வசந்தம் - 4
நீ தினம் சிரிச்சா
போதுமே வேற எதுவும்
வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே
நான் வாழவே
காற்று வீசும்
திசை எல்லாம் நீ பேசும்
சத்தம் கேட்டேனே நான்
காற்றாய் மாறி போவேனே அன்பே
"நிக்கி டார்லிங் நீ என்னை சீட் பண்ணுற ?உன் கூட டூ " என்று முகத்தைத் திருப்பி வரு உட்கார்ந்துக் கொள்ள அஜியும், நிக்கியும் கன்னத்தில் கை வைத்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"அண்ணி என் கூட பழம் தானே " என்ற அஜியிடம் "நீ என் டீமா ?நிக்கி டீமா?" என்று இவள் பதில் கேள்வி கேட்க "நான் உங்க டீம் தான் பா " என்ற அஜிக்கு ஹைபை கொடுத்து மூன்றே வயதான நிக்கியைப் பார்த்து இல்லாத காலரை தூக்கிக் கொண்டாள் இந்த இருபத்திரெண்டு வயது மங்கை.
"அஜி உனக்கும் எனக்கும் சேம் ஏஜ் தானே! நீ என்னை வருனே கூப்பிடு" என்று கூற
"சேம் ஏஜ் தான் அதுக்காக நேம்லாம் சொல்லி கூப்பிட முடியாது அண்ணி" என்றவனை முறைத்தவள் "அப்போ உன்கூடயும் டூ " என்று கூறி எழ அவள் கை பிடித்து அமர வைத்த கௌதம் "என்னாச்சு " எனக் கேட்டு வருவின் கைகளில் காபியைத் திணித்தான்.
அதைக் குடித்துக் கொண்டே ஓரக்கண்ணால் மூவரையும் பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டு புன்னகைத்தவன்
நிக்கி சோகமாய் இருப்பதைக் கண்டு "நிக்கிக் குட்டிக்கு என்னாச்சு?" எனக் கேட்க
"ஒரு கையை மட்டும் கன்னத்திற்கு கொடுத்து கீழே பார்த்துக் கொண்டிருந்தவள் இப்போது நிமிர்ந்து கௌதமைப் பார்த்துவிட்டு மறுபடியும் கீழே குனிந்துக் கொள்ள
அவளின் செயலைக் கண்டவன் இப்போது மற்ற இருவரையும் முறைக்க ஆரம்பித்தான்.
"அய்யோ அண்ணா நான் ஒன்னும் பண்ணல ?" என்று வாலண்டியாராய் ஆஜரான அஜியை இப்போது சந்தேகக் கண் கொண்டு கௌதம் பார்க்க,
அவனோ முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் அமர்ந்துக் கொண்டான்.
"கவ்வு மாமா" என்ற நிக்கியின் குரலில் "சொல்லுடா நிக்கி குட்டி " என்றவன் அவளருகில் அமர்ந்து கன்னத்தில் வைத்திருந்த அவளது கையை விலக்கி தன் மடிமீது அவளை அமர்த்திக் கொண்டு என்ன ஆச்சு எனக் கேட்க
"மாமா வரு அத்தா சீத்திங் பண்ணிட்டு நான் பண்ணுறேனு சொல்லுறாங்க" எனக் கூறியவள் வருவைப் பார்க்க அவளோ நிக்கிக் குட்டிக்கு வெவ்வெவ்வெ என பழிப்புக் காட்டினாள்.
"இல்ல சீனியர் அவ பொய் சொல்லுறா ! அவளை நம்பாதீங்க" என்றவள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ள
" இல்ல கவ்வு மாமா அத்தா தான் பொய் சொல்லுறாங்க" என்ற நிக்கியும் வருவைப் போலவே முகத்தை வைத்துக் கொள்ள அஜியும் இவர்களைப் போலவே முகத்தை வைத்துக் கொண்டான்.
"என்ன நடந்துச்சுனு சொன்னா தானே டா யாரு பொய் சொல்லுறாங்கனு கண்டுபிடிக்க முடியும் !! காலங்காத்தால என்னை டென்சன் பண்ணுறது தான் உங்க வேலையா ?" என்றவன் அஜியை முறைக்க
" ஹலோ அண்ணா ! டைலாக் பேசுனது அவங்க, திட்டுறது என்னையா? இதுக்குது தான் ஒரு ஆளு இருக்கணும்னுங்கிறது...
ஆளு இருந்தா இப்படிலாம் திட்டுவாங்களா " எனப் புலம்பியவாறே அஜி வெளியே செல்ல
" நான் திட்டுறதுக்கும் ஆளு இருக்கிறதுக்கும் என்ன டா சம்பந்தம் " எனக் கேட்ட கௌதமிடம்
"யாருக்குத் தெரியும்? நானும் ஏதாவது பேசணும்ல அதுனால தான் " எனக் கூறிப் புன்னகைத்து அவன் ஓடிவிட
நிக்கியும் "அஜி " என அழைத்தவாறே அவன் பின்னால் ஓடிவிட்டாள்.
இப்போது கௌதமும் அவனின் நவியும் மட்டுமே ஹாலில் அமர்ந்திருக்க "சீனியர் அப்போ என்னை நம்பமாட்டிங்களா ?" என்று அவள் மறுபடியும் ஆரம்பிக்க குழந்தையை கூட சமாளிச்சுடலாம் போல என மனதில் புலம்பியவனோ
" உன்னை நம்பாம வேற யார ஜூனியர் நம்ப போறேன் " என்று கூற அவனின் ஜூனியர் என்ற அழைப்பில் கடுப்பானவளோ முறைத்தவாறே காபியுடன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அய்யோ எனத் தலையில் அடித்துக் கொண்டு அவனும் அவள் பின்னாலே சென்று தோப்புக்கரணம் போட ஆரம்பிக்க
அவனின் செயலில் சிரிப்பு வந்தாலும் அதைக் அடக்கிக் கொண்டு காபியை அருந்தியவாறே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"20 போட்டுட்டேன் நவி போதும் ப்ளீஸ் " என்றவனை சிறிதும் சட்டை செய்யாமல் "இன்னும் இன்னும் " என அவள் கூற அவளை நோக்கி மெதுவாக நடந்து வந்தவனோ அவளின் படபடக்கும் விழிகளை ரசித்தவாறே ஒரு அடி இடைவெளி விட்டு நின்று கொண்டான்.
மெத்தையில் அமர்ந்திருந்தவள் அவனை அருகில் கண்டதும் உடனே எழுந்து நிற்க , அவனோ இன்னும் அவளை நெருங்கி அவள் உதட்டின் மீது மீசையாக படிந்திருந்த காபியை
தன் ஒற்றை விரலால் துடைக்க ஆரம்பித்தான்.
"நவி " என்ற அவனின் குரலில் கண்களை இறுக்கி மூடியவள்
"ம்ம் " எனக் கூற சிறிது நொடி அவளை ரசித்தவனோ
"இந்த குட்டி வயிறுக்கு பசிக்கலையா ? " எனக் கேட்க
இப்போது வந்த அவனின் நார்மலான குரலில் கண்களைத் திறந்தவளோ சுவற்றில் சாய்ந்து புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தவனைத் தான் கண்டாள்.
"இவர் எப்போ அங்கே போனார் " என யோசித்தவளுக்கோ அவனை நினைத்ததும் "ப்ராடு பய " என்று தான் மனதில் தோன்றியது.
"பசிக்கலையா?" மறுபடியும் அவன் கேட்க இல்லை என வேகமாக தலையசைத்தவளோ அவனின் முறைப்பில் கீழே குனிந்துக் கொண்டாள்.
"டேய் கண்ணா தோசை சுட்டு வெச்சுருக்கேன் வருவுக்கு எடுத்துட்டு போ " என சமையலறையில் இருந்து குரல் கொடுக்க வரேன் மா என்றவனோ அவளைப் பார்த்தவாறே
" இங்கேயே இரு தோசை கொண்டு வரேன் " எனக் கூறிச் சென்றான்.
"இரண்டு போதும் மா ! அவ அதுக்கும் மேல சாப்பிட மாட்டா " எனக் கூறியவனைப் பார்த்து புன்னகைத்தவர் மூன்று தோசை வைத்து கொடுக்க "எப்படியும் மிச்சம் தான் வைக்கப் போறா " எனப் புலம்பியவாறே அறைக்கு செல்ல அவள் அங்கே இல்லை.
நவி என அவளை அழைத்தவன் சத்தமில்லாமல் போக ஒவ்வொரு இடமாக தேடியவன் இறுதியில் "அம்மா அவளைக் காணோம்! சாப்பிட கஷ்டப்பட்டுட்டு எங்கேயோ போய் ஒளிஞ்சிருக்கா எங்கேனு தான் தெரியல " எனக் கத்த,
"ஒழுங்கா தேடு டா, அவ தான் வேணும்னு கட்டிட்டு வந்த தானே! நல்லா அனுபவி " என்றவர் சிரித்துக் கொண்டே வேலையைப் பார்க்க "அம்மா " என்றவனோ
"ராட்சசி " எனக் கத்திக் கொண்டே வெளியே சென்றான்.
அங்கே அவனின் ராட்சசியோ நிக்கி மற்றும் அஜியுடன் கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருக்க கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தவனோ "வருணவி " என்று கத்த அதீத கோபத்தில் இருந்தால் மட்டுமே அவனின் இந்த வருணவி என்ற அழைப்பு வரும் என்பதை அறிந்தவள் ஓடிச் சென்று அவன் முன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நிற்க "நான் என்ன சொன்னேன்" என்றவனின் குரலில் இன்னும் அவள் முகம் வாட
அவள் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு பந்தலுக்குச் சென்றவனோ அங்கிருந்த மரக் கட்டிலில் அமர வைத்தான்.
மாட்டுக் கொட்டகைக்கு அருகிலேயே ஒரு பந்தல் அமைத்திருக்க அங்கு தான் இவர்களின் பொழுது கழியும்.
பந்தலுக்கு அருகிலேயே ஒரு வேப்பமரமும் இருக்க அங்கு தொட்டில் கட்டி நிக்கியை தூங்க வைத்துவிடுவர்.
கௌதமும் லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு இந்த பந்தலுக்கு வந்துவிடுவான்.
"சீனியர் எனக்கு வேணாமே ப்ளீஸ் " என்றவளை முறைத்தவன் "ஒழுங்கா உட்காரு வாய் மேல கை...
உஸ்ஸ்! " என்றவன் தோசையை அவளுக்கு ஊட்ட வாய் மேல் கை வைத்தவளோ அதை சிறிது கூட நகர்த்தவில்லை.
"ஏன் டி என்ன இப்படி பாடாபடுத்துற..." என்றவன் சோர்ந்துவிட
"நீங்க தானே வாய் மேல கை வைக்க சொன்னீங்க " என்றவளை என்ன செய்யலாம் என்று தான் தோன்றியது.
"சரி கையை எடு இந்தா ஆஆ காட்டு" என்றதும் முகத்தை சுழித்துக் கொண்டு வாங்கிக் கொண்டவள் நிக்கியையும் அழைக்க
" அவளை எதுக்கு கூப்பிடுறேனு தெரியுது...இந்த தோசையை நீ தான் சாப்பிடணும் அவளுக்கு நான் அப்புறமா ஊட்டிக்கிறேன் " என்றவனை முறைத்தவள்
"எனக்கு கதை சொல்லுங்க அப்போதான் சாப்பிடுவேன்" என அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டாள்.
"ஓஓ பகவான் இவளை வெச்சுட்டு " என்றவனை விசித்திரமா பார்த்தவள்
"ஓஓ பகவான் " என இழுக்க
"என் வருக்குட்டி அப்படி சொல்லுவா" என்றவனுக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு மலர்ச்சி வந்ததோ முகத்தில்!!!
சிறிது பொறாமை எழ "இன்னும் அங்களைப் பத்தி சொல்லலையே!" என்றவளிடம் "ஆமால" என்றவனோ இப்போ சொல்லுறேன் என அவனின் க்ரஸ்ஸை பற்றிக் கூறி ஆரம்பித்தான்.
நாட்கள் அதன்போக்கில் செல்ல கௌதமும் வருவைப் பார்த்து சிநேகமாக புன்னகைப்பதை நிறுத்தவில்லை வருவும் இவனை முறைப்பதை நிறுத்தவில்லை.
அன்று சம்பள நாள்.
இவனின் அறை நண்பர்கள் ஓரே குடியும் கும்மாளமுமாக சத்தம் போட்டுக் கொண்டிருக்க கௌதமோ காதில் ஹெட் செட் மாட்டிக் கொண்டு வெளியே வந்து அமர்ந்துக் கொண்டான்.
பக்கத்து வீட்டாருக்கு தொல்லைக் கொடுக்கும் அளவு இவர்களின் சத்தம் அதிகரிக்க கோபம் கொண்ட வருவின் அப்பாவோ இவர்களிடம் சண்டைக்கு வர மற்ற நேரமாக இருந்திருந்தால் இவனும் பதிலுக்கு கத்தியிருப்பான்.
வரு அப்பாவின் பின் அவரின் சட்டையைப் பிடித்து இழுத்தவாறே பயத்தில் நடுங்க, பயத்தில் நடுங்கும் வருவைக் கண்டதும் இவனுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது.
நான் பாத்துக்கிறேன் சார் நீங்க போங்க என்ற கௌதமை அவர் ஒரு லுக் விட்டவாரே உள்ளே செல்ல இவனும் தன் நண்பர்களைத் திட்டி அமைதியாக்கி விட்டான்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு அவனின் தேவதை இவனைப் பார்த்து புன்னகைக்க ஆரம்பித்து விட்டாள்.
அந்த புன்னகையால் வானில் பறக்க ஆரம்பித்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
அன்று மாடியில் படிக்கட்டின் மேல் அமர்ந்து கன்னத்திற்கு கை கொடுத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் இவனைக் கண்டதும் புன்னகைக்க இவனும் ஹாய் என்று கை காட்டினான்.
அவள் உடனே கண்களை விரித்து அப்பா அப்பா என்று சைகை செய்ய அவன் அவள் செய்யும் அழகைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
நஸ்ரியா, சமந்தாலாம் தோத்து போயிடணும் டா வரு கிட்ட என்று தான் மனதில் ஓடியது.
"நஸ்ரியா,சமந்தா லாம் தோத்து போயிடணுமோ உங்க வருகிட்ட " எனக் கூறி முகத்தைச் சுழித்த நவியைப் பார்த்துப் புன்னகைத்தவனோ " அவ ரொம்ப அழகு!! இவங்க கூடலாம் கம்பேர் பண்ணக் கூடாது தான் " என்றவனை என்ன செய்ய என்பது போல் பார்த்து வைத்தாள்.
"டேய் அண்ணா ஒருத்தருக்கு செமையா பர்ன் ஆகுது !! நீ உன் வருக்குட்டி புராணத்தை ஸ்டாப் பண்ணு , அப்புறம் நம்ம பந்தல் எரிஞ்சிடும் " என அஜி கேலி பேசியது கௌதமிற்கு புரிந்தததோ என்னவோ நவிக்குப் புரிந்துவிட்டது.
"அஜி " என்று அவள் பற்களைக் கடிக்க " நான் இல்ல அண்ணியாரே" என்றவன் ஓடி விட
" நான் எப்படி இருக்கேன் சீனியர் " என்றவளின் கண்கள் வருவின் மீது இருந்த பொறாமை , அவன் என்ன கூறப் போகிறான் என்ற ஏக்கம் என அனைத்தும் கலந்து தலையைச் சாய்த்துக் கேட்க அவள் கேட்ட பாவனையில் இவன் தான் அவள் புறம் மொத்தமாக சாய்ந்துவிட்டான்.
" நீ ராட்சசி டி " என்றவன் முடிப்பதற்குள் அந்த வெர்சனுக்கே மாறியவள் அவன் தலையைப் பிடித்து ஆட்ட " அய்யோ அம்மா " என்று அலறியவனின் குரலில் அனைவரும் " என்னாச்சு" எனக் கூறி வெளியே வர சமத்து பாப்பாவாக இவள் நிக்கி வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.
அவள் செய்த செயலையும் , மாட்டிக் கொள்ளாமல் ஓடியதையும் நினைத்து சிரித்துக் கொண்டிருந்தவனைக் கண்ட மற்றவர்களும் சிரிக்க " ஆத்தா உன் பையனுக்கு பேய் பிடிச்சுடுச்சு ஆத்தா...அந்த பேய் பேரு கூட வருணவி " என்ற அஜி கௌதமின் ரொமாண்டிக்(உஷ்ணப்) பார்வையில் அம்மாவின் பின் பதுங்கிக் கொண்டான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro