மித்ரன் பரபரவென்று வீட்டிற்குள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தான். அருள்மொழி அமைதியாக அவனுடைய ஆர்ப்பாட்டங்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார். இன்று காலை சந்திரதாரா, நேத்ரன், அலர்மேல் மங்கை மூவரும் இங்கு வருகின்றனர். ஐஸ்வர்யா ஸ்ரீ நேற்றிரவே மித்ரனிடம் அனைவரும் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டாள். மிட்டு பேபியை கைகளில் வைத்து வருடிக் கொடுத்து கொண்டு இருந்தாள்.
பசியை உணர்ந்தால் கொடுக்கும் பாலை சரியாக குடிக்கும் அளவிற்கு பழகியிருந்தது மித்ரனின் பிள்ளை. தன் காதலியின் செல்லப்பிள்ளை என்பதால் அவள் ஊருக்கு சென்ற போதும் மித்ரனும், அருள்மொழியும் தான் அதைப் பத்திரமாக பார்த்துக் கொண்டனர்.
மித்ரன் முகத்தில் யோசனையுடன் அவளிடம், "வரு....அம்மா என்ன நினைப்பாங்களோ....
தெரியலையேடா! இங்க இருக்கறது கம்பர்டபிளா இல்லன்னா நான் அங்க அவுட் ஹவுஸ் போர்ஷன்லயே......!" என்று பேசிக் கொண்டிருந்தவனை வாயில் விரல் வைத்து அடக்கினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"என்னடா வரு பேபி?" என்று புன்னகையுடன் புருவம் உயர்த்தியவனிடம்,
"ஆன்ட்டிக்கு அங்க சின்ன வீட்டுல இருக்கிறது வசதியா இருக்காதுன்னு நீ தானடா சொன்ன? அதனால ஆன்ட்டி, மங்கை ஆன்ட்டி, நேத்து மூணு பேரும் இங்க தான் இருப்பாங்க. உனக்கு பிடிச்சிருந்தா எங்க கூட வந்து இரு! இல்லன்னா எப்பவும் போல உன் போர்ஷன்லயே இருந்துக்கோ!" என்ற ஐஸ்வர்யாவிடம் பொய்க் கோபத்துடன்,
"வரு பேபிக்கு மித்து வேண்டாமா? அம்மா, மங்கை அம்மா, சோட்டுவை எல்லாம் இங்க ஆசையா கூப்பிடுற. என்னை மட்டும் நீ வான்னு கூப்பிட மாட்டியா?" என்று கேட்டவனிடம் சலிப்புடன்,
"ஏற்கனவே உன்னால டெய்லி ஆறு மணிக்கு எழுந்துரிச்சு க்ளாஸுக்கு வரணும்ங்கிற இம்சை. இதுல நீ வீட்டுக்குள்ளயே இருந்தா 5 மணிக்கு மேல என்னை பெட்ல படுக்க விட்டு வைப்ப? ஏன்டா தெரியாம தான் கேக்குறேன். உன் பாடியில டெஸ்டோஸ்டிரோன் ஏதாவது வேலை பார்க்குதா....இல்லையா? ஊர்ல இருக்கும் போது இப்பவே பார்க்கணும் அதக் குடுக்கணும், இத குடுக்கணும்ன்னு சொன்ன....! நானும் நம்ம தலைவருக்கு காதல் நிரம்பி வழிஞ்சுடுச்சு; ஊருக்கு போனவுடனே ஹக் கிடைக்கும், கிஸ் கிடைக்கும்ன்னு நினைச்சு வந்தா, பல்லைக் காட்டிக்கிட்டு ஹாய் சொல்ற, இதை சொல்றதுக்கு தான் அவ்வளவு சீன் போட்டியா?" என்று அவள் அவனிடம் புலம்பிக் கொண்டு இருந்தாள். அவன் புன்னகை சிரிப்பாக விரிவடையவும் ஐஸ்வர்யா கடுப்படைந்து,
"எல்லாத்துக்கும் சிரிக்காதடா, பத்திகிட்டு வருது! நான் குண்டா இருக்கிறதால உனக்கு என்னை பிடிக்கலையா மித்து?" என்று கேட்டவளை கோபத்துடன் கையைப் பிடித்து தரதரவென இழுத்து சென்றான் சிவமித்ரன்.
"ஐயோ.....மிட்டு பேபி...கீழே விழுந்துடாமடா! என்னடா பண்ற....கையை விடு மித்து!" என்ற அவள் சத்தத்தை கேட்டு அருள்மொழி மித்ரனிடம்,
"என்னடா மித்ரா....! ஐசு மேல எதுக்கு இப்படி கோபப்படுற?" என்று கேட்டார்.
அவன் ஒரு முறைப்புடன், "உங்க மருமகளுக்கு கொஞ்சம் தனியா க்ளாஸ் எடுக்க வேண்டியது இருக்கு. பத்து நிமிஷத்துல வர்றேன்!" என்று சொல்லி விட்டு "நீ வா" என்று சொல்லி தன் கைப்பிடியை விடாமல் பற்றி அவளது அறைக்கு அழைத்து சென்றான்.
"டேய்.....எதுவா இருந்தாலும் சரி, ஹால்லயே வைச்சு போடுங்க உங்க சண்டையை; ஐசுக்குட்டியை அடிச்சிடாதடா! பாவம் என் மருமக, உன் முரட்டுத்தனத்தை எல்லாம் தாங்க மாட்டா!" என்று சொன்ன அருள் மொழியிடம் ஒரு வேகமான பெருமூச்சுடன்,
"ஸார் உங்களுக்கு இதெல்லாம் புரியாது. ஒரு கல்யாணம் பண்ணுங்கன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்குறீங்க. அம்மா, சோட்டு, மங்கை அம்மா வந்தாங்கன்னா வெல்கம் பண்ணி உள்ள உட்கார வைங்க. நான் இவளை......
கடிச்சு தின்னுட மாட்டேன்!" என்று சொல்லி விட்டு அழைத்து சென்றான்.
ஐஸ்வர்யா ஸ்ரீயை அவளது அறைக்குள் இழுத்து வந்து கதவை மூடி விட்டு அவள் கைகளில் இருந்த பிள்ளையை பத்திரமாக அதன் இருப்பிடத்தில் சேர்த்து விட்டு அவள் முன்பு வந்து கையை கட்டிக் கொண்டு நின்றான் மித்ரன். "பாவா செம கடுப்பில இருக்கான். இப்போ எனக்கு ஒரு அறை விழப் போகுது!" என்று நினைத்துக் கொண்டு தலை கவிழ்ந்து இருந்தவளை ஒற்றை விரலால் கன்னத்தை தூக்கி அவள் கண்களில் இவன் பார்வையை கலந்தான் சிவ மித்ரன்.
"டெஸ்டோஸ்டிரோன்
ஹார்மேன் என் உடம்பில வேலை செய்யுமா? செய்யாதான்னு கேட்டீங்களே மேடம்? அது கரெக்டான லெவல்ல தான் வேலை பார்க்குதுன்னு உங்க கிட்ட ஃப்ரூவ் பண்ணி காட்டட்டுமா?" என்று கேட்டு அவளருகில் நெருங்கியவளிடம்,
"மித்து வில்லங்கமா ஏதாவது பண்ணிடாதடா செல்லம்! சும்மா பேசி உன்னை சீண்டினேன். மத்தபடி எனக்கு சத்தியமா வேறெந்த ஐடியாவும் இல்ல!" என்றவளை நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டவன்,
"உனக்கில்ல சரி..... ஆனா எனக்கு வந்துடுச்சு! எந்த லெவல் வரைக்கும் போனா ஏவா போகும்?" என்று கேட்டு யோசித்து கொண்டிருந்தவனிடம்,
"ஏய்....என்னடா சும்மா கட்டிப் பிடிச்சு நின்னுட்டு டயலாக் பேசிட்டன்னா..... நான் பயந்துடுவேனா? விட்டுடு பாவா! ப்ளீஸ்" என்று கெஞ்சியவளின் மூக்கை தன் மூக்கால் உரசியவன்,
"எஸ்கிமோ, பட்டர்ஃபிளை கிஸ் எல்லாம் கேட்டியே..... இப்போ குடுக்கட்டுமா கண்மணி?" என்று புன்னகைத்தவனின் மார்பில் ஐஸ்வர்யா ஸ்ரீ சாய்ந்து கொண்டாள்.
மூடிய கண்களின் வழியாக கண்ணீர் வழிய நின்றவளை இறுக்கமாக அணைத்து கொண்டு,
"இப்போ எதுக்கு என்னை அழுமூஞ்சின்னு சொன்ன ஒரு பிரகஸ்பதி அழுதுட்டு இருக்குன்னு எனக்கு தெரியலையே..... பல நாள் காது, கண்ணையெல்லாம் மூடிட்டு தனி ரூம்ல உட்கார்ந்து யாருமே இல்லாம இருக்கோம்ன்னு நினைச்சு எவ்வளவு அழுதுருக்கேன் தெரியுமா பேபி! ஸார் என்னை மோல்ட் பண்ணியிருக்காங்க தான், ஆனா அவங்க கிட்ட உரிமையா ஒட்டுறதுக்கு.... ஏதோ ஒரு மாதிரி, என்னால முடியல. அப்போ தான் பல நாள் பட்டினி கிடந்தவனுக்கு ஒரு முழு விருந்து கிடைச்ச மாதிரி உன் போட்டோவ ஸார் குடுத்தாங்க. உங்க அப்பா, அம்மா என்னை உன்னோட லைஃப் பார்டனரா தேர்ந்தெடுத்தது எல்லாம் அவங்களோட பெருந்தன்மை. உயிரோட இருந்து இண்டியாவுக்கு மட்டும் வந்திருந்தாங்கன்னா அவங்க கால்ல விழுந்துருப்பேன். சத்தியமா சொல்றேன் வரு. இன்னிக்கி வரைக்கும் உன்னோட chubbyness எனக்கு ஒரு குறையாவே தெரியல. உன் ஹெல்த்ல கேர் எடுத்துக்க மாட்டேங்குறியேங்கிற கோபத்துல தான் உன்னை வாட்டர்பெட்ன்னு திட்ட கூட செஞ்சேன். மத்தபடி உன்னை போட்டோல பார்த்தவுடனே டோட்டல் சரண்டர்ன்னு சொல்வாங்களே..... அந்த மாதிரி மனசு முழுசும் உன்கிட்ட தஞ்சம் புகுந்துடுச்சு. ட்யூட்டி முடிஞ்சு வந்தா உன் முகம் மட்டும் தான் ஒரே ஆறுதல். என் தனிமைக்கு துணையா வந்தவ நீ! அதனால தான் நீ போட்டோவ கிழிச்சப்போ அத தாங்க முடியாம உன்னை அடிச்சிட்டேன். எனக்காக சௌஜன்யாவை சமாளிச்சு, சோட்டு என் தம்பின்னு தெரிஞ்சதும் அவன் லைஃப செட்டில் பண்ணணும்ன்னு நினைச்சு, அம்மாவை இங்க கூட்டிட்டு வர வைச்சு, நீ என்ன தான்டா எனக்கு பண்ணல......? ஒண்ணுமே இல்லாத சிவமித்ரனுக்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு எல்லாம் செஞ்சுட்டு நான் குண்டா இருக்கிறதால உனக்கு என்னை பிடிக்கலையா மித்துன்னு ஒரு அபத்தமான கேள்வியை எப்படி கண்மணி உன்னால கேக்க முடியுது? உன் கண்ணு, பல்லு, முகம், ஸ்மைல் இப்படி இருக்கு, அப்படி இருக்குன்னு நா எந்த உளறலும் இப்போ சொல்லப் போறதில்ல. ஏன்டா வாழுறோம்ன்னு நொந்து போய் இருந்தப்ப நீ தான் வாழ்க்கைக்கு உந்து சக்தியா, புது உற்சாகமா வந்து சேர்ந்த! சௌஜன்யாவை பார்த்து ஏற்பட்ட அருவருப்பு உணர்வு உன்னை பார்த்து ஒரு உரிமை உணர்வா மாறுச்சு. இப்போ சோட்டுவும், அம்மாவும் வர்றதுனால லைஃப் அழகா மாறிடும் தான்; ஆனா ஐஸ்வர்யா ஸ்ரீ இல்லாம சிவமித்ரன் மாதொருபாகன் ஆக முடியாது. என் வாழ்க்கையில சமபங்கு கேக்க நீங்க வேணும். ஓகேவா வாட்டர்பெட்; இல்ல ப்ரப்போஸ் பண்ணி ரோஸ் குடுக்கணுமா?" என்று கண்சிமிட்டியவனிடம்,
"ஐயோ மயக்குறியே பாவா, உனக்கென்னடா ஆணழகன் நீ; மேன் ஆஃப் பிரின்சிபல்ஸ், அப்பா கூட அம்மாவை கல்யாணம் பண்ணிக்கும் போது சுமாரான சாலரி தான் வாங்கிட்டு இருந்தாங்களாம். மே பி அவருக்கு உன்னை பார்த்தவுடனே எதுவும் ஸ்பார்க் அடிச்சதா என்னன்னு தெரியல. பட் ஒண்ணும் இல்லாதவன்னு நீயே உன்னை பத்தி ஏன் மித்து அண்டர் எஸ்டிமேட் பண்ணிக்குற? நீ ராஜாடா பாவா! என்னோட ராஜா, இனிமே நானும், நீயும் நம்மள பத்தி ஒருத்தர் கிட்ட இன்னொருத்தர் குறைச்சு பேசிக்க கூடாது. சரியா? ரொம்ப ஹாப்பியா இருக்கு மித்து, அப்படியே ஒரு ரெயின்போ தோசை செஞ்சு தர்றியா? சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுல்ல?" என்று கேட்டவளிடம் சிரித்து விட்டு,
"முதல்ல உனக்கு கிஸ் குடுக்கணும். அப்புறம் தான் வெளியே போக பெர்மிஷன் குடுப்பேன். ரெண்டு மூணு நாளா ரொம்ப டிஸ்டர்ப் பண்ற கண்மணி. உன்னை மிஸ் பண்ணின பிறகு தான் நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன்னு..... எனக்கு தெரிஞ்சது. அத கொஞ்சமாவது உனக்கும் காட்ட வேண்டாமா? உனக்கு
ஓகேவாடா வரு பேபி?" என்று அவள் கண்களை காதலுடன் பார்த்தவனிடம் ஒன்றும் சொல்லாமல் ஒரு புன்சிரிப்புடன் அவன் அணைப்பை விட்டு விலகாமல் நின்று கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"தேங்க்யூ பேபி!" என்று சொல்லி விட்டு அவள் கன்னங்களை பற்றிக் கொண்டவன் அவசரமே காட்டாமல் அனுபவித்து அவளின் இதழ்கள் எனும் சோதனைக்கூடத்தில் பல்வேறு முத்தங்களை பரிசோதனை செய்து கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கழித்து ஐஸ்வர்யா அவனை தன்னிடமிருந்து விலக்க முயற்சித்தவாறு,
"ஷப்பா... முடியல பாவா! ஏதோ ஒரு பள்ளத்தில ஆழமா புதைஞ்சிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. என்னை விட்டுடு தெரியாம சொல்லிட்டேன்!" என்று அவளிடம் பேசும் வரையில் பொறுமை காத்தவன் மறுபடியும் ஒரு முறை அவள் இதழ்களை அவளிடம் அனுமதி கேளாமல் திருடிக் கொண்டான். மீண்டும், மீண்டும் தொடர்ந்த இந்த போராட்டம் இரண்டு மூன்று முறைகளுக்கு பின்னர் இருவருக்கும் இடையே வெவ்வேறு விஷயங்களை உணர்த்தியது.
இவ்வளவு காதலை மனதிற்குள் பொத்தி வைத்து இவனால் எப்படி இவ்வளவு கண்ணியம் காக்க முடிந்தது என்ற ஆச்சரியத்தை ஐஸ்வர்யாவும், தன் காதலை காட்டுவதால் தன்னவளிடமும் எந்த விதமான தயக்கமும் பயமும் இல்லை, அவளுக்கும் தன் அணுகுமுறை பிடித்திருக்கிறது என்ற நிம்மதியை மித்ரனும் உணர்ந்து கொண்டிருந்தனர்.
காலம் மறந்து, அதை உணர்த்தும் தன்னிலை மறந்து, நேரம் மறந்து,
அதைச் சொல்லும்
கடிகாரத்தையும் மறந்து,
வீடு மறந்து, அதில் நிறைந்த உறவினர்களும் மறந்து, உனக்கு நான் மட்டும், எனக்கு நீ மட்டும் என்று பிரபஞ்ச ப்ரக்ஞையே
இல்லாமல் கண்களோடு கண்கள்,
மனதோடு மனம், இதழ்களுடன் இதழ்கள், கைகளுடன் கைகள்
உயிருடன் உயிரும் என வாழ்வின் எல்லை தாண்டி ஒன்றாக இணைந்து விட்ட மகிழ்ச்சியில் இருவரும் நின்று கொண்டு இருந்தனர்.
"சிவாண்ணா!" என்ற நேத்ரனின் அழைப்பில் இருவரும் நிகழ்காலத்திற்கு மீண்டு வந்தனர். "இதோ வந்துடுறேன் சோட்டு!" என்று சொன்ன மித்ரன் ஐஸ்வர்யாவிடம், "கண்டிப்பா போகணுமா கண்மணி? இப்படியே நிக்க விட்டா வேற நினைப்பே வராது போலிருக்கு. ஆனா போகணுமே? அழகான ரெட்ரோஸ் மாதிரி இருக்க. எனக்கு வெளியே போக பிடிக்கல வரு. இனிமே எனக்கு டெய்லி உன் ஹக், கிஸ்ஸஸ் எல்லாம் வேணும். எப்பல்லாம் கேக்குறேனோ அப்போ எல்லாம்..... பட் அதுக்கு மேல லிமிட்ஸ் தாண்ட மாட்டேன். கல்யாணம் வரைக்கும் கண்டிப்பா உங்கிட்ட கூட டிக்னிட்டி மெயின்டெய்ன் பண்ணணும் ன்னு நினைக்கிறேன்!" என்றவனின் கன்னத்தில் முத்தமிட்டு, "என் அழகு மித்து பாவா! சீக்கிரம் கிளம்பு. இல்லன்னா நேத்து நம்ம ரெண்டு பேரையும் கலாய்க்க போறான்!" என்று சொன்னவள் நெற்றியில் முத்தமிட்டு,
"இன்னிக்கு ஸ்பெஷல்டேன்னு நானே சாக்லேட் மூஸ் செஞ்சேன். ரெண்டு பீஸ் தான் எடுத்துக்கணும். அதுக்கு மேல கேட்டு அடம் பிடிக்க கூடாது. அப்பப்போ உனக்கு பிடிச்ச டிஷ் நானே என் கையால செஞ்சு தர்றேன். கடையில வாங்கி சாப்பிடுறதை கொஞ்சம் அவாய்ட் பண்ணு வரு!" என்று அவன் சொன்னது தான் தாமதம், சிறு குழந்தை போல் உற்சாகத்தில் துள்ளி குதித்து விட்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
சந்திரதாரா, நேத்ரன், அலர்மேல் மங்கை அனைவரையும் மரியாதையாக வரவேற்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர் சாக்லேட் மூஸுல் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து அனைவருக்கும் கொடுத்து விட்டு தட்டு நிறைய கேக்குடன் சமையலறைக்குள் சென்றவளின் பின்னால் சென்று முறைத்த மித்ரனிடம் சிரிப்புடன்,
"நீ தானடா பாவா ரெண்டு பீஸ் போக முழு கேக்கையும் எடுத்துட்டு அடம் பிடிக்காம சாப்பிடுன்னு சொன்ன; ஐ'ம் லவ்விங் இட்!" என்று ஒரு கேக் துண்டை வெட்டி வாயில் வைக்க போன போது அவளை கோபப்பார்வை பார்த்த மித்ரன் தலையை உலுக்கிக் கொண்டிருந்த சரியான சமயத்தில் அவளிடமிருந்து கேக்கை பறித்துக் கொண்டான் நேத்ரன்.
"ஐஷுமா! இப்படி முழு கேக்கையும் பாத்தி கட்டி நீயே சாப்பிட்டன்னா பிக் ஃபேட் ஹென்னா தான் எப்பவுமே இருப்ப! அதனால நான், சிவாண்ணா ரெண்டு பேரும் சாப்பிட்டது போக மீதி இருக்கிறதை நீ சாப்பிடுற, புரியுதா!" என்று பேசிக் கொண்டே சாப்பிட்டு இருவரும் கிட்டத்தட்ட கேக்கை காலி செய்து விட்டனர்.
"எருமைகளா கேக் காலிடா!" என்று உதடு பிதுக்கியவளிடம், "இல்லடா ஐஷுமா! அங்கங்க ஒட்டியிருக்கு பாரு. அது ஃபுல்லா உனக்கு தான்!" என்று சொல்லி விட்டு சகோதரர்கள் சிரிப்புடன் நகர்ந்து விட்டனர். இவர்களை பற்றி புகார் தெரிவிக்க சந்திரதாராவிடம் கடுங்கோபத்துடன் சென்று கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro