ஷிவனேஷ் ஷிவா: 45
பத்து நிமிட பயணத்திற்குள்ளாகவே ஷிவானியின் பள்ளியை அடைந்திருந்தனர் நம் நாயகர்கள். சசியைத் தொடர்ந்து ஷிவன்யா கீழே இறங்கியதும் யாதேஷ் வெளியே வந்து கதவைத் திறந்து ஷிவானியைத் தூக்கிக் கொண்டான்.
அவர்களிடம் நெருங்கிய ஷிவன்யா தன் மகளின் சீருடையை ஒரு முறை சரி பார்த்துவிட்டு அவள் கன்னத்தில் குட்டி முத்தம் பதித்தாள்.
" உள்ள போலாமா ஷிவானி? "
" போலாம் மம்மி! அப்பா வாங்க! " என ஷிவானி ஏதோ ஒரு திசை நோக்கி கை காட்ட, ஷிவன்யாவும் அவனிடம் மென்மையாக தலையசைத்துவிட்டு நடக்கவும் ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் அவளைப் பின் தொடர்ந்தான் அவன்.
யாதேஷின் இதயம் எங்கோ சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. காரணம் கேட்டால் தெரியாது என்பதே அவனுக்கு கிடைத்த ஒரே பதில்.
குட்டி குட்டி குழந்தைகள் எண்ணற்றோர் பெற்றோருடன் அங்குமிங்கும் சிரித்துக் கொண்டும் அழுது கொண்டும் ஒரு சில குழந்தைகள் அவர்களின் தாய் தந்தையின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு " நான் போ மாட்டேன் ! வீட்டுக்கு போனும் ம்மா! அப்பா! " என அழுதுபுரண்டு கொண்டிருந்தனர்.
ஷிவன்யா அழும் குழந்தைகளை பார்த்துவிட்டு சற்று பீதியோடு அவள் பிள்ளையை திரும்பி பார்த்தாள். அழும் குழந்தைகளை கண்டு இப்படித்தான் ஒருவேளை இருக்க வேண்டுமோ என நினைத்து அழுதுவிடுவாளோ என்ற பயத்தில் இவள் இருக்க, இன்னமும் தன் தந்தையிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த ஷிவானிக்கு அவை எதுவும் மதியில் பதியவில்லை.
" சோ என் பொண்ணு வெரி ஸ்ற்றாங் அப்டி தானே? "
யாதேஷ் கேட்ட கேள்விக்கு பலமாய் தலையாட்டிய ஷிவானி கண்கள் சிரிக்க பதில் கூறினாள்.
" ஆமாப்பா! நான் வெரி ஸ்ட்டாங்கு! "
" என் செல்லம் பாப்பா நீங்க, இது தான் பாப்பாக்கு அப்பாவோட கிஃப்ட்! " என அவன் முன்பே வாங்கி வைத்திருந்த தேங்கா பன்னையும் பிஸ்கட்டையும் எடுத்துக் காட்ட பின் சொல்லவா வேண்டும்?
ஷிவானியின் மொத்த கவனமும் அவள் அப்பா மற்றும் தேங்கா பன் மீது நிலைத்தது.
" ஷிவானி! "
திடீரென்று இவர்களின் பின்னிருந்து கேட்ட ஆர்யாவின் குரலில் ஷிவன்யா புன்னகையோடு திரும்பி ஓடி வந்த ஆர்யாவை வேகமாக தூக்கிக் கொண்டாள்.
" அத்த! "
" ஆர்யா! ஸ்கூல் வந்தாச்சா? அம்மா எங்க? " சசியும் அவனிடம் கொஞ்சி பேச, சிரித்துக் கொண்டே ஆர்யா யாதேஷை தாண்டி கை காட்டினான்.
அப்போதே யாதேஷை கவனித்த ஆர்யா கண்களை விரித்து " யாது மாமா— " என சொல்லவருவற்குள்ளாக சசி படக்கென அவனை அவள் புறம் திருப்பிக் கொள்ள சரியாக சூர்யாவும் அவர்களை நெருங்கி இருந்தாள்.
" வாங்க சூர்யா! "
யாரிந்த புது வரவு என எதற்சையாக திரும்பிய யாதேஷ் அவர்களை புன்னகையோடு நெருங்கிய சூர்யாவை கண்டு அப்படியே நிற்க, சசி சூர்யாவை மகிழ்ச்சியோடு வந்து கட்டிக் கொண்டாள்.
" அண்ணி! என்ன அண்ணி தனியா வந்து இருக்கீங்க? அண்ணன் வரலையா? அப்டீனா நீங்க எங்க கூடையே வந்து இருக்கலாம்ல?! நீங்க அண்ணன் கூட டூயட் பாடீட்டு வருவீங்கன்னு தான் நாங்க உங்கள கூப்டல காலைல, " என சசியே கேள்வியையும் அடுக்கிக் கொண்டு சூர்யாவை உலுக்கியபடி அவளே பதிலும் கூறிக் கொள்ள, சூர்யாவை முகவாயை தோளில் இடித்துக் கொண்டாள்.
" ஆமா அப்டியே உன் அண்ணன் என் கூட டூயட் பாடீட்டு தான் மறுவேலை பாப்பாரு. ஏன் சசி நீ வேற? அவங்க காலைலயே எங்கையோ வெளிய கிளம்பீட்டாங்க, " என சூர்யாவின் அலுப்பான பதிலில் ஷிவன்யா நக்கலாக புன்னகைத்தாள்.
ஷிவன்யா " இருந்தாலும் ஹிட்லர் ஒரு லவ்வர் பாய்-ஆ இருப்பாருன்னு நான் நினைச்சே பார்க்கல சூர்யா... எப்டி அந்த ஹிட்லர லவ் பண்ணீங்க நீங்க? "
" ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட மா கேள்விய நீ, " இம்முறை நக்கலாக சிரிப்பது சூர்யாவின் முறை ஆனது.
" ஹிட்லர் ஹிட்லராவே இருந்துட்டு சைடுகேப்-ல ரோமியோ வேலை பார்த்து உங்கள மடக்கீருக்காருன்னா யாரு நம்புவா? "
ஷிவன்யா கேட்டது தான் தாமதம் சூர்யா கையை தலையில் வைத்துக் கொண்டாள்.
" உங்கண்ணன் ரோமியோவும் இல்ல லவ்வர் பாய் உம் இல்ல! அவன கரக்ட் பண்ண நான் பட்டப்பாடு எனக்குத் தான் தெரியும். எருமைமாடு மேல மழை பேஞ்ச மாதிரி நின்னவன நானும் ஏன் லவ் பண்ணேன்னு எனக்கும் இன்னும் தெரியல, "
சூர்யா தலையில் அடித்துவிட்டு பொங்கி எழ, அவளின் ஆவேசத்தில் சிரித்துக் கொண்டிருந்த சகோதரிகளை கலைத்தது யாதேஷின் அமைதியான குரல்.
" ஹிட்லர்... "
மெல்ல காற்றுக்கே கேட்காதது போல் மெதுவாய் அந்த பெயர் அவன் இதழை விட்டுப் பிரிய, அப்போதே ஷிவன்யாவின் முழு கவனமும் சூர்யா வந்தது முதலாக சிலை போல் சமைந்திருந்த யாதேஷின் மீது பதிந்தது.
" ஏங்க... என்னாச்சு உங்களுக்கு? " ஷிவன்யா சுற்றத்தை மறந்து யாதேஷை நெருங்க, அவனுக்குத் தான் சுற்றத்திலிருந்த அனைத்தும் மறைந்து போயிருந்தது.
நிலைகுத்தி நின்ற யாதேஷின் கண்கள் திடீரென மருள, அவன் கண்களை விழித்து மூடிய ஒரு நொடியில் " ஷிவா! " என்ற ஒரு பெண்ணின் அழுகுரல் அவன் செவிமன்றத்தைத் துலைத்துவிட்டுச் சென்றது.
ஷிவன்யா " மாமா என்னப் பாருங்க! "
திடீரென கேட்ட ஷிவன்யாவின் கத்தலில் படக்கென விழித்த யாதேஷ் பேந்தபேந்த முளிக்க, அசைவில்லாத சிலை போல் கண்கள் மூடி நின்று சற்று நேரத்தில் அவளுக்கு மாரடைப்பே கொடுத்திருந்தவன் இப்போது தெளிவில்லாமல் முளித்தப் பிறகு தான் ஷிவன்யாவிற்கு மூச்சே சீராக வந்தது.
" என்னங்க ஆச்சு உங்களுக்கு?! இத்தன பேரு கூப்ட்டுட்டு இருக்கோம் எதுவுமே கேட்காத மாதிரி நிக்கிறீங்க? "
யாதேஷ் " கூப்ட்டீங்களா? "
மூன்று பெண்களும் இவனை கண்டு இப்போது விழித்தனர். பாதி பள்ளியே இவர்களை திரும்பி பார்த்துவிட்டு செல்வதைப் போல் மாற்றி மாற்றி இவன் பெயரை இவர்கள் ஏலம் விட்டிருக்க, இவன் அசால்ட்டாக " கூப்ட்டீங்களா? " என கேட்டு அவர்களின் வாயை அடைத்துவிட்டான்.
ஆனால் அந்த மயக்கம் ஒரு சில வினாடிகளே நீடித்தது. தயக்கத்தோடே யாதேஷ் சூர்யாவை நோக்கித் திரும்ப, அவன் கண்களில் தெரிந்த தயக்கத்தை கண்டவளாய் ஷிவன்யாவே முன் வந்து அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள்.
" இவங்க என் அண்ணனோட வைஃப் சூர்யா. அவங்க பையன் ஆர்யா. "
" ஒ...ஹ்... " என இழுத்துக் கொண்டே இருந்த யாதேஷ் பின் எதையும் யோசிக்காமல் படாரென அவனுக்குத் தோன்றியதை கேட்டுவீட்டான். " உங்களுக்கு ஷிவான்னு யாரையாவது தெரியுமா? "
சூர்யா படாரென திரும்பி ஷிவன்யாவை பார்க்க அவள் யாதேஷைத் தான் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எந்த ஷிவாவை கேட்கிறான் என தெரியாமல் சூர்யா " அது...வந்து... அஹ் ஷிவா... " என இழுக்க, அவர்களை தக்கசமயமாக காகாக்கவே பள்ளி மணி சத்தமாக அடித்தது.
அந்த சத்தத்தில் ஏதோ தூக்கத்திலிருந்து விழித்தது போல் அதிர்ந்து தலையை சிலிப்பிக் கொண்ட யாதேஷ் தன் சுற்றத்தை சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியாக ஷிவன்யாவின் மீது கண்களை பதித்தான்.
" யமுனா நான்... "
அவன் தயக்கத்தையும் அறியாமையையும் முன்பே அறிந்தது போல அலட்டாமல் வந்தது ஷிவன்யாவின் அடுத்த வாக்கியம்.
" ஆல்ரெடி டைமாச்சுங்க... பாப்பாவ க்லஸ்-ல விட்டுட்டு நாம கிளம்பலாமா? நமக்கும் லேட் ஆகுது. "
யாதேஷ் தலையாட்டியது தான் போதும் அடுத்த வேலையை ஷிவானி கையில் எடுத்துக் கொண்டாள்.
ஷிவானி " அப்பா அப்பா என் க்லஸ் போலாம் போலாம்! "
யாதேஷ் அவளது ஆர்வத்தில் கலைந்தவனாய் வேறெதையும் சிந்திக்காமல் " சரி டா தங்கம், " என சிரித்துக் கொண்டே அவள் காட்டிய திசையில் திரும்பினான்.
மற்ற மூவரும் ஒரு பெருமூச்சோடு அவர்களை பின் தொடர, ஆர்யா எதையும் அறியாமல் சசியை கொஞ்சிக் கொண்டே அவர்ளின் வகுப்பறையை சென்றடைந்தான்.
யாதேஷ் தன் மகளை கீழே இறக்கிவிட்டதுமே ஷிவானி திடீரென அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொள்ள அவளை குனிந்து பார்த்த நம் நாயகன் ஒரு புன்னகையோடு நிமிரவும் சரியாக அந்த வகுப்பின் ஆசிரியர் இவர்களை நோக்கி இன்முகத்தோடு வரவும் சரியாக இருந்தது.
" குட் மார்னிங் ஷிவானி அண் ஆர்யா! " என அந்த ஆசிரியர் உற்சாகமாய் அவர்களை அழைக்க, ஆர்யா உடனே பதில் கொடுத்தாலும் ஷிவானி படக்கென யாதேஷின் பின் ஒழிந்து கொண்டாள்.
ஷிவானி அவன் முட்டிக்குப் பின் இருந்து எட்டிப் பார்க்க, யாதேஷும் அந்த ஆசிரியரை பார்த்து விழித்தான்.
இப்போது ஷிவன்யா அந்த ஆசிரியரை கண்டு புன்னகைத்தாள்.
" குட் மார்னிங் மேம். பாப்பா கொஞ்சம் முதல்ல அப்டி இருப்பா, ஆனா போகப்போக பழகீடுவா... "
அந்த ஆசிரியர் அழகான புன்னகையோடு தலையசைத்தார். " ஒரு பிரச்சனையும் இல்லங்க. இங்க இருக்குற பாதி குழந்தைங்க கொஞ்ச கொஞ்சமா தான் பழகுவாங்க. நீங்க பயப்புடாம குழந்தைய விட்டுட்டுப் போகலாம். "
இவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே சசியிடம் இருந்து இறங்கி ஷிவானியிடம் வந்த ஆர்யா அவள் கையைப் பற்றிக் கொண்டு அவளை முன்னே அழைத்து வந்தான்.
ஆர்யா " அத்த ஷிவானிய நான் பாத்துக்குறே, "
யாதேஷ் ஆச்சர்யமாய் அவர்களை கண்டு சிரிக்க, புன்னகையோடு அவர்களின் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்த ஷிவன்யா இருவரின் நெற்றியிலும் முத்தம் வைத்தாள்.
" சரிங்க பட்டூஸ். சேஃபா இருங்க ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுறோம். சரியா? "
ஷிவானியும் ஆர்யாவும் டிங்டிங்கென தலையை ஆட்டிவிட்டு அவள் இரு கன்னத்திலும் இதழ் பதித்துவிட்டு சூர்யா சசி மற்றும் யாதேஷிற்கும் டாட்டா காட்டிவிட்டு உள்ளே சென்றனர்.
நாழ்வரும் வகுப்பிற்குள் செல்லும் குழந்தைகளை பார்த்தபடி வாசலில் நிற்க, ஏதோ ஒரு பெயர் தெரியாத உணர்வில் திழைத்திருந்த நம் நாயகனின் கண்கள் அவன் மகள் மீதே நிலைத்திருந்தது. பெயர் தெரியாத ஆனந்தம். ஆனால் அதுவும் நன்றாகத் தான் இருந்தது.
" அய்யோ ஆர்யா இரி! " என கத்திய ஷிவானியின் கூச்சல் நம் நாயகனை ஈர்க்க, " அப்பா! " என கத்திக் கொண்டே அவனிடம் ஓடி வந்தாள் அவன் மகள்.
" என்னாச்சு பேபி? "
ஷிவானி கை காட்டி அவனை கீழே குனிய சொல்ல, யாதேஷ் அவள் உயரத்திற்கு தரையில் முட்டுக் கொடுத்து அமர்ந்ததும் அவன் கன்னத்தில் அழுந்த இதழ் பதித்துவிட்டு " டாட்டாப்பா! " என சிரித்தாள்.
யாதேஷின் கண்கள் பட்டென சிரித்தது. அவன் அழகாய் அந்த புன்னகையோடு தலையசைக்க, ஷிவானியின் தலை மறையும் வரை அவளைப் பார்த்திருந்தவனை நம் நாயகி இரசித்துக் கொண்டிருந்தாள்.
சசி மற்றும் சூர்யா அவர்களுக்கு தனிமை அளித்துவிட்டு முன்பே கிளம்பிவிட இன்னமும் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு கிளம்ப மனமின்றி நின்ற கணவனைப் பார்த்தாள் ஷிவன்யா.
" பாஸ் போலாமா ஆஃபீஸ்க்கு? "
யாதேஷ் அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.
" ஏன் யமுனா எனக்கு இப்டி ஃபீல் ஆகுது? ஏதோ...ஜெயிச்சிட்டு வந்த மாதிரி... "
" ஹ்ம் தெரியலையே... உங்களுக்கு என்ன தோனுது? "
" ஹ்ம்... தெரியல நல்லா இருக்கு. சரி விடுங்க நாம கிளம்பலாம். நானே உங்க ஃபர்ஸ்ட் டே-வ ரொம்ப லேட் பன்றேன். "
" எனக்கு நோ ப்ராப்லம். வெயிட் பண்றது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல. நீங்கன்னா எவ்வளவு வேணா பண்ணலாம். "
யாதேஷ் அவளை புரியாது திரும்பி பார்க்க, ஷிவன்யா எதுவும் கூறாமல் காரின் கதவை திறந்து முன் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.
" ஏங்க யமுனா எனக்கு புரியல, என்ன சொன்னீங்க? " என காரில் ஏறியதுமே யாதேஷ் கேட்க, ஷிவன்யா தோளை சாதாரணமாக குலுக்கினாள்.
" நான் என்ன சொன்னேன்? லேட்டானா பரவாயில்ல, கம்பெனி ஓனரே கூட இருக்குறப்போ என்ன கவலை? பரவாயில்ல-ன்னு சொன்னேன். "
யாதேஷ் " அப்டியா சொன்னீங்க? "
" ஆமா அப்டி தான் சொன்னேன். உங்களுக்கு எப்டி கேட்டுச்சு? "
" அஹ்... நீங்க எனக்காக ஏதோ வெயிட் பண்ணலாம்னு சொன்ன மாதிரி...கேட்டுச்சு. "
" ம்ம்ம் மே பி அப்டி சொல்லீருப்பனோ என்னவோ... " என ஷிவன்யா அவளது புன்னகையை மறைக்க இயலாமல் ஜன்னல் புறம் தலையை திருப்பினாள்.
யாதேஷின் குறும்பு புன்னகை அவன் கண்களில் மிளிர்ந்தது. உதட்டோரம் உறைந்த அவனது மென்னகையோடு அந்த மகிழுந்து யாஸ் நிறுவனத்திற்குள் நுழைய, ஷிவன்யாவின் புன்னகை மறைந்தது.
யாதேஷின் கவனம் அனைத்தும் அவள் எதிர்பார்த்தது போலவே யாஸ் நிறுவனத்தின் வாயிலிலே ஆரவோடு பேசிக் கொண்டிருந்தவன் மீது நிலைத்தது.
" இதோ வந்துட்டான் டா ஒருவழியா... " என்று ஆரவ் பெருமூச்சோடு காரை நோக்கி வர, முதலில் வேகமாக கீழே இறங்கிய ஷிவன்யா ஆரவிடம் விரைந்து வருவதற்குள் பொருமையாக வெளியே வந்த யாதேஷின் முன் சென்றிருந்தான் அவன்.
யாதேஷ் தன் முன் வந்து நின்றவனை அமைதியாக நிமிர்ந்து பார்த்தான்.
" ஹலோ யாதேஷ். ஐம் ஷிவனேஷ் ஷிவா. "
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro