💖 வஞ்சி மனம் 10
மித்ரன் காட்டிய அட்டைப் பெட்டியை ஆவலுடன் கையில் வாங்கிய ஐஸ்வர்யா ஸ்ரீ ஆச்சரியத்துடன் அவன் முகத்தை பார்த்தாள். ஒரு அணில் பிள்ளை அவன் வைத்திருந்த பெட்டியில் பஞ்சுப் பொதியில் பத்திரமாக படுத்திருந்தது.
சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து, "இந்த அணில் குட்டி உன்னை மாதிரியே க்யூட்டா இருக்குல்ல......!" என்றான் மித்ரன்.
"ரொம்ப அழகா இருக்கு மித்து! ஆனா அணிலோட குட்டியை அணில் பிள்ளைன்னு தான் சொல்லணும்! நீ நிஜமாவே பேபியை குடுக்க தான் கூப்பிட்ட போலிருக்கு!" என்று சிரித்தவளிடம்
"ஏன் வரு..... அணில் குட்டியை ஏன் அப்படி கூப்பிடக் கூடாது?" என்று கேட்ட மித்ரனிடம்
"அது வந்து மித்து.....இங்க்லீஷ்ல எல்லா அனிமல்ஸோட குட்டியும் பேபின்னு ஒரு பொதுவான பெயரோட முடிஞ்சிடும். ஆனால் தமிழ்ல முட்டை போடுற வகைகளை குஞ்சுன்னு தான் சொல்லணும்! பாலூட்டிகளை குட்டின்னு சொல்லணும்! ஆனா அதிலயும் யானை, பசு அதோட குட்டிகளை கன்றுகள்ன்னு சொல்லணும். கீரி, அணில் அதோட பேபீஸை பிள்ளைன்னு சொல்லணும்! கோழிக்குட்டி, கீரிக்குட்டின்னு எல்லாம் நீ சொன்னா உன் தமிழ் ஆசிரியர் உனக்கு சரியா சொல்லி தரலைன்னு அர்த்தம்! சரி இந்த குட்டிப் பையன் உனக்கு எப்படி கிடைச்சான்? முதல்ல இது பையனா..... பொண்ணா?" என்று கேட்டவளிடம்
"தமிழ் நாட்டில படிச்ச எனக்கு சொல்லித் தர்ற அளவுக்கு யூஎஸ்ல இருந்தும் நீ தமிழை சரியா படிச்சிருக்க ன்னு நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு வரு! இன்னிக்கு காலையில மரத்துல இருந்து இது கீழே விழுந்துடுச்சு வரு....! ஈவ்னிங் உன் கிட்ட காட்டணும்னு நினைச்சேன். ஆனா அந்த லூசு வந்ததுனால மறந்து போயிடுச்சு. இவர் பையன் தான்டா வரு! பிறந்து 2,3 நாள் ஆகியிருக்கும்ன்னு நினைக்கிறேன்! கொஞ்ச நாளைக்கு நம்ம கிட்ட வளரட்டும். இப்படியே விட்டா செத்துப் போயிடும் வரு! நம்ம தான் கொஞ்ச நாளைக்கு ஃபீடிங் பார்த்துக்கணும், நான் ஹாஸ்பிட்டல் போற டைம்ல நீ உன் கிட்ட வச்சுக்க; செய்யலாம்ல?" என்று கேட்டவனிடம்
"ஏன் மித்து யூஎஸ்ல படிச்சும் தமிழ் நல்லா கத்துக்கிட்டு இருக்கன்னு சொல்ற.... எங்க அப்பாவும், அம்மாவும் தமிழ் நாட்டுல பிறந்து வளர்ந்தவங்க தானே? திரை கடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொன்னவங்க உங்க தாய்நாடு, தாய்மொழியை மறந்துடுங்க ன்னு சொல்லவேயில்லையே.... அம்மா தான் எனக்கு நிறைய கத்துக் குடுத்தாங்க. எனக்கு என்ன பிடிக்கும்ன்னு தெரிஞ்சுக்கிட்டு எனக்கு தேவையான அளவு சுதந்திரம் குடுத்து வளர்த்தாங்க. ஆனாலும் எனக்கு தமிழ் எழுதத் தெரியாதுன்னு ரொம்ப வருத்தமா தான் இருக்கு மித்து..... அது சரி; இதுக்கு என்ன மித்து மெனு குடுக்கறது? இது என்ன சாப்பிடுமோ தெரியலையே....முதல்ல இதுக்கு ஒரு பேர் வைக்கணும். என்ன பேரு வைக்கிறது?" என்று கேட்டவளிடம்,
"பொறுமையா உட்கார்ந்து யோசிச்சுட்டு இரு! இதோ வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு மித்ரன் ஒரு டம்ளரில் பாலும், ஒரு இன்ஜெக்ஷன் சிரின்ஞ்சும் கொண்டு வந்தான்.
"வரு பிள்ளை ஸார் டின்னர் சாப்பிடணும். நீயும் வந்து கத்துக்கோ. நாளையில இருந்து நீ தான் இதை செய்யணும்!" என்று சொன்னவனிடம்,
"நீ செய் மித்து! நான் ஒரு தடவை நல்லா பார்த்துட்டேன்னா அடுத்து செஞ்சுடுவேன்!" என்றாள். கதவு தட்டப்பட, "இந்த நேரத்துல யார் மித்து வந்து இருக்காங்க?" என்று கேட்ட படி அவள் கதவை திறக்க அருள்மொழி நின்று கொண்டு இருந்தார்.
"ஹாய் மாம்ஸ், நம்ம வீட்டுக்கு ஒரு நியூ கம்மர் வந்துருக்காங்க தெரியுமா? இதை செலிபரேட் பண்ணணும். கொஞ்சம் குனிங்களேன்!" என்று அவரை கழுத்தை சுற்றி கையை மாலையாக்கி கொண்டு ரகசியம் பேசி முடித்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"ம்! ஓகேடா ஐசு.....என்னடா ரெண்டு பேரும் திடீர்னு காணாம போய்ட்டீங்களேன்னு நினைச்சு தேடி வந்தேன். வர்றீங்களா டின்னர் சாப்பிடலாம். இந்த குட்டி எங்க இருந்து கிடைச்சதுடா மித்ரா?" என்று கேட்ட அருள் மொழியிடம்,
"ஸார் நம்ம தோட்டத்தில மரத்தில இருந்து கீழே விழுந்து கிடந்தது.... காலையில க்ளாஸ்க்கு வர்ற பசங்க வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ எடுத்து வச்சேன்! கொஞ்சம் வளர்ற வரைக்கும் பார்த்துக்கணும் ஸார்!" என்று சொல்லி அதற்கு உணவளித்து முடித்து இடத்தை ஒதுக்கி விட்டு வந்தான். அருள்மொழி முன்னால் சென்று விட, மித்ரன் வேகமான எட்டுக்களுடன் சென்று ஐஸ்வர்யாவின் பாதையை மறைத்தான்.
"என்னாச்சு மித்து?" என்று அவன் முகத்தை பார்த்தவளிடம், "ஸார் கிட்ட ரகசியப் பேச்சு எல்லாம் பலமா இருக்கு.... அப்படி எந்த விஷயத்தை என் கிட்ட இருந்து மறைக்கணும்ன்னு நினைக்கிற?" என்று அவளை கூர்பார்வை பார்த்தான் மித்ரன்.
"போடா உங்கிட்ட நான் சொல்ல மாட்டேன்..... பிறகு நீ பக்கம் பக்கமாக கருத்து பேசுவ...... சரி, எந்த மரத்தில இருந்து குட்டிப் பையன் கீழே விழுந்தான்னு நீ சொல்லவேயில்லையே.....!" என்று அவள் கேட்க மித்ரன் ஒரு மரத்தை கை காட்டினான்.
இரவு உணவு நேரத்தில் மூவரும் இணைந்து அமர மித்ரன் தயாரித்த இட்லியை பேருக்கு கொறித்துக் கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"என்னடா ஐசு..... சாப்பிட முடியலையா என்ன? ப்ளேட்டில கோலம் போட்டுட்டு இருக்க....!" என்று கேட்டவரிடம்
"ஆமா மாமா..... சாப்பிடவே முடியல. எனக்கு பாலும் வேண்டாம் மித்து! போய் படுத்துக்குறேன்!" என்று அவள் அறைக்குள் செல்ல முயன்றவளை, "கொஞ்சம் நேரம் கழிச்சு படும்மா!" என்று சொல்லி அனுப்பினான் மித்ரன். அவள் பவ்யமாக தலையாட்டி விட்டு அணிலை அட்டைப் பெட்டியுடன் எடுத்துக் கொண்டு இரவு வாழ்த்தை சொல்லி விட்டு அவள் அறைக்கு கிளம்பினாள்.
"என்ன ஸார் உங்க மருமக பம்முறதை பார்த்தா ஏதோ தப்பாயிருக்கே.... மேடம் வெளியே போய் இரண்டாவது ரவுண்ட் சாப்பிடப் போறாங்களாக்கும்?" என்று புன்சிரிப்புடன் கேட்டவனை ஆச்சரியமாக பார்த்து, "எப்படிடா மித்ரா! சின்ன க்ளூ கூட தரல. அவ வெளியே போகப் போறான்னு எப்படி கண்டுபிடிச்ச?" என்று கேட்ட அருள் மொழியிடம்,
"ஆமா இதை பெரிசா கண்டுபிடிக்க வேற செய்யணுமாக்கும்...... உங்க கிட்ட ரகசியம் பேசுறா. என்னன்னு கேட்டா கருத்து பேசுவங்கிறா..... நான் வேற எந்த விஷயத்துக்கு அவ கிட்ட மூச்சு திணற பேசப் போறேன்? ஹைஜீனிக்கா சாப்பிடு, சத்தான உணவை சாப்பிடுன்னு சொல்றேன்! காதுலயாவது போட்டுக்குறாளா? ஹாஸ்பிட்டல்ல என்னோட பேஷண்ட்ஸ் எல்லாரும் எனக்கு அவ்வளவு கோ ஆப்பரேட் பண்றாங்க. உங்க மருமக தான் என் பேச்சை பத்து பர்செண்ட் கூட கேக்குறதில்லை.... இதுல தனியா க்ரீம் கேக், சமோசா, சாக்லெட்ஸ்ன்னு உங்க கிட்ட இருந்து வேற அவளுக்கு கவனிப்பெல்லாம் பலமா இருக்கு! ச்ச்சூ!" என்று சலித்துக் கொண்டவனிடம்
"ஹிஹி.... புள்ளை ஆசையா கேக்குதுடா மித்ரா! எப்படி வாங்கி தராம இருக்குறது? ஆமா நான் அதெல்லாம் வாங்கி தர்றது உனக்கெப்படி தெரியும்?" என்று அவர் அசட்டு சிரிப்புடன் கேட்டார்.
"இயல்பா இருந்தா ஒரு வித்தியாசமும் தெரியாது. என் கிட்ட இருந்து மறைக்கணும்ன்னு ரெண்டு பேரும் ஓவரா ஒளிஞ்சு உங்களை நீங்களே காட்டிக் குடுத்துட்டு இருக்கீங்க, பிறகு எப்படி தெரியாமல் இருக்கும்?" என்று கேட்ட மித்ரனிடம்,
"ஐசு தனியா போயிட்டு வர்றேன்னு சொல்றாடா மித்ரா! நீயும் கொஞ்சம் அவ கூட போய்......!" என்று பேசிக் கொண்டு இருந்தவர் அவனது ஆத்திரப்பார்வையில் பேச்சை பாதியில் நிறுத்திக் கொண்டார்.
"ம்.....போய் அவளுக்கு முட்டை பொடிமாஸ் வாங்கிக் குடுத்து வாயில வேணும்னாலும் ஊட்டி விடுறேன்! இந்த ரேன்ஜ்ல போயிட்டு இருந்தான்னா, நல்லதுக்கில்ல ஸார்..... ஆரோக்யமான சாப்பாட்டை சாப்பிடுறவனுக்கே இந்த காலத்துல கண்ட கண்ட வியாதியும் வருது. தரமான காய்கறியும், பழமும் இப்பல்லாம் கிடைக்கிறதே இல்ல.... ஏன் சுவாசிக்கிற காத்து கூட தரமானதா இல்ல. முழு ஆரோக்யமான வாழ்க்கை வாழவும் முடியல. வீரியமான மருந்து, மாத்திரைகளை சாப்பிடுறதால சீக்கிரம் போய் சேர்றதுக்கும் வழியில்லை. இழுத்துகிட்டு பறிச்சுக்கிட்டுன்னு எல்லா கலப்படங்களோடயும் போராடிட்டு இருக்க வேண்டியதா போச்சு! இன்னிக்கு தேதியில ஒரு வியாதியும் இல்லாம உடல் ஆரோக்யத்தோட ஒரு மனுஷன் இருக்கானா......அவன் தான் உண்மையான பணக்காரன்!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவனை கை தட்டல் சத்தம் கலைத்தது.
"சூப்பர் மித்து! செம ஸ்பீச், பேசாம நீ இந்த ஏரியா கவுன்சிலர் ஆகிடுறியா....!" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "மேடம் ரொம்ப தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு போனீங்க.... இப்போ என்ன நான் எலெக்ஷன்ல நிக்கறத பத்தி பேசிட்டு இருக்கீங்க..... தண்ணி குடிச்சிட்டு போய் படுங்க! மறுபடியும் குட்நைட்!" என்று சொன்னவனிடம் அருகில் வந்து நெளிந்து கொண்டு நின்றிருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"உனக்கு இப்போ என்ன பிரச்சனை?" என்று முறைப்புடன் கேட்டவனிடம்,
"இப்படி கேவலமா முறைச்சுட்டு கேட்டா எப்படி சொல்றது? உன் க்யூட் ஸ்மைலோட கேளு. சொல்றேன்! ஆனா நீ இப்போ எல்லாம் என்னை ரொம்ப திட்டிட்டே இருக்க!" என்று கண்ணை கசக்கினாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"அய்யய்யோ புள்ள அழுவுதுடா மித்ரா!" என்று பதறிய அருள்மொழியிடம், "எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். இப்போ ஏதாவது வாயை திறந்தீங்கன்னா உங்களுக்கும் நிறைய கிடைக்கும்..... சும்மா இருங்க!" என்று சொல்லி விட்டு
"ஐஸ்வர்யா ஸ்ரீ வெரைட்டி ஆக்டிங் ட்ரை பண்ணாத..... வெளியே போய் கண்டதையும் சாப்பிடக் கூடாது. வேணும்னா வீட்ல சாப்பிடு. இல்லைன்னா பட்டினி கிட! உள்ளே போ! இப்போ கேட் லாக் பண்ணிடுவேன். நீ எங்கேயும் போக முடியாது!" என்று அறையின் புறம் கையை காட்டிய மித்ரனை பார்த்துக் கொண்டே மீண்டும் அறைக்குள் சென்று கதவைச் சாற்றிக் கொண்டாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"இவன் ரொம்ப ஸ்மார்ட்..... கேட்டையா பூட்டுவ...... நாங்க எல்லாம் அசால்டா எகிறி குதிப்போம்ல......! பத்து மணி எப்போ வரும்; இந்த மித்து பக்கி அவன் வீட்டுக்கு கிளம்பினதும் நம்மளும் கிளம்பணும்!" என்று மணியைப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
இரவு பத்து மணியாகி பத்து நிமிடங்களில் ஐஸ்வர்யா ஸ்ரீ அறைக் கதவை திறந்து மித்ரன் இருக்கிறானா என்று ஆராய்ந்து விட்டு, சப்தம் எழுப்பாமல் வீட்டுக் கதவைத் திறந்து சாற்றி விட்டு, வெளி கேட்டை கடக்க பத்து நிமிடங்களை செலவழித்து மூச்சு வாங்க நடந்து, ரோட்டில் நடத்தும் சாப்பாட்டுக் கடையை அடைந்து சில பல அயிட்டங்களை உள்ளே தள்ளிய பிறகு தான் ஐஸ்வர்யா ஸ்ரீக்கு தன் வாலட்டின் நினைவு வந்தது.
"சாப்பிடணும்ன்னு தோணுச்சு! அதுக்கு காசு எடுத்துட்டு வரணும்ன்னு தோணலையே.... இப்போ ப்ளேட் கழுவணுமா? எல்லாருக்கும் சர்வ் பண்ணணுமான்னு தெரியலையே..... காட் டேம்!" என்று நினைத்த படி தொண்டைக்குழி பயத்தில் துடிக்க, "பில் எவ்வளவு ஆச்சு அண்ணா?" என்று கேட்டாள்.
"எண்பது ரூபாய் ஆச்சும்மா!" என்று கடைக்காரர் சொல்ல
"அண்ணா வந்து என் கிட்ட......!" என்று ஐஸ்வர்யா தயங்கி நின்று கொண்டு இருக்கையில் அவள் பக்கத்தில் வந்து,
"இந்தாங்க அண்ணா, என் லவ்வர் உங்க சாப்பாட்டை ரொம்ப ரசிச்சு சாப்பிட்டாங்க பேலன்ஸ் நீங்களே வச்சுக்குங்க!" என்று நூறு ரூபாயை நீட்டிய மித்ரனின் கரம் கண்களில் நீர் நிறைந்திருந்ததால் மங்கலாக தெரிந்தது ஐஸ்வர்யாவிற்கு.
அவனுக்கு பின்புறம் நின்று கொண்டு இருந்தவள் விரைவாக கண்ணீரை துடைத்து விட்டு நிற்க, "வெளியே
சாப்பிடறதுக்கு வாயையும், வயிறையும் ரெடி பண்ணிட்டு வந்தா போதாது மேடம். பாக்கெட்டையும் ரெடி பண்ணிட்டு வரணும். அவ்வளவு தில்லா கேட் ஏறிக் குதிச்சு வந்தீங்க.....இங்கே வந்துட்டு என்ன அழுகை? ஒரு போன் பண்ணிக்குறேன் அண்ணா.... பத்து நிமிஷத்துல வீட்ல இருந்து வந்துடுவாங்க..... சாப்பிட்டதுக்கும், போன் காலுக்கும் சேர்த்து செட்டில் பண்ணிடுறேன்னு சொன்னா முடிஞ்சிடுச்சு, இதுக்கு போய் யாராவது கண்ல தண்ணி வைச்சுக்குவாங்களா?" என்று கேட்டவனிடம்
"இப்படி எல்லாம் சொன்னா யாராவது நம்புவாங்களா மித்து?" என்று கேட்டவனிடம், "நான் சொன்னா நம்ப மாட்டாங்க. நீ சொன்னா கண்டிப்பா நம்புவாங்க!" என்று சொல்லி புன்னகை பூத்தவனிடம், "மித்து பாவா நான் ஒண்ணு கேக்கட்டுமா?" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ அவனை அணைத்துக் கொண்டு.
"ஏய் நடுரோட்டில நின்னுட்டு தான் உயிரை வாங்குவியா? என்னடீ வேணும் உனக்கு?" என்று கேட்டவனிடம்
"என்னை மன்த்லி ஒன்ஸ் இப்படி அவுட் சைட் ஷாப்ஸ்க்கு கூட்டிட்டு வா பாவா, இந்த டேஸ்ட் செமையா இருக்குல்ல!" என்று அவள் கேட்க மித்ரன் தலையில் அடித்துக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான்.
ஊரைச் சுற்றிப் பார்க்காமல் உன்னை சுற்றி பார்க்கிறேனே
அன்பே என் அன்பே!
யாரை பற்றி கேட்டாலும்
உன்னை பற்றி சொல்கிறேனே
அன்பே என் அன்பே!
நெருக்கமாக நிற்க
துணிச்சலுமில்லை!
விட்டு விலகி நடக்க
மனம் வரவில்லை!
அடடா அடடா காதல்
அழகிய தொல்லை!!
வஞ்சி மனம் தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro