💖 வஞ்சி மனம் 15
ஐஸ்வர்யா காரில் வந்து அமர்ந்தும் கிளம்பாமல் ஸ்டியரிங் மேல் தலை சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளது இதழ்கள் தானாகவே ஒரு ஆங்கில பாடலை முணங்கிக் கொண்டிருந்தது. கைகள் அதன் போக்கில் தாளம் போட்டுக் கொண்டிருக்க நேத்ரன், "இவளுக்கு ரொம்ப முத்திடுச்சு!" என்று சிரிப்புடன் அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்.
"ஐஷுமா!" என்று மெல்லிய குரலில் அழைத்தவனை தீப்பார்வையில் எரித்தவள், "ஏன்டா நேத்து....கொஞ்ச நேரம் லவ் பண்ண விட மாட்டியாடா? எவ்வளவு ஃபீல் பண்ணி பாடிட்டு இருக்கேன்? ஏன் இப்படி நடுவில ப்ரேக் போட்டு டென்ஷன் பண்ணுற நீ? டோண்ட் டிஸ்டர்ப் மீ! ஓகே!" என்று நேத்ரனை திட்டி விட்டு அவள் வேலையை செய்து கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"கோழி கழுத்தை அறுக்குறப்போ கத்துற மாதிரி கியா கியான்னு கத்திட்டு இது தான் உன் லவ்வாக்கும்? உள்ளயே கத்திட்டு கிட. சிவாண்ணாட்ட பேசிட்டு வர்றேன்!" என்று இப்போது காரில் இருந்து அவன் இறங்கி கதவின் அருகிலேயே நின்று கொண்டு தன் சகோதரனை அழைத்தான்.
இரண்டாவது ரிங்கில் போனை எடுத்த மித்ரன், "சோட்டு சொல்லும்மா!" என்றான்.
"நீங்க தான் சிவாண்ணா சொல்லணும். அம்மா கண்டிஷன் எப்படி இருக்கு? இதுவரைக்கும் பார்த்த டாக்டர்ஸ் யாருமே அம்மா நடப்பாங்கன்னு எந்த ஸ்கோப்பும் குடுக்கல. அஸ் அ டாக்டர் நீங்க என்ன சொல்லப் போறீங்க?" என்று கவலையுடன் கேட்ட தன் தம்பியிடம்,
"நான் இதுவரைக்கும் எந்த பேஷண்ட் கிட்டயும் முடியாதுங்கிற வார்த்தையை மட்டும் சொன்னதே இல்ல சோட்டு! காம்பிளிகேஷன்ஸ் இருந்தாலும் கூட அவங்களுக்கு நம்பிக்கை தர்ற மாதிரி தான் பேசணும். அம்மா.... விஷயத்தில கொஞ்சம் டஃப் வொர்க் தான்; பார்த்துக்கலாம். கொஞ்சம் கொஞ்சமா ஸ்டெப்லைஸ் பண்ணனும். மங்கை அம்மா 2 நாள் டைம் கேட்டுருக்காங்க. வீட்டை காலி பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுக்கும் அம்மா ஓகே சொல்லிட்டாங்க. பட் நான் தான் மித்ரன்னு அவங்களுக்கு இன்னும் சொல்லல. இப்போதைக்கு அம்மாவை பொறுத்தவரைக்கும் நான் உன் ப்ரெண்டு டாக்டர் சிவா..... அவ்வளவுதான்! கொஞ்ச நாள் போகட்டும். அப்புறம் சொல்லிக்கலாம். மங்கை அம்மா யாரு? அவங்களுக்கும், அம்மாவுக்கும் எப்படி இவ்வளவு பாண்டிங்? சித்தப்பாவை கொல்ற அளவுக்கு கோபமா இருக்காங்க? அம்மாவை அப்படி ப்ரொடக்ட் பண்றாங்க சோட்டு!" என்று ஆச்சரியத்துடன் சொன்ன தன் அண்ணனிடம் புன்னகையுடன்,
"மங்கா ஆன்ட்டி அவங்க அம்மா கூட டீன் ஏஜ் கேர்ளா நம்ம வீட்டுக்கு வொர்க் பண்ண வந்தவங்க அண்ணா! அப்படியே நம்ம வீட்டோட செட்டில் ஆகிட்டாங்க. இன்பாக்ட் வீட்டை விட்டு வெளியே வந்துடலாம்ங்கிற தைரியம் குடுத்ததே அவங்க தான்! அம்மா மாதிரி பொண்ணு வேணும்ன்னு கேட்டு பிள்ளையார் பேச்சிலரா உட்கார்ந்து இருக்கிற மாதிரி அவங்களும் அவங்க மனசுல இருக்கிற பெர்பெக்ட் இமேஜை மாதிரி ஒரு மாப்பிள்ளை வேணும்ன்னு கேட்டு இன்னும் அவங்களுக்குன்னு ஒரு லைஃப் தேடிக்காம இருக்காங்க. பட் நமக்காக நிறைய பண்ணியிருக்காங்க அண்ணா!" என்று கம்மிய குரலில் சொன்னவனை சமாதானப் படுத்தி ஆறுதலளித்த மித்ரன்,
"சோட்டு இப்போ நீங்க அங்க போறதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்ல. ஆனாலும் ஒரு அண்ணனா என்னால உன்னோட கோபத்தை புரிஞ்சுக்க முடியுது. கொஞ்சம் பொறுமையா, நிதானமா, ஜாக்கிரதையா சிச்சுவேஷனை ஹாண்டில் பண்ணு. ஏற்கனவே இத்தன வருஷம் உறவுகள் எல்லாரும் இருந்தும் யாருமே இல்லாம வாழ்ந்துட்டேன். இனிமேல் இழப்பை பத்தி நினைக்கிறதுக்கு கூட மனசுல சக்தி இல்ல, உங்கண்ணியும், நீயும் எனக்கு பத்திரமா வேணும். டேக்கேர்.....!" என்று சொன்ன மித்ரனின் குரல் நடுங்கியதை நேத்ரனால் உணர முடிந்தது.
"நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க சிவாண்ணா! நானும், ஐஷுவும் பத்திரமா வந்துடுறோம். இனிமே உங்க கூட இருக்கப் போறதை நினைச்சா ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்குண்ணா! ச்சே....பாட்டு பாடுறேன் பேர்வழின்னு இங்க ஒரு பிரகஸ்பதி என்னைய கொன்னுட்டு இருக்கா!" என்று காதை அழுத்தி தேய்த்து விட்டு கொண்டிருந்த மித்ரனிடம் சிரிப்புடன்,
"சமோசா, கேக், இந்த மாதிரி ஏதாவது ஒரு ஐயிட்டம் இருந்தா வாங்கிக் குடுத்து தப்பிச்சுக்கோ சோட்டு....பை!" என்று சொல்லி விட்டு மித்ரன் வைத்து விட்டான்.
"இந்த மெத்தட் ரொம்ப ஈஸியா இருக்கும் போலிருக்கே!" என்று சொல்லி காரில் ஏறிக் கொண்ட நேத்ரன், "ஐஷுமா! ஏதாவது சாப்பிட்டுட்டு ட்ராவலை கன்டினியூ பண்ணிக்கலாமா? எனக்கு லேசா பசிக்குது!" என்றான் அவளின் முகத்தை பார்த்தவாறு.
சட்டென்று பாட்டை நிறுத்தி விட்டு, "நீ எப்படா கேப்பன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்டா நேத்து. எனக்கு அப்பவே பசிக்க ஆரம்பிச்சிடுச்சு!" என்று சொல்லி விட்டு அந்த பகுதியில் உள்ள உணவகத்தை தேடிக் கொண்டு இருந்தவளிடம்,
"ஏன்டா ஐஷு, உனக்கு குட்டி குட்டி ஸ்நாக்ஸ் சாப்பிடுறதுன்னா ரொம்ப பிடிக்குமாமே? சிவாண்ணா சொன்னாங்க!" என்று அவளிடம் கேட்டவளிடம்,
"நேத்து நான் ஒண்ணு சொல்லட்டுமா? மித்து என் லைஃப்ல வர்றதுக்கு முன்னாடி எனக்கு ரொம்ப பிடிச்ச மூணு விஷயம் சொல்லுன்னு கேட்டா அம்மா, அப்பா; டான்ஸ்; சாப்பாடு, இப்படி தான் நிறைய பேர் கிட்ட சொல்லியிருக்கேன். அப்பாவும், நானும் அம்மாவை பிக்கப் பண்ண டெய்லி அவங்க ஆஃபிஸுக்கு போவோமா.... அங்க வெயிட் பண்ற நேரத்துல, போர் அடிக்குறப்போ பசிக்குதுன்னு இந்த மாதிரி சாப்பிடுறதுக்கு எனக்கு ஒரு காரணம் தான் வேணும். அப்பாவும் வளர்ற பொண்ணு தானே, கொஞ்ச நாள்ல மாறிடுவான்னு சொல்லிட்டு நான் எதைக் கேட்டாலும் சாப்பிட வாங்கி குடுத்துடுவாங்க. ஒரு ஸ்டேஜ்ல அது இல்லாம என்னால இருக்க முடியாது ன்னு சாப்பாடு ஒரு அடிக்ஷன் மாதிரி ஆனதும் தான் பிரச்சனையோட சீரியெஸ்னெஸ் புரிஞ்சது. அப்புறம் அப்பா, அம்மாவை மிஸ் பண்ணினதும், இங்கே வந்து, மித்துவோட அட்வைஸ்க்கு அப்புறம் இப்போ கொஞ்சம் கண்ட்ரோல்டா போயிட்டு இருக்கு. உங்கண்ணா பக்கத்துல நான் நின்னா ஆன்ட்டி மாதிரி இருக்கேன். மித்து என்னோட ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்கணும்ங்கிறதுக்காக மட்டும் தான் டயட், பிட்னஸ் எக்சர்சைஸ், யோகா எல்லாம் செய்ய சொல்றான். நான் அவன் பக்கத்தில நின்னா எங்க மேட்சிங் ரொம்ப சகிக்க முடியாத அளவுக்கு தெரியக்கூடாதுன்னு தான் அவன் சொல்றதை எல்லாம் செய்றேன். இருந்தாலும் சில நேரம் இன்னும் கொஞ்சம் பெட்டரான நல்ல பொண்ணு மித்துவுக்கு pair ஆகியிருந்தா நல்லாயிருக்கும்ன்னு எனக்கு தோணுது!" என்று சொன்ன ஐஸ்வர்யாவை பார்த்த நேத்ரன் இந்த பிரச்சனையை மனரீதியாக சரி செய்ய வேண்டியது அவசியம் என்று உணர்ந்தான்.
பெருஞ்சிரிப்புடன் அவள் புறம் திரும்பி அமர்ந்தவன், "அதையே தான் ஐஷுமா நானும் நினைச்சேன். இந்த போந்தாங்கோழி சிவாண்ணாக்கு ஜோடியா வர்றதுக்கு பதிலா வேற ஒரு ஃப்யூட்டிபுல் கேர்ள் வந்தா நல்லாயிருக்கும்ன்னு; எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்குறோம்ன்னு பாரேன்!" என்று சொல்லி சிரித்தவனை முறைத்தவள், "உனக்கு இப்போ சாப்பாடெல்லாம் கிடையாது. இரு கார்லயே விட்டுட்டு போறேன்; யூஎஸ் போற ஐடியா இருந்ததுன்னா ஒழுங்கா என்னை வெறுப்பேத்தாம இருக்கணும். புரிஞ்சதா? இல்லைன்னா மித்து, ஆன்ட்டி கிட்ட உனக்கு பெர்மிஷன் குடுக்க வேண்டாம்ன்னு சொல்லிடுவேன். எனக்கு சப்போர்ட் பண்ணினா தான் உன் பாக்கெட் மணிக்கு ப்ராப்ளம் வராது. பார்த்துக்கோ!" என்று அவனை மிரட்டியவளிடம்,
"அதெல்லாம் ஐஷுமா பார்த்துப்பா. அவ நல்ல பொண்ணு!" என்று அவளின் கன்னத்தில் நிமிண்டினான் நேத்ரன்.
"டேய் கையையும், வாயையும் வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா நீ? காரியம் ஆகணும்ன்னா நான் உனக்கு ஐஷுமா, இல்லைன்னா பிக் பாஃட் ஹென்னா; இருடா...... உன்னை நான் அடிக்கக்கூடாது. மித்து கிட்ட சொல்லி மொத்த சொல்றேன்!" என்று கோபத்துடன் பார்த்தவளிடம்,
"என்னடா பண்றது ஐஷுமா! உண்மையான பாசத்தை குடுக்க கூட அம்மா, ஆன்ட்டியை தவிர வேறு யாரும் இதுவரைக்கும் வரலையே..... சிவாண்ணா ரேன்ஜீக்கும், அவர் ஃபுரபொஷனுக்கும் அவரை போய் கட்டிப்பிடிச்சு கதை பேசிட்டு இருக்க முடியாதுல்ல.... ஸோ நீ தான் எல்லாத்துக்கும் வந்து சிக்கின; நீ தான் என் அக்கா, தங்கச்சியாவும் இருக்கணும். அண்ணியார் ரோலும் ப்ளே பண்ணணும். அப்பப்போ ப்ரெண்டாவும் மாறணும். எனக்கு உன்னை மாதிரியே ஒரு நல்ல பொண்ணை செட் பண்ணி மேரேஜ் பண்ணி வைக்கிற மேரேஜ் அசெம்ப்ளர் வேலை கூட நீ தான் பார்த்துக்கணும்! இதெல்லாம் இப்போதைக்கு நேத்து தந்திருக்கிற உன்னோட ரெஸ்பான்ஸிபிளிட்டி லிஸ்ட். இதுல நிறைய பாயிண்ட் போக போக சேர்த்துக்கலாம்!" என்று சொன்னவனின் கையைப் பிடித்துக் கொண்டு, "தேங்க்ஸ்டா நேத்து, வா சாப்பிட்டு வரலாம்!" என்று சொல்லி அழைத்து சென்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
நேத்ரன் பெயருக்கு அவளை ஐஷுமா அவளை அழைக்கவில்லை. தன் தாய்க்கு அடுத்த அண்ணியின் ஸ்தானத்தில் இருத்தி தான் அவ்வாறு அழைக்கிறான் என்று புரிந்ததால் இனிமேல் அவன் இஷ்டம் போல் தன்னை அழைத்து கொள்ள ஒப்புதல் தந்து விட்டாள் ஐஸ்வர்யா.
அதிகாலையில் திருப்பூரை அடைந்து விட்டனர். சென்னையை விட்டு கிளம்பும் போதே அங்கிருக்கும் பிரபல விடுதியில் இரு டபுள் ரூம்களை புக் செய்து இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"இப்போ என்ன ஐஷு ப்ளான்?" என்று கேட்ட நேத்ரனிடம்,
"எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு நேத்து! கொஞ்ச நேரம் தூங்கி முழிச்சு ரெப்ஃரெஷ் ஆகிட்டு அதுக்கப்புறம் என்னன்னு யோசிக்கலாம். பத்து மணிக்கு கிளம்பி மிஸ்டர் கங்காதர மீட் பண்ண போகணும். நீயும் கொஞ்ச நேரம் தூங்குறதுன்னா தூங்கி, ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டு ரெடியா இரு! கிளம்பலாம்!" என்று சொன்ன ஐஸ்வர்யாவிடம்,
"ஐஷு மிஸ்டர் கங்காதர பார்க்க அப்பாயின்மென்ட் எல்லாம் வேணும்மா! நம்ம பிரிப்பர்டா வரலையே?" என்று கேட்டவனை கேவலமாக முறைத்தவள்,
"வீர வசனம் பேசி பென்சில்ல வரைஞ்சு இருக்கிற மீசையை முறுக்குனா மட்டும் போதும்ன்னு நினைச்சு வந்துருந்தீங்க போல மிஸ்டர் நேத்ரன் புவனேஸ்வர், ஆனா நான் எல்லாம் ப்ளான் பண்ணிட்டு தான் வந்தேன். உங்களை என் பாடிகார்ட் வேலைக்கு தான் கூட்டிட்டு வந்திருக்கேன். ஸோ யோசிக்கிற வேலையெல்லாம் என் கிட்ட குடுத்துட்டு நீங்க வழக்கம் போல சவுண்ட் மட்டும் விடுங்க. போதும்!" என்று சிரித்தவளிடம்,
"போடீ பிசாசே! நான் என் ரூமுக்கு கிளம்பறேன்!" என்று முகம் திருப்பிக் கொண்டவனிடம்,
"எங்க வேணும்னாலும் கிளம்பு. ஆனா திருப்பூரை விட்டு கிளம்பிடாத. பை நேத்து!" என்று அவனுக்கு கையசைத்து விட்டு தன் அறைக்குள் சென்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
சரியாக ஒன்பது மணி இருபது நிமிடங்களுக்கு ஐஸ்வர்யா ஸ்ரீ நேத்ரன் அறையின் கதவைத் தட்டினாள். "அப்பவே ரெடியாகியாட்டேன். உனக்காக தான் வெயிட் பண்ணினேன். ரூம் சர்வீஸ்ல ப்ரேக் பாஸ்ட் ஆர்டர் பண்ணட்டுமாடா?" என்று கேட்டவனிடம் புன்னகையுடன் தலையாட்டி விட்டு,
"நான் உன் ரூமுக்குள்ள வரலாமா நேத்து? ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாமே?" என்றவளிடம்
"எதுக்கு பெர்மிஷன்லாம் கேட்டுட்டு இருக்க ஐஷுமா! உள்ள வா!" என்றான் நேத்ரன்.
இருவரும் அவரவர் கல்லூரி நாட்களில் நடந்த சுவையான சம்பவங்களை பேசிக் கொண்டிருந்த போது அவள் பேச்சில் அடிக்கடி வந்து போன
அமிரைப் பற்றி நேத்ரன் அவளிடம் கேட்டான்.
"அவ என் பெஸ்ட் ப்ரெண்டு நேத்து! நீ அங்க போன பிறகு அவ தான் உனக்கு எல்லா ஹெல்ப்பும் பண்ணப் போறா. என்னை மாதிரி காரெக்டர் கிடையாது. ரொம்ப ஸாப்ட் நேச்சர்!" என்று சொன்ன தன் அண்ணியின் பேச்சில் குழம்பி
"ஐஷு இந்த அமிரோட புல் நேம் என்ன? பொண்ணா? பையனா...... குழப்பாத!" என்றவனிடம் சிரிப்புடன்,
"மித்து கூட உன்னை மாதிரி தான் கன்ஃப்யூஸ் ஆனான். அமிர் பொண்ணு தான்டா நேத்து........ அமிர்தவர்ஷினி!" என்றவளிடம்
"ஓ......! ஓகே! ஓகே, நம்ம வர்ஷினி....வர்ஷ், வருன்னு கூட கூப்பிட்டுக்கலாம். அமிர் வேண்டாம். நல்லா இல்ல.....!" என்று சொன்னவனை பருந்து கோழிக்குஞ்சை பிடிக்கும் முன் பார்க்கும் கொலைவெறிப் பார்வை பார்த்து கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"ஏய் இப்போ எதுக்கு இப்படி டெரர் லுக் குடுக்குற? சும்மா ப்ரெண்ட்லியா தான் உன் ப்ரெண்டை ஷார்ட் பார்ம்ல கூப்பிட்டேன்!" என்றவனிடம்
"நீ அமிரை எப்படி வேணும்னாலும் கூப்பிட்டுக்க. பட் வருன்னு கூப்பிடாத. அவ்வளவுதான் விஷயம்!" என்று சொல்லி விட்டு அவனுடன் நகரின் முக்கிய துணிக்கடைகளுக்குள் ஒன்றில் நுழைந்திருந்தாள் ஐஸ்வர்யா.
"நம்ம காஸ்ட்யூம் நல்லா தானே இருக்கு ஐஷு; இப்போ எதுக்கு இன்னொரு சேன்ஜ்?" என்று கேட்ட நேத்ரனிடம்,
"இரக்கப் போனாலும் சிறக்க போகணும்!" ன்னு ஒரு பழமொழி தெரியுமா. நம்ம டிரெஸ் கோட் தான் சில நேரங்கள்ல மத்தவங்க பார்வையை பொறுத்தவரைக்கும் ஒரு ஜட்ஜ்மெண்ட் ஸ்கேலா மாறிடுது. இப்போ நீ சேன்ஜ் பண்ணிட்டு வரப் போறது வெறும் டிரெஸ் இல்ல, உன் ஸ்டேட்டஸ் சிம்பள், ராயல் லுக் குடுக்கிற ஒரு டிரெஸ் பண்ணி எக்ஸிகியூடிவ் லுக்ல வா பார்ப்போம்!" என்று சொல்லி விட்டு அவளும் கம்பீர தோற்றத்தை அளிக்கும் விதத்தில் உடையணிந்து அவனுக்காக காத்திருந்தாள்.
இருவரும் இணைந்து ஆஃபிஸை அடைந்ததும் ஐஸ்வர்யா ஸ்ரீ கட்டிடத்தின் பெயர் பலகையை பார்த்தாள்.
"கங்காதர் டவர்ஸ்!" என்று கருப்பு நிறத்தில் பளபளத்த எழுத்துக்கள் புவனேஸ்வர் டவர்ஸ் என்று இருந்திருக்க வேண்டியதை நினைத்து அவளுக்கு எரிச்சல் வந்தது.
கலங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த நேத்ரனின் கையைப் பற்றி அழுத்தியவள் நிறுத்திய அனைவரிடமும் தன் கம்பெனி இந்த கம்பெனியுடன் கூட்டு வணிகம் செய்ய விரும்புவதாகவும், இந்த பிஸினஸில் இன்வெஸ்ட் செய்ய தான் ஆசைப்படுவதாகவும், இன்னும் பத்து நிமிடங்களில் சிஇஓ வை சந்திக்க முடியவில்லை என்றால் கிளம்பி விடுவேன் என்றும் சொல்லி விட்டு கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்திருந்தாள்.
செக்யூரிட்டி, ரிஸப்ஷனிஸ்ட், பிஏ, மேனேஜர் இன்னும் இப்படி எத்தனை சிறு மீன்களையும், குட்டி முதலைகளயும் தாண்டி சுறாவை பார்க்க வேண்டுமோ என்று சலிப்பு ஏற்பட்டது.
"ஏய் நேத்து உன் சித்தப்பன் என்ன மாதிரி கேரக்டர்டா?" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம்,
"நல்லவன் மாதிரி நீலிக்கண்ணீர் விட்டுட்டே காலுக்கு கீழே குழி நோண்டிட்டு இருக்கிற காரெக்டர், அவனை விட ஒரு ரூபாய் ஜாஸ்தியா வைச்சுருந்தன்னா தான் உன் முகத்தை பார்த்து பேசவே செய்வான். அப்படி ஒரு அக்மார்க் காரெக்டர்....த்தூ!" என்று கோபத்தில் வார்த்தைகளை கடித்து மென்றவனிடம்,
"கூல் நேத்து ரிலாக்ஸ்டா இரு! இவ்வளவு டென்ஷன் வேண்டாமே.....!" என்று ஐஸ்வர்யா ஸ்ரீ அவனிடம் சொல்ல நேத்ரன் சற்று அமைதியடைந்தான்.
கங்காதரின் செகரட்டரி வந்து அவளை அழைக்கவும் ஐஸ்வர்யா அவனையும் அழைத்து கொண்டு அவர் கேபினுக்குள் நுழைந்தாள்.
"ஹலோ மிஸ். ஐஸ்வர்யா ஸ்ரீ....நைஸ் டூ மீட் யூ!" என்று கையை நீட்டியவரிடம்,
"வணக்கம் மிஸ்டர் கங்காதர், உங்கள மீட் பண்ணியது எனக்கு சந்தோஷம். இவர் மிஸ்டர் நேத்ரன் புவனேஸ்வர், என் கம்பெனி வொர்க்கர்!" என்று ஐஸ்வர்யா அறிமுகப்படுத்த நேத்ரன் அவரை முறைத்து கொண்டு இருந்தான்.
கங்காதர் சற்று தடுமாறி பின் அவளிடம், "ஹாவ் யுவர் ஸீட் மிஸ். ஐஸ்வர்யா, எங்க கம்பெனியில நீங்க இன்வெஸ்ட் பண்ண நினைச்சதுக்கு ரொம்ப சந்தோஷம்!" என்றவரிடம்,
"இல்ல....மிஸ்டர் கங்காதர்! அந்த ஐடியா முதல்ல தான் இருந்தது. ஆனா மிஸ்டர் நேத்ரன் புவனேஸ்வர் உங்கள பத்தியும், இந்த கம்பெனியை பத்தி கூட என்னன்னமோ சொல்றாரு. உங்க அண்ணாட்ட இருந்து அவர் சொத்துக்களையும், இந்த கம்பெனியோட சேர்த்து நீங்க திருடீட்டிங்களாமே...உங்க அண்ணனை கொலை பண்ணி, உங்கண்ணியை பேஷண்ட் ஆக்கி, அவங்க முதல் பையனை தொலைச்சு, இவரை மெண்டல் டார்ச்சர் செஞ்சு வீட்டை விட்டு துரத்திட்டீங்கன்னு சொல்றாரு.....! இது எல்லாம் உண்மையா? இல்லையா?" என்று கேட்டவளிடம் அவசரமாக,
"ஷட் அப்! தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ்! இந்த பையன் யாருன்னே எனக்கு தெரியாது. பிஸினஸ் விஷயமா பேசுறதா இருந்தா பேசலாம். இல்லன்னா என் டைமை வேஸ்ட் பண்ணாம கிளம்புங்க!" என்று சொன்ன கங்காதரிடம்,
"ஸாரி ஸார், நாங்க உங்கள டிஸ்டர்ப் பண்ண வரல. நீங்க இருந்த எங்க வீட்டை விட்டு வெளியே போனதுக்கு அப்புறம் தான் எங்க லைஃப்ல ஒவ்வொன்னா நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சுருக்கு. எங்க சிவாண்ணா எங்களுக்கு திரும்ப கிடைச்சுட்டாங்க. நல்ல ஜாப் இருக்கு. எங்க அம்மா மனநிறைவோட பழைய கம்பீரத்தோட என் கிட்ட பேசுறாங்க. இத்தனைக்கும் எங்க அண்ணி வீட்டுக்கு நாங்க போறது தான் காரணமா இருக்கலாம். எங்கண்ணி யாருன்னு நான் சொல்லவேயில்லையே..... அது இவங்க தான்....... மிஸ்.ஐஸ்வர்யா ஸ்ரீ, அண்ணி உங்க சின்ன மாமனார் கிட்ட ஏதோ கிப்ட் குடுக்கணும்ன்னு சொன்னீங்களே.....சீக்கிரம் குடுத்துட்டு வாங்க!" என்று நேத்ரன் சொல்லி முடிக்கும் முன் ஐஸ்வர்யா கங்காதரின் டேபிளில் ஒரு செக்கை வைத்திருந்தாள்.
"மிஸ்டர் கங்காதர்! அங்கிளோட டெத்தையும், ஆன்ட்டியோட ஹெல்த் கண்டிஷனையும் தவிர தெரிஞ்சோ, தெரியாமலோ நீங்க மித்து பேமிலிக்கு செஞ்ச துரோகம் எல்லாமே ஒரு விதத்தில நல்லதா தான் முடிஞ்சிடுச்சு. அதனால தான் உங்களுக்கு ஒரு பைவ் லாக்ஸை ரிவார்டா கொண்டு வந்தேன். நீங்க உங்க அண்ணா குடும்பத்துக்கு செஞ்ச அநியாயம் உங்க குடும்பத்தினரை பாதிக்காம இருக்கணும்ன்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன். மறுபடி உங்க முகத்தை எப்பவும் பார்க்காம இருக்கணும்ன்னு நினைக்கிறேன்! குட்பை மிஸ்டர் கங்காதர்; வாங்க நேத்ரன் போகலாம்!" என்று இருக்கையில் இருந்து எழுந்து விறுவிறுவென இருவரும் வெளியே நடந்தனர்.
"என்னடா நேத்து உன் சித்தப்பன் என்ன இவ்வளவு கேவலமான பிறவியா? பணத்தை வாங்கிக்கிட்டு அமைதியா இருந்துட்டானேடா; ஒருவேளை நம்ம கழுவி ஊத்துனதை எல்லாம் நிஜமாவே பாராட்டுறோம்ன்னு நினைச்சுட்டானோ.....!" என்று சிரிப்புடன் கேட்டவளை முறைத்தவன்,
"நீ குடுத்த அஞ்சு லட்ச ரூபாய் செக்கை ஏதாவது ஃப்ராடு வேலை பார்த்து அம்பது லட்சமா மாத்திடுவானோன்னு நானே பயந்துட்டு இருக்கேன்.... உனக்கு இதுல சிரிப்பு வருது.....!" என்று சொன்ன மித்ரனிடம்,
"உன் சித்தப்பன் மாதிரி ஆளுங்க தான் நம்மளை விட தெளிவா இருக்குறாங்க. வந்த வேலை சிறப்பா முடிஞ்சிடுச்சு. கிளம்பலாமாடா நேத்து!" என்று கேட்டவளிடம்,
"வாங்க நேத்ரன்னு அப்போ அழகா கூப்பிட்டியே.... அந்த மாதிரி மறுபடி கூப்பிடு; அப்போ தான் வருவேன்!" என்று அடம் பிடித்த நேத்ரனை பின் கழுத்தில் கை வைத்து கார் வரை இழுத்து சென்று கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"ஐஷுமா! எல்லாரும் பார்க்குறாங்க. கழுத்தை விடு ப்ளீஸ்.....உனக்கு கட்லட் வாங்கித் தர்றேன்!" என்று தன் அண்ணியிடம் கெஞ்சி கூத்தாடி கொண்டு இருந்தான் நேத்ரன்.
Mithu pov
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro