💖 வஞ்சி மனம் 13
Bhuvaneshwar
Chandrathara
Gangadhar
Manashwini
Ajay
Nethran
Alarmelu mangai
(கொஞ்சம் குழப்பமா இருக்குங்களா சகோஸ்? ஃப்ரீயா விடுங்க. கதை நகர்வின் போது கதாபாத்திரங்கள் பிடிபட்டு விடுவார்கள் 😊)
கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து இருந்த மித்ரனிடம், "மித்து நீ ஹாஸ்பிட்டல் கிளம்பலையா? உனக்கு நிறைய வேலை இருக்குமே?" என்று கேட்டு அவன் மடியில் இருந்து எழுந்து கொள்ள முயன்றவளை, "வரு என்னடா நீ? ஏதோதோ சொல்லிட்டு இப்போ கிளம்புன்னு வேற சொல்ற? நே......நேத்ரன் என் தம்பியோட பேரு. அவன் எப்படி இங்கே வொர்க் பண்ணிட்டு இருக்கான்? எனக்கு ஒண்ணுமே புரியலையே....!" என்று டேபிளில் கைகளை ஊன்றிக் கொண்டு இரு கைகளாலும் தலையை தாங்கிக் கொண்டு இருந்தவனிடம், "ட்ரிங்க் ஏதாவது குடிக்கிறியா மித்து? யூ நீட் ஸம் டைம் டூ டைஜஸ்ட்!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ மெதுவாக.
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் வரு; ப்ளீஸ் உனக்கு என்னென்ன விஷயம் தெரியுமோ.... எதையும் மறைக்காம முழுசா என் கிட்ட சொல்லிடு!" என்றான் தவிப்பும் ஆர்வமும் நிறைந்த குரலில்.
ஐஸ்வர்யா ஸ்ரீ அருள்மொழி அவளிடம் சொன்ன விபரங்களை ஒவ்வொன்றாக அவனிடம் சொல்ல சொல்ல மித்ரனுக்கு எல்லா விஷயத்தையும் கிரகித்துக் கொள்ள முழுதாக ஒரு மணி நேரம் தேவைப்பட்டது.
"அப்பா இப்போ இல்லையா வரு? அம்மா.....அம்மாவுக்கு ஏன் இப்படி?....சித்தப்பா பேமிலி ஏன் நம்ம கிட்ட இப்படியெல்லாம் தப்பா நடத்துக்கிட்டாங்க? எனக்காவது இன்னிக்கு வரைக்கும் ஒண்ணும் தெரியாது. ஆனா சோட்டு எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பான்?" என்று கேட்டவனிடம்
"கண்டிப்பா கஷ்டமா தான் இருந்திருக்கும் மித்து. நமக்கு உரிமையான ஒரு இடத்துல நம்மளை கெஸ்ட் மாதிரி ட்ரீட் பண்ணினா அது எவ்வளவு கொடுமையான விஷயம், நம்ம நேத்து பாவம்....அதை அனுபவப்பூர்வமா உணர்ந்திருப்பான். நமக்கு இப்போ 2 வேலை இருக்கு மித்து! பர்ஸ்ட் ஆன்ட்டியை போய் பார்த்து பேசி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும். இரண்டாவதா நம்ம திருப்பூர் கிளம்பிப் போய் உங்க சித்தப்பாவுக்கு கொஞ்சம் வார்னிங் குடுத்துட்டு வரணும்!" என்று சொன்னவளிடம் மறுப்பாக தலையசைத்து
"இப்போதைக்கு ரெண்டுமே வேண்டாம் வரு; அம்மாவோட கண்டிஷன் என்னன்னு தெரியல. என்ன ட்ரீட்மெண்ட் பண்றாங்க, அவங்க உடம்பும், மனசும் இந்த விஷயத்தை ஏத்துக்குற அளவுக்கு ரெடியா இருக்கான்னு எந்த ஐடியாவும் இல்ல! எனக்கே இன்னும் நீ சொன்ன விஷயம் எல்லாம் முழுசா உண்மைன்னு நம்பவே முடியலை. ஆனா இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் ஒரு முடிவுக்கு வந்துடுச்சு. அம்மா, தம்பியாவது ஸேஃபா இருக்காங்கன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு! இந்த சந்தோஷம் போதும்டா வரு! கொஞ்ச நாளைக்கு அப்புறம் அம்மா, சோட்டுவை நம்ம கூட கூப்பிட்டுக்கலாம். அப்புறம்
நானும் சோட்டுவும் சம்பாதிக்கிற பணத்தில நம்ம எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம். ஆனா கடைசி வரைக்கும் நம்ம ஸாரை விட்டு நான் எங்கேயும் வர மாட்டேன் வரு! என்னை அவர் வளர்த்த விதத்துக்கு என்னால அப்படி வரவும் முடியாது. நம்ம யாரு கிட்டயும் எந்த பிரச்சனையும் பண்ண வேண்டாம் கண்மணி, என்ன ஒரு வருத்தம்.... அவங்க கேட்டிருந்தா அப்பாவே குடுத்திருப்பாங்களோ; என்னவோ! அப்பா நம்ம கூட இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாங்க..... இட்ஸ் ஆல்ரைட், மிஸ்டர் கங்காதரன் திருப்பூர்ல ஒரு பிக் ஷாட்டாவே இருக்கட்டும் வரு! இதோட இந்த மேட்டரை விட்டுடுமா, இப்போ கூப்பிடு மிஸ்டர் நேத்ரன் புவனேஸ்வரை; அவர் கிட்ட நிறைய பேசணும்!" என்றான் மித்ரன்.
"இப்போ கூட உன் பணத்தையும், உன் தம்பி பணத்தையும் தான் கணக்கில எடுத்துக்குற பார்த்தியா? என்னை மட்டும் பிரிச்சு பார்க்குற; என் சேலரியை வாங்கிக்க மாட்டியாடா பித்து?" என்று ஆதங்கத்துடன் கேட்டவளிடம் சிரிப்புடன்
"ம்க்கும்; சேலரி வாங்கணும்னா குறைஞ்ச பட்சம் ஒரு முப்பது நாள் ஆஃபிஸ்ல வேலை பார்க்கணும்டா வாட்டர் பெட்? உன்னால அதெல்லாம் முடியும்ங்கிற?" என்று கேட்டவனை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"சரி, என்னை கலாய்க்குறது எல்லாம் இருக்கட்டும். இப்போ உங்க தம்பி உங்க கூட பேச வரப் போறாரு மிஸ்டர் மித்ரன்; அந்த நேரத்தில இந்த கேபின்ல நான் இருக்கலாமா? இல்ல வெளியே போகட்டுமா? உங்களுக்குள்ள ஏதாவது பெர்சனல் கான்வர்சேஷன்ஸ் இருக்கலாம். அதான் கேக்குறேன்!" என்று சொன்னவள் மூக்கைப் பிடித்து இழுத்து நெற்றியில் முத்தமிட்டவன்,
"உன்னை விட்டுட்டு அப்படி என்ன கண்மணி பர்சனல் கான்வர்சேஷன் போகப் போகுது? அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நீ தான் ஏற்கனவே அவன் கிட்ட நல்லா பேசுறியேமா? என்னையும் கொஞ்சம் அவனுக்கு இன்ட்ரடியூஸ் பண்ணி வச்சிடேன். ப்ளீஸ்!" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான் சிவ மித்ரன்.
"காரியம் ஆகணும்னா மட்டும் கிஸ் குடுத்து ஐஸ் வை; அட்லீஸ்ட் ஒரு பட்டர்ஃபிளையாவது குடுடான்னு கேட்டா தோட்டத்தில இருக்கு, பார்க்ல இருக்குன்னு சொல்லிட்டு ஓடிப் போயிடு, லூசு.... தள்ளி நில்லு!" என்று சொல்லி அவனை எட்டி நிறுத்தி விட்டு இண்டர்காமை எடுத்து நேத்ரனை தன் கேபினுக்குள் வருமாறு அழைப்பு விடுத்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
நேத்ரன் அறைக்குள் நுழைந்த போதே நெற்றிக்கண்ணை திறந்து கொண்டு தான் நுழைந்தான். "யெஸ் மேம்!" என்று அவளை கடுப்பேற்றியவனிடம், "ப்ளீஸ் ஹாவ் யுவர் ஸீட் மிஸ்டர் நேத்து!" என்று பதிலடி கொடுத்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து தன்னை சமன்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தவனை ஐஸ்வர்யாவின் இருக்கைக்கு அருகே நின்று கொண்டு ஆசையாக பார்த்து கொண்டு இருந்தான் மித்ரன்.
"அப்புறம் மிஸ்டர் நேத்து....வாட்ஸ் யுவர் ஃப்யூச்சர் ப்ளான்?" என்று கையில் இருந்த பேனாவை பார்த்து கொண்டே கேட்ட ஐஸ்வர்யாவிடம், "அப்ராட்ல போய் என்னோட மாஸ்டர்ஸ் டிகிரி கம்ப்ளீட் பண்ணணும். அதுக்கு ஆகுற எக்ஸ்பென்ஸஸ் எல்லாம் நம்ம கம்பெனி குடுக்கணும். நான் அங்கே போயிட்டு வர்ற வரைக்கும் எங்க அம்மாவை ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் குடுத்து பத்திரமா பார்த்துக்கணும்! இதெல்லாம் முடியுமா உங்களால? சும்மா ஃப்யூச்சர் ப்ளான் என்ன? வெங்காயம் என்னன்னு உயிரை வாங்கிட்டு.....உங்களுக்கு இப்போ என்ன டேட்டா வேணும்? அதை சொன்னீங்கன்னா கொஞ்சம் பெட்டரா இருக்கும் மேடம்!" என்றவனிடம் விரிந்த புன்னகையுடன்,
"சூப்பர்ப் ஆம்பிஷன் நேத்ரன்.....என் வேலையை நீங்க கொஞ்சம் ஈஸியா ஆக்கிட்டீங்க. எங்க அப்பாவோட ப்ராப்பர்ட்டீஸ் யூஎஸ்ல இருக்கு. நீங்க அங்கயே ஸ்டே பண்ணிக்கலாம். ஸ்டான்ஃபோர்டு அங்கிருக்கிற ஒன் ஆஃப் தி பெஸ்ட் யுனிவர்சிட்டீஸ். அங்கயே நீங்க ஜாயின் பண்ணிக்கலாம். நீங்க தான் அகாடமிக் ஃபெர்பாமென்ஸ்ல செம ஸ்ட்ராங்கா இருக்கீங்களே.... உங்க மாஸ்டர்ஸ்க்கு நீங்க அப்ராட் தான் போகப் போறீங்க மிஸ்டர் நேத்து! டோண்ட் வொர்ரி. நீங்க கேட்ட மாதிரி உங்களுடைய எல்லா செலவுகளையும் கம்பெனி பார்த்துக்கும். மீட் மிஸ்டர் சிவ மித்ரன்..... உங்க அம்மாவை பத்திரமா பார்த்துக்கிற வேலையை இவரும், இவருடைய வொய்ப்ம் பார்த்துப்பாங்க.
பட் நீங்க எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணி தரணும். அறிவை வளர்த்துக்க வெளியே போகலாம்! ஆனா அந்த அறிவு நம்ம நாட்டுக்கு தான் உபயோகமா இருக்கணும். ஸோ படிச்சுட்டு திரும்பி வந்து நம்ம கம்பெனியிலயோ, இல்ல இங்கிருக்குற வேற கம்பெனிஸ்லயோ ஜாயின் பண்ணணும். இந்த கண்டிஷன் உங்களுக்கு ஓகேவா?" என்று கேட்டவளிடம்,
"தேங்க்யூ சோ மச் மேம்! இவ்வளவு சீக்கிரமா என்னோட ட்ரீமை அச்சீவ் பண்ண முடியும்ன்னு நான் நினைக்கவேயில்ல. ஐ'ம் ரியலி தேங்க்புல் டூ யூ!" என்று சொன்னவன் மித்ரனின் அருகே வந்து, "ஹாய் ப்ரோ; உங்க நேம்ல ஏற்கனவே ஒருத்தரை எனக்கு ரொம்ப நல்லா தெரியும். பட் இப்போ அவர் பெயர் மட்டும் தான் நியாபகத்துல இருக்கு. வீ லாஸ்ட் ஹிம்!" என்று பெருமூச்சுடன் கூறியவனை, "டோண்ட் வொர்ரி சோட்டு! எவ்ரிதிங் வில் பீ ஃபைன்; குட்டியா இருந்தவன் எவ்வளவு பெரிய பையனா மாறிட்ட.... மிஸ்டு யூ சோ மச் கண்ணா!" என்று சொல்லி விட்டு தன் தம்பியை அணைத்துக் கொண்டான் மித்ரன்.
தன் அண்ணனின் அணைப்பிற்குள் அடங்காமல் திமிறி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த நேத்ரன், "சி.....சி....சிவா அண்ணா?" என்று கேள்வியை தன் முகத்தில் தேக்கி கண்களால் வினவினான்.
சிவமித்ரன் புன்னகையுடன், "உன் சிவா அண்ணா தான் சோட்டு! நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். ஏன்னா நானும் வளர்ந்துட்டேன்ல.....!" என்று கேட்டவனை பாய்ந்து அணைத்துக் கொண்டான் நேத்ரன்.
சகோதரர்கள் இருவரின் உணர்ச்சிப்பூர்வமான தருணத்திற்கு தனது பேச்சால் இடையூறு விளைவிக்காமல் அமைதியாக இருவரையும் பார்த்து கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"சோட்டு....போதும்டா கண்ணா, விடுடா!" என்று தன் தம்பியிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான் சிவ மித்ரன். அந்த அளவுக்கு நேத்ரன் தன் சகோதரனை இம்சைப் படுத்திக் கொண்டு இருந்தான். அவை மித்ரனுக்கு அனைத்தும் சுகமான இம்சைகளாக அவன் ரசிக்கும் படி தான் இருந்தது. ஆனால் தன் வருங்கால மனைவியின் முகம் பகல் நேர அல்லி மலரைப் போல் இருந்தது பொறுக்காமல் தான் தன் தம்பியிடம் இருந்து விலக நினைத்து கொண்டு இருந்தான்.
ஐஸ்வர்யா ஸ்ரீ அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல், "மிஸ்டர் நேத்து ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்கீங்க. மித்து பாவாவை கொஞ்சம் விடுறீங்களா?" என்று அவனிடம் மிகவும் பவ்யமாக கேட்டாள்.
"ஏய் போந்தாங்கோழி, யாருடீ உன் பாவா? இவர் என்னோட சிவா அண்ணா!" என்று நேத்ரன் அவளை மிரட்டவும் மித்ரன் சிரித்து விட்டான்.
"மித்து அதென்ன இவன் என்னை ஏதோ கோழின்றான்! போ....போ! வாட் இஸ் தட்..... டேய் நீ சொன்ன வேர்டுக்கு என்னடா அர்த்தம்?" என்று கேட்டவளிடம் ஏளனமாக,
"ஹாங்; டிக்ஸ்னரில தேடிப் பாரு; அர்த்தம் கிடைக்கும்!" என்றான் நேத்ரன் சிரிப்புடன்.
"நான் உன் அண்ணாவோட ஃபியான்சி; பெட்டர் மைண்ட் யுவர் லாங்குவேஜ் மிஸ்டர் நேத்ரன்!" என்று கோபத்துடன் சொன்ன ஐஸ்வர்யாவிடம்,
"அதை நீ சொல்லக் கூடாது ஐஸ்வர்யா! எங்க அம்மா சொல்லணும்! இவங்க தான் உன் அண்ணின்னு அவங்க சொல்லட்டும். அதுக்கப்புறம் உனக்கு மரியாதை குடுக்கணுமா? வேணாமான்னு நான் யோசிக்கிறேன்!" என்றான் நேத்ரன் கெத்துடன்.
"டேய் நேத்து..... நீ ரொம்ப நல்ல பையன்ல்ல; நான் தான் உன் அண்ணின்னு ஒத்துக்கோடா; ப்ளீஸ்.....!" என்று அவனிடம் கெஞ்சியவளிடம் புன்னகையுடன், "ஓ! சிவா அண்ணா மேல உனக்கு அவ்வளவு லவ்ஸா? சரி பரவாயில்லை. நீயே என் அண்ணியாக ஆகக் கடவது!" என்று அருள் பாலித்தான் நேத்ரன்.
"சோட்டு.....அம்மாவுக்கு இப்போ என்ன பிரச்சனை? எப்படி இருக்காங்க? எங்க இருக்காங்க? அவங்க கண்டிஷனை பார்த்துட்டு தான் நம்ம அடுத்த மூவ் ப்ளான் பண்ணணும்டா" என்று சொல்லிக் கொண்டு இருந்த தன் அண்ணனிடம்,
"அண்ணா நீ என்ன பண்ற? உன்னை பத்தி எதுவும் சொல்லலையே?" என்று கேட்ட தன் தம்பியிடம் தன்னைப் பற்றி சொன்னான் மித்ரன். மித்ரனின் தம்பியை பத்திரமாக பாதுகாத்து வேலையும் அளித்த அருள்மொழியின் பெரிய மனதை பற்றி மித்ரன் சொல்ல அன்றைய ரவுண்ட்ஸை முடித்து விட்டு திரும்பிய அருள்மொழியின் காலில் சகோதரர்கள் இருவரும் விழுந்து வணங்கினர்.
"எ....ஏய்....எழுந்துரிங்க ரெண்டு பேரும்....என்னடா இது? எதுக்கு என்னோட காலுல வந்து விழுறீங்க?" என்று கேட்டார் அருள்மொழி.
"நன்றிக் கடனை மறந்துடக்கூடாதுல்ல ஸார்! அதுக்கு தான்!" என்றனர் இருவரும் இணைந்து.
"ம்ஹூம்! நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு உணர்ச்சி வசப்படுற அளவுக்கு நான் ஒண்ணும் செய்யல. மித்ரன்ட்ட எப்படி இந்த விஷயத்தை சொல்லப் போறோம். ரொம்ப நாளா மறைச்சு வச்சுட்டு இருக்கோமேன்னு கவலையா இருந்தது. எல்லாத்தையும் ஐசு பார்த்துக்கிட்டா. நீ சீக்கிரமா உங்கம்மாவை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுடா நேத்ரா. மித்ரனுக்கு உங்கம்மா தேவைங்கிறதை விட இப்போ உங்கம்மாவுக்கு மித்ரனோட ஹெல்ப் ரொம்ப தேவை!" என்று அருள்மொழி சொல்ல மித்ரன் நேத்ரனிடம்
"சோட்டு! அம்மா கிட்ட இப்போதைக்கு ப்ரெண்ட் வீட்டுக்கு ஷிப்ட் ஆகப் போறோம்ன்னு சொல்லி வை. கொஞ்ச நாளைக்கு அப்புறம் நிதானமா எல்லாத்தையும் சொல்லிக்கலாம்!" என்று சொல்ல நேத்ரன் தலையாட்டினான்.
ஐஸ்வர்யா ஸ்ரீ அருள்மொழியிடம், "மாமா மிட்டு பேபியை நீயும் இவனும் பார்த்துக்கோங்க. எனக்கும் நேத்துவுக்கும் ஒரு முக்கியமான வேலை இருக்கு. கார்ல ஏறுடா நேத்து!" என்று சொன்னவளிடம் நேத்ரன் கோபமாக
"அடிப்பாவி, நல்லா இருந்த எங்க சிவா அண்ணனை என்னடீ பண்ணின? நீங்க லிவ்விங் ரிலேஷன்ஷிப்ல இருக்கீங்களா? இன்னும் கல்யாணமே ஆகல. அதுக்குள்ள பேபியே பொறந்துடுச்சா? சீக்கிரம் ஏதாவது கோவில்லயாவது ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குங்க!" என்று எரிச்சலில் வார்த்தைகளை உதிர்த்தவனிடம்,
"வாயை மூடுறா! என் வாயில நல்லா வந்துடும்! ஒரு கிஸ் கேட்டா குடுக்காம ஏமாத்திட்டு உங்கண்ணா ஓட்டமா ஓடிட்டு இருக்கான். இதுல பேபி...... ஒண்ணு தான் குறைச்சல்! மிட்டுங்கிறது ஒரு உங்கண்ணா காப்பாத்தின ஒரு அணில் பிள்ளைடா!" என்று சொல்ல நேத்ரன் அசட்டுப் புன்னகையுடன், "ஸாரிப்பா ஐஷு!" என்றான்.
அருள்மொழி நேத்ரனிடம், "உன் வீட்டு அட்ரஸ் குடு நேத்ரா! அம்மா பேரு என்ன?" என்று கேட்க சகோதரர்கள் ஒரே சமயத்தில், "சந்திரதாரா" என்று சொல்லி விட்டு சிரித்துக் கொண்டனர்.
மித்ரன் ஐஸ்வர்யாவின் அருகில் வந்து, "வரு பேபி மித்து சொன்னா நீ கேப்பியா? மாட்டியா? திருப்பூருக்கு போக வேண்டாம்டா! வீணா பிரச்சனை தான் வரும்!" என்றான்.
"என்னடா நேத்து; உங்க சித்தப்புவை கொஞ்சம் கவனிக்கலாம்ன்னு நினைச்சேன்! மித்து வேண்டாம்ங்கிறான். உன் ஒப்பீனியன் என்ன?" என்று கேட்டவளிடம் மனம் நிறைந்த சிரிப்புடன்,
"மிஸஸ். மானஸ்வினி கங்காதர், மிஸ்டர். அஜய் கங்காதர்..... நேத்ரன் புவனேஸ்வர் இஸ் கமிங் பார் யூ; வா ஐஷு போகலாம்!" என்று துள்ளல் நடை போட்டு அவன் முன்னால் சென்று விட, ஐஸ்வர்யா மித்ரன் மற்றும் அருள்மொழியிடம் புன்னகையுடன் விடைபெற்று விட்டு தன் வருங்கால கணவனின் பிறப்பிடம் நோக்கி புறப்பட்டாள்.
ஜோடி நிலவே பாதி உயிரே
சோகம் ஏனடா
தேம்பும் மனதை தாங்கும்
மடியில் சாய்ந்து கொள்ளடா!
காலம் கடந்து போகும்
உந்தன் காதல் பழகிப் போகும்!
மண்ணில் விழுந்த பூவும்
சிறு காற்றில் பறக்கக் கூடும்!
தாங்க தாங்க பாரங்கள்
காலம் தந்தவை;
காண வேண்டும் ஆயிரம் கோடிப் புன்னகை!
தாங்கிக் கொள் என்
கண்மணி,
சாய்ந்து கொள் என் தோளில் நீ!
வானம், பூமி, காற்றை
தாண்டி வாழ்ந்து
பார்க்கலாம்!!
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro