Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💖 வஞ்சி மனம் 11

அன்று காலையில் அனைத்து மாணவர்களும் சரியான நேரத்திற்கு வந்து பயிற்சியை ஆரம்பித்து செய்து கொண்டு இருந்தனர். ஆனால் மித்ரன் எதிர்பார்த்த ஒரு முக்கியமான நபர் வகுப்பிற்கு இன்னும் வந்து சேரவில்லை.

"ஒரு டயட்டும் ஃபாலோ பண்றது கிடையாது. பிட்னஸ் விஷயத்துல சொல்ற அட்வைஸ் எதையும் காது குடுத்து கேக்குறதும் கிடையாது. வர வர கொஞ்சம் கூட பயமே இல்லாம போச்சு!" என்று மனதிற்குள் அவளை வறுத்து எடுத்துக் கொண்டு, "கெவின் எல்லாரும் ஆசனாஸ் கரெக்ட்டா செய்றாங்களான்னு செக் பண்ணுங்க. தப்பா செஞ்சாங்கன்னா ரெக்டிஃபை பண்ணுங்க. இதோ வந்துடுறேன்!" என்று ஒரு மாணவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வீட்டிற்குள் சென்று ஐஸ்வர்யாவின் அறைக் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றான்.

"ஐஷு, இட்ஸ் ஆல்ரெடி 6.20, இப்போ எழுந்துரிக்கப் போறியா? உன்னை எழுந்துரிக்க வைக்கணுமா?" என்று கேட்ட படி அவள் கால் பகுதியில் உள்ள போர்வையை லேசாக விலக்கினான் மித்ரன். ஹாஸ்பிட்டலில் சிகிச்சை மேற்கொள்ளும் போது தூங்குபவர்களை எழுப்ப வேண்டும் என்றால் எப்போதும் அவர்கள் கால் பகுதியில் தான் பிடித்து எழுப்பும் வழக்கம் வைத்திருந்தான். அதையே தான் தன் காதலியிடம் பின்பற்றினான். முழுமையாக போர்வையை விலக்கிய பின்னரும் ஐஸ்வர்யாவின் காலை பார்க்க முடியவில்லை. அதற்கு பதிலாக தலையணைகளை வரிசையாக அடுக்கி வைத்து இருந்ததை தான் பார்த்தான்.

அவளுடைய அறையில் ஐஸ்வர்யா ஸ்ரீ இல்லை. எங்கேயோ சென்றிருக்கிறாள், அதுவும் உறங்குவது போல் தெரிய தலையணையை செட் செய்து விட்டு!  அதைப் பார்த்ததும் சிவ மித்ரன் மற்ற இடங்களிலும் அவளை தேடிப் பார்த்து  விட்டு அருள்மொழியின் அறைக்கு சென்றான்.

அவர் அப்போது தான் எழுந்து அமர்ந்து இருந்தார். "குட்மார்னிங் மித்ரா, இப்போ தான்டா எழுந்துரிக்க முடிஞ்சது. ஸாரி, இன்னும் 10 மினிட்ஸ்ல கிளம்பி வாக்கிங் போயிட்டு வர்றேன்!" என்று சொன்னவரிடம்

"ஸார், நம்ம ஐஷுவை காணும்! வீட்ல எல்லா இடத்திலயும் தேடிட்டேன். எங்க போயிருப்பா ஸார்? அதுவும் இவ்வளவு காலையில......... கொஞ்சம் பயமா இருக்கு ஸார்! பில்லோவை தூங்குற மாதிரி செட் பண்ணிட்டு போயிருக்கா. கார் கூட எடுத்துட்டு போகல.... அப்புறம் எங்க ஸார் போயிருக்க முடியும்?" என்று கேட்டவனிடம்,

"கேட் செக்யூரிட்டி கிட்ட விசாரி! நைட் வெளியே போயிருந்தீங்கல்ல?......
எத்தனை மணிக்கு வந்து படுத்தீங்க?" என்று கேட்டவரிடம்

"11 மணிக்கு வந்துட்டோமே ஸார்......ம்ப்ச்! மொபைலையாவது எடுத்துட்டு போயிருக்கலாம்ல; அதுவும் ரூம்ல தான் இருக்கு.....!" என்று சொன்னவன் வாசல் வரை போய் செக்யூரிட்டியிடம் இரண்டு நிமிடம் பேசி விட்டு குழப்பத்துடன் வந்தான்.

"என்னடா மித்ரா வாக்கிங், ஜாகிங் இந்த மாதிரி எதுவும் செய்ய போய்ட்டாளோ?" என்று ஒரு வித பதட்டத்துடன் பேசியவரிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு, "ஐஸ்வர்யா ஸ்ரீ நம்ம வீட்டு காம்பவுண்டை விட்டு வெளியே போகல. ஆனால் வீட்ல இல்லை. எங்க போயிருப்பா ஸார்?" என்று கேட்டவனிடம், "ஒரு வேளை டெரஸ்ல இருக்காளோ மித்ரா?" என்று அருள்மொழி சந்தேகமாக கேட்க மித்ரன் வேகமான எட்டுக்களுடன் மாடிக்கு சென்று அங்கும் தேடி விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வந்தான்.

"மேலயும் இல்ல ஸார்!" என்று சொல்லி விட்டு ஏமாற்றத்துடன் ஸோஃபாவில் அமர்ந்தவன் கண்களை மூடிக் கொண்டு நெற்றிப் பொட்டை அழுத்திக் கொண்டிருந்தான். இரண்டு நிமிடங்களில் மலர்ச்சியுடன் நிமிர்ந்தவன், "ஸார் உங்க மருமகளையும், பிள்ளையையும் சேர்த்து தான் காணும். கடவுளே.... ஒருவேளை நைட் எந்த மரம்ன்னு கேட்டாளே..... அசால்டா கேட்டை தாண்டி குதிச்சவ தானே; ஏறிட்டாளோ; செஞ்சாலும் செஞ்சிருந்தான்னா.....!" என்று விரைந்து வீட்டுக்கு வெளியே ஓடியவனிடம்,

"டேய்.....மித்ரா! எனக்கு ஒண்ணும் புரியல. யாரோட பிள்ளையை ஐசு வச்சிருக்கா? சொல்லிட்டு போடா! இருடா....!" என்று அருள்மொழி பேசுவதை கேட்க மித்ரன் அங்கு நின்று கொண்டு இருக்கவில்லை.

அவன் நினைத்தது நூறு சதவீதம் மெய்யென்று நிருபிக்கும் வகையில் ஐஸ்வர்யா ஸ்ரீ மரத்தின் ஒரு கிளையில் இரு புறமும் கால்களை நன்றாக தொங்க விட்டுக் கொண்டு தன் பாதி உடலை மரக்கிளையில் முன்புறம் சாய்ந்து வைத்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அவள் ஏற பயன்படுத்தி இருந்த ஏணி கீழே விழுந்து கிடந்தது. மித்ரன் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் தலையில் கை வைத்து கொண்டு அருள் மொழியை கூட்டி வந்து அவளிடம் காட்டினான்.

"ஐயோ......ஐசு; என்னடா மித்ரா? எதுக்கு மரத்தில ஏறி படுத்துட்டு இருக்கா?" என்று கேட்டவரிடம் கோபத்துடன்,

வேதாளம் மாதிரி மரத்தில தொங்கிட்டு, அதுலயும் தூங்கிட்டு இருக்கா பாருங்க. இந்த கேள்வியை அவ கிட்ட கேளுங்க. பதில் சொல்லுவா. ஆனாலும் இவளுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தி தான் ஸார்!" என்று சொன்னவனிடம்

"டேய் மித்ரா..... ப்ளீஸ் டா! அவளை பத்திரமா கீழே கூட்டிட்டு வந்துடுடா! எதுக்கு இந்த கழுதை மரத்தில எல்லாம் ஏறி விளையாடிட்டு இருக்கா? கொஞ்சம் ஸ்லிப் ஆனா என்ன ஆகுறது?" என்று கேட்ட அருள் மொழியிடம்,

"கை, கால்ல போன்ஸ் ப்ராக்சர் ஆகி மாவுக் கட்டு போட்டு உட்கார்ந்து இருக்க வேண்டியது தான்!" என்றான் மித்ரன் புன்னகையுடன்.

"டேய் என்னடா இந்த நேரத்தில கூட எப்படிடா சிரிப்பு வருது உனக்கு? எனக்கு தெரியாது. உன் வருங்கால பொண்டாட்டியை கீழே பத்திரமா இறக்கி கொண்டு வர்றதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்!" என்று சொல்லி விட்டு அவர் நிற்க அவன் புன்னகையுடன், ஏணியை தரையில் இருந்து எடுத்து மரத்தில் சாய்த்து நிறுத்தினான்.

அப்படி நிறுத்திய போது தான் ஏணியில் கால் வைத்து ஏறும் கட்டைகளில் மேலே உள்ள கட்டை உடைந்திருப்பதை கவனித்தான்.

"மேடம் இதுனால தான் மரத்திலயே செட்டில் ஆகிட்டாங்க போலிருக்கு!" என்று சிரிப்புடன் நினைத்துக் கொண்டு, அருள்மொழியிடம் திரும்பி, "ஸார் பழனி அண்ணாவை வரச் சொல்லுங்க!" என்றான்.

காலையிலும், மாலையிலும் காவலுக்கு இருக்கும் செக்யூரிட்டி இருவர், தோட்டக்காரர், வீடு சுத்தம் செய்ய, பாத்திரங்களை சுத்தம் செய்ய என்று ஐந்து பேர் வேலைக்கு இருந்தாலும், அருள்மொழியும், மித்ரனும் கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் அவர்களாகவே செய்வது தான் வழக்கம். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தன்னுடைய வகுப்புகளை முடித்து விட்டான் என்றால், சில நேரங்களில் மித்ரன் சுத்தம் செய்ய க்ளீனிங் மாப்பை கையில் தூக்கி விடுவான்.

"வாங்க ஸார் ஜாலியா பேசிட்டே செஞ்சிட்டா, வேலையும் முடிஞ்சது, நம்ம எக்சர்சைஸும் முடிஞ்சது!" என்று புன்னகையுடன் அழைப்பவனின் இம்சையை தாங்க முடியாமல் தான் அருள்மொழி வேலைக்காக ஆள் வைத்து விட்டு அவர்களை நிர்வகித்து கொண்டு இருந்தது. ஆனால் எந்த ஒரு வேலையையும் மித்ரன் வேலையாட்கள் மூலம் இதுவரை செய்து கொண்டதே இல்லை. அதனால் தான் இப்போது தோட்டக்காரரை அருள்மொழி மூலம் அழைத்து வரச் செய்தான்.

"அண்ணா, இந்த ஏணியை கொஞ்சம் உடனே ரெடி பண்ணி தர்றீங்களா?" என்று கேட்டவனிடம்

"இது பழைய ஏணியே தம்பி, இதை யாரு எடுத்தா? உபயோகப்படுத்த முடியாது தான் ஒரு ஓரமா ஒதுக்கி வச்சிருந்தேன்!" என்று சொன்ன தோட்டக்காரரிடம், "யூஸ் பண்ண முடியாதுன்னு நினைக்கிற பொருளை எல்லாம் அப்பப்போ டிஸ்போஸ் பண்ணிடுங்க அண்ணா, ஐஸ்வர்யா அவளா மரத்தில ஏறுறேன்னு பழைய ஏணியை எடுத்து, அது உடைஞ்சு, எவ்வளவு நேரமா மேல உட்கார்ந்துட்டு இருக்க வேண்டியதா போச்சு, கஷ்டமா இருந்துருக்கும்ல, சீக்கிரம் போய் ஏணியை எடுத்துட்டு வாங்க. மறக்காம பழசை கண்டம் பண்ணிடுங்க! சரியா?" என்று கேட்டவனிடம் பயத்துடன் தலையை ஆட்டி விட்டு ஸ்டோர் ரூமில் கிடந்த ஏணியை எடுத்து வந்தார் பழனி அண்ணா.

நல்ல வேளை, மித்ரன் ஏணியில் ஏறிய பின் உயரம் ஐஸ்வர்யாவை அடைய சரியான உயரமாக தான் இருந்தது.

ஒரு கையால் மரத்தை பற்றிக் கொண்டு, மறு கையால் அவள் கன்னத்தை வருடினான் மித்ரன்.

"வரு பிள்ளை ஸார்க்கு பிரேக் பாஸ்ட் குடுக்கணுமே? அவர் எங்கம்மா?" என்று கேட்க ஐஸ்வர்யா ஸ்ரீ தூக்கக் கலக்கத்துடன் மெதுவாக தலையை நிமிர்த்தினாள். மித்ரன் அருகில் நிற்பது தெரிந்ததும்,  அவன் மூக்கில் முத்தமிட்டு, "குட்மார்னிங் மித்து!" என்று சொல்லி விட்டு உடலை நெளிக்க முயற்சி செய்தாள்.

அவளை அசையாமல் பற்றிக் கொண்டு, "அப்படியே இரு; பார்த்து ஜாக்கிரதையா எழுந்து காலை இந்தப் பக்கமா போடு; எதுக்கு என்னோட கோட்டை வேற மாட்டிட்டு வந்த?" என்று கேட்டவனிடம்,

"ஆமால்ல மித்து? மரத்துல ஏறினது மறந்தே போச்சு! மிட்டு பேபியை எடுத்துட்டு வரணும்ல்ல, அது தான் உன் கோட் பாக்கெட்டில் போட்டு எடுத்துட்டு வந்தேன். நைட் எனக்கும் குளிராம வார்மா இருந்துச்சு. குட்டி ஸாரோட அம்மா அவனை காணும்னு தேடுவாங்களே, அதுதான் அவனோட பர்த் ப்ளேஸை ஐடென்டிபை பண்ணிடலாம்ன்னு நினைச்சு மரத்தில உட்கார்ந்து தேடினேன். ஆனாலும் கிடைக்கல மித்து!" என்று சொல்லிய ஐஸ்வர்யாவை மித்ரன் கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

"ஏய் மித்து, என்னை அடிக்க மாட்டேன்னு சொல்லியிருக்க; இப்போ மறுபடியும் முறைக்குறதை பார்த்தா எனக்கு பயமாயிருக்குடா!" என்று சொன்னவளிடம்

"பிள்ளையை என் கிட்ட குடுடா! நான் ஸார் கிட்ட குடுத்துட்டு வர்றேன். அதுக்குள்ள கவனமா காலை தூக்கி இந்த பக்கம் போட்டு இறங்க ரெடியா இரு! நான் வந்து ஏணியை ஹோல்ட் பண்ணினதுக்கு அப்புறம் இறங்கு!" என்று மித்ரன் சொல்ல அவள் தலைகுனிந்த படி தலையை ஆட்டினாள்.

"என்னாச்சுமா வரு? ஏன் திடீர்னு டல்லாகிட்ட?" என்று கேட்ட மித்ரனிடம்,

"நீ கீழே போனவுடனே என்னை திட்டுறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்க தானே? அதனால தான் இவ்வளவு கேரிங்கா இறக்கி விடப் பார்க்குற; எனக்கு தெரியும்!" என்று சொன்ன ஐஸ்வர்யாவை சிரிப்புடன் நோக்கினான் மித்ரன்.

"உன்னை நானும் திட்ட மாட்டேன். ஸாரையும் திட்ட அலவ் பண்ண மாட்டேன். சரியா? இப்போ கொஞ்சம் சிரிக்கலாமே?" என்று கேட்டவனிடம் முக மலர்ச்சியுடன், "தேங்க்ஸ் பாவா!" என்று சொல்ல அவன் இரு கைகளாலும் காதைப் பொத்திக் கொண்டான்.

"கீழே விழுந்துடாதே, பார்த்து நில்லு மித்து!" என்று சொன்னவளிடம், "உன் பாவாவை கேட்டாலே ரொம்ப ஹாப்பியா இருக்கு. பட் என்ன ஆப்பு வைக்கப் போறியோன்னு பயமாவும் இருக்கு வரு!" என்று சொன்னவனிடம், "பயப்படாதீங்க மித்ரன் ஸார்! இப்போதைக்கு எனக்கு எந்த ஐடியாவும் இல்ல!" என்று சொல்லி விட்டு சிரிப்புடன் அணில் பிள்ளையை கோட் பாக்கெட்டில் கையை விட்டு எடுத்துக் கொடுத்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

மித்ரன் அதை கீழே வைத்து விட்டு வந்ததும் அவன் உதவியுடன் பத்திரமாக இறங்கி வந்து விட்டாள்.

அருள்மொழி அவளிடம், "என்னடா ஐசு இத்தூணுண்டு அணிலுக்காகவா இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கறது? ஏதாவது ஆகியிருந்தா......!" என்று பதட்டத்துடன் பேசியவரிடம்,

"ஸார் அது தான் ஒண்ணும் ஆகலையே...... இவ எல்லாம் மரத்தில இருந்து விழுந்துருக்க வாய்ப்பே இல்லை ஸார்! குட்டி குரங்கு அம்மாவை தொத்திக்கிட்டு இருக்கிறது மாதிரி மரத்தை இறுக்கிப் பிடிச்சுட்டு தான் தூங்கிட்டு இருந்தா, டையர்டா இருக்கும். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் ஸார்!" என்று சொன்னவனிடம்

"சரி சரி, ஐசு இனிமேல் இந்த மாதிரி ஏதாவது சேட்டை பண்ணின, மாமாவுக்கு ரொம்ப கோபம் வரும். சொல்லிட்டேன்! உள்ளே போ!" என்று சொன்ன தன் மாமாவை கட்டிப் பிடித்து விட்டு, "என் செல்ல மாம்ஸ், லவ் யூ!" என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்றாள். அருள்மொழி அவனிடம் வாக்கிங் சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார்.

அறைக்குள் நுழைந்ததும் மித்ரன் அவளிடம், "நீ கொஞ்ச நேரம் தூங்கு வரு! இன்னிக்கு பிள்ளை என் கூட இருக்கட்டும்!" என்று சொன்னவனிடம், "மித்து இதோட பேர் மிட்டு, உன் பேருக்கு ரைமிங்கா இருக்கும்ன்னு தான் வச்சேன்! நீ ஏன் இவனை பிள்ளைன்னு கூப்பிடுற!" என்று புன்னகையுடன் புருவம் உயர்த்திய ஐஸ்வர்யாவிடம்,

"நீ தானே வரு இவனை பிள்ளைன்னு தான் கூப்பிடணும்ன்னு சொன்ன, மிட்டுங்கிற பேர் நல்லாவே இல்ல. எனக்கு பிடிக்கல. நீ உனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடு, நான் எனக்கு பிடிச்ச பேர்ல கூப்பிட்டுக்கறேன்!" என்று சொன்னான் சிவ மித்ரன்.

"சரி உன் இஷ்டம் மித்து! ஆனா நான் தான் மிட்டு பேபியை பார்த்துப்பேன். நீ வொர்க்க்கு கிளம்பு! ஆனா அதுக்கு முன்னால...... உன் கிட்ட ஒண்ணு கேக்கணும்!" என்று சொல்லி விட்டு அவன் அருகில் வந்து அவன் முகத்தை ஆராய்ந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"சீக்கிரம் சொல்லு வரு! உன்னை பார்க்குறதுக்காக இன்னிக்கு மார்னிங் செஷன்ஸ விட்டுட்டு வந்துட்டேன். மறுபடியும் நான் போறதுக்குள்ள பசங்க எல்லாம் முடிச்சிருப்பாங்க!" என்று அவசரப்பட்டவனிடம்

"உன் க்ளாஸ்க்கு வர்ற ஸ்டூடண்ட்ஸ்லயே ரொம்ப டிஸ்ஒபீடியண்ட் நான் தான்னு நினைக்கிறேன். சரி விடு, ஒரு க்ளாஸ் தானே? போனா போகுது! ஏன் இன்னிக்கு காலையில இருந்து மூட் அவுட்டா இருக்க? என்ன விஷயம் மித்து?" என்று அவனை உற்று நோக்கினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

அவன் அவளிடம் ஒரு புன்னகையை உதிர்க்கவும், "சொல்ல விருப்பம் இல்லைன்னா சொல்ல வேண்டாம் மித்து! ஆனா உன் கண்ணுல கவலையை பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு!" என்று சொன்ன ஐஸ்வர்யாவை பார்த்து,

"வரு பேபி, உன்னை ஒரு தடவை ஹக் பண்ணிக்கட்டுமா?" என்று கேட்டவனிடம்

"இங்க பாருடா, இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேக்கணுமா? நீ என்னோட ப்யூச்சர் ஹஸ்பெண்ட் மித்து!" என்று சொல்லி அவனைக் கட்டிக் கொண்டவளை, "எல்லாத்துக்கும் பெர்மிஷன் கேக்கணும்டா கண்மணி!" என்று புன்னகையுடன் சொன்னவனிடம்

"ஒவ்வொரு விஷயத்துக்கும் நீ பெர்மிஷன் கேட்டு நான் ஓகே சொல்லி...... ஏன்டா இப்படி இருக்க, இப்போ நீ உன் பேமிலியை மிஸ் பண்ற! மிட்டு பேபியை அவனோட அம்மா தேடுற மாதிரி தானே உன்னையும் உங்க வீட்ல தேடுவாங்க. எனக்கு தான் அம்மாவும், அப்பாவும் மறுபடியும் கூட்டிட்டு வர முடியாத தூரத்துக்கு போயிட்டாங்க. ஆனா மித்ரனுக்கும், மிட்டுவுக்கும் அப்படியில்லையே?" என்று அவள் கேட்க மித்ரனின் அணைப்பு இறுகியது.

"அம்மா, அப்பாவை பார்க்க ஆசையா இருக்கு வரு! நான் எதோ பெரிய தப்பு செஞ்சுட்டு பிறந்துட்டேன் போலிருக்கு! அப்பப்போ அம்மா இமேஜ், அப்பா இமேஜ், என்னோட தம்பி ஒரு குட்டிப் பையன் இருந்தான் அவனோட இமேஜ் எல்லாம் நிழல் வடிவத்தில மனசுக்குள்ள வந்துட்டு போகுது! ஆனா இப்படித்தான் இருப்பாங்கன்னு தெளிவா என்னாலயே சொல்ல முடியலையே வரு! அப்பா, அம்மா முகம் கூட நியாபகம் இல்லாம மறந்து போறது எல்லாம் ரொம்ப  கொடுமை வரு! யாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலைமை வரக்கூடாது!" என்று சொன்னவனை படுக்கையில் அமர்த்தி அவள் மடியில் சாய்த்துக் கொண்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"இவ்வளவு வருத்தத்தையும் மனசுக்குள்ள வச்சுட்டு ஷேர் பண்ணிக்காம இருந்துருக்கியே மித்து! நம்ம ஏதாவது முயற்சி செய்யலாம். உன் பேமிலியை கண்டுபிடிச்சுடலாம் மித்து!" என்று சொன்ன ஐஸ்வர்யாவிடம்,

"அந்த தப்பை மட்டும் தயவுசெஞ்சு செய்யணும்ன்னு சொல்லாத வரு! 6, 7 வயசுல இருந்து என்னை அடாப்ட் பண்ணிக்கிட்டு ஒரு மகனுக்கு என்னென்ன செய்யணுமோ அதை ஒரு அப்பா ஸ்தானத்தில இருந்து ஸார் எனக்கு செஞ்சுருக்காங்க. அவங்க நினைச்சிருந்தா என்னோட பேமிலியை தேடிக் கண்டுபிடிச்சுருக்கலாம். ஆனா யாருமே இல்லாத அவங்க வாழ்க்கையில ஒரு பற்றுக்கோடா என்னை நினைச்சு ஒரு அங்கீகாரம் கிடைக்கிற அளவுக்கு முழுமையான மனுஷனா ஆளாக்கி விட்ருக்காங்க. நான் இப்போ திரும்ப ஏதாவது செய்யணும்னா அதை ஸாருக்கு தான் முதல்ல செய்யணும். அதுக்கப்புறம் தான் என்னோட தனிப்பட்ட வாழ்க்கையை சரி செஞ்சுக்கணும். நீ உங்க மாமா கிட்ட பேசு. நீ சொன்னாலாவது கேக்குறாங்களான்னு பார்ப்போம்!" என்று புன்னகைத்தவன் கண்களில் ஒளி திரும்பியிருந்தது.

"மாமா கிட்ட நான் பேசணுமா? எதைப் பத்திடா பேச சொல்ற?" என்று குழப்பத்துடன் ஐஸ்வர்யா கேட்க,

"ஸாருக்கு 52 வயசாயிடுச்சு. இன்னும் அவங்களோட சொந்த வாழ்க்கையை பத்தி ஒரு முடிவும் எடுக்காம இருக்காங்க. நானும் கிட்டத்தட்ட 4, 5 வருஷமா சொல்லிட்டு இருக்கேன். இந்த டாபிக்கை பத்தி பேச்செடுத்தாலே நழுவி ஓடுறாங்க. நீ வர்றதுக்கு முன்னாடி ஹாஸ்பிட்டல்ல வொர்க் முடிஞ்சு நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சுனா எப்படி இருப்பாங்க தெரியுமா வரு? இவ்வளவு பெரிய வீட்ல தனியா ஈஸி சேரை போட்டுட்டு பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல் இருக்கிறது எவ்வளவு பெரிய கொடுமை? எல்லா வேலைக்கும் ஆள் வைச்ச உங்க மாமா சமையல் வேலைக்கு யாராவது லேடியை அப்பாயிண்ட் பண்ணுவோம்ன்னு சொன்னப்போ வாயே திறக்கல. ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு வரு! அதை சரி செய்து ஸாருக்கு ஒரு லைஃப் பார்ட்னரை கண்டிப்பா அமைச்சு தரணும்!" என்று சொன்னவனிடம்

"கண்டிப்பா மித்து! மாமாவுக்கு புரியலன்னு நினைக்கிறேன்! நம்ம கல்யாணத்தை விட இப்போ அவருக்கு தான் ஒரு பார்ட்னர் கண்டிப்பா தேவை. இது ஏன் இவ்வளவு நாளா எனக்கு தோணல? நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஸ்டெப்ஸ் எடுக்கலாம் மித்து! கண்டிப்பா இந்த ப்ராப்ளமுக்கு ஒரு சொல்யூஷன் கண்டுபிடிக்கணும்!" என்று தீவிர பாவத்துடன் சொல்லியவளின் தோளில் கை போட்டு, "மேடம் இன்னிக்கும் க்ளாஸஸை வெற்றிகரமா ஓபி அடிச்சுட்டீங்களே.....
ஈவ்னிங் வந்து உன்னை கவனிச்சுக்குறேன்! இரு!" என்று சொன்னவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, "ஈவ்னிங் ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு மித்து! உனக்கு ஹாஸ்பிட்டலுக்கு நேரம் ஆகிடுச்சு பாரு, கிளம்பு, கிளம்பு!" என்று அவன் முதுகில் கை வைத்து அவனை முன்புறம் தள்ளியவளிடம், "அடிப்பாவி, விட்டா கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிடுவ போலிருக்கு! நானே கிளம்பறேன். பை கண்மணி!" என்று சொன்னவன் சட்டையை பின்னால் இருந்து இறுகப் பற்றிக் கொண்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.

"வரு பேபிக்கு இப்போ என்ன வேணும்?" என்று கேட்டவனிடம்

"பட்டர்ஃபிளை குடுத்துட்டு போ!" என்று புன்னகையுடன் ஐஸ்வர்யா கேட்க

"........ம்ம்ம்! தோட்டத்தில இருக்கும். நீயே போய் பிடிச்சுக்கோ செல்லம். முன்னாடி என் கிட்ட எஸ்கிமோ தானே கேட்ட?" என்று சிரிப்புடன் கேட்டான்.

"சரி அதையாவது குடுத்துட்டு போடா லூசு!" என்று ஐஸ்வர்யா ஆவலுடன் எதிர்பார்த்துக் கேட்க, மித்ரன் குறும்பு புன்னகையுடன்

"ஸ்டாக் இல்லை கண்மணி, பை டா, ஈவ்னிங் பார்க்கலாம்!" என்று புன்னகையுடன் கையசைத்து விட்டு வெளியே சென்று விட்டான்.

என் வாழ்க்கை வரலாற்றில்
எல்லாமே உன் பக்கங்கள்!
உன்னாலே என் வீட்டின்
சுவரெல்லாம் ஜன்னல்கள்!

உன் கைகள் கோர்க்காமல் பயணங்கள் கிடையாது!
உன்னோடு வந்தாலே
சாலைகள் முடியாது!

வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro