பெயர் தெரியா வலி: 14
காரிருள் மேகம் போல் சூழ்ந்திருந்த கருமையை கிழித்துக் கொண்டு வந்த ஒளி கீற்றின் உதவியில் பட்டென தன் துயில் கலைந்து எழுந்தாள் ஷிவன்யா.
ஒரு மருத்துவமனை கட்டிலில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு அவள் படுக்க வைக்கப்பட்டிருக்க, தன் மகளை அருகிலெங்கும் பார்க்காமல் தனிச்சையாய் எழுந்த பதட்டத்தில் அந்த ட்ரிப்சை பிடுங்கி எறிந்து விட்டு, கரத்தில் இரத்தம் வடிவதை கூட கவனிக்காமல், " ஷிவானி! " என கத்திக்கொண்டே அந்த அறையை விட்டு வேளியே ஓடினாள் நம் நாயகி.
தலை பாரத்தின் காரணமாக சரியாக நடக்க இயலாமல் ஷிவன்யா ஒரு கையை சுவற்றின் மீது ஊன்றி நிற்க, அவளது உலகமே ஒரு முறை அவள் கண்கள் முன்னே சுழன்று அடங்கியது.
ஷிவன்யா இப்படி அறையின் வாயிலில் தள்ளாடி நிற்பதை தூரத்திலிருந்து கண்ட அவன் பட்டென தான் தூக்கி வைத்திருந்த ஷிவானியை கீழே இறக்கி விட, அவள் அவன் எதிர்பார்ப்பை சற்றும் பொய்க்காது, " அம்மா! " என கத்தி அழைத்துக் கொண்டே ஷிவன்யாவிடம் ஓடினாள்.
தன் சேயின் குரல் கேட்டதும் பதட்டமாய் சுற்றி முற்றி நோக்கிய ஷிவன்யா, அவள் கால்களை வந்து கட்டிக் கொண்ட ஷிவானியை அள்ளி அணைத்துக் கொண்டாள்.
" ஷிவு பாப்பா, எங்க டா போன? அம்மா பயந்துட்டேன்! " என அவளே அறியாமல் ஷிவன்யா ஷிவானியை கட்டிக் கொண்டு அழுதாள்.
" அச்சு (அச்சோ ) அம்மா, நான் நல்லாக்கேன். ஒரு பிக் மேன் தான் உன்ன இங்க கூட்டீட்டு வந்தாரு. அவரு கூட தான் இருந்தேன், " என ஷிவானி அவளின் கழுத்தை கட்டியணைத்து நடந்ததை விளக்கினாள்.
" என்ன ஆச்சு பாப்பா? நம்மள கூட்டீட்டு வந்தவரு எங்க? " என நம் நாயகி அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவளை தாண்டி செல்ல முணைந்த ஒரு செவிலியர், " நீங்க எழுந்திட்டீங்களா மடம்? இப்போ எப்படி இருக்கீங்க? " என நலம் விசாரித்தார்.
" நான் நல்லா இருக்கேன். என்ன யாரு இங்க கொண்டு வந்தது? அவங்கள பார்க்கனும், " என ஷிவன்யா கூறவும் " அவரு ஃபீஸ் கட்டீட்டு இப்போ தான் கிளம்பிப் போனாரு மேடம், " என அச்செவிலியர் ஒரு பக்கத்தைக் காட்டியதும் அவருக்கு நன்றி கூறிவிட்டு ஷிவன்யா வேகமாய் ஷிவானியுடன் அந்த பாதையில் முன்னேறினாள்.
அவள் சென்றதை நன்கு உறுதிப் படுத்திக் கொண்டு, தான் மறைந்திருந்த அறையிலிருந்து வெளியே வந்தவன் பெருமூச்சு விட்ட அதே நேரம் அவன் பின், அப்பார்ட்மென்ட்டில் நடந்த அனைத்தையும் கேட்டறிந்து ஷிவன்யாவை தேடி பதறியடித்து ஓடி வந்திருந்த சூர்யா அதிர்ந்து போய் நின்றிருந்தார்.
" ஷிவா... " என்ற சூர்யாவின் குரலைக் கேட்டு அதிர்ந்து திரும்பினான் ஷிவனேஷ்.
அவனை அங்கு கண்ட சூர்யாவின் மனத்திரையில் அனைவரும் மறக்க நினைக்கும் எண்ணற்ற நினைவுகள் வந்து அலைமோத, தான் இறந்து விட்டதாய் எண்ணிய ஒருவன் தன் கண் முன்னே ஊனும் உயிருமாய் நிற்பதை கண்டு வாயடைத்துப் போயிருந்தார்.
கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க செய்வதறியாது நின்ற ஷிவனேஷை சூர்யை ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள, அவர்களுக்கு முன் கூட்டத்தில் தொலைந்த குழந்தையை போல் ஷிவனேஷைப் பார்த்து விழித்து கொண்டே, " பேபி...? " என மெதுவாய் சூர்யாவை அழைத்தான் ஆர்யா.
#
வேகமாய் யாதேஷின் அறைக்குள் நுழைந்த ஆரவ் அவன் சாதாரணமாய் அமர்ந்து மும்மரமாய் ஏதோ ஒரு கோப்பைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு விருவிருவென சென்று அந்த கோப்பைப் பிடுங்கி அருகில் வைத்தான்.
" டேய் டேய், என்ன டா ஆச்சு? கூல் டௌன், " என யாதேஷ் ஆரவை அமைதி படுத்த முயல, " என்னாடா பண்ணிக்கிட்டு இருந்த? " என பல்லிடுக்கில் வினாவை எழுப்பினான் ஆரவ்.
" இன்ட்டர்வ்யூ முடிஞ்சிடுச்சு. கடைசியா ஒரு பொண்ணு வந்தா, ஆனா கொஞ்ச நேரத்துலையே எதுவும் சொல்லாம ஓடி போய்ட்டா டா, " என ஏதோ ஒரு ஏமாற்றத்துடன் அவன் மூடி வைத்த கோப்பைப் பார்க்க, யாரென அறிந்து சற்று தன்னை சமன் செய்து கொண்ட ஆரவ்,
" அதுக்கு ஏன் நீ இப்படி இருக்க? " என மீண்டும் கேள்வி எழுப்பினான்.
யாதேஷ் " அட என்ன டா, அந்த பொண்ணு ரொம்ப டலென்ட்டட் போல. கவிதைகளுக்கும் கட்டுரைக்கும் நிறைய பரிசு வாங்கியிருக்கா. அது மட்டுமில்லாம அவளோட காலேஜ் செர்டிஃபிகேட்ஸ் எல்லாத்துலையும் படிப்ப விடுவும் அதிகமா மத்த எக்ஸ்ற்றா கரிகுலர் அக்டிவிட்டீஸ்ல ஃபோக்கஸ் பண்ணியிருக்கா. இப்போ தான் அந்த பொண்ண பத்தி கூகுல்ல கூட பார்த்தேன். சீசீவி பெங்கலூரு ப்ரன்ச்ல வேலை பார்த்துருக்கா. அங்கையும் அந்த பொண்ணோட வேலைய ஆகா ஓகோன்னு புகழ்ந்திருக்காங்க. அது மட்டுமா, இங்க பாறேன், இந்த காலத்துல இந்த மாதிரி பொண்ண பார்த்துருக்கியா? ரோட்டோரமா போற எல்லாருக்கும் உதவி பண்ணியிருக்கா, " என நம் நாயகன் மடிக்கணினியை காட்டி நம் நாயகியை ஆஹா ஓஹோவென புகழ, ஆரவிற்குத் தான் திறந்த வாயை மூடத் தோன்றவில்லை.
ஆரவ் " ஊரு ஊரா அவளத் தேடுனதுக்கு இந்த கூகுல்ல தேடியிருந்தா முன்னாடியே கிடைச்சிருப்பாளோ? " என எண்ணியபடி அவன் அனைத்தையும் பார்க்க, இன்னும் நம் நாயகன் அவனது நாயகியை பற்றி புகழ்ந்து அவன் தொடங்கிய பாடலைத் தான் முடித்தபாடில்லை.
" சரி, சரி, போதும் டா, இவ்ளோ புகழுறீன்னா அந்த பொண்ணுக்கு வேலை போட்டு குடுத்தியா? " என ஆரவ் கேட்டதும், யாதேஷின் முகம் சுருங்கியது.
" இல்ல மச்சான், அவ வர்ரதுக்கு முன்னாடியே அஷோக் அப்படீங்குற ஒருத்தர ஃபைனல் பண்ணீட்டேன். அவள இனிமே பார்க்கக் கூட முடியாது... " என பாவமாய் கூற, ஆரவிற்கு ஏதோ போல் இருந்தது.
ஷிவன்யாவைப் பற்றி அவன் வாய் ஓயாமல் பேசுவதும் அவளைப் பார்க்க இயலாதென சோகமுறுவதும் அவர்களின் கடந்த காலத்தைத் தான் நினைவுருத்தியது.
அனைத்தும் மீண்டும் நடப்பதை போல் தோன்றியது ஆரவிற்கு. காலச்சக்கரம் சுழன்று ஒருவேளை நான்கு வருடத்திற்கு முன் அவனுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் தயங்காமல் ஷிவன்யாவை அன்று அவர்களை விட்டுச் செல்லவே விட்டிருக்க மாட்டான். அவள் சென்றதால் தானே அவளுக்கு திருமணம் நடந்திருக்கும். தற்போது வரை யாதேஷிற்கு நினைவில்லாது இருந்திருக்கும். யாரோ ஒருவளை அவனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பர்.
துரதிர்ஷ்டமே ஆரவிற்கு காலமாற்றம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லையே.
இவையெல்லாம் ஆரவ் எண்ணிக் கொண்டிருந்த போதே, " டேய் மச்சான், அந்த பொண்ணுக்கு ஃபோன் போட்டு பீஏ வேலைக்கு பதிலா வேற வேலைக்கு கூப்பிடலாமா டா? " என யாதேஷ் அவனை பார்த்தான்.
" வேற என்ன வேலை டா சொல்லுவ?? " என ஆரவ் பதில் கேள்வி கேட்டு, " அதோட நீயோ நானோ கூப்பிட்டா அவ சென்னைலேந்து பெங்கலூருக்கே போனாலும் போய்டுவா டா, " என மனதிற்குள்ளே எண்ணிக் கொண்டான்.
" ஏன் டா கம்ப்பெனில வேற வேலையா இல்ல? அவங்க ஸ்க்ரிப்ட் எழுதுறவங்களா ஆக்கீடலாம், " என யாதேஷ் வாயெல்லாம் பல்லாகக் கூற, ஆரவ் அதற்கு முட்டுக்கட்டை போட்டான்.
" அந்த பொண்ணு கவிதை கட்டுரை தான் எழுதுதுன்னு போற்றுக்கு. கதை எழுதல, "
" சரி பரவாயில்ல, ந்யூஸ் வாசிக்க சொல்லளாம்! " என யாதேஷ் ஐடியா கொடுக்க, " அந்த பொண்ணு பார்த்த எந்த வேலைலையும் ந்யூஸ் வாசிக்கல. நீ சொல்றன்னு எப்படி அவ கேட்பா? " என ஆரவ் அலட்சியமாய் கூறினான்.
அப்போதும் சலைக்காமல், " சரி அப்போ ஷோல நடிக்க சொல்லலாம்! " என யாதேஷ் அவனை தீர்மானமாய் பார்க்க, " அந்த பொண்ணு அக்ட்டர் இல்ல டா, " என மற்றொரு முட்டுக்கட்டையை வீசினான் ஆரவ்.
" டேய், என்ன டா நினைச்சிட்டு இருக்க நீ?! சொல்ற எல்லாத்துக்கும் எதாவது எடக்குமுடக்கா சொல்ற!? அப்பரம் மீதி இருக்குறது உன்னோட போஸ்ட்டிங் தான். நீ ரிசைன் பண்ணு, நான் அவள அப்பாய்ன்ட் பண்ணிக்கிறேன்! " என யாதேஷ் பொருமை இழந்து ஆரவின் ராஜினாமா கடிதத்தோடு எழவும் தான் ஆர்வம் நிலைக்குத் திரும்பினான்.
" டேய் நீ பாட்டுக்கு ஒரு வேலை சொல்றியேன்னு நான் சொல்லீட்டு இருந்தா, இப்போ என் வேலைக்கே ஒல வைக்கப் பாக்குறியே, நீயெல்லாம் நல்லா இருப்பியா டா? " ஆரவும் வெகுண்டெழுந்தான்.
" அதெல்லாம் சாக்கு சொல்லாத, அந்த பொண்ண திரும்ப இங்க வர வை டா! " என யாதேஷ் அடம்பிடிக்க, " என்ன டா ஆச்சு உனக்கு? " என விசித்திரமாய் பார்த்தான் ஆரவ்.
" அம்... தெரியல டா. சரி விடு. நான் வீட்டுக்கு கிளம்புறேன், " என யாதேஷ் அந்த அறையை விட்டுச் செல்லப் பார்த்தான்.
" மச்சான் இரு. என்ன பிரச்சனை? அந்த பொண்ணு யாருன்னே தெரியாம நீ ஏன் இவ்வளவு மும்மரமா இருக்க? "
" தெரியல டா, அவளப் பார்த்ததும் இத்தனை நாள், நான் தொலைச்ச ஏதோ ஒன்னு என் கிட்ட வந்த மாதிரி தோனுச்சு. ஏன்னு தெரியல அவ என்ன பார்த்ததும் சிலை மாறி நின்னா. நானும் தான். அவளப் பார்த்ததும் என் மனசு என் கிட்ட இல்ல மச்சான். அவ கண்ணு கலங்கியிருந்துது. அது தான் ரொம்ப விசித்திரமா இருந்துச்சு. அவ ஓடுனப்போ அவள தடுக்கக் கூட எனக்குத் தோனல. ஆனா—ஆனா ஏதோ ஒன்னு அவ இங்க இருந்து ஓடுனதுல இருந்து சரியில்ல. லைட்டா... மனசு...அம்... எதையோ எதிர்பார்த்து ஏமாந்த மாதிரி இருக்கு டா, " என யாதேஷ் எங்கோ பார்த்தபடி கூறுவதனைத்தையும் உண்மைதானெனத் தெரிந்தாலும் இடையில் எதையோ மறைத்தான்.
" என் கிட்டேந்து என்னடா மறைக்கிற? " என ஆரவ் நேரடியாகக் கேட்க, யாதேஷிற்கு பதிலளிக்கத் தெரியவில்லை.
" இல்ல...நான்... " என நம் நாயகன் தினற, எப்பொழுதும் போல நண்பன் தாக்குதலை முன் வைத்தான் ஆரவ்.
" ஹ்ம் என் கிட்டையே மறைக்க ஆரம்பிச்சிட்டல்ல, போடா போ. உங்க வீட்டுல அந்த ஸ்வேத்தா உக்காந்துருப்பா, அவ கிட்டையே போய் சொல்லு. என் கிட்ட, டேய் மச்சான்னு வராத! நான்லாம் உனக்கு யாரு? உனக்குலாம் ஸ்வேத்தாவோ இல்ல உங்க ஆத்தாவோ தான் சரி வரும்! " என பொய் கோபம் காட்டி ஆரவ் நகர, " டேய் ஏன் டா ஏதோ சீரியல் லவ்வர் மாதிரி நடிக்கிற கேவலமா இருக்கு, " என யாதேஷ் கடுகடுத்தான்.
" அப்போ விஷயத்துக்கு வா, "
" அது... இல்லடா உன் கிட்ட மறைக்க என்ன இருக்கப் போகுது? எனக்கு அவள பார்த்ததுல இருந்து ஏதோ மனசு வலிக்கிற மாதிரி இருக்கு. நான் அவள இரெண்டு நிமிஷம் கூட முழுசா பார்க்கல. அதுக்கே நான் வசனம் பேசுறேன்னு சொல்லுவியோன்னு தான்... " என யாதேஷ் தயங்கி நிற்க,
" அவ குரல கேட்டதுக்கே என்ன ஒரு நாள் வச்சு செஞ்சவன் தான டா நீ? நேர்லையே பார்த்துட்டு எதுவும் சொல்லாம இருந்தா தான் ஆச்சர்யம், " என மனதிலே புலுங்கிக் கொண்ட ஆரவ், " அப்படியெல்லாம் எதுவும் இல்ல டா. நீ கொழப்பிக்காத வீட்டுக்குக் கிளம்பு, போ, " என யாதேஷையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
மீண்டும் வந்து தன்னறையில் அமர்ந்த ஆரவிற்கு மனதில் எண்ணற்ற எண்ணங்கள் ஓடியது. அன்று ஷிவன்யா இறுதி நாளன்று ஒரு பாட்டு பாடியதோடு அங்கிருந்து ஓட்டம் பிடித்ததை எண்ணிப் பார்த்தான்.
அன்று...
விழி மீறிய வழி நாடி...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro