பாவாவாக்கும்..... வரு பேபி உன் ஸ்டைல்ல ஒரு தடவை பாவான்னு கூப்பிடேன்!" என்று கேட்டபடி அவளை முத்தமிட வந்தவனை தள்ளி விட்டு உச்சுக் கொட்டி,

"நீ கேட்டா எல்லாம் நல்லாயிருக்காது. அதுவா வந்தா தான் நல்லா இருக்கும். ஏன் மித்து இன்னும் கொஞ்சம் வொர்க் அவுட் பண்ணி கரெக்டா அதையே மெயின்டெய்ன் பண்ணணுமோ..... பேபிக்கு எதுவும்..... ம்ஹூம்;
என் கிப்ட் எங்கடா? நீ சும்மா வெறும் வாயை தான் கொண்டு வந்திருக்கேன்னு நினைக்கிறேன். கிப்ட் எல்லாம் இருக்கிற மாதிரி தெரியலயே.....!" என்று கேட்டவள் அருகே வந்து அமர்ந்தவன்,

"உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்டா வரு பேபி, பேபிக்கு ஏதாவது பிரச்சனை வருமான்னு நான் கிஸ் பண்ண வர்றப்ப தான் உனக்கு நியாபகம் வருமா? சாப்பிட உட்காரும் போதெல்லாம் அந்த நியாபகம் வர மாட்டேங்குது.... ஏன்டா செல்லம்.... இந்தா உன் கிப்ட்.... இதை போட்டு விடவா? இல்ல ஊட்டி விடவா?" என்று கேட்ட படி தன் கைகளில் வைத்திருந்த ஜவ்வு மிட்டாய் செயினை அவளிடம் கொடுத்தான்.

"வாவ்.....கேண்டி செயினா; சோ நைஸ்! மித்து இந்த செயினை எனக்கு போட்டு விடேன்!" என்று கேட்டவளின் பேச்சை மறுக்க முடியாமல் மிட்டாய் மாலையை தன்னவள் கழுத்தில் அணிவித்தவன்,

"வரு பேபி நான் கேண்டீஸ் எல்லாம் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. பட் இப்போ உன் கழுத்துல இருக்கிற சாக்லெட்டை சாப்பிடணும் போல எனக்கு ஆசையா இருக்கு. ஷேர் பண்ணிக்கலாமா?" என்று கேட்டவன் அவள் கழுத்து வளைவில் தன் இதழ்களை புதைத்தான். சற்று தொளதொளவென்று இருந்து அவனது உடையும் அவனுக்கு சகாயம் செய்து கொடுத்தது.

"மித்து மை லவ்லி மேன், நீ என் பக்கத்துல கொஞ்சம் இன்டிமேட்டா வரும் போதெல்லாம் எனக்கு வயித்துக்குள்ள சம் கசமுசாவாகுது டா...... கிஸ் பண்ணாத, தள்ளிப் போ!" என்று அவனை விலக்க முயன்றவளின் விரிந்த கூந்தலை விலக்கி தோளில் இருந்து முதுகுப்புறம் சரிந்த சிவமித்ரன்,

"அந்த கசமுசா வேற ஒண்ணுமில்ல வரு பேபி.....உன் ஈஸ்ட்ரோஜென் கரெக்டா வேலை பார்க்குறேன்னு உங்கிட்ட சொல்றது தான்...... ஆனா இதுக்காக எல்லாம் நான் சாக்லேட் சாப்பிடுறதை இப்போ நிறுத்த முடியாது!" என்றவனிடம் ஓர் அதிர்ச்சியுடன்,

"டேய்.....சாக்லேட் எனக்கு தானே வாங்கிட்டு வந்தது...... காலி பண்ணிடாதப்பா!" என்று கேட்டவளிடம் சிரிப்புடன் தன் இதழ்களால் அவளது இதழ்களில் நிறைய முத்தங்கள், சிறிது சாக்லேட் என்று கலவையாக பரிமாறிக் கொண்டிருந்தான் மித்ரன். இருவரும் இணைந்து அதை சண்டையிட்டு சாப்பிட்டு முடிக்கையில் அலைபேசியில் நேத்ரனின் அழைப்பு வந்தது.

"சிவாண்ணா ஒரு குட் நியூஸ்.....ஒரு பேட் நியூஸ்.....எதை முதல்ல சொல்லட்டும்?" என்று கேட்டவனிடம் புன்னகையுடன் மித்ரன் "பேட் நியூஸ் என்னன்னு சொல்லு சோட்டு!" என்று கேட்டான் அன்றலர்ந்த தாமரை போல் முகபாவத்துடன்!

வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro