Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வசந்தம் - 3

மழைத்துளி நீ, மழலையும் நான்
நீ என்னை சேர காத்திருப்பேனே
இறைமதி நீ, நில ஒளி நான்
அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே
இது ஏனோ புது மயக்கம்
தெளிந்திட எண்ணம் ஏனோ இல்லை
இனி வேண்டாம் ஒரு தயக்கம்
இறுதி வரை நம் பிரிவே இல்லை

வாயில் பெருவிரலை வைத்துக் கொண்டு கை கால்களை குறுக்கி தலையணை மேல் அவள் பாதி உடல் இருக்க ,அந்த கற்றை முடிகள் வேறு பிறை நெற்றியை மூடியிருக்க அதற்கு வலிக்குமோ என்பது போல் மெதுவாக விலக்கிவிட்டவன் அவளின் மனையாளைப் பார்த்தான்.

வெண்டை பிஞ்சு விரல்கள், கன்னம் கிள்ளி செல்லம் கொஞ்சும் அளவு பட்டு கன்னம்,ரோஜா இதழ்கள்,குழந்தைகள் சருமம் போன்று தொட்டதும் விரல்கள் வழுக்கி செல்ல நீ குட்டி குழந்தையே தான் டி என்றவன் மனமோ என் சுயநலத்துக்காக உன்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டேனோ?
தப்பு பண்ணிட்டனோ?
என நினைக்கத் தொடங்கியது.

இது முதல் முறை அல்ல...
அவளிடம் காதலை சொல்லலாம் என நினைத்திருக்கிறான் தான்,ஒருவேளை அவள் காதலை மறுத்துவிட்டால்? நான் உங்களை வெறும் நண்பனா மட்டும்தான் பார்க்கிறேன் என கூறிவிட்டால்? இப்படி பல கேள்விகள் எரிமலையாய் பொங்கி அவன் மனதை மாற்றி இப்படி அவசரக் கல்யாணம் என்ற நிலையில் கொண்டுவந்து விட்டுவிட்டது.

தான் செய்தது தவறோ என எண்ணியவன் அடுத்த நொடியே அவள் மேல் அவன் கொண்ட காதல் நினைவிற்கு வர அப்படியெல்லாம் இல்லை என்ற நினைவை அழிப்பான் வைத்து அழித்தவன் அவளுக்கு வலிக்காதவாறு கன்னத்தைக் கிள்ளி செல்லம் கொஞ்சி விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

இரவு உறங்க எவ்வளவு நேரமானாலும் விடியற்காலையிலேயே எழுந்துவிடுவான்.
எழுந்து சிறிது நேரம் உடற்பயிற்சி, நிக்கியுடன் விளையாடுவது,மாமா மற்றும் தம்பியுடன் அந்த கிராமத்தை சுற்றி வருவது இதுதான் அவன் வேலையாக இருக்கும்.

வேலை இருக்கும் சமயங்களில் மட்டுமே வெளிநாடு பயணமெல்லாம்...
மற்றபடி வீட்டிலிருந்து தான் அனைத்தும்.
வீட்டை விட்டு பிரியமனமில்லாமல் தான் இப்படி ஒரு முடிவு.

காலை எழுந்ததும் ஒரு சொம்பு முழுவதும் சுடுநீர் குடித்து விட்டு உடற்பயிற்சி மேற்கொள்பவன் அது முடிந்ததும் கற்றாழை சிறிதை முழுங்கி விட்டு தான் மற்ற வேலையே...
உடல்நலம் பேணுவதில் மருத்துவரையும் மிஞ்சி விடுவான்.
மற்றவர்களையும் அப்படி இருக்க சொல்லி அடாவடி செய்யும் வீம்புக்காரன்.

ப்ரெஸ்ஸாகி அறையை விட்டு வெளியே வந்தவன் தன்னவளைக் காண அவளோ விட்டால் பறந்துவிடுவான் என்பது போல் அந்த தலையணையை அணைத்திருந்தாள்.
"ம்க்கக்கும் நான் இருக்க வேண்டிய இடம் " என பெருமூச்சு விட்டவாறே
வொர்க்அவுட் முடிச்சுட்டு வந்து உனக்கு சமாதி கட்டல நான் கௌதம் இல்லை என அந்த தலையணையிடம் சவால் விட்டவாறே அவள் தூக்கம் கலையாதவாறு அவன் கதவை திறந்து வெளியே சென்றான்.

"தம்பி வா பா...இந்தா சுடுதண்ணீ " என்று அவனிடம் நீட்டிய அன்னையை நோக்கி புன்னகைத்தவாறே நெளிந்தவன் "அம்மா அவ...அது தூங்க லேட் அதான் எழுந்திரிக்கல " என திக்கித் திணறிக் கூறி முடிக்க
அதில் சிரித்தவரோ எதுவும் கூறாமல் செல்ல இவங்க ஏன் இப்படி சிரிக்கிறாங்க என நினைத்தவனோ வெளியே சென்றான்.

"டேய் மஹா " என்றவாறே அவன் செல்ல அவன் அழைப்பைக் கேட்டதும் அவனை நோக்கி பார்வை செலுத்தியது அவர்கள் ஆசையாய் வளர்த்து வரும் காளை.
மஹாலிங்கம் அதன் பெயர்...
மற்றவர்களுக்கு லிங்கம் என்றால் இவனுக்கு மட்டும் மஹா...

அதுவும் இவன் குரலைக் கேட்டதும் பரவசத்தில் கத்த ஆரம்பித்துவிடும்.
என்றும் போல் இன்றும் கத்த ஓடி அதனருகில் சென்றவனோ "மஹா என் டார்லிங் தூங்குறா டா...கத்தி எழுப்பி விட்டுடாத " எனக் கூற
அதுவோ உடனே அமைதியாகிவிட்டது.

"அது குட் பாய்" என்று அதற்கு முத்தம் கொடுத்தவன் "எங்க டா உன் ஆளு அம்புவைக் காணோம்...அப்பா கூட்டிட்டு போயிட்டாரா " எனக் கேட்க அவன் வயிற்றில் தன் தலையை அங்கும் இங்கும் ஆட்டி பாவமாய் முகத்தை வைத்து ஆம் என்று கூறியது.

"சோ சேட்" என்றவனோ அதன் காதருகே ஏதோ ரகசியம் பேச இப்போது சந்தோஷமாக தலையாட்டியது.

"கேடி மஹா " என்றவனோ எப்பொழுதும் தான் உடற்பயிற்சி செய்யும் இடத்திற்கு சென்று தன் வேலையை ஆரம்பிக்க அவனின் நாயகியோ பெட்சீட்டை இன்னும் இழுத்து போர்த்திக் கொண்டு தன் பணியை தொடர ஆரம்பித்தாள்(அதாங்க தூங்குறது)...

நாயகியை பற்ற சொல்ல வேண்டுமானால் சரியான சோம்பேறி,சமையலில் அ ஆ கூட தெரியாது,கும்பகரணிற்கு மிகவும் கடுமையாக போட்டி கொடுப்பவள்...
இவளுக்கு தெரிந்த ஒன்றே ஒன்று,
தூங்கணும்
தூங்கிட்டே இருக்கணும்
தூங்கிட்டு மட்டும் தான் இருக்கணும்...
ஆனால் அவனோ ஆறு மணி நேர உறக்கம் அதற்கு மேல் தூங்கினால் இருபத்தி நான்குமணி நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிவிடும்
என்பான்.
இவளின் அகராதியில் விடியற்காலை என்பதே பதினொரு மணி தான்...
சூரிய உதயத்தை கண்டதே இல்லை...
அதுவே கடுப்பாகி மேற்கை நோக்கி வாக்கிங் ஆரம்பித்த பிறகு தான் இவள் எழுந்திருப்பாள்.

ப்ரெஸ்ஸாகி முடித்ததும் கைகளில் காபி இருக்க வேண்டும்.
அது குடித்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு பசித்தால் உண்பாள்.

சூரியன் தன் அனைத்து பற்களையும் காட்டி இளிக்க கைகளை நீட்டி நெட்டை முறித்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவளோ அப்படியே கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

உட்கார்ந்துக் கொண்டே தூங்கும் வித்தையை இவள் தான் கண்டறிந்தது போல செவ்வனே செய்ய அந்த அழகை அவன் குடும்பமே ரசித்துக் கொண்டிருந்தது.

நிக்கி தான் பூனைக்குட்டி போல் உள்ளே எட்டிப் பார்த்தாள்.
அவளின் புது அத்தை உட்கார்ந்து கொண்டே தூங்குவதை யோகா செய்கிறாள் என தப்பாக கணித்து

"கவு மாமா அத்தா யோகா பண்ணுறாங்க " என கௌதமிடம் ரகசியம் கூறுவதாய் கத்த அய்யோ என்று அவள் வாயைப் பொத்தியவனோ திரும்பித் தன் குடும்பத்தைப் பார்த்து அனைத்துப் பற்களையும் காட்டினான்.

சிறிது நேரத்திற்கு முன்பு தான் அவள் குளித்துவிட்டாள் இப்போது வந்துவிடுவாள் என்று கூறியிருந்தான்.
இப்படி நிக்கி உண்மையை போட்டு உடைப்பாள் என்று அவன் எப்படி அறிவான்...
பற்களைக் கடித்துக் கொண்டே
"உனக்கு நான் வாங்கிக் கொடுத்த சாக்கிக்கு மாமாக்கு எவ்வளவு பண்ண முடியுமோ அவ்வளவு சிறப்பா பண்ணிட்ட " என்று முணுமுணுத்தவனோ
"அவ தினமும் அதிகாலைல எழுந்து யோகா பண்ணுவா மா " என்று கூறி சமாளிக்க

"அதிகாலை பதினொரு மணிக்கா கவ்வு  " என்ற தன் அக்காவிடம்
"நீயுமா " என்ற ரேஞ்சில் அவன் பார்க்க

"நிக்கி வா நம்ம அண்ணி யோகா பண்ணுறதை பார்ப்போம்" என்றவாறு நிக்கியைத் தூக்கிக் கொண்டு கௌதமின் தம்பி அஜித் செல்ல "டேய் அஜி " என்ற கௌதமின் குரலெல்லாம் காற்றோடு தான் கரைந்து போனது.

அஜி , நிக்கி ,நிக்கியின் அம்மா மணிமேகலை, கௌதமின் அம்மா பூங்கோதை, அப்பா முத்தரசு  என குடும்பமே செல்ல இறுதியில் இவன் தான் அவுட் என்பது போல் ஆகிவிட்டது.

உட்கார்ந்து கொண்டே உறங்கிக் கொண்டிருந்தவளை இவர்களெல்லாம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்க நிக்கியும்,அஜியும் ஒரு படி மேலே போய் மெத்தையில் கன்னத்திற்கு கை கொடுத்து அமர்ந்துவிட்டனர்.

உள்ளே நுழைந்த கௌதம் இருவரின் நிலையைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டே அஜியின் முதுகில் ஒன்று போட ஆஆ என்று அலற வந்தவனின் வாயை   மூடினார் பூங்கோதை.

"அவ தூங்குறா டா...ஸ்ஸ்உஊ" என்றவர் அவனை இழுத்துக் கொண்டு தாங்கள் நின்றிருந்த இடத்தில் நிற்க வைக்க கௌதம் தான் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

ஐந்து ,பத்து என நிமிடங்கள் கழிந்துக் கொண்டே இருக்க
"மேகல " என்ற நிக்கியின் அப்பா குரலில் தான் நாயகி கண்களை விழித்தாள்.
அதுவும் சடாரென்று பயந்து கண்களைத் திறந்தவள் எதிரில் இருந்தவர்களைக் கண்டு இன்னும் பயந்து கௌதமை தேட அவனோ அவளருகில் அவஸ்தையாய் நெளிந்துக் கொண்டிருந்தான்.

"அறிவுகெட்ட மனுசா இப்படியா கத்துவ" என மேகலை கத்திக் கொண்டே வெளியேற இவளோ புரியாது அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அத்தா நீ ஏன் இவ்ளோ நேரம் யோகா பண்ண? அதுவும் ஓரே யோகா... உங்களுக்கு வேற பண்ண தெரியாதா?" என்ற நிக்கியின் கேள்விக்கும் புரியாமல் அவள் கௌதமைப் பார்க்க அவனோ ஏற்கனவே அனைவரையும் பார்வையாலே கெஞ்சி வெளியே அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தான்.

வருவின் அருகில் வந்த பூங்கோதை அவள் தலையை வருடியவாறே
"காபியா டீயா கண்ணு " எனக் கேட்க "காபி அம் என்றவள் அத்தை" எனக் கூற அவள் செயலில் சிரித்தவர் "அம்மானே கூப்பிடு டா " என்று கூறி வெளியேறினார்.

இப்போது கௌதமை நோக்கி பார்வை செலுத்த அவனோ அவளைத் தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்களின் வீட்டில் நிக்கி உட்பட ஐந்து மணிக்கே எழுந்துவிடுவார்கள்.
உடல்நிலை சரியில்லை  என்றால் கூட மதிய நேரங்களில் தூங்க யோசிப்பார்கள்.
இவள் பனிரெண்டு வரை தூங்கியும் அதை பெரிது படுத்தாமல் அவள் தலையை வேறு வருடி காபியா டீயா என கேட்கும் அளவு இவள் என்ன வசியம் செய்தாள் அனைவரையும் என்பது போல் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"சீனியர் என்ன நடந்துச்சு " என அவள் கத்த அதில் தெளிந்தவன்
அவள் வருந்துவாளோ என நினைத்து பாதி மறைத்து ஏதோ சத்தம் கேட்டு உள்ளே வந்தோம் எனக் கூற "அப்போ டார்லிங் சொன்னது ?"
என்றவளிடம்
"அய்யோ மாமியாரே பெத்ததும் பெத்தீங்க இம்புட்டு அறிவா பெத்துருக்க கூடாது உங்க இரத்தினத்தை " எனப் புலம்பியவாறே மறுபடியும் அனைத்துப் பற்களையும் காட்ட
அவனை முறைத்தவாறே அவள் பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

"இவரு ஏன் இப்படி சிரிக்கிறாரு? அழகா வேற இருக்காரே" என புலம்பிய படியே பல்துலக்க ஆரம்பித்திருந்தாள்.

அவள் சென்றதும் சிரித்துக் கொண்டே பெட்சீட்டை மடித்து மெத்தையை ஒழுங்குபடுத்தியவன்
அவளுக்கான காபியை வாங்க அன்னையிடம் சென்றான்.

"அம்மா சர்க்கரை கொஞ்சம் தூக்கலா?" கூறிக்கொண்டே வந்த தன் மகனைப் பார்த்து சிரித்தவர்
"சம்பந்தி கிட்ட எல்லாமே கேட்டுட்டேன் தம்பி...
வரு கண்ணுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுனுலாம்" என்று கூறி புன்னகைத்தபடியே காபி கலந்தவரை அணைத்து அவர் தோள்பட்டைமீது தாடையை வைத்துக் கொண்டவன்
"ஏன் மா நீங்க இவ்ளோ ஸ்வீட்டா இருக்கீங்க?" என்று  கேட்க
அவரோ " எவ்வளவாம்" என்று கேட்டு சிரித்தார்.

"ம்மா " என்று சிணுங்கியவனிடம்
"ஏன் தம்பி உனக்கும் வரு கண்ணுக்கும் ஒரு பத்து மாசம் பழக்கம் இருக்குமா? அதுலையே அவ தான் உனக்கு முக்கியம்னு முடிவு பண்ணி எங்ககிட்ட பக்குவமா பேசி சம்மதிக்க வெச்சு பொண்ணு தரமாட்டோம்னு அடிக்காத குறையா திட்டி அனுப்புன அவங்க வீட்டுகாரங்க கிட்ட பொறுமையா பேசி சம்மதிக்க வெச்சு இப்போ கல்யாணம் பண்ணியிருக்க...
அந்த பொண்ணை எந்தளவு உனக்கு பிடிச்சிருக்கணும்.
உனக்கு பிடிச்ச எல்லாமே எங்களுக்கும் பிடிக்கும் தம்பி.
நம்ம மேகலை மாதிரி தானே வரு கண்ணும்.
மேகலையை நான் நடத்துற மாதிரி வருவையும் நடத்துனா கண்டிப்பா நான் மாமியாரா தெரியாம அம்மாவா தெரியுவேன்...
சண்டையும் வராது.
நம்ம குடும்பம் எப்போவும் இதே போல ஒற்றுமையா இருக்கும் " என்றவரை இறுக்கி அணைத்துக் கொண்டவன்
"ஆனாலும் மாமியார் மருமகள் சண்டையை என்னால பார்க்க முடியாம போயிடுமே " என்று கூறி போலியாக வருத்தப் பட
"நான் கூட்டிட்டு வரேன் சண்டை போட " என வாலண்டியராய் ஆஜரானான் அஜி.

"அப்படிங்களா தம்பி தோசைக் கரண்டி சூடா தான் இருக்கு எப்படி வசதி ?" என்ற தாயை முறைத்தவன்

"நீங்க ஒரு கண்ணுக்கு பூஸ்ட்டும் இன்னொரு கண்ணுக்கு வரக்காப்பியும் வெக்காதீங்க மா"என்று டைலாக் பேசியவனைக் கண்டு கௌதமும், பூங்கோதையும் சிரிக்க அவன் இன்னும் கடுப்பானான்.

"வரு தங்கமான பொண்ணு டா...
இன்னைக்கு கூட பாரு அவ என்னை அம்மானு தான் கூப்பிடவந்தா...எந்த மருமக தான் மாமியாரை  அப்படி கூப்பிடுவா?"என்ற தாயிடம்

"அதுக்கு தான் நான் ஒரு பொண்ணை கூட்டிட்டு வரேனு சொன்னேன் " என்று மறுபடியும் அஜி கூற  கோதை தோசைக் கரண்டியை எடுத்ததும் "குணமா வாய்ல சொல்லணும் " என்றவாறே
வெளியே ஓடிவிட்டான்.

அஜியின் சேட்டையில் சிரித்தவர் காபியை கௌதமின் கைகளில் கொடுக்க அவனும் புன்னகை முகமாக அதை வாங்கிக் கொண்டு அவனின் நவியைத் தேடிச் சென்றான்.

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro