யாதேஷ் வீட்டில் ஷிவன்யா:21
யாதேஷ் மற்றும் ஆரவின் பதிலுக்கு பதிலடி பேச்சுக்களிலும், ஷிவனேஷ் மெடிட்டேஷன் செய்வது போல் நீட்டி வந்த அமைதிக்கும் இடையில் ஷிவன்யா எங்கே செல்கிறோம் என்ற கேள்விக்கே விடையில்லாமல் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.
யாதேஷ் அவ்வப்போது அவளை சீண்டிக் கொண்டே வந்தாலும் அவளது அந்த ஒரு கேள்விக்கு மட்டும் அவன் பதில் கூறவில்லை. நல்லவேளையாக ஷிவன்யாவின் பொருமையை மேலும் சோதிக்காமல் ஆரவின் வண்டி ஒரு அழகிய வீட்டின் முன் சென்று நின்றது.
அந்த இரண்டுமாடி வீட்டை புதிதாய் பார்த்த ஷிவன்யா, அவளுக்கு முன்பாக சென்ற யாதேஷை பிடிக்க இயலாமல் அப்போதே கீழே இறங்கிய ஷிவனேஷை பிடித்து உலுக்கினாள்.
" யாரு வீடு இது? எங்க வந்து இருக்கோம் நாம?! "
ஆனால் ஷிவனேஷ் அவளுக்கு குனிந்து பதில் தரும் முன்பாக, தன் கையை பிடித்துக் கொண்டு கீழே இறங்கியவள் தன்னை பின் தொடரவில்லை என்று உணர்ந்து மீண்டும் ரிட்டர்ன் வந்தான் யாதேஷ். " டேய் அவ எங்க டா? ஆ இங்க இருக்கியா! வா உள்ள போலாம், "
ஷிவன்யா வாயைத் திறக்கும் முன்பாக யாதேஷ் அவளை இழுத்துச் சென்றிருந்தான். இவன் காதலை ஒப்புக் கொண்டதும் தான் ஒப்புக்கொண்டான், இவன் செய்யும் அனைத்தும் தாறுமாறாக தான் இருந்தது.
கதவை இவன் திறந்த அடுத்த நொடி வீலென கத்திக் கொண்டே, ஒரு பெண் எங்கிருந்தோ அவர்களை நோக்கி ஓடிவந்தாள்.
" நீங்க தான ஃபர்ஸ்ட் இயர் குயிலி அக்கா? " என கண்களில் நட்சத்திரங்கள் மின்ன சிரித்தாள் விஜித்தா.
அவளை கண்டு பேந்தபேந்த விழித்த ஷிவன்யா, யாதேஷை பார்த்துக் கொண்டே " உங்களுக்கு எப்டி தெரியும்? "
விஜித்தா அதற்கு பதில் அளிக்காமல் மீண்டும் வீலென கத்த, ஷிவன்யா படக்கென யாதேஷின் முதுகுக்கு பின் ஒழிந்து கொண்டாள்.
" அவளுக்கு வேற வேலை இல்ல ஷிவா... இந்த ஒருவர்ஷத்துல எங்க கூட எந்த பொண்ண பார்த்தாலும் அத தான் கேட்பா அவ. இன்னைக்கு நீயே வந்துட்டா அதான் குஷி ஆய்ட்டாங்க உன் நாத்தனார், " ஆரவ் அவர்களை பார்த்து சிரிக்க, கத்தி முடித்திருந்த விஜித்தா இப்போது ஷிவன்யாவை கண்டு புன்னகைத்தாள்.
" நான் தான், நான் தான், நான் தான் நாத்தனார்! நான் தான் நாத்தனார்! நான் தான் அண்ணி உங்க நாத்தனார். உங்க ஸீனியரோட ஒரே லவ்லி தங்கச்சி. என் பேரு விஜித்தா, நான் ட்வெல்த் இப்போ தான் முடிச்சேன். "
" அண்ணியா...? "
" பின்ன இல்லாமையா? என் அண்ணன் அவனோட வெட்டியான 23 வர்ஷ சிங்கிள் வாழ்கைல படத்துல கூட ஒரு பொண்ண பார்த்துட்டு பேசுனதில்ல. ஆனா என் அண்ணன், பொண்ணுங்கள திரும்பி பார்க்கத் தெரியாத என் அண்ணன், கணவுல கூட உங்கள பத்தி பேசுனா நீங்க எவ்வளவு பெரிய ஆளா இருப்பீங்க?!"
" ஏதே கனவுல பேசுனனா? அத இவ எப்போ டா கேட்டா? " என யாதேஷ் அவன் நண்பர்களிடம் கிசுகிசுக்க, ஆரவ் அவன் தலையில் அடித்தான்.
" ஆமா ஊருக்கே உன் மேல சந்தேகம் இருக்கப்ப, உன் கூட இருக்க உன் தங்கச்சிக்கு உன்ன பத்தி தெரியாம இருக்குமா டா வெண்ண? "
யாதேஷ் அதை இளித்தபடி பெற்றுக் கொண்டாலும் ஒரு பக்கம் தான் கனவில் தன் காதல் ராணியைப் பற்றி என்ன பேசியிருப்போம் என்று யோசிக்கவும் செய்தான்.
ஷிவன்யா சற்று பீதியோடே விஜித்தா இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்றாள். ஒரு முழு ஐந்து நிமிடத்தின் பின் தான், தான் யாதேஷின் வீட்டில் இருக்கிறோம் என்று ஷிவன்யாவின் மட்டுமூளையில் உரைத்தது. அதே நேரம் சரியாக, மார்கெட்டுக்கு சென்றிருந்த யாதேஷின் அன்னை சாதனா வீட்டிற்குள்ளே வந்தார்.
சாதனா " டேய் பசங்களா? எப்போ வந்தீங்க எல்லாரும்? வாங்க, வாங்க, " என அழைத்துக் கொண்டே உள்ளே வந்தவர் ஷிவன்யாவை பார்த்துவிட்டு அப்படியே நின்றுவிட்டார்.
என்றோ விஜித்தா கூறிய வார்த்தைகள் தெளிவின்றி அவரது மூளையை சுழல, தங்கையின் சொல்தட்டாத அண்ணன் என்ற பட்டத்தைப் பெற்றது போல் அவள் சொன்னதையே செய்தான் அவன்.
" யமுனா இங்க வா... "
அவள் எழுந்ததும் அவளை கையோடு அன்னை நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்தவன் சாதனா அமைதியாக நிற்பதையும் ஷிவன்யா இன்னும் கூட்டத்தில் தொலைந்த குழந்தையாய் அவனை பார்த்துக் கொண்டிருந்ததையும் கண்டுகொள்ளவில்லை. அவன் இங்கே பார்க்கப் போகிறான்.
" இதான் என்னோட அம்மா... ம்மா, இது தான் யமுனஷிவன்யா, எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க, " என படாரென்று தன்னவளை இழுத்துக் கொண்டு சாதனாவின் காலில் விழுந்துவிட்டான்.
இவனது எண்ணம் புரியாமல் இவ்வளவு நேரம் இவனை பின் தொடர்ந்திருந்த நண்பர்களில் ஷிவனேஷின் கண்கள் விரிய, ஆரவ் அதிர்ச்சியில் அவன் வாய் மேல் கை வைத்து நிற்க, விஜித்தா கைதட்டி " சபாஷ்! " என ரஜினிகாந்த் ஸ்டைலில் கண்ணடித்தாள்.
" நல்லா இருங்கப்பா, நல்லா இருங்க! " என ஒரு வேகத்தில் நல்சொல் சொல்லி, இருவரையும் எழுப்பிய சாதனா அவரை கண்டு முளித்த ஷிவன்யாவை கண்டு விழித்தார்.
ஆசிர்வாதம் வாங்கிய அவளுக்கும் புரியவில்லை, ஆசிர்வாதம் கொடுத்த அவருக்கும் புரியவில்லை.
ஏதோ ஆஸ்ட்ரேலியாவிற்குச் சென்று ஆஸ்கார் வாங்கியது போல அண்ணன் தங்கை மட்டும் ஹை-ஃபை போட்டுக் கொண்டு அனைவரையும் அமர வைத்தனர்.
" ம்மா, இந்த பொண்ண எனக்கு புடிச்சிருக்கும்மா... அவள்ட்ட கூட இன்னும் சொல்லல உன்ட்ட தான் முதல்ல சொல்றேன். " ஆசையாய் யாதேஷ் சாதனாவின் கைகளை பிடித்து, அவன் அழகிய விழிகளில் காதல் ததும்ப சட்டையே செய்யாமல் ஒரு அணுகுண்டை தூக்கி வீசினான்.
" எ...என்ன பா சொல்ற? "
" ஆமாம்மா, என் மனசுக்குப் பிடிச்சவள உனக்கும் பிடிக்கும்மா. யமுனா மாதிரி ஒரு பொண்ண நீ எங்க தேடுனாலும் கண்டுப்பிடிக்க முடியாது. " என இவன் ஆகாஓகோவென்று அவன் நாயகிக்கு புகழாரம் சாட்ட, ஷிவன்யா முகமெல்லாம் சிவந்து அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.
நேரம் போவது தெரியாமல் விஜித்தா ஷிவன்யாவை " அண்ணி அண்ணி அண்ணி " என பாசமழையில் மூழ்கடிக்க, தன் மகன் வீசும் காதல் வீச்சில் வெட்கி அமர்ந்திருந்த பெண்ணை பார்த்தபோது சாதனாவிற்கும் பிடிக்கத்தான் செய்தது.
அழகான அம்சத்தோடு பண்பாய் அவர் மகளின் பேச்சில் சிக்கித்தவித்த அப்பாவி ஷிவன்யா, தரையை விட்டு தலை தூக்காத தன் மகனையே கை பிடித்து அருகிலே அமரவைக்கும் அளவிற்கு நம்பிக்கையை கொடுத்த ஷிவன்யா அதிசயமான பிறவியாகத் தெரிந்தாலும் ஆச்சர்யம் இல்லை.
அமைதியே சிரத்தையாய் சிலையென அமர்ந்திருந்த ஷிவன்யா விடைபெறும் போது தான் ஒரு சிறு புரகையுடன் " போய்ட்டு வரேன், " என தன்னவனின் அன்னை தங்கையிடம் சொல்லிவிட்டு வந்தாள்.
காரில் கூட அமைதியாக வருபவளிடம், தன் தயக்கத்தையும் மீறி தன் கேள்வியை கேட்டான் யாதேஷ்.
" என்னாச்சு யமுனா? எங்க வீட்டுல யாரையும் புடிக்கலையா? ஒருவேளை... நான் இவ்வளவு சீரியசா போவேன்னு நினைக்கலையா? "
தயங்கித்தயங்கி அந்த கேள்விகள் வெளிவந்ததும் தான் ஷிவன்யா அவனை கவனித்தாள். காரை எங்கோ ஓரமாய் நிறுத்திவிட்டு அவன் நண்பர்களும் அவர்களுக்கு தனிமை அளித்து எங்கோ சென்றிருக்க, அவள் புறம் என்றும் சிரிக்கும் அந்த வசீகரிக்கும் கண்கள் இப்போது இருண்டுக் கிடப்பதை காண ஷிவன்யாவிற்கு சுருக்கென்றிருந்தது.
உடனே அவள் கைகளை பிடிக்கத் தயங்கிக் கொண்டிருந்த அவன் விரல்களை இறுகப் பற்றினாள்.
" என்ன பாஸ் சீரியசா இல்லாம நான் என்ன டைம்பாசுக்காகவா உங்க பின்னாடி பார்ட்டைம் தேவதாசினியா சுத்தீட்டு இருந்தேன். " நக்கலாய் அவன் கைகளை கிள்ளினாள்.
யாதேஷ் வலித்தாலும் அலட்டாமல் அமர்ந்திருக்க, கிள்ளிய இடத்தில் பட்டும்படாமல் இதழ் பதித்த ஷிவன்யா அவன் சிலிர்த்தடங்குவதை கைகளில் உணர்ந்தவாறு " நீங்க இப்டி திடுதிபுனு என் அத்தையாருக்கும் நாத்தனாருகும் இன்ட்ரோ குடுத்துட்டீங்க. நான் உங்களோட மாமனார், அத்தையார், கொழுந்தியாள் அப்பரம் என் அப்பத்தாவெல்லாம் எப்போ காற்றதுன்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன். " நக்கலாய் கூறி முடித்தாள்.
அவள் கரம் தொட்டதற்கே தன்னை இழந்திருந்தவன், அவள் இதழ் பதித்த அடுத்த நொடி அவன் கண் முன்னே அவனது இதயம் மீள இயலா ஆழமான காதல் கடலுக்குள் மூழ்கியிருந்தது. துள்ளிக் குதிக்கும் குழந்தை போல் ஆசையாய் அவளை பார்த்தவன் ஒரு குறும்பு புன்னகையோடு அவளை சீண்டினான்.
" அதுக்கு நீ ஏன் கவலப்பபடுற? மாமன் ஆல்ரெடி என் மாமனாரையும் மச்சினச்சியையும் போய் உங்க ஊருலையே பார்த்துட்டு வந்துட்டேனே, "
இப்போது அதிர்ச்சியாவது மீண்டும் ஷிவன்யாவின் முறையானது. அவள் நம்பாமல் அவனை உலுக்கத் தொடங்கினாள். " என்னங்க சொல்றீங்க?! எப்போ போய் பார்த்தீங்க?! எப்டி? எப்போ? ஏன்? இல்ல நீங்க பொய் தான சொல்றீங்க? நான் நம்பமாட்டேன். உங்களுக்கு என் ஊரு பேரே தெரியாது... "
அதற்கும் அவன் அதிரடியான ஒரு பதிலை கொடுத்தான். " மதுரை டிஸ்ட்ரிக்-ல கீரனூர். கீரனூர்-ல கடைசி வீதி, நாழாவது வாழ்முறை தெரு-ல ஆ... ஆறாவது வீடு. எப்டி மாமா கரெக்ட்டா சொன்னனா? " அவளை பார்த்து யாதேஷ் கண்ணடிக்க, ஷிவன்யா துள்ளி எழுந்தாள்.
" யோவ் மாமா எப்டிய்யா?! "
" அதெல்லாம் அப்டித்தான்! " இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டவன் அவளது கைவிரலை அழுத்திப் பிடித்து, " நீ மாமான்னு கூப்ட்டா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... அப்டியே கூப்டேன், "
" நான் இங்க என்ன கேட்டுட்டு இருக்கேன் நீங்க என்ன மாமான்னு கூப்ட சொல்லி கேட்டுக்குட்டு இருகீங்க?! இப்போ அதுவா ரொம்ப முக்கியம்?! "
" அஃப்கோர்ஸ்! நீ என்ன மாமான்னு கூப்டமாட்டீன்னா நான் எதுவும் சொல்லமாட்டேன் உனக்கு, " என்று யாதேஷ் வீம்பாய் திரும்பி அமர்ந்துகொள்ள, ஷிவன்யாவால் தான் எதையும் நம்பமுடியவில்லை.
" அய்யோ என் செல்ல மாமா, என் முத்து மாமா, என் தங்க மாமா, "
" அப்போ வைரம்? "
இப்போது ஷிவன்யாவே அவனுக்கு ' உனக்கே ஓவரா இல்ல? ' என லுக்கு விட்டாலும் அவன் பார்க்கவா போகிறான்.
அதனால் ஒரு பெருமூச்சோடு அவளது சீட்டில் ஏறி அமர்ந்தவள் சண்டைக்குத் தயாராகும் கோழி போல, " நீங்க ஒன்னும் சொல்லவேணா நான் எங்க அப்பாட்டையே கேட்டுக்குறேன், "
விட்டால் அவள் கோழி போல் கதவை திறந்து கொண்டு பறந்திருப்பாள் தான். ஆனால் நல்லவேளையாக யாதேஷ் படக்கென திரும்பி அவளை இழுத்துப்பிடித்தான்.
" செரி செரி ஸாரி தங்கம்... நான் உங்க அப்பாவ போன வாரம் தான் டி போய் பார்த்துட்டு வந்தேன். கோச்சிக்காத ப்லீஸ்... " யாதேஷ் கெஞ்சலாய் அவளை அவன் புறம் இழுக்க, குறும்பான புன்னகையை குரலில் காட்டாமல் அவன் மீது சாய்ந்தாள்.
" இத சொல்றதுக்கு இவ்வளவு அலட்டல். ஹ்ம்... " என முதலில் முறுக்கிவிட்டு பின் சட்டென அவன் கைகளை பிடித்துத் தன்னருகில் வைத்துக் கொண்டவள், " மாமா நீங்க என்ன அடியேனு இல்ல டி சொல்லி பேசுனா எனக்குப் பிடிச்சிருக்கு... அப்டியே பேசுங்களேன்... "
அவளின் ஆசை நிறைந்த குரல் அவன் மனதை ஏதோ செய்தது. புன்னகையோடு அவளது மூக்கை கிள்ளிச் சிரித்தான்.
" இப்போ இது மட்டும் ரொம்ப முக்கியமோ? "
" ஆமா முக்கியம் தான் சரி நீங்க சொல்லுங்க... எங்க அப்பா கிட்ட என்ன பேசுனீங்க? ஏன் போனீங்க எங்க ஊருக்கு? "
" சும்மா தான்... உங்க பொண்ண எனக்கு கட்டித்தறீங்களான்னு கேட்டுட்டு வரப் போனேன். "
கண்கள் மின்ன அவனை திரும்பி பார்த்தாள். மாறாத அந்த குறுநகையுடன் யாதேஷின் கண்களும் அவளை பார்த்திருக்க, கட்டியணைக்க குதிக்கும் கைகளை விளங்கிட்டுத் தடுத்தவள் மென்மையான குரலில் கேட்டாள்.
" ஆனா... ஏன்? " அவ்வளவு தான் அந்த நேரம் அவளால் கேட்க முடிந்தது.
அந்த மோன நிலையின் தாக்கத்தில் வேகமெடுக்கும் அவள் இதயத்தின் துடிப்புகளை கேட்டவனாய் மெல்ல அவள் கரத்தை இறுக்கிப் பிடித்தான்.
" நீ இந்த கைய முதல் முறை பிடிச்சப்போ எனக்கு என்ன தோனுச்சுன்னு இப்போ வரைக்கும் என்னால ஒழுங்கா புரிஞ்சிக்க முடியல... ஆனா ஸ்டேஜ்-ல நீ திரும்ப என் கைய பிடிச்சப்போ அது நீ தான்னு தெரிஞ்சதும் எனக்குள்ள அப்டி ஒரு சந்தோஷம். தனியா விளையாடின குழந்தைக்கு பொம்மை வாங்கி குடுத்தது போல ஒரு சந்தோஷம்... ஏன், எதுக்கு, எப்படி எதுவும் தெரியல... யோசிக்கவும் தோனல... ஆனா அந்த ஃபில் போய்டவே கூடாதுன்னு தோனுச்சு. எப்போ எந்த நேரம்னு தெரியல... உன் குரல கேட்காம, உன் கொலுசு சத்தம் கேட்காம, அந்த ஜிமிக்கி சத்தம் கேட்காம, நீ கிட்ட வந்ததுமே ' ஹாய் ஸீனியர், ' அப்டீனு சத்தமா சொல்லுவியே...அதெல்லாம் இல்லாம போனா என்ன ஆவேன்னு தோனுச்சு... நீ ஐ லவ் யூ ன்னு சொன்னப்போ லாஜிக்-ஆ பார்த்தா நான் திரும்ப அத தான் சொல்லீருக்கனும்... ஆனா எனக்கு பயம்... எங்க பல நாள் உன் கை பிடிச்சு நடந்துட்டு ஒரு கட்டத்துல உனக்கு இது இல்லன்னு சொல்லி நீ என்னவிட்டு போய்டுவியோன்னு...பயம்... "
அவன் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதை சென்றடைய, கண்ணெடுக்காமல் மிளிரும் அவன் கண்களை பார்த்திருந்தவளுக்கும் கண்கள் பனித்தது.
" ஆனா... நீ வேணும்னு கொஞ்சம் கூட நான் முயற்சியே பண்ணாம, தேவதாசனா சுத்துனப்போவும் நீ என்ன விட்டுட்டு போற நிலைமை வந்துச்சு... நீ என்ன மறந்துட்டு நல்லா இருப்பன்னு என்ன தேத்திக்கிட்டாலும், என்னால முழுசா அத ஏத்துக்க முடியல டி... " அவனின் கடைசி கூற்றில் ஷிவன்யாவின் இதயம் படபடத்தது.
" உங்க அப்பா கிட்ட பேசுனதும் என்னால என்னையே கட்டுப்படுத்த முடியல... ஆரவ் என் கன்னத்துல நாழு வச்சு ஒழுங்கா உன் கிட்ட எல்லா உண்மையையும் சொல்லுன்னு சொன்னான். நான் அன்னைக்கே உங்க ஊருக்கு கிளம்பி வந்தேன். உங்க அப்பாவ பார்த்தேன். "
சிறு சிரிப்புடன் அவன் கதை சொல்ல, ஷிவன்யாவிற்கு அவன் கண்களைத் தவிற வேறு எதுவும் தெரியவில்லை.
" உன் கிட்ட என் மனச சொல்றதுக்கு முன்னாடி, என்ன நடந்தாலும் பரவாயில்லன்னு உங்கப்பா கிட்ட நேரடியா போய் கேட்டுட்டேன். முதல்லா அவரு மீசை அருவான்னல்லாம் சொன்னப்போ கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு ஆனா நான் தான் யாதேஷ் உங்க பொண்ணு லவ் பன்ற பையன்னு சொன்னதும் அவரு என்ன பார்த்து சத்தமா ஒரு சிரிப்பு சிரிச்சாரு... அப்போ வந்துச்சு ஒரு கான்ஃபிடன்ட்டு! இப்டி ஒரு மாமனார் இருந்தா என்ன வேணா பண்ணலாம்னு, "
" அப்போ... அப்போ எங்க அப்பாக்கிட்ட என் கிட்ட பேசுறதுக்கு முன்னாடியே நீங்க பேசீட்டீங்க? "
" ஆமா மாமன் ஃபுல் பெர்மிஷன வச்சிட்டு தான் உன் கிட்ட கட்டிக்கிறியானு கேட்டேன். நான் லேட் பிக்-அப் ஆ இருந்தாலும் இப்போ ரொம்ப உறுதியா இருக்கேன். பிரச்சனை, கஷ்டம், பிரிவு எல்லாமே வாழ்கை-ல பார்க்க தான் செய்யனும் அதுக்காக என்னால ஓடி ஒழிஞ்சிட்டே இருக்கவும் முடியாது, என்னோட சேர்த்து உன் வாழ்கையையும் அழிக்க முடியாது. எனக்கு நீ வேணும் யமுனா, எனக்கு படத்துலலாம் வரமாதிரி பெரிய ப்ரொப்போசல் பண்ணனும்னு தான் ஆசை, ஆனா உன் கிட்ட பேசுறத பத்தி நினைச்சாலே என் மூளை வேலை செய்யமாட்டுது டி... அதனால... இப்போ சொல்லேன்... என்ன கட்டிக்கிறியா? "
அவன் எப்போதடா பேசி முடிப்பான் என காத்திருந்ததை போல படாரென அடுத்த நொடி ஷிவன்யாவிடம் இருந்து பதில் வந்தது.
" ஐ லவ் யூ ஸீனியர்... "
சிரிக்கும் அவன் கண்கள் மீதிருந்து கண்களை பிரிக்க இயலாமல் அவள் திண்டாட, அதற்கு வாய்ப்பே அளிக்காமல் அவன் அவளை அவனோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.
" நான் அவ்ளோ தைரியமானவன் இல்ல டி. என்ன விட்டு போய்டாத... என்ன விட்டு என்னைக்கும் போய்டாத... "
அவன் கன்னத்தில் உருண்டோடிய கண்ணீரை மென்மையாய் துடைத்த ஷிவன்யா, புன்னகையோடு அவன் நெற்றி முட்டினாள்.
" நீங்களா போன்னு சொல்லாத வரை நான் எங்கையும் போக மாட்டேன்... "
இதயம் காற்றில் சிறகடித்துப் பறக்க, அவளை கண்ணால் பார்த்து, அவள் வதனத்தை கையில் ஏந்தி, அவளின் புன்னகையை பார்க்க இயலாத ஏக்கத்தை விட வேறெதுவும் யாதேஷை அப்போது வாட்டவில்லை. உலகை வென்ற மன்னனை போல் அவன் முகம் பிரகாசிக்க, அவனின் பார்வையற்ற கண்கள் அவளை ஆசையோடு வருடியது.
" ஐ லவ் யூ யமுனா... "
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro