Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 12

அன்று காலையில் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த அருள்மொழியின் அறைக்கு சென்ற ஐஸ்வர்யா ஸ்ரீ, "மாமா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்! டென் மினிட்ஸ் ஸ்பெண்ட் பண்ண முடியுமா?" என்று கேட்டவளிடம் சிரிப்புடன்

"ம்ஹூம்! ஐசு மாமாவுக்கு நிறைய வேலை இருக்குடா. நைட் வந்து பொறுமையா பேசலாம். சரியா?" என்று தன் டையை சரி செய்து கொண்டிருந்தவர் கையை தட்டி விட்டு அவரின் டையின் முடிச்சை பற்றிக் கொண்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லலைன்னா அப்படியே முடிச்சை இறுக்கி கொன்னுடுவேன் மாமா!" என்று முறைப்புடன் நின்றாள்.

"ஐயோ ஐசு; எதுக்கு இவ்வளவு கோபம்? ஏதாவது வேணுமா? மாமா கிட்ட கேளு. வாங்கி தர்றேன்!" என்று சொன்னார் அருள்மொழி.

"ஒரே ஒரு கேள்விக்கு பதில் மட்டும் வேணும் மாமா, சொல்லிட்டு எங்க வேணும்னாலும் போ!" என்று சொன்னாள் ஐஸ்வர்யா.

அருள்மொழி அவளிடம் "என்னடா ஐசு மரியாதை எல்லாம் தேயுது, என்ன தான் கோபம்? காரணத்தை சொல்லிட்டு நல்லா கோபப்படு!" என்று சொன்னார்.

"மித்து 6,7 வயசு குழந்தையா இருக்கும் போதிருந்தே உன் கிட்ட தான் இருக்கான். அவனுக்கு ஒரு பேமிலி இருந்து அதை கண்டுபிடிச்சு தரணும்ன்னு உனக்கு ஏன் தோணவேயில்ல? தனியா தானே இருக்கோம், நாமளே வச்சுக்கலாம்ன்னு நினைச்சியா?" என்று கேட்டவளிடம்

"மாமா அப்படி ஒரு தாட் வச்சிருந்தேன்னு நீ நினைக்கிறாயாடா ஐசு?" என்று கேட்டார் அருள்மொழி. என்னைப் பற்றி நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா என்று கேட்ட அவர் பார்வையில் வலி இருந்தது.

"நீங்க ரொம்ப நல்லவர் தான் மாமா; ஆனா இதுவரைக்கும் மித்து விஷயத்துல ஏதாவது ப்ரொஸீட் பண்ணியிருக்கீங்களா? நீங்க வருத்தப்படுவீங்கன்னு நினைச்சு தான் அவன் சும்மா இருக்கான் போலிருக்கு! ஆனா கொஞ்சம் ஃபீல் பண்றான்  மாமா!" என்றாள் ஆதங்கத்துடன்.

"இருக்கத்தானேடா செய்யும்? பாவம்! என் கிட்ட எதையும் மனசு விட்டு பேச மாட்டான். உன் கிட்டயாவது மனசுல இருக்கிறதெல்லாம் சொல்லுறானே? அதுக்கு சந்தோஷப்படணும்!" என்றார் அருள்மொழி.

"அவன் லைஃப்ல என்ன தான் நடந்துச்சு? சொல்லுங்க மாமா!" என்று கேட்ட ஐஸ்வர்யாவை கைப்பிடித்து அழைத்துச் சென்று ஸோஃபாவில் அமர்த்தினார் அருள்மொழி.

"மித்ரன் என் கிட்ட வந்த மறுநாளே போலீஸ்ல இன்பார்ம் பண்ணியாச்சுடா, திரும்ப திரும்ப போய் கேட்டும் அவங்க இந்த விஷயத்தில ஒரு ஆக்ஷனும் எடுக்கல. இப்போ பார்க்குறோம், அப்புறம் பார்க்குறோம்ன்னு சொல்லிட்டு ஒரு வருஷத்தை வேஸ்ட் பண்ண வச்சுட்டாங்க. அதுக்கப்புறமும் வெயிட் பண்ண வேண்டாம்ன்னு நினைச்சு நான் நம்ம பேமிலி லாயர் கிட்ட பிரச்சனையை சொன்னேன்! அவர் எல்லா பத்திரிகைகள்லயும் விளம்பரம் போட்டுடலாம்ன்னு சொன்னார். சரி எப்படியாவது மித்ரா பேமிலி கிடைச்சா போதும்ன்னு அந்த முயற்சியையும் எடுத்தோம். ரெண்டு நாள் கழிச்சு நம்ம வீட்டுக்கு மித்ரன் பேமிலியில இருக்கிறவங்க போன் பேசினாங்க!" என்று அவர் சொல்லி விட்டு நிறுத்த

"வாவ், சூப்பர் மாமா, மித்துவோட பேமிலியில இருக்கிறவங்க பேசினதா சொல்றீங்க! அப்புறம் ஏன் இன்னும் மித்து இப்படியே இருக்கான்?" என்று கேட்ட தன் மருமகளை பார்த்து ஏளனமாக சிரித்து விட்டு தொடர்ந்தார் அருள்மொழி.

"மித்ராவோட சித்தப்பான்னு சொல்லிட்டு தான் ஒருத்தன் பேசினான்டா ஐசு! மித்ரனோட அப்பா நாலு மாசம் முன்னாடி இறந்துட்டாரு. அந்த அதிர்ச்சியில அவங்கம்மாவுக்கு பாராலிசிஸ் அட்டாக் வந்துடுச்சு. எங்கண்ணியையும், பிள்ளையையும் சேர்த்து பார்க்குறதுக்கே எங்களால முடியல. ஸோ பெரியவன் தொலைஞ்சது தொலைஞ்சதாவே இருக்கட்டும். உங்களால பார்த்துக்க முடியலைன்னா ஏதாவது ஹோம்ல கொண்டு போய் விட்டுடுங்கன்னு சொல்லிட்டு வச்சுட்டான்டா! இவன் கிட்ட இருந்தா மித்ரனோட அம்மாவும், தம்பியும் உயிரோட இருக்குறது கூட கஷ்டம்ன்னு எனக்கு தோணுச்சு! ஆனா அந்த ராட்சஸ பிறவிங்க கிட்ட இருந்து புள்ளைய பத்திரமா பார்த்துக்கிறது தான் முக்கியம்ன்னு மனசுக்கு பட்டது. அவங்க மேலயும் அப்பப்போ ஒரு கண்ணு வச்சுட்டு மித்ராவையும் என்னால முடிஞ்ச அளவு ஒரு நல்ல மனுசனா ஆளாக்கிட்டேன். மித்ரா தம்பி நேத்ரன் நம்ம ஆஃபிஸ்ல தான் ட்ரையினியா ஜாயின் பண்ணியிருக்கான். படிப்பு முடிஞ்சதுக்கப்புறமும் எனக்கு அவங்க ரெண்டு பேரையும் அங்க விட்டு வைக்க மனசே கேட்கல. அதனால தான் நம்ம ஆஃபிஸ்ல ஒரு வேலை போட்டு குடுத்து இங்கேயே செட்டில் பண்ணிட்டேன். ஆனா இதெல்லாம் மித்ரா கிட்ட எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருந்தது.
அம்மா, அப்பா, தம்பின்னு அழகான குடும்பம் தான் அவனோட மனசுல இருக்கும். ஆனா இப்போ நிலைமை வேற மாதிரி இருக்கு இல்லையா? அவன் இருக்குன்னு  நினைச்சுட்டு இருக்கறத நாம ஏன் இல்லைன்னு சொல்லணும்? இதை அவன் தைரியமா ஏத்துக்குவானா? அவங்க சித்தப்பா கிட்ட இருந்து சொத்துக்களை மீட்க போறானா? இந்த கேள்விக்கு எல்லாம் பதில் கிடைக்காம தான்  குழம்பிட்டு இருக்கேன்டா ஐசு!" என்று சொன்னவரிடம்,

"இவ்வளவு விஷயத்தை செஞ்ச நீங்க மித்ரன் கிட்ட அவனோட அம்மாவையும், தம்பியையும் ஒப்படைக்கிற வேலையையும் செஞ்சிருக்கலாம். அவனோட சித்தப்பாவையும் கொஞ்சம் கவனிடான்னு சொல்லி இருக்கலாம்! இட்ஸ் ஓகே மாமா, அந்த வேலை எல்லாம் இனிமேல் நான் பார்த்துக்கிறேன்! இன்னிக்கு நான் உங்க கூட ஆஃபிஸ்க்கு வர்றேன். இப்போலேர்ந்து நம்ம ஆஃபிஸ்ல ஆக்டிங் எம்டியா சார்ஜ் எடுத்துக்குறேன்!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"ஐசு என்னடா திடீர்னு இப்படி ஒரு முடிவு எடுத்துட்ட? சரி பரவாயில்லை! நீ நம்ம ஆஃபிஸ்க்கு வர்றது ரொம்ப சந்தோஷம்!" என்றார் அருள்மொழி.

"வாங்க, கிளம்பலாம்!" என்று தன் மாமாவிடம் சொன்னவள், தன் தோழி அமிர்தவர்ஷினி மற்றும் மித்ரனுக்கு ஆஃபிஸில்  பொறுப்பேற்க போவதைப் பற்றி அழைத்து தெரிவித்து விட்டாள்.

அமிர்தவர்ஷினி வாழ்த்து சொல்லி விட்டு பத்து நிமிடங்கள் பேசி விட்டு வைத்து விட மித்ரன் மட்டும் அவளிடம் ஓயாது கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தான்.

அவனது பேச்சிலேயே ஐஸ்வர்யாவிற்கு தெரிந்து விட்டது. தான் சொன்ன எந்த கதையையும் தன் பாவா நம்பவில்லை என்று! கண்டிப்பாக அலுவலகத்திற்கு வருவான் என்று எதிர்பார்த்தாள். அது தானே அவளுக்கும் வேண்டும்!

ஆஃபிஸிற்குள் நுழைந்த போது தான் தங்களுடையது இவ்வளவு பெரிய அலுவலகம் என்று தெரிந்தது ஐஸ்வர்யாவிற்கு.

"ஏன் மாமா எப்படி இவ்வளவு பெரிய ஆஃபிஸை சிங்கிளா சமாளிக்கிறீங்க?" என்று கேட்டவளிடம் சிரிப்புடன்

"சிங்கிளா இருக்குறதுனால தான்டா ஐசு மாமா ஆஃபிஸை சூப்பரா சமாளிக்கிறேன். உள்ள வாங்க இளவரசி!" என்று சொல்லி அவளை தோளில் கை வைத்து அழைத்து சென்றார் அருள்மொழி.

அனைத்து டிபார்ட்மெண்ட் மேனேஜர்கள், ஜிஎம் ஆகியோர் பூங்கொத்துடன் ஐஸ்வர்யா ஸ்ரீக்கு  வரவேற்பு அளித்தனர். புன்னகை முகத்துடன் அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தன் மாமாவிடம் ரகசியம் பேசினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"மாமா எங்க அவனை காணும்?" என்று முணங்கிய ஐஸ்வர்யா ஸ்ரீ யை முறைத்த அருள்மொழி,

"அப்போ நீ எனக்கு ஹெல்ப் பண்ண வரலையா ஐசு?" என்று கேட்டார்.

"எல்லாமே சரியா நடந்துட்டு இருக்கிற இடத்தில நான் வந்து எந்த கோட்டையை பிடிச்சு கொடியை நாட்டப் போறேன்னு நினைச்சீங்க? நான் இங்க வந்தது நேத்ரன் கூட ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் டெவலப் பண்ணிக்க மட்டும் தான். எனக்கு நிறைய வேலை இருக்கு! நம்ம அப்புறம்  பேசலாம் மாமா, முதல்ல நேத்ரன் கிட்ட கூட்டிட்டு போய் இண்ட்ரோ குடுங்க!" என்று சொன்னாள் ஐஸ்வர்யா. 

"முதல்ல நம்ம கேபினுக்கு போகலாம்; நான் நேத்ரனை அங்கே கூப்பிடுறேன்! நீ வாடா ஐசு!" என்று சொன்ன அருள் மொழியிடம்,

"மாமா எனக்கு ஒரு பைஃவ் லாக்ஸ்க்கு செக் போட்டு குடுங்க!" என்று கேட்ட தன் மருமகளிடம்

"என்னடா ஐசு திடீர்னு அஞ்சு லட்சம் ரூபாய்க்கு இப்போ என்ன செலவு வந்துடுச்சு? இந்த அமௌண்ட்டை  நான் எந்த கணக்குல எழுதட்டும்?" என்று கேட்டவரை ஒரு தீப்பார்வை  பார்த்தவள்,

"ஐஸ்வர்யா ஸ்ரீ தானம் பண்ணின கணக்குன்னு எழுதிக்கோ. அவன் தான் ஒரு மங்குனி, உன் கிட்ட ஒண்ணும் கேக்கல. நீயாவது உனக்கு தெரிஞ்சதை அவன் கிட்ட ஷேர் பண்ணி இருக்கலாம்ல? இவ்வளவு நாள் அவனை ஃபீல் பண்ண விட்டுட்டு சும்மா உட்கார்ந்துட்டு இருந்துருக்கல்ல, இரு திருப்பூர் போயிட்டு வந்து உன்னை வச்சுக்குறேன்!" என்று சொன்ன தன் மருமகளிடம் அருள்மொழி மறுப்பாக தலையசைத்து விட்டு,

"ஐசு, நீ எதுக்கு இப்போ அங்க போகணும்ன்னு சொல்ற? அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல!" என்று சொன்னவரிடம்,

"உனக்கு அறிவு இருக்கா, இல்லையா மாமா? மித்துவோட குடும்பத்துக்கே துரோகம் பண்ணிட்டு, அவனோட சொத்துல ஒருத்தன் உட்கார்ந்து தின்னுட்டு இருக்கான். மித்துக்கு தான் எதுவுமே தெரியாது. அந்த நேத்து பையனும் சரியான பஞ்ச் குடுத்துட்டு வந்தானான்னு தெரியல. யாராவது ஒருத்தர் மித்துவோட பேமிலி சார்பா போய் அவங்க கிட்ட பேசிட்டு வரணும்ல்ல, அதுதான் நான் போறேன்! நீ ஒண்ணும் பயப்படாத, பேச வேண்டியதை பேசிட்டு வந்துடுறேன்!" என்று புன்னகையுடன் சொன்னாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"இங்க பாருடா ஐசு! அவனுங்க பஞ்சாயத்தே நமக்கு வேண்டாம். உன் அத்தையையும், நேத்ரனையும் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடு. குடும்பத்தோட கொல்லப் ப்ளான் போட்டானுங்க; அதுல ஒரு பெரிய உயிர் போயிடுச்சு.  இன்னொருத்தர் படுக்கையில சாய்ஞ்சாச்சு. அது போதும்ன்னு நினைச்சு விட்டுட்டானுங்களோ என்னவோ, இதுக்கு மேல நம்ம பக்கம் எந்த விதமான இழப்பும் வந்துடக் கூடாது ஐசு; ரொம்ப மோசமானவனுங்கடா! நம்ம வாழ்க்கையை அமைதியா, நிம்மதியா கொண்டு போயிடுவோம். அங்க நீ போக வேண்டாம்டா!" என்று பதட்டத்துடன் பேசினார் அருள்மொழி.

"ஓ! இது வேறயா? அப்போ கண்டிப்பா போய் தான் ஆகணும்!" என்று தீர்மானமாக உரைத்த ஐஸ்வர்யா ஸ்ரீயை பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்தார் அருள்மொழி.

"மே ஐ கம் இன் ஸார்?" என்று அனுமதி கேட்டு கதவைத் தட்டியவனிடம், "கம் இன்!" என்று உள்ளே வர அனுமதி தந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

நேத்ரன் அருள்மொழியிடம் அன்றைய பணிகளை ஒப்பித்து விட்டு அவருடைய மற்ற உத்தரவுகளுக்காக காத்திருக்க ஐஸ்வர்யா ஸ்ரீ யை அருள்மொழி அவனிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

"எனக்கு ஒரு இம்பார்டென்ட் மீட்டிங் இருக்கு நேத்ரா. ஒன் ஹவர் ஆகும். போயிட்டு வந்ததுக்கு அப்புறம் நம்ம வொர்க்ஸ் ப்ளான் பண்ணிக்கலாம். அது வரைக்கும் மேடம்க்கு ஏதாவது டவுட்ஸ் இருந்தா க்ளியர் பண்ணிக் குடு!" என்று புன்னகையுடன் சொல்லி தலையசைவுடன் விடை பெற்று அறையில் இருந்து வெளியேறி விட்டார் அருள்மொழி.

"யெஸ் மிஸ்டர் நேத்து!" என்று புன்னகையுடன் ஐஸ்வர்யா ஸ்ரீ திரும்ப நேத்ரன் எரிச்சலுடன் சலித்துக் கொண்டான்.

"எக்ஸ்க்யூஸ் மீ மேடம்! ஐ'ம் நாட் நேத்து பார் யூ! ஐ'ம் நேத்ரன் புவனேஸ்வர்! நைஸ் டூ மீட் யூ!" என்று கை கூப்பியவனிடம் ஐஸ்வர்யா ஸ்ரீ,

"உங்க ப்ரொபைல் இப்போ தான் பார்த்தேன் மிஸ்டர் நேத்ரன்! என்னை விட நீங்க 2 மன்த்ஸ் தான் யங்ஙர்! ஸோ என்னை நீங்க அக்கா, அண்ணி, இல்ல ஐஷூ அந்த மாதிரி ஏதாவது ஒரு நேம்ல கூப்பிடலாம். அதை விட்டுட்டு மேடம்ன்னு கூப்பிட்டு கடுப்பேத்துனீங்கன்னா நானும் உங்களை நேத்துன்னு தான் கூப்பிடுவேன் மிஸ்டர் நேத்ரன் புவனேஸ்வர்!" என்று கூறியவளை, "இது என்ன விநோதமான பிறவி!" என்ற ஆராய்ச்சி பார்வையுடன் பார்த்து கொண்டு இருந்தான் நேத்ரன்.

மறுபடியும் கதவு தட்டப்படவும் ஐஸ்வர்யா ஸ்ரீ புன்னகையுடன் எழுந்து சென்று கதவைத் திறந்து இடை வரை குனிந்து வணக்கம் செலுத்தினாள்.

"வெல்கம் பாவா!" என்று புன்னகையுடன் சொன்னவளிடம், "டிஸ்டர்ப் பண்ணிட்டேனாடா வரு?" என்று கேட்டு பூங்கொத்தை அவள் கையில் கொடுத்தான்.

"ம்ப்ச் என்ன பாவா வெறும் பொக்கே தானா? இன்னிக்கு கோட்டா சாக்லெட்ஸாவது வாங்கிட்டு வந்துருக்கலாம்ல?" என்று கேட்டவளிடம் சிரிப்புடன் வீட்டுக்கு வரும் போது வாங்கி வருவதாக சொன்னான் சிவ மித்ரன்.

"பாவா இவர் மிஸ்டர் நேத்து! நம்ம ஆஃபிஸ்ல ட்ரையினியா ஜாயின் பண்ணியிருக்கார். ரொம்ம்ம்ம்ம்ப பொறுமைசாலி, இல்ல மிஸ்டர் நேத்து!" என்று புன்னகையுடன் கேட்டவளை முறைப்புடன் பார்த்த நேத்ரன் மித்ரனிடம் கைகுலுக்கி விட்டு, "ஸார் ஒரு ப்ரெண்ட்லி அட்வைஸ்; மேடம் என்னை ஓவரா டீஸ் பண்ணிட்டு இருக்காங்க. அவங்க கிட்ட சொல்லி வைங்க. எல்லா நேரமும் இப்படி பொறுமையா இருப்பேன்னு என்னால க்யாரண்டி குடுக்க முடியாது! முகத்துல பல் இல்லாம பார்த்தா நல்லா இருக்க மாட்டாங்க!" என்று சொல்லி விட்டு சேரை தள்ளி விட்டு கடுப்பை முகத்தில் காட்டி விட்டு எழுந்து சென்றான் நேத்ரன்.

"என்னடா வரு? தேவையில்லாம எதுக்கு கண்டவங்க கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்க? என்ன இதெல்லாம்...... இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி இன்ஸ்டன்ட் எம்டிங்கிற? திடீர்னு ஆஃபிஸ் வர்ற! ஒண்ணுமே புரியலையேடா கண்மணி?" என்று கேட்டவனை சேரில் இருந்து எழுந்து வந்து எழுப்பி நிறுத்தினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"பாவா நமக்கு ஒரு நியாயமான விஷயம் கிடைக்கணும்னா அடம் பிடிக்கணும். அழுது, புரண்டு, உண்ணா விரதம் இருந்து, என்னென்ன வழியில முயற்சி செய்ய முடியுமோ...... அத்தன முயற்சியும் செய்யணும். அதை விட்டுட்டு மனசில வச்சுட்டு ஃபீல் பண்ணிட்டு இருந்தா, உன் ஃபீலிங்சை அடுத்தவங்க எப்படி புரிஞ்சுப்பாங்க சொல்லு பார்ப்போம்?" என்று கேட்ட படி அவன் முகத்தை நோக்கியவளை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் சிவ மித்ரன்.

"எதுக்குடா சம்பந்தமே இல்லாம அட்வைஸ் குடுக்குறாளேன்னு பார்க்குறியா மித்து! இப்போ உன் கிட்ட கோபமா பேசிட்டு போனானே நேத்ரன்........ அவனை நீ எனக்கு இன்ட்ரடியூஸ் பண்ணி வச்சிருக்கணும், ஆனா உன் தயக்கத்தால நான் உனக்கு அறிமுகம் செஞ்சு வைக்க வேண்டியதாகிடுச்சு. நேத்ரன் புவனேஸ்வர்......இந்த பேரு எங்கேயாவது கேள்விப்பட்ட மாதிரி தோணுதா மித்து?" என்று கேட்டவளிடம் பதில் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் இரண்டு நிமிடங்கள் பேசாமல் இருந்த மித்ரன் தலையை பிடித்துக் கொண்டு சேரில் அமர்ந்து விட்டான். தரையில் முழங்காலிட்டு அமர்ந்து அவன் முகத்தை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு, "இன்னொரு தடவை நேத்துவை கூப்பிடட்டுமா? அவன் கேவலமா திட்டினாலும் பரவாயில்லை. உனக்கு பார்க்கணும் போல இருக்குல்ல மித்து!" என்று புன்னகையுடன் கேட்டவளை எழ வைத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான் சிவ மித்ரன்.

"பா......வ்வா!" என்று அழைத்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டவளிடம், "கொஞ்ச நேரம் எதுவும் பேசாதடா கண்மணி! ப்...........ளீஸ்!" என்றவனை தொந்தரவு செய்யாமல் அவன் மார்பிலேயே வாகாக ஒண்டிக் கொண்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள்
மறந்திடு அன்பே!
நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள்
மறந்திடு அன்பே!
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால் சிறு பூவாக நீயும்
மலர்வாயே!
ஒரு வார்த்தை இங்கு நான்  சொன்னால் வலி போகும் என் அன்பே, அன்பே!!

வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro