பாவையின் வலிகள்: 29
அப்போதே தேர்வை முடித்துவிட்டு பெருமூச்சோடு வெளியே வந்தாள் ஷிவன்யா. சில நாட்களாய் தூக்கம் கிடைக்காத காரணத்தினால் அவள் கண்களை கருவளையங்கள் வளைத்திருக்க, நெற்றியை நீவிக் கொண்டு என்றும் தன்னவனோடு இருக்கும் அதே மரத்தடியில் சாய்ந்து அமர்ந்தாள்.
நான்கு தேர்வுகள் முடிந்திருந்தது. ஷிவன்யா ஊரிலிருந்து வந்து ஒன்றரை வாரத்திற்கும் மேலாகிவிட்டது. தேர்விருந்த போதெல்லாம் நண்பர்கள் மூவரில் யாரேனும் ஒருவர் வந்து அவளை கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். மற்ற நாட்களில் விஜித்தாவுடனே சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தாள்.
ஆனால் அந்த வீட்டில் நடக்கும் எதுவும் அவள் வாயைவிட்டு இன்றளவும் வெளியே வரவில்லை.
முதல் இரண்டு நாட்கள் ஷிவன்யா அந்த வீட்டிலே இல்லாததை போல் பால்வா அடித்துக் கொண்டிருந்த சாதனா ஒரு நாள் ஷிவன்யா தன் பாதிநேர வேலையை முடித்துவிட்டு பேருந்து கிடைக்காமல் என்றுமில்லாத நேரமாக எட்டு மணிக்கு மேல் தாமதமாக வந்த அன்று வந்து கதவைத் திறந்தவர் முகத்திற்கு நேராக பொரிந்துவிட்டார்.
" ஒருத்தவங்க வீட்டுக்கு இந்த நேரத்துல போறோமேன்னு ஒரு எண்ணம் இல்லையா? நாள் ஃபுல்லா ஊரு சுத்தீட்டு நைட்டுப் படுக்குறதுக்கும் உங்குறதுக்குமா நாங்க வீடு வச்சிருக்கோம்?! "
ஷிவன்யா அவரது அதட்டலில் கதவருகிலே பட்டென நின்றுவிட, சாதனாவின் கண்கள் வெறுப்பை கக்குவதை பார்க்க இயலாமல் அவள் வேகமாக தலையை தாழ்த்திக் கொண்டாள். பஸ் லேட்டாகிவிட்டது என்று சொல்லக் கூட ஷிவன்யாவிற்கு தைரியம் வரவில்லை. எங்கு தான் எதிர்த்து பேசியதாய் நினைத்துவிடுவாரோ என்னும் பயத்தில் அவள் நடுநடுங்கி அங்கேயே நிற்க, அவளைத் தாண்டி நடந்த சாதனா
சாதனா " நீங்க உங்க இஷ்டத்துக்கு வருவீங்க... நீங்க வர்ர நேரத்துத்துளாம் இந்த வீட்டுல சாப்பாடு இருக்காது. எப்பையோ சாப்பாட நாய்க்கு போட்டாச்சு. " என யாருக்கோ சொல்வதைப் போல் கத்திவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஷிவன்யா கூனிக்குறுகி, கிட்டத்தட்ட விஜித்தா வந்து அவள் சிலைப் போல் நிற்பதற்கான காரணம் புரியாமல் அவளை உலுக்கியதும் தான் நினைவுக்கேத் திரும்பினாள். விஜித்தாவிடமிருந்து தன் சங்கடத்தை மறைத்த ஷிவன்யா, அவள் உணவுண்ண அழைத்தபோது தொண்டை அடைக்க தயங்கி நின்றாள்.
ஆனால் விஜித்தா அவளை விடாமல் உணவுண்ண அழைத்துச் செல்ல, உண்மையில் அங்கு கொஞ்சம் கூட உணவு மிச்சம் இருக்கவில்லை. ஆனால் அத்தோடு தயங்காமல் ஷிவன்யா சற்றுத் தன்னையே அசுவாசப்படுத்திக் கொண்டு விஜித்தாவிற்கும் அவளுக்கும் சமைக்கத் தொடங்கினாள்.
இரண்டு நாள் அந்த வீட்டில் ஷிவன்யாவின் சமையலே ஓட, இரவு ஷிவன்யா தான் உண்ட தட்டை கழுவிக் கொண்டிருந்த போது கைகழுவ வந்த ஸ்வேத்தா பட்டும்படாமல் தள்ளி நின்று குழாயில் அவள் தட்டை போட்டுவிட்டு ஷிவன்யா நிற்பதே தெரியாதது போல் பேசிச் சென்றாள். " பரவாயில்ல, ஓசில இருக்குறதுக்கு பதிலா வீட்டுல இந்த வேலையாவது பார்க்குறியே, "
ஷிவன்யா சுருக்கென எழுந்த கோவத்திலும் அவள் தட்டை கழுவாமல் கூட போட்டுவிட்டுச் சென்ற ஆத்திரத்திலும் அப்படியே நிற்க, திடீரென எங்கிருந்தோ வந்த யாதேஷ் அவளை கட்டியணைத்துக் கொண்டான்.
ஷிவன்யாவின் முகம் பட்டென மாற, கைகளைத் துடைத்துக் கொண்டு அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள்.
யாதேஷ் " ஓய் பொண்டாட்டி நீ இங்க என்ன பன்ற? வெசல் வாஷிங் எல்லாம் பண்ண தான் ஆள் இருக்காங்களே, நீ ஏன் டி இந்த வேலையெல்லாம் பார்த்துட்டு இருக்க? "
அவனை இரண்டு நாட்கள் களித்துப் பார்க்கும் ஆனந்ததில் அவனை தாவி அணைத்துக் கொண்ட ஷிவன்யா அவன் கேள்வியையும் கவனிக்கவில்லை. அவர்களை எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டு சமையலறை வாசலில் நின்ற ஸ்வேத்தாவையும் கவனிக்கவில்லை.
" மாமா! எப்போ வந்தீங்க நீங்க? "
யாதேஷ் அழகான புன்னகையோடு அவள் நெற்றி மோதினான். " உன்ன பார்க்கத் தான் மாமா ரெஸ்ட் எடுக்கக் கூட போகாம ஆசையா ஓடி வந்தேன். நீ என்ன பார்க்காம— "
" அப்போ இன்னும் சாப்பிடலையா மாமா நீங்க? இருங்க நான் எடுத்து வைக்கிறேன், "
அவள் வேகமாக அவனிடமிருந்து பிரிந்து தட்டை எடுக்கப் போக மீண்டும் அவளைப் பிடித்திழுத்து அணைத்துக் கொண்டான்.
" ஏ சாப்பாடு இருக்கட்டும் டி, உன்ன பார்க்க இரெண்டு நாள் களிச்சு வந்துருக்கேன். என்ன கவனி டி, " என அவள் கழுத்தில் முகம் புதைத்து சினுங்க, சிரித்துக் கொண்டே அவனுக்கு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு திரும்பினாள்.
" நான் உங்கள தான் மாமா கவனிக்கிறேன். இந்தாங்க ஆ காட்டுங்க, நான் தான் சமைச்சேன். சோ... எப்படி இருக்கு? " என அவனுக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டு அவள் ஆர்வமாய் கேட்க, அதை ருசித்து உண்டவனின் அழகில் அவள் சொக்கித் தான் போனாள்.
" அம்மம்மா! இவ்ளோ அருமையா செஞ்ச என் தங்கத்தோடு கைக்கு தங்கத்துல வளையல் போற்றுவோமா?! "
" ஹா போடுவீங்க, போடுவீங்க. இந்தாங்க, " என நக்கலோடு அவனுக்கு மீண்டும் ஊட்டிவிட்டாள்.
" உண்மையா தான் டி சொல்றேன். மாமா பொய் சொல்லுவனா உன்ட்ட? இந்த கைக்கு தங்கம் என்ன தங்கம், வைரத்துல கூட வளையல் போடலாம்! " என அவள் கைகளை பிடிட்டுக் கொண்டு அவன் சாப்பிடாமல் அடம்பிடிக்க, ஷிவன்யா சிரித்துக் கொண்டே அவனை மறுகையால் அடித்தாள்.
" சரி போதும் போதும் நம்புறேன் மாமா, "
" எங்க டி இவ்ளோ நல்லா சமைக்க கத்துக்குட்ட? "
" இன்னும் கத்துக்க நிறைய இருக்கு மாமா, ஆனா இதெல்லாம் என் மாமாக்கு சமச்சுப் போட்டு நீங்க சாப்பிடுறத இப்படி ஹப்பியா பார்க்குறதுக்காகத் தான் கத்துக்குட்டேன். "
அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாய் இரவு உணவை முடிக்க, சரியாக காதை குடைந்து கொண்டே உள்ளே வந்த ஆரவ் இன்னமும் தகதகவென எரியாத குறையாக நின்ற ஸ்வேத்தாவை பார்த்து,
" என்ன டா ஷிவாமா ஸ்ட்டவ் எதுவும் ஆஃப் பண்ண மறந்துட்டியா? ஏதோ தீயிர வாட வருதே, " என மோப்பம் பிடித்துக் கொண்டே இவன் ஸ்வேத்தாவைத் தாண்டி வர, அவள் சுடுநீரை காலில் ஊற்றியது போல் அங்கிருந்து விருவிருவென மாடிக்கு சென்றுவிட்டாள்.
" எரிஞ்சா எரிஞ்சிட்டு போகுது, நீ வா வீட்டுக்குப் போகலாம், " என யாதேஷ் அவனை வந்த வழியிலே இழுத்துச் செல்ல ஷிவன்யா புன்னகையோடு அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தாள்.
ஏற்கனவே விஜித்தா தூங்கி இருந்ததால் சற்று காற்று வாங்கலாம் என பால்கெனிக்கு செல்லப் போன ஷிவன்யாவை திடீரென பிடித்து ஒரு ஓரமாய் இழுத்து நிறுத்தினாள் ஸ்வேத்தா.
" என்ன விடுங்க! "
ஸ்வேத்தா " உனக்கென்ன அவ்ளோ திமிரு?! இன்டேரக்டா எவ்ளோ சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டியா நீ? "
ஷிவன்யா அவள் கைகளை தேய்த்துக் கொண்டே அவளை பார்க்கப் பிடிக்காமல் கடந்து செல்ல முயல, மீண்டும் அவளைப் பிடித்து சுவற்றோடு தள்ளினாள் ஸ்வேத்தா.
" ஏய் பேசீட்டு இருக்கேன்ல! உங்க வீட்டுல எந்த மனெர்ஸும் உனக்கு சொல்லிக் குடுக்கலையா?! "
" தேவையில்லாம பேசாதீங்க ப்லீஸ், " ஷிவன்யா பல்லிடுக்கில் தன் பொருமையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
" நீ எங்க இருக்கனுமோ அந்த இடத்துல மட்டும் இருந்துக்கோ. என் கண்ணு முன்னாடி இனிமே நீ வரவே கூடாது. அதோட இன்னும் ஒரு முறை யாதேஷை நீ மாமான்னு கூப்ட்டன்னு வச்சுக்கோ... நான் பேசீட்டே மட்டும் இருக்க மாட்டேன். "
விரல் நீட்டி ஷிவன்யாவை எச்சரித்த ஸ்வேத்தா, ஷிவன்யாவின் கண்கள் தீப்பொறியென மிளிர்வதை பொருட்படுத்தாமல் மேலும் அவளை முறைத்தாள்.
" நீங்க சொல்றத கேட்டு நடக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல, "
" இந்த வீட்டுல இருக்குறப்போ நீ கேட்டுத் தான் ஆகனும்! " ஸ்வேத்தா படாரென ஷிவன்யாவை பலமாய் சுவற்றில் இடித்து அவள் கழுத்தை அழுத்திப் பிடிக்க, ஷிவன்யா வலியில் அவளை வேகமாய் தன்னிடமிருந்து தள்ளிவிட்டாள்.
ஸ்வேத்தா கீழே விழுவதற்குள் அவளை தாங்கிப் பிடித்த சாதனா, ஷிவன்யா தன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு அவரை அதிர்ச்சியோடு பார்த்தபோது அவளை ஓங்கி அறைந்துவிட்டார்.
தன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு மடிந்து அமர்ந்த ஷிவன்யா, சாதனாவை அதிர்ச்சியோடு பார்க்க
சாதனா " என் வீட்டுக்குள்ள வந்துட்டு எவ்ளோ தைரியம் இருந்தா நீ என் மருமகளையே தள்ளி விற்றுப்ப! வீட்டுல இடம் கொடுத்துட்டேங்குற திமிருல இருக்கியா நீ?! உன்னால இந்த வீட்டுக்கு என்னைக்கும் ஒரு மருமகளா ஆக முடியாது டி! "
ஸ்வேத்தா " நல்லா சொல்லுங்க அத்த, என் கண்ணு முன்னாடியே யாதேஷ பிடிச்சிட்டு நிக்கிறா தெரியுமா அவ? "
சாதனா அதை கேட்டு ஷிவன்யா ஏதோ செய்யக் கூடாததை செய்ததை போல அவளை ஒரு பார்வைப் பார்த்தார்.
" வேற ஒருத்தவங்க வீட்டுல இருக்கோம்ங்குறத மறந்துட்டு சுத்துறல்ல நீ? நல்லா கேட்டுக்கோ, நீ என்ன செஞ்சாலும் உன்னால என் பையன் கூட வாழ முடியாது. ஸ்வேத்தாக்கு தான் நான் அவன கட்டி வைப்பேன். ஒரு கிராமத்துல இருந்து வந்துட்டு நீ ஏதோ செஞ்சு என் பையன ஏமாத்தீட்டு இருக்க, அவனுக்கு எல்லாம் தெரிஞ்சதும் உன்ன விற்றுவான் கண்டிப்பா... இப்போ வரைக்கும் என்னோட பையன் உன்ன இங்க அழைச்சிட்டு வந்ததால தான் உனக்கு இடம் குடுத்துருக்கேன், இல்லனா அன்னைக்கே உன்ன தூக்கி எறிஞ்சிருப்பேன்! " என வார்த்தைகளில் அமிலம் கொட்டி ஷிவன்யாவின் மனதை இரக்கமின்றி கொன்றுவிட்டு திமிராக நின்ற ஸ்வேத்தாவை அழைத்துக் கொண்டு சென்றார்.
அதிர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் இடிந்து அமர்ந்திருந்த ஷிவன்யா நடுஜாமம் கடந்த பின்பு தான் அங்கிருந்து எழுந்து உயிரற்ற ஜடம் போல் விஜித்தாவின் அறைக்குள் சென்று மறைந்து கொண்டாள்.
அன்று தொடங்கி இன்று காலை வரையும் சாதனா மற்றும் ஸ்வேத்தா அவளை வார்த்தையிலும் செயல்களிலும் கொல்லாமல் கொன்று கொண்டே இருக்க, அனைத்தையும் வாய் மூடி ஏற்றுக் கொண்ட ஷிவன்யா ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் வாயில்லா பொம்மையாக அந்த வீட்டில் வளம் வந்தாள்.
யாதேஷ்
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தன்னை புன்னகையோடு சந்திக்கும் அவனைப் பார்த்தால் அவள் வலிகள் அனைத்தும் மறைந்துவிடும். தன்னை அந்த வீட்டில் அவன் நம்பிக்கையோடு விட்டுச் சென்றிருக்க, அவன் அம்மாவே அவளை வருத்திக் கொண்டிருப்பதை எவ்வாறு சொல்வாள் அவனிடம்? அவன் ஒவ்வொரு முறை அவளிடம் பேசும் போதும், பொய்கள் கூற இதயம் மறுக்கவே மனம்விட்டு கூட அவனிடம் பேச இயலாமல் தன்னைத் தானே அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள்.
அதனால் அனைத்தையும் அவள் அவளுக்குள்ளே போட்டு மருகிக் கொள்ள, உடனிருக்கும் விஜித்தாவிற்கு அது கூடவா கண்ணிற்குத் தெரியாமல் இருக்கும்? என்ன தான் சாதனாவும் ஸ்வேத்தாவும் விஜித்தா இல்லாத நேரமாக அவளை வருத்தியிருந்தாலும் வீட்டில் இருக்கும் போதெல்லாம் எதாவது ஒரு வேலை செய்து கொண்டு ஓய்வெடுக்கக் கூட நேரம் செலவழிக்காமல் சுற்றிக் கொண்டே இருந்த ஷிவன்யாவையும் அவ்வப்போது திமிரோடு சுற்றும் ஸ்வேத்தாவையும் விஜித்தா கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.
மாலையில் பாதி நேர வேலையை முடித்துவிட்டு வீட்டை அடைந்த ஷிவன்யா அவளை இடைமறித்த விஜித்தாவை கண்டு புன்னகைத்தாள்.
" அண்ணி, "
" சாப்ட்டியா விஜி? நான் சமைக்கட்டுமா? " என அவளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் ஷிவன்யா வேறு புறம் திரும்ப, அவளுக்கு முன் சென்று நின்ற விஜித்தா
" அண்ணி என் கிட்ட பேசுங்க அண்ணி! நீங்க வேலை மட்டுமே செஞ்சிட்டு இருக்கீங்க... படிக்கிற நேரம் கூட டெய்லி எதாவது பன்றீங்க, என்னாச்சு அண்ணி உங்களுக்கு? "
" அப்டிலாம் ஒன்னுமில்ல... "
" அண்ணா கூட சொன்னான் நீங்க ஒழுங்கா பேசலன்னு... எதாவது உடம்பு சரியில்லையா அண்ணி? "
விஜித்தாவின் வருத்தம் புரிந்து ஷிவன்யா தலையை இடவலதாய் அசைக்க, சரியாக மாடியில் இருந்து கீழே வந்த ஸ்வேத்தா
ஸ்வேத்தா " ஷ்ஷ்... என்னாச்சு விஜி? ஏன் இப்டி கத்தீட்டு இருக்க? மேடம்க்கு பேச புடிக்கலன்னா நீ விற்று மா. "
அவள் வந்த உடனே ஷிவன்யாயின் முகம் மாற, விஜித்தா குழப்பத்தோடு " அப்டிலாம் ஒன்னும் இல்ல— " என கூறுவதற்குள்ளாக ஸ்வேத்தாவே முந்திக் கொண்டாள்.
" இவங்களெல்லாம் நாம கொஞ்சிட்டே இருந்தா நம்ம கெஞ்சிட்டே இருக்க மாதிரி செஞ்சிடுவாங்க. அப்டியே விற்று. உன் அண்ணன கூட இந்த மாதிரி தான் ஏமாத்தியிருப்பாங்க... "
விஜித்தா " என்ன ஸ்வேத்தா என்ன பேசுறீங்க நீங்க?! ஸ்டாப் இட்! "
எங்கிருந்தோ விஜித்தா கத்தும் சத்தம் கேட்டு வந்த சாதனா விஜித்தாவை அதட்டினார். " விஜி ஸ்வேத்தா கிட்ட சாரி கேளு! "
" அம்மா அவங்க இப்போ என்ன சொன்னாங்க தெரியுமா?! அண்ணிய ஏதோ— "
" ஸ்வேத்தா இப்போ என்ன தப்பா சொல்லீட்டா?! " என்ற கத்தல் ஷிவன்யாவின் உடலை தூக்கிப் போட வைக்க, அப்பட்டமான அதிர்ச்சியோடு தன் அம்மாவைப் பார்த்தாள் விஜித்தா.
சாதனா " ஒன்னும் தெரியாத என் பையன இவ தான் ஏதோ சொல்லி இப்படி மாத்தியிருப்பா. இவள நம்பாத, இல்லனா உன்னையும் ஏமாத்தி— "
" ம்மா! என்ன பேசீட்டு இருக்க நீ?! "
" நான் எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன். ஸ்வேத்தா இங்க இருக்கப்போ ஸ்வேத்தாவோட இடத்தையே இவ பிடிக்கப் பார்க்குறா, மொதல்ல அவள அண்ணின்னு கூப்டாத நீ! "
தலை கவிழ்ந்து இறுகி நின்றிருந்த ஷிவன்யாவையும் அதிர்ச்சியோடு நின்ற விஜித்தாவையும் பார்த்து நக்கலாய் புன்னகைத்தாள் ஸ்வேத்தா. " உனக்கு அண்ணின்னா அது நான் மட்டும் தான் விஜித்தா. "
சாதனா " எக்ஸமெல்லாம் முடிஞ்சதோட இந்த வீட்டவிட்டு உன் மூட்டமுடிச்சையெல்லாம் தூக்கீட்டு கிளம்புற வேலையப் பாரு! திரும்ப என் பையன் வாழ்கைல வந்து அவன ஏமாத்தி என் கிட்டேந்து அழைச்சிட்டுப் போகனும்னு மட்டும் நினைக்காத டி. உன்னால இனிமே அது முடியாது. உன்ன மாதிரி ஒருத்திய அவன் ஒதுக்கி வைக்கிறானா இல்லையான்னு பாரு... "
அவர் பேசிக் கொண்டே இருந்த போது திடீரென ஏதோ உடைந்து நொருங்கும் சத்தம் கேட்க, அனைத்தையும் கேட்டதற்கான அடையாளமாய் கைகளை முறுக்கி வாயிலில் சிவந்த கண்களோடு முகமிறுக நின்றிருந்தான் யாதேஷ்.
விழி மீறிய வழி நாடி...
ஹலோ இதயங்களே! எல்லாரும் நல்லா இருக்கீங்களா?? நம்ம விழியின் மொழி எப்டி பொய்ட்டு இருக்கு?? போர் அடிக்கிதா? ரொம்ப இழுக்குற மாறி இருந்தா எதாவது சொல்லுங்க... நான் மாத்திகிறேன்... ரொம்ப நாள் கழிச்சு எழுதுறதால் கொச்சிக்காதீங்க... என்னோட முழு முயற்சிய நான் குடுக்குறேன். உங்களோட ஆதரவுக்கும் விமர்சனகளுக்குகும் மிக்க நன்றி. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க இதயங்களே... உங்களோட கருத்துக்களுக்காக நான் எப்பவுமே காத்துட்டு இருப்பேன்... இப்போ தூங்க போறேன் டாட்டா!
DhiraDhi❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro