Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 17

ஐஸ்வர்யா சந்திரதாராவின் அருகில் வந்து, "ஆன்ட்டி நேத்து என்னோட கேக்கை புடுங்கி சாப்பிட்டான்! வழிச்சு எடுத்தா கூட ஒரே ஒரு பீஸ் அளவுக்கு தான் தேறும். நானே டாக்டர் ஸார் கிட்ட கேட்டு கஷ்டப்பட்டு வாங்கினேன். அதையும் இவன் எடுத்துக்கிட்டா என்ன பண்றது?" என்று குறைகளை அடுக்கிக் கொண்டே போனவளை சந்திரதாரா மலைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையில், அருள்மொழி குறுக்கிட்டு,

"ஐசு நேத்ரன் அம்மா கிட்ட உன்னை முதல்ல இண்ட்ரோ குடுத்துட்டு அப்புறம் கம்ப்ளைண்டை ஆரம்பிடா!" என்று சொன்னவுடன் ஐஸ்வர்யா ஸ்ரீ கோபத்தில் முகம் சிவந்தாள்.

மித்ரன் அவளின் முகத்தைப் பார்த்து விட்டு வேகமாக சமையல் அறைக்குள் சென்று காஃபி தயாரிக்கும் பணியை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டான். அருள்மொழியும், "ஒரு பிஸினஸ் கால் பேசணும். இதோ வந்துடுறேன்! நீங்க பேசிட்டு இருங்க!" என்று தப்பித்து ஓடி விட்டார்.

"ஐஷுமா! எனக்கும் ஆபிஸ்ல ஒரு முக்கியமான அசைன்மெண்ட் இருக்கு. நானும் அப்படியே கிளம்பட்டுமா?" என்று கேட்ட நேத்ரன் கழுத்தை வழக்கம் போல பின்புறம் பற்றியிருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"ம்ப்ச்! ஐஷுமா நீ நல்ல பொண்ணுல்ல..... என்னை
விட்டுடு செல்லம்!" என்று அவன் அவனது அண்ணியிடம் கெஞ்சிக் கொண்டிருந்த போது,

"ஏய் புள்ள.... என்ன அடாவடித்தனம் பண்ணிட்டு இருக்க! நீ தான் எங்க சின்னத்தம்பியை பெத்து பேர் வச்சாப்புல என்னா இது நேத்து, நாளைக்குன்னு சொல்லிட்டு... கொஞ்சம் கூட பொம்பள புள்ளைங்கிற அச்சம் இல்லாம.... எங்க சின்னத்தம்பி கழுத்தில கையை வச்சுட்டு இருக்க.... நீ அவுகளுக்கு முதலாளின்னா அதெல்லாம் உன் வேலை பார்க்குற இடத்தோட வச்சுக்க.... எங்க கண்ணு முன்னால தம்பியை மரியாதை குறைவா நடத்தின..... நான்
சும்மா இருக்க மாட்டேன். பார்த்துக்க! சின்னத்தம்பி நீங்களும் என்னத்துக்கு இந்த புள்ள கிட்ட கெஞ்சிட்டு இருக்கறது....? ஓங்கி கன்னத்துல ஒண்ணு குடுக்க வேண்டியது தானே? டாக்டரும், நம்ம வீட்டுக்கு வந்த ஆளும் இவளுக்கு பயந்து ஓடி ஒளிஞ்சுட்டாவ.... ஆனா நாம எதுக்கு பயப்படோணும்?" என்று கேட்ட அலர்மேல் மங்கையிடம்,

"யார் நீங்க? உங்க பேரு என்ன? உங்க தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. உங்க சின்னத்தம்பிக்கு என்னை அடிக்கிற அளவுக்கு தைரியம் இருக்கா? இருக்கிறது ஒரு தம்பி.... அப்புறம் எதுக்கு இவரை சின்னத்தம்பி ன்னு கூப்பிடுறீங்க?" என்று கையைக் கட்டிக் கொண்டு நின்றவளிடம் சீறிக் கொண்டு,

"இந்தா என் பேரு மங்கா..... எங்க சந்திராம்மாவோட வேலையெல்லாம் பாக்குறவ. பிறந்தது ஒரு ஊரு, பொழைச்சது ஒரு ஊரு. அதனால நமக்கு பாசை கொஞ்சம் தகராறு தான் கண்ணு. எங்கிட்ட தேவையில்லாம வச்சுக்காத! எங்க குடும்ப விஷயத்தில அநாவசியமா தலையிடாத! என்ன தம்பி இது பாட்டுக்கு எதேதோ பேசிட்டு இருக்கு. நீங்களும் நட்டு வச்ச மரம் மாதிரி அப்படியே நிக்குறீங்க? ஓங்கி அது கன்னத்தில ஒரு அறை விடுங்க! அப்புறம் என்ன வருதோ அதை நாம பார்த்துக்கலாம்!" என்று குதித்தவரிடம்,

"மங்கா அமைதியா இரு! எல்லார் கிட்டயும் எடுத்தவுடனே தகராறு பண்ணிட வேண்டியது. நம்ம நேத்ரனுக்கு சம்பளம் குடுக்குறவங்க; நம்மளை மதிச்சு அன்பா வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்காங்க. கொஞ்சம் கூட ஈகோவே இல்லாம நேத்ரனை ப்ரெண்டு மாதிரி ட்ரீட் பண்றாங்க. அவனும் இவங்களை பேர் சொல்லி செல்லம்ன்னு கூப்பிடுற அளவுக்கு ப்ரெண்ட்லியா தான் இருக்கான். இதையெல்லாம் கவனிக்கவே இல்லையா நீ?" என்று கேட்ட சந்திரதாராவிடம்,

"ஆமாம்மா.... இதெல்லாம் நான் யோசிக்கல பாரேன்! இந்த புள்ளைய நீ டாவு கட்டுறியா சின்னத்தம்பி?" என்று கேட்ட அலர்மேல் மங்கையிடம் அளவு கடந்த கோபத்துடன்,

"வாயை மூடு மங்கா! ஏதாவது நீ பாட்டுக்கு உளறாத. ஐஷுமா ஐ'ம் ரியலி வெரி ஸாரி டா!" என்று மங்கையை அதட்டி விட்டு ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு இருந்தான் நேத்ரன்.

மித்ரன் காஃபி கோப்பைகளுடன் வந்து கொண்டிருக்க ஐஸ்வர்யாவின் கோபம் மொத்தமும் அவனிடம் திரும்பியது. அவன் சட்டையை இரு கைகளாலும் கொத்தாகப் பற்றிக் கொண்டு,

"பாரு! எல்லா தப்பும் உன்னால தான், இந்த ஆன்ட்டி என்ன பேசினாங்கன்னு கேட்ட தானே? நான் யாருன்னு நீ தான் ரெண்டு ஆன்ட்டி கிட்டயும் சொல்லணும். நான் சொல்ல மாட்டேன்!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ சிறு விம்மலுடன்.

"காஃபி உன் கையில கொட்டிடப் போகுது கண்மணி! கொஞ்சம் நகர்ந்து நில்லு!" என்று சொல்லி தன் இடப்புறம் நகருமாறு கண்ணசைக்கவும் அவள் அவன் கைகளில் கை கோர்த்து கொண்டு அவன் அருகே நின்று கொண்டு இருந்தாள்.

"அம்மா, காஃபி எடுத்துக்கோங்க. மங்கை அம்மா நீங்களும் தான். இவங்க பேரு ஐஸ்வர்யா ஸ்ரீ! நேத்ரனுக்கு மட்டும் இல்ல எனக்கும் இவங்க தான் பாஸ் கம் ஹோம் மினிஸ்டர்; இன்னும் எங்களுக்கு கல்யாணம் ஆகல, பட் இவ தான் என்னோட பெட்டர்ஹாஃப்! பார்க்க தான் இவ்வளவு பெரிசா வளர்ந்து இருக்கா. ஆனா இன்னும் சாக்லேட், ஐஸ்க்ரீம், கேக், பீட்சா, பானிபூரி எல்லாத்துக்கும் நம்ம கூட சண்டை போடுவா. ப்ரேக் பாஸ்ட் ரெடி பண்ணிட்டேன். சாப்பிடும் போது இவளைப் பத்தி இன்னும் நிறைய சொல்றேன்! எங்க ஜோடிப்பொருத்தம் எப்படி இருக்கு மங்கை அம்மா?" என்று கேட்ட மித்ரனிடம்,

"ரொம்ப அழகா இருக்கு நீங்க குடித்தனம் நடத்துற லட்சணம், இந்த வாயாடி என்னடான்னா எப்படா சண்டையை வளப்பம்னு அலையுறா; இவ மாமன் காரர் போனை புடுச்சிக்கிட்டே அலையுறாரு. இதுக ரெண்டுக்கும் நீங்க ஆக்கிப் போட்டுட்டு இருக்கீங்களா டாக்டர் தம்பி? மதியத்துல இருந்து இந்த மங்கா சமையல் தான், இந்த புள்ளைய தவிர எல்லாரும் குச்சி குச்சியா நிக்கிறீங்க, என் கைப்பக்குவத்தை வயிறார சாப்பிட்டு நல்லா உடம்பில வலுவேத்துற வழியை பாரு டாக்டரு! வா சாப்பிட எடுத்து வக்கிறேன்!
இந்த புள்ளைய கல்யாணம் பண்ணி வாயை அடக்கி வை!" என்று சொல்லி விட்டு சமையலறைக்குள் நுழைந்து ஆராய்ந்து கொண்டு இருந்தார் அலர்மேல் மங்கை.

சந்திரதாரா அவரை எரிச்சலுடன் பார்த்து விட்டு ஐஸ்வர்யாவுடன், அருள்மொழியும் அங்கு வந்த போது அலர்மேல் மங்கையின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.

"விடுங்க ஆன்ட்டி, மங்கை ஆன்ட்டி செமையா ஆர்க்யூ பண்றாங்க. அவங்க பேச்சுல எனக்கு கோபமே வரல!" என்று ஐஸ்வர்யாவும்,

"சொல்றதை கொஞ்சம் கரடு முரடா சொல்றாங்க. ஆனாலும் எவ்வளவு நீளமான வாய்!" என்று கிண்டலாக அருள்மொழியும் முடித்து விட்டனர்.

காலை உணவை சாப்பிட்டு விட்டு நேத்ரனும், அருள்மொழியும் அலுவலகத்திற்கு கிளம்பி தயாராக வந்தவுடன் ஐஸ்வர்யா ஸ்ரீ அவர்களிடம் வந்து, "மாமா, ஆன்ட்டி 2 பேரும் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்ட்ஸ். ஸோ நான் தானே அவங்கள நல்லா பார்த்துக்கணும்! ஆஃபிஸுக்கு வந்து டெய்லி பைல் பார்க்குற வேலை எல்லாம் போர் அடிக்குது, ஸோ நீயே எப்பவும் போல எல்லா வேலையும் பார்த்துடு. தேவைப்பட்டா நேத்துவையும் உன் கூட ஹெல்ப்புக்கு வச்சுக்க!" என்றவளிடம்,

"இப்போ என்ன ஐஷு சொல்ல வர்ற; வீட்லயே உட்கார்ந்து சாப்பிட்டு, கதை பேசி, அரட்டை அடிச்சுட்டு இருக்கப் போற! அதுக்கு தானே இவ்வளவு பெரிய டயலாக் பேசிட்டு இருக்க..... போ! போய் ஏதாவது உருப்படியான வேலை இருந்தா பாரு; இல்லையா கொஞ்சம் சிப்ஸ் எடுத்து வாயில அடைச்சுக்கோ!" என்று ஓர் வேகத்துடன் சொல்லி விட்டு தன் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு அணைத்து விட்டு,

"பை மா! ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுறேன்! அதுவரைக்கும் என்ன வேணும்னாலும் ஐஷு கிட்ட கேளுங்க. மங்கா ஐஷு கூட தேவையில்லாம வாக்குவாதம் செய்யாத! ஐஷுமா மிட்டு பேபி மாதிரி இனிமே அம்மாவும், மங்காவும் உன் ரெஸ்பான்ஸிபிளிட்டி. சிவாண்ணா ஆஃபிஸ் கிளம்பறேன். பை அண்ணா!" என்று சொல்லி மித்ரனையும் அணைத்து விட்டு புறப்பட போனவனிடம் சந்திரதாரா ஒரு திகைப்புடன்,

"நேத்ரா ஒரு நிமிஷம் நில்லு!" என்றார். தயங்கியபடி அவர் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து கொண்டவனிடம்,

"என்ன நடக்குது இங்க? ஐஸ்வர்யாவும், டாக்டர் ஸாரும் உண்மையிலேயே உன் பாஸும், ப்ரெண்டும் தானா? நீ யார் கிட்டயும் இவ்வளவு உரிமை எடுத்துக்கிட்டு பேசி இதுவரைக்கும் நான் பார்த்தேயில்லையே.....
அம்மாவுக்கு தெரியக்கூடாதுன்னு எதையும் மறைக்கிறியா நேத்ரா?" என்று அவள் கண்களை பார்த்து கேட்டவரின் பார்வையை சந்திக்க முடியாமல் தலை கவிழ்ந்தான் நேத்ரன்.

"ம்மா! ஒரு நிமிஷம் நான் பேசலாமா?" என்று கேட்ட மித்ரனிடம்,

"இருங்க டாக்டர்.... ப்ளீஸ்! என் பையன் என் கிட்ட எதையோ மறைக்க முயற்சி பண்றான். அவன் பிஹேவியரே ஒரு வாரத்தில மொத்தமா மாறிடுச்சு. கோபம் இல்ல, சிடுசிடுப்பு இல்ல. விரக்தி இல்ல. வாழ்க்கைய ஒரு புது உற்சாகத்தோட ஃபேஸ் பண்றானே..... ஆனா இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்ன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்!" என்று கட்டளைக் குரலில் கேட்டவரிடம்,

"இ.....இல்லம்மா..... சி...... டாக்டர் ஸார் தான் உங்க ஹெல்த்துக்கு எந்த ப்ராப்ளமும் வந்துடக்கூடாதுன்னு சொன்னாங்க!" என்று அவன் வார்த்தைகளுக்கு தடுமாறவும் விரக்தி சிரிப்புடன்,

"உங்க அண்ணனை தொலைச்சோம். அப்பவும் நான் நல்லா தானே இருந்தேன்! உங்க அப்பாவை ஆக்ஸிடென்ட் க்ரியேட் பண்ணி  கொன்னாங்க.... அதுக்கப்புறம் கூட என் உயிர் போகாம இன்னும் நல்லா தானே வாழ்க்கை போயிட்டு இருக்கு..... எவ்வளவு அவமானம், எத்தனை பேச்சு..... எல்லாத்தையும் தாங்கிட்டு செத்துப் போகாம தானே இருக்கோம்! இதுக்கும் மேல நமக்கு என்னடா பிரச்சனை வந்து என் உடம்புக்கு என்ன தான்டா ஆகிடப் போகுது? என்ன விஷயம்ன்னு சொல்லு நேத்ரா!" என்று சந்திரதாரா கேட்டுக் கொண்டிருக்க ஐஸ்வர்யாவின் ஒரு தள்ளலில் மித்ரன் தம்பியின் அருகில் தானும் சென்று மண்டியிட்டு அமர்ந்து கொண்டான்.

"ஸாரிம்மா! இவ்வளவு கஷ்டப்பட்டீங்கன்னு தெரியும். ஆனா நீங்க சொல்லி அதைக் கேக்கும் போது தாங்க முடியலம்மா! சோட்டுவை நீங்க ஹக் பண்ணுறப்ப எனக்கு ரொம்ப ஏக்கமா இருந்ததும்மா. இதை எப்பவும் பார்த்துட்டே இருக்க முடியும்ன்னு தோணல. ஐ'ம் ஸாரிம்மா!" என்று அவன் அன்னையின் மடியில் கனம் கொடுக்காமல் இலகுவாக சாய்ந்து கொண்டு பிதற்றிக் கொண்டிருந்தவனை சிறு முறுவலுடன் பார்த்து கொண்டு சந்திராவின் அருகில் உள்ள ஸோஃபாவில் அமர்ந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"ஆன்ட்டி.... சிவா உங்க முதல் பையன். சிவ மித்ரன்! தொலைஞ்ச உங்க பையன் உங்களுக்கு திரும்ப கிடைச்சுட்டான். அங்கிளை தவிர நீங்க இழந்தது எல்லாமே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் ஆன்ட்டி, உங்க கண்ல கண்ணீர் வர வைச்ச அந்த மூணு பேரும் ஒரு நாள் வருத்தப்பட்டு அழுவாங்க!" என்று ஐஸ்வர்யா சொல்லவும் சந்திரதாரா பதட்டத்துடன்,

"ஐஷு வேண்டாம் கண்ணு, நம்ம வீட்டுக்கு வாழ வரப் போற பொண்ணு உன் வாயால அவங்கள சபிக்காதம்மா! அவங்களும் நல்லா இருக்கட்டும். கடவுள் அருளால தான் உங்க மாமா உதவியால தான் இத்தனையும் நடந்திருக்குன்னா கடவுளுக்கும், உங்க மாமாவுக்கும், காலம் பூராவும் நன்றி சொல்லிட்டு இருக்கணும்!" என்று சொன்ன சந்திராவிடம்,

"ஆன்ட்டி ரெண்டும் அருள் தானே....ஏதாவது ஒரு அருளுக்கு சொன்னா போதும். மோர்ஓவர் எங்க மாமா மித்துவை சரியாவே வளர்க்கல ஆன்ட்டி.....கிட்டத்தட்ட ஒரு சாமியார் ரேன்ஜீக்கு.....!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவளை

"வரு.....கீப் கொயட்!" என்ற மித்ரனின் அமர்த்தலான குரல் அடக்கியது.

"சரிப்பா....நான் பேசல! அவரை சொன்னா இவனுக்கு எதுக்கு கோபம் வருது?" என்று முணங்கிக் கொண்டிருந்தவள் தலையில் குட்டினான் நேத்ரன்.

"அட பிசாசே! ஏன்டா இப்படி அண்ணனும், தம்பியும் ஒரு சின்னப் புள்ளைய பாடாய்படுத்துறீங்க.....
ஐஸ்வர்யா ஸ்ரீ முகத்தை பார்த்தா
உங்களுக்கே பாவமா இல்லையாடா?" என்று உதடு பிதுக்கியவளிடம்,

"இல்லடா ஐஷுமா! அருள்மொழி ஸார் ஹெல்ப் பண்ணினதால தான் நம்ம இன்னிக்கு ஒரே பேமிலி ஆகியிருக்கோம். ஸோ உங்க மாமாவை குறை சொல்லணும்ன்னா தனியா நீயும், அவரும் பேசிட்டு இருக்கும் போது சொல்லு. சிவாண்ணாவும், நானும் இருக்கும் போது அவரை குறை சொன்ன..... இப்படி தான் நிறைய வாங்குவ!" என்றான் சிரிப்புடன்.

"போடா.... அண்ணின்னு ஒரு மரியாதையும், பயமும் கிடையாது. இரு உன்னை கரெக்டா லாக் பண்ற நேரத்துல பண்றேன்!" என்று மிரட்டியவளிடம் புன்னகையுடன்,

"ஈவ்னிங் வந்து உன்னை ஒரு அவுட்டிங் கூட்டிட்டு போகலாம்ன்னு நினைச்சேன். நீ என் மேல கோபமா இருந்தா சரி, நாம சண்டை போட்டுக்கலாமா?" என்று புருவம் உயர்த்தியவனிடம்,

"இல்ல....இல்ல! சண்டை வேண்டாம்; நேத்து கூட சேத்து தான், ஹேண்ட் ஷேக் பண்ணிக்க பார்ப்போம்!" என்று கை நீட்டினாள் ஐஸ்வர்யா.

அவள் கைகளைப் பற்றிக் குலுக்கியவன், "ஈவ்னிங் 6 மணிக்கு ரெடியா இரு!" என்று சொல்லி விட்டு தன் அம்மாவின் அருகில் வந்தான்.

மித்ரனும், சந்திராவும் அருள்மொழியிடம் நன்றி உரைத்து நெகிழ்ந்து போய் அமர்ந்திருக்க,

"மித்து எழுந்துரிச்சு ஹாஸ்பிட்டலுக்கு கிளம்புப்பா! அடுத்த ஷிப்ட்டுக்கு ஆள் வந்துட்டாங்க பாரு, நேத்து உனக்கு இப்போ எதுவும் ஆன்ட்டியை கட்டிப் பிடிச்சு அழணுமாடா?" என்று கேட்டவளிடம் முறைப்புடன்,

"மரியாதையா ஓடிடு, இல்லன்னா மறுபடியும் என் கிட்ட அடி வாங்குவ!" என்று சொன்ன நேத்ரனிடம் அழகு காட்டி விட்டு உள்ளே சென்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

அருள்மொழி கிளம்பி காரில் ஏறப் போனவர் வாசலில் ஆணி அடித்தவர் போல் நின்று விட்டார்.

"என்ன ஸார் ஆச்சு? வாங்க போகலாம்!" என்ற நேத்ரனிடம்,

"போகணும் தான்டா, டைமாச்சு. ஆனா உங்க மங்கா ஆன்ட்டி கார் பக்கத்தில நின்னுட்டு இருக்காங்க. ரொம்ப மரியாதையா பேசுறாங்களா.... அதனால தான் கொஞ்சம் ஜெர்க் ஆகி நின்னுட்டு இருக்கேன்!" என்றவரிடம்,

"அவங்க அப்படித்தான் ஸார், மனசுல ஒண்ணு வச்சுட்டு வெளியே ஒண்ணு பேச தெரியாது. வாங்க போய் என்ன தான் சொல்றாங்கன்னு கேட்டுட்டு ஆஃபிஸ்க்கு கிளம்பலாம்!" என்று சொல்லி விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு காத்திருந்தான் நேத்ரன்.

அவர் சற்று யோசனையுடன் அலர்மேல் மங்கையின் புறம் வர அவர் சட்டென்று அருள்மொழியின் காலில் விழுந்து விட்டு எழுந்தார்.

"என்னாச்சுமா..... நீ என்ன பண்ணினாலும் பயமா இருக்கு. எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்!" என்றார் அருள்மொழி.

"சாரி ஸாரு, நீ எங்களுக்கெல்லாம் எவ்வளவு பெரிய உதவி செஞ்சுருக்கன்னு தெரியாம உன்னைய ரொம்ப மரியாதை இல்லாத பேசிட்டேன். மன்னிச்சுடு!" என்றார் சிறு தலையசைவுடன்.

"இப்போ ரொம்ப மரியாதையா பேசிட்டியாக்கும்!" என்று நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டவர்,

"சரிம்மா! மன்னிச்சுட்டேன். தயவு செய்து இனிமே கால்ல விழுந்து பயமுறுத்தாத. நேத்ரா கிளம்பலாம்!" என்று சொல்லி விட்டு காரில் அமர்ந்து கொண்டு கிளம்பி விட்டார்.

ஐஸ்வர்யா ஸ்ரீ அறைக்கு வெளியே கதவு மென்மையாக தட்டப்படவும், "பாவா இன்னும் ட்யூட்டிக்கு கிளம்பல போலிருக்கே....இன்னும் கிளம்பாம இங்க என்ன பண்ணப் போறான்? பிள்ளையை கொஞ்ச வருவானா இருக்கும்......" என்று நினைத்துக் கொண்டு கதவை திறந்தாள்.

"ஹாய் மித்து பாவா.....நல்ல வேளை ரொம்ப நாளைக்கு டாக்டர்ன்னு கூப்பிட வேண்டியதிருக்குமோன்னு நினைச்சு பயந்துட்டு இருந்தேன். இவ்வளவு சீக்கிரம் ஆன்ட்டிட்ட பேசிடுவன்னு நினைக்கல. என்னாச்சு.....?" என்று கேட்டவளை ஒரு விதமாக பார்த்து கொண்டு இருந்தவன் அணைத்து கொண்டான். வழக்கம் போல மிதமான அணைப்பாக இல்லாமல் ஏதோ உரிமைமீறல் போல் அவன் அணைப்பின் இறுக்கம் கூடிக் கொண்டே போனதும்,

"மித்த்த்து........எனக்கு வலிக்குதுமா! போதும் விடு ப்ளீஸ்!" என்று திணறியவளிடம்,

"என்னது.....போதும் விடுவா? என் சந்தோஷத்தில 10% கூட நான் இன்னும் உன் கிட்ட ஷேர் பண்ணி முடிக்கல. அதுக்குள்ள விடுன்னு சொன்னா என்ன அர்த்தம் வரு பேபி?" என்று சிணுங்கியவனிடம்,

"போ! ஹால்ல இருக்கிறப்ப மட்டும் திட்டுறது, ரூமுக்கு வந்து கட்டிப் பிடிச்சுக்குறேன்னு சொல்றது.... போ ஒண்ணும் வேண்டாம்!" என்று சொல்லி முகம் திருப்பிக் கொண்டவள் விரல்களை வருடி முத்தமிட்டவன்,

தென்றலாய் உன் மெல்லிடை வருடி,
வாடையாய் உன் வதனத்தில் நுழைவேன்!
கொண்டலாய் அனுமதி கேளாமல் உன் அங்கத்தில்
புகுந்து உனை அணைத்து கொள்ள வருவேன்!
மேலையாய் உன் மேனி தழுவி உன்னுள் மயங்க
தகிக்கும் என் மோகத்தின்
வெப்பம் இத்துனை
காற்றால் சற்று அடங்கட்டும்!!
எந்த திசையில் இருந்து
வீசினாலும்,
எந்த பெயரிட்டு அழைத்தாலும்
உன் உயிர் காற்று
நீயே தான் சகியே!
உறவாக வா கண்மணி!!

"ரொம்ப நாளாச்சுல்ல கவிதை சொல்லி..... ஃப்ளோவில வந்தது, நல்லா இருக்காடா?" என்று கேட்ட மித்ரனிடம்,

"மித்து நீ வர வர சரியில்ல.... பெர்மிஷன் கேக்காம கட்டிப் பிடிச்சுக்குற....ஒரு மார்க்கமா கவிதை சொல்ற.....இதெல்லாம் நல்லா இல்ல!" என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேறயவளிடம்,

"ஏய் நில்லும்மா! அப்படி இருந்தாலும் தப்புங்கிற; இப்படி இருந்தாலும் தப்புங்கிற! நான் எப்படித்தான் இருக்கிறது..... சொல்லிட்டு போ!" என்று கேட்ட படி ஐஸ்வர்யாவை பின்தொடர்ந்தான் சிவமித்ரன்.

வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro