💖 வஞ்சி மனம் 2
சிவமித்ரன் அலட்டிக் கொள்ளாமல் ஐஸ்வர்யாவை மட்டம் தட்டி விட்டு செல்ல அவளுக்கு மீண்டும் கோபம் எழும்பியது. ஆனால் அவன் இல்லாததை ஒன்றும்
சொல்லவில்லையே என்று நினைத்து தன் மனதை சமன்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.
சற்று நேரத்தில் அவளுடைய அறைக் கதவை யாரோ தட்ட எழுந்து சென்று கதவைத் திறந்தாள். சிவா தான் அங்கு நின்று கொண்டு இருந்தான். "ப்ரேக்பாஸ்ட் செய்யப் போறேன் வரு. உனக்கு என்ன மெனு பிடிக்கும்ன்னு சொன்னன்னா அதை செஞ்சு தர்றேன்!" என்று கேட்டவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா.
"என்னாச்சுமா? ஏன் இப்படி ஒரு லுக் குடுக்குற?" என்று கேட்டான் மித்ரன். அவன் இதழ்களில் சிறு புன்னகை குடி கொண்டிருந்தது.
"உனக்கு சமைக்கவும் தெரியுமா மித்து? எங்கேயோ ஹாஸ்பிட்டல்ல வொர்க் பண்ணிட்டு இருக்கன்னு மாமா சொன்னாங்க! இப்படி ஏன் எல்லா வேலையையும் நீயே செய்யணும்? சமையல் வேலைக்கு யாராவது ஒருத்தரை அப்பாயிண்ட் பண்ணிக்கலாமே?" என்று கேட்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"வெளியே வொர்க் பண்ணினா வீட்ல சமைக்க கூடாதா? இது என்ன கான்செப்ட் வரு? அப்போ வொர்க் பண்ற லேடீஸ் எல்லாரையும் நாளையில இருந்து வீட்ல சமைக்க வேண்டாம்னு சொல்லிடலாமா?" என்று கேட்டவனிடம் கோபத்துடன்
"என்னை கேட்டா அப்படித்தான் சொல்லுவேன் மித்து! வீட்லயும் வேலை பார்த்துட்டு, ஆஃபிஸ்லயும் போய் எப்படி வேலை பார்க்க முடியும்? அதனால தான் உனக்கு கூட ஐடியா குடுக்குறேன். நீ மாமா கிட்ட பேசு!" என்றாள் ஐசு.
பதிலேதும் பேசாமல் ஒரு மவுனச்சிரிப்புடன் சமையல் அறைக்குள் சென்று விட்டான் சிவ மித்ரன்.
ஐஸ்வர்யாவின் பொறுமை பறந்தது. அவன் பின்னால் சென்று, "டேய் என்ன நீ? எப்போ பார்த்தாலும் பேசிட்டு இருக்கும் போது பாதியில கான்வர்சேஷனை ஸ்டாப் பண்ணிட்டு போயிடுற! இது குட் மேனர்ஸ் இல்ல மித்து!" என்றவளிடம்
"உன் கிட்ட ஆர்க்யூ பண்ணிட்டு இருக்குறதுக்கு எனக்கு டைம் இல்ல வரு! சாப்பாடுங்கிறது நம்ம பசியை தீர்க்குறதுக்காக மட்டும் இல்ல, எல்லா ப்ரூட்ஸும், வெஜ்ஜீஸும் நம்ம ஹெல்த்தியா வாழணுங்கிறதுக்காக கடவுள் குடுத்த கிப்ட்! அதை கரெக்ட்டா அதோட வேல்யூ தெரிஞ்சு சாப்பிட்டோம்னா ஹாஸ்பிட்டல் க்யூவில போய் நிக்க வேண்டியது இல்ல. ஆனா நாம சாப்பிடுறதுல பாதி பொருள் இப்போ நல்ல பொருளா இருக்குறதில்லை. அதனால தான் பிரச்சனை! ஒரு வீட்ல அம்மாவால தான் அவங்க குழந்தைக்கும், மத்தவங்களுக்கும் எது தேவை? என்ன பிடிக்கும்ன்னு தெரிஞ்சு சத்தான சாப்பாட்டை குடுக்க முடியும். சமையல் பண்றவங்களால வெறும் சாப்பாடு மட்டும் தான் குடுக்க முடியும். இரண்டு விஷயத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு, உனக்கு புரியுதா?" என்று கேட்டவனிடம் ஆமோதித்து தலையசைத்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"நீ எனக்கு என்ன பிடிக்கும்ன்னு கேட்டியே? அப்போ நீ எனக்கு அம்மாவா மித்து?" என்று கேட்டு கண்கலங்கியவாறு நின்றவளை கண்களில் வலியுடன் பார்த்து கொண்டு இருந்தான் சிவ மித்ரன்.
அவள் தன்னை மீட்டுக் கொள்ள சற்று அவகாசம் தந்த பின்னர், "ஸாரிம்மா! நான் உன்னை ஹர்ட் பண்ணனும்னு பேசல!" என்று தன்னிலை விளக்கம் அளித்தான் சிவா.
கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு, "விடு மித்து! அப்பப்போ மாம், டாட் நியாபகம் வந்துடுது. எனக்கு ஸ்பெகட்டி பாஸ்தா செஞ்சு தர்றியா? பர்கர், பீட்சா இப்படி எல்லா குஸின் வெரைட்டியும் செய்ய கத்துக்க. பீட்சால எல்லாம் நிறைய சீஸ் போடணும். அப்போ தான் தட் டேஸ்ட்ஸ் யம்மி!" என்று சொன்னவளிடம்
"நீ யூஎஸ்ல எங்கேயாவது வொர்க் பண்ணியா வரு? பிட்னஸ்க்கு ஜிம், சைக்கிளிங், ஸ்விம்மிங், இப்படி ஏதாவது செய்வியா?" என்று கேட்டான் சிவா.
"ம்ஹூம்! வொர்க் பண்றதுக்கு எல்லாம் எந்த ஒரு முயற்சியும் செய்யல மித்து. பிட்னஸ்க்கு ம்ம்ம்......எப்பவாச்சும் டாட் கூட வாக்கிங் போவேன். அதுவும் கொஞ்ச தூரம் தான். ஸாரி பிட்னஸ் விஷயத்துல நான் எந்த ஸ்பெஷல் கேரும் எடுத்துக்கல! நீ சொன்ன வாட்டர் பெட் மாதிரி தான் இருக்கேன்ல மித்து!" என்றாள் சற்று தயக்கத்துடன் தன் உடம்பை பார்த்தவாறு.
ஒரு பெருமூச்சுடன் அவளது உடல் எடை, உயரம், மற்றும் வயதைக் கேட்டவன் சில நிமிடங்களில் அவளிடம்
"இன்னிக்குல இருந்து உன்னோட டயட்டீசியன் நான் தான் வரு. நான் என்ன மெனு சொல்றேனோ அதைத் தான் கொஞ்ச நாளைக்கு நீ ஸ்ட்ரிக்ட்டா பாஃலோ பண்ணணும். அது வரைக்கும் உன் பீட்சா, பாஸ்தா, பர்கர், ஐஸ்கிரீம், கேக், சாக்லெட்ஸ் எல்லாத்துக்கும் பை சொல்லிடு!" என்று கறார் குரலில் சொன்னவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"ஹலோ மிஸ் ஐஸ்வர்யா, என்ன ஓவரா ஃபீல் குடுத்துட்டு நிக்குறீங்க?" என்று அவள் முகத்திற்கு முன் சொடுக்கு போட்டவனிடம்
"சாக்லெட்ஸ், ஐஸ்கிரீம் எல்லாம் இல்லாம உயிர் வாழுறதே ரொம்ப கஷ்டம் மித்து! ப்ளீஸ் உன் ரூல்ஸ்ஸை கொஞ்சம் ப்ரேக் பண்ணிக்கோயேன்!" என்றவளை முறைத்து விட்டு
"ஐஸ்க்ரீம் வேணும்னா என்கூட ஜாகிங் வந்துட்டு வாங்கிக்கோடா வரு. சாக்லெட்ஸ் வேணும்னா ஹால் முழுசும் மாப் போட்டு க்ளீன் பண்ணிட்டு கேளு. பீட்சா, பாஸ்தா, பர்கர், இப்படி ஒவ்வொரு ஐயிட்டத்துக்கும் ஒவ்வொரு வேலைகளையும் அலாட் பண்ணிடலாம். நீ இப்போதைக்கு உன் பி.எம். ஐ கால்குஷேன்ல 15 கிலோ எக்ஸ்ட்ராவா இருக்க. ஒபிசிட்டி பெரிய அளவில ப்ராப்ளம் ஆகிடும் வரு. இதை முதல்லயே கவனிச்சுருக்கணும். இப்போ இருந்தாவது நாம ஏதாவது செஞ்சு ஆகணும்மா! வா ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம்!" என்று அவளை டைனிங் டேபிளுக்கு கூட்டிச் சென்றான் மித்ரன்.
அருள் இருவரும் வருவதற்காக ஹாலில் தொலைக்காட்சியில் ஷேர் மார்க்கெட் நிலவரத்தை கவனித்துக் கொண்டு இருந்தார்.
"வாங்க. ரெண்டு பேருக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்! இன்னிக்கு என்ன பிரேக்பாஸ்ட் மித்ரா?" என்று கேட்டவரிடம் புன்முறுவல் பூத்தவன்
"ரெயின்போ தோசை பண்ணினேன் ஸார். ஐஷூ என் கூட ப்ரெண்ட் ஆகிட்டதால இன்னிக்கி ஸ்பெஷல்!" என்று சொல்லி அவர் அருகில் தோசைகளை நகர்த்தினான். நடுத்தரமான சைஸில் வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, முந்திரி, காரட், முட்டை அனைத்தையும் தனித்தனியாக தோசைகளில் போட்டு 7 தோசைகளை பொருத்தமான சட்னிக்களுடன் வைத்தான். பார்ப்பதற்கு வண்ணமயமான மொறுமொறுப்பான தோசைகளில் ஐஸ்வர்யா தன் மாமாவிடம் மித்ரனை பற்றி குறை கூற வந்ததை எல்லாம் மறந்து விட்டாள்.
"ஐசு, ப்ரேக் பாஸ்ட் எப்படிடா இருக்கு?" என்று கேட்ட தன் மாமாவிடம்
"டிவைன் மாமா, தோசை இவ்வளவு நல்லா இருக்கும்னு எனக்கு இவ்வளவு நாளா ஐடியாவே இல்லையே; மித்து எனக்கு இன்னும் ரெண்டு தோசை குடேன்!" என்று கேட்டவளிடம்
"தோசை காலியாகிடுச்சு வரு! இன்னொரு நாளைக்கு செஞ்சு தர்றேன்! டைனிங் டேபிளை க்ளீன் பண்ணிட்டு ப்ளேட்ஸ்ஸை வாஷ் பண்ணி வச்சிடு!" என்று சொல்லி விட்டு சென்றவனின் கையை பிடித்து இழுத்து நிறுத்தினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"டேய் என் பிரெண்ட்ங்கிறதுக்காக என் கிட்ட நீ அட்வான்டேஜ் எடுத்துப்பியா? ப்ளேட்ஸ்ஸை வாஷ் பண்ணணும். டேபிளை க்ளீன் பண்ணணும்ன்னு அடுக்கிட்டே போற. தோசை கேட்டா குடுக்க மாட்டேங்கிற, காலியாகிடுச்சு ன்னா மறுபடியும் போய் செஞ்சு எடுத்துட்டு வா! ஐ வில் வெயிட் ஃபார் சம் டைம்! ஐ கான்ட் டூ திஸ் வொர்க்ஸ்!" என்று விறைப்பாக நின்று பேசிக் கொண்டு இருந்தவளின் கைப்பிடியில் இருந்து தன் கையை உருவிக் கொண்ட மித்ரன் ஒரு ஆப்பிளை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு, "நல்லா வாஷ் பண்ணிட்டு சாப்பிடு!" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
"ஏய் இடியட், ஹோல்ட் ஆன் மேன்!" என்ற ஐஸ்வர்யாவின் எரிச்சல் குரலை அவன் சட்டை செய்யக் கூட இல்லை.
சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்த அருள் மொழியிடம், "பாருங்க மாமா, நான் ஆசையா கேட்டா செஞ்சு தர மாட்டேங்கிறான். வேலை செய்ய சொல்றான். ஆப்பிளை கையில குடுத்துட்டு போறான்! சரியான நட் கேஸா இருப்பான் போலிருக்கு!" என்று புலம்பியபடி இருந்தவளிடம்
"எப்பவும் அரை வயிறு நிறையற அளவுக்கு தான் சாப்பாடு சாப்பிடணுமாம்டா ஐசு! கால் பாகம் தண்ணீரும், இன்னொரு கால் பாகம் காத்தும் இருந்தா செரிமானத்துல பிரச்சனையே வராதுன்னு மித்ரன் சொல்லுவான். அவனோட கவனிப்பால தான் என் பிபி, சுகர் எல்லாம் நார்மலா இருக்கு. நீ இன்னும் ரெண்டு வேணும்னு கேட்டது தான் கரெக்ட்டான சாப்பாடு லெவல். இனிமேல் அதையே மெயின்டெய்ன் பண்ணு. கொஞ்சம் உடல் உழைப்பை அதிகப்படுத்த முயற்சி பண்ணு. இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்து உடம்பை கவனிச்சுட்டா என் அழகு மருமக பேரழகி ஆகிடுவாளே!" என்றவரிடம் மறுப்பேதும் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. ஆனால் வண்டி வண்டியாக அறிவுரைகளை அள்ளி வழங்கும் திருவாளர் சிவமித்ரனை அப்படியே எப்படி விட்டு விடுவது? நண்பனாக வேறு போய் விட்டான். அதனால் குறைந்த பட்ச தண்டனையாக என்ன தருவது என்று யோசனை செய்து கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
சிவ மித்ரன் மருத்துவமனைக்கு தயாராகி வந்த போது அவனுடைய சைக்கிளில் இரு சக்கரங்களிலும் காற்று இறக்கி விடப்பட்டிருந்தது. சலிப்புடன் பார்த்து தன் கோட்டை சைக்கிள் ஹேண்ட்பாரில் தொங்க விட்டு வீட்டிற்குள் சென்று காற்று நிரப்பும் கருவியை எடுத்து வந்த போது அவனுடைய கோட்டிற்கும், சைக்கிளுக்கும் சோப்பு நுரை அபிஷேகம் நடந்து முடிந்திருந்தது.
இடுப்பில் கை வைத்து அவளை முறைத்தவனிடம், "மிஸ்டர் சிவ மித்ரன் இந்த வரு கிட்ட வச்சிக்கிட்டா இப்படித்தான் ஆகும் ஸீன், ஹாவ் அ குட்டே!" என்று அடக்க முடியாத சிரிப்புடன் நின்றவளின் அருகில் வந்தவன்,
"கோட்டையும், சைக்கிளையும் வாஷ் பண்ணி 10 டேஸ் ஆகிடுச்சு, நல்லா வாஷ் பண்ணி வச்சிடு வரு. பை பை!" என்று கையசைத்து விட்டு தன் வேக நடையுடன் வீட்டிற்குள் சென்று இன்னொரு கோட்டுடன் வேலைக்கு கிளம்பி சென்று விட்டான் சிவ மித்ரன்.
தன் தாக்குதல் அவனை சிறிதளவும் பாதிக்கவில்லை என்று உணர்ந்து கோபத்துடன் குமைந்து கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro