Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 18

ஐஸ்வர்யா ஸ்ரீ வீட்டுக்கு வெளியே தயங்கியபடி நின்று கொண்டு இருந்த மங்கையின் அருகே சென்று, அவரை ஏற இறங்கப் பார்த்து சிரிப்புடன் நின்று கொண்டு இருந்தாள்.

"என்னையும், நேத்துவையும் சேர்த்து ஏன் அப்படி ஒரு கேள்வி கேட்டீங்க மங்கை ஆன்ட்டி? யாரா இருந்தாலும் இஷ்டத்துக்கு பேசிடுறது...... அப்புறம் அதுக்காக வருத்தப்படுறது; இது தான் உங்க காரெக்டரா? இதுக்கு உங்களுக்கு என்ன பனிஷ்மெண்ட் குடுக்கலாம்? தயவு செஞ்சு நீங்க சொன்ன மாதிரி இந்த மித்து பையன் கையில இருந்து கரண்டியை மட்டும் வாங்கிடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும். ஹெல்த்தி சமையல் பண்றேன்னு சாவடிக்கிறான். அதைக் குடி, இதை சாப்பிடுன்னு அவன் சொல்ற டயட்ல எனக்கு இன்னும் கொம்பு முளைக்காம இருக்கிறதே பெரிய சாதனை தான்!" என்று சொன்னவளை அணைத்து கொண்டு,

"மன்னிச்சிடு கண்ணு, எதையும் யோசிக்காத பேசாதன்னு சந்திராமா ஒவ்வொரு தபா சொன்னாலும் எனக்கு இதே பொழப்பா போச்சு, நீ கவலைப்படாத கண்ணு, இந்த டாக்டர் தம்பி புள்ளைய இப்படியா சாப்பாட்டுக்கு ஏங்க விடுறது? பருப்புருண்டை குழம்பும், எண்ணெய் கத்தரிக்காயும் மதிய சாப்பாட்டுக்கு உனக்கு போதுமா கண்ணு? இல்ல வேற ஏதாவது வேணுமா?" என்று கேட்டவரிடம்

"செம மெனு மங்கை ஆன்ட்டி.... மித்து கொஞ்ச நேரம் சந்திரா ஆன்ட்டி கூட தனியா இருக்கட்டும். நிறைய பேசணும்ன்னு நினைக்கிறான் போலிருக்கு! அதான் ட்யூட்டிக்கு கிளம்பாம வீட்டுக்குள்ளயே சுத்திக்கிட்டு இருக்கான். நம்ம இருந்தா அவனுக்கு ஒரு மாதிரி சங்கடமா இருக்கும். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வரலாமா ஆன்ட்டி?" என்று கேட்டவளை கைகூப்பினார் அலர்மேல் மங்கை.

"அச்சச்சோ; என்ன பண்றீங்க ஆன்ட்டி? கையை கீழே போடுங்க!" என்று சொல்லி அவர் கையைப் பற்றிக் கொண்டவளிடம்,

"என் தங்கம்! எவ்வளவு பதவிசா பேசுற ராசாத்தி, உனக்கு அப்படியே நம்ம சந்திராம்மா மனசு தான் போல! சுளுவா என்னைய மன்னிச்சது மட்டுமில்லாம பெரிய தம்பி குணமறிஞ்சு நடந்துக்க நினைக்கிறியே....வாம்மா; வெளியே போயிட்டு வரலாம்! இனிமே இந்த மங்கா சந்திராம்மா, சின்னத்தம்பிக்கு மட்டும் வேலை பார்க்குறவக இல்ல. உனக்கு, பெரிய தம்பிக்கு, உங்க மாமாவுக்கும் தான் வேலை பார்க்குறவ! என்ன வேணும்னாலும் மங்கான்னு ஒரு குரல் மட்டும் குடு. அடுத்த நிமிட் உன் முன்னாடி நிப்பேன். உன் அணில் குஞ்சு.... அதென்ன பட்டுவா; புட்டுவா....அதையும் பத்திரமா பார்த்துக்குவேன் சரியா? கோவத்துல பேசினது ஒண்ணையும் மனசுல வச்சுக்காத ராசாத்தி!" என்று தனக்கு தெரிந்த வகையில் ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டார் அலர்மேல் மங்கை.

"பரவாயில்லை ஆன்ட்டி, நான் உங்களை தப்பாவே நினைக்கல. ஆனா வார்த்தையை பேசுறதுக்கு முன்னால கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பேசுங்க. அப்புறம் என்னோட பெட் பேரு மிட்டு பேபி; பட்டுவும், புட்டுவும் இல்ல. உள்ளே வாங்க, ஆன்ட்டி கிட்ட, மித்து கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்!" என்றவளிடம் சிறு எரிச்சலுடன்,

"ஐயோ.....தப்பு கண்ணு; கட்டிக்க போற மாமன பேர சொல்லி தலையில அடிச்சாப்ல கூப்பிடக் கூடாது; மாமா, அத்தான் அந்த மாதிரி ஏதாவது பேர்ல கூப்பிடு!" என்றவரை அழைத்து கொண்டு வீட்டிற்குள் வந்தவள்,

"ம்ஹூம்! மித்துவை நான் பாவான்னு தான் கூப்பிடுவேன். ஆனா அது எப்பவாவது தான், யூஎஸ்ல என் பக்கத்து வீட்டு ப்ரெண்டு அவங்க புருஷனை அப்படித்தான் கூப்பிடுவாங்க! ஸோ நானும் அப்பப்போ மித்துவை அப்படி கூப்பிட்டு பழகிட்டேன். ஆனா எனக்கு மித்து பர்ஸ்ட் ப்ரெண்டா தான் அறிமுகம் ஆனான். அதுனால வாங்க, போங்க பிஸினஸ் எல்லாம் எங்களுக்குள்ள கிடையாது. சந்திரா ஆன்ட்டி மித்துவை நான் இப்படி கூப்பிடுறதுல உங்களுக்கு எதுவும் அப்ஜெக்ஷன் இருக்கா?" என்று ஐஸ்வர்யா சந்திரதாராவை பார்த்து கேட்டதும், அவர் அவளை அருகே அழைத்து அமர்த்தி கொண்டார்.

"மித்ரனை உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு நீ பேசுறதுல இருந்தே தெரியுது ஐஷு; ஆனா
எதுக்காக உனக்கு அவனை பிடிச்சிருக்கு?" என்று கேட்ட சந்திரதாராவிடம்,

"உங்க பையன் யாராவது ஒருத்தர் மேல அன்பு வச்சுட்டான்னா போதும் ஆன்ட்டி, கடைசி வரைக்கும் அவங்களை அதே அபெக்ஷனோட பார்த்துக்கணும்ன்னு நினைப்பான். சௌஜன்யான்னு ஒரு பொண்ணு ஆன்ட்டி, ரொம்ப மார்டன், பார்க்க செம க்யூட்டா இருப்பா, அவ நம்ம ஸாரை ரொம்ப நாளா மடக்க ப்ளான் போட்டுட்டு இருந்தா, இவர் அவளுக்கு டாட்டா காட்டிட்டு என்னைய போட்டோல பார்த்து லவ் பண்ணிட்டு இருந்திருக்கார்! அது கூட மாமா  ப்ரப்போஸல்ன்னு சொன்னதால தான்! இல்லன்னா டாக்டர் ஸார் எங்க நம்மளை எல்லாம் பார்த்திருக்க போறாரு? மித்துவுக்கு என்னைய ரொம்ப பிடிக்கும். எனக்கு மித்துவோட அபெக்ஷன், கேரிங், என் கிட்ட அவன் எடுத்துக்கிற உரிமை இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்ன ஒரே ஒரு மைனஸ் பாயிண்ட்...... சாப்பிட ஏதாவது கேட்டா கோபமா முறைச்சுட்டு தான் அப்புறம் வாங்கி தருவான்! மத்தபடி ஹி இஸ் தி பெஸ்ட் மேன் ஆன்ட்டி! நானும் மங்கை ஆன்ட்டியும் கோவிலுக்கு போயிட்டு வர்றோம் ஆன்ட்டி, பை! மித்து பை!" என்று சொல்லி கையை ஆட்டியவளிடம் புன்னகைத்து,

"வாலட் எடுத்துட்டு போங்க ஐஷு மேடம்! ஃபுல் கட்டு கட்டிட்டு பணத்துக்காக முழிச்சுட்டு நிக்காதீங்க!" என்றான் சிவமித்ரன்.

"ஆன்ட்டிஸ் வீட்டுக்கு வந்து இருக்காங்கல்ல, அதை செலிபரேட் பண்ண சாக்லேட் டோனட் சாப்பிட்டு வரட்டுமா மித்து? நீங்க ரெண்டு பேரும் எனக்கு குடுக்காம சாக்லேட் மூஸ் சாப்பிட்டீங்கல்ல? ஸோ இன்னிக்கி மட்டும் ஷாப்புக்கு போகவா?" என்று கேட்டவளிடம்,

"இதே டயலாக்கை தான் ரெண்டு, மூணு நாளுக்கு ஒரு தடவை சொல்லிடுற. பத்திரமா போயிட்டு வா! நான் இன்னிக்கு ட்யூட்டிக்கு போகல. லீவ் சொல்லிட்டேன்....... ஸோ நீயும் கொஞ்சம்.....!" என்று பேச்சை நிறுத்தியவனிடம் புன்னகையுடன்,

"ம்ம்ம்ம்.....நானும் கொஞ்சம் முடிஞ்ச வரைக்கும் லேட் பண்ணி ஆன்ட்டிக்கும், உனக்கும் ப்ரைவேட் ஸ்பேஸ் குடுக்கணும். அவ்வளவு தானே? விடு. எவ்வளவு நேரம் லேட்டா வர முடியுமோ அவ்வளவு நேரம் கழிச்சே வர்றேன்! கிளம்பலாமா மங்கை ஆன்ட்டி?" என்று கேட்ட படி புறப்பட திரும்பியவளிடம்,

"ஒரு நிமிஷம் நில்லுடா ஐஷு! சிவாவை உனக்கு ஏன் பிடிச்சிருக்குன்னு நீ சொல்லிட்ட..... அவனுக்கு உன்னை எதுக்கு பிடிச்சிருக்குன்னு கேக்க வேண்டாமா? சிவா நீ சொல்லுப்பா, ஐஷுவை உனக்கு எதுக்காக பிடிச்சிருக்கு?" என்று கேட்ட தன் அன்னையிடம் சற்று வெட்கத்துடன்,

"மாற்றமே இல்லாம போயிட்டு இருந்த என் லைஃப அழகாக்குறதுக்காக வந்தவ இவ தான்ம்மா! இவ கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம்ன்னா அவளோட ஸ்டேட்டஸ், படிப்பு, அவ கிட்ட இருக்கிற பணம் எதையுமே ஒரு பொருட்டாவே நினைக்க மாட்டா. ஒரே ஒரு சாக்லேட் வாங்கி குடுத்துட்டு இவ கிட்ட ப்ரெண்டு ஆகிடலாம். யூஎஸ்ல படித்திருந்தாலும், அந்த கல்ச்சரோட சின்ன சாயல் கூட இவகிட்ட தெரியாது. இவளோட அழகான தமிழ், பரதநாட்டியம், நாலு பேர் பக்கத்தில இருந்தா அவ கையில் இருந்து என் கைய எடுத்து விட்டுட்டு  கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா பிடிச்சுக்கோ மித்துன்னு சொல்ற பண்பாடு,
ஜீராவுல ஊறுன பனீர் ஜாமூன் மாதிரி இவளோட லேசா குண்டா இருக்கிற உடம்பு இது எல்லா........மே எனக்கு ரொம்ப ஸ்பெஷல்! நான் ஏன் இவளோட chubbyness பத்தி ஸ்பெஷலா சொன்னேன்னா மேடம்க்கு கொஞ்சம் காம்ப்ளக்ஸ்; அவங்களுக்கு நான் சரியான ஜோடியா இல்லையான்னு அவங்களா நினைச்சு ஃபீல் பண்ணுவாங்க. நீங்க சொல்லுங்கம்மா, நானும் இவளும் மேட் ஃபார் ஈச் அதர் தானே?" என்று கேட்ட மித்ரனிடம்,

"அதை இப்பவே முடிவு பண்ண முடியாது சிவா, நீங்க ரெண்டு பேரும் வாழுற லைஃப் தான் அதை டிஸைட் பண்ணணும்!" என்று சொன்னார் சந்திரதாரா.

"ஐஷு........ஏய் ஐஷு!" என்று முகத்திற்கு முன் கைகளை ஆட்டிய சந்திரதாராவை பார்த்து அசட்டு சிரிப்புடன், "சொல்லுங்க ஆன்ட்டி, மித்து எப்பவும் பேசுறத விட இன்னிக்கு ரொம்ப அழகா பேசுறானா.... க்யூட்டா ஷை ஆகுறான் வேற, அது தான் அசந்து போய் பார்த்துட்டு நின்னுட்டேன்!" என்று சொன்னவளிடம்,

"ம்! இதுக்கு தான்... ரெண்டு பேர் மனசுல இருக்கிறதும் வெளியே வந்துடட்டும்ன்னு தான் பேசச் சொன்னேன். மித்ரா நீயும் ஐஷு கூட கோவிலுக்கு போயிட்டு வாப்பா, நம்ம இதுவரைக்கும் பேசுனதெல்லாம் முடிஞ்சு போன பாஸ்ட்டை பத்தி தான், ஆனா இனிமே நீயும், அவளும் பேசிக்குறது உங்க ப்யூச்சரை பத்தி! போயிட்டு வாங்க!" என்றவரிடம்,

"டூ டேஸ் வெயிட் பண்ணுங்க ஆன்ட்டி, ஒரு வீல் சேர் வாங்கிட்டு வந்துடலாம். அப்புறம் பக்கத்தில இருக்கிற இடத்துக்கு எல்லாம் போயிட்டு வரலாம்!" என்று சொன்ன ஐஸ்வர்யாவிடம்,

"அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். நீங்க கிளம்புங்க. மங்கா கால் லேசா வலிக்குது. கொஞ்சம் பிடிச்சு விடுறியா?" என்று அவர் கேட்டதும் மித்ரன் பதறினான்.

"என்னாச்சுமா, நான் பார்க்கட்டுமா?" என்று கேட்டு வேகமாக தன் தாயின் காலடியில் அமர்ந்து காலை இதமாக அமர்த்தியவனிடம் கோபத்துடன்,

"என்ன பெரிய தம்பி இப்படி வெள்ளந்தி புள்ளையா இருக்கீங்க, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வர்றதுக்கு தான் சந்திராம்மா என்னை நிறுத்துறாங்க. இது கூட புரியாம பதறுறீங்க......போங்க; புள்ள கேட்டதெல்லாம் வாங்கி குடுத்துட்டு கூட்டிட்டு வாங்க. பாவம்....அது கிட்ட இருந்து புடுங்கி சாப்பிடாதீங்க!" என்ற அலர்மேல் மங்கையிடம்,

"நல்ல அட்வைஸ் தான் மங்கை அம்மா, இவ சாப்பிடுறதையெல்லாம் நான் கண்டிப்பா சாப்பிடவே மாட்டேன். போகலாமா வரு?" என்று கேட்டவனிடம் புன்னகையுடன் தலையாட்டி விட்டு வெளியே வந்து அவன் சைக்கிளின் அருகே சென்று நின்று கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

விரைவான தாவலுடன் இரண்டு இரண்டு படிகளாக கடந்து வாசலுக்கு வந்தவன், "எங்கம்மா கிட்ட இருந்து என்னை பிரிச்சு கூட்டிட்டு வந்த ராட்சசி நீ, உன்னை நான் சைக்கிள்ல உட்கார வச்சு கூட்டிட்டு போகணுமா....நெவர்! இந்தா காரை எடு. போகலாம்!" என்று சொல்லி விட்டு சாவியை அவள் கைகளில் கொடுத்தான்.

"மித்து பக்கத்து தெருவில இருக்கிற கோவிலுக்கு காரா? கொஞ்சம் ஓவரா தெரியல......?" என்று கேட்டவளிடம்,

"இல்ல அப்படியெல்லாம் எதுவும் எனக்கு தெரியலையே...... ரிலாக்ஸ்டா கொஞ்சம் ஊர் சுத்திட்டு வருவோமே? கிளம்பு கண்மணி!" என்றான் அவள் கன்னத்தில் முத்தமிட்டு.

"டேய் என்னடா வேலை பார்க்குற....!" என்றவளிடம் மிதப்பான ஒரு பார்வை பார்த்துவிட்டு,

"இனிமே கிஸ் குடுக்கும் போது கியர் கண்ட்ரோல் என் கிட்ட தான் இருக்கும். சும்மா என்னடா இது? நொன்னடா இதுன்னு கேள்வி கேட்டு இரிடேட் பண்ணிட்டு இருக்கக் கூடாது புரியுதா? உன்னை கிஸ் பண்ணும் போது தஜம்....தகதஜனு...தஜம்ன்னு நீ ஏதோ ஒரு மியூசிக் போட்டு டான்ஸ் ஆடுவியே....அது தான் காதுல கேக்குது!" என்றவனிடம் புன்னகையுடன்,

"மித்து....அதுக்கு பேரு தில்லானாப்பா!" என்றாள் ஐஸ்வர்யா.

"வாட்எவர்.... கிஸ் மட்டும் ஒண்ணா, ரெண்டா...... இல்ல ஒரு சீரிஸ்லயான்னு நான் தான் இனிமேல் டிஸைட் பண்ணுவேன். உள்ள கேக்குற தில்லானா லெவல்க்கு ஏத்த மாதிரி அது கூட, குறைய வரும். இனிமே வண்டி ஸ்மூத்தா போயிட்டு இருக்கும் போது ஆஃப் பண்ணிட்டு ஓடின; என் கிட்ட செம அடி வாங்குவ! சொல்லிட்டேன்!" என்று சொல்லிக் கொண்டு இருக்கையில் மித்ரனின் கைபேசி அழைத்தது.

"கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணினா பொறுக்காதே.... எந்த பிரகஸ்பதிடா இந்த நேரத்தில் உயிரை வாங்குறது?" என்று டிஸ்ப்ளேவை பார்த்தவன் சற்று பதட்டத்துடன்,

"வரு பேபி..... சௌஜன்யாம்மா; இவ எதுக்கு இப்போ நம்மள கூப்பிடுறா; இவ தொல்லையில்லாம கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தேன். மறுபடியும் ஆரம்பிச்சுட்டாளா?" என்று தலையை பிடித்துக் கொண்ட மித்ரனிடம்,

"ஃபீல் பண்ணாத மித்து, என்ன விஷயம்ன்னு தெரியலையே! எடுத்து பேசு....!" என்றவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு போனில் பேசினான் மித்ரன்.

ஐந்து நிமிடங்கள் கழித்து போனை வைத்து விட்டு, "உன்னையும், என்னையும் அவ மீட் பண்ணணும்னு சொல்றா! இந்த ப்ராப்ளம சீக்கிரம் முடிச்சுடு வரு; நானே இன்னும் கல்யாணத்தை பத்தி ஒண்ணும் பேச மாட்டேங்கிறாங்கன்னு கவலையா இருக்கேன். இதுல இந்த மாதிரி கொசுத் தொல்லை வேற.....!" என்று எரிச்சல் பட்டவனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு,

"நீ திடீர்ன்னு ரொம்ப மாறிட்ட மாதிரி தோணுது மித்து, உன் கேரக்டர்ல பயங்கர சேன்ஜ் வந்துடுச்சு!" என்றாள் ஐஸ்வர்யா.

மித்ரன் பெரிய புன்னகையுடன், "எனக்கு ஒரு ப்ராப்ளம் வந்தா பார்த்துக்க அம்மா இருக்காங்க, லவ்லி வாட்டர் பெட் இருக்கா, அருள் ஸார் இருக்காங்க, என் தம்பி இருக்கான், இதுக்கும் மேல எவனா இருந்தாலும் வாங்கடான்னு பட்டையை கிளப்புற ஒரு ஷீல்டு நம்ம மங்கை அம்மா இருக்காங்க. இந்த சௌஜன்யா எல்லாம் ஜுஜுபி, நாங்க எல்லாம் யாரையும் பார்ப்போம்!" என்றவனிடம் அடக்க முடியாத சிரிப்புடன்,

"சரி பார்த்துக்க மித்து....!" என்று சொன்ன ஐஸ்வர்யாவிடம் பொய்க் கோபத்துடன்,

"நீ எப்படி ப்ராப்ளம் சால்வ் பண்ணப் போறேன்னு நான் பார்க்க மட்டும் தான் செய்வேன் வரு பேபி; ஆனா அவ கிட்ட பேசப் போறது நீ தான்!" என்று சொல்லி விட்டு அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு இருவரும் கோவிலுக்குள் சென்றனர்.

வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro