💖 வஞ்சி மனம் 21
ஐஸ்வர்யாவின் பிடியில் இருந்து இலகுவாக விடுபட்ட மித்ரன் அவளிடம்,
"ஏய்.....என்னடா இது? வாடான்னு கூப்பிட்டா வரப்போறேன்! எதுக்கு தேவையில்லாம முகத்தை பொத்தி இப்படி ஆர்ப்பாட்டம்?" என்று கேட்டான். அவனை பின்புறமாக அணைத்துக் கொண்டவள்,
"பீச்சுக்கு போலாமா பாவா?" என்று கேட்ட படி தன் மூக்கால் அவன் முதுகில் குறுகுறுப்பூட்டி கொண்டு இருந்தாள்.
"ஐயோ..... இவ்வளவு நாள் பக்கத்தில வராம இருந்துட்டு சாவடிச்சா; இப்போ கண்ணை மூடிக் கடத்திட்டு வந்து லவ் டார்ச்சர் செஞ்சு சாவடிக்கிறா; இதுக்கு மேல நான் நல்ல பையனா இருக்க முடியாது. மணி ரெண்டாச்சு, இந்த நேரத்தில பீச்சுக்கு போகணுமா உனக்கு......வாட்டர்பெட்; இங்க வாடீ!" என்று சொல்லிக்கொண்டே அவளை முன்புறம் இழுத்து இறுக்கமாக அணைத்தவன் பின் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு அவன் முன்பு தங்கியிருந்த வீட்டின் பாதையில் நடந்து கொண்டு இருந்தான்.
"மித்து இறக்கி விடுப்பா.... நான் நடந்து வர்றேனே!" என்றவளின் பேச்சை அவன் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.
"பாவ்வா............ஆ!" என்று இழுத்தவளை கட்டிலில் இருத்தி அருகில் அமர்ந்து கொண்டவன், "இப்போ கொஞ்சுடீ.....பாவா! நான் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் வா வான்னு; அப்படி என்ன பேசக் கூட முடியாத அளவுக்கு கோபம்? நீ உன் ஒபிசிட்டியால பிரச்சனை வருமான்னு கேட்ட; வரும்ன்னு சொன்னேன். அம்மாவுக்கு ப்ராப்ளம் இருக்கிறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு தெரியுமா? ஒரு பிஸியோதெரபிஸ்டா அவங்களுக்கு வலி இருக்கும்; அதை அவங்க தாங்கிக்க தான் செய்யணும்னு புத்திக்கு தெரியுது. ஆனா அவங்களுக்கு தெரபி ஸ்டார்ட் பண்ண உட்காரும் போதே முகம் சுளிப்பாங்களே...... எக்சர்சைஸ நல்ல படியா முடிக்கணுமேன்னு புல் டென்ஷன்ல தான் ஒவ்வொரு செஷனும் போகுது! அம்மாவோட நோயை முழுமையா சரிப்படுத்த முடியாது. ஆனா உன்னோடது அப்படியில்ல. நீ மனசு வச்சா முழுசா சரி பண்ணலாம். ரெண்டு மாசத்துல அஞ்சு கிலோ ரெட்யூஸ் பண்ணியிருக்க. இதே வெயிட்டை கூட கன்டினியூ பண்ணினா போதும். மோர்ஓவர் உனக்கு நம்ம ஃபிட்டா இருக்கோம்ன்னு ஒரு கான்பிடென்ஸ் க்ரியேட் ஆகும். க்ளோஸ் டூ தி ஹார்ட்ன்னு ஓட்டை வடை, பானிபூரி, சீஸ் பர்கர், சாக்லெட் நக்கட்..... இப்படி நிறைய ஐயிட்டம் வச்சுருப்பியே; அதெல்லாம் விட்டுட சொல்லல, கொஞ்சம் கம்மி பண்ணிக்க. இதுக்கும் மேல இந்த சொற்பொழிவு எல்லாம் குடுக்கறதுக்கு நீ யாருடா? நான் என் இஷ்டப்படி தான் எல்லாம் செய்வேன்னு நீ சொன்னேன்னா நாளைக்கு பிரச்சனை வந்தா உன்னையும் குழந்தையையும் தூக்கி சுமக்கப் போறேன். அவ்வளவுதான்!" என்று தன் நீண்ட உரையை முடித்தவன் தோள்களில் சாய்ந்து கொண்டு
"ம்ப்ச்! எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருந்தது மித்து, பட் எப்பவும் ஒரு டார்கெட் பிக்ஸ் பண்ணிக்கும் போது ஒரு டஃப் ஆன விஷயத்தை செய்வோம்ல..... அந்த மாதிரி தான் வெயிட் லாஸ் பண்ற வரைக்கும் உன் கூட பேசாம இருக்கலாம்ன்னு நினைச்சேன். இப்படித்தான் எக்ஸாம் ஃபேஸ் பண்றப்போ எல்லாம் அப்பா கூட சாட்ஸ் சாப்பிட போகக்கூடாதுன்னு ஒரு பாலிஸி வச்சுருப்பேன். ஆனா இந்த தடவை உன் கூட பேசாம இருந்தது ரொம்ப வலிச்சது மித்து, இந்த வீட்டையும் இப்போ கூட யூஸ் பண்றியாடா..... ரொம்ப க்ளீனா இருக்கு!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவளை தன் தோளில் இருந்து உலுக்கி படுக்கையில் தள்ளி விட்டான் மித்ரன். சட்டென்று கீழே விழுந்தவள் முறைப்புடன் எழ முயற்சி செய்து,
"டேய்.....எதுக்குடா இப்போ என்னை தள்ளி விட்ட? இடியட்!" என்று திட்டியவளை அணைத்து அவளை முழுமையாக ஆக்ரமித்து அவள் மேல் படர்ந்து கொண்டான் மித்ரன்.
இருவரது உடல்களும் ஒன்றை மற்றொன்று ஸ்பரிசித்து கொண்டு இருந்தன. இருவரது கைகளும் மற்றவர் தோள்களை தழுவிக் கொள்ள மித்ரனின் கண்கள் தன்னவள் அழகை அங்குலம் அங்குலமாக ரசித்து அவள் வெட்கத்தை அளவெடுத்து கொண்டிருக்க, காலம் அப்படியே உறைந்து போய் நின்று விடக் கூடாதா என்று தோன்றியது அவனுக்கு.
அவளது காதில் தன் மூச்சுக் காற்றை செலுத்தியவன், "வரு பேபி........மனுஷ உடம்பு எனக்கு ஒண்ணும் புதுசு இல்ல. அதைப் பத்தி நிறைய படிச்சுருக்கேன். ஆனா..... இன்னிக்கி என் டெஸ்டோஸ்டிரோன் என்னை ரொம்ப படுத்துதுடீ..... நான் இன்னிக்கு முழுசா நானா இருப்பேனா? இல்ல.... உன் கிட்ட என்னை தொலைச்சுடுவேனோன்னு தெரியல! மூச்சு சூடாகிடுச்சு....." என்றான் கிசுகிசுப்பான குரலில்.
ஐஸ்வர்யாவின் நிலையோ கட்டிலில் கிடக்கையிலேயே கிணற்றில் விழுந்த நிலையாக இருந்தது. அவனது பேச்சின் அர்த்தம் கூட சரியாக புரியவில்லை அவளுக்கு. எப்போது பார்த்தாலும் அவளை திட்டிக் கொண்டு, கருத்து பேசிக் கொண்டு, எரிச்சல் படுத்திக் கொண்டிருந்த அவளது மித்து பாவா காதலில் இந்த அளவுக்கு கரை தேர்ந்தவன் என்று அவள் நினைக்கவில்லை. அவளது மட்டற்ற மகிழ்ச்சியை அவனுடன் சேர்ந்து கொண்டாட ஒரு முத்தம் கொடுக்கலாம் என்று நினைத்துக் கூட்டி வந்து மொத்தமாக அவனிடம் மாட்டிக் கொண்டாள்.
"பாவ்வா..... ப்ப்ப்ளீஸ்! லிப்ஸ் எல்லாம் ட்ரை ஆகுது. ஒழுங்கா யோசிக்க முடியல. என்ன....னென்னமோ பண்ணுது! என்னை கொஞ்சம் விட்டுடேன்!" என்று அவன் மார்பளவு பார்வையை உயர்த்தி கெஞ்சலுடன் கேட்டவளிடம்,
"எப்படி.....அது! என் கூட பேசாம இருந்து உங்க வெயிட் லாஸ் டார்கெட்டை பிக்ஸ் பண்ணிக்குவீங்களா மேடம்...... மனுஷனை ரெண்டு மாசம் கிறுக்கனாக்கிட்டு நீ ஜாலியா க்ளாஸ், க்ளாஸா சுத்திக்கிட்டு இருக்க......! எவ்வளவு திமிர்டீ உனக்கு? இரு உன் திமிரை எல்லாம் அடக்கல...... நா சிவமித்ரன் புவனேஸ்வர் இல்லடீ!" என்று சொல்லி அவளது காய்ந்து போன இதழ்களை தன் இதழ்களால் அழுந்த மூடி அவன் முத்தத்தால் அவள் புலன்கள் அனைத்திலும் உயிரூட்ட முயற்சி செய்து கொண்டிருந்தான் அவளவன்.
சிறிது நேரத்திற்கு பிறகு வேக வேகமான மூச்சிரைப்புடன் அவனிடம் இருந்து விலகிய ஐஸ்வர்யா ஸ்ரீ, "மித்து...... ப்ளீஸ்; உன்னை பார்த்து எனக்கு பயமாயிருக்கு. இவ்வளவு வயலண்டா நீ?" என்று கேட்டவளிடம் சிரித்துக் கொண்டே,
"ஒருத்தன் சைலண்டா இருக்கான்னா அவன் பின்னாடி வயலண்டா மாறுறதுக்கு நிறைய பாஸிபிளிட்டி இருக்கு கண்மணி, நீ தானே லிப்ஸ் ட்ரையாகிடுச்சுன்னு சொன்ன! அதை வெட் பண்றதுக்கு தான் ஹார்டு வொர்க் பண்ணிட்டு இருக்கேன். இன்னொரு பட்டர்ஃபிளைடா வரு பேபி....!" என்று கேட்டவனிடம் கண்களில் பயத்துடன் வேண்டாமென தலையாட்டியவள் தலையை பற்றி அவளை தன் மனதின் போக்கில் வளைத்தான் மித்ரன்.
அவனது அணுகுமுறை ஓர் அவசரத்துடன் இருந்தாலும் அதிலும் அவளை கஷ்டப்படுத்தி விடக் கூடாது என்ற கவனம் தெரிந்தது. பூக்களை கொய்து விட்டு பின் அந்த மலருக்கு வலிக்கும் என்று பரிதாபப்படுவது போல், அவள் இதழ்களை முடிந்த அளவு கொய்து விட்டு அதற்கும் அவன் இதழ்களினால் பரிகாரம் செய்து கொண்டிருந்தான் அந்த திருடன். அவள் கண்களில் இவ்வளவு நேரம் இருந்த காதல் கிறக்கம் மாறி கண்ணீர் வழியவும் பதறி அவளை மடியில் கிடத்திக் கொண்டு,
"ஏய் என்னாச்சுடா பேபி..... இவ்வளவு நேரம் நல்லா தானே போய்ட்டு இருந்தது......வலிக்குதா? இல்ல பிடிக்கலையாமா?" என்று அவள் கன்னங்களை பற்றிக் கொண்டவனிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு,
"மித்து.....போதும்; யாருக்கும் தெரியாம நாம எதோ தப்பு பண்ற மாதிரி கில்டியா இருக்குப்பா.......!" என்று மறுபடி கண்ணீர் வடித்தவளிடம்,
"ஐயயோ...... பட்டர்ஃபிளை கிஸ் குடு; எஸ்கிமோ கிஸ் குடுன்னு என்னை துரத்தி துரத்தி கிஸ் கேட்ட ஒரு பொண்ணு..... இந்தாம்மா எல்லாத்தையும் வாங்கிக்கோம்மான்னு குடுக்கற நேரம் இப்படி கண்ணுல இருந்து அருவியை கொட்டினா என்ன பண்றது? முதல்ல இருந்தே உன் கிட்ட ஏதோ சரியில்ல. வேணும்ன்னு கேக்குற. சரி கேட்டாளே.... குடுப்போம்ன்னு நினைச்சு பக்கத்தில வந்தா திட்டிட்டு ஓடிடுற..... பட் உண்மையை சொல்லட்டுமா வரு? எவ்வளவு தான் தியரி படிச்சு கரைச்சு குடிச்சிருந்தாலும் ப்ராக்டிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்.... அதுவும் உன் முழு உடம்பையும் என் உடம்பால உணர்ந்த ஒரு ஃபீல்...... அப்ப்ப்ப்பா; சான்ஸ்லெஸ்டா வாட்டர்பெட்; புதுசா மனசுல ஏதோ ஒரு ஃபீல்; ரொம்ப நல்லாயிருக்கு!" என்று பெருமூச்சுடன் படுக்கையில் சாய்ந்தவன்,
"உண்டான காயம் இங்கு தன்னால மாறிப் போன மாயமென்ன
பொன்மானே பொன்மானே!" என்று பாடலை ஹம் செய்தவனிடம் ஓர் முறைப்புடன்,
"கடிச்சு வச்சது என்னைய..... உனக்கு காயம் ஆச்சா? பொய் சொன்ன... பின்னிடுவேன்!" என்று கை நீட்டியவளின் கையை முத்தமிட்டு,
"என்ன காயம் ஆன போதும் உன் மேனி தாங்கிக் கொள்ளும்! எந்தன் மேனி தாங்காது; செந்தேனே!" என்று பாடி கண்சிமிட்டியவனிடம் குழப்பம் தீரா ஒரு பார்வையுடன்,
"ஒரு நிமிஷம் இரு! இந்த லிரிக்ஸ் இப்படியா வரும்?" என்று தலையை பிடித்துக் கொண்டவளிடம்,
"எந்தன் காதல் என்னவென்று புரியாமல் ஏங்க ஏங்க உனக்கு
அழுகை வந்தது!
உந்தன் சோகம் என்னைத்
தாக்கும் என்றெண்ணும்
போது வந்த அழுகை
நின்றது!" என்று பாடியவனின் வாயை மூடி,
"என்னடா இஷ்டத்துக்கு பாட்டை மாத்தி பாடிட்டு இருக்கே? இந்த பாட்டு நான் கேட்டுருக்கேனாக்கும்!" என்று சொன்னவளிடம்,
"அப்படியா....வரு குட்டி! அடுத்த லைன் பாடு பார்ப்போம்!" என்று கேட்டவனிடம் உதடு பிதுக்கினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"சுபலாலியே....லாலி லாலியே
வரு லாலி....லாலியே!
லாலி லாலியே!"
"கண்மணி அன்போடு காதலன் நான் பாடும் பாடலே!
பொன்மணி தூக்கம் கண்ணை சுழற்றுதே;
நீயும் அருகில் இருந்தால்
சொர்க்கமே!!"
"சுபலாலியே....லாலி லாலியே
வரு லாலி....லாலியே!
லாலி லாலியே!" என்று பாடியவனின் பாடல் ஒலி மெதுவாக தேய்ந்து மறையும் முன் ஐஸ்வர்யா மித்ரனின் தோள்களில் தஞ்சம் புகுந்திருந்தாள்.
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro