💖 வஞ்சி மனம் 1
வைஷு அய்யம்
அதிகாலை ஐந்து மணியளவில் மித்ரனின் அலைபேசி மெல்லிசை எழுப்பி அவன் உறக்கத்தை கலைக்க எத்தனித்த போது அவன் அதற்குள் எழுந்து அதை அணைத்து விட்டு சோம்பல் முறித்தான். அலாரம் எல்லாம் ஒரு கடமைக்காக வைப்பது தான். எப்போதும் சிவாவின் ஆழ் மனதில் அவன் எப்போது விழிக்க வேண்டும் என்று நினைக்கிறானோ, அந்த நேரத்தை நினைத்து அப்போது நான் எழ வேண்டும் என்று ஒரு முறை சிந்திப்பான். அவ்வளவே! அலாரத்தை அது அடிக்கும் முன்னதாகவே அவனுடைய கைகள் எப்போதும் அணைத்துவிட்டு தான் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுவான்.
சென்னை நகரில் ஒரு பகுதியில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையில் தன் 5.5 ஆண்டுகள் படிப்பை முடித்து விட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவன். ஒரு முழுமையான ஆண்மகன் என்று சொல்லக் கூடிய அனைத்து தகுதிகளையும் பெற்ற இருபத்தேழு வயது நிறைவடைந்த வாலிபன்.
தற்புகழ்ச்சி தற்கொலைக்கு சமம் என்று நம் சிவமித்ரன் படித்திருப்பார் போலும். அதனால தான் அவரைப் பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நம் கதையின் நாயகன் மழை வண்ணத்து அண்ணலே என்று கம்பர் ராமனைப் பாடும் ஒரு நிறம்; ஆஜானுபாகுவான தேகமும், அதற்கேற்ற உயரமும், வசீகரமான ஈர்க்கும் கண்களும், அவன் இதழில் எப்போதும் இருக்கும் ஒரு மெல்லிய புன்னகையும் தான் சிவமித்ரனின் அடையாளங்கள். மருந்துக்கு கூட கோபம் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டான். அந்த அளவுக்கு சாந்த சொரூபி! யாராவது கோபமூட்ட முயற்சித்தாலும் ஒன்றுமே பேசாமல் இருந்து அவர்களை தான் இன்னும் கொஞ்சம் எரிச்சல் பட வைப்பானே தவிர அவன் எப்போதும் கோபப்பட்டதில்லை.
பன்னிரண்டு வயதில் இருந்தே தன் வாழ்க்கைக்கு தேவையான வருமானத்தை தன் உழைப்பின் மூலமாக மட்டுமே பெற்றுக் கொண்டு சுயமரியாதையுடன் வாழ்ந்து வரும் சிவமித்ரன் அவனுடைய மானசீகமான குரு அருள்மொழியின் வீட்டிற்கு வரும் போது ஏழு வயது சிறுவன். தெருவில் அவனை துன்புறுத்திய ஒரு கூட்டத்தினரிடம் இருந்து மீட்டு அழைத்து வந்து, உணவிட்டு, பாதுகாப்பு அளித்து, அவனை பற்றிய தகவல்களை உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அவனை பள்ளியில் சேர்த்து, படிக்க வசதி செய்து கொடுத்து, தங்குமிடமும் அமைத்து தந்தவர் அவனைப் பொறுத்தவரை பிரத்யட்ச தெய்வம். ஆனால் அருள்மொழி எப்போதும் அவனிடம் பேசும் போது, "என்னால முடிஞ்சத உனக்கு நான் செய்றேன் மித்ரா, உன்னால முடிஞ்சா இதே விஷயத்தை நீ ஒரு நாலு பேருக்கு திரும்ப செய்!" என்று சொல்லி விடுவார்.
தன் தங்கையின் கணவர் சிதம்பர நாதன் அவரை நம்பி சென்னையில் விட்டுச் சென்ற சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாத்து நிர்வகிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டு திறம்பட நடத்திக் கொண்டு இருந்தார்.
தன் தங்கை பவானி தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வரும் சந்தோஷம் அவருக்கு! இவ்வாறு சூழ்நிலை இருக்கும் போது ஆறு மாதங்களுக்கு முன்னர் தங்கள் முன்னால் சென்று கொண்டு இருந்த வாகனம் அதன் கட்டுப்பாட்டை இழந்ததால் பவானியும், சிதம்பர நாதனும் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தன் பெற்றோரை கண் மூடி திறப்பதற்குள் ஒரேடியாக இழந்து விட்ட ஐஸ்வர்யா ஸ்ரீ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நின்று விட்டாள். தன் தாய், தந்தை இருவரும் இல்லாமல் தனித்து அயல்நாட்டில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தவள், தன் மாமாவிடம் கலந்து பேசி விட்டு தன் தந்தையின் பெயரில் இருந்த சொத்துக்கள் அனைத்தையும் சட்டப்படி தன் பெயரில் மாற்றி விட்டு, தன் படிப்பு சம்பந்தமான சர்ட்டிபிகேட்டுகள், பெற்றோரின் விபத்து தொடர்பான அனைத்து பார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்து கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பு தன்னுடைய மாமனின் இருப்பிடம் நோக்கி அயல் தேசத்தில் இருந்து வந்து விட்டாள்.
துக்கத்தின் சாயல் கூட படாமல் வளர்ந்த இளவரசி, முழு நேரமும் துக்கத்தை அனுஷ்டித்தாள். தன் மாமனின் வற்புறுத்தலுக்கு இணங்கி சாப்பாட்டை நேரத்துக்கு சாப்பிட்டவள், தன் மனதில் இருந்த துக்கத்தை தூக்கத்தில் சற்று நேரம் துறந்தாள். இந்த வழிமுறை அவளுக்கு சற்று பிடித்தமானதாக தோன்றி விட அறையை விட்டு வெளியே வராமல் எந்நேரமும் தூக்கம், சாப்பாடு, தன்னுடைய டேப்லெட்டில் ஏதாவது விஷயங்களை குடைவது என்று தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டாள்.
தன்னால் முடிந்த வரை பொறுத்து பார்த்த அருள்மொழி நேற்றிரவு அவளிடம், "இங்க பாருடா ஐசு, நீ இப்படி இருக்கிறதுனால அப்பாவும், அம்மாவும் திரும்ப வரப் போறதில்லை. அதனால உன்னுடைய இந்த ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிற ஐடியாவை எல்லாம் விட்டுட்டு வெளியே வந்து உலகத்தை தைரியமா பேஸ் பண்ணு. நாளைக்கு காலையில 6 மணிக்கு நீ நம்ம வீட்டு லான்ல இருக்கணும். மித்ரன் குட்டிப் பசங்களுக்கு எல்லாம் யோகா ட்ரையின் பண்ணிட்டு இருப்பான். நீயும் அங்கே வா! நீ கத்துக்குறியோ, இல்லையோ எனக்கு தெரியல. பட் உனக்கு நல்ல டைவர்ஷனா இருக்கும். சரியா? ஸோ காலையில மீட் பண்ணலாம்!" என்று
உறுதியாக சொல்லி விட்டு சென்று விட்டார்.
எரிச்சலுடன் தான் பயிற்சி வகுப்பிற்கு சென்று நின்று கொண்டு இருந்தாள். ஒவ்வொருவராக குட்டி, குட்டி குழந்தைகள் நிறைய பேர் வரவும் அவர்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு இருக்கையில் திடீரென அங்கே ஒரு அமைதி நிலவியது.
"என்னாச்சுப்பா எல்லாரும் திடீர்னு இவ்வளவு கொயட் ஆகிட்டீங்க?" என்று கேட்டுக் கொண்டு திரும்பியவளின் கண்களில் புன்னகையுடன் நின்று கொண்டு இருந்த மித்ரன் பட அவனை தலை முதல் கால் வரை அளவிடும் பார்வை பார்த்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"ஹலோ மிஸ். ஐஸ்வர்யா ஸ்ரீ! சார் உங்களை பத்தி சொன்னாங்க! நீங்க யோகா கத்துக்க வந்தா பெட்டரா இருக்கும்னு நான் தான் சார் கிட்ட சொன்னேன்! சீக்கிரம் உங்க வலியில இருந்து வெளியே வாங்க!" என்று மித்ரன் சொல்லவும் ஐஸ்வர்யா அவன் மார்பில் அணிந்திருந்த டீ ஷர்ட்டை கொத்தாக பற்றியிருந்தாள். ஏனென்றால் கையில்லாத, காலரும் இல்லாத ஒரு ஸ்லீவ்லெஸ்ஸை அணிந்திருந்தான் சிவா.
கோபத்துடன் அவனிடம், "ஹூ த ஹெல் ஆர் யூ மிஸ்டர்? நான் எப்படி இருக்கணும்? என்ன பண்ணணும்ன்னு டிஸைட் பண்றதுக்கு நீ யாரு? என் வலி என்னன்னு உனக்கு தெரியுமா? ஒரே நாளில் என் லைஃப் தலைகீழாகிடுச்சு. அது உனக்கு தெரியுமா?" என்று கூச்சலிட்டவளிடம்,
"ஒரு நிமிஷம்! இதோ வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு குழந்தைகளிடம் சென்றான். ஒரு வரிசையில் 4 பேராக, 5 வரிசையில் குழந்தைகள் பிரிந்து நின்று கொண்டு இருந்தனர்.
"ஓ! சூப்பர் குட்டீஸ், பொஸிஷன்ல நின்னுட்டு வெயிட்டிங்கா? எதுக்கு அக்காவை பார்த்து நின்னுட்டு இருக்கீங்க? வார்ம் அப் ஸ்டார்ட் பண்ண வேண்டியது தானே? வார்ம் அப் முடிச்சிட்டு பத்மாசனத்தில இருந்து டென் மினிட்ஸ் மெடிடேட் பண்ணுங்க. அதுக்குள்ள அண்ணா வந்துடுறேன்!" என்று சொல்லி விட்டு மறுபடியும் அவளிடம் வந்தான்.
"இப்போ சொல்லுங்க ஐஷு! உங்களுக்கு என்ன பிரச்சனை? உங்க அப்பாவும், அம்மாவும் உங்களை தனியா விட்டுட்டு போய்ட்டாங்க; அவ்வளவு தானே?" என்றவனை ஒரு கேவலமான ஜந்துவை பார்ப்பது போல் பார்த்தாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"நீ என்ன லூசா? என்னமோ எங்கப்பாவும், அம்மாவும் பக்கத்தில இருக்கிற சிட்டிக்கு போயிருக்காங்கங்கிற மாதிரி சொல்ற; அவங்க ரெண்டு பேரும் இனிமேல் வரவே முடியாத இடத்துக்கு போய்ட்டாங்கடா; உனக்கு புரியுதா? இல்லையா?" என்று கேட்டாள் ஐஸ்வர்யா.
"உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமா? வெளியே பயங்கரமா மழை பெய்யுது. உங்க கிட்ட இருக்குற குடையில் ஒரு ரொம்ப சின்ன ஓட்டை இருக்கு. உங்க கண் முன்னால ஒருத்தர் மழையில நனைஞ்சுட்டு போயிட்டு இருக்காரு. அப்போ உங்களுக்கு என்ன தோணும்?" என்று கேட்டவனிடம் ஒரு கேள்வி பார்வையை செலுத்தி விட்டு, "அட்லீஸ்ட் நமக்கு சின்ன ஹோல் இருக்கிற அம்பர்லாவாவது கிடைச்சுருக்கேன்னு தோணும்ன்னு நினைக்கிறேன்! பட் எதுக்கு இந்த கேள்வின்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டவளிடம் ஒரு சிறு முறுவலை தந்து நகர்ந்து விட்டான் மித்ரன்.
"உன் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமாடா ஐசு?" என்று கேட்ட தன் மாமாவிடம்,
"சொல்லுங்க மாமா!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"பொருள் விஷயத்தில நம்மளை விட கம்மியான நிலையில் இருக்கறவங்க கூட தான் நம்மளை ஒப்பிட்டு பார்த்துக்கணும். ஏழு வயசுல இவன நான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். இருபது வருஷம் முடிஞ்சிடுச்சு, விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து தனியா போராடி இன்னிக்கு ஒரு நிலையில இருக்கான். அவன் நிலைமையை யோசிச்சா உன்னோடது கொஞ்சம் பரவாயில்லை தானேம்மா, என்ன தான் முயற்சி செஞ்சாலும் இனிமேல் அப்பாவும், அம்மாவும் திரும்ப வரப் போறதில்லை. அதனால உண்மையை ஏத்துக்க பழகிக்கோடா! சொல்றது ரொம்ப சுலபம். ஆனா கஷ்டத்துக்குள்ளயே உழன்றுட்டு இருக்கறதால நமக்கு ஒரு தீர்வும் கிடைக்கப் போறதில்லைடா ஐசு!" என்றவரை அணைத்துக் கொண்டாள் ஐஸ்வர்யா.
"நான் இப்போ என்ன பண்றது மாமா?" என்று கேட்டவளிடம்
"போடா! போய் யோகா கத்துக்க. நம்ம மனசுக்கும், உடம்புக்கும் தன்னால முடிஞ்ச அளவுக்கு தெம்பும், தைரியமும் குடுத்துடுவான் நம்ம மித்ரன்!" என்று சொன்னவரிடம் தலையசைத்து விட்டு சென்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ!
தயங்கி தயங்கி நின்றவளிடம், "வெல்கம் மிஸ். ஐஷூ!" என்று சொன்னவனிடம் மறுப்பாக தலையசைத்து
"ஐ'ம் ஸாரி மாஸ்டர், யூ கேன் கால் மீ வரு!" என்றாள் ஐஸ்வர்யா ஸ்ரீ.
"ஓ கமான் வரு, என்னை உங்க ப்ரெண்டா நினைச்சுக்கோங்க. ஜஸ்ட் கால் மீ சிவா, தட்ஸ் எனஃப்!" என்றவனிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு, "மித்ரன்னா ப்ரெண்ட் தானே? அப்போ ஃப்ரம் நௌ ஆன்வேர்ட்ஸ் நீங்க எனக்கு மித்து!" என்றவளிடம் "ஜாக்கிரதை, ஒரெழுத்தை மாத்தி போட்டீங்கன்னா நான் நீங்க என்னை கேட்டீங்களே.....அத மாதிரி லூசாகிடுவேன்!" என்று புன்னகையுடன் கூறினான்.
"ஓ! யா......பித்து, ரைட்!" என்று சிரித்து விட்டு, "இன்னிக்கு நம்ம க்ளாஸ் ஸ்டார்ட் பண்ணிடலாமா? பர்ஸ்ட் என்ன பண்ணனும்?" என்று கேட்டவளிடம்
"ஃபர்ஸ்ட் என்ன பண்ணணும்ன்னா இப்படி டைட் ஜீன் எல்லாம் போடுறத மாத்திட்டு, ஸாப்டா, கம்பர்டபிளா இருக்கிற மாதிரி ஒரு சுடிதார் போட்டுட்டு வாங்க. இந்த மாதிரி காஸ்ட்யூம் எல்லாம் யோகாவுக்கு செட் ஆகாது!" என்றான் சிவமித்ரன்.
அதற்குள் சிறுவர்கள் அன்றைய பயிற்சியை முடித்து விட அவர்களை அனுப்பி வைத்து விட்டு அவளிடம், "நாளைக்கு காலையில ஷார்ப்பா 6 மணிக்கு வந்துடுங்க வரு; ஓகேவா?" என்றவனிடம்
"நான் நியூகம்மர் தானே மித்து? ஒன் அவர் ப்ராக்டிஸ் பண்றதுக்கு என்ன இருக்கப் போகுது? ஒரு 10, 15 மினிட்ஸ் கத்துக்குறேனே? க்ராஜீவலா நம்ம டைமிங் கூட்டிக்கலாம்!" என்று சொன்னவளிடம்
"இங்க நான் ட்ரையினரா? இல்ல நீ ட்ரையினரா? ஷார்ப்பா 6 மணிக்கு நீ ரெடியாகி வெளியே வந்துருக்கணும். இல்லைன்னா இப்படியே வாட்டர் பெட் சைஸ்ல இருந்துக்கோ! ஐ ஹாவ் நோ அப்ஜெக்ஷன் அட் ஆல்!" என்று அவளிடம் சொல்லி விட்டு தன் வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தான் சிவ மித்ரன்.
வஞ்சி மனம்
தஞ்சம் கொள்வான்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro