Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மீண்டும் காதல்: 33

நேரம் போவது தெரியாமல் இவ்வளவு நேரம் கதை கேட்டுக் கொண்டிருந்த ஆரவ் அதிர்ச்சியில் ஷிவனேஷைப் போட்டு உலுக்கத் தொடங்கினான்.

ஆரவ் " பாவிங்களா டேய்! என்னடா?! இதெல்லாம் எந்த கேப்ல டா நடந்துச்சு?! நான் உங்க கூடையே தான டா இருந்தேன்?! "

ஷிவனேஷ் " நீ ஒரு வாரம் கோயம்பத்தூர் போயிருந்தடா. உன்கிட்ட எவ்ளோவோ சொல்லனும்னு அவனும் ட்ரை பண்ணான், ஆனா அப்பா இந்த விஷயம் யாருக்குமே தெரிய கூடாதுன்னு சத்தியம் வாங்கீட்டு போயிட்டாரு. சாட்சி கையெழுத்து போட ஆள் இல்லாத ஒரே காரணத்தால தான் என் கிட்ட கூட சொன்னாரு மச்சான். மத்தபடி உன்கிட்ட மறைக்கினும்னு எதுவும் இல்ல டா, "

ஆரவிற்கு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள இன்னும் சில வினாடிகள் தேவைப்பட்டது.

" அப்போ ஷிவன்யாவுக்கு யாது கூட தான் கல்யாணம் ஆச்சா? "

அதை அமோதித்த ஷிவனேஷ் மீதியையும் அவ்வாறே தொடர்ந்தான். " அது எனக்கும் அப்பாக்கும் மட்டும் தான் தெரியும். கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் ஓடுன அந்த நேரத்துல தான் திடீருனு ஊருல இருந்து எனக்கு ஒரு நாள் ஃபோன் வந்துச்சு. அப்பாக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு... "

இதை கேட்டதும் அதிர்ந்த ஆரவ் அமைதியாய் அமர்ந்திருந்த சசியைப் பார்க்க, அவள் கண்களில் மெதுமெதுவாய் நீர் கோர்க்கத் தொடங்கியது.

" அவ்வளவு நடந்துமே அப்பத்தா சும்மா இல்ல... அவங்க தொடர்ந்து அப்பா மனச மாத்த முயற்சி பண்ணீட்டே இருந்திருக்காங்க. அந்த மனுஷன் ஒரு வார்த்தையையும் வெளியே சொல்லாம உள்ளுக்குள்ளேயே வச்சுவச்சு... " ஷிவனேஷிற்கு மேலும் வார்த்தை வராமல் தொண்டை அடைக்க, சூர்யா அவன் கரத்தை ஆறுதலாய் பற்றிக் கொண்டாள்.

சசி கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் குரல் உடைய ஷிவனேஷின் வார்த்தைகளை முடித்து வைத்தாள். " அப்பாக்கு ஹார்ட் அட்டக் வந்துடுச்சுண்ணா... அதுல... அதுல எங்களால அவர காப்பாத்த முடியல... "

ஆரவ் இடி விழுந்தது போல் அதிர்ச்சியோடு சோபாவில் அமர, முணியாண்டியின் மரணம் அவனை சொல்லேனா துயர் ஒன்றில் ஆழ்த்தியது.

" எனக்கு ஃபோன் வந்ததும் நான் உடனே ஊருக்குக் கிளம்பீட்டேன். என் கூட சூர்யாவும் இருந்தா... ஆனா எனக்கு என்ன நடந்ததுன்னு ஒழுங்கா யாருமே சொல்லல. இரெண்டு நாளுக்கு அப்பரம் தான் ஆல்ரெடி அப்பா தவறீட்டாருன்னே எனக்குத் தெரிஞ்சிது. வீட்டுல சித்தியையும் சசியையும் பேச முடியாதபடி அப்பத்தா பண்ணீட்டாங்க... நான் சுதாரிக்கிறதுக்குள்ள ஊரு ஆளுங்க சென்னைல இருந்து ஷிவாவ வலுக்கட்டாயமா அவ வேலை பார்த்த இடத்துலேந்தே ஏதேதோ சொல்லி அழச்சிட்டு வந்துட்டாங்க. விஷயம் தெரிஞ்சப்போ யாதேஷுக்குத் தெரிஞ்சிதான்னும் எனக்குத் தெரியல... அவ ஊருக்கு வந்த அதே நாள், அப்பத்தா அவளுக்கு கல்யாணம் பண்ணியே தீரணும்னு ஊரையே கூட்டீட்டாங்க... "

சூர்யா அன்றைய நினைவுகளில் மெதுமெதுவாய் அழத் தொடங்கிய சசியை அணைத்துக் கொள்ள, அவள் தலையை வலியோடு வருடினான் ஷிவனேஷ்.

" வெறும் பேருக்காகவும் கௌரத்துக்காகவும் அவங்க இவ்வளவு தூரம் போவாங்கன்னு யாரும் நினைக்கல டா... ஊரே அவங்க பக்கம் தான் நின்னுச்சு. எழவு விழுந்த வீட்டுல சீக்கிரம் நல்லது நடக்கனும்னு சொல்லி, அந்த இடத்துல ஒரு கல்யாணம் நடந்தே ஆகனும்னு மொத்த ஊரும் அவள வற்புருத்துனாங்க. அப்போ தான் நான்

என திடீரென வார்த்தை கிடைக்காமல் நின்ற ஷிவனேஷிற்கு ஒன்று அப்போது தான் புரிந்தது.

" அப்போ தான் ஷிவனேஷ் அங்க இருந்த தாலிய என் கழுத்துல கட்டுனாரு. அந்த அதிர்ச்சில அந்த பாட்டியால எதுவும் பண்ண முடியல. அப்போ தான் ஷிவா அவளுக்கு யாதேஷ் கூட கல்யாணம் ஆனத பத்தி சொன்னா... அப்பவும் யாரும் அத ஏத்துக்காம இருந்ததால ஷிவனேஷ் யாதேஷை அழைக்க சென்னைக்கே வந்தாரு... "

ஆரவ் " நீங்க இரெண்டு பேரும் கிளம்புனீங்க... நான்... "

ஷிவனேஷின் முகத்தில் ஒரு சொல்லேனா துயர் பரவ, கண்கள் பனிக்க அவன் கீழே குனிந்தான். " அப்போ தான் அந்த அக்ஸிடென்ட் நடந்துச்சு... என் கண்ணு முன்னாடியே யாதேஷ் காரவிட்டு வெளிய போய் விழுந்துட்டான். என்னால...என்னால எதுவும் பண்ண முடியல... நான் திரும்ப கண்ண தொறந்தப்போ நாழு மாசம் ஆகியிருந்துச்சு... உங்கள தேடி தான் டா எந்திருச்ச உடனே ஓடி வந்தேன்... ஆனா யாதேஷோட அம்மா என்ன வீட்டுக்குள்ள அனுமதிக்கல... நீ செத்ததாவே இருக்கட்டும், தயவுசெஞ்சு என் பையன் வாழ்கைல திரும்ப வந்துறாத, உன்னால திரும்ப அவன இழக்க முடியாது ன்னு சொல்லி என்ன...என்ன உள்ளேயே விடல மச்சான். "

இதயம் உடைய அமர்ந்திருந்தவனின் கண்ணீரில் மலைத்துப் போன ஆரவிற்கும் கண்ணீர் முட்டிக் கொண்டு வர, அவன் ஓடிச் சென்று ஷிவனேஷை அவனோடு கட்டி அணைத்துக் கொண்டான். நான்கு வருடமாய் தனக்குள் பூட்டி வைத்த துயரத்தை அவன் அழுகையாய் வெளிப்படுத்த, ஆரவும் கண்ணீரில் வெடித்தான்.

" சாரி டா! சாரி மச்சான்! அந்த அக்ஸிடென்ட்ல நீயும் கிடைக்காம யாதேஷும் சாகுற நிலைமைல இருந்தப்போ என்னால...என்னால எதையும் ஒழுங்கா பார்க்க முடியல டா! நீ செத்துட்டன்னு சொன்னதும் என்னால எதுவுமே செய்ய முடியல... குத்துயிரா இருந்தா அவனையாவது காப்பாத்தனும்னு தான் டா நான் சென்னைய விட்டுப் போனேன். சத்தியமா...சத்தியமா எனக்கு நீ தீரும்பி வந்தது தெரியல டா... என்ன மன்னிச்சிரு ஷிவா... ஐயோ எத்தன நாளா நாங்க எல்லாரும் இருந்தும் அனாதையா நீ இருந்த?! கடவுளே! சாரி மச்சான்! நீ செத்துட்டன்னு ஏத்துக்கவும் முடியாம, அவன் யாருமே நினைவு இல்லாம எழுந்தப்போ என்னால எதுவும் செய்ய முடியல ஷிவா! நீ இல்லாம ஒவ்வொரு நாளும் தனிமைல தான் என்னால தவிக்க முடிஞ்சிது... ஷிவன்யா... ஹையோ ஷிவன்யா! "

ஆரவ் அவன் வலி மொத்தத்தையும் இறக்கி வைக்க, நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு ஒருவர் மற்றவருக்கு ஆறுதலாயினர்.

ஷிவனேஷ் " நான் எங்க தேடியும் ஷிவாவ என்னால கண்டுப்புடிக்க முடியல ஆரவ்... அவ எங்கையுமே இல்ல... உயிரோட இருக்காளா என்னன்னு கூட தெரியாம, அவளுக்கு செஞ்சு குடுத்த சத்தியத்த காப்பாத்த முடியாம டெய்லி செத்துட்டு இருந்தேன்,  "

ஆரவ் வேகமாக அவன் தலையிலே அடித்துக் கொண்டான். " நான் தான் அவள கவனிக்கல... உங்க இரெண்டு பேரோட இழப்புல நான் சுயநினைவு அடையிறதுக்குள்ளேயே நான் ஷிவான்யாவ எங்கையோ தொலைச்சிட்டேன், "

இவர்களின் கண்ணீர் வலியில் மேலும் வலியோடு அமர்ந்திருந்த சூர்யா, சசியை அவளோடு அணைத்துக் கொண்டே பதில் கூறத் தொடங்கினாள்.

சூர்யா " ஷிவன்யாவ நீங்க யாரும் தொலைக்கல... கண்ணு முன்னாடி யாதேஷ் பிழைக்கல, அவரு செத்துட்டாருன்னு ஹாஸ்பிட்டல்ல சொன்னதும் அவரோட அம்மா அவள என்னென்னமோ பேசுனாங்க... நிறைய... ரொம்ப தகாத வார்த்தைகள சொல்லி பித்துபிடிச்சவ மாதிரி அவ நின்னப்போ அவள காயப்படுத்துனாங்க... ஆனா எதுக்குமே பதில் சொல்லாம ஷிவன்யா சென்னைய விட்டே போய்ட்டா... ஷிவனேஷோட டெத்னால நானும் அப்போ என்னோட நிலைல இல்ல... கொஞ்ச நாள் களிச்சுத் தான், அவ ஃப்ரெண்ட் அத்விகா ஷிவன்யா அவ கூட பெங்கலூர்ல இருக்குறதா சொன்னா... என் வாழ்கையே இல்லாதப்போ நான் சென்னைல இருந்து என்ன செய்யப் போறேன்னு தான் நானும் பெங்கலூருக்குப் போனேன். நான் அங்க போனப்போ ஷிவன்யா ஃபைவ் மன்த்ஸ் ப்ரெக்னன்ட்டா அவ கொழந்தைக்காக மட்டுமே உயிர் வாழ்ந்துட்டு இருந்தா, "

நடைபிணமாய் சுற்றிக் கொண்டிருந்த ஷிவன்யாவின் அந்த கடந்தகால நாட்கள் சூர்யாவின் கண்கள் முன் சுழல, சசி தன் ஆசை அக்காவின் துயரங்களைக் கேட்டு வாயை மூடி அழ, அவள் அண்ணன்கள் இருவரும் கணத்த மனதோடு சூர்யாவைப் பார்த்தனர்.

" எப்போ ஷிவானி இந்த உலகத்துக்கு வந்தாளோ அப்போ தான் ஷிவன்யாவும் திரும்ப உயிர் பிழைச்சா... அதுக்கப்புறம் தான் அவ முகத்துல உணர்வே தெரிய ஆரம்பிச்சது... அன்னைலேந்து நான் ஷிவன்யாவ தூரத்துல இருந்து பார்த்துட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்... ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் சென்னைக்கு வந்தேன்... ஷிவன்யா போன வாரம் தான் ஷிவானியோட ஃப்யூச்சர்க்காக திரும்ப வந்திருக்கா... "

சசி படக்கென அவளை நோக்கித் திரும்பினாள்.

" அண்ணி அண்ணி! அக்கா எங்க இருக்கா அண்ணி?! ப்லீஸ் என்ன அவக்கிட்ட கூட்டீட்டுப் போங்க! நான் அவள பார்க்கனும். ப்லீஸ் அக்காவ பார்க்கனும், அக்கா எங்க இருக்கான்னு சொல்லுங்க! "

சசிக்கு பதில் கொடுக்காமல் நண்பர்கள் இருவரையும் பார்த்த சூர்யா, " அவள இப்போவே வேணும்னாலும் நீங்க பார்க்களாம்... ஆனா நம்ம யாரையும் பார்க்குற நிலைமைல ஷிவன்யா இல்ல. "

இவர்களின் பேச்சு நீடித்த அதே வேளை திடீரென வீட்டின் கதவு தட்டப்பட, திரும்பி கடிகாரத்தைப் பார்த்த சூர்யா யார் வந்திருப்பர் என்று அறிந்து ஷிவனேஷை ஓரக்கண்ணால் பார்க்க, அவனும் யூகித்திருந்தான் போல.

பெல்லை விடாமல் அழுத்திக் கொண்டிருந்தவரின் பொருமையை சோதிக்காமல் சூர்யா கதவை திறக்க, " பேபி!! " என தன் மழலை மொழியில் கத்திக் கொண்டே வேகமாய் ஓடி வந்து சூர்யாவின் கால்களை கட்டிக் கொண்டான் ஷிவனேஷ் மற்றும் சூர்யாவின் வளர்ப்பு மகன் ஆர்யா.

ஆர்யா " இவ்ளோ நேடம் எங்க போன பேபி? " என தன்னை சூர்யா தூக்கியதுமே அவள் கன்னத்தில் கைவைத்து அழகாய் அவன் வினவ, கதவை மூடிவிட்டு சூர்யா அவனுக்காக காத்திருந்தவர்களை காட்டி பதில் கொடுத்தார்.

" இவங்க கூட தான் பேசீட்டு இருந்தேன் பேபி. யாரு வந்து இருக்காங்கன்னு பாரேன், "

ஆர்யாவின் கண்கள் ஷிவனேஷ் மீது விழுந்ததுமே அழகாய் விரிய, ஆரவ் மற்றும் சசியையும் பார்த்தவனுக்கு மேலும் கண்கள் விரிந்தது.

" பேபி, பேபி, அப்பாவோட கோஸ்ட் எனக்குத் திருமியும் தெர்யிது பேபி, " என சூர்யாவின் காதில் படுசீரியசாக அவன் கிசுகிசுக்க, அதை கேட்ட மற்றவர்கள் குலுக்கென சிரிக்க, ஷிவனேஷ் தன் ஆசை பிள்ளையை பாவமாக பார்த்தான்.

ஆரவ் " டேய் ஆர்யா தான டா அது? " என நம்பாமல் ஷிவனேஷை உலுக்கினான்.

ஆம் ஆர்யா... நான்கு வருடம் முன் இவர்களின் வாழ்கை தடம் மாறும் முன் சூர்யா வளர்ந்த ஆஷ்ரமத்தில் இவர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம் தான் ஆர்யா.

நம் நண்பர்கள் பட்டாளமே சூர்யா ஷிவனேஷ் மீது காதல் பைத்தியமாக இருந்ததை அவர்கள் கல்லூரி முடித்த ஒராண்டின் பின் தான் அறிந்து கொண்டனர். என்ன தான் ஷிவனேஷ் ' நானாவது லவ்வாவது, ' என இன்னும் அறுபது ஆண்டுகள் சிங்கிலாக சுற்ற முடிவெடுத்தது போல் வளம் வந்திருந்தாலும், அனைத்து பெண்களிடமும் தள்ளியே இருப்பவன் சூர்யாவிடம் மட்டும் வேறாக இருந்ததை பின்பே கவனித்தனர். இவர்களின் இந்த காதல் விளையாட்டு முடிவுக்கு வந்தது என்னவோ ஆர்யாவின் வரவு தான் காரணம்.

சூர்யாவின் ஆஷ்ரமத்தில் யாருமற்ற நிலையில் வந்த பிறந்து ஒரு மாதமே ஆன ஆர்யாவைக் கண்டு என்ன நினைத்தானோ... " இந்த குழந்தைய நாம வளர்க்களாமா? " என கேட்டு சூர்யாவை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தான்.

பின் இவர்கள் அதற்குண்டான அனைத்து வேலைகளையும் முடித்து கிட்டத்தட்ட ஆர்யா அவர்களின் குழந்தை தான் என சொல்வதற்கு தேவையாக இருந்தது ஷிவனேஷ் மற்றும் சூர்யா தம்பதி தான் என்பதற்கான ஒரு அடையாளம் தான் என்ற நிலையிலே அந்த விபத்தும் நடந்திருக்க, பின் இரண்டு மாதத்தில் அடையாளத்தைக் காட்டி ஆர்யாவைப் பெற்றுக் கொண்ட பின்பே பெங்கலூருக்கு பயணமானாள் சூர்யா.

ஆர்யா " அப்பரம் ஆரவ் சித்தா... சசி அத்த... என்ன பார்க்க வந்துருக்காங்களா?! " என கண்கள் மின்ன அவன் கேட்டதும் அவன் கன்னத்தில் முத்தம் பதித்த சூர்யா அமோதித்து அவனை கீழே இறக்கிவிட்டாள்.

ஆரவ் ஷிவனேஷ் அருகிலே நின்றிருந்ததாலோ என்னவோ கீழே இறக்கிவிட்டதும் ஆர்யா சசியிடம் தான் ஓடினான்.

" அத்த! " என வாயெல்லாம் பல்லாக அதிர்ந்து அமர்ந்திருந்தவளின் மடியைப் பிடித்துக் கொண்டு குழந்தை சிரிக்க, கண்கள் கண்ணீரில் குளமாக அவனை அள்ளி அணைத்துக் கொண்டாள் சசி.

" செல்லக்குட்டி! நான் அத்தையா உங்களுக்கு!? ஆமா நான் தான் சசி அத்த! " என அவளே கேட்டுவிட்டு அவளே அவனை அணைத்துக் கொள்ள, ஆர்யா க்லுக்கென சிரித்தான். " எங்க எல்லாரையும் தெரியுமா செல்லம் உனக்கு? "

ஆர்யா அவள் ஆசையாய் அவன் கன்னத்தை வருடவும் வேகமாய் தலையாட்டி சிரித்தான். " தெர்யுமே! நீங்க சசி அத்த! அது ஆரவ் சித்தா... ஆனா நாம ஆரவ் சித்தாக்கிட்ட பேச வேணாம் அத்த... அவரு அப்பாவோட கோஸ்ட்கிட்ட பேசீட்டு இருக்காரு! " என ஏதோ இரகசியம் பேசுவது போல் சசியின் காதுக்குள் ஓத, அதை கேட்டு சசி அண்ணன்களை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டாள்.

ஆரவ் " டேய் தங்கம்! நீ சின்னப்பிள்ளையா இருந்தப்போ நான் டையப்பர்லாம் மாத்தி விற்றுக்கேன் டா! என்கிட்ட வா டா, " இவன் அவர்ளை நெருங்கி வர, சசியின் மடியிலிருந்து வேகமாய் இறங்கிய ஆர்யா, சூர்யாவிடம் ஓடினான்.

" நா வட மாட்டேன்! பேபி! என்ன காப்பாத்து! "

ஆரவ் அவனை துரத்தி ஓட, ஆர்யாவின் குழந்தை மனம் அங்கு நிலவிய மௌன நிலையை சகஜமாக்கியது.

சில மணி நேரங்கள் கடக்க, ஆர்யா தனக்கு புதிதாய் கிடைத்த அத்தை மற்றும் சித்தாவுடன் நன்கு ஒட்டிக்கொள்ள, அவன் கோஸ்ட் அப்பாவை மட்டும் அவ்வப்போது பார்ப்பதும் நோட்டம்விடுவதுமாய் இருந்தான்.

சூர்யா அனைவருக்கும் டீ போடுவதற்காக கிச்சனுக்கு செல்ல, ஆர்யாவின் ஒவ்வொரு அசைவையும் ஆசைதீற இரசித்துக் கொண்டிருந்த ஷிவனேஷ் ஒரு பெருமூச்சோடு எழுந்து அவளைப் பின் தொடர்ந்தான்.

சூர்யா நிழலாடுவதைக் கண்டு, பாலை அடுப்பில் வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். ஷிவனேஷ் அவளை அமைதியாய் பார்த்திருக்க, அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

டீ போட்டு கப்பில் ஊற்றும் வரை அங்கேயே நின்ற ஷிவனேஷ், சூர்யா ஒரு ட்ரேயை எடுத்ததும் அதில் கப்புகளை வைத்து எடுத்துச் சென்று மற்ற இருவருக்கும் கொடுத்தான்.

பள்ளி விட்டு வந்ததும் அத்தை மற்றும் சித்தாவுடன் விளையாடிய கலைப்பில் ஆர்யா சசியின் மடியில் அப்போதே துயில் கொண்டிருந்தான். அவன் அரைகுறை தூக்கத்தில் பேபி என முனகியபடி சூர்யாவிடம் தஞ்சமடைந்ததும் அவனை அழைத்துச் சென்று அறையில் உறங்க வைத்துவிட்டு அவள் வந்த நேரமெல்லாம் டீயை குடித்து முடித்திருந்த சசி மற்றும் ஆரவ் இவளைத் திரும்பி பார்த்தனர்.

ஆரவ் " ஷிவன்யாவ நாம எப்போ போய் பார்க்களாம் சூர்யா? "

சசி " உம்னு நீங்க சொன்னா நான் இப்போவே கூட வரேன் அண்ணி! "

சூர்யா " எனக்கும் ஷிவாவ பார்க்கனும்னு ஆசை தான். ஆனா அவளுக்கும் டைம் வேணும். இன்னைக்குத் தான் அவ யாதேஷைப் பார்த்திருக்கா... அவ என்ன முடிவெடுக்கப் போறான்னு தெரியாம நாம எதுவும் பண்ண முடியாதுல்ல மா, "

ஷிவனேஷ் " அப்போ யாதேஷ் உயிரோட இருந்ததே ஷிவாக்கு தெரியாது... அப்டி தானே? "

சூர்யா பெருமூச்சோடு தலையாட்டினாள். " நாழு மாசம் முன்னாடி வரைக்கும் எனக்குமே தெரியாது ஷிவா, எங்க ஷிவானிய பத்தின உண்மை எதாவது யாதேஷ் அம்மாவுக்கு தெரிஞ்சிட்டா அவள ஷிவன்யாகிட்டேந்து பிரிச்சிடுவாங்களோன்னு பயந்து தான் ஷிவன்யா தள்ளியே இருந்தா... இப்போ யாதேஷுக்கு எந்த நினைவும் இல்லன்னு தெரிஞ்சதும் அவ என்ன செய்வாளோ தெரியல, "

இதை கேட்ட ஆரவின் முகம் தோய்ந்தது. " அவளோட அத்யாயம் அவன் வாழ்கைல முடிஞ்சு போனதா சொல்லீட்டுப் போனா மா... அவளுக்கு வேற யாரு கூடையோ கல்யாணம் ஆனதால சொல்றாளோன்னு நினைச்சேன் ஆனா இப்போ... "

சூர்யாவும் சசியும் பெருமூச்சுவிட்டுக் கொள்ள, ஏதோ யோசித்துக் கொண்டிருந்த ஷிவனேஷ் இடவலதாய் தலையாட்டினான்.

" யாதேஷுக்கு நியாபகம் இருக்கோ இல்லையோ, ஷிவன்யா அவன் வாழ்கைல முடிஞ்சு போன அத்யாயமா இருக்கக் கூடாது. அவனோட வைஃப், அவனோட குழந்தை. உண்மை அவனுக்குத் தெரியனும். "

ஆரவும் அதற்கு அமோதித்தான். " இதுக்கு மேலையும் நாம இவங்க இரெண்டு பேர இப்டியே விட்டுட்டா, அவனுக்கு எல்லாம் நியாபகம் வர்ரதுக்குள்ள அவங்கம்மா அந்த ஸ்வேத்தாக்கு அவன கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்க டா. அவனே இன்னைக்கு அவள பார்த்துட்டான் டா, அது போதும். இனிமே அவனே பாத்துப்பான் பாரேன், "

" அவங்க இரெண்டு பேரும் பார்த்துக்குட்டாங்களா? " என மற்ற மூவரும் கேட்க, இன்றைய நினைவுகளை எண்ணி ஆரவின் முகத்தில் புன்னகை விரிந்தது.

" அவ குரல மட்டும் கேட்டதுக்கே எங்கள ஒரு வாரம் படுத்தி எடுத்தவன், கண்ணால பார்த்ததுக்கு அப்பரம் சும்மா இருந்துடுவானா? " நக்கலாக தன் நண்பனைப் பார்த்த ஆரவ் சிரிப்போடு கண்ணடித்தான். " அவங்க இரெண்டு பேர ஒரு இடத்துல சேர்த்துட்டா போதும், மத்தத நம்ம ஹீரோவே பார்த்துப்பான். "

விழி மீறிய வழி நாடி...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro