வெளிவரும் உண்மை: 18
" என்ன சொல்ற ஷிவா?? "
அத்விகாவின் குரலில் இருந்த அமைதி ஷிவன்யாவின் மனதில் இல்லை. ஒரு பெருமூச்சோடு தன் நெஞ்சின் மீது தலைவைத்து உறங்கும் தன் சேயை நோக்கினாள்.
" ஆமா அத்வி... அவரு அன்னைக்கு சாகல. அவங்க சொன்னது உண்மை தான்... "
" யாதேஷ் சீனியர எங்க பார்த்த நீ? "
ஷிவன்யா மெதுவாய் அன்று நடந்த அனைத்தையும் தன் தோழியிடம் ஒப்பித்துவிட்டு மெத்தையில் ஷிவானியை மென்மையாய் படுக்க வைத்துவிட்டு எழுந்தாள்.
" அதனால நீ ஓடி வந்துட்டா மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா? வேலைக்கு என்ன பண்ணுவ? ஷிவா, தயவுசெஞ்சு பெங்கலூருக்கு திரும்ப வருவேன்னு மட்டும் சொல்லாத! யாரப் பார்த்தும் பயந்து ஓடுற பழக்கம் உன்னோடது இல்ல ஷிவா! " என அத்விகா லேசான கோவத்தோடு கூறியது ஷிவன்யாவிற்கு மனதில் சுருக்கென ஒரு கோவத்தை கிளறிவிட்டது.
" நான் யார பார்த்தும் ஓடி ஒளியிற பொண்ணு இல்ல! "
அத்விகா " இப்போ நீ வேற என்ன செஞ்சிட்டு இருக்க?! " அவளின் மறுகேள்வி ஷிவன்யாவின் வாயை அடைத்தது. " நீ ஷிவானிக்காக தான் இவ்வளவும் பன்றன்னு எனக்குத் தெரியும் ஆனா அதுக்கு அவசியம் இல்ல டி. ஷிவானி நீ சுமந்து பெத்த உன்னோட பொண்ணு. அவள உன்கிட்டேந்து யாராலையும் பிடுங்கீட்டுப் போக முடியாது டா மா... " என அவள் இறுதியாக முடித்தபோது ஷிவன்யாவின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.
" அவங்க நெனச்சா முடியும் அத்வி... அவங்க—அவங்களுக்கு ஷிவானி பத்தி தெரிஞ்சா— "
அத்விகா " ஷிவா நீ தான் டி அவளோட அம்மா. உன்ன மீறி யாராலையும் எதுவும் செய்ய முடியாது. நான் சொல்றத கேழு டி. வேலைக்கு நீ போகனும். நீ இதுக்கு மேலையும் பயந்து ஓடக்கூடாது. இல்லைன்னா நான் ஆரவ் சீனியருக்கு ஃபோன் பண்ணி—
ஷிவானியின் கண்கள் படாரென விரிந்தது. " அடியேய்! அப்படிமட்டும் நீ எதாவது பண்ணீன்னா அவ்வளவு தான் டி நீ! உன்ன— "
அத்விகா நக்கலாக சிரித்தாள். " நீ பெங்கலூரு வந்து என்ன சூப்பு வைக்கிறதுக்குள்ள அங்க எல்லாரும் உன்ன ரௌண்டு கட்டீருவாங்க. "
" ம்க்கும் 24 வயசுல தன்னந்தனியா ஒரு குழந்தையோட இங்கேந்து யாருக்கும் தெரியாம பெங்கலூரு வந்தவடி நான். நான் இப்போ என்னோட பொண்ணுக்காக இன்னும் என்ன வேணா செய்வேன். " என ஷிவன்யா கண்களில் ஆழ்ந்த அனலுடன் அழுத்தமாய் கூறினாள்.
அத்விகா " ஆமா தன்னந்தனியா பெங்கலூரு வந்தவளுக்குத் தான் சோறு வைக்கக் கூட தெரியாதே... "
ஷிவன்யா கண்களை சுருக்கித் தன் தோழியை வசைபாட, அத்விகா புன்னகையோடு தொடர்ந்தாள்.
" நினைச்சு பாரு டி... யாதேஷ் சீனியர் உன் கூட இருந்தா—
" கணவு காணாத, அத்வி... அது நடக்காது. அவருக்கு என்ன பத்தி எதுவும் நியாபகம் இல்ல. " ஷிவன்யாவின் குரல் கம்மியிருக்க, பெயரில்லா அந்த துயரம் அவளை மீண்டும் வந்து ஆட்கொண்டது.
" உன்ன நியாபகம் இல்லன்னா— " அத்விகாவை இடைமறித்தாள் நம் நாயகி.
ஷிவன்யா " தயவு செஞ்சு போய் அவருக்கிட்ட பேசுன்னு என்கிட்ட சொல்லாத டி. எந்த முகத்த வச்சிட்டு அவருக்கிட்ட பேச சொல்ற என்ன...?! "
அத்விகா " லூசா ஷிவு நீ?! அவருக்கிட்ட பேசாம வேற என்ன செய்ய போற நீ?! அவருக்கு ஷிவானி—
" நான் அவரோட வாழ்கைல முடிஞ்சு போன அத்தியாயம்... எனக்கு அவரோட வாழ்கைல இடமில்ல. என்னால...என்னால என்னோட சுயநலத்துக்காக ஷிவானி வாழ்கைய வீணடிக்க முடியாது அத்வி. "
அத்விகா " நீ தப்பு செய்ற... யாதேஷ் சீனியருக்கு உன்னப் பத்தி தெரிஞ்சா போதும் டி. எல்லாமே பழையபடி மாறிடும்... "
" எதுவுமே பழைய நிலமைக்கு மாறாது! இன்னும் எல்லாமே தலைகீழா மாறும். ஷிவானிக்கிட்ட அவர காட்டி நான் என்ன சொல்லுவேன்! அவரோட குடும்பத்துல என் புள்ளைய என்னென்ன சொல்லுவாங்கன்னு நெனச்சாலே எனக்கு...எனக்கு பயமா இருக்கு. இது...இது எப்படியோ என்ன சுத்தி இருக்க எல்லாரையும் பாதிக்கும். அவருக்கு...அவருக்கு என்ன வேணா ஆய்டும் அத்வி! " என வெடித்து அழுதவளின் இறுதி கூற்றில் தான் ஷிவன்யாவின் பயம் புரிந்தது அத்விகாவிற்கு.
சில நிமிடங்கள் அங்கே ஷிவன்யாவின் விம்மல்கள் மட்டுமே ஒலிக்க, ஒரு நீண்ட பெருமூச்சின் பின் அத்விகாவின் மென்மையான குரல் அவளை எட்டியது. " நீ எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்ன்னு எல்லாரும் சொல்லுவாங்க. நான் அதை நம்புறேன் டி. அதனால தான் இந்த 4 வர்ஷத்துலையும் எல்லாம் நடந்து முடிஞ்சும் நீ உன் நெத்தியில குங்குமம் வைக்கிறப்போவெல்லாம் எனக்கு உன்னத் தடுக்கத் தோனல... "
ஷிவன்யா தன் தோழி எதை கூற வருகிறாளென புரியாமல் கண்களை துடைத்தபடி என்ன என வினவினாள்.
" உனக்கே புரியும்... அவரு ஷிவானிக்கு யாருங்குறத மட்டும் மறந்துறாத... "
ஷிவன்யா பேசநாவற்று அமைதிகாக்க, அத்விகாவின் ஒவ்வொரு சொல்லும் அவள் மனதில் ஆழப் புதைந்த இனிப்பும் கசப்பும் கலந்த பல்வேறு நினைவுகளை தோண்டி எடுத்தது. அவை அனைத்தும் அவளை வந்து தாக்கிய போது ஷிவன்யாவால் ஒன்று மட்டும் தான் கூற முடிந்தது.
" அத்வி... அவரு தான் ஷிவானியோட அப்பாங்குற விஷயம் உன்னையும் என்னையும் தவிற வேற யாருக்கும் தெரியவே கூடாது. "
யாஸ் நிறுவனம்
யாதேஷ் அப்போதே தன் அலுவலக அறையில் நுழைந்திருக்க, அவனுக்காகவே காத்திருந்தது போல் அந்த கதவைத் திறந்து கொண்டு வந்தாள் ஸ்வேத்தா. அவளை அங்கு எதிர்பார்த்திராத நம் நாயகன் குழப்பத்தோடு அவளை வரவேற்றான்.
" யாதேஷ், அத்த உனக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க. ஹவ் ஆர் யூ நௌ?! "
யாதேஷ் சிறிய தலையசைப்போடு அவளை பேசி அனுப்பி விட முடியாதா என்பதைப் போல் பாவமாய் அமர்ந்திருக்க, ஸ்வேத்தா அவனுக்கு வாய்ப்பளிப்பது போலே தெரியவில்லை.
ஸ்வேத்தா " நாம கண்டிப்பா இந்த ரிசார்ட்டுக்கு போகனும் யாதேஷ்! கடைசியா அங்க எப்போவோ போனது... நாழு வர்ஷம் ஆகியிருக்கும். வா யாதேஷ் நாளைக்கு சட்டர்டே தானே? போய்ட்டு வரலாம்... " என மிகவும் குதூகலமாய் அவளது இருக்கையில் குதித்துக் கொண்டிருந்தாள்.
அவள் கூறும் அனைத்திற்கும் தலையை மட்டும் ஆட்டியடி, தன் மடிக்கணினியில் நம் நாயகியைப் பற்றிய ஃபைலை பார்த்துக் கொண்டிருந்த யாதேஷிற்கு திடீரென்ற ஒன்று அவன் கண்களில் சிக்கியது.
' எஸ்.ஆர் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அன் சைன்ஸ் '
தனக்குப் பரிட்சையமான தன் கல்லூரியின் பெயரைக் கண்ட நாயகன் குழப்பத்தோடு ஷிவன்யா சமர்ப்பித்த அவளைப் பற்றிய கோப்புகளைத் தேடும் போது, ஸ்வேத்தா கூறிய ஏதோ ஒன்று அவன் தலையில் எரியாத பல்பின் ஸ்விட்ச்சை தட்டி விட்டது.
யாதேஷ் " நாழு வர்ஷமாச்சுன்னா சொன்ன? நீ நாழு வர்ஷத்துக்கு முன்னாடி அப்ராட்ல தான இருந்த? "
இவ்வளவு நேரம் எதையோ கூறிக் கொண்டிருந்த ஸ்வேத்தா சடாரென அமைதியாக, யாதேஷ் அவளை நிமிர்ந்து பார்த்தபோது ஸ்வேத்தாவின் கண்கள் அங்குமிங்கும் அலையாடியது.
" அது...இல்ல யாதேஷ்... நான் " என அவள் ஏதோ ஒரு யோசனையில் தடுமாறுவதைக் கண்டு யாதேஷ் பின் தோளைக் குலுக்கிக் கொண்டான்.
" சரி விடு ஸ்வேத்தா... டைமாச்சு பாரேன், நீ வீட்டுக்குப் போ, " என கூறிய அடுத்த நொடி, விட்டால் போதுமென அங்கிருந்து விடைப்பெற்றாள் ஸ்வேத்தா.
ஏதோ ஒரு யோசனையில் விட்டத்தை பார்த்து அமர்ந்திருந்த நம் நாயகன், யாரோ கதவைத் தட்டும் அரவத்தில் நிமிர்ந்தமர்ந்தான்.
பீஏ ராஜ் " ஸர்... ஆரவ் ஸர் டீல் பன்றதா இருந்த க்லைன்ட் வெயிட் பண்ணீட்டு இருக்காங்க... ஆனா ஸர ரீச் பண்ண முடியல ஸர், " என உள்ளே வந்ததும் யாதேஷிடம் கூறிவிட்டு வந்திருக்கும் நிறுவனத்தின் கோப்புகளை அவனிடம் நீட்டினான்.
யாதேஷ் " திவிஷா ஃபாரும்-ல இருந்தா வந்துருக்காங்க? ஓக்கே, நான் ஹண்டில் பண்ணிக்கிறேன் இங்க வர சொல்லுங்க ராஜ், " என தன் இருக்கையில் எழுந்தமர்ந்தான்.
சில வினாடிகளிலே, ராஜ் மீண்டும் அவன் அறைக்குள் இருவரை அழைத்தபடி உள்ளே நுழைந்தான்.
உள்ளே வந்ததும் வராததுமாக " ஹாய் சீனியர்! " என கூதூகலமாய் கத்திக்கொண்டே வந்து, உடன் வந்தவருக்கு மாரடைப்பையே கொடுத்து விட்டான் திவிஷா ஃபாரும்-இன் எம்டி, ரம்யகண்ணன்.
தன் எம்டியோடு சில பல கோப்புகளை புரட்டியேபடி வந்ததால் தலை கூட தரையை விட்டு நிமிராது இருந்துவிட்டு இப்போது கதவை திறந்துவுடன் " ஹாய் சீனியர்! " என கத்திக்கொண்டே ஓடியவனின் அரவத்தில் பக்கென்று வாயிலிலே நின்றிருந்தாள் நம் நாயகியின் அன்புத்தங்கை சசி.
சசி மானசீகமாய் அவளது நிறுவன மேலாளரை அர்ச்சனை செய்து கொண்டிருந்த போதே தான் அவனைக் கண்டாள். கண்ணனின் பாசப்போராட்டத்தில் இருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டிருந்த யாதேஷைக் கண்டாள்.
" கடவுளே, ப்ரொஃபஷனலா இருங்கன்னு உங்க காலேஜ்ல உங்களுக்கு சொல்லியே கொடுக்கலையா, மிஸ்டர் ரம்யகண்ணன்! " என எப்படியோ தன்னிடமிருந்து இந்த குதிக்கும் குழந்தையை பிரித்தெடுத்து அவனை வேகப்பெருமூச்சோடு இவன் பார்க்க, அவனோ மிகவும் அசால்ட்டாய் அவனுக்கு மறுபதிலைக் கொடுத்தான்.
" சீனியர் என்ன சீனியர்! நான் ஒரு கம்பெனிக்கு எம்டி ஆகுறதுக்கும் முன்னாடி அந்த காலேஜ் வழியாத் தான் உங்களுக்குத் தம்பி ஆனேன் சீனியர்! "
பொருக்கமாட்டாமல் சிரித்துவிட்ட யாதேஷ் அவனது தோளில் சினேகமாய் அடித்தான்.
" ஏய் கங்கா! ஏன் இப்படி ஷாக்கா பார்க்குற? நான் சொல்லியிருக்கேன்ல என்னோட ஃபேவரைட் சீனியர் யாதேஷ், இவரு தான் அது! " என சிலையாய் நின்ற சசியை அப்போதே அவ்விருவரும் கவனிக்க, என்ன கூறுவதென்றுத் தெரியாமல் திக்கித்தினறினாள் சசி.
அவள் அறியாத முகமா அது? அவள் அறியாத பெயரா அது? ஏழு வருடங்கள் தன் அக்கா நித்தமும் நினைத்து, சிரித்து, அழுது அவள் கண்ட முகமாயிற்றே... நான்கு வருடம் முன்பு இமையமே இடிந்ததைப் போல அவர்களை வந்தடைந்த இவனின் இறப்புப் பற்றியச் செய்தி சசியின் காதுகளை இப்போது அடைத்தது.
ஆனால் அவளை அதிர்ச்சியில் கூட அவர்கள் இருக்கவிடவில்லை.
" ஓக்கே, சீனியர் திஸ் ஈஸ் மை பீஏ சசிகங்கா, நான் ஆரவ் சீனியர் தான் பார்க்கப்போறதா நினைச்சேன்... " என கண்ணன் அவர்களின் உரையாடலைத் தொடர்ந்தான்.
யாதேஷ் அவர்கள் இருவரையும் அமர வைத்துவிட்டு அவன் கொண்டு வந்து கோப்புகளை பார்த்தபடி பதில் கூறினான்.
" ஆரவ் பிசியா இருக்கான் போலருக்கு கண்ணா... நீ தான் வந்துருக்கன்னு சொன்னாங்க அதான் நானே கூப்பிட்டேன்... "
" அதான பார்த்தேன், அந்த மனுஷன் இருந்தா தான் நான் ஏதோ உங்கள கடத்தீட்டு போயிடுற மாதிரி நீங்க தனியா இருக்கப்போ விடவே மாட்டாறே! " என இவன் ஆரவின் நடவெடிக்கைகளை எண்ணி நகைக்க, யாதேஷ் புன்னகையோடு தன் நண்பனைக் காப்பாற்றினான்.
யாதேஷ் " எதாவது என் பழைய மெமரி ட்ரிகர் ஆகுமோங்குற பயம் கண்ணா அவனுக்கு... அவனையும் தப்பு சொல்லக் கூடாது டா, நான் நாழு வர்ஷத்துல யார பார்த்தாலும் எதாவது மாத்திமாத்தி கேள்வி கேட்டுட்டே இருக்கேங்குறதால தான் இவன் யாரையும் என்ன பார்க்கவிடுறதில்ல, " என இவ்வாறாக இவர்கள் தங்களுக்குள்ளே பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த சசிக்கு மெல்ல மெல்ல ஏதோ புரிந்தாலும் மீதம் எதுவும் புரியவில்லை.
தன் அக்காவின் ஆசை காதலன் இறக்கவில்லை என்றால் நான்கு வருடம் முன்பு இவனைத் தேடிச் சென்ற தன் அக்கா எங்கே? இவன் உயிரோடு இருப்பதை அவள் அறிவாளா மாட்டாளா?
தன் அக்காவின் நினைவுகள் கண் முன் நிழலாடிய சில நொடிகளில் சசியை கடந்தகாலத்தின் கசப்பான நினைவுகளும் வந்து தீண்டியது. கண்கள் நொடிகளில் குளமாக, தன்னை அசுவாசப்படுத்த எவ்வளவோ முயன்ற அவளால் அவளை மீண்டும் மீண்டும் வந்து வருடிய அக்காளின் நினைவுகளை பூட்டி அடைக்க முடியவில்லை.
சசியின் இந்த மனரோதனைகளில் இருந்து அவளைக் காக்க, சரியாக உள்ளே வந்தான் ஆரவ்.
ஆரவ் " நான் வர்ரதுக்குள்ள உனக்கு என்ன டா அவசரம்?! நான் இல்லாம -
கண்ணன் " ஹலோ பாஸ் பாஸ் நீங்க இல்லாத நேரத்துல உங்க ஃப்ரெண்ட ஒன்னும் நாங்க கடிச்சு முழுங்கீடல... ஏன் ஏன் இந்த பதட்டம்ங்குறேன் நானு... "
யாதேஷைத் திட்டிக் கொண்டே வந்த ஆரவ் அப்போதே தனக்கு மிகவும் பரிட்சையமான அந்த முகத்தை கண்ணனின் அருகில் கண்டான். அவனை அதே அதிர்ச்சியோடு பார்த்து நின்ற சசிக்கு ஆரவ் தன்னை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறான் என்று தெளிவாய் புரிந்தது.
" நீ எங்கடா போயிட்டு வந்த? " என யாதேஷ் ஆரவின் கவனத்தை தன் புறம் இழுக்க, கண்ணனும் அவனைப் பார்த்தவாறு திரும்பி அமர்ந்தான்.
" வீட்டுக்கு போயிட்டு வந்தேன் டா... நீ...நீ பாரு நான் வரேன், " விருவிருவென்று ஏதோ பதில் கூறிய ஆரவ் படாரென கதவைத் திறந்து சடாரென வெளியே சென்றிட மற்றவர்கள் குழப்பத்தில் ஆழும் முன்பாக சசி தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டாள்.
" நான் வெளிய வெயிட் பன்றேன், ஸர். " என கண்ணனைப் பாராது கூறியவள், கண் மூடி கண் திறப்பதற்குள் அங்கிருந்து வெளியேறியிருந்தாள்.
கண்ணிற்கெட்டிய தூரத்திலே ' சக்திதாரவ் ' என்ற பெயர்பலகையுடைய அறை இருக்க, சசி சற்றும் தாமதிக்காமல் ஒரு முறை வேகமாய் தட்டிவிட்டு கதவை திறந்து உள்ளே விரைந்தாள்.
" நீங்க... உங்களுக்கு என்ன நியாபகம் இருக்குள்ள?! " என வந்ததும் வராததுமாக பதட்டமாய் நின்றிருந்த ஆரவிடம் இவள் எகிர, ஆரவ் சற்றுத் தயங்கினான்.
ஷிவன்யாவின் குட்டித்தங்கையை எவ்வாறு மறப்பான் அவன்? யாதேஷ் ஷிவன்யாவின் காதல் அறிந்தவுடனிலிருந்தே ' மாமா மாமா ' என யாதேஷ் பின் குழந்தையாய் சுற்றியவளாயிற்றே. முதலும் கடைசியுமாய் சசியை ஷிவன்யா கல்லூரியை முடித்துவிட்டு வீடு திரும்பிய அன்று தான் கண்டான்.
" சசி நான் சொல்றத கேளுடா... "
" அண்ணா மாமா...அது மாமா தானே? ஆனா...ஆனா மாமாக்கு என்ன தெரியல, " என ஒன்றும் புரியாமல் ஆரவை கண்டு பிதற்றியவள், ஏதோ நினைவு வந்தது போல ஆரவை பார்த்தாள். " அக்கா... என்னோட அக்கா எங்க? மாமா என்ன ஏதோ புதுசா பார்த்த மாதிரி நடந்துக்குட்டாரு! அவருக்கு...அவருக்கு என்ன ஆச்சு? அதோட அவருக்கு கண்ணு தெரியுமா? "
" யாதேஷுக்கு நாழு வர்ஷம் முன்னாடி ஒரு அக்ஸிடென்ட், " என தொடங்கி அவனுக்கு நினைவு போனது, பார்வை திரும்பியது அந்த விபத்தினால் இப்பொழுது அவனுக்குள்ள ஆபத்தென அனைத்தையும் ஆரவ் அமைதியாய் கூறி முடிக்க, பொருமையாய் அனைத்தையும் கேட்ட சசி கடைசியாய் ஆரவின் மீது ஒரு குண்டை தூக்கி வீசினாள்.
" மாமா எல்லாத்தையும் மறந்துட்டாருன்னா அக்கா எங்க அண்ணா? அவர தேடித் தான் அவ வீட்டவிட்டு வந்தா. அவ மாமா கூட தான் இவ்வளவு நாளா இருக்கான்னு— "
" என்ன சொல்ற சசி? எப்போ நடந்தது? கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் ஷிவா யாதேஷ தேடி வந்தாளா? "
" கல்யாணமா? " சசி மேலும் குழப்பமாய் ஆரவை ஏறிட்டு கேட்டாள். " எந்த கல்யாணம்? "
" நாழு வர்ஷம் முன்னாடி உங்க ஊருல ஷிவன்யாவுக்கு... " என அவன் சொல்லிக் கூட முடிக்கவில்லை, சசி அதிர்ச்சியில் கத்தியே விட்டாள்.
" அன்னைக்கு ஊர்ல நடந்தது அவ கல்யாணமே இல்ல... என் அக்காவுக்கு எப்பையோ கல்யாணம் ஆய்டுச்சு! "
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro