பறந்து செல்ல வா: 24
மறுபக்கமோ, முதல் முறை இருந்த ஃபரவெலுக்கு ஷிவன்யாவின் ஓசை கேட்கும் வாய்ப்பு கிடைக்காதென்ற ஏக்கத்தினால் வீம்பாய் வீட்டில் இருந்தவிட்ட யாதேஷ் இப்போது அவனவள் செய்த பிடிவாதத்தின் பலனாய் வெள்ளை வேஷ்டியில், அடர் பச்சை நிற சட்டையணிந்து சமத்துப் பிள்ளையாக அமர்ந்திருந்தான்.
ஆனால் அவன் செய்யும் ஆர்ப்பாட்டமெல்லாம் அவன் நண்பனுக்குத் தான் தெரிந்திருந்தது.
" எப்போ தான் டா அவ வருவா?! " என்று அரைமணி நேரமாக ஆரவை நச்சரித்துக் கொண்டிருக்கிறான் அந்த காலேஜின் காதல் மன்னன்.
" டேய் இன்னும் ஒரு தடவை நீ அந்த கேள்வி கேட்டாலும் நான் போய் நாட்டுக்குட்டு செத்துருவேன் டா! "
" அவ வந்துட்டானு சொல்லீட்டு நீ எங்க வேணா போ! " என தாராளமாக அனுமதி கொடுத்தவனை வெட்டவா குத்தவா என்பதைப் போல் பார்த்தான் ஆரவ்.
இப்படி வந்ததில் இருந்தே தொல்லை செய்பவனை என்ன செய்ய என தலையில் அடித்துக் கொண்டவன், அவனை யாதேஷிடம் தனியே விட்டுவிட்டு எங்கோ சென்று மறைந்திருந்த ஷிவனேஷை மனதிற்குள்ளே அர்ச்சித்துக் கொண்டிருந்தான்.
ஆரவின் அர்ச்சனை விஷ்வலில் அவன் தலை மேல் தெரிந்தது போல, எண்ணி பத்து நிமிடங்களில் சரியாக சிகப்பு நிற சட்டை அணிந்து அவர்களை நோக்கி வீராப்பு விருமாண்டி போல் வந்து நின்றான் ஷிவனேஷ்.
ஆரவிற்கு இவனை அர்ச்சனை செய்யக் கூட நேரமிருக்கவில்லை. ஏனெனில் எதற்சையாக அந்த பக்கமாக வந்திருந்த இரண்டாவது வருடம் பயிலும் நம் நாயகனின் தங்கை, " என்ன டா வேஷ்டி சட்டைல காமெடியா இருப்பீங்கன்னு நினைச்சேன். இப்டி செம்மையா இருக்கீங்க? பரவால்லையே காலேஜே உங்களப் பத்தித் தான் பேசீட்டு இருக்கு... யாஸ் ஸீனியர்ஸ்-அ பார்த்தீங்களா, பார்த்தீங்களான்னு! "
விஜித்தாவின் குரல் கேட்டதும் ஆரவ் அவளைக் கண்டு விழித்தான். ஷிவனேஷ் சாதாரணமாக தோளை குலுக்கினாலும், தன் நாயகியின் எண்ணத்தில் இருந்த நாயகன், " போ டி அந்த பக்கம்! " என விஜித்தாவை ஓரமாக தள்ளிவிட்டான்.
" ம்க்கும் பசங்க பாவம் மொதல் முறையா இப்டி பசங்களா லட்சனமா வந்துருக்கீங்களேன்னு பார்க்க வந்தேன்ல... என்ன தான் சொல்லனும், " விஜித்தா முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றபோது ஆரவிற்கு ஏமாற்றமாக இருந்தது.
என்ன ஏமாற்றம்? எதற்கான ஏமாற்றம்? அவள் தன்னை பார்க்காமல், தன்னிடம் பேசாமல் சென்ற ஏமாற்றமா?
ஆரவின் மூளை அந்த கேள்விகளையெல்லாம் மதிக்கவில்லை. யாதேஷ் ஷிவன்யா நினைப்பில் உலகத்தை மறந்ததையும் அறிந்திருந்தவன், நிச்சயம் ஷிவனேஷ் இவர்கள் பக்கம் கூட திரும்ப மாட்டான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு அவளை கத்தி அழைத்தான். " ஏய் நில்லு டி! "
அலட்டாமல் அவனை திரும்பி பார்த்தாள் விஜித்தா. வளைந்த அவள் புருவங்கள் அவனை கண்டு மேல் ஏற, ஆரவின் கண்கள் தாண்டவமாடியது.
" என்ன எதுவுமே சொல்லாம போற?! "
" ஹ்ம்... என்ன சொல்லனும்? அதான் சொல்லீட்டேனே! "
ஆரவிற்கும் அதானே தெரியவில்லை. அவள் என்ன சொல்லவில்லை என்பதற்காக இப்போது வாய் தகராறிற்காக இவன் தயாராகிறானோ தெரியவில்லை.
" அது... நான்... அதான் இதோ நீ சொன்னன்னு தான இந்த கலர் போட்டுட்டு வந்தேன்?! ஒன்னுமே சொல்லாம போற! " என ஒருவழியாக ஒரு பாய்ன்ட்டை அவன் பிடித்துக் கொள்ள, விஜித்தாவின் முகத்தில் பூத்த புன்னகை அவனை ஆட்டித் தான் வைத்தது.
கல்லூரியில் நுழைந்தது முதல், அனைவரும் இவர்களையே சொல்லி சொல்லி விஜித்தாவின் மனதை அல்லோலப் படுத்தியிருக்க, அண்ணனைப் பார்க்கும் சாக்கில் ஆரவைப் பார்க்க வந்த அவளும், நீல வாண நிற சட்டையின் கைகளை மடித்து விட்டு, வேஷ்டியை மடித்துக் கட்டி அவள் அண்ணனை மனதிலே மர்டர் செய்து கொண்டிருந்தவனை தூரத்தில் பார்த்ததுமே உறைந்து விட்டாள்.
எத்தனை நாள் அவளும் கணவு கண்டிருப்பாள் இவனை இப்படிப் பார்க்க?
அதே புன்னகையோடு அவனைப் பார்த்து கண்ணடித்தவள், " என் அத்தப்பையன் அழகுக்கு அவன் எந்த கலர் போட்டாலும் இந்த ஊரே சொக்கிப் போய்டும், அத நான் வாயால சொன்னா தான் நம்புவீங்களோ? " என கூறியதோடு அவன் நிலையடையும் முன்பாக பதில் எதிர்பார்க்காமல் அங்கிருந்து ஓடி விட்டாள்.
உறைந்து நின்றிருந்த ஆரவை வேறு எதுவும் பார்க்கக் கிடைக்காததால் ஏறஇறங்க பார்த்துக் கொண்டிருந்த ஷிவனேஷ், " மச்சான் இவன் உன் தங்கச்சிய கரெக்ட் பண்ண ட்ரை பன்றேன்னு எவ்ளோ நாளா சுத்தீட்டு இருக்கான்? "
" டேய் போடா பேசாம, நான் இருக்க நிலைமைக்கு நீ வேற, "
இவனையும் ஏறஇறங்க பார்த்த ஷிவனேஷ் ஆரவின் ஒன்றும் தெரியாத பச்சப்பிள்ளை முகத்தைக் கண்டு, " இவனுக்கு லவ் செட்டான மாதிரி தான் போ, " என தலையிலே அடித்துக் கொண்டான்.
இவர்களின் தொல்லைப் பொருக்காமல் எழுந்து அங்கிருந்து செல்ல எத்தனித்த யாதேஷ் சடாரென கால்களை பசை வைத்து ஒட்டினார் போல் அதே இடத்தில் நிற்க, அவனவளின் மெல்லிய ஜிமிக்கி காற்றில் எழுப்பும் அந்த மெல்லிய ஒலி அவன் காதுகளை வந்து மென்மையாய் தீண்டியது.
காற்று அவள் கொலுசின் ஒலியை அவனிடம் அழைத்து வர, யாதேஷ் திரும்பி அந்த திசையை நோக்கிய போது அவன் காதல் ராணியும் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
எட்டடி தூரத்திலே திரும்பி நின்றிருந்தவனை அடையாளம் கண்ட ஷிவன்யா, அவன் தன்னை நோக்கி திரும்பியதும் அவன் கண்களை கண்டதும் அவளையும் அறியாது புன்னகைக்க, ஒரு பெருமூச்சோடு தன்னை மீண்டும் சமன்செய்து கொண்டு அவனை நோக்கி நடந்தாள்.
என்றும் தவறாமல் அவனை அவள் முழுதாய் நெருங்கும் முன்பே, அவன் இதழ் மொழிந்தது அவள் பெயரை...
" யமுனா... "
அவளையும் அறியாமல் அவள் புன்னகைத்தாள். வெட்கக் கதுப்புகள் அவள் வதனத்தை நிறைக்க, பதில் தராமல் அவன் முன் காலைப் பார்த்தபடி நின்றிருந்தவளை நிலைக்குக் கொண்டு வந்ததென்னவோ யாதேஷின் பெருமூச்சு தான்.
ஆனால் நிமிர்ந்து பார்த்த அடுத்த நொடி அவன் கண்களில் கண்ணீரை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
" மாமா! ஏன் அழறீங்க? மாமா! " நாணமெல்லாம் அடுத்த நாட்டிற்கு பறந்திருக்க, ஷிவன்யா விரைந்து சென்று அவன் முகத்தை ஏந்தினாள்.
அவளை கண்டு சிரிக்கும் விழிகளில் மேலும் நீர் கோர்த்தபோது வேகமாய் அதை துடைத்தெறிந்தாள்.
" என்னாச்சு மாமா? "
" ஏன் என்னால உன்ன பார்க்க முடியல...? " அவன் கேள்வி அவளது இதயத்தில் ஊசியாய் குத்தியது.
ஷிவன்யா பதிலற்று அவனை நம்பாமல் பார்த்தாள். கண் பார்வை இழந்த ஆறு வருடத்தில் யாதேஷ் அந்த இழப்பை எண்ணி அவள் அறிந்தவரை என்றும் வருந்தியதில்லை. ஆனால் இன்றைய அவனின் வலி...
" என்னால உன்ன பார்க்க முடியல யமுனா... நீயும் எல்லார மாதிரி தான ஆசஆசையா இன்னைக்கு கிளம்பியிருப்ப... ஆனா... ஆனா என்னால உன்ன சந்தோஷப்படுத்துற மாதிரி ஒன்னுமே சொல்ல முடியலையே டி... "
ஷிவன்யாவிற்கும் தொண்டை அடைத்தது. அவள் ஆசையாசையாக அவனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து கிளம்பி வந்தாள் தான், ஆனால் அது அவனை இப்படி உடைந்து பார்ப்பதற்கு அல்லவே.
" மாமா என்ன மாமா? " அவளுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
விழிகளில் கண்ணீர் மழ்க நின்றவனை பார்க்கப்பார்க்க, அவள் இதயத்தின் வலி மலையேறி கொண்டே இருந்தது. அவளின் உடைந்த குரலை கேட்ட யாதேஷ் பட்டென அவன் வலியிலிருந்து வெளிவந்து, அவள் கரத்தை இறுக்கிப் பிடித்தான்.
" சாரி டி, நான்...நான் திடிர்னு எமோஷ்னல் ஆயிட்டேன் போல, ஒன்னும் இல்ல மா... ஏ ஆழாத டி, "
யாதேஷ் பதட்டத்தோடு கெஞ்சும் குரலில் இரைஞ்ச, அவன் வலியிலும் தன்னை பார்க்கும் இவன் கள்ளம் கபடமற்ற மனதை எண்ணி மெச்சிக் கொள்ளத் தான் தோன்றியது ஷிவன்யாவிற்கு. அவன் விரல்கள் அவள் கண்ணீரை மெதுவாய் துடைக்க, ஷிவன்யா மீண்டும் புன்னகைக்க முயன்றாள்.
" நான் ஒன்னும் அழல... உங்களுக்காக இவ்ளோ அழகா ரெடி ஆகி வந்தா நீங்க தான் அழ வச்சு என்னோட மேக்கப்-லாம் கலைக்கிறீங்க இப்போ, "
யாதேஷ் சிரித்துவிட்டான். அவன் விரல்கள் மை தீட்டிய அவள் விழிகளை மீண்டும் ஒரு முறை வருடியது. ஷிவன்யா அந்த தீண்டலில் குருகுருக்க, யாதேஷ் ஒரு புன்னகையோடு தன் விரலை அகற்றினான்.
" சரி... மாமா எப்டி இருக்கேன்? எதுவுமே சொல்லல... "
தனக்காக அவன் தன் வலியை மறைப்பதை உணர்ந்த ஷிவன்யா, அவன் கன்னம் ஏந்தி மீண்டும் அவன் விழிகளை நோக்கினாள்.
" உங்க வலிக்கான எக்ஸக்ட் சொல்யூஷன என்னால குடுக்க முடியாது தான்... ஆனா நான் உங்க முன்னாடி நிக்கிற ஒவ்வொரு நேரமும் உங்க கண்ணு இரெண்டும் என்னப் பார்த்து சிரிக்கும் மாமா, அந்த அழகான ஒரு விஷயம் போதும் எனக்கு... "
யாதேஷ் அவள் கரத்தில் தன் முகத்தை புதைக்க, ஷிவன்யா மறுகையால் அவன் கேசத்தை வேண்டுமென்றே கலைத்துவிட்டாள்.
" இருந்தாலும்... உலகமே உன்ன பார்க்குறப்போ என்னால முடியலையே... " காற்றிற்கும் கேட்காதபடி அவன் முனுமுனுக்க, ஷிவன்யா தலையை இடவலதாய் ஆட்டினாள்.
" உங்க மனசுல நான் இருக்குற மாதிரி என்ன யாரும் பார்க்கப் போறதில்ல... நீங்க எதுவும் யோசிக்காதீங்க... நான் ஈவ்னிங் ஊருக்கு வேற போகனும்... என்ன சிரிச்ச முகமாத்தான் நீங்க அனுப்பி வைக்கனும் சரியா? "
யாதேஷ் புன்முறுவலுடன் அவள் நெற்றி மோதி தலையசைத்தான்.
" சரிங்க தங்கம்... உங்க ஆர்டர்படியே மாமா சிரிச்ச முகமா உங்கள வழியனுப்பி வைப்பேன், "
" வெரி குட்... சரி, சரி இப்டி கிழக்கால பார்த்து நில்லுங்க நீங்க! " என திடீரென பிடித்து அவனை ஒரு புறமாய் இழுக்க, அவன் " ஏதே கெழக்கா? " என தடுமாறினான்.
" ஆமா காலேஜே என் மாமன பார்த்து எல்லா கண்ணையும் வச்சிருக்கும்... அப்பப்பா என் மாமாவோட அழக மறைக்கவே நான் புதுசுபுதுசா நிறைய செய்யனும் போல, "
தன்னை நெட்டிமுறித்து வாய் ஓயாமல் புகழும் அவளது சைகையில் சத்தமிட்டு சிரித்த யாதேஷ், அவன் அழகிய புன்னகையோடு, " அப்போ நான் சூப்பரா இருக்கேனோ? "
" பின்ன இல்லாமையா?! நான் ஹாஸ்ட்டலேந்து இங்க வர்ரதுக்குள்ளயே எத்தன பேர் உங்களப் பத்தி பேசீட்டாங்க தெரியுமா? எனக்குப் போட்டியா யாராவதெல்லாம் வந்தா அவ்வளவு தான் சொல்லீட்டேன்! "
ஷிவன்யா சீண்டும் வண்ணம் கைகளை குறுக்கே மடக்கி மறுபுறம் திரும்ப, அவளை கொஞ்சிக் கெஞ்சி அவளவன் சமாதானம் செய்து முடிக்கவும், கல்லூரி கூட்டம் இவர்களைத் தேடி வரவும் சரியாக இருந்தது.
பின் என்ன... அந்த நாளும் என்றும் போல் யாஷாவின் மயக்கும் குரல்களுடன் தொடங்கி, ஆடல்பாடலுடன் மகிழ்ச்சியோடு ஒரு முடிவுக்கு வந்தது.
பேருந்து நிலையத்தில் யாதேஷின் கையை விட மனமில்லாமல் நின்றிருந்தாள் ஷிவன்யா.
" ஏய் ஒரு வாரம் தான டி... அடுத்த வாரம் எக்ஸம்க்கு இங்க வந்துடுவல்ல... ஏன் கண்ண கசக்கிக்கிட்டு இருக்க? "
" நானெல்லாம் ஒன்னும் அழுவல... " கண்களை துடைத்தவளின் கைகள் மீண்டும் பொய்யுரைக்க, அவள் விரல்களை பிடித்து மறுகரத்தால் அவள் கண்ணீரை மென்மையாய் துடைத்துவிட்ட யாதேஷ்,
" யமுனா நீ இப்டி அழுதுக்குட்டே ஊருக்கு போனீன்னா என் மனசு கேட்காது டி... "
ஷிவன்யா அவன் கரத்தில் தன் முகத்தைப் புதைத்து, " நான் வேணும்னு... அழல... ஒரு மாதிரி இருக்கு... "
அவளிடம் சரியான பதில் இல்லை. இதே போல் எத்தனையோ முறை கடந்த இரண்டரை வருடத்தில் ஊருக்குக் கிளம்பிச் சென்றிருக்கிறாள். இறுதி விடுமுறைகளின் போதெல்லாம் மாதக்கணக்காக அவன் நினைப்பில் சஞ்சரித்தபடி அவனை காணப்போகும் நாட்களை எண்ணி கணவு கண்ட போதெல்லாம் இல்லாத ஒரு வெறுமை இப்போது ஷிவன்யாவின் இதயத்தை ஆக்ரமித்திருந்தது.
காரணமும் புரியாமல் வழியும் தெரியாமல் மீண்டும் அவனிடமே தஞ்சமடைந்தாள்.
" ஒன்னுமில்ல கண்ணம்மா... ஒரு வாரம் தான்... நீ ஊருக்கு போய்ட்டு வந்துடு, எதாவதுன்னா உடனே என்ன கூப்டு டி, நான் வரேன். " யாதேஷ் அன்பாய் அவள் தாடையை ஒரு விரலால் தூக்க, ஷிவன்யாவின் கண்ணீர் தேங்கிய விழிகள் அவனை இயன்றளவு தனக்குள் நிறப்ப முயன்றது. " நம்பு டி... நீ ஒரு ஃபோன் பண்ணு, நான் உடனே கிளம்பி வந்துடுறேன். "
ஷிவன்யா பெருமூச்சோடு அவன் கைகளை மெதுவாய் கீழ் இழுத்து அவன் விரல்களை இறுக்கிப் பிடித்தாள்.
" நீங்க வந்துருவீங்க ஆமா... எனக்கு மனசே சரியில்ல மாமா... உங்கள விட்டுட்டு போனுமா...? "
" நான் தனியாவா டி தங்கம் இருக்கேன்? அதான் சென்னைல ஏகப்பட்ட பேரு இருக்காங்களே, " என நக்கலாய் கூறியவனின் கரத்தில் நறுக்கென கிள்ளினாள்.
" என்ன காமெடியா? நான் இங்க என்ன சொல்லீட்டு இருக்கேன்—
யாதேஷ் வேகவேகமாய் அவள் இதழில் ஒரு விரல் வைத்து, புன்னகையோடு தலையாட்டியபடி, " புரியிது, புரியிது... ஒன்னும் பிரச்சனை இல்ல, நான் எங்கையும் தனியா போகப் போறதில்ல. உன் அண்ணனுங்க என் கூட தான இருக்கப் போறானுங்க? நானும் அவனுங்கள விட்டு எங்கையும் போ மாட்டேன். "
ஷிவன்யாவின் பைகளை பஸ்ஸில் ஏறி வைத்துக் கொண்டிருந்த ஷிவனேஷைத் காரில் சாய்ந்து நின்று தலை மேல் கை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஆரவ் அவனுக்குள்ளே முனுமுனுத்துக் கொண்டான். " ஆமா ஜென்மசனி விடாதுன்னு சும்மாவா சொன்னாங்க... "
" உன்ட்ட யாரும் கேட்ல போ டா! " யாதேஷ் அவனைப் பார்த்து கத்த, ஷிவன்யா அவனை அவள் புறம் இழுத்தாள்.
" நான் பேசீட்டு இருக்கேன், எனக்கு பதில் சொல்லுங்க! "
" சரி நம்பு டி, நான் கேர்ஃபுலா தான் இருப்பேன். நீ எதுவும் டென்ஷன் ஆகாம போயிட்டு வா, நான் வேணா ஷிவாவ கூட வர சொல்லவா? "
அவன் கேட்ட கேள்வியில் சடாரென ஷிவன்யாவின் கண்கள் விரிந்தது.
" எதுக்கு?! போற வழியெல்லாம் ஹிட்லர் என் காத அறுக்குறதுக்கா? வேணாம் போங்க! " என அவன் காதிற்குள் கத்தியவள் சொன்னதோடு நில்லாமல் பேருந்தில் இருந்து விருமாண்டி போலவே இறங்கி வந்த ஷிவனேஷிற்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு குடுகுடுவென ஏறிச் சென்று அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
" ஊருக்கு போயிட்டு எனக்கும் ஒரு ஃபோன் பண்ணி சொல்லு... பத்திரம், " என இரண்டு மார்க் பதிலை கொடுத்த ஷிவனேஷ், ஷிவன்யா அவனைக் கண்டு நுப்பத்தி இரண்டு பல்லும் தெரிய இரண்டு கட்டை விரலையும் தூக்கி காட்டியதும் தான் காதலர்களுக்குத் தனியே இடம் கொடுத்துவிட்டு இன்னும் தலையில் அடித்து கௌன்ட்டர் அடித்துக் கொண்டிருந்த ஆரவின் கழுத்தைப் பிடித்து இழுத்துச் சென்றான்.
" எல்லாம் எடுத்துக்குட்டல்ல? " யாதேஷ் ஒரு நான்கு முறையாவது கேட்டிருப்பான் இந்த கேள்வியை...
" எடுத்தாச்சு எடுத்துச்சு... என்ன மனசு தான் கூட வராது போல... "
மீண்டும் அவள் தொடங்கிய அதே இடத்தில் வந்து நிற்க, அவள் முகம் வாடுவதை குரலில் கண்டிருந்தவன், " பரவாயில்ல அது என் கூட இருக்கட்டும். நான் பத்திரமா பாத்துக்குறேன், "
" நீங்க பாத்துக்குறீங்களா? "
" என் கிட்ட இருக்குற வரைக்கும் அது என்னோடது. கண்டிப்பா ரொம்ப நல்லா பாத்துக்குவேன், "
யாதேஷின் காதலையும் உறுதியையும் கேட்டு சிரித்த ஷிவன்யா, பேருந்து கிளம்ப தயாராகவும் கண்களெல்லாம் காதலாக அவனை பார்த்தாள்.
" சரி நான் போயிட்டு ஒரு வாரத்துல வந்துடுறேன், நீங்க பத்திரமா இருங்க மாமா... "
அவள் கரத்தை ஒரு முறை இறுக்கிப் பிடித்தவன், " போயிட்டு வா... நான் இங்கையே இருக்கேன்... "
" ஆரவ் அண்ணா நான் போயிட்டு வரேன்! என் மாமாவ பாத்துக்கோங்க! ஹிட்லர் நான் போயிட்டு வரேன்! "
ஆரவும் ஷிவனேஷும் சற்று தூரத்தில் இருந்தே இவர்களை நோக்கி புன்னகையோடு கையசைக்க, மதுரை மாவட்டம் செல்லும் அந்த பேருந்தும் அந்த காதலர்களின் பிரியா மனங்களுடன் அங்கிருந்து விடைப்பெற்றது.
அந்த பேருந்து பேருந்து நிலையத்தை விட்டுச் செல்லும் வரை அதை நோக்கியே இருந்த தன் கண்களை எடுக்காமல் நின்ற யாதேஷ், இவ்வளவு நேரமும் படபடத்த அவன் இதயம் மெதுமெதுவாய் அமைதியடைந்ததும் பெருமூச்சோடு அவன் நெஞ்சைப் பிடித்தான்.
அவள் முன் மறைக்க முயன்ற அந்த ஏக்கம் இப்போது அவன் முகம் முழுவதும் படர, அவன் குரல் அவள் இதயத்தை தீண்டாமலே கானலாய் மறைந்தது.
" சீக்கிரம் வந்துரு டி... "
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro