விவாதரத்து...
உன் பற்றிய சிந்தனைகள்
மில்லியனில் தொடர்கிறது..
மணிக்கொரு ஏக்கம் தந்து
கண்ணின் கடல்மட்டம் உயர்கிறது..
எண்ணற்ற எண்ணங்கள்
என் நூலில் நான் வரைய
எழுத்துக்கள் போதவில்லை!
என் நெஞ்சே உனை பாட...
பக்கங்கள் பல கோடி
என் மனம் என்னும் புத்தகத்தில்
மொத்தமும் உன் பெயர்தானே!
நித்தமும் நீதானே....
அன்பொன்று புரியாது
அம்பொன்று எய்தாயே...
ஆணவங்கள் துணையோடு
ஆவணங்கள் எடுத்தாயே...
முதல் பார்வையில் சந்தித்த
முன் கோபம் உணர்ந்தேனே!
சூடான சொல் ஒன்று
சொன்னாயே கல் மனமே!
எனை வீசாதே என் மனமே
உன் கையில் தான் தினமே!
வேஷமிட்டு விவாதித்தும்
பாசம் மட்டும் படர்கிறதே...
தீ ஒன்று தென்றலாகியும்
பனிக்குளிர் போல் உறுக்கியதே...
பந்தமெனும் மணச்சுவையோ
அவைச்சொல்லில் புரியாதே!
காதலெனும் கடல் அலையை
கையெழுத்து நிறுத்தாதே!
கத்திமுனை பார்வைகளும்,
காந்தசக்தி உறுதிகளும்,
நித்தம் நிறைவாய் கொண்டாலும்!
துணைக்கு சமம் இல்லையே..
காலை கனவுக்கு சொந்தமும் துணைதானே!
உணவுண்ணும் வேளையிலும்
துணை நினைவு தானே...
கருமேகம் சூழ்ந்தாலும்
களைந்து விடும் பாதியிலே!
சிறு நேரம் மறைந்தாலும்
அழியாத அன்பொன்று வானமே!
சுற்றி வரும் நிலவுபோல
துணை ஒன்று வேண்டுமே!
ஆறுதல்கள் ஆயிரங்கள்
யார் யாரோ சொன்னாலும்...
துணை அவரின் அரவணைப்பே
இளம் சூடான இதம் தானே...
மனம் சேரும் பந்தங்கள்
இறைவனது எழுத்துக்களே!
பழிச்சொற்கள் பொழிந்தாலும்
பாசம் அது தீராதே!
மனதொன்றை ரணமாக்க
புது ஆயுதம் தினந்தோறும்,
கண்மூடி எடுத்தாயோ!
விழி அழகுக் கலைமானே!
அன்பென்ற சிறு ஆயுதம்
கண்ணொன்றில் வைத்தாலும்,
சிறகுகளாய் சரிவேனே!
பூ மழைபோல் பொழிவேனே....
என்றும் அன்புடன்
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro