💖 வஞ்சி மனம் 14
அருள்மொழியும், மித்ரனும் நேத்ரன் கூறிய முகவரியை தேடி வீட்டிற்கு சென்று சந்திரதாராவை பார்த்த போது மித்ரன் இரண்டு நிமிடம் தான் அந்த வீட்டிற்குள் நின்று கொண்டு இருந்தான். அதற்கு மேல் அவனால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க முடியவில்லை. சட்டென்று வீட்டுக்கு வெளியே சென்று பக்கவாட்டில் இருந்த திண்டில் அமர்ந்து கொண்டான். அவன் கண்கள் கலங்கி இருட்டிக் கொண்டு வந்தது. யாரோ மூச்சுக் குழலைப் பிடித்து நெறிப்பது போல் சுவாச மண்டலம் காற்றுக்கு தவித்தது. தலை பாரமாக இருப்பது போல் தெரிந்தது. மொத்தத்தில் மித்ரனின் புலன்கள் அனைத்தும் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் அதன்போக்கில் இயங்கிக் கொண்டு இருந்தன.
அருள்மொழி அவரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரது மொபைலில் நேத்ரனுக்கு அழைத்து சந்திரதாராவின் காதில் போனை வைக்குமாறு சொல்லி விட்டு அவர்களை பார்த்துக் கொண்ட பணிப்பெண்ணிடம் அலைபேசியை நீட்டினார்.
அவர் அருள்மொழியை ஓர் எடை போடும் பார்வையுடன் நோக்கி விட்டு, அவர் முதலில் போனில் பேசினார். மறுமுனையில் இருந்து பேசுவது நேத்ரன் தான் என்று அவருக்கு நம்பிக்கை வந்த பின்னரே சந்திராவின் காதில் போனை வைத்தார்.
"அம்மா நேத்ரன் பேசுறேன்!" என்ற தன் மகனின் குரலில் மென்னகையுடன், "சொல்லு நேத்ரா; என்னப்பா நீ அனுப்பி வைச்ச ரெண்டு கெஸ்ட்ஸ் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க!" என்று மகனிடம் கேட்டவர், அருள்மொழியை அமரச் சொல்லி விட்டு, "மங்கா ஏதாவது சாப்பிடுறதுக்கு கொண்டு வாம்மா, இன்னொரு ஸார் எங்க? அவரையும் உள்ள கூட்டிட்டு வா!" என்று சொன்னார்.
அலர்மேல் மங்கை சந்திராவின் அருகில் இருந்து நகராமல், "அதெல்லாம் சாப்பிட்டு தான் வந்துருப்பாங்க! எதுக்கு தம்பி இல்லாதப்போ வூட்டுக்கு வந்துருக்காங்கன்னு கேளுங்க. யோவ் வெளியே இருக்கிற இன்னொரு ஆளை நீயே போய் கூட்டிகினு வாய்யா!" என்று அருள்மொழியை பார்த்து சொன்னார்.
அருள்மொழி சிரிப்புடன் தலையாட்டி விட்டு, "நல்ல மரியாதை! நான் போய் டாக்டரை கூட்டிட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.
அதற்குள் நேத்ரன் தன் அம்மாவிடம், "அம்மா அருள்மொழி ஸார் என்னோட பாஸ்ம்மா! நம்ம பிரச்சனையை அவர் கிட்ட சொல்லியிருந்தேன். அவருக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் கிட்ட பேசி உங்களுக்காக நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்காங்க. எங்க பாஸ் வீட்ல ஒரு அவுட் ஹவுஸ் போர்ஷன் காலியா தான் இருக்காம். நம்ம அங்க ஷிப்ட் ஆகிடலாமாம்மா? டாக்டர் ஸாரும் பாஸ் வீட்ல தான் இருக்காங்க. உங்க ட்ரீட்மெண்ட்டுக்கும் வசதியா இருக்கும். எனக்கு ஆஃபிஸுக்கு போயிட்டு வர்றதுக்கும் ஈஸி, டாக்டர் ஸார் கிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டா சீக்கிரம் உங்களுக்கு சரியாகிடும்மா. யூ வில் பீ பெர்பெக்ட்லி ஆல்ரைட். அங்க போகலாமா அம்மா?" என்று கேட்ட நேத்ரனிடம்,
"நேத்ரா நமக்கு வசதியா இருக்கும்ங்கிறதுக்காக அடுத்தவங்களுக்கு நம்ம தொந்தரவா இருக்கக் கூடாதுப்பா! நமக்கு உதவி செய்யணும்ன்னு நினைக்கிறது உன் முதலாளியோட பெருந்தன்மையா இருக்கலாம். ஆனா கண்டிப்பா போகணுமாப்பா?" என்று கேட்டவரிடம்,
"வேண்டாங்கிறேன்! எதுக்கு தேவையில்லாம இவ்வளவு யோசிச்சுட்டு.... பேசிட்டு இருக்கீங்க! மனசுக்கு பிடிக்கலன்னா விட்டுடுங்க.... நேத்ரன் தம்பிட்ட நான் பேசுறேன்!" என்று சொல்லி விட்டு பால் டம்ளர்களுடன் வெளியே சென்று அருள்மொழி, மற்றும் சிவமித்ரனிடம் நீட்டினார் அலர்மேல் மங்கை.
"தெரியாம கேக்குறேன்! எங்க ரெண்டு பேரையும் பார்த்தா முகமூடிக் கொள்ளைக்காரங்க மாதிரி தெரியுதா உங்களுக்கு? எதுக்கு இப்படி நேத்ரன் அம்மா கிட்ட குழப்பம் செஞ்சுட்டு இருக்கீங்க? எங்களால உங்க லைஃப்ல கண்டிப்பா நல்லது தான் நடக்கும். பயப்படாதீங்க! தைரியமா எங்க கூட வாங்க!" என்று சொன்ன அருள் மொழியிடம்,
"யோவ்...... நான் பயப்படுறேன்னு உனக்கு யார் சொன்னா? எங்க சந்திராமாவுக்கு ஏதாவது பிரச்சனை பண்ணனும்ன்னு நினைச்சு வந்துருந்தீங்க..... அப்படியே திரும்பி ஓடிப் போயிடுங்க. சும்மா சும்மா வர்றவன், போறவனையெல்லாம் மன்னிச்சு விட்டுட்டு இருக்க முடியாது. வர்ற வழியில தம்பி சித்தப்பனையும் சொருவிட்டு வந்துருக்கலாம்.....
பொறுமையா இரு! தேவையில்லாம பேசாதன்னு சொல்லி சந்திராமா தான் என்னைய இழுத்துகிட்டு வந்துட்டாங்க!" என்று தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த அலர்மேல் மங்கையின் கைகளை பற்றிக் கொண்டான் சிவ மித்ரன்.
"யோவ் டாக்டரு..... எம்மா நேரமா சும்மா உட்கார்ந்து இருந்துட்டு இப்போ என் கையை என்னத்துக்கு பிடிச்சுட்டு நின்னுட்டு இருக்க.... கையை விடுய்யா!" என்று சொன்ன பெண்மணியிடம்,
"தேங்க்யூமா! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!" என்று கண்களில் கண்ணீருடன் நின்றவனை கண்டு புரியாமல் விழித்த மங்கா,
"டேய் இப்போ என்னத்துக்கு அழுவுறன்னு சொல்லிட்டு அழுவேன், வயிறு கியிறு நோவுதா?" என்று கேட்டவரிடம் புன்னகையுடன்,
"ம்ஹூம்; வயிறு பசிக்குது. நான் நேத்ரனோட... ப்ரெண்டு தான்! எனக்கு கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா?" என்று மித்ரன் கேட்டதும் அலர்மேல் மங்கையின் கோபம் அருள்மொழியின் மீது திரும்பியது.
"யோவ் நீ பெரிய முதலாளின்னு எங்க சின்னத்தம்பி சொல்லுச்சு. உன் கூட தானே சுத்திக்கிட்டு இருக்காரு டாக்டரு, அவருக்கு என்ன தேவைன்னு பார்த்து வாங்கிக் குடுக்கணும்ங்கிற அறிவு வேணாம்?" என்று மிரட்டியவரிடம்
"இந்த பையன் அவங்க அம்மாவை தான் வேணும்ன்னு கேக்குறான். ஆனால் அவங்களை எங்க கூட விடாம அப்போலேர்ந்து அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்கியே கொள்ளிவாய் பிசாசே!" என்று வாய்க்குள் முணங்கிக் கொண்டிருந்த அருள்மொழியை முறைத்த மங்கை,
"எதுவா இருந்தாலும் சரி, முகத்துக்கு நேரா தைரியமா பேசு. சும்மா தலையை குனிஞ்சுட்டு முணுமுணுக்குற வேலையெல்லாம் வேண்டாம்.... புரியுதா?" என்று கேட்டவரிடம் சிரிப்புடன்,
"அம்மா உங்கள இவரு கொள்.......!" என்று தொடங்கிய மித்ரனின் குரல் வளையை பிடித்திருந்தார் அருள்மொழி.
"மங்கா அங்கே என்ன சத்தம்? நேரமாகிடுச்சு பாரு.... வந்தவங்களை சாப்பிட்டு போக சொல்லலாம். உள்ளே கூப்பிடும்மா!" என்று சந்திராவின் குரல் கேட்க, "உள்ள வாங்க!" என்று சொல்லி விட்டு சென்றார்.
சாப்பிடும் வேளையில் மித்ரன் சந்திரதாராவிடம், "அம்மா நீங்க என்னை தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்லை. இந்த இடம் உங்களுக்கு வசதியா இல்ல. சிம்ப்டம்ஸ் தெரிஞ்ச உடனே ட்ரீட் பண்ணியிருந்தா இவ்வளவு ப்ராப்ளம் ஆகியிருக்காது. இட்ஸ் ஓகே..... ஆனா நீங்க இப்படி படுக்கையிலயே எல்லா நேரமும் உட்கார்ந்து இருக்க கூடாது. டெய்லி 2 தடவை கண்டிப்பா பிசியோதெரபி பண்ணணும். வீல் சேர் வேணும்னா வச்சுக்கிட்டு கொஞ்சம் மூவிங்ல இருக்கணும். முதலும் முக்கியமான விஷயம் என்னன்னா குணமாகி எழுந்துரிச்சு உட்காரணும்ன்னு நீங்க மனப்பூர்வமா நம்பணும். அந்த மனஉறுதியோட பலத்தில தான் நீங்க எழுந்துரிக்க முடியும். எனக்கு ஒரே ஒரு மாசம் டைம் குடுங்க. இந்த வீட்டை கூட நீங்க காலி பண்ண வேண்டாம். அப்படியே இருக்கட்டும். பட் எங்க கூட வாங்க. ஒரு என்விரோண்மெண்ட்டல் சேன்ஜ் பாசிட்டிவ் வைப்ரேஷனை குடுத்தா நல்லது தானே? நீங்க வீட்ல இருக்கிற வரைக்கும் எனக்கும் ரெண்டு அம்மா கிடைப்பாங்க! ஒரு சேலன்ஜா எடுத்துட்டு இதை நான் செஞ்சு முடிக்கிறேன்! ப்ளீஸ்மா!" என்று கேட்ட மித்ரனின் தோளை சுரண்டிய அலர்மேல் மங்கையிடம், "ம்! சொல்லுங்கம்மா, என்ன கேக்கணும்?" என்றான் மித்ரன் சிறு சிரிப்புடன்.
"நல்லா கருத்தா பேசுற டாக்டரு, அது என்ன இங்கிலீசுல ஏதோ சொன்னியே....!" என்று இழுத்தவரிடம்,
"எங்க கிட்ட வர்ற நோயாளிகளுக்கு நாங்க செய்யுற வைத்தியத்தை விட அவங்களுக்கு நம்பிக்கை தர்ற விதமா பேசி அவங்களை உற்சாகப்படுத்துறது தான்மா எங்களோட முதல் வேலையே! சூழ்நிலை மாறினா அம்மா சீக்கிரம் குணமாகிடுவாங்க. அதைத் தான் இங்க்லீஷ்ல சொன்னேன்மா!" என்று சொன்ன மித்ரனின் தலையை வருடிய மங்கை, "உம் பேரென்ன டாக்டரு?" என்று கேட்டவரிடம் யோசனையுடன் பார்த்த மித்ரன், "என் பேரு சிவாமா!" என்று சொன்ன போது சந்திரதாராவின் முகத்தில் ஒரு வருத்தம் மிகுந்த பாவத்தை பார்த்து மித்ரனின் மனதில் மகிழ்ச்சி தான் தோன்றியது. தன் அன்னை ஒரு பெயரை சொன்ன போது கூட தன்னை நினைத்து கொள்கிறார்கள் என்ற மகிழ்ச்சி தான் அது!
ஒரு வழியாக இருவரும் பேசி இருவரையும் தங்கள் இல்லத்திற்கு இன்னும் இரண்டு நாட்களில் வந்து அழைத்து செல்கிறோம் என்று உறுதியாக சொல்லி விட்டு கிளம்பும் போது மித்ரனுக்கு துள்ளிக் குதிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது.
தன் மனதிற்கினியவளுக்கு தன்னுடைய குதூகலத்தை பகிர்ந்து கொள்வதற்காக அழைத்தான் மித்ரன்.
அவள் ஏற்கனவே இவன் எப்போதடா அழைப்பான் என்று எதிர்பார்த்து காத்திருந்தாள். நேத்ரனுடன் காரில் கிளம்பியவுடன், "மித்து இப்போ கூப்பிட்டுருவான் பாரு நேத்து!" என்று
பெட் கட்டியிருந்தாள். ஆனால் அவள் அந்த வாக்கியத்தை அவனிடம் சொல்லி அப்பொழுது தான் ஒன்றரை மணி நேரம் கடந்திருந்தது. காரை செலுத்தியவாறே ப்ளூடூத் பயன்படுத்தி அவனை கிழித்து கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"இவ்வளவு நேரம் போன் பண்ணாம என்னடா பண்ணிட்டு இருந்த பித்து? நான் நேத்து கிட்ட பெட் கட்டியிருந்தேன். உன்னால பைவ் தவுசண்ட் போச்சு. ஆன்ட்டியை பார்த்தவுடனே உனக்கு ஐஸ்வர்யா ஸ்ரீ மறந்து போயிடுச்சுல்ல? உங்க அம்மா மடியையே கட்டிப் பிடிச்சுட்டு படுத்துக்கோ; அவங்க கூடவே இருந்துக்கோ. எனக்கு எங்க மாமாவும், மிட்டுவும் மட்டும் போதும். நீ வேண்டாம்.....போ!" என்று சிணுங்கலுடன் சொல்லிய ஐஸ்வர்யா ஸ்ரீயிடம்,
"ஏய் வாட்டர் பெட் டூ மினிட்ஸ் எங்கயாவது வண்டியை நிறுத்திட்டு கீழே இறங்கி வா! உனக்கு ஒண்ணு குடுக்கணும்!" என்றான் மித்ரன். புல்லாங்குழலில் ஐஸ்கிரீமை ஊற்றி ஊதுவது போல் என்றும் இல்லாமல் அவன் குரல் ஐஸ்வர்யாவை கிறக்கியது. என்றும் அவளிடம் பேசுகையில் ஒரு கம்பீரத்துடன் கேட்கும் அவனது குரல் இப்பொழுது அவளை இம்சித்தது.
காரை ஒதுக்கி நிறுத்தி விட்டு கீழே இறங்கியவளிடம் நேத்ரன், "அண்ணியார் திடீர்னு எதுக்கு கீழே இறங்குறீங்க?" என்றான் கிண்டல் குரலில்.
"ம்ம்ம்ம்..... நீ என்னை போந்தாங்கோழி ன்னு திட்டினப்போ உங்கண்ணன் சிரிச்சுட்டு நின்னுட்டு இருந்தான் ல.... அதுக்கு அவனுக்கு பனிஷ்மெண்ட் குடுக்கறதுக்கு தான் இறங்குறேன். உள்ளேயே உட்கார்ந்து ஏதாவது நோண்டிட்டு இரு! கீழே இறங்கி வராத!" என்று அவனிடம் கட்டளையிட்டு விட்டு சற்று தூரத்தில் தள்ளி வந்து நின்று கொண்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
நேத்ரனுக்கு ஐஸ்வர்யாவின் இயல்பு மிகவும் பிடித்திருந்தது. தன் அன்னையை போல் அழுத்தமாக மனதிற்குள் எதையும் திணித்து வைக்காமல் நினைத்ததை உடனே முகத்துக்கு நேராக பேசிவிடும் தன் அண்ணியின் குணம், மூச்சுக்கு மூச்சு அவள் சொல்லும் மித்ரன் ஜபம், தன் அண்ணனிடம் அவளின் கோபம், வெட்கம் இவை எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டு இருந்தான். அவனால் ஐஸ்வர்யாவை அண்ணி என்ற ஸ்தானத்தில் பொருத்தி தூர நிறுத்தி வைக்க முடியவில்லை. சட்டென்று அண்ணி என்று கூப்பிடும் போதே சிரிப்பு தான் வந்தது. ஆனால் இந்த ஐஷு அவன் அண்ணி என்று அழைப்பதை தானே விரும்புகிறாள்? மனம் திறந்து வெளிப்படையாக பேசிக் கொள்ள அவனுக்கு ஒரு நல்ல தோழி அண்ணியெனும் பெயரில் கிடைத்தது மகிழ்ச்சி தான்! காரில் அமர்ந்து அவள் பத்திரத்தை தான் உறுதி செய்து கொண்டிருந்தான் நேத்ரன்!
"மித்து கீழே இறங்கி வந்துட்டேன்.....
இப்ப சொல்லு, ஏன்டா இப்படி ஹஸ்கி வாய்ஸ்ல எல்லாம் பேசி ஒரு சின்ன புள்ளைய டிஸ்டர்ப் பண்ற?" என்று புகார் கூறியவளிடம் நடந்தவை அனைத்தையும் சுருக்கமாக சொல்லி விட்டு,
"நீயா சின்னப் பொண்ணு? வரு.... திருப்பூர்ல என்ன வேலை இருந்தாலும் சரி, நாளைக்கு நைட் நீ நம்ம வீட்ல இருக்கணும். புரிஞ்சதா? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதை நீ பக்கத்தில தான் உன் கூட ஷேர் பண்ணிக்க முடியும். சீக்கிரம் வா கண்மணி!" என்று ஏக்கக் குரலில் அவளை அழைத்தான் மித்ரன்.
"பாவா..... ஏதோ குடுக்கணும்ன்னு சொன்னியே..... என்னது அது?" என்று கேட்டவளிடம்,
"ம்ஹூம்; ஸாரிடா கண்மணி! உன்னை நேர்ல பார்க்குறப்போ என் மொத்த ஃபீலையும் உன் கிட்ட கொட்டிடுறேன். இப்போதைக்கு ஒண்ணு தான் சொல்ல முடியும். நீ இல்லாம எனக்கு கிடைச்ச சந்தோஷத்தை கூட முழுசா அனுபவிக்க முடியாமல் தவிச்சுட்டு இருக்கேன். சீக்கிரம் வா...... இனிமே உங்கிட்ட நல்லவனா இருக்கிறது கஷ்டம்ன்னு தோணுது. ரொம்ப சோதிக்காம கிளம்பி வந்துடு..... லவ் யூ கண்மணி! பை!" என்று சொல்லி மித்ரன் வைத்த பிறகும் கூட அவனது வார்த்தைகள் ஐஸ்வர்யாவின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. சிறு வெட்கப் புன்னகையுடன் காரில் ஏறிப் புறப்பட்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
காணும் யாவும் புதிதாய் தெரியும்
வானில் பறக்க சிறகுகள் விரியும்!
ஏனோ ஏனோ மனத்திரை மறையும்!
இதுவே காதல் என்றே புரியும்!
வா வா கண்ணே என் பாடலின் இசையே;
வா வா புது ராகம் செய்வோம்!
வா வா கண்ணே என் தேடலின் திசையே நீ;
வா வா புதுப் பயணம்
செல்வோம்!
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro